Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14928
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. நாம் தமிழர் நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை.. திருப்பி அனுப்பப்பட்ட 400 பேர்- என்ன காரணம்?

    original1-1639901959.jpg

    சென்னை: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

    இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

    தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது.

    கட்சி நிர்வாகிக்கு தடை

    இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த குமார் (25) என்ற இளைஞருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது. இவருக்கு வாழ்நாள் தடை விதித்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு. இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது.

    சிங்கப்பூர் தமிழர்

    பொதுவாக சிங்கப்பூர் அரசு தமிழர்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுக்காது. தமிழர்களை இருகரம் கூப்பி வரவேற்கும் நாடுதான் சிங்கப்பூர். ஆனால் திருவாரூரைச் சேர்ந்த குமார் இப்போது வாழ்நாள் தடை பெற்றுள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

    என்ன காரணம்?

    சிங்கப்பூர் சென்ற இவர் நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை சிங்கப்பூர் அரசு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து இவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, தற்போது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது

    சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அங்கு நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பிரச்சாரங்களை செய்வதால் நாம் தமிழருக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    400 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

    இதுவரை நாம் தமிழர் நிர்வாகிகள் 400 பேர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படவில்லை. இப்போதுதான் முதல்முறையாக குமார் என்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.

    முறையீடு செய்தனர்

    இது தொடர்பாக சிங்கப்பூர் தூதரகத்தில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே முறையீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே நிர்வாகிகள் திருப்பி அனுப்பப்பட்ட போது நாம் தமிழர் கட்சி சிங்கப்பூர் தூதரகத்தில் முறையீடு செய்துள்ளது. ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-party-cadre-gets-lifetime-ban-from-entering-singapore-442613.html

    டிஸ்கி :

    ரோவின்ர வேலையாதான் இருக்கும் .

  2. கச்சதீவு என்றால் கூட ஓகே.. நெடுந்தீவு எங்கே இருக்கு.?

    சிங்கள கடற்படை அட்டகாசமாம் அத்து மீறலாம் கலைஞர் ரீ.வி யில் செய்தி போடுகினம் 

    ஒரு நியாய தர்மம் வேண்டாமா.😢

    268287676_5345137532215078_6489032907143

  3. 1 hour ago, கிருபன் said:

    வாக்களிப்பது தொடர்பாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் இந்தத் தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டது என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்

    கருணாநிதி உடல் சுகவீனமுற்று இருந்த போது அவரை கவுரவ தலைவராக அறிவித்து போட்டு ஸ்டாலின் செயல் தலைவராக ஆனார் ..

    இப்போ விஜயகாந்த் கட்சியில் அவரை கவுரவ தலைவராக அறிவித்துவிட்டு பிரேமலதா செயல் தலைவராக ஆகும் முயற்சி நடந்து வருகிறது ..

    போகட்டும் விடயதிற்கு வருவம் கவுரவ தலைவர் சம்பந்தர் நன்றாக (?) இருக்கும் போது உள்-குத்து குத்தும் செயல் தலைவர் ஆருப்பா..😊

  4. 5 hours ago, பெருமாள் said:

    "இதுவே முடிவு மாத்திரமல்ல, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்

    "ராமர் பாலம் - மோடி ஆட்சி " தாராளமாக அரசியல் செய்யலாம் ,ஆனால் அதற்குரிய கப்பசிற்றி , யூனிவர்சிற்றி ஈழ அரசியல்வாதிகளுக்கு வேண்டுமல்லொ..😢

    • Like 1
  5. இங்கு ஓய்வுதிய திட்டம் நிறுத்தபட்டதில் இருந்து "கையூட்டு" இல்லா அரச வேலையை அவ்வளவாக ஆரும் விரும்புவது இல்லை ..

    போட்ட காசை திரும்ப எடுக்க இயலாது ( ?) அங்கு நிலவரம் என்ன.? ஓய்வுதியம் உண்டா.?😊

  6. 22 hours ago, suvy said:

    பேசுவது கிளியா.......!  💞

    அந்த காலம் .. ஊருக்கு ஒரே ஒரு ரி.வி.. பஞ்சாயத்து ரி.வி..  நின்றுகொண்டு "பணத்தோட்டம்" தூர்தர்சனில்  பார்த்த நினைவுகளை கிளறியமைக்கு நன்றிகள் தோழர்.👍

    • Like 2
  7. 7 hours ago, தமிழ் சிறி said:

    ஜனாதிபதியின்…. செயலாளரால், குடும்ப சண்டை  ஆரம்பித்திருக்கு போலை இருக்கு.

    தோழரை கண்டதில் மகிழ்ச்சி..💐

  8. 12 hours ago, கிருபன் said:

    1983 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது. தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. பல விதமான நிகழ்வுகள் இந்தியாவின் தலையீட்டால் நடைபெற்றன.

    ஸ்ஸ்ஸ்.. மிடியல .. படுத்துறாங்கப்பா..😢

  9. எல்லா கட்சி லெற்றர் பேடிலும் எழுதி(ரைப்) மொத்தமா கிளிப் அடிச்சு கொடுப்பினமா ? 

    உலகம் எங்கயோ போய்கொண்டுருக்க ..

    1cbd52d0-b3a6-4386-a929-7669692f73d1.961

    அந்த பேப்பர் கொம்பனி எல்லாம் இழுத்து மூடுங்கப்பா...👍

  10. 14 hours ago, பசுவூர்க்கோபி said:

    large.263308094_4829197163799704_607340295798998412_n.jpg.f2ebfc898ee0aa3a9f5265ad54d8a396.jpg

     

    என் அன்பு யாழ் இதயங்களுக்கு..

    தமிழ்நாட்டின் பிரபல ஓவியர்மாருதிஅவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும்.

    அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு!

    படம் சொல்லும் கவிதை..! 

    **********************

    கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே

    கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே

    மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே

    மிஞ்சாத இனிமையின் கொடியிடையே!

     

    கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே

    குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே

    கருமேகச் சுருள் தந்த காதோர முடியே

    காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே!

     

    கரைதொட்டு பின் திரும்பும்

    கனிவான அலைபோல்-கால்

    தொடை பட்டு மேல்படரும் 

    கரை போட்ட உடையே!

     

    கலகலக்கும் உன் களுத்து 

    நிறைவான நகையே

    கண்புருவ வானவில்லின் 

    அம்போடு வில்லே! 

     

    கைநிறைந்த வளையல்களின் 

    விரல்பேசும் மொழியே 

    கரு இரவில் தேன்சுரக்கும் 

    மறைவான நிலவே!

     

    பெண்ணென்ற பெருமதிப்பு 

    பிரபஞ்ச பேரழகே-உன்

    பிறப்பால் தான் உலகெங்கும் 

    உயிர்களுக்கு மகிழ்வே!

    அன்புடன்-பசுவூர்க்கோபி.

    அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

    • Thanks 1
  11. On 10/12/2021 at 15:19, ஏராளன் said:

    கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களை தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும் என டயானா கமகே தெரிவிக்கிறார்

    An-Aghori-Saints-Samadhi-Takes-Cigarette

    நாடு வல்லரசு ஆவதற்கு முதல் படி.. அதற்கும் மேலே முக்தி மார்க்கத்தை விரைவுபடுத்த முடியும் .. மீண்டும் / தற்போதும் பிறவா நிலை ஏற்படுத்த முடியும் 

    நல்லா பயிர் செய்யுங்கோ வாழ்த்துக்கள்..😊

  12. 20 hours ago, suvy said:

    தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

    தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

  13. 15 hours ago, nochchi said:

    வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்!
    -----------------------------------------------------

    நூற்றாண்டைத் தொட்டுவிட்ட
    கவிதைகளின் பயணத்திலே 
    யாராரோ வந்தாலும் போனாலும்
    ஊரெங்கும் ஊர்வலமாய்
    கவிபாடி நின்றாலும்
    புதுக்கவிதை பாடியெங்கும்
    புதுமைக் கவியானவனே
    யுகமெங்கும் புகழ்சூடி
    வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே!
    பெண்ணென்றும் ஆணென்றும்
    வேற்றுமைகள் இல்லாத
    உலகொன்றைக் காண்பதற்காய்
    உன்சொற்கொண்டு போர்தொடுத்து 
    விடுதலையின் முரசறைந்தே
    உலகின் கூன் அகலும்
    நிலையைக் காண்பதற்காய்
    வைரநிகர் வார்த்தைகளால்
    உரைத்தாய் உய்யும்வகை
    அசைத்தாய் இவ்வுலகை!
    பன்முகத் திறன் கொண்டாய்
    புரட்சிகர மனம் கொண்டாய்
    அநீதிகளைக் கண்டெழுந்தே
    அறைகூவல் விடுத்தவனே
    நின் எழுத்துகளால் அரணமைத்தாய்!
    பதைபதைத்தாய் துடிதுடித்தாய்
    விடியலுக்காய் எழுகவென்றே
    விண்ணதிரும் வரிகள் கொண்டாய்
    மண்ணெங்கள் மண் என்றாய்
    அறமெங்கள் மறமென்றாய்
    அகலாத துணிவுகொண்டாய்
    அடிமையில்லை நாமென்றாய்
    மதங்களை கடக்கச் சொன்னாய்
    மனிதத்தைக் காணச்சொன்னாய்!
    அகந்தையை அகற்றச் சொன்னாய்
    அன்பினைக் கற்கச் சொன்னாய்
    அறிவினைக் பற்றச் சொன்னாய்
    இருளினைக் கடக்கச் சொன்னாய்
    இன்பமாய் வாழச் சொன்னாய்
    கொள்கைகளில் உறுதி கொண்டாய்
    கொடுமைகளை எதிர்த்து நின்றாய்
    பன் நூற்றாண்டைக் கடந்தாலும்
    மானிட விடுதலையின் மகத்துவமாய்
    வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
    பாரதியே விடுதலையிற் பாதி நீயே! 

    நன்றி

    அன்பார்ந்த நட்புடன்

    நொச்சி
    11.12.2021

    அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.. 💐

  14. 11 hours ago, uthayakumar said:

    புலராத பொழுதென்று எதுகும் இல்லை 
    கடக்காத துயர் என்று யாதும் இல்லை 
    முடியாத பகை என்று ஒன்றும் இல்லை 
    கூவாத குயில் என்று எங்கும் இங்கில்லை 

    ஒரு நாளும் மறையாத ஒளி வேண்டினேன்
    ஒரு கோடி தவம் இங்கு நான் செய்கிறேன்
    ஆனந்த யாழோடு சுரம் தேடுறேன் 
    அதனோடு தனியாக இசை மீட்கிறேன் 

    அறமே தான் வாழ்வாக அதைத் தேடினேன் 
    ஒரு போதும் குனியாத நிலை வேண்டினேன் 
    அறிவோடு ஞானங்கள் தினம் தேடினேன் 
    என்றும் யார் என்று எனைத் தேடினேன்

    கனவு காணாத மனிதரென்று எவருமில்லை
    காதல் பேசாத மொழி என்று எதுகுமில்லை
    காலம் சொல்லாத கதை என்று எதுகும் இல்லை 
    கவிதை இல்லாத உலகு என்று இருப்பதில்லை

    சிற்பி செருக்காத சிலை என்று ஒன்றும் இல்லை 
    சலங்கை ஒலிக்காத சுரம் என்று யாதும் இல்லை 
    இயற்கை பேசாத மொழி என்று எதுகும் இல்லை 
    இத்தனை கோடி இன்பங்கள் இங்கு தவமெல்லவோ.


     

    அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர் 💐

    • Like 1
  15. ரசுனிக்கு பிறந்தநாளாம் .. எப்படியும் பைத்தியங்கள் சேட்டை அதிகம் இருக்கும் .. தோழர் தமிழ்சிறி வேற லீவு .. மீம்ஸ் எங்க போய் எப்படி எடுப்பது என்று தெரியலையே..😢

  16. வாழ்த்துக்கள்..💐 இவர் கஷ்டப்பட்டு சீர் செய்து வைப்பார்.. அவயள் திருஷ்டிக்கு புத்தர் சிலையை கொண்டு வந்து வைப்பினம்.. புராண கதையை அவிழ்த்து விடுவினம் ..😢

    • Like 3
    • Thanks 1
  17. 1 hour ago, அராலி said:

    யாழ் உறவுகளிற்கு வணக்கம்
    என்னை உங்களிற்கு நினைவிருக்காது. 2007 பிற்காலத்தில் யாழ்கள உறுப்பினராக இருந்த  "நாட்டுக்கட்டை" 
    2009 முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய மனவேதனையுடன் அமைதியாகி விட்டேன். இருந்தாலும் அப்பப்ப யாழ் படிப்பதை மட்டும் தொடர்ந்தேன். ஏனெனில் என் அபிமான கருத்தாளர்கள் நெடுக்ஸ் விசுகு எழுஞாயிறு சிறி போன்ற இன்னும் பலர். நீண்டகாலம் கருத்தெதுவும் எழுதாத காரணத்தினால் களநிர்வாகிகள் இந்த நாட்டுக்கட்டையை அடக்கஞ்செய்துவிட்டார்கள். எனவே மீள்வருகை புதிய பெயரில் வரவேண்டியுள்ளது. 
    அன்புடன் அராலி.

    வணக்கம் வருக.. தங்கள் கருத்துக்களை தருக..👍

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.