Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  14,623
 • Joined

 • Last visited

 • Days Won

  21

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

 1. 2 hours ago, தமிழ் சிறி said:

  இந்தியாவின் குஷிநகர்

   

  2 hours ago, தமிழ் சிறி said:

  அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 95 பௌத்த தேரர்கள் சென்றுள்ளனர்.

  அவர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும்

  hqdefault.jpgபெயரே வில்லங்கமா கிடக்கே.. ஒருவேளை "குஷிபடுத்தி விடுவினமோ.. 😊

   

  • Like 3
 2. On 18/10/2021 at 10:08, தமிழ் சிறி said:

  இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையை இந்தியா மாற்றியமைக்கவேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  vadivelu-politician.gif

  ஏற்கெனவே கூடி குலாவி கொண்டுதான் இருக்கினம் இப்போ வெட்டி ஒட்டி விடலாமா.?

  எதிரியை எதிரில் வைத்திருப்பதைவிட கூட வைத்திருந்தால் செயற்பாட்டை குறைக்கலாம் என்ற அடிப்படையில் இவா போடுற கோர்ட் கேஸ்களுக்கு பயந்து எம்பி போஸ்ட் கொடுத்து வைத்திருக்கினம்  ☺️

 3. Kanni%252520Theevu%25252018923%25252017t

  தினத்தந்தியை ஆரம்பித்த ஆதித்தனார் இப்படி கதைத்தாராம் " நெடுந்தொடர் ஒரு பத்திரிகை வியாபாரத்திற்கு ரொம்ப முக்கியம் என் மூச்சு நின்றாலும் இந்த தொடர் எக்காரணம் கொண்டும் நிறுத்த கூடாது "

  அதற்கமைய "கன்னித்தீவு " 1960 இல் தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடதக்கது..👍

 4. On 13/10/2021 at 21:37, பசுவூர்க்கோபி said:

   

  large.De-aarde-CC0-Pixabay.jpg.d85b6e647ee6f291a788ecfe7676fddb.jpg

   

  என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. 

  எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது.

   

  இப்படியும் நடக்கலாம்..!

  *****************

  வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம்

  விரும்பிய சமையலறை காணாமல் போகலாம்

  மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம்

  முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். 

   

  சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம்

  சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம்

  சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம்

  சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம்.

   

  பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம்

  பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம்

  வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம்

  வயது வரமுன்னே பெரியவர் போலாக்கலாம்.

   

  ஓரினச் சேர்க்கைக்கு ஊதியம் கொடுக்கலாம்

  உலக வரைபடம் உருமாற்றிக் கீறலாம்

  நாட்டு எல்லைகள் இல்லாமல் போகலாம்

  நலிந்த இனங்களை நசுக்கியே கொல்லலாம்.

   

  புத்தகபடிப்புகள்  பொசுக்கி எரியலாம்

  புதுப்புது நோய் செய்து போரும் நடத்தலாம்

  காட்டு விலங்குபோல் மனிதனைஆக்கலாம்

  காசு முதளைகள் உலகத்தை ஆளலாம்.

   

  அன்புடன் -பசுவூர்க்கோபி.

  13.10.2021

  அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

  • Like 1
 5. On 8/10/2021 at 16:03, uthayakumar said:


  எவரை எவர் ஏமாத்துகின்றனர்

  வளமை போலவே
  இந்த முறையும்
  இந்திய அதிகாரி
  அதே 13 க் கதையை
  சொல்லிப் போனார்

  எத்தனை முறை
  சொன்னார்கள் என்று
  எனக்கு ஞாபகம் இல்லை
  ஆனால் முப்பது வருட
  கதை இது

  இத்தனை வருடமாக
  இந்தியாவை ஏமாத்த
  இலங்கைக்கு மட்டும் தெரியும் 
  இது சிங்கள இராஜதந்திரம் 

  முப்பது வருடமாய்  
  ஈழத் தமிழனை ஏமாத்த
  இந்தியாவுக்கும் 
  இலங்கைக்கும்
  மட்டும் தெரியும் 
  இது இன்னும் 
  ஒரு இராஜதந்திரம் 

  இனி வரும் காலமும் 
  இன்னும் ஒரு பொருளாதார 
  ஓப்பந்தம் எழுத
  இந்திய அதிகாரிகள் 
  மீண்டும் வருவார்கள் 
  அப்பவும் இன்னும் ஒரு முறை
  நினைவூட்டுவர் 
  அந்த 13 க் கதையை
  சற்றும் மனம் தளராத 
  விக்கிரமாதித்தன் 
  கதை போலே 

   மீண்டும் வேதாளம்
  13 ஐ சுமந்தபடி
  முருங்கை மரத்தில்
  தொங்கி நின்று

  ஏளனமாய்
  எம்மை பார்த்து 
  சிரித்தபடி சொல்கிறது 
  கையில் இப்போ 
  எந்தப் பலமும் 
  இல்லாத நீங்கள் 
  காத்திருங்கள் காத்திருங்கள்
  பொன் முட்டைகள் போடும் 
  வரை காத்திருங்கள் 
  என்றபடியே

  மீண்டும் வேதாளம்
  13 ஐ சுமந்தபடி
  முருங்கை மரத்தில்
  தொங்கி நிற்கும்.

  பா.உதயன் ✍️

  கீழ் காணும் கவிதை இன்னும் ஒரு முறை நினைவூட்ட பல மாதங்களுக்கு முன் இந்திய வெளி விவகார அமைச்சர் வந்து 13 ம் தீர்வை வலியுறுத்திய போது நான் எழுதிய கவிதை. இம் முறையும் இவர் போலவே கூறிச் சென்றிருக்கிறார் வெளி விவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வந்து. வருவதும் போவதுமாய் 13 ம் சரத்து தமிழர் தீர்வை வலியுறுத்துவதுமாய் இந்தியா ஆனால் எந்தத் தீர்வும் இலங்கை கொடுத்ததாய் இல்லை. இந்தியாவுக்கு ஏதாவதை கொடுத்து எங்களுக்கானதை கொடுக்க மறுக்கிறது இலங்கை. கொடுத்ததை பெற்றுச் சென்றிருக்கிறது இந்தியா. ஏதாவது தமிழருக்கு கொடுங்கள் என்றே சொல்லிவிட்டு 

  விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் 

  எந்தத் தீர்வையும் 
  ஈழத் தமிழனிடம்
  கேட்க்காமல் 
  இந்தியா போட்ட 
  பிச்சை இது 

  இன்னும் கிடந்து 
  இழுக்குது சேடம் 
  ஆயிரம் தடவை 
  இந்தியா சொல்லியும் 
  இலங்கை இதுக்கு 
  மசிவதாய் இல்லை

  ஏதோ புலி தான் 
  மறுத்தினம் என்றால் 
  இப்பவும் ஏன் தான் 
  மறுக்கினம் கொடுக்க 

  13 ம் பெட்டியோடு வந்த 
  பெரியண்ணை தலையில்  
  பிறத்தாலே நின்று 
  துவக்கால அடிச்சும் 
  சிங்களம் சொன்னது 

  இந்தத் தீவில் 
  எந்தத் தீர்வும் 
  எப்பவும் இல்லை என்று 
  அப்பவே சொன்னது 

  விக்கிரமாதித்தன் 
  கதையைப் போல
  சற்றும் மனம் 
  தளராத இந்தியா 
  சந்திக்கும் பொழுதெல்லாம் 
  13 ம் கதையை 
  பல தடவை சொல்லும் 

  இழுத்து வந்து வேதாளத்தை 
  தலையில் சுமக்கும் 
  கதையைப்போலே 

  இதுக்கு மேலாய் 
  கொடுப்போம் என்று 
  இந்தியாவை மடக்கும் 
  இலங்கை இராஜதந்திரம் 

  இப்ப இன்னும் 
  கடினம் கொஞ்சம் 
  இந்தியா நினைச்சது போல் 
  இந்து சமுத்திரம் இல்லை 

  இனி வரும் காலம் 
  சீனா காலமாம் 
  இலங்கை இப்போ 
  இவன் பக்கம் சாயல் 

  இந்தியா நினைப்பது 
  போல எதுகும் இல்லை 
  எல்லா பக்கமும் 
  றகன் வந்து குந்துது 

  இத்தனை ஆண்டாய் 
  கடத்திய இலங்கை 
  அவிபிருத்தி ஒன்றே 
  காணும் தமிழனுக்கு என்று 
  ஆளுக்கு ஒரு 
  அமைச்சு கொடுத்து 
  அதிகாரப் பகிர்வை 
  அடக்கியே வைத்தது 

  ஆன இன்றும் கூட 
  இதுகும் இல்லை 
  அதுகும் இல்லை 
  எதுகும் நடந்ததாய் 
  இல்லை 

  இன்னும் ஒரு முறை 
  இந்தியா வரும் 
  அப்பவும் அந்த 
  13க் கதை வரும் 
  இப்பவும் ஒன்றும் 
  தெரியாது போல 
  சீனா பார்வையோட 
  சிங்கம் உறுமும்.

  பா.உதயன் ✍️


  “You have to learn the rules of the game. And then you have to play better than anyone else.”

  ― Albert Einstein

   

  9-1536392463.jpg

  பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👌

  • Like 1
 6. படம் : மாலா ஒரு மணிவிளக்கு(1959)
  இசை : CN பாண்டுரங்கன் 
  பாடியவர் : PBS

  வரிகள் வில்லிபுத்தன்

  டிஸ்கி

  கண்ணை மூடி "கெற்-போனில்" கேட்கவும் 😊

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.