யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  8,790
 • Joined

 • Last visited

 • Days Won

  12

புரட்சிகர தமிழ்தேசியன் last won the day on November 16 2018

புரட்சிகர தமிழ்தேசியன் had the most liked content!

Community Reputation

793 பிரகாசம்

About புரட்சிகர தமிழ்தேசியன்

 • Rank
  Advanced Member
 • Birthday April 30

Contact Methods

 • Website URL
  http://siruthaai@gmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests
  எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. நெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி .. பொதுவாகவே காற்றானது மனித உயிர்நாடியாக விளங்குகிறது. பிராணவாயு, மனிதனுக்குத் உயிர் வாழத் தேவைப்படுகிறது. அபான வாயு தாவரங்களுக்கு உயிர்வாழ உணவு தயாரிக்கத் தேவைப்படுகிறது என்று பள்ளி செல்லும் சிறார்களுக்குப் புத்தகங்கள் வழியாகக் கற்பிக்கப்படுகின்றது. காற்று மண்டலத்திலிருந்து வீசும் காற்றைத் திசைவழி வைத்துப் பெயரிட்டனர் நந்தமிழர்கள்! தெற்கிலிருந்து வீசுவது தென்றல். கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் (உவர்க்காற்று), மேற்கிலிருந்து வீசுவது கோடை. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை. ஏன் இவ்வாறு பெயரிட வேண்டும்? நோக்கின் ஞாயிற்று (சூரியனுடைய)க் கதிர்கள் கடலலைகளில் உள்ள உப்புக்காற்றை வெப்பக்கடத்தல் மூலம் கொண்டு வருவதால் கொண்டல் (நடுப்பகற்பொழுதின் ஞாயிற்று வெப்பம் மேற்கேயுள்ள மலைகளின் வெப்பக்காற்றைக் கொண்டுவருவதால் கோடைக் காற்று. (கோடு-மலை, அடை-அடைந்து) மாலையில் ஞாயிற்றின் வெப்பங் குறைந்து, மலர்க்காடுகளிலும் சோலைகளிலும் உள்ள பூக்களிலிருந்து தேன் மகரந்தம் நுழைந்து நல்ல நறுமணத்துடன் கூட காற்று வருவதால் தென்றல் என்றும் அழைக்கப் பெறுகின்றது. வடதிசை மாறிய ஞாயிற்றால் வாடி, உருக்குலைந்த இமயப் பனிக்காற்றானது வடக்கிலிருந்து நமக்கு வீசுவதால் வாடை என்றானது. இவ்வாறு, அறிவியல் அறிவோடும் இயற்கை இயைபோடும் வாழும் நம் தமிழரைத் தமிழ் மொழியை நம் சிறார்களுக்கும் உலகோர்க்கும் கற்றுக் கொடுப்பது நம் கடனல்லவா? “ஊதக் காத்து வீசயிலே குயிலுங்க கூவயில கொஞ்சிடும் வேளயிலே வாடைதான் என்னை வாட்டுது” என்று ஓர் திரையிசைப் பாடல் உண்டு. இதன் பொருள், தென்றல் காற்றானது மகரந்தங்களையும் தேனையும் ஊதி வரும் மாலைப் பொழுதில் குயில்கள் புணரத் தன் இணைகளை அழைக்கும் இனிய பொழுதில் உன் பிரிவானது வாடைபோல் என்னை வாட்டுகின்றதே! என்பதாம். நெடுநல்வாடை: கோல நெடுநல் வாடை என்று தமிழ் கூறு நல்லுலகம் புகழும் இந்நூலை நக்கீரர் இயற்றினார். 188 அடிகள் கொண்ட அகவற் பாடல்களால் அமைந்த நூல். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாடிய நூலாகும். இந்நூல் அகப்பாடல் நூலா அல்லது புறப்பாடல் நூலா என்று வேறுகாட்ட இயலாநிற்பது. இருப்பினும், “வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம்” எனப் பாண்டியனது அடையாள மாலையைக் குறிப்பிடுவதால் இஃது புறப்பாடல் நூலானது. வாடைக்காலத்தில் மனித உடலானது வெப்பத்தை நாடுகிறது. தலைவன் தலைவியர் மெய்யுறு புணர்ச்சியை நாடுகின்றனர். நெடுநல்வாடைத் தலைவன் (பாண்டியன்) போர்ப்பாசறையில் இருக்கிறான். அவனது தலைவி (பாண்டியன் தேவி) பிரிவால் ஓவியப்பாவை போல அரண்மனையில் மிக்குகாமம் மேலிடத் தலையணையில் கண்துஞ்சாது, தலைவனையே நினைந்து வாடைக்கு ஆற்றாது வாடுகின்றாள். குழந்தைகள் முதல் முதியவர்கள் ஈறாக யாவரும் தீக்காய்வார்கள். இதனை வள்ளுவரும் திருக்குறளில், “அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்!” (குறள்:691) என்கிறார். வாடைக்கு கூதிர் என்று மற்றொரு பெயரும் உண்டு. “கூ” என்பது மிக்க குளிர்ச்சி என்பதாகும். நீண்டு காமத்தைத் தூண்டும் வாடை நெடுநல்வாடை. “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப் புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோட, னீடிதழ்க் கண்ண நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉநடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்று கோ ளொழியக் கடியவீசிக் குன்று குளிரக் கூதிர்ப் பானாட்” (நெடுநல்-1:12) இதன்பொருளாவது, ஞாயிறு வடதிசை நோக்கிச் செல்ல இந்நிலம் குளிரப் பனியானது உண்டாகிறது. மழைபொழியாது சும்மா கிடந்த வானம். புதிதாக மழையைப் பெய்தது. ஆடுமாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் கோவலர்கள் (இடையர்கள்). ஆடுமாடுகளை மேட்டு நிலத்தில் கொண்டுபோய் அடைய வைத்தார்கள். கைகால்கள் நடுங்க கண்களில் நிரம்பிய பீளையைக் கூடக் கழுவாது உடலை வருத்தும் வாடையைத் தணிக்கக் குடலை மாட்டிக் கொண்டு கூதற் காய்ந்தார்கள். வாடைக்கு ஆற்றாது ஆடுமாடுகள் மேய்வதை மறந்து நின்றன. பறவைகள் கிளைகளில் படியாமல் கால்கள் விரைத்துத் தடுமாறி வீழ்ந்தன. கன்றுகள் தன்தாயிடம் பாலூட்ட மறந்தன. குன்றுகள் குளிரும்படியாகக் கூதிர்(வாடை) நெடுநாள் நீடித்தது. மேற்காணும் நெடுந்தூண் சிற்பக்காட்சி இந்நெடுநல் வாடைக்காட்சியை நினைவூட்டுகின்றது. இக்காட்சி ஆவுடையார்கோயில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி திருக்கோயில் தூணில் உள்ளது. பழந்தமிழ்ப் பண்பாடுகளைப் பாதுகாத்தலும் பதிவு செய்தலும் நங்கடனே! - பனையவயல் முனைவர். கா.காளிதாஸ் http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37461-2019-06-17-04-33-43
 2. மண்ணென்ன ..வேப்பெண்ன.. வெளக்கெண்ண.. பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன..?
 3. கீழடியில் நடைபெறும் 5ம் கட்ட அகழாய்வு பணியில் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு..! கீழடியில் நடைபெறும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியில் ஏராளமான மண்டை ஓடுகளும், பண்டைய காலத்து மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த 13ஆம் தேதி தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த 5ஆம் கட்ட அகழாய்வுப் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் கிடைக்கும் தொல்பொருட்களும், ஏற்கெனவே கிடைத்த தொல்பொருட்களும் கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணியின் போது ஏராளமான மண்டை ஓடுகளும் பண்டைய காலத்து மண்பாண்டங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu/19/6/2019/keeladi-excavation-skulls-were-found-5th-stage-excavation?fbclid=IwAR2G-6Bju5uMaG51Dv0gw2QnPhfnUMnD1A80M7Ycg8aVkbAfeHKXZfcqygg
 4. கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம்
 5. ஏண்டா ஒரு தெரு முக்கு பேரை மாத்துறதுக்கு கிராம சபைய கூட்டணும்.. கருத்துக்கேட்பு நடத்தனும் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கணும்.. தீர ஆராய்ந்த பிறவு அரசாங்க கேசட்டுல ஏத்தனும் மேலும் தபால் துறையில் இருந்து இன்னும் பலதை மாத்தனும்..??
 6. ஏரிய பிரிய மனமில்லாமல்..நாங்க ஏரியிலேயே வீடு கட்டுவம் .. போங்க தோழர் ஒரே றமாஸ்தான்..
 7. ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.
 8. தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர் ! ரெல்லி: தமிழ் வாழ்க என்று கூறி தமிழக எம்பிக்கள் பலர் பதவியேற்றுக் கொண்ட போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். அவர்களை இந்தியாவும் வாழ்க என கூறி பாரிவேந்தர் சாந்தப்படுத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். முதலில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்ற போது தமிழிலேயே பதவியேற்றார். தமிழக தொகுதி வரிசைபடி அப்போது மேஜையை தட்டி தமிழக எம்பிக்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் முதல் தமிழக எம்பிக்கள் தொகுதி வரிசையின்படி பதவியேற்றுக் கொண்டனர். கூச்சல் தமிழ் வாழ்க என ஒவ்வொருவரும் கோஷமிட்டனர். அப்போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என பதில் முழக்கமிட்டதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திமுக எம்பி சண்முகசுந்தரம் மூன்று முறை தமிழ் வாழ்க என கூறியதால் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர். பாஜக எம்பிக்கள் இதைத் தொடர்ந்து பெரம்பலூர் தொகுதி எம்பியாக பாரிவேந்தர் பதவியேற்க வந்தார். அப்போது பாரிவேந்தர் தமிழ் வாழ்க இந்தியாவும் வாழ்க என கூறினார். இதன் மூலம் பாஜக எம்பிக்கள் சற்று சாந்தமடைந்தனர். லோக்சபாவில் பரபரப்பு எனினும் அடுத்தடுத்து வந்தோர் தமிழ் வாழ்க என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதுடன் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அவர்களை இடைக்கால சபாநாயகர் எச்சரித்தார். https://tamil.oneindia.com/news/delhi/parivendhar-took-oath-and-says-that-india-too-live-long-354412.html
 9. அருமை .. பேருந்து ஓட்டுனரின் செயல் மிகவும் பாராட்ட தக்கது .. இவையளை போரில் முன்னரங்கில் விட வேணும்..
 10. அங்கிட்டு போய் நேர விரயம் செய்து தேதண்ணி, கொப்பி, வடை, சமோசா,பஜ்ஜி சாப்பிட்டுவதை விடுத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்தலாமே..? அவனவன் குடிக்க .. தண்ணீர் இல்லையென்று அலையுறான் .. மக்கள் பிரதிநிதிகள் எண்டு சொல்பவர்கள் ஆளுக்கு ஒரு ரெங்கர் லொறியில் தண்ணீர் விநியோகம் செய்யலாம்..