யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

vimalk

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  442
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About vimalk

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  australia
 1. முக்கால சோழர் பற்றிய தொகுப்பு பிரமாதம்.! முள்ளிவாய்க்கால் சோழனின் நிலை ?
 2. அனைவருக்கும் ஒளிமயமான சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 3. மிகவும் நேர்த்தியான, இயல்பான நடையில் நெடு நாட்களுக்கு பின்னர் சுவைத்த திருப்தி.தொடர் தொடர வாழ்த்துக்கள்!
 4. நன்டோஸ் ஸ்பைஸி றயிஸ்("Nandos" Spicy Rice) சமைப்பது எவ்வாறு?
 5. வரலாறு படைத்தார் பயஸ்: ஆஸி., ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியது. இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறியும், ஒரு முறை கோப்பை பயஸ் ஜோடி வென்றதில்லை. இதில் இரு முறை (2006, 2011) அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்களிடம் தோற்றது. நேற்று நடந்த பைனலில் பயஸ் ஜோடி, மீண்டும் "நம்பர்-1' ஜோடியான பாப், மைக் பிரையன் சகோதரர்களை சந்தித்தது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியின் முதல் செட்டில், இரு ஜோடிகளும் மாறி மாறி "கேம்களை' எடுக்க, முடிவு "டை பிரேக்கருக்கு' சென்றது. அபாரமாக செயல்பட்ட பயஸ் ஜோடி, 7-6 என முதல் செட்டை வென்றது. 2வது செட்டில் பயஸ் ஜோடி தொடர்ந்து அசத்தியது. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பயஸ் ஜோடி, 6-2 என எளிதாக செட்டை கைப்பற்றியது. 1 மணி நேரம், 24 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் 7-6, 6-2 நேர் செட் கணக்கில் வென்ற பயஸ்-ஸ்டெபானெக் ஜோடி பட்டம் வென்றது. முதல் இந்தியர்: ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் யாரும் பட்டம் வென்ற தில்லை. தற்போது முதன் முறையாக கோப்பை வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் பயஸ். 13வது கோப்பை: பயஸ், இதுவரை ஆண்கள், கலப்பு இரட்டையரில் தலா 6 வீதம் மொத்தம் 12 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் சக வீரர் பூபதியை பிரிந்த இவர், ஸ்டெபானெக்குடன் சேர்ந்து, முதன் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில், கோப்பை வென்று அசத்தியுள்ளார். இன்றைய கலப்பு இரட்டையர் பைனலில், ரஷ்யாவின் வெஸ்னினாவுடன் இணைந்து பயஸ் கோப்பை வெல்லும் பட்சத்தில், ஒரே ஆண்டில் ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆண்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற வீரர் என்ற சாதனை படைக்கலாம். http://tamil.yahoo.c...-184900909.html
 6. ஆஸி., ஓபன் டென்னிஸ் : அசாரெங்கா சாம்பியன் மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அசாரெங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில், மரியா ஷரபோவாவை எதிர்கொண்ட அசாரெங்கா, 6--3, 6-0 என்ற நேர்செட்களில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். இவர் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.c...-101400455.html
 7. நூறாண்டு காலம் வாழ்வது எப்படி நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ? நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன.. டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. 50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்கியமான காரணம் பெண்கள் மாற்றங்களை இலகுவாக ஏற்று அதற்கமைவாக வாழ்வதால் அவர்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கெனிங் கியக் தெரிவித்துள்ளார். நூறாண்டு காலத்தை எட்டித் தொடும் பிரதான மந்திரமாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நூறாண்டு வாழ மாற்றங்களை இயல்பாக ஏற்கப் பழகுங்கள். நூறு வயதை எட்டித் தொடும் முதியவர்களுடன் பேசுவது அவசியம். அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை, உணவு முறைகள் போன்றவற்றை கேட்டறிவது மற்றவர்களும் நீண்ட காலம் வாழுவதற்கு உதவும். ( இவர்கள் கிளம்ஸ்கள் என்று வயோதிபரை ஒதுக்கும் இளையோர் விரைவான சாவிற்கு வரவேற்புப் பாடுகிறார்கள் ) புவியில் வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு என்று நான்கு திசைகளை பிரதானமாகக் கூறுவோம். ஆனால் நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டே இரண்டு திசைகள் மட்டுமே உள்ளன. நாம் செய்யும் செயல் நீண்ட கால உயிர்வாழ்தலுக்கு எதிரான திசையிலும், சரியான திசையிலும் மட்டுமே இருக்கும். குறுங்கால உயிர் வாழும் திசைக்குள் பிரவேசித்தால் உடன் அதை நிறுத்தி சரியான திசைக்குள் திரும்பிவிட வேண்டும். ஒவ்வொரு செயலிலும் இந்த இரு திசைகளையும் பிரதானமாகக் கருதி உடனுக்குடன் மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையேல் நீடித்த ஆயுளை எட்டித் தொட முடியாது. இதுதான் 100 வயதைத் தொடும் காந்த முள்ளாகும். மேலும் இளமையுடன் வாழ்வை நகர்த்த சில யோசனைகளையும்; தந்துள்ளார்கள். 01. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் உடன் நிறுத்தி சரியான திசைக்கு வாழ்வை திருப்புங்கள். 02. தினசரி 30 நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்யுங்கள். 03. உடன்பாடு காண முடியாதவர்களை கைவிட்டு புதியவர்களுடன் இணைந்து புதுவாழ்வு காணுங்கள். பழையதையே நினைத்து கண்ணீர் விட வேண்டாம். 04. சிறு பிள்ளைகளுடன் பழகி குழந்தை மனதோடு வாழுங்கள். 05. புதிய மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள், மூளை புதுமைகளை விரும்பும் 06. புதினங்களை அறியுங்கள் ஆனால் உணர்ச்சி வசப்பட வேண்டாம். 07. ஆரோக்கிய வாழ்வு தொழில் போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட வேண்டும். தற்போது 867 ஆக இருக்கும் 100 வயதைத் தொட்ட மனிதர் எண்ணிக்கையை எதிர்வரும் 2050 ல் 20.000 ஆக உயர்த்திவிட இப்போதே அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. இப்போது பிறக்கும் பிள்ளைகளில் இருவருக்கு ஒருவர் 100 வயதைத் தொடுவார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழருக்கான மேலதிக போனஸ் : போர்கள் – கொடிய நோய் – வறுமை – சுகாதார சீர்கேடு – நல்ல உணவு இன்மை – தவறான அறிவு குறைந்த ஆட்சித்தலைமைகளும், அவர்களின் அடியாட்களும் அரசியலில் இருப்பது – தறவான இராணுவங்கள் – பிடிவாத குணம் கொண்ட மூர்க்க எண்ணங்கள் – ஆயுத பாவனை – கொலை – கொள்ளை – கப்பம் – பேசித் தீர்க்க தெரியாத பாமரத்தனம் – கல்வியை இழந்த சமுதாயமாக இருப்பது – கல்வியை வாழ்விற்குள் கொண்டுவராமல் பணத்திற்காக வாழ்வது – சர்வாதிகாரத்திற்கு துணை போவது – தலைமை வழிபாடு – அறிவு குறைந்தோர் ஊடகங்களில் இருந்து வழிகாட்டுவது – மக்களை கண்ணீர் வெள்ளத்தில் வைத்து பணம் பண்ணப் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களின் ஆயுளைக் குறைக்கும் திசைப்பக்கமாக இருப்பதை நீண்ட காலம் வாழ விரும்புவோர் கவனத்தில் கொள்வது அவசியம். http://www.alaikal.com/news/?p=30217#more-30217
 8. சச்சின், டிராவிட் அபார சதம்-புதிய உலக சாதனை வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே. கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிராவிடும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து புதிய உலக சாதனை படைத்தனர். இருவரும் இணைந்து இதுவரை 17 முறை 100 அல்லது அதற்கு மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்களை குவித்துள்ளனர். இதற்கு முன்பு இந்த சாதனை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் - ஹெய்டன் மற்றும், மேற்கு இந்தியத் தீவுகளின் கார்டன் கிரீனிட்ஜ் - ஹெய்ன்ஸ் ஜோடியிடம் இருந்தது. சச்சின் 143 ரன்களைக் குவித்து வெளியேறினார். டிராவிட் 111 ரன்களை எடுத்திருந்தபோது காயமடைந்து வெளியேறினார். முரளி விஜய் 30 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்பஜன் சிங் 13 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை எடுத்திருந்தது. http://thatstamil.oneindia.in/news/2010/01/25/sachin-dravid-record-stand-india.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29
 9. பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறயிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்தன. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருமே ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பில் பாகிஸ்தான் கூறுகையில் எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரைக் கூட ஏலத்தில் தெரிவுசெய்யவில்லையென தெரிவித்திருந்து. ஆனால் இது குறித்து ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடி கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாததில் சதி ஏதுமில்லை இவ்வாறு இருக்க ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே, நியூஸிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதைப் பற்றி யாருமே பேசவில்லையே ஏன்? பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாத விவகாரத்தை மட்டும் ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமல் விட்டதில் சதி ஏதுமில்லை. ஏலத்தில் கலந்துகொண்ட 67 வீரர்களில் பாகிஸ்தானின் 11 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களை ஏலத்தில் யாருமே எடுக்க முன்வரவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தலையீடு உள்ளது என்று பாகிஸ்தான் அரசு குறை கூறி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்த அவமானத்துக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் கூறி வருவது துரதிருஷ்டவசமானது என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாததில் எந்தச் சதியுமில்லை என்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டியும் தெரிவித்துள்ளார். : இந்த விவகாரத்தில் நான் காயமடைந்துள்ளேன். என்னைத் திட்டி சில இ-மெயில்களும் வந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சில சிறந்த வீரர்களை ஏலத்தில் இழந்துள்ளோம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காதது குறித்து மட்டுமே சிலர் பேசி வருகிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களை தேர்வு செய்யாதது குறித்து யாருமே பேசவில்லை என தெரிவித்தார் http://beta.virakesari.lk/article.aspx?id=18327&channel=Sports