Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  15499
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

 1. முன்னது பால் லிட்டர் 40 ரூபாய்.. ஏதாவது ஆசுபத்திரிக்கு கொடுக்கலாம்.. பின்னது பீர் .. போத்தல் 160 ரூபாய்.. குடித்து போட்டு எங்காவது கவுண்டு கிடக்காமல்..
 2. //இந்திய எதிர்ப்பை மீறிய அமெரிக்கா - பாகிஸ்தான் போர் விமானங்களை பராமரிக்க ஒப்புதல்// உனக்கு கொஞ்சம் கொடுத்திருந்தா பேசாம இருப்ப..
 3. பொன்னியின் செல்வன் - நாராயணா, இலங்கை தேசம் தொடர்ந்து புதிய ’சிங்கள’ பஞ்சாயத்து.! சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சினிமா தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இலங்கையில் இருந்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பொன்னியின் செல்வன் மெகா திரைப்படத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்று திரண்டு நடித்திருக்கின்றன. உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நாராயணா.. பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே முன்னோட்ட காட்சிகளைக் கொண்டே சர்ச்சைகள் வரிசையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழில் வெளியான முன்னோட்டத்தில், ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம், நாராயணா என சொல்வதற்கு பதில் அய்யய்யோ என சொல்வதாக இருக்கிறது; பிற மொழிகளில் நாராயணா என்றே இருக்கிறது. அது எப்படி நாராயணா என ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் சொல்வதை மாற்றலாம் ? என்பது ஒரு சர்ச்சை. இன்னொன்று, பொன்னியின் செல்வம் படத்தில் இலங்கை தேசம் என குறிப்பிடப்படுகிறது. சோழர் காலத்தில் அது ஈழ தேசம்தான்; இலக்கியங்கள், கல்வெட்டுகள் அனைத்திலும் ஈழ தேசம் என்றுதானே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இலங்கை தேசம் என சொல்ல வைத்தார் மணிரத்னம்? என்பது இன்னொரு விவகாரம். இப்போது இந்தி முன்னோட்டத்தில் இலங்கை தேசத்துக்குப் பதில் சிங்கள தேசம் என சொல்லப்பட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரனுக்கு ஈழத் தமிழர் K Ratnajothy என்பவரெ எழுதியுள்ள கடிதம்: வணக்கதுக்குரிய சுபாஸ்கரன் அவர்களே @LycaProductions மூலம் நீங்கள் முதல்தடவை தயாரித்த கத்தி படத்தி்ல் வரும் கிராமத்தின் பெயர் தண்ணீரூற்று என்று சூட்டியிருப்பீர்கள்.அதாவது உங்களுடைய சொந்த ஊரான முல்லை மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தண்ணீரூற்று கிராமத்தின் நினைவாக வைத்தீர்கள். தண்ணீரூற்று உங்கள் மேல் பலர் பல்வேறு விமர்சனம் வைத்தாலும் நீங்கள் பிறந்த மண்ணின் மேல் ஆழமான பற்றை கொண்டவர் என்கிற எண்ணம் எம் மக்கள் மத்தியில் உள்ளது. உங்களுடைய இந்த வளர்ச்சி ஒரே ஊரை சேர்ந்தவனாக எம்மை சந்தோசபடவும், மகிழ்ச்சியடையும் வைத்துள்ளது. உங்கள் மேல் கொண்ட பெருமதிப்பினாலே ஒரு வேண்டுதலை வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன்... நீங்கள் தற்போது தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல்பாகத்தின் ஹிந்தி மொழி டிரைலரில் ஒரு காட்சியில் "சிங்கள தேசம்" என்கிற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கதாசிரியர் ஐயா கல்கி எந்த இடத்திலும் அந்த ஒரு வார்த்தையை பயன்படுத்தவில்லை.எனவே அந்த ஹிந்தி டரைலரி்ல் தவறுதலாகவே பதியப்பட்டுள்ளது .ஓரு ஈழத்தமிழனாக இங்குள்ள பிரச்சினைகளை தாம் அறிவீர். ஏற்கனவே பேரினவாதம் இலங்கை முழுவதும் சிங்கள தேசம் என அறைகூவல் விடுத்தவாறு உள்ளது. எனவே நாமே எம்முடைய படைப்பில் இவ்வாறான தவறுகளை விடுவது அவர்களின் பரப்புரை சரி என்பதை நிருபீப்பது போன்று ஆகிவிடும். எனவே PS1 தயாரிப்பாளராக, ஒரு ஈழத்தமிழனாக பொன்னியின் செல்வன் ஹிந்தி பதிப்பில் இருந்து அந்த வாரத்தையை அகற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/one-more-controversy-erupts-over-ponniyin-selvan-film-477622.html
 4. வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் தடியடி... நடந்தது என்ன? எங்களுக்கே இந்த நிலையா? விஜய் ரசிகர்கள் குமுறல் .. சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வாரிசு விஜய் ஹீரோவாக நடிக்க வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் தொடங்கி பிஸியாக நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் மீது தடியடி எண்ணூர் பகுதியில் நடைபெறும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரசிகர் மன்ற நிர்வாகியின் அழைப்பின் பேரில் விஜய் ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட் உள்ளே அனுமதிக்காத பவுன்சர்கள், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாகவும் தெரிகிறது. அதோடு அங்கு சென்ற 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை, போலீஸாரை வைத்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸாருடன் கடும் வாக்குவாதம்.. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் கை கூட அசைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர். அதில் சிலர் ரசிகர்மன்ற நிர்வாகியான தங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் எனவும் எச்சரித்துளனர். மேலும், ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளனர். ரசிகர்களுக்கு இது அவசியம் தானா? விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாரிசு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம், படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பிற்காக ரசிகர்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்போதெல்லாம் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களையும் மீறி தேவையென்றால் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். இப்படி இருக்கும் போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் அங்கு செல்வதும், இப்படி தடியடி நடப்பதும் தேவையில்லாதது என்றே சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளன. https://tamil.filmibeat.com/news/vijay-fans-are-attacked-on-the-varisu-shooting-spot-100853.html டிஸ்கி நமக்குள்ள ஒரே வருத்தம் மண்டை பிளந்து தக்காளி சட்னி வெளியல வர ஆரும் "கபால மோட்சம்" அடையவில்லையே என்பதுதான்....
 5. விசயபிரியா - ஐ.நா விற்கான தூதராக கைலாச நாட்டு அதிபரால் நியமனம். பல்வேறு நாட்டு தூதர்களுடன் கலந்துரையாடல்....
 6. கோட்டாபய நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது; பிரசன்ன ரணதுங்க! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது. அவரைக் கைது செய்யுமாறும் எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது." - இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வீடு செல்லுமாறே ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்று கோரினர். அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறோ அல்லது வெளிநாட்டில் தங்குமாறோ எவரும் கோரவில்லை. அவருக்கென சொந்த நாடு இருக்கும்போது அவர் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்? எமது கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய அனைத்துச் சலுகைகளையும் எமது அரசு வழங்குகின்றது. அவர் இந்நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியும். போதிய பாதுகாப்பு வசதிகளையும் அவருக்கு அரசு வழங்கும். மீண்டும் அரசியலுக்கு வர அவர் இணக்கம் தெரிவித்தால் அவரை முதலில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்குவோம். மக்களின் அமோக ஆணை பெற்று ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவை அரசு என்ற ரீதியில் நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்" - என்றார். https://aruvi.com/article/tam/2022/09/04/47589/
 7. பாடல் : எல்லோருடைய வாழ்கையிலும்.. படம் : பாட்டுக்கு ஒரு தலைவன் (1989) வரிகள் & இசை அமைத்து பாடியவர் : இளையராஜா ..
 8. IMF கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும்: Fitch Ratings தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. IMF இலங்கையின் கடன் சுமையை 'தாங்க முடியாதளவு' உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிருந்து 15% ஆக உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய வரி பதிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. ''அரசாங்கத்திற்கு மூலதன செலவினை குறைக்க சில வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதன் தேவையற்ற செலவினம் மிக அதிகம். கூடுதல் வருவாயை அதிகரிப்பது நிதி ஒருங்கிணைப்பின் முக்கிய உந்துதலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்க சமூக செலவினங்களை மறு ஒதுக்கீடு செய்வதாக வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது'' சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தாலும் அரசியல் ஸ்திரத்தன்மை IMF நிதி வழங்கலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுக்க கூடுதல் சமூகச் செலவுகள் போதுமானதாக இருக்காது எனவும் அரசாங்கத்தின் பொது ஆதரவு பலவீனமாகத் தோன்றுவதால், 2023-2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மீட்சியானது வலுவான நிதி ஒருங்கிணைப்பால் கட்டுப்படுத்தப்படும் எனவும் Fitch Ratings நிறுவனம் கூறியுள்ளது https://aruvi.com/article/tam/2022/09/02/47485/
 9. பெருவெள்ளத்தில் கரைந்துவிடுமா சிறு துளி? ஐஎம்எஃப் நிதி உதவி இலங்கையை காக்க முடியுமா ? கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாடு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 48 மாத காலத்திற்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கோடி) நிதி இலங்கைக்கு கிடைக்கும். இந்த நிதி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதி இலங்கை அரசின் கைகளுக்கு கிடைப்பதற்கே சுமார் 6 மாத காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் சமீப நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கெனவே நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக செயலாற்றி வருகிறார். ஆனாலும் இலங்கை இந்த பாதிப்புகளிலிருந்து முற்றிலுமாக மீளவில்லை. இலங்கையின் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதமானோர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மேலும், ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் உண்பதற்கு வசதியாக உணவைத் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. வேலையின்மை, வருவாய் இழப்பு, ஊதிய பற்றாக்குறை, பணவீக்கம், இவையெல்லாம் அந்நாட்டில் உள்ள மக்களையும் உள்நாட்டு போரின்போது அகதிகளாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி பேரை வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மின் கட்டண உயர்வு தற்போது இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இந்திரஜித் இந்த கூற்றை கடந்த ஜூலையில் கூறியிருந்தார். அப்போது நாட்டின் பணவீக்கம் பணவீக்கம் 66.7 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் தேசிய உணவுப் பணவீக்கம் 82.5 சதவீதமாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை கடுமையான கடனில் இருந்ததாலும், தொடர்ந்து இந்த கடனிலும் மின்சாரம் தயாரித்ததாலும் இதனை ஈடுகட்ட மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. அரசும் இதனை அங்கீகரித்தது. தண்ணீர் கட்டணம் உயர்வு இதுபோன்று எரிபொருள், தண்ணீர் என எல்லாவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்த நிலையில் நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க சில தொண்டு நிறுவனங்களும் உருவாகின. ஆனால் தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் உலகம் முழுவதும் இருந்து நிதி பெற்றாலும் அவர்களால் உணவு விநியோகத்தை தொடர முடியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் சத்துள்ள உணவு விநியோகத்திற்கான சாத்தியம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வருமானம் இழப்பு மாணவர்களின் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தி இருந்தாலும், அது போதுமானதாக இருக்கவில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் எரிபொருள் விலை விண்ணை தொட்டுள்ளது. பொதுவாக வாரத்திற்கு தோராயமாக 82 அமெரிக்க டாலர் (ரூ.6,533) வரை வருமானம் ஈட்டும் வண்டி ஓட்டுநர் இந்த விலையுயர்வு காரணமாக வெறும் 14 அமெரிக்க டாலர் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளார். இந்திய மதிப்பில் இது வெறும் ரூ.1,115 மட்டுமே. வேளாண் தொழில் இலங்கையின் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் முயற்சியாக, பால் பொருட்கள் மற்றும் மின்னணு சர்வர் உபகரணங்கள் உட்பட 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் காலவரையின்றி தடை விதித்தது. இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இன்னும் தெரியவில்லை. உணவு பொருட்களை பொறுத்த அளவில் கோழி முட்டை விவசாயம் பிரதானமாக இருந்து வந்த நிலையில் அரசு அதற்கும் விலையை நிர்ணயித்தது. இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு முட்டையை உற்பத்தி செய்ய தோராயமாக 50 ரூபாய் ஆகும் நிலையில் அரசு 1 முட்டைக்கு 43 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இதனால் விவசாயிகள் திணறி வருகின்றனர். கால்நடை வளர்ப்பு தீவன செலவுகளும் அதிகரித்துவிட்டதால் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் பெரும் சிக்கல் மேலெழுந்துள்ளது. உள்நாட்டில் பரவலாக கிடைக்கும் சோளம் கூட தற்போது கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோழி பண்ணை வைத்துள்ளவர்கள் அதனை தொடர்ந்து நடத்த முடியாமல் அதை மூடி வருகின்றனர். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து உதவியை பெற இலங்கை அரசு தொடர்ந்து முயன்று வந்திருந்தது. பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் தற்போது இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இலங்கை தனது நிரந்தர நிதி மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்களையும் நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. வரி வருவாயை உயர்த்துதல், எரிசக்தி விலைகளை உயர்த்துதல், அதனால் செலவுகளை ஈடுகட்டுதல், சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மத்திய வங்கி மற்றும் நாணயக் கொள்கை ஆணையத்தின் சுதந்திரத்தை மீட்டெடுத்தல் ஆகியவை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதில் முக்கியமானதாகும். எதிர்காலம் இவ்வளவு நிபந்தனைகளுடன் வழங்கப்படும் கடன் உடனடியாக கிடைத்துவிடாது. எப்படியாயினும் இது இலங்கை அரசின் கைகளில் கிடைப்பதற்கு 4-6 மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த தொகையானது இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சிறுதுளிதான் என்றாலும் அதனை வைத்து தொடர்ந்து முன்னேறுவது அரசின் கடமையாகும். இலங்கைக்கு வெளிநாட்டு கடன் தற்போது 51 பில்லியன் டாலர் இருக்கிறது. இதில், 28 பில்லியன் டாலரை வரும் 2027 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/colombo/how-will-sri-lanka-use-the-imf-aid-473823.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.