Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  14928
 • Joined

 • Last visited

 • Days Won

  22

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

 1. On 22/1/2022 at 15:15, uthayakumar said:

  ஓவியாவின் கனவுகள்

  மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை.

  நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு காலம் நிமிரொடு தமிழ் தந்த திமிரோடும் இருந்தவள். இவள் கனவு எல்லாம் காலமது தின்ற பின்பு கை நீட்டும் நிலையதுவாகிப் போனாள். இளைய மகன் இனியவன் இப்பவும் விபரம் தெரியாதவன் போல் அம்மா சைக்கில் வேண்டித் தா என்று அடம் பிடித்தபடி இருக்கிறான். மூத்தவன் முகுந்தன் படிக்கிறான் எப்படியோ இவனை படிக்க வைத்து பெரியவன் ஆக்க பாவம் இவள் படும் துயரம் சொல்லில் அடங்கா. 

  மலரவனின் தாய் இன்னும் ஒரு பாரம். இவள் திண்ணையில் கிடந்து காடு அதிரக்கத்தியபடி கிடக்கு இன்னும் மகன் மலரவனின் பாசம் விட்டுத் தொலையவில்லை. வருவான் என்றபடி இரவோடு இன்னும் கதைத்தபடி கிடக்கிறது கிழவி. இரவுகளும் கதை கேட்டபடி இவளோடு குந்தி இருக்கிறது. இருமியபடியும் கத்தியபடியும் கிடக்கும் இவளுக்கு வேற மருந்துச் செலவு.

  இரண்டு பெண் பிள்ளைகள் பாரதி பைரவி என்று இவர்கள் பற்றிதான் ஓவியாவுக்கு அதிகம் கவலை எதிர்காலம் என் பிள்ளைகள் வாழ்வு எப்படி என்றே. கூலி வேலை தான் குடும்பத்தை கொண்டு போக. அருகில் இருக்கும் அந்தோனியார் கோவில் அருட்தந்தை அவள் துயர் அறிந்து ஐந்தோ பத்தோ கொடுத்து உதவுவார். அவ்வளவு தான் காலை மாலை வேலை முடிய கர்த்தரிடம் போய் கருணை வேண்டி நிற்பது தவிர வேறு உதவி எவரும் இல்லை. அண்ணண் தம்பி அக்காள் தங்கை என்று உதவ அவளுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை.

  ஒரு காலம் எங்கள் போராளிகள் என்று போற்றிய சமூகம் கூட இன்று ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த கதை வேற. இவளின் வீட்டை கடந்து செல்பவர்களும் முகத்தை ஒரு பக்கம் திருப்பி தான் கடக்கிறார்கள். அவளின் ஏதோ நல்ல காலம் அருகில் ஒரு அம்பிகா ஆண்டி என்று அந்த கிராமத்தின் பெண்ணுரிமை வாதி சமூக நீதிக்காய் போராடிய பெண் பல முறை சிறை சென்றும் வந்தவள். ஓவியாவை சிறு வயதில் இருந்து தெரியும். அடிக்கடி அவளுக்கு ஆறுதல் வார்த்தையும் ஏதும் ஒரு சிறு உதவியும் செய்யும் ஒரு அன்பு உள்ளம் யாரும் உதவா இவளுக்கு இது பெரும் ஆறுதல்.

  மலரவன் ஓவியா என்ற இந்த மலர்களின் அரைப்பங்கு வாழ்வு அந்த மண் மீட்பு போருக்காய் அந்த மக்களை விடிவுக்காய் அர்பணிக்கப்பட்ட தியாக வாழ்வோடு தொடக்கி மலரவனின் வீர மரணத்தோடு இன்று இவன் மனைவி ஓவியாவின் துயர வாழ்வு கடந்து போகும் நிலை மாறுமா. இன்று இளைய மகனுக்காய் ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு இன்னும் இவள் வியர்வைத் துளி சிந்திய வண்ணம் உள்ளது. சுதந்திரம் வேண்டி எனக்கும் உனக்குமாய் போராடிய ஓவியா என்ற போராளியின் வாழ்வு ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு முடிந்தது.

  இப்பொழுது எல்லாம் அந்த ஏசு பிரான் சொன்னது போலவே மன்னித்து விட்டாள்  ஓவியா ஆனால் அவளால் எதையுமே மறப்பதற்கு இல்லை. வர்ணங்களிலான வாழ்வை நேசித்தவள் ஓவியா மனித குலத்தின் விடுதலையை விரும்பியவள் ஓவியா அந்த பறவைகள் போலவே பறக்க விரும்பியவள். அவள் சிறகுகள் உடைந்து விழுந்தாலும் அவள் மனச் சிறகுகள் பறக்கின்றன அவள் வாழ்வின் கதையை எழுதியபடி இந்த பிரபஞ்சத்தை சுத்தியே. 

  மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு நாள் மழை வரும் என் கனவுகளை நனைக்கும். இப்பொழுது இல்லையென்றாகிலும் எப்பொழுதாவது ஒருநாள் எமக்கான விளக்கு எரியும் என்ற நம்பிக்கையுடன் இன்று மலரவனின் நினைவு  நாளில் கையில் பூக்களோடும் கண்ணில் ஊறிய கடல் கசிவோடும் அவன் நினைவோடும் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் என்று கோடை காலாப் பொழுதொன்றில் நதியோரம் அந்த நிலவின் அருகோரம் மலரவனின் மடியோரம் தான் இருந்து எழுதிய கவிதை ஒன்றை பாடிய படியே காலம் ஒரு நாள் மாறும் என்ற கடைசி துளி நம்பிக்கையோடு உயிர்த்தலே இனி விதி என்று மீண்டும் உயரப் பறக்கவே எண்ணுகிறது ஓவியாவின் கனவுகள் சுமந்த சிறகுகள்.

  நன்றியுடன் பா.உதயன் ✍️


   

  பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

 2. On 23/1/2022 at 05:22, குமாரசாமி said:

  சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் ....😎

   

  உலகம் சுற்றும் வாலிபன் புவனிக்கு அங்கே ஓரே கவனிப்புதான் போல ..☺️

 3. காலையில் யாரும் குடிப்பதில்லை என்றாலும் நேற்று அடித்த போதை இறங்கிவிட்டதா என்டு செக் பண்ணி போட்டு வண்டிய குடுங்கப்பா ..

  IMG-20220124-075409.jpg

  திராவிடம் - டாஸ்மார்க்..😢

  • Like 2
  • Haha 1
 4. 10 hours ago, nunavilan said:

  அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும்

  4 பேர் இருப்பினமா.?  இந்த குழு இம்சை தாங்க ஏலவில்லையே நாராயணா .மருந்தடித்து கொல்லுங்கப்பா..☺️

 5. 1 hour ago, nunavilan said:

  கடந்த 73 வருடங்களாக எங்கள் பொருளாதார கொள்கையில் ஏதோ தவறு இடம்பெற்றிருக்கின்றது.பல பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

  பொருளாதார கொள்கை அல்ல; இனவாத கொள்கை..

  • Like 1
 6. அடுத்த முறை கொஞ்சம் குறைத்து கேளும் .. இப்படி மாசா மாசம் ..வாரா வாரம் கடன் கேட்காதே ..என்றுதான் நிபந்தனை விதிக்க முடியும்..☺️

 7. பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவை ஏத்துகிட்டாச்சு. பிள்ளையலையும் ஏத்துகிட்டாச்சி; குடும்பம் ஒண்ணாச்சி சீரியல் முடிவுக்கு வரப்போகுது .☺️

  டிஸ்கி

  கிந்தியாக்கரன் 13 ,14 என்டு எதையும் கிழிக்க போவதில்லை என்டு உங்களுக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும் ; ,சிங்களனுக்கும் தெரியும் ; இவ்வளவு அலப்பறை தேவையா.? ரெல் மீ..😊

  • Like 1
 8. பறவை இனம் எல்லாம் ஒன்றுதான் .. இயற்கையாக இருந்தால் என்ன; செயற்கையாக இருந்தால் என்ன.👍

 9. 22 hours ago, கிருபன் said:

  குறித்த ஏவுகணையானது இந்தியா-ரஷ்யா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  கொடிதான் கிந்தியனுடையது ..உதிரி பாகங்கள் அனைத்தும் ரஷ்யனுடையது .. சொல்ல முடியாது கொடியையும் ரஷ்யாவில் தயாரித்து ஒட்டி இருப்பினம் .😊

  • Haha 1
 10. 14 hours ago, பசுவூர்க்கோபி said:

  large.IMG_5686.jpeg.fa2329b4efe650d1a9abc4a8030296e7.jpeg

  பார்த்தவுடன் முடிவுக்கு வராதே.!

  *************************

  கடலின் நடுவே

  மிதக்கின்ற ஊரை-ஒரு

  கதையாசிரியன்

  காணப்போனான்

  கோடை வெய்யிலில் 

  எரிந்து கிடந்ததாம்.

  உணவின்றி கால்நடை 

  இறந்துகிடந்ததாம்

  வயலெல்லாம் வெடித்து 

  பிளந்து கிடந்ததாம்

  வளரும் மரம்செடி 

  விறகாய் தெரிந்ததாம்

   

  காய்ந்த பூமியென 

  கதையே எழுதினான்

  கானாதோரை நம்பவே 

  வைத்தான் -அது

  பாலைவனமென 

  பரிந்துரை செய்தான்-தான்

  பட்டதுன்பமென 

  பலதும் சொன்னான்

  புத்தகம் விற்று 

  புகழுமடைந்தான்.

   

  ஆறுமாதம் 

  கழித்தொருவன் 

  அந்த ஊருக்கே

  அவனும் போனான்

   

  பச்சைப்பசேலென மூலிகை

  இருந்ததாம்-மரங்கள்

  பார்க்குமிடமெல்லாம் 

  கனியுடன் நின்றதாம்

  ஆவினம் மாவினம் 

  துள்ளித்திரிந்ததாம்

  அணைகள் நிரம்பி 

  நீரெங்கும் பாய்ந்ததாம்.

  பறவையினங்கள் 

  பாடித்திரிந்ததாம்

  பனை தென்னையங்கு 

  ஆடிமகிழ்ந்ததாம்

  அழகோ அழகு 

  அத்தனையழகு

  புத்தகம் எழுதி விற்பனை 

  செய்தான்.

  இரண்டு புத்தகமும் 

  எனக்கு கிடைத்தது

  இரவும் பகலும் நான் 

  வாழ்ந்த மண்ணது

  வசந்த காலமும்

  வரண்டகாலமும்

  வந்துபோவதே

  எமக்கு மகிழ்சி.

  எதையும்..

  ஒருதரம் பார்த்து

  உதவாதென்று

  உறுதியாய் சொல்ல 

  முனையாதீர்கள்.

   -பசுவூர்க்கோபி.

  தத்துவார்த்த கவிதை அருமை தோழர் பகிர்விற்கு நன்றிகள்.💐

  • Like 1
 11. On 21/1/2022 at 05:12, nochchi said:

  யாரென்றால்!
  ---------------
  நேற்றும் வாழ்ந்தார்கள்
  இன்றும் வாழ்கிறார்கள்
  நாளையும் வாழ்வார்கள்
  யாரென்றால் 
  இனத்துக்காக ஈகம் புரிந்த
  மாவீரர்கள்!

  நச் என்டு நாலு வரி கவிதை அருமை தோழர்..💐

 12. 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை வானொலி.." மீண்டு'ம்' வந்தது!

  preview-205616-1v2t16t7h0-high_0004.jpg

  கொழும்பு: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வானொலி ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம்.

  1922-ல் லண்டனில் முதன்முதலாக பிபிசி வானொலி நிறுவப்பட்டது. அதையடுத்து 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இந்த வானொலி தனது வர்த்தக சேவை பிரிவை 1950ல் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

  தமிழர்கள் அதிகமாக விரும்பி கேட்ட இலங்கை வானொலி மீண்டும் தனது சேவையை இந்தியாவுக்கு வழங்குகிறது. புகழ்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பாடல்களின் இசைத் தட்டுக்களைக் கொண்டிருக்கிறது.

  சேவை நிறுத்தம்

  இலங்கை உள்நாட்டுப் போரின்போது, கடந்த 31.05.2008 அன்று இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தமிழக நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை நிறுத்திக் கொண்டது.

  கோரிக்கை

  13 ஆண்டுகளாக மீண்டும் இந்த சேவையைத் தொடர வேண்டும் என இலங்கை வானொலிக்கு கோரிக்கைகள் சென்றது. இதையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்கே, இந்தியாவில் வானொலி சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். அதையடுத்து தமிழ் மக்களுக்காக சேவை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டது கொழும்பு வானொலி நிலையம்.

  மீண்டும் சேவை

  இந்நிலையில் நேற்று (20.01.2022) இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழ் நாட்டு நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி தனது ஒலிபரப்பை 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த வானொலியை மத்திய அலைவரிசையில் 873 கி.ஹெர்ட்ஸில் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

  நேரலை

  தமிழக நேயர்களின் இதில் நேரலையிலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானொலிக்கான‌ வரவேற்பை பொறுத்து சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைகளின் பொறுப்பாளராக‌ வீரசிங்கம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


  தமிழர்கள் வாழ்க்கையில் கலந்த ரேடியோ..

  இலங்கை வானொலி 1980, 90களில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்தது. அப்துல் ஹமீது குரலை இந்த வானொலியில்தான் தமிழர்கள் முதலில் கேட்டனர். பிறகுதான், லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என அவர் தமிழ் சாட்டிலைட் தொலைக்காட்சியில் காலடி எடுத்து வைத்தார்.

  இலங்கை வானொலியில் ஈழ தமிழ் பேசுவோரின் தமிழை கேட்பது இன்பத் தேன் காதில் பாய்வது போன்ற உணர்வை தரவல்லது .

  மீண்டும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தனது ஒலிபரப்பை தொடங்கியுள்ளமை ரெட்ரோ ரசிகர்களுக்கு ரெடிமேடாக கிடைத்த இனிப்பு மாதிரி ஸ்வீட் செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

  https://tamil.oneindia.com/news/colombo/sri-lanka-s-ilangai-vanoli-radio-broadcasts-again-in-india-after-13-years-446129.html

  டிஸ்கி :

   

  நல்ல ஆக்களை போட்டு விடுக.. 👌ரசிக்க தயார்.👍

  • Like 4
 13. நல்ல கோரிக்கை.. நானும் கிள்ளி பார்த்துவிட்டேன் ..கனவு அல்ல; நிஜம்தான் கள உறவுகள் நீங்களும் ஒருக்கா உங்களை கிள்ளி பார்த்து கொள்ளுக.👌

  • Like 1
 14. 19 hours ago, poet said:
  பொங்கல் வாத்துக்கள். HAPPY PONGAL
  - ஜெயபாலன்
  *May be an image of 1 person and text that says "பாலை Paalai Mann By B wa வஜ ஜெயபாலன் பாடல்கள்"
   
  பொங்கல் வாழ்த்துக்கள்  (பாடல்) - ஜெயபாலன்
  *
  வெண்பனி மீது பொன்மலர் சூடும்
  செங்கதிரோனை வாழ்த்துகிறோம்
  கண்பனி சூடி எம் நினைவோடு
  ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம்
   
  பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
  பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
   
  பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று
  பாசத்தில் வாடும் நெஞ்சங்களே
  பனியையும் மீறி பசுமையில் நிமிரும்
  பைன்மரம் போன்ற சிங்கங்களே
   
  பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
  பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
   
  பூமியில் என்றும் அகதிகள் என்று
  புழுதி மண் போல சுழலுவதோ
  தாயகம் மீண்டு துயர்களை வென்று
  தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ
   
  பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே
  பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே
   
  **********************************************************************************************************
  பொங்கல் வாழ்த்துப் பாட:ல் :சில ஆண்டுகளுக்கு முன்னம் எழுதி 2008ல் சென்னையில் ஒலிப்பதிவானது. சென்னை பல்கலைக்கழக இலக்கிய துறையின் ஏற்ப்பாட்டில் 2008 ஆகஸ்ட் 4ம் திகதி நண்பன் கலைஞன் அமரர் பாலு மகேந்திராவால் வெளியிடப்பட்டது.
  *
  முகப்பு படம்: எனது கவிதைகளின் முதல் இரசிகன் நண்பர் கலைஞன் அமரர் பாலுமகேந்திரா எடுத்த படம். எடுத்த வருடம் 2007 ஆக இருக்கக்கூடும்.

  பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.