Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15887
  • Joined

  • Last visited

  • Days Won

    23

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – ரெல்லி சுல்தான்கள் - விசயநகர பேரரசு போர்கள் # மதுரை

    thamizhnattu-porkalangal-ch24.jpg

    மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இதில் மூன்றாவது முறை நடைபெற்ற படையெடுப்பு பின்னாளில் முகமது -பின்- துக்ளக் என்று அறியப்பட்ட உலூக்கானின் தலைமையில் 1323ம் ஆண்டு நடந்தது. தமிழகத்தை முற்றிலுமாக நிலைகுலையச் செய்த படையெழுச்சி இது. தமிழகத்தில் புகுந்த உலூக்கானின் படை போகும் இடமெல்லாம் அழிவு வேலைகளை நடத்திக்கொண்டே முன் சென்றது. கோவில்கள் அழிக்கப்பட்டன. விக்ரகங்கள் உடைக்கப்பட்டன.

    ஶ்ரீரங்கம் பங்குனித் திருவிழாவில் கூடியிருந்த பன்னிரண்டாயிரம் பக்தர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்று பாராது கொல்லப்பட்டனர். ஶ்ரீரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாள் ஆசார்யார்கள் உதவியுடன் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை மீதும் உலூக்கான் தாக்குதல் நடத்தினான். அப்போது பாண்டிய நாட்டில் அரசு செய்துகொண்டிருந்த முதலாம் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் தோற்கடிக்கப்பட்டு சிறையில் இடப்பட்டான். மதுரைக் கோவிலிலும் அழிவு வேலைகள் தொடர்ந்தன. மூலவரின் முன்பு ஒரு கல் சுவர் எழுப்பிவிட்டு நாஞ்சில் நாடு நோக்கி உற்சவ மூர்த்திகளுடன் கோவில் பட்டர்கள் தப்பிச்சென்றனர்.

    s2.jpg

                                             ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா

    டெல்லி சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மதுரையை மாபார் என்ற பெயரில் இணைத்த உலூக்கான், தன்னுடைய உறவினனான ஹாசன் கானை மதுரையில் பிரதிநிதியாக நியமித்து ஆட்சி செய்யப் பணித்துவிட்டு பராக்கிரம பாண்டியனோடு டெல்லி திரும்பினான். வழியில் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான். அத்தோடு மதுரைப் பாண்டியர் வம்சம் முடிவுக்கு வந்தது.

    உலூக்கான் டெல்லி திரும்பி முகமது பின் துக்ளக் என்ற பெயரோடு முடிசூடிக்கொண்டதும், மதுரையில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஹாசன் கான் தன்னை சுதந்தர அரசனாக அறிவித்துவிட்டு, மதுரை சுல்தானகத்தை ஸ்தாபித்தான். அவனுக்குப் பின் பல்வேறு சுல்தான்கள் மதுரையை ஆட்சி செய்தனர். அவர்களுடைய ஆட்சியில் தமிழகம் எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்தது. அவர்களை எதிர்த்துப் போரிட முயன்ற ஹொய்சாள அரசன் வீர வல்லாளன் கண்ணனூர்க் கொப்பம் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். அக்காலகட்டத்தில் மதுரை வந்து தங்கியிருந்த இபின் பதூதா என்ற பயணி, அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றி விவரித்து எழுதியிருக்கிறார். இம்மென்றால் சிறை வாசம் ஏனென்றால் வனவாசம் எல்லாம் இல்லை, எதிர்த்துப் பேசினால் தலை உடலில் இருக்காது. அவ்வளவுதான்.

    கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் நடைபெற்ற சுல்தானிய ஆட்சியில் “மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து தங்கள் ஊரை விட்டுச் சென்றனர். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் அராஜகம் எங்கும் நிலவியது. உணவுப் பஞ்சமும் வேலையில்லாத் திண்டாட்டமும் நாடெங்கும் காணப்பட்டது. விவசாயம் ஒழுங்காக நடைபெறவில்லை. அதனால் உணவு கிடைக்கவில்லை. நுண்ணிய வேலைப்பாடு கொண்ட பல கோவில்களும் மண்டபங்களும் கலைப் பொருட்களும் நாசமடைந்தன” என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் காரணங்களால் மக்கள் பெரும்பாலும் அச்சத்திலேயே வாழ்ந்தனர். கியாசுதீன் தம்கானி என்ற சுல்தானின் ஆட்சியில் மதுரை நகரில் கொள்ளை நோயான ப்ளேக் பரவியது. இதில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர்.

    அக்காலகட்டத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் பொயு 1336ம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோன்றியது. ஹரிஹரர், புக்கர் ஆகிய சகோதரர்கள் சிருங்கேரி சங்கராச்சாரியரான ஶ்ரீவித்யாரண்யரின் ஆசியுடன் இந்த அரசை உருவாக்கினர். ஹரிஹரருக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய அவரது சகோதரரான புக்கர், தன்னுடைய மகனான குமார கம்பண்ணரை அழைத்து தமிழகத்தில் மக்கள் சுல்தானிய ஆட்சியில் படும் அவதிகளை எடுத்துக்கூறி, ஒரு படையோடு தமிழகம் சென்று சுல்தான்களை ஆட்சியில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

    குமார கம்பண்ணர் அப்போது முல்பாகல் என்ற இடத்தில் விஜயநகரத்தின் ஆளுநராக ஆட்சி செய்துகொண்டிருந்தார். தந்தையின் ஆணையை ஏற்று வலுவான தளபதிகள் கொண்ட படையோடு பொயு 1362ம் ஆண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சம்புவரையர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். ஒரு பக்கம் சுல்தான்களின் தாக்குதலைச் சமாளித்து ஆட்சி செய்துகொண்டிருந்த அவர்கள், விஜயநகர அரசுக்கும் அடிபணிய மறுத்தனர். இதன் காரணமாக அவர்களோடு போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு கம்பண்ணர் ஆளானார்.

    v1.jpg

    விரிஞ்சிபுரத்தில் விஜயநகரப் படைகளுக்கும் சம்புவரையர்களின் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. விஜயநகரப் படையில் யானைகள் பெருமளவு இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வலிமையான விஜயநகரப் படையை எதிர்த்து சம்புவரையர்கள் நீண்ட நேரம் போரிட முடியவில்லை. போரில் தோல்வியடைந்த சம்புவரையர்களின் அரசன் ராஜகம்பீரம் என்ற இடத்தில் இருந்த மலைக்கோட்டையில் மறைந்துகொண்டான். அந்த இடத்தை விஜயநகரப் படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தின. அதன்பின் வேறு வழியில்லாமல் சம்புரவரையன் சரணடைந்து விஜயநகர ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதன் பின் காஞ்சியை அடைந்த கம்பண்ணர் அங்கே சில நாட்கள் தங்கியிருந்தார்.

    கம்பண்ணரின் வாழ்க்கையைப் பற்றியும் அவருடைய இந்தப் படையெடுப்பைப் பற்றியும் அவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூல் விவரித்துக் கூறுகிறது. அதன்படி, கம்பண்ணர் காஞ்சியில் தங்கியிருந்த போது அவர் முன் தோன்றிய மதுரைத் தெய்வமான மீனாக்ஷி அம்மன், சுல்தான்களின் ஆட்சியில் மக்கள் படும் அல்லல்களை எடுத்துக் கூறியதாம். அந்தக் கொடுங்கோலான ஆட்சியை அகற்றி மக்களைக் காப்பாற்றும் படி அவருக்கு உத்தரவிட்டு ஒரு வாளையும் அளித்து விட்டு அம்மன் மறைந்ததாக கங்கா தேவி கூறுகிறார்.

    அதை சிரமேற்கொண்டு, கம்பண்ணர் காஞ்சியிலிருந்து தன் படையுடன் புறப்பட்டார். வழியில் ஶ்ரீரங்கத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தானின் பிரதிநிதியைத் தோற்கடித்து விட்டு அங்கே தன்னுடைய பிரதிநிதிகளை நிறுத்திவிட்டு மதுரை நோக்கிச் சென்றார். பொயு 1371ம் ஆண்டு மதுரையை அடைந்த கம்பண்ணரின் படைகளோடு அங்கே காத்திருந்த சுல்தானின் படைகள் மோதின. இதில் கம்பண்ணரோடு போரிட்ட சுல்தானின் பெயர் பற்றிய பல சர்ச்சைகள் இருந்தாலும், மதுரை வரலாற்றின் படி சிக்கந்தர் ஷா என்பதே மதுரை சுல்தானகத்தின் கடைசி சுல்தானின் பெயர் என்பதால், சிக்கந்தரே கம்பண்ணரோடு போர் செய்தவன் என்று கொள்ளலாம்.

    m2.jpg

                                                                  மதுரை

    மதுரைச் சுல்தான்களின் கொடியில் காக்கைச் சின்னம் இடம் பெற்றிருந்தது. விஜயநகரப் பேரரசின் கொடியில் அதன் சின்னமான வராகம் இருந்தது. இந்தப் போர் பற்றிய நிகழ்ச்சிகளை மதுரா விஜயம் பின்வருமாறு விவரிக்கிறது.

    “கம்பண்ணருடைய வில் வீரர்கள் அர்த்த சந்திர வடிவிலான அம்புகளை எய்து சுல்தானிய வீரர்களின் கைகளை வெட்டி வீழ்த்தினர். பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் செய்த ஸர்ப்ப யாகத்தில் பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தது போல அந்தக் கைகள் கீழே ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தன. வரிசையாக வந்த யானைகளின் தலைகள் வீரகம்பண்ணரின் வீரர்களால் பிளக்கப்பட்டன. கம்பண்ணருடைய படையில் இருந்த யானைகள் சுல்தானின் படைகளில் உள்ள குதிரைப் படைகளின் மீது மோதில் குதிரைகளையும் அதன் மீதிருந்த வீரர்களையும் கீழே தள்ளித் துவைத்தன. சுல்தானிய வீரர்களின் உடல்கள் யானைகளால் பல முறை பந்தாடப்பட்டன. தேர்க்காலில் சிக்கி சுல்தானின் படைவீரர்களின் தலைகள் மேலே பறந்தன. சிங்கங்களைப் போல போர்க்களத்தில் உலவி வந்த வீரர்கள் எதிரிகளை தங்கள் கூரிய நகங்களைக் கொண்டு காயப்படுத்தினர்.

    இரு முனைகளைக் கொண்ட ஈட்டி ஒன்றை சுல்தான் வீரன் ஒருவன் எதிரி மீது எறிந்தான். அதனால் காயமுற்ற விசயநகர வீரன் தளராமல், அந்த ஈட்டியைப் பிடுங்கி தன் மேல் எறிந்தவன் மீது திரும்ப எறிந்து அவனைக் காயப்படுத்தினான். கம்பண்ணர் எதிரிப் படை யானைகளின் முகங்களின் மீது அம்புகள் விட்டுக் கொன்றதால் அவை ரத்தத்தைச் சொரிந்தபடி கீழே வீழ்ந்தன. அவற்றின் மீதி இருந்து உதிர்ந்த முத்துக்கள் அந்த ரத்த ஆற்றின் கீழே உள்ள மணல் துகள்கள் போலக் காணப்பட்டன. வீரமிக்க கம்பண்ணன் தன்னுடைய வாளை ஓங்கிக்கொண்டு எதிரி வீரர்களைத் தாக்கிப் போர் செய்தான். அவனுடைய வாள் எதிரிகளின் தலைகள் மீது அடித்தபோது அவர்களின் கண்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்து மீண்டும் ஒட்டிக்கொண்டன. பரசுராமன், ராமன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரைப் போல கம்பண்ணர் போர் செய்ததைக் கண்டு அங்குள்ளோர் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த வீரப்போரால் தன்னுடைய வீரர்கள் பயந்து ஓடுவதைக் கண்ட சுல்தான், தானே குதிரை மீது ஏறி போர்க்களத்திற்கு வந்தான். அதைக் கண்ட கம்பண்ணர் உற்சாகமடைந்து அவனோடு நேருக்கு நேர் மோதினார். இந்திரனும் விருத்திராசுரனும் சண்டை செய்ததுபோல அவர்கள் இருவரும் சண்டையிட்டனர். தன்னுடைய வில்லை வளைத்து அம்புகளை சுல்தான் எய்தபோது எழுந்த ஓசை திருமகளின் காலில் இருந்து எழுந்த சிலம்போசையை நினைவுபடுத்தியது. தனக்குச் சமமான ஒரு எதிரியைக் கண்ட கம்பண்ணர் மகிழ்ச்சியோடு அவனோடு போரிட்டார். இருவரும் சளைக்காமல் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். காக்கையைச் சின்னமாகக் கொண்டிருந்த சுல்தான் கலி புருஷனைப் போலக் காணப்பட்டான்.  தனது அம்புகளால் கம்பண்ணனை வீழ்த்தி  வெற்றி பெறுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த அவன் ஆணவத்தை அடியோடு அழித்தார். தன்னுடைய அம்புகளால் சுல்தானின் வில்லின் நாணை அறுத்தார் கம்பண்ணர். அதனால் ஆத்திரமடைந்த சுல்தான், தன்னுடைய வாளை ஏந்திக்கொண்டு கம்பண்ணரைத் தாக்கினான்.

    அதைக் கண்ட கம்பண்ணர் தன்னுடைய வீர வாளை ஏந்தி சுல்தானோடு வாட்போர் செய்தார். ஒளிமிகுந்த அந்த வாள் சுல்தானின் தலையைக் கொய்தது. தலைவணங்குதல் என்பதை அறியாத சுல்தானின் தலை மண்ணில் உருண்டோடியது. காட்டுத்தீயிலிருந்து விடுபட்ட வனத்தைப் போலவும் கிரஹணம் நடந்தபிறகு காணப்படும் நிர்மலமான வானவெளியைப் போலவும் காளிங்கன் விரட்டியடிக்கப்பட்ட பிறகு தெளிந்த நீர் ஓடிய யமுனையைப் போலவும் மதுரை சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு காட்சியளித்தது”

    இப்படிக் கடுமையாக நடந்த போரில் வெற்றி பெற்ற கம்பண்ணர், அதன்பின் தமிழகத்தின் நிர்வாகத்தைச் சீரமைத்தார். அழிந்த பல கோவில்களைப் புனருத்தாரணம் செய்து பல திருவிழாக்களை மீண்டும் தொடங்கினார். தமிழகத்தை விட்டுச் சென்ற ஆன்மிகப் பெரியோர்கள் பலர் தமிழகம் திரும்பினார். அழகிய மணவாளப் பெருமாள் ஶ்ரீரங்கத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார். மதுரைக் கோவில் கல்திரை இடிக்கப்பட்டு கம்பண்ணர் கருவரைக்குச் சென்று தரிசனம் செய்தபோது அங்கே சுந்தரேஸ்வரர் முன் தீபம் அப்படியே எரிந்துகொண்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.

    தமிழகத்தை பெரும் சீரழிவிலிருந்து மீட்ட பெருமை கம்பண்ணரையே சேரும்.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-24/

    டிஸ்கி :
    ஆக அன்றைய விசயநகர படையெடுப்பு இன்றைய திராவிடத்திற்கு வித்திட்டது எனலாம். 😄

    • Like 1
  2. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம் ( ஜெயங்கொண்டான் )

    thamizhnattu-porkalangal-ch23.jpg

    ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன் வென்ற இடங்களையெல்லாம் கட்டிக்காத்தும் ஆங்காங்கே கலகங்கள் எழும்போது அவற்றை எல்லாம் அடக்கியும் மதுரை அரசை திறமையுடன் ஆண்டான். தமிழகம் அவனுடைய ஆட்சியில் உச்சத்தைத் தொட்டு செல்வச்செழிப்பு மிக்கதாக இருந்தது.

    அவனுடைய அரசவைக்கு வந்த பயணியான மார்க்கோ போலோ, அவனுடைய ஆட்சிச் சிறப்பை வர்ணித்திருக்கிறார். பாண்டியர்கள் அரபு நாட்டிலிருந்து குதிரைகளை அதிக அளவில் இறக்குமதி செய்ததைப் பற்றியும் முத்துக்குளிக்கும் தொழில் சிறப்பாக நடந்ததைப் பற்றியும் அவர் குகுறிப்பிட்டிருக்கிறார்.

    image-2023-10-13-211200128.png

    மார்க்கோ போலோ

    இஸ்லாமிய வரலாற்றாசிரியரான வஸாப் என்பவர், 1200 கோடி தங்கம் பாண்டியர்களிடம் இருந்தது என்றும் முத்து, பவழம், மாணிக்கம் போன்ற நவரத்தினங்கள் கணக்கிலடங்காத அளவில் இருந்தன என்றும் எழுதியிருக்கிறார். கண்ணுக்கெட்டிய வரை எதிரிகளே இல்லாமல் சுமார் 40 ஆண்டு காலம் செல்வம் மிகுந்த நாடான மதுரையை ஆட்சி செய்தான் குலசேகரன்.

    குலசேகரபாண்டியனுக்கு இரண்டு மகன்கள். பட்டமகிஷியின் மூலம் சுந்தரபாண்டியனும் ஆசைநாயகியின் மூலம் வீரபாண்டியனும் அவனுக்குப் பிறந்தனர். மூத்தது மோழை இளையது காளை என்ற பழமொழிக்கேற்ப, வீரபாண்டியன் வீரம் மிகுந்தவனாக இருந்தான். அடுத்த அரசனாகும் தகுதி அவனுக்கே இருக்கிறது என்று கருதிய குலசேகரன், வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிவைத்தான். பாண்டியர்களின் மரபின் படி வீரபாண்டியன் கொற்கையிலிருந்து ஆட்சிப்பொறுப்பைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

    முறைப்படி பிறந்த தனக்கு ஆட்சியில்லை என்பதை அறிந்த சுந்தரபாண்டியன் ஆத்திரம் அடைந்தான். ஒரு கட்டத்தில் அது அளவுக்கு மீறிச் செல்லவே தகப்பன் என்றும் பார்க்காமல் குலசேகரனைக் கொன்றுவிட்டான் சுந்தரபாண்டியன்.

    அதுமட்டுமல்லாமல் அடுத்த அரசன் தானே என்று அறிவித்து மதுரையில் முடிசூட்டிக்கொண்டான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வீரபாண்டியன், ஒரு படையைத் திரட்டிக்கொண்டு அண்ணனோடு போர் செய்ய வந்தான். சுந்தர பாண்டியனும் தனக்கு வேண்டியவர்களைக் கொண்ட ஒரு படையைத் திரட்டினான்.

    இருதரப்பும் தலைச்சி குளங்கரை என்ற இடத்தில் மோதிக்கொண்டன. போரின் ஒரு கட்டத்தில் வீரபாண்டியன் படுகாயமடைந்து வீழ்ந்தான். அவன் இறந்துவிட்டான் என்று நினைத்த சுந்தரபாண்டியன் வெற்றி முரசு கொட்டி மதுரை திரும்பினான். ஆனால் படுகாயமடைந்த வீரபாண்டியன், சீக்கிரமே குணமடைந்து மீண்டும் ஒரு முறை படைகளைத் திரட்டி சுந்தரபாண்டியனுடன் மோத வந்தான்.

    தகப்பனையே கொன்றுவிட்டு, தம்பியையும் கொல்லத்துணிந்த சுந்தரபாண்டியனின் மீது மக்கள் வெறுப்படைந்தனர். ஆகவே அவனுடைய ஆதரவாளர்கள் பலர் அவனை விட்டு விலகி வீரபாண்டியன் பக்கம் சேர்ந்தனர். தன்னால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்துகொண்ட சுந்தரபாண்டியன், மதுரையை விட்டு ஓடிவிட்டான். வீரபாண்டியன் மதுரையைக் கைப்பற்றிக் கொண்டு முறைப்படி அரசனாக முடிசூட்டிக்கொண்டான்.

    பாண்டிய நாட்டில் இப்படி உள்நாட்டுப் போர் நடப்பது ஹொய்சாள நாட்டு மன்னனான வீர வல்லாளனுக்கு எட்டியது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஹொய்சாளர்கள் கண்ணனூர்க் கொப்பத்திலிருந்து விரட்டப்பட்டு பெருமளவு ஆட்சிப் பகுதியையும் பறிகொடுத்ததை அவன் மறக்கவில்லை.

    அதுவே தகுந்த தருணம் என்று கருதி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மதுரை நோக்கி ஒரு படையுடன் வந்தான் வீரவல்லாளன். ஆனால் விதி அவனை விடவில்லை, கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்கபூர் ஒரு பெரும்படையுடன் ஹொய்சாளர்களின் தலைநகரான துவார சமுத்திரத்தை நோக்கி வரும் தகவல் அவனை எட்டியது. அதைக்கேட்ட வீரவல்லாளன் அவசர அவசரமாக தலைநகர் திரும்பினான். ஆனால் மாலிக்கபூரின் படைகளை ஹொய்சாளர்களால் எதிர்க்கமுடியவில்லை. கடைசியில் பெரும் செல்வத்தைக் கொடுத்து மாலிக்கபூரோடு சமாதானம் செய்துகொண்டான் வீரவல்லாளன்.

    டெல்லி சுல்தானியத்தில் அலாவுதீன் கில்ஜியின் அந்தரங்க நண்பனாகவும் அவனுடைய தளபதியாகவும் இருந்தவன் மாலிக்கபூர். அதற்கு முன்பே அவன் தக்காணத்தின் மீது படையெடுத்து பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து கில்ஜியிடம் சேர்ப்பித்திருந்தான்.

    p2.jpg

    அலாவுதீன் கில்ஜி -  மாலிக்கபூர்

    ஹொய்சாள அரசிலும் பாண்டிய நாட்டிலும் செல்வம் கொட்டிக்கிடப்பதை அறிந்த அலாவுதீன், ஒரு பெரும் படையுடன் மாலிக்கபூரைத் தென்னகம் நோக்கி அனுப்பினான். அதிகம் எதிர்ப்பில்லாமல், துவார சமுத்திரம் வரை வந்த மாலிக்கபூர் வீர வல்லாளனின் மகனிடம் கொள்ளையடித்த செல்வத்தை ஒப்படைத்து டெல்லிக்கு அனுப்பிவிட்டு அங்கேயே தங்கியிருந்தான்.

    அந்த நிலையில் சுந்தரபாண்டியன் துவாரசமுத்திரம் போய் சேர்ந்தான். மாலிக்கபூரின் வீரத்தையும் படைபலத்தையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவன், வீர வல்லாளன் மூலமாக மாலிக்கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தினான். மதுரைக்கு வந்து வீரபாண்டியனைத் தோற்கடித்து ஆட்சியைத் தனக்கு அளித்தால் வேண்டிய செல்வத்தைத் தருவதாக சுந்தர பாண்டியன் கூறினான்.

    எந்தச் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக டெல்லியிலிருந்து வந்திருக்கிறோமோ அதையே தாம்பாளத்தில் வைத்துத் தருவதாக ஒருவன் அழைப்பதைக் கேட்ட மாலிக்கபூர் கரும்பு தின்னக் கூலியா என்ற நினைப்புடன் அந்த நிபந்தனையை ஏற்றான். தன்னுடைய படையுடன் வீரவல்லாளன் வழிகாட்ட தமிழகத்திற்குள் நுழைந்தான் மாலிக்கபூர்.

    தோப்பூர் கணவாய் வழியாக வந்த அவனது படை கரூருக்கு அருகே காவிரியாற்றங்கரையில் சற்று ஓய்வெடுத்தது. இந்தச் செய்திகளைக் கேட்ட வீரபாண்டியன், தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு வீரதவளப்பட்டணம் என்ற இடத்தில் வந்து தங்கியிருந்தான். இந்த இடம் எது என்பதைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல் ஜெயங்கொண்ட சோழபுரம் (ஜெயங்கொண்டான்) அக்காலத்தில் வீரதவளப் பட்டணம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்து விரிவடைந்த பாண்டியப் பேரரசுக்கு தமிழகத்தின் மத்தியில் ஒரு தளம் தேவை என்பதால், இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வீரபாண்டியன் அதைத் தன்னுடைய இன்னொரு தலைநகராகவும் உருவாக்கினான். அந்த இடத்தில் வந்து மாலிக்கபூரின் படையை எதிர்நோக்கியிருந்தான்.

    p1.jpg

    மாலிக்கபூரிடம் தம்பி வீரபாண்டியன் வீரதவளப் பட்டணத்தில் தங்கியிருக்கும் செய்தியைச் சொல்லிவிட்டு சுந்தரபாண்டியன் மதுரை சென்றுவிட்டான். காவிரி ஆற்றுப் படுகை வழியாக நேராக வீரதவளப்பட்டணம் சென்ற மாலிக்கபூரின் படைகளுக்கும் வீரபாண்டியனின் படைகளுக்கும் அங்கே கடுமையான போர் மூண்டது.

    பாண்டியப் படைகளிடம் வீரம் அதிகம். ஆனால் மாலிக்கபூரின் படைகள் நவீன ஆயுதங்களை வைத்துக்கொண்டு குரூரமான போர் முறையில் ஈடுபட்டன. ஆகவே நீண்ட நேரம் வீரபாண்டியனின் படைகளால் அவர்களை எதிர்க்கமுடியவில்லை. எனவே வலுவான அரண்கள் உள்ள கண்ணனூர்க் கொப்பம் கோட்டைக்குப் பின்வாங்கின பாண்டியப் படைகள். ஆனால் மாலிக்கபூர் விடாமல் அங்கேயும் அவர்களைத் துரத்திவந்தான்.

    கண்ணனூர்க் கொப்பத்தில் பாண்டியர்கள் வீரப்போர் புரிந்து மாலிக்கபூரின் படைகளைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், பாண்டியர் தரப்பில் போரிட்டுக்கொண்டிருந்த இஸ்லாமியப் படைப்பிரிவு கட்சி மாறி மாலிக்கபூரின் பக்கம் சென்றுவிட்டது. போரின் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்தத் திருப்பத்தை வீரபாண்டியன் எதிர்பார்க்கவில்லை. மாலிக்கபூரின் படைகளுக்கே வெற்றி கிடைத்தது. வீரபாண்டியன் கொல்லி மலைகளுக்குத் தப்பி ஓடினன். பாண்டியப் படைகளில் இருந்த யானைகளையும் குதிரைகளையும் மாலிக்கபூர் கைப்பற்றிக்கொண்டான்.

    அதன்பின் ஶ்ரீரங்கம், சிதம்பரம் போன்ற கோவில்களில் மாலிக்கபூரின் படைகள் பேரழிவு நடத்திக் கொள்ளையடித்ததும் தன்னை தமிழகத்திற்கு அழைத்த சுந்தரபாண்டியனின் மீதே போர் தொடுத்து அவனை மதுரையை விட்டுத் துரத்திவிட்டு அங்குள்ள செல்வங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு டெல்லி திரும்பியதும் வரலாறு.

    சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்துகொண்டிருந்த மூவேந்தர்களின் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தது இந்த வீரதவளப்பட்டணப் போர்.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-23/

    டிஸ்கி :

    // கண்ணனூர்க் கொப்பத்தில் பாண்டியர்கள் வீரப்போர் புரிந்து மாலிக்கபூரின் படைகளைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், பாண்டியர் தரப்பில் போரிட்டுக்கொண்டிருந்த இஸ்லாமியப் படைப்பிரிவு கட்சி மாறி மாலிக்கபூரின் பக்கம் சென்றுவிட்டது. போரின் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்தத் திருப்பத்தை வீரபாண்டியன் எதிர்பார்க்கவில்லை //


    அந்த காலத்திலேயே குல்லாவை சூப்பரா பிரட்டி இருக்கினம்.. எல்லா இடத்திலும்.. காலத்திலும் வரலாறு  இப்படித்தானா ரெல் மீ கிளியர்லி.. ? 

    • Like 1
  3. 3 hours ago, ஏராளன் said:
    ரஞ்சன்குடி கோட்டை

    படக்குறிப்பு,

    ரஞ்சன்குடி கோட்டை

    கட்டுரை தகவல்

    • எழுதியவர், மாயகிருஷ்ணன் க
    • பதவி, பிபிசி தமிழுக்காக
    • 22 நிமிடங்களுக்கு முன்னர்

    மன்னராட்சி காலத்தில் ஆட்சி செய்த அரசர்களின் நினைவுச் சின்னங்களாய் இன்றும் நம் கண் முன்னே இருப்பவை அரண்மனைகளும், கோட்டைகளும்தான். அரசர் எதிரிகளால் வெல்லப்படும் போது அழிவைச் சந்தித்த இடமும் இந்தப் பகுதிகள்தான்.

    இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் நடைபெற்ற பெரும்பாலான போர்களில் அரசர் வெல்லும்போதே அந்த வெற்றியின் அடையாளமாக எதிரிகள் வாழ்ந்த அரண்மனையையும், கோட்டைகளையும் அழிப்பதை முக்கியப் பணியாகச் செய்துள்ளனர். அத்தகைய சூழலிலும் அழியாமல் தப்பிப் பிழைத்தவை ஒருசில மட்டுமே.

    அவ்வாறு நிலைத்து நிற்கும் கோட்டைகளும் அரண்மனைகளும்தான் வரலாற்றை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்கின்றன. அப்படி, கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றும் நிகழ்கால குறியீடாக உயர்ந்து நிற்கும் நினைவுச் சின்னம்தான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துருவத்துக் கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டை.

    சோழ அரசின் சிற்றரசர்கள், விஜயநகர நாயக்கர் அரசின் பிரதிநிதிகள், ஷெர்கான் லோடி, மராட்டிய சிவாஜி, சம்பாஜி, ஆகியோர் ஆட்சி செய்த இடம் இதுவே. தஞ்சை அரசன் எக்கோஜி, ஆற்காடு நவாபுகளான சந்தாசாகிப், முகமது அலி, ஆங்கிலேய படைத் தலைவர்களான ராபர்ட் கிளைவ், கேப்டன் டால்டன், கேப்டன் ஜிங்கன், கேப்டன் லாரன்ஸ், பிரெஞ்ச் படைத் தளபதிகளான டி ஆர்ட்னல், புஸ்ஸி, மைசூர் மராட்டிய தளபதி முராரிராவ், ஹைதர் அலி போன்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பல ஆளுமைகள் இங்கு போரிட்டுள்ளனர்.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    பல பெயர்களில் அழைக்கப்பட்ட ரஞ்சன்குடி கோட்டை

    ரஞ்சன்குடி கோட்டை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் ரமேஷ் மற்றும் வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளருமான ஜெயபால் ரத்தினம் ஆகியோருடன் பெரம்பலூரில் இருந்து ஆற்காடு சாலை வழியாக ரஞ்சன்குடி நோக்கி பயணித்தோம்.

    சென்னை- திருச்சிராப்பள்ளி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சிறிய மலை குன்றின் மீது அமைக்கப்பட்ட மிகப்பெரிய கல் கோட்டை பிரமிப்பை ஏற்படுத்தியது. கோட்டை அருகிலேயே சுற்றுப் பகுதியில் உள்ள கல்லறைகள் இன்னமும் வரலாற்றின் சாட்சியாக உள்ளன.

    அதன் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்றவாறு வரலாற்று ஆர்வலரும் தமிழக வரலாற்றில் பெரம்பலூர் என்ற புத்தகத்தின் ஆசிரியருமான எழுத்தாளர் ஜெயபால் ரத்தினம் ரஞ்சன்குடி கோட்டை குறித்தும் அங்கு நடைபெற்ற போர்கள் குறித்தும் பிபிசி தமிழிடம் பேசத் தொடங்கினார்.

    “தமிழக வரலாற்றில் மட்டுமல்லாது ஆங்கிலேயர், பிரெஞ்சு நாடுகளின் அரசியல் வரலாறுகளிலும் இடம்பெற்றிருக்கும் பன்னாட்டு வரலாற்றுச் சின்னம்தான் இந்தக் கோட்டை. சங்க காலம் முதல் சோழர், பாண்டியர் அரசர்கள் காலம் வரை இப்பகுதி தூங்காணை என்று அழைக்கப்பட்டது.

    இந்த இடம் மிகப்பெரிய வணிக மையமாகச் செயல்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தின் நகரங்களான மதுரை, தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி, வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெரு நகரங்களுக்குச் செல்லும் பெருவழிச்சாலைகளின் சந்திப்பு மையமாக இருந்தது வாலிகண்டபுரமும், ரஞ்சன்குடியும் ஆகும். நிலவியல் அமைவு காரணமாகவே வரலாற்றிலும் அதி முக்கியத்துவம் பெற்ற இடமாக இது மாறிப் போனது.

    புதுச்சேரியில் பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கு அனுமதி அளித்து ஒரு கோட்டையை கட்டிக் கொள்ளவும் வணிகம் நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்தவர் இந்தப் பகுதியின் ஆட்சியாளரான ஷேர்கான் லோடி. இதன் காரணமாகவே புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சிப் பகுதியானது,” என்கிறார் எழுத்தாளர் ஜெயபால் ரத்தினம்.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    படக்குறிப்பு,

    எழுத்தாளர் ஜெயபால் ரத்தினம்

    மராட்டிய மன்னர் சிவாஜி கைப்பற்றிய கோட்டை

    கோட்டை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற போர்கள் குறித்தும் மிக விரிவாக அவர் கூறத் தொடங்கினார்.

    “கி.பி.1649இல் பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா செஞ்சி நாயக்கப் பகுதிகளைக் கைப்பற்றியபோது இந்தப் பகுதிகளிலும் போரிட்டு கைப்பற்றினார். கி.பி. 1677ஆம் ஆண்டு ஜூன் மாதம் மராட்டிய வீரர் சிவாஜிக்கும் இந்தப் பகுதியை ஆண்ட அரசன் ஷேர்கான் லோடிக்கும் இடையே நடைபெற்ற போரில் சிவாஜி வெற்றி பெற்றார்.

    கி.பி. 1677 நவம்பர் மாதம் தஞ்சாவூர் அரசனும் சிவாஜியின் தம்பியுமான எக்கோஜி இந்த கோட்டையைக் கைப்பற்றுவதற்காக சிவாஜிக்கு எதிராக போர் தொடுத்த போதிலும் அவர் தோல்வியடைந்தார். கி.பி. 1698ஆம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் மராட்டிய அரசின் ஆட்சியே இங்கு நடைபெற்றது.

    கி.பி.1698ஆம் ஆண்டு டில்லி முகலாய அரசின் படைத்தளபதி சுல்பிர்கான்- சிவாஜியின் மகன் ராஜாராம் படைகளுக்கும் இடையில் இங்கு நடைபெற்ற போரில் சுல் பிர்கான் வெற்றி பெற்றார்,” என விவரித்தார்.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    வாரிசுரிமை போர் என்ற இரண்டாம் கர்நாடக போர்

    இரண்டாம் கர்நாடக போர் என வரலாற்றில் சொல்லப்படும் போரின் முக்கிய களம் ரஞ்சன் குடிக்கோட்டை. கி.பி. 1751 மே மாதம் 13ஆம் தேதி ஆற்காடு நவாப் வாரிசுரிமை போட்டியாளர்களில் ஒருவரான முகமது அலி, ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக் குழு ஆகியோர் இணைந்த கூட்டுப்படை, ஆற்காட்டின் மற்றொரு வாரிசுரிமை போட்டியாளரான சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்ச் வணிகக் குழு ஆகியோர் இணைந்த கூட்டுப்படை இரண்டுக்கும் இடையே கோட்டையின் வாயில் பகுதியில் கடுமையான போர் நடைபெற்றது.

    ஆங்கிலேயே படைக்கு கேப்டனாக ஜிங்கன் செயல்பட்டார். இதில் ராபர்ட் கிளைவ் உணவுப் பொருட்கள் வழங்கும் பொறுப்பு துணை நிலை அலுவலராக இருந்தார். இந்த முதல் போரில் 500 ஐரோப்பியர்கள், 2000 சிப்பாய்கள், 600 குதிரைகள் மற்றும் வீரர்கள் இருந்தனர். 8 சிறிய ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

    பிரெஞ்சுப் படையின் தளபதியாக டி. ஆர்டினல் செயல்பட்டார். இவர்கள் பிரிவில் 14 ஆயிரம் குதிரை வீரர்கள், 15,000 கலாட்படையினர், 2000 சிப்பாய்கள் மற்றும் 15 சிறிய ரக பீரங்கிகள் இருந்தன. இதில் ஆங்கிலேய படை தோற்றது.

    ரஞ்சன்குடி கோட்டை

    ராபர்ட் கிளைவின் வெற்றி

    கி.பி. 1752 ஜூன் மாதம் 18ஆம் தேதி ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படை மற்றும் டி. ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்ச் படை இடையே ரஞ்சன்குடி கோட்டை வாயிலில் மீண்டும் கடுமையான போர் நடைபெற்றது. இதில் ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றார்.

    இந்தப் போரின் போது சிதறடிக்கப்பட்ட காசுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோட்டையைப் பார்வையிட வந்தவர்களுடைய கையிலும் கிடைத்ததாக ஜெயபால் ரத்தினம் கூறுகிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், “ கி.பி. 1769இல் இந்தக் கோட்டையை ஆங்கிலேயரிடம் போரிட்டு ஹைதர் அலி கைப்பற்றினார் என்ற போதிலும் ஹைதர் அலியின் இறப்புக்குப் பிறகு திப்பு சுல்தானுடன் ஆங்கிலேயர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி ரஞ்சன்குடி கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது என்றார்.

    இப்படி தொடர்ந்து 200 ஆண்டுகள் பல போர்களைச் சந்தித்த போர்க்களமாகவே இருந்த இந்த தூங்காணை கிராமம், ரஞ்சன்குடி, ரஞ்சன்கெடி, துருவத்துக்கோட்டை, கல்கோட்டை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு தற்போது ரஞ்சன்குடி கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது.

    பீரங்கித் தாக்குதல்களுக்கு உட்பட்டு சிதிலமடைந்த இந்தக் கோட்டையை நாயக்கர்கள் முதல் முகலாய அரசர்கள், மராட்டிய அரசர்கள், நவாபுகள் எனப் பலர் மீண்டும் அவர்களுக்கு ஏற்றவாறு புதுப்பித்து வந்துள்ளனர். இறுதியாக இப்போது நாம் காண்பது போரில் தப்பித்த பகுதிதான்,” என்று தெரிவித்தார்.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    55 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள கோட்டை

    ரஞ்சன்குடி கோட்டை, 55 ஏக்கர் பரப்பளவில் சுமார் 4,000 மீட்டர் சுற்றளவில் ஒரு கிலோமீட்டர் நீள அகலத்தில், சுமார் 80 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ரஞ்சன் என்றால் அழகு என்ற பொருளும் உண்டு. பார்ப்பதற்கு அழகான கோட்டையாக இருப்பதால் தற்போது ரஞ்சன்குடி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

    அருங்கோண வடிவில் சிறிய மலைக் குன்றின்மீது, மூன்று அடுக்கில் அமைக்கப்பட்ட கோட்டை இது. இதன் தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறு தொலைவுக்கு கோட்டையைச் சுற்றி அகழி போல கோனேரி ஆறு பாய்கிறது. இங்கு தர்காக்கள் உள்ளன. கோட்டையின் அகழியாக விளங்கும் ஆற்றங்கரையில் வலுவான மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இதை அடுத்து உள்ளே சென்றால் உட்கோட்டை என்ற கோட்டையின் கீழ் பகுதி உள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் இரண்டு புறங்களிலும் மேடைகள் அமைக்கப்பட்ட ஒரு வாயில் அமைப்பு உள்ளது. இதன் அருகில் முரசு மேடைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அருகிலேயே பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுகிறது. வலதுபுறத்தில் ஒரு குளமும் நந்தவனமும் காணப்படுகிறது.

    கோட்டையின் பின்புறத்தில் காணப்படும் தண்டனைக் கிணறு

    உட்கோட்டையில் இருந்து 200 அடி உயரம் கொண்ட பாறைகள் மீது கோட்டை உள்ளது. இந்தக் கோட்டையின் கீழ் பகுதி அதாவது முதல் தளம் கீழ்கோட்டை எனவும் மேல்தளப் பகுதி மேல்கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. முறையான கல் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கீழ்கோட்டையின் நுழைவாயில் பகுதியில் நுழைவாயிலுக்கு அருகே சிவலிங்கம், பிள்ளையார் சிலை, சிறிய அனுமார் கோவில் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

    நுழைவு வாயிலை ஒட்டிய உள்பகுதியில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகிலேயே பள்ளிவாசலும் காணப்படுகிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தூண்களிலும் வைக்கப்பட்ட கற்களிலும் மீன், கத்தி உருவங்களும், புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    வடக்குப் பகுதியில் கோட்டையின் பின்புற சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் தண்டனைக் கிணறு காணப்படுகிறது. உள்ளே செல்லவும் கீழ்பகுதியை அடையவும் முறையான படிக்கட்டு வசதிகளும் உள்ளன.

    மரண தண்டனை வழங்கப்படும் கைதிகள் இந்த கிணற்றுக்குள் இறக்கி விடப்பட்டு விடுவார்கள் என்றும் அதனாலேயே இது மரணக்கிணறு என்று அழைக்கப்படுவதாகவும் ரஞ்சன்குடி கோட்டையிலேயே பல ஆண்டுகளாகத் தங்கி பாதுகாவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஹாசிம் பிபிசி தமிழிடம் கூறினார்.

    இதன் அருகில் சிதிலமடைந்த இரண்டு கட்டுமானங்கள் உள்ளன. இவை ஆயுதக்கிடங்காகப் பயன்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த கீழ் கோட்டையின் சுற்றுச்சுவர் அனைத்திலும் குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு கோணங்களில் சிறு, சிறு துளைகள் சீராகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

    இது கண்காணிப்பு துவாரம் என்று கூறப்பட்டாலும் காலச்சூழலில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் சுவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அமைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

    சந்தா சாகிப் வந்து சென்ற ரகசிய வழி

    இதையடுத்து உச்சிக்குச் சென்றால் மேல்கோட்டையைக் காணலாம். இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது . நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் உள்ளன. கொடிமர மேடையும் காணப்படுகிறது. பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட ஒரு திறந்த குளமும் உள்ளது.

    இது ராணி குளம் எனவும் மழை நீரை சேமித்து வைக்கும் குளம் எனவும் பலவாறு கூறப்படுகிறது. இதன் அருகிலேயே பாதாள அறை ஒன்றும் காணப்படுகிறது. இது பொக்கிஷ அறை என்று இங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

    “அவசர வழி அல்லது முக்கிய போர்க்காலங்களில் முறையான வழியில் செல்வதைத் தவிர்த்து மேல் கோட்டையில் இருந்து எளிதில் கீழ் பகுதிக்குச் செல்லவும் அல்லது கோட்டையை விட்டு வெளியேறவும் வெளியில் இருந்து மேல் கோட்டைக்குச் செல்லவும் ஒரு ரகசிய வழி இக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.

    கிபி 1751இல் நடைபெற்ற போரில் சந்தாசாகிப் இந்தக் கோட்டைக்கு உள்ளே அழைத்து வரப்பட்டதை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். மேலும் கோட்டையைச் சுற்றியுள்ள கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் அருகே 10க்கும் மேற்பட்ட கிணறுகள் இருப்பதாகவும் தற்போது தூர்ந்துள்ளன. கோட்டையின் உச்சியில் இருந்து 50 மைல் தூரம் வரை கண்காணிக்கலாம்,” என்றும் ஹாசிம் கூறினார்.

    மேலும் அவர் சேகரித்து வைத்திருந்த அப்பகுதியில் கிடைக்கப் பெற்ற சோழர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு கால பழங்கால செப்பு, பல்வகை உலோக நாணயங்கள், போரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகை அளவிலான உருண்டை வடிவ பீரங்கி குண்டுகளையும் சிதிலமடைந்த பழங்கால பொருட்களையும் எடுத்துக் காட்டினார்.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    படக்குறிப்பு,

    ஹாசிம்

    சோழர்கள் முதல் கிலேதார் வரை

    விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் இந்தக் கோட்டையைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைக் கூறினார்.

    “கி.பி. 963இல் சுந்தர சோழனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் ராஷ்டிர கூடர்களிடம் இருந்து இப்பகுதி கைப்பற்றப்பட்டு சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுந்தர் சோழன் ஆட்சிக் காலத்தில்தான் வன்னாட்டு சிற்றரசனாக தூங்காணை மறவன் இருந்துள்ளார் என்பதை வாலி கண்டபுரம் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    அப்போது இந்த கிராமம் தூங்கானை என்றே அழைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள மலைக்குன்று யானை வடிவத்தை ஒத்திருந்ததால் இது தூங்காணை என்று அழைக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அந்த இடம் வீரர்கள் இருந்து கண்காணிக்கும் இடமாகச் செயல்பட்டு இருக்கலாம் என்று செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் வாலிகண்டபுரமும் ரஞ்சன்குடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பல்வேறு போர்கள் இந்தப் பகுதியில்தான் நடந்துள்ளன.

    தொடர்ந்து இந்தப் பகுதி விஜய நகர மற்றும் நாயக்கர் அரசர்கள் ஆளுமைக்கு உட்பட்டதாக மாறியது.

    கி.பி. 1649இல் செஞ்சி நாயக்கப்பகுதிகள் பீஜப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்டு அங்கு சுல்தான் அரசு ஏற்படுத்தப்பட்டது. வாலிகண்டபுரம் தனி நிர்வாகப் பகுதியாக அறிவிக்கப்பட்டு ஒரு தனி ஆளுநர் நியமிக்கப்பட்டார்,” என்றார்.

    பின்னர் செஞ்சி மராட்டிய அரசால் கைப்பற்றப்பட்டு டில்லி பாதுஷா ஆட்சியின் ஒரு பகுதியாக மாறியபோது இப்பகுதியை மையப்படுத்தி ஒரு தனி ஜாகீர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஒரு படைப்பிரிவு நிறுத்தப்பட்டு ஒரு கிலேதார் வசம் இந்தக் கோட்டை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கி.பி.1680இல் முகலாய மரபைச் சேர்ந்த டெல்லி முகமது கான் இந்த கோட்டையைச் சீரமைத்துள்ளார். தொடர்ந்து நவாப் புட்டன் கான் இப்பகுதியில் நவப்பாக செயல்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    படக்குறிப்பு,

    பேராசிரியர் ரமேஷ்

    கம்பளி உற்பத்தி தொழில்

    மேற்கொண்டு பேசிய பேராசிரியர் ரமேஷ், “அந்தக் காலகட்டத்தில் கம்பளி நெசவு உற்பத்தித் தொழில் இப்பகுதியில் இருந்துள்ளது. இப்பகுதியில் அதிக ஆடுகள் வளர்க்கும் தொழிலில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

    துருவம் ராஜ கம்பளி, ரத்தின கம்பளி என்ற இரு வகை கம்பளிகள் பிரெஞ்ச் காரர்களின் பண்டமாற்றுச் சந்தை பொருட்களாக இருந்துள்ளதை வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

    இங்கு உற்பத்தியாகும் கம்பளியின் விற்பனைச் சந்தைகளாக பேல்பூர் என்ற தற்போதைய விழுப்புரம், அலியான்னூர் என்ற தற்போதைய அரியலூர் இருந்துள்ளது. தொடர்ந்து நவாப் தோஸ்தலி என்பவர் இப்பகுதியில் தலைமைப் பொறுப்பாளராகச் செயல்பட்டார்,” எனக் குறிப்பிட்டார்.

    கோட்டையை யார் கட்டியது?

    ரஞ்சன்குடி கோட்டையை யார் கட்டியது என்பதற்கு முழு தகவல்கள் இல்லை என்ற போதிலும் சுந்தர சோழன் ஆட்சிக் காலத்தில் வண்ணாற்று சிற்றரசான தூங்காணை மறவன் என்பவரால் மேடான மலைக்குன்று பகுதியில் ஒரு சிறிய கட்டுமானம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

    செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் காவல் கண்காணிப்புப் பகுதிகளுக்காக இங்கு ஒரு காவல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நாயக்கர்கள், விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தையும் ஒரு வலுவான காவல் கோட்டையையும் அமைத்துள்ளார்கள். அவர்கள் கால கட்டடபாணியே அதற்குச் சான்று.

     

    ரஞ்சன்குடி கோட்டை

    மராட்டிய ஆட்சிக் காலத்தில் இந்தக் கோட்டை மேம்படுத்தப்பட்டு மேலும் வலுவான காவல் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் இந்து, முஸ்லிம் சமய வழிபாட்டு சின்னங்கள் இருப்பது இப்பகுதியில் இரு தரப்பு மக்களும் குறிப்பாக இருதரப்பைச் சேர்ந்த படைவீரர்களும் இருந்ததையும் வழிபட்டதையும் கூறுவதாகத் தெரிவித்தார் பேராசிரியர் ரமேஷ்.

    பல நூறு ஆண்டுகளாக காவல் கோட்டையாக, கண்காணிப்புக் கோட்டையாகச் செயல்பட்ட இந்த ரஞ்சன்குடி கோட்டை பல்வேறு தாக்குதல்களை, குறிப்பாக பீரங்கி குண்டுகளின் தாக்குதல்களைச் சமாளித்து வரலாற்றில் உயர்ந்து நிற்பது அக்கால கட்டுமானத்திற்கு மிகப்பெரிய சான்று என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

    கோட்டையின் அடிவாரப்பகுதி பேட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியை சில காலம் ஆட்சி செய்த பீஜப்பூர் சுல்தான்கள் மற்றும் ஷெர்கான் லோடி இதை வாலிகண்டபுரி என அழைத்துள்ளனர். மராட்டியர்களுடைய ஆவணங்களில் இப்பகுதி புலிக்கொண்டா என்று அழைக்கப்படுகிறது.

    ஆங்கிலேய வரலாற்றாளர் ராபர்ட் ஓம் என்பவர் ரஞ்சன்குடி கோட்டையை வால்கொண்டா என்று தனது நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் கி.பி. 1751 ஜூன் 19ஆம் தேதி இங்கு நடைபெற்ற போரை தனது புத்தகத்தில் மிக விரிவாக வரைபடங்களுடன் எத்தனை பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன, எத்தனை போர் வீரர்கள் எங்கெங்கு இருந்து தாக்கினார்கள் என்பதை மிக தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

    நவாபுகளின் ஆட்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் ராஜதானிகள் உருவாக்கப்பட்டது. அதில் டல்ஹவுசி பிரபு ஆட்சியில் 1855ஆம் ஆண்டு ரஞ்சன்குடி கோட்டையில் கருவூல கஜானாவாக செயல்பட்டு வந்த வருவாய்த் துறை, நீதித்துறை, தபால் துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் மறுசீரமைப்பு செய்து ஏழு ஜில்லாக்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இதை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகின்றது.

    https://www.bbc.com/tamil/articles/cw9v35vl09do

    இணைப்புக்கு நன்றி தொடருங்கள் தோழர்...

  4. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #22 – சோழ - பாண்டிய- போசாளர்கள் #கண்ணனூர்க்கொப்பம் (சமயபுரம்)

    thamizhnattu-porkalangal-ch22.jpg

    இரண்டு முறை படையெடுத்து பெரு வெற்றி அடைந்தாலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் சோழநாட்டை முழுமையாக பாண்டியநாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. அதற்கான காரணம் துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்களும் போசாளர்கள் என்று தமிழில் அழைக்கப்பட்டவர்களுமான ஹொய்சாளர்களின் (கன்னடர்கள் ) தலையீடுதான் என்பதைப் பார்த்தோம். அழையா விருந்தாளியாக தமிழக அரசியலில் புகுந்தது மட்டுமின்றி, போரிட்டுக்கொண்டிருந்த இரு அரசுகளுக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்து நாடுகளின் எல்லைகளையும் வகுத்துக்கொடுத்தான் ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மன்.

    போதாதென்று பாண்டிய நாட்டில் அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில், ஹொய்சாள மன்னன் வீர சோமேஸ்வரன் தலையிட்டான். அவனுடன் மண உறவு வைத்துக்கொண்டு அவனுக்கும் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனுக்கும் நடைபெற்ற போர்களிலும் பங்கு கொண்டான் சோமேஸ்வரன். ஒரு சமயம் மூன்றாம் ராஜேந்திரனுக்கும் இன்னொரு சமயம் சுந்தரபாண்டியனுக்கும் அவன் உதவி செய்தான். அதன் காரணமாக இரு மன்னர்களும் அவனை ‘மாமாடி’ என்று அழைத்தனர்.

    பாண்டியர்கள் தங்கள் எல்லைகளை விரிவாக்க முயன்றபோது சோழர்களுக்கு உதவி செய்து பாண்டியர்களை அடக்குவது, அதேபோல சோழர்கள் தங்கள் ஆற்றலை உயர்த்தியபோது பாண்டியர்கள் பக்கம் சாய்ந்து சோழர்களை வெற்றி கொள்வது என்று ஹொய்சாள மன்னர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு தங்களது எல்லைகளை விரிவாக்கினர். ஒரு கட்டத்தில் சோழநாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.

    அதைத் தவிர பாண்டிய நாட்டு உள்விவகாரங்களிலும் ஹொய்சாள மன்னர்களின் தலையீடு இருந்தது. திருமயத்தில் இருந்த ஒரு கல்வெட்டு அங்கே சைவ வைணவப் பூசல் ஏற்பட்டபோது இரு தரப்பாருக்கும் இடையே ஹொய்சாள ஆட்சியாளன் சமாதானம் செய்துவைத்ததைக் குறிப்பிடுகிறது. ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்வது போல ஹொய்சாளர்கள் மேற்கொண்ட இது போன்ற செயல்கள் நாட்டில் உள்ள அரசியல் குழப்பத்தை அதிகரித்தன.

    இந்தச் சூழ்நிலையில் பொயு 1251ஆம் ஆண்டு பாண்டிய நாட்டு அரசனாகப் பொறுப்பேற்றான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். பெரு வீரனும் ராஜதந்திரியுமான அவன் தமிழகத்தின் நிலைமையை ஊன்றிக் கவனித்தான். பரப்பளவில் குறைந்தாலும் சோழர்களின் அரசு இன்னும் வலிமையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காடவர்களின் அரசனான கோப்பெருஞ்சிங்கனும் ஒரு முக்கியமான சக்தியாக இருந்தான்.

    p3.jpg

                                                  சமயபுரம் கோயில்

    தமிழக அரசியலில் புகுந்த ஹொய்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை மெல்ல மெல்ல அதிகரித்து, தற்போது சமயபுரம் என்று அழைக்கப்படும் கண்ணனூர்க் கொப்பம் வரை வந்து அங்கே ஒரு தளத்தை அமைத்துக்கொண்டிருந்தனர். இந்தக் காரணங்களால் பாண்டியர்களின் பேரரசுக் கனவு செயல்பட முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்துகொண்ட ஜடாவர்மன், ஒரு பெரும் படையைத் திரட்டத்தொடங்கினான்.

    இதற்கிடையில் வேணாட்டை ஆட்சி செய்த அரசனான சேரமான் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் பாண்டியநாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் அவனோடு போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். ஆரல்வாய் மொழிக் கணவாய் வழியாக வேணாட்டில் புகுந்த பாண்டியப் படைகள், வீரரவியைத் தோற்கடித்தன. அதன்பின் மலைநாடு பாண்டியநாட்டின் கீழ் வந்தது.

    நடுவில் வந்த இந்தச் சிக்கலைத் தீர்த்துவிட்டு சோழநாட்டின் மீது தன் பார்வையைத் திருப்பினான் ஜடாவர்மன். மூன்றாம் ராஜேந்திர சோழனுக்கும் பாண்டியப் படைகளுக்கும் நடந்த போரில் சோழ நாட்டுப் படைகள் பாண்டியர்களைச் சமாளிக்க முடியாமல் திணறின. தஞ்சை, பழையாறை போன்ற இடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாண்டியர்களிடம் வீழ்ந்தன.

    சிதம்பரம் வரை சென்ற ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திரனைத் தோற்கடித்துத் துரத்தினான். இந்நிலையில் சோழர்களுக்கு உதவியாக வழக்கம்போல ஹொய்சாள வீர சோமேஸ்வரன் படையெடுத்து வந்தான். அவனையும் அந்தப் போரில் வென்றான் சுந்தரபாண்டியன். அதன்பின் தமிழக வரலாற்றிலிருந்து சோழநாடு மறைந்தது. சோழநாடு முழுவதையும் பாண்டிய நாட்டின் மீது இணைத்துக்கொண்ட ஜடாவர்மன், ஹொய்சாளர்களை நோக்கித் திரும்பினான்.

    சோழநாட்டின் மேற்குப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு கண்ணனூர்க் கொப்பத்தை அவர்கள் தலைநகராக வைத்துக்கொண்டிருந்ததால், பாண்டியர் படை அங்கே சென்றது. சிங்கணன் என்ற தண்டநாயகனின் தலைமையில் அங்கே ஒரு படை ஹொய்சாளர்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

    thamizhnattu-porkalangal-ch22-1.jpg

    கண்ணனூர்க் கொப்பத்தில் இரு படைகளுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. இதைக் கேள்விப்பட்ட வீரசோமேஸ்வரன் தானும் ஒரு படையுடன் வந்து அந்தப் போரில் கலந்து கொண்டான். இரு திறமையான வீரர்களால் நடத்தப்பட்ட ஹொய்சாளப் படையை பாண்டியப் படைகள் தங்களுடைய வீரத்தினால் வென்றன. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வீரப்போர் செய்து ஹொய்சாளர்களின் தண்டநாயகனான சிங்கணனைப் போர்க்களத்தில் கொன்றான். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி இந்தப் போரைப் பற்றி பல வரிகளில் வர்ணிக்கிறது.

    ‘சென்னியைத் திறைகொண்டு திண்டோள் வலியில்
    பொன்னிநாட்டு போசலத் தரைசர்களைப்
    புரிசையில் அடைத்து பொங்கு வீரப் புரவியும்
    செருவிறல் ஆண்மைச் சிங்கணன் முதலாய
    தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்
    துண்டித் தளவில் சோரி வெங்கலூழிப்
    பெரும்பிணக் குன்ற மிருகங்கள ளிறைத்துப்
    பருந்தும் காகமும் பாறும் தசையும்
    அருந்தி மகிழ்ந்தாங்கு அமர்க்களம் எடுப்ப’

    அந்தப் போர்க்களத்தில் வீரர்களின் உடல்கள் மலை போல வீழ்ந்து கிடந்தனவாம். அந்த உடல்களில் இருந்த தசைகளை பருந்துகளும் காகங்களும் கொத்தித் தின்று மகிழ்ந்தனவாம்.

    ‘முதுகிடு போசளன் றன்னோடு முனையும்
    அதுதவறென்றவன் றன்னைவெற் போற்றி
    நட்பது போலும் பகையாய் நின்ற
    சேமனைக் கொன்று சினந்தணிந்தருளி
    நண்ணுதல் பிறரா வெண்ணுதற் கரிய
    கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண் டருளி’

    இங்கே ‘நட்பது போலும் பகையாய் நின்ற’ என்ற வரிகள், அடிக்கடி நண்பனைப் போல நடித்து தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்து உண்மையில் பகையாய் நின்ற ஹொய்சாளர்களின் செயலைக் குறிப்பிடுகிறது. ஹொய்சாளரின் தலையீடு பொறுக்காமல் தான் கண்ணனூர்க் கொப்பம் தாக்கப்பட்டது என்பதும் தெளிவு. சேமன் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஹொய்சாள அரசன் சோமேஸ்வரனாக இருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். திருவரங்கத்தில் உள்ள ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் சமஸ்கிருதக் கல்வெட்டு அவன் ‘கர்நாடக தேயத்து சோமனை விண்ணுலகிற்கு அனுப்பினான்’ என்று குறிப்பிடுகிறது.

    அதை வைத்தும் மெய்க்கீர்த்திகளின் மேற்கூறிய வரிகளை வைத்தும் வீர சோமேஸ்வரனும் இந்தப் போரில் பாண்டியப் படைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். வீர சோமேஸ்வரனுக்கு அடுத்து அரசாண்ட ஹொய்சாள அரசன் வீர ராமநாதன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கப்பம் கட்டியதாகத் தெரிகிறது. இந்தப் போரை அடுத்து கண்ணனூர்க் கொப்பத்திலிருந்து ஹொய்சாளர்களைத் துரத்திவிட்டு அதையும் பாண்டிய நாட்டோடு சேர்த்துக்கொண்டான் சுந்தரபாண்டியன்.

    p2.jpg

                                கோப்பெருஞ்சிங்கன் அரண்மனை சிதைவுகள் - சேந்தமங்கலம்

    அதன்பிறகும் அவன் திக்விஜயம் தொடர்ந்தது. சேந்தமங்கலத்திற்குச் சென்று அங்கிருந்த காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்ததும், வடக்கே சென்று தெலுங்குச் சோழ அரசன் விஜயகண்ட கோபாலனையும் அதற்கு அப்பால் வாரங்கல் வரை சென்று காகதீய கணபதியையும் வெற்றி கொண்டு நெல்லூரில் வீராபிஷேகம் செய்துகொண்டான் ஜடாவர்மன். அதன்பின் தமிழகம் திரும்பி, இலங்கை மீது படையெடுத்து அந்நாட்டையும் வென்று ‘எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்’ என்ற சிறப்புப் பெயர் பூண்டு சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்களால் முடிசூட்டப்பட்டான். சிதம்பரத்திற்கும் திருவரங்கத்திற்கும் பல திருப்பணிகள் செய்து பொன் வேய்ந்தான்.

    இப்படிப் பாண்டிய நாட்டை மிக உன்னதமான நிலைக்குக் கொண்டு சென்றவன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-22/

    • Like 1
  5. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #21 - பாண்டிய சோழர் போர்கள் - உறையூர்

    thamizhnattu-porkalangal-ch21.jpg

     

    மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக் தாங்க முடியாமலும் குமுறிக்கொண்டிருந்த பாண்டியர்கள் அதற்குப் பழிதீர்க்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

    ஜடாவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் பிறகு பொயு 1216இல் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவனுடைய தம்பியான முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காகப் படை திரட்டத் தொடங்கினான். குலோத்துங்கன் பொயு 1218இல் இறந்துவிடவே அவனது மகனான மூன்றாம் ராஜராஜன் சோழ நாட்டில் அரசனானான்.

    தகுந்த தருணம் அதுவே என்று கருதிய சுந்தர பாண்டியன் பொயு 1219இல் சோழ நாட்டின் மீது தன்னுடைய படையைச் செலுத்தினான். பொதுவாக எதிரி நாட்டு மன்னனின் தலைநகரை நோக்கி படையெடுப்பதே அரசர்களின் வழக்கம். ஆனால் சுந்தரபாண்டியன் அப்படிச் செய்யவில்லை.

    சோழ குலத்தின் மீது அவனுக்கு இருந்த ஆத்திரத்தின் காரணமாக உறையூரை நோக்கிச் சென்றான். அங்கிருந்த சோழ மாளிகைகள் அனைத்தையும் அழித்தான். பல மண்டபங்கள் இடிக்கப்பட்டன. காவிரி ஆற்றங்கரையில் உள்ள பதினாறு கால் மண்டபம் ஒன்றை அவன் வீரர்கள் இடிக்க முற்பட்டபோது, அதன் வரலாறு சுந்தரபாண்டியனுக்குச் சொல்லப்பட்டது.

    சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தானை உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் போற்றிப் பாடிய பட்டினப் பாலை என்ற நூல் அந்த மண்டபத்தில்தான் அரங்கேறியது என்றும் அந்த மண்டபத்தோடு சேர்த்துப் பல பரிசில்களை கரிகாலச் சோழன் அந்தப் புலவருக்கு வழங்கினான் என்றும் சுந்தரபாண்டியன் கேள்விப்பட்டான். உடனே அந்த மண்டபம் இடிக்கப்படுவதை நிறுத்திவிட்டான். என்னதான் எதிரிமேல் ஆத்திரம் இருந்தாலும் தமிழ் என்று வரும்போது மன்னர்கள் அதற்குத் தனி மரியாதை அளித்தனர் என்பது இந்த நிகழ்வினால் தெளிவாகிறது. இந்த நிகழ்ச்சி திருவெள்ளறைக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    thamizhnattu-porkalangal-ch21-1.jpg

    உறையூருக்கு அடுத்து சுந்தரபாண்டியன் தஞ்சை நோக்கிச் சென்றான். அங்கும் சோழர்களின் அரண்மனைகள் இடிக்கப்பட்டு பல இடங்கள் கொளுத்தப்பட்டன. அவனுடைய மெய்க்கீர்த்தி இந்தச் செயல்களை பின்வருமாறு வர்ணிக்கிறது

    ‘தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
    காவியும் நீலமும் நின்று கவின் இழப்ப
    வாவியுமாறு மணிநீர் நலனழித்துக்
    கூடமும் மாமதிலும் கோபுரமும் ஆடரங்கும்
    மாடமும் மாளிகையும் மண்டபமும் பல இடித்து
    தொழுது வந்தடையா நிருபர்தந் தோகையர்
    அழுத கண்ணீர் ஆறு பரப்பிக்
    கழுதை கொண்டு உழுது கவடி வித்தி’

    எதிரி நாட்டு நிலங்களில் எதற்கும் பயன்படாத வெள்ளை வரகு (கவடி) என்ற தானியத்தை விதைத்து கழுதை கொண்டு உழுவது ஒரு பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. அதைச் செய்தான் சுந்தரபாண்டியன்.

    p1.jpg

    அதற்கடுத்து அவன் சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை நோக்கிச் சென்றான். ஆனால் அங்கு போர் எதுவும் நடைபெறவில்லை. சுந்தரபாண்டியனின் படைபலத்தைக் கண்ட மூன்றாம் ராஜராஜன் தலைநகரை விட்டு ஓடிவிட்டான்.

    ‘செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புக ஓட்டிப்
    பைம்பொன் முடிபறித்து பாணருக்குக் கொடுத்தருளி’

    என்ற வரிகளால் அந்நாட்டின் பல பகுதிகளை ஆட்சிசெய்யுமாறு வாணர் குலத்தவருக்கு சுந்தரபாண்டியன் கொடுத்துவிட்டான் என்று தெரிகிறது. அதன்பின் சோழர்களின் பழைய தலைநகரனான் பழையாறைக்கு வந்த பாண்டியன், அங்கே இருந்த ஆயிரத்தளி என்ற புகழ்பெற்ற அரண்மனையில் வீராபிஷேகம் செய்துகொண்டான்.

    ‘ஆடகப் புரிசை ஆயிரத் தளியில்
    சோழவளவன் அபிஷேக மண்டபத்து
    வீராபிஷேகம் செய்து புகழ் விரித்து’

    அதன்பின் தில்லை அம்பலம் சென்று அங்கு நடராசப் பெருமானை வங்கினான் சுந்தரபாண்டியன் என்று குறிக்கிறது அவன் மெய்க்கீர்த்தி

    ‘ஐயப் படாத அருமறை அந்தணர்வாழ்
    தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப்
    பொன்னம்பலம் பொலிய ஆடுவார் பூவையுடன்
    மன்னும் திருமேனி கண்டு மனங்களித்துக்
    கோலமலர் மேல் அயனும் குளிர்துழாய்
    மாலும் அறியா மலர்ச்சேவடி வடிவணங்கி’

    இப்படி வெற்றிமேல் வெற்றி கண்டு ‘பொன்னிசூழ் நாட்டில் புலியாணை போய் அகல கன்னிசூழ் நாட்டின் கயலாணை கைவளர’ (கன்னி நாடு என்பது பாண்டிய நாட்டின் மற்றொரு பெயர்) மீனாட்சியம்மை கன்னியா ஆட்சிசெய்ததாலோ அல்லது கன்னியாகுமரித் தெய்வத்தை கொண்டிருந்ததாலோ அந்தப் பெயர் வந்தது. அப்படிப்பட்ட நாட்டின் மீன் சின்னத்தின் ஆணை ஓங்க சோழ நாட்டினை வென்ற பிறகு பாண்டிய நாட்டிற்குத் திரும்பிய சுந்தரபாண்டியன், பொன்னமராவதி என்ற ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தான்

    ‘பூங்கமல வாவிசூழ் பொன்னமராவதியில்
    வைத்தனைய சோதி மணிமண்டபத்திலிருந்து’

    அப்போது நாட்டினை இழந்த சோழ மன்னன் ராஜராஜன், சுந்தரபாண்டியனைச் சந்தித்து சமாதானம் கோரினான். தன் மகனுக்கு சுந்தரபாண்டியனின் பெயரைத்தான் வைத்திருக்கிறேன் என்று அவன் குறிப்பிட்டு, சந்து செய்துகொள்ள முயன்றான் என்கிறது மெய்க்கீர்த்தி

    ‘பெற்ற புதல்வனை நின் பேரென்று முன்காட்டி
    வெற்றி அரியணைக் கீழ் விழுந்து தொழுது இரப்பத்
    தானோடி உன்னிகழ்ந்த தன்மையெலாம் கையகாத்
    தானோதகம் பண்ணித் தண்டார் முடியுடனே…
    செங்கயல் கொண்டூன்றுந் திருமுகமும் பண்டிழந்த
    சோளபதி என்னும் நாமமும் தொன்னகரும்
    மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி’

    ஏற்று மூன்றாம் ராஜராஜனிடம் சோழ நாட்டை ஒப்படைத்து மணிமுடியையும் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சுந்தரபாண்டியன். அதன் காரணமாக சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியத்தேவர் என்று அவன் புகழப்பட்டான்.

    ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரு அரசர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் தோன்றியது. ராஜராஜன் பாண்டிய நாட்டிற்குத் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டதால் கோபமடைந்த சுந்தர பாண்டியன் மீண்டுமொருமுறை சோழ நாட்டின் மீது பொயு 1231இல் படையெடுத்தான். சோழ நாட்டில் பல இடங்கள் முன்பு போலவே வென்று அவர்களின் தலைநகராக அப்போது இருந்த முடிகொண்ட சோழபுரத்தை நோக்கிச் சென்றான். இம்முறையும் மூன்றாம் ராஜராஜன் அங்கிருந்து தொண்டை நாட்டிற்குத் தப்பியோடினான். அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த காடவர்களின் அரசன் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் பாண்டியனின் நண்பன். அவன் மூன்றாம் ராஜராஜனைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டான்.

    முடிகொண்ட சோழபுரத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்துகொண்டான் சுந்தரபாண்டியன். ‘சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிஷேகமும் விஜயாபிஷேகௌம் பண்ணியருளிய வீர சுந்தரபாண்டியத் தேவர்’ என்று இந்தச் செயலைப் பற்றி அவனது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    இந்தக் காலகட்டத்தில் துவாரசமுத்திரத்தைத் (ஹளபீடு) தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த ஹொய்சாள அரசர்கள் தமிழக அரசியலில் தலையிட ஆரம்பித்தனர். ஹொய்சாள அரசனான வீர நரசிம்மன் ஒரு பெரும் படையோடு காஞ்சி சென்று கோப்பெருஞ்சிங்கனைப் போரில் வென்று மூன்றாம் ராஜராஜனை சிறையிலிருந்து மீட்டான்.

    மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் இவனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் இடையே நடந்த போரில் இருதரப்பும் சமாதானம் ஏற்பட்டு, தான் கைப்பற்றிய சோழ நாட்டுப் பகுதிகளை மீண்டும் மூன்றாம் ராஜராஜனுக்குத் திரும்ப அளிப்பதாக சுந்தரபாண்டியன் உறுதியளித்தான். அத்தோடு இந்தப் படையெடுப்புகள் ஒரு முடிவுக்கு வந்தன.

    (தொடரும்)

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-21/

    டிஸ்கி :
    தொடர்புடைய காணொளிகள்

    கங்கை கொண்ட சோழபுரம் கோட்டை எங்கே..?

    பழையாறு கோட்டை எங்கே..?

    செஞ்சி கோட்டை அருகே அன்னமங்கலம் காட்டில் சிறைவைக்கபட்ட மூன்றாம் ராஜராஜ சோழ மன்னன்

    Madhuraiyai_Meetta_Sundharapandiyan.jpg

           ---- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ---

    • Like 1
  6. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #20 – சோழ - பாண்டிய - இலங்கை போர்கள் தொடர்கிறது..

    thamizhnattu-porkalangal-ch20.jpg

    தன்னுடைய படைத்தலைவர்களான இலங்காபுரத் தண்டநாயகனையும் ஜகத்விஜயத் தண்டநாயகனையும் போரில் கொன்றது மட்டுமின்றி அவர்களது தலைகளை மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்ட சோழர்கள் மீது இலங்கை மன்னன் பராக்கிரமபாகு பெரும் ஆத்திரம் கொண்டான். சோழர்களை எதிர்க்கப் படை ஒன்றையும் திரட்டினான். வட இலங்கையில் உள்ள ஊரத்துறை, புலச்செரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் என்ற ஊர்களில் படைகளும் சோழ நாடு செல்லப் படகுகளும் திரட்டப்பட்டன.

    thamizhnattu-porkalangal-ch20-2.jpg

     

    வலுவான படை ஒன்றைத் திரட்டிக்கொண்டிருக்கும்போதே தவறு ஒன்றையும் செய்தான் பராக்கிரமபாகு. அவனுடைய சகோதரி மித்தா என்பவளின் மகனான ஶ்ரீவல்லபனுக்கும் அவனுக்கும் தகராறு மூண்டது. அதன் விளைவாக ஶ்ரீவல்லபன் தன் மாமன் மீது கோபித்துக்கொண்டு இலங்கையிலிருந்து கிளம்பி சோழ நாட்டில் வந்து தஞ்சம் புகுந்தான்.

    அவனைச் சோழ நாட்டுத் தளபதிகள் அன்புடன் வரவேற்று மன்னன் ராஜாதிராஜனிடம் அழைத்துச் சென்றனர். விருந்தோம்பலில் மகிழ்ந்த ஶ்ரீவல்லபன், சோழர்களை எதிர்த்துத் தன் மாமன் படை திரட்டும் விஷயத்தைச் சொன்னான். எதிரி முன்னேறித் தாக்குமுன்பு தானே அவர்களைத் தாக்கி அழிப்பதே சிறந்த போர் வியூகம் என்பதை உணர்ந்திருந்த ராஜாதிராஜன், தன்னுடைய படைத்தலைவர்களில் ஒருவனான வேதவனமுடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவராயனை அழைத்து ஒரு படையுடன் அவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அந்தப் படையோடு ஶ்ரீவல்லபனும் சென்றான்.

    எந்தெந்த இடங்களில் எல்லாம் சோழர்களை எதிர்க்கப் படை திரட்டப்பட்டதோ அந்த இடங்களை எல்லாம் சோழர்களின் படைகள் தாக்கியழித்தன. ஊரத்துறையும் வல்லிகாமமும் மட்டிவாழும் சோழர் படைகளால் சூறையாடப்பட்டன. புலச்சேரி அழிக்கப்பட்டது. அதன்பின் மாதோட்டத்தையும் கைப்பற்றிக்கொண்டு அங்கிருந்து யானைகளையும் பெரும் செல்வத்தையும் கைப்பற்றியது சோழர் படை.

    சில சிங்களப் படைத்தலைவர்கள் போரில் கொல்லப்பட்டனர். பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். ‘ஈழமண்டலத்தில் கீழ் மேல் இருபது காதத்திற்கு மேற்படவும் தென்வடல் முப்பது காதத்திற்கு மேற்படவும் அழித்து’ பராக்கிரம பாகு திரட்டியிருந்த படை முழுவதையும் நிர்மூலம் செய்தபிறகு, அண்ணன் பல்லவராயன் வெற்றியோடு சோழ நாடு திரும்பினான். தான் திரட்டிவந்த செல்வங்கள் அனைத்தையும் அரசன் ராஜாதிராஜனிடம் கொடுத்தான். இந்தப் படையெடுப்பில் இலங்கையின் பகுதிகள் எதுவும் சோழ நாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதும், தங்களைத் தாக்க முனைந்த படைகளை அழிப்பது மட்டுமே இந்தச் சோழர் படையெடுப்பின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.

    தான் திரட்டிய படைகள் அழிக்கப்பட்டதோடு பெரும் பொருட்சேதத்தையும் சந்தித்த நிலையில் சிறிதுகாலம் சும்மா இருந்த பராக்கிரமபாகுவிற்கு சோழர்களைத் தோற்கடிக்கவேண்டும் என்ற முனைப்பு சிறிதும் குறையவில்லை. அதன் அடுத்த கட்ட முயற்சியாக பாண்டிய மன்னன் குலசேகரனுக்குப் பரிசுகள் கொடுத்து அவனைத் தன் நண்பனாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். அதற்கான ஒரு குழுவையும் மதுரைக்கு அனுப்பி வைத்தான்.

    குலசேகரபாண்டியனுக்கும் சோழர்களின் பிடியில் இருந்து விடுபடவேண்டும் என்ற ஆசை தோன்றியிருந்தது. ஆகவே எந்தப் பராக்கிரமபாகுவின் படைகளைத் தோற்கடிக்க சோழர்களிடம் உதவி கேட்டானோ, அவனுக்கே நட்புக்கரம் நீட்டி சோழர்களுக்கு விரோதமாகத் திரும்பினான் குலசேகரன். இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்றும் பாண்டியநாட்டிற்கு நல்லதல்ல என்றும் அவனுடைய அதிகாரிகளான ராஜராஜக் கற்குடிமாராயன், ராஜகம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் ஆகியோர் அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள்.

    அவர்களின் யோசனையைக் கேட்ட மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களையும் சோழநாட்டு எல்லைக்குச் செல்லும்படி நாடு கடத்தினான் குலசேகரன். அதுமட்டுமல்லாமல், மதுரைக் கோட்டை வாசலில் இருந்த இலங்கைத் தண்டநாயகர்களின் தலைகளையும் அங்கிருந்து எடுத்துவிடும்படி சொன்னான். இந்தச் செய்திகள் சோழ அரசன் ராஜாதிராஜனுக்கு எட்டின.

    பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று குலசேகரனின் நன்றி கெட்ட செயலுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும்படி அண்ணன் பல்லவராயனுக்கு ஆணையிட்டான் ராஜாதிராஜன். மதுரையை முற்றுகையிட்ட சோழப்படைகள், குறைவான நேரத்தில் குலசேகர பாண்டியனைத் தோற்கடித்து அவனை தெற்கு நோக்கித் துரத்தின.

    மலைநாட்டில் மறைந்துகொண்டிருந்த பராக்கிரமபாண்டியனின் மகன் வீரபாண்டியன் மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டான். அவனுக்கு மதுரை அரியணையை அளித்து முடிசூட்டிவிட்டு சோழநாடு திரும்பினான் அண்ணன் பல்லவராயன். இந்தப் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் பொயு 1167லிருந்து 1175 வரை நடந்திருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    அதன்பின் சிறிதுகாலம் தமிழகத்தில் அமைதி நிலவியது. பொயு 1178இல், இரண்டாம் ராஜராஜனின் மகனான மூன்றாம் குலோத்துங்கன் தகுந்த வயதை எட்டியதும் அவனுக்குப் பட்டம் கட்டி சோழ அரசனாக முடிசூட்டிவிட்டு வேங்கி நாட்டிற்குச் சென்றுவிட்டான் இரண்டாம் ராஜாதிராஜன். சோழ நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட இலங்கை அரசன் பராக்கிரமபாகு, அவர்களைத் தோற்கடிக்க மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டான். அப்போது மதுரையை ஆண்டுகொண்டிருந்த வீரபாண்டியனுக்குத் தூது அனுப்பி அவனுடைய நட்பைக் கோரினான்.

    அடிக்கடி மதுரைக்கு அழைத்துவரப்பட்டு ஆட்சிப்பொறுப்பில் சில நாளும் அதன்பின் காட்டிற்குத் தப்பியோடி அங்கே சில நாட்களுமாகப் பொழுதைக் கழித்த வீரபாண்டியனுக்கும் தன்னாட்சி செய்வதில் ஆர்வம் பிறந்தது. இலங்கை அரசனின் நட்பை ஏற்றுக்கொண்ட அவன், சோழர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான். இம்முறை குலோத்துங்கன் தானே நேரடியாகக் களத்தில் இறங்கினான். மதுரை நோக்கி தன்னுடைய படைகளோடு சென்ற அவன், வீரபாண்டியனைத் தோற்கடித்து அவனுடைய ஏழகப்படைகளையும் அவனுக்கு உதவியாக வந்திருந்த இலங்கைப் படைகளையும் அழித்தான்.

    வீரபாண்டியன் மீண்டும் ஒரு முறை சேரநாட்டை நோக்கித் தப்பி ஓடினான். அப்போது குலசேகர பாண்டியன் இறந்துவிட்டபடியால் அவனுடைய மகனான விக்கிரமபாண்டியனுக்கு பாண்டிய அரசை அளித்துவிட்டுச் சோழ நாடு திரும்பினான் குலோத்துங்கன்.

    சேரநாட்டிற்குச் சென்ற வீரபாண்டியன், சேர அரசனிடம் உதவி கேட்டு அங்கிருந்து ஒரு படையைத் திரட்டிக்கொண்டு வந்து பொயு 1180ல் மதுரை அரசைக் கைப்பற்ற முனைந்தான். இதனால் இரண்டாவது முறை குலோத்துங்கன் பாண்டிய நாடு நோக்கிப் படையெடுக்க வேண்டியதாயிற்று.

    மதுரைக்குத் தென்கிழக்கே நெட்டூர் என்ற இடத்தில் இந்த இரு படைகளும் மோதின. மிகக் கடுமையாக நடந்த இந்தப் போரில் வீரபாண்டியனுடைய படைகளும் சேரப்படைகளும் அடியோடு அழிக்கப்பட்டன. வீரபாண்டியனுடைய மனைவியையும் அவனுடைய அரண்மனைப் பெண்டிரையும் ‘வேளம் ஏற்றினான்’. வேளம் ஏற்றுவது என்பது எதிரி நாட்டுப் பெண்களைக் கொண்டுவந்து தன்னுடைய அரண்மனை அந்தப்புரத்தில் பணிப்பெண்களாக வைப்பதாகும்.

    thamizhnattu-porkalangal-ch20-2.jpg

    நாடு திரும்பிய குலோத்துங்கனை, வீரபாண்டியனும் சேர அரசனும் சந்தித்து சமாதானத்தையும் மன்னிப்பையும் வேண்டினர். அதை ஏற்றுக்கொண்ட குலோத்துங்க சோழன் வீரபாண்டியனை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆளுமாறு சொன்னான். சேரனுக்குச் செல்வங்களை அளித்து அவனுடைய நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.

    மதுரையில் சில ஆண்டுகள் அமைதியாக ஆட்சி செய்துவிட்டு விக்கிரமபாண்டியன் இறைவனடி சேர்ந்தான். அவனுக்கு இரண்டு வீர மகன்கள் இருந்தனர். மூத்த மகனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் பொயு 1190ல் அரியணை ஏறினான். அவனுக்கு அவன் தம்பி சுந்தரபாண்டியன் உறுதுணையாக இருந்தான்.

    தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற முதுமொழியின் படி, சோழநாட்டிலிருந்து விடுபட இருவரும் தீர்மானித்தனர். அதன் காரணமாக சோழர்களுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தினான் குலசேகர பாண்டியன். இதன் காரணமாக வெகுண்ட குலோத்துங்கன் மூன்றாம் முறையாகப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். பாண்டியர்களும் படை ஒன்றைத் திரட்டியிருந்தனர். இரு படைகளும் மட்டியூர், கழிக்கோட்டை ஆகிய இடங்களில் போரிட்டன. மீண்டும் ஒரு கடுமையான போரைப் பாண்டிய நாடு சந்தித்தது.

    thamizhnattu-porkalangal-ch20-3.jpg

    இரண்டு இடங்களிலும் சோழப்படைகள் பாண்டியர்களைத் தோற்கடித்தன. மதுரையில் வெற்றியோடு நுழைந்த குலோத்துங்கன் அங்கேயுள்ள பல மண்டபங்களை இடித்தான். பாண்டியர்களின் அரண்மனைகள் பல தரைமட்டமாக்கப்பட்டன. அதன்பின் மதுரைக் கொலுமண்டபத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்துகொண்ட குலோத்துங்கன் சோழ பாண்டியன் என்ற பெயரோடு முடிசூட்டிக்கொண்டு திரிபுவன வீரன் என்ற பெயரையும் சூடிக்கொண்டான்.

    மதுரையில் சில காலம் தங்கியிருந்து சொக்கநாதப் பெருமானுக்கு திருவிழாக்கள் நடத்தி கோவிலுக்குப் பொன்வேய்ந்த திருப்பணியையும் செய்தான் குலோத்துங்கன். அதன்பின் குலசேகரபாண்டியனை அழைத்து மீண்டும் அவனுக்கு அரசைக் கொடுத்து விட்டு சோழநாடு திரும்பினான்.

    ஆனால் சோழப்படைகள் மதுரையில் செய்த அழிவுகளும் வேளம் ஏற்றுவது போன்று பாண்டியர்களுக்கு அவர்கள் செய்த அவமானங்களும் பாண்டியர் மனத்தில் ஆறாத வடுவாகப் பதிந்துபோயிற்று. அதன் எதிர்விளைவு எப்படியிருந்தது ?

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-20/

    • Like 1
  7. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – சோழ - பாண்டிய - இலங்கை போர்கள்

    thamizhnattu-porkalangal-ch19.jpg

    முதலாம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சி செய்த அவனுடைய வீர மகன்களான முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் அவன் அமைத்த அரசைக் கட்டிக் காத்தார்கள். ஆனால் முதல் குலோத்துங்கன் காலத்திலிருந்து சோழப் பேரரசின் பரப்பு சுருங்க ஆரம்பித்தது.

    கலிங்கப்போரில் குலோத்துங்கன் பெரு வெற்றி அடைந்தாலும் அதற்குப் பின் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் அங்கே இருந்த அரசர்கள் கலகம் செய்து தன்னாட்சி செய்ய முற்பட்டனர். இவற்றை குலோத்துங்கனும் அவன் மகன் விக்கிரம சோழனும் ஓரளவுக்கு அடக்கினாலும், நாட்டின் பல பகுதிகளை அவற்றிற்குச் சொந்தமான அரசர்களிடமே கொடுத்து அவர்களைச் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆட்சி செய்யப் பணித்தனர்.

    இதனால் மதுரையில் பாண்டிய வம்சம் மீண்டும் துளிர்விட்டது. சடையவர்மன் பராந்தக பாண்டியன், மாறவர்மன் ஶ்ரீவல்லபன் போன்றோர் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆட்சிசெய்தனர்.

    220px-Singhales_ride_into_Southern_India

    இதே நிலைதான் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் இரண்டாம் ராஜராஜன் காலத்திலும் தொடர்ந்தது. இரண்டாம் ராஜராஜன் இறக்கும்போது அவனுடைய குழந்தைகள் மிகச் சிறுவயதினராக இருந்ததால் தன்னுடைய உறவினனான எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இரண்டாம் ராஜாதிராஜன் என்ற அபிஷேகப் பெயருடன் பட்டம் கட்டி வைத்தான். இரண்டாம் ராஜாதிராஜ சோழனுக்கு அமைச்சனாகவும் சேனாதிபதியாகவும் இருந்தவன் திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன்.

    அதே சமயத்தில் மதுரையில் பராக்கிரமபாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். ஒரே நேரத்தில் பாண்டியர்களின் தாயாதிகள் பல இடங்களில் இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்களின் மைய அதிகாரம் மதுரையில் இருந்தது என்பதையும் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதே முறையில் திருநெல்வேலியிலிருந்து பராக்கிரம பாண்டியனின் உறவினனான குலசேகர பாண்டியன் ஆட்சிசெய்தான். ஆனால் அவனுக்கு மதுரைச் சிங்காதனத்தின் மீது ஒரு கண் இருந்தது. அதைக் கைப்பற்றத் திட்டமிட்டு படைதிரட்ட ஆரம்பித்தான் குலசேகரன்.

    இந்தச் செய்தி பராக்கிரம பாண்டியனை எட்டியது. சோழர்களிடம் உதவிகேட்டு மீண்டும் ஒருமுறை அவர்களைப் பாண்டிய நாட்டில் புகவிட விரும்பாத பராக்கிரம பாண்டியன், தன்னுடைய நண்பனான இலங்கை அரசனிடம் உதவி கேட்டான். இலங்கை அரசனான பராக்கிரம பாகு, தன்னுடைய படைத்தலைவனும் பெருவீரனுமான இலங்காபுரத் தண்டநாயகனின் தலைமையில் ஒரு படையை பராக்கிரம பாண்டியனுக்கு உதவி செய்வதற்காக அனுப்பினான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது.

    மின்னல் வேகத் தாக்குதல் ஒன்றை மதுரையின் மீது தொடுத்த குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனைப் போரில் தோற்கடித்து அவனையும் கொன்றுவிட்டான். பராக்கிரமனின் மகனான வீரபாண்டியன் மலைநாட்டிற்குத் தப்பியோடினான். குலசேகரன் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சிபீடத்தில் ஏறினான்.

    இலங்காபுரன் தன் படையோடு ராமேஸ்வரத்திற்கு வந்து இறங்கிய உடன் இந்தச் செய்திகள் அவனுக்குச் சொல்லப்பட்டன.

    ஆத்திரமடைந்த அவன், பாண்டிய நாட்டில் உள்ள ஊர்களைச் சூறையாடினான். முதலில் ராமேஸ்வரம் கோவிலைத் தாக்கி அதன் பல பகுதிகளை அழித்தான். கோவில் பூஜைகளை நிறுத்திவிட்டான். அடுத்ததாக பாம்பனையும், வடலி என்ற கிராமத்தையும் இலங்கைப் படைகள் தாக்கின. வடலியில் இருந்த ஆளவந்த பெருமாள் என்ற தலைவர் கொல்லப்பட்டார். அங்கேயிருந்த பல விளைநிலங்கள் அழிக்கப்பட்டன.

    நாட்டின் கிழக்கு எல்லைப் புறங்கள் இலங்கைப் படைகளால் சூறையாடப்படுவதைக் கேள்விப்பட்ட குலசேகர பாண்டியன், கொங்குநாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த தன் மாமனிடம் இருந்து படையுதவி கேட்டு அந்தப் படையையும் சேர்த்துக்கொண்டு இலங்காபுரனின் படைகளோடு மோதினான். பரமக்குடி, நெட்டூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களிலும் இலங்கைப் படைகளே வெற்றி பெற்றன.

    குலசேகர பாண்டியன் அங்கிருந்து பின்வாங்கினான். அதன்பின் மானாமதுரையைத் தாக்கிய இலங்காபுரன் அங்கிருந்த சிற்றரசர்களை விரட்டிவிட்டான். திருவாடானை அருகே இருந்த அஞ்சுகோட்டை என்ற இடத்தையும் தொண்டி, பாசிப்பட்டினம் ஆகிய கடற்கரைத் துறைகளையும் இலங்கைப் படைகள் தன் கட்டுக்குள் கொண்டுவந்தன.

    thamizhnattu-porkalangal-ch19-1.jpg

    அதன்பின் திருப்பத்தூருக்கு அருகில் இருந்த செம்பொன்மாரி என்ற இடத்தைப் பிடித்து அங்கே ஆட்சிசெய்துகொண்டிருந்த மழவச்சக்கரவர்த்தியை எதிர்த்து இலங்கைப் படைகள் போரிட்டன. மிகவும் வலுவான கோட்டையாக இருந்த அந்த இடத்தை அரைநாளில் பிடித்து மழவச்சக்கரவர்த்தியை விரட்டிவிட்டான் இலங்காபுரன். சிறுவயல், திருக்கானப்பேர் (காளையார்கோவில்) ஆகிய இடங்களும் இலங்கைப் படைகள் கைக்குச் சென்றன. அடுத்ததாக மதுரையை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான் இலங்காபுரத் தண்டநாயகன்.

    தொடர்ந்து இலங்கைப் படைகள் வெற்றி பெறுவதைக் கண்ட குலசேகரன், மதுரையை விட்டு தன்னுடைய இருப்பிடமான திருநெல்வேலிக்கு ஓடிவிட்டான். அதன் காரணமாக எளிதாக மதுரையைப் பிடித்த இலங்காபுரன், பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் மலைநாட்டில் மறைந்திருப்பதை அறிந்துகொண்டு, அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு ஆணையிட்டான். அதன்படி மதுரை வந்த வீரபாண்டியனை அரியணையில் ஏற்றி பட்டாபிஷேகமும் செய்துவைத்தான்.

    இதற்கிடையில் தன்னுடைய உறவினர்களிடமிருந்து படையுதவி பெற்றுக்கொண்டு மதுரை நோக்கி வந்தான் குலசேகரபாண்டியன். சாத்தூர் அருகே உள்ள மங்கலம் என்ற இடத்தைக் கைப்பற்றிகொண்ட அவன், அடுத்து ஶ்ரீவில்லிப்புத்தூரைத் தாக்கி அந்தக் கோட்டையையும் தன்வசப்படுத்திக்கொண்டான்.

    குலசேகரன் மீண்டுமொருமுறை பெரும்படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு தன்னை நோக்கி வருவதை அறிந்த இலங்காபுரன், தன்னுடைய அரசனான பராக்கிரமபாகுவிடம் மேலும் அதிகப் படைகளை அனுப்பச்சொல்லி உதவி கோரினான். அதை ஏற்ற பராக்கிரமபாகு ஜகத்விஜயத் தண்டநாயகன் என்பவனின் தலைமையில் இன்னொரு படையைத் தமிழகத்திற்கு அனுப்பினான்.

    இலங்காபுரனும் ஜகத்விஜயனும் ஒன்று சேர்ந்து குலசேகர பாண்டியனை ஶ்ரீவில்லிப்புத்தூரில் தாக்கினர். அங்கே நடந்த போரிலும் தோல்வியுற்று தெற்கு நோக்கித் தப்பியோடிய பாண்டியப் படைகளை குற்றாலம் வரைக்கும் துரத்திச் சென்று அங்கேயும் தோற்கடித்தன இலங்கைப் படைகள்.

    இதற்கிடையில் மதுரையில் கலகம் செய்த பாண்டி நாட்டுச் சிற்றரசர்கள், வீரபாண்டியனை மீண்டும் அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதனால் பெரும் ஆத்திரம் அடைந்த இலங்காபுரன் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கத் தீர்மானித்தான். பாண்டிய நாட்டின் வட எல்லைக்குப் படை எடுத்துச் சென்று கீழை மங்கலம், மேலைமங்கலம் ஆகிய சிற்றரசுகளை பாண்டிய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். பொன்னமராவதிக் கோட்டையைத் தாக்கி அதன் தலைவனான நிஷதராசனைக் கொன்று அந்த ஊரில் உள்ள மூன்றடுக்கு மாளிகையைத் தீக்கிரை ஆக்கினான். போதாக்குறைக்கு அங்குள்ள வீடுகளையும் வயல்களையும் கொளுத்திவிட்டு மதுரை திரும்பினான்.

    thamizhnattu-porkalangal-ch19-2.jpg

    மதுரையில் வீரபாண்டியன் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். வீரபாண்டியனின் முடிசூட்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடத் தீர்மானித்த இலங்காபுரன், மழவச் சக்கரவர்த்தி, மழவராயன், தலையூர் நாடாள்வார் போன்ற சிற்றரசர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்தான். கீழைமங்கலத்தையும் மேலை மங்கலத்தையும் மழவராயனுக்கும் தொண்டு, கருந்தங்குடி, திருவேகம்பம் ஆகிய இடங்களை மழவச்சக்கரவர்த்திக்கும் வழங்கி வீரபாண்டியனுக்கு உதவியாக அவர்களை ஆட்சி செய்யப் பணித்துவிட்டு பாண்டிய நாட்டிலேயே சிலகாலம் தங்கியிருக்கத் தீர்மானித்தனர் இலங்கைப் படைத்தலைவர்கள்.

    தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த குலசேகர பாண்டியன் சோழ நாட்டிற்குச் சென்று அங்கே ஆட்சிசெய்துகொண்டிருந்த இரண்டாம் ராஜாதிராஜனிடம் உதவி கோரினான். அதை ஏற்று தன்னுடைய படைத்தலைவனான பெருமாள்நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பினான் ராஜாதிராஜன்.

    இதைக் கேள்விப்பட்ட இலங்காபுரன், மதுரையைக் காக்குமாறு ஜகத் விஜயனிடம் சொல்லிவிட்டு திருப்பத்தூரின் அருகில் உள்ள கீழ்நிலை என்ற இடத்திற்குச் சென்று அங்கே சோழப்படைகளுடன் மோதினான். அங்கே இலங்கைப் படைகள் வெற்றி பெற்றன. பிறகு தொண்டியிலும் பாசிப்பட்டினத்திலும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போரிலும் இலங்காபுரனே வெற்றி பெற்று சோழப்படைகளை தோற்கடித்துத் துரத்தினான்.

    thamizhnattu-porkalangal-ch19-3.jpg

    இலங்காபுரனிடம் தோல்வியடைந்த சோழர்கள் இதனால் பெரும் அச்சம் அடைந்ததாகவும், தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரவேண்டி பல்லவராயரின் தலைமையில் இருபத்து எட்டு நாட்கள் அகோரபூஜை செய்ததாக ஆரப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்த அகோரபூஜை துர்க்கையை வேண்டிச் செய்யப்பட்ட பூஜை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

    ஆரப்பாக்கம் கல்வெட்டு

    ஆரப்பாக்கம் கல்வெட்டு

    பூஜை முடிந்த பிறகு, பாண்டிய நாட்டிற்குச் சென்று இலங்கைப் படைகளை அங்கிருந்து அகற்றும் படியும் இலங்கைத் தண்டநாயகர்களான இலங்காபுரன், ஜகத்விஜயன் ஆகியோரின் தலைகளைக் கோட்டை வாயிலில் தொங்க விடுமாறும் பெருமாள்நம்பிப் பல்லவராயனுக்கு இரண்டாம் ராஜாதிராஜ சோழன் ஆணையிட்டான். அதை ஏற்று பெரும்படையோடு பெருமாள்நம்பிப் பல்லவராயன் பாண்டிய நாட்டில் புகுந்தான்.

    இலங்காபுரனும் ஜகத்விஜயனும் சோழப்படைகளோடு கடுமையாகச் சண்டையிட்டனர். இந்தப் போரில் சோழப்படைகள் பெருவெற்றி பெற்றன. இலங்கைத் தண்டநாயகர்கள் இருவரும் போரில் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரின் தலைகளையும் மதுரைக் கோவில் வாசலில் நட்டுவைத்தான் பல்லவராயன்.

    பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு

    பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு

    இப்படியாக பாண்டியர்களின் தாயாதிச்சண்டையின் முதல் அத்தியாயத்தில் வீரபாண்டியன் மறுபடியும் தப்பி ஓட நேரிட்டது. குலசேகர பாண்டியனை மீண்டும் மதுரையில் அரியணையில் அமர்த்திவிட்டு சோழநாடு திரும்பினான் பல்லவராயன்.

    ஆனால் விஷயம் அதோடு முடிந்துவிடவில்லை.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-19/

    • Like 1
  8. 1 hour ago, ஏராளன் said:

    நன்றி புரட்சி.
    இந்தப் போர்கள் தான் தமிழர்களுக்கும் சேரர்களுக்கும் தீராப் பகையானதோ?!

     

    43 minutes ago, நன்னிச் சோழன் said:

    அப்படி இருக்காது... அங்கே சேரத் தமிழர்களோடு கலந்த வடநாட்டுக்காரர்களால் ஏற்பட்ட கலப்பால் நாங்கள் வேறு சேரத் தமிழர்கள் வேறு என்ற எண்ணக்கருவை அவர்களிடம் பிறர் விதைத்ததால் நாமிருவரும் வேறுவேறாகி இன்றுவரை எம்மீது மலையாளிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளனர்.

    இவரின்ட சில கருத்துக்கள் உடன்பாடு இல்லை.. சில யோசிக்க வைக்கிறது..👌

    • Like 1
  9. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு - வேணாடு

    thamizhnattu-porkalangal-ch18.jpg

    சங்ககாலம் முதல் தொடர்ந்து பல்வேறு விதமான போர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழகத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது ராஜராஜ சோழன் காலம் முதல் அவன் மகன் ராஜேந்திர சோழன் காலம் வரை என்று சொல்லலாம்.

    தமிழகத்தின் வடபகுதியும் மேற்குப் பகுதியும் சோழநாட்டின் ஆட்சிக்கு உட்பட்டே இருந்தன. பாண்டியன் அமரபுஜங்கனை ராஜராஜன் வென்ற பிறகு பாண்டிய நாடு சோழ நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் முழுமையாக வந்தது. சேர அரசன் பாஸ்கர ரவிவர்மனை ராஜராஜன் தோற்கடித்த பிறகு அங்கிருந்தும் எதிர்ப்புகள் எழவில்லை.

    ராஜேந்திர சோழன் பட்டமேறியபிறகு அவன் மகனை சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரில் மதுரையில் பட்டாபிஷேகம் செய்து சோழர்களுடைய ஆட்சியை அசைக்கமுடியாமல் பாண்டிய நாட்டில் நிலைநிறுத்தினான். இப்படியாக தமிழகம் முழுவதும் சோழநாட்டின் கீழ் தொடர்ந்து சில தசாப்தங்கள் இருந்ததால், போர்களுக்கான அவசியமே ஏற்படவில்லை.

    அதன் காரணமாக சோழர்களின் கவனம் வடக்கில் மேலைச் சாளுக்கியர்களை அடக்குவதிலேயே இருந்தது. அதன் முத்தாய்ப்பாக ராஜேந்திரன் வங்காளம் வரை படையெடுத்துச் சென்று அங்கிருந்து கங்கையைக் கொண்டுவந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் கட்டிய கோவிலில் அபிஷேகம் செய்தான்.

    அதை அடுத்து கடலைக் கடந்து சோழர் கடற்படை கடாரத்தைத் தாக்கியது. ஶ்ரீவிஜயப் பேரரசின் கடல்பலத்தை நொறுக்கியது சோழர்களின் இந்தப் படையெடுப்பு. இப்படிச் சென்ற இடமெல்லாம் வெற்றி அடைந்த பிறகு தன்னுடைய மகனான ராஜாதிராஜனுக்கு பொயு 1018ல் இளவரசுப் பட்டம் சூட்டிவிட்டு ஓய்வெடுத்தான் ராஜேந்திர சோழன்.

    இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாண்டியர்களும் சேரர்களும் தலை தூக்க முற்பட்டனர். பாண்டிய வம்சத்தில் வந்த மானாபரணன் என்ற பாண்டியன் தென்பாண்டி நாட்டில் கலகம் செய்தான். அவனுக்குத் துணையாக சுந்தரபாண்டியன் என்ற இளவரசனும் கன்னியாகுமரியை ஒட்டிய பகுதியை ஆட்சி செய்த வீர கேரளன் என்ற அரசனும் இருந்தனர். ஆகவே, இந்தக் கலகத்தை அடக்க ராஜாதிராஜன் ஒரு படையோடு புறப்பட்டான். இந்த விவரங்களை ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி விவரிக்கிறது.

    மன்னுபல் லூழியுள் தென்னவர் மூவருள்
    மானாபரணன் பொன்முடி யானாப்
    பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து

    முதலில் பாண்டிநாட்டில் புகுந்த அவன் மானாபரணனைப் போரில் தோற்கடித்து கொன்றான். அவனுடைய பொன்முடியை அகற்றி களத்தில் அவனுடைய தலையை அரிந்ததாக மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது.

    அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தரபாண்டியன்
    கொற்றவெண் குடையுங் கற்றை வெண் கவரியும்
    சிங்காதனமும் வெங்களத் திகழ்ந்துதன்
    முடிவிழத் தலைவிரித்தடி தளர்ந்த தோடத்
    தொல்லை முல்லையூர்த் துரத்தி

    அதன் பின் முல்லையூர் என்ற இடத்தில் சுந்தரபாண்டியனைச் சந்தித்த அவன், போர்க்களத்தில் வெண்கொற்றைக் குடை, கவரி, சிங்காதனம் ஆகியவற்றை இழந்து தப்பி ஓடும்படி செய்தான். அதன்பின், தமிழ்நாட்டின் தென்பகுதிக்குச் சென்ற சோழப்படைகள் அங்கே வீரகேரளனின் படைகளோடு மோதின.

    வாரள வியகழல் வீரகே ரளனை
    முனைவயிற் பிடித்துத் தனது வாரணக்
    கதக்க ளிற்றினால் உதைப்பித் தருளி

    வீரகேரளனைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்து, அவனைத் தன்னுடைய யானையினால் உதைத்துக் கொன்று அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டான் ராஜாதிராஜன்.

    இந்த வீரகேரளன் என்பவன் தமிழகத்தின் தென்பகுதியோடு சேரநாட்டின் தென்பகுதியையும் ஆட்சி செய்த ஓர் அரசனாக இருக்கக்கூடும். அப்போது சேரநாட்டின் அரசனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் மனுகுலாதித்யன்.

    தலைநகரான மகோதையிலிருந்து ஆட்சி செய்தவன் அவன். சேர நாடு முழுவதும் அப்போது பல்வேறு சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. மத்திய அரசின் அதிகாரம் குறைந்து ஒரு நெகிழ்வான கூட்டாட்சி முறை அப்போது அங்கே இருந்தது.

    இருப்பினும் பாண்டியர்களுக்கு ஆதரவாக வீரகேரளன் உதவி புரிந்தது, பாஸ்கர ரவிவர்மனின் ஆசியுடனே என்று ராஜாதிராஜன் நினைத்திருக்கலாம். மேலும், சேரநாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த அரசர்கள் அனைவரையும் தோற்கடித்து சோழநாட்டின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதே சோழர் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கான வழி என்று ராஜாதிராஜன் கருதியிருக்கலாம். ஆகவே சேரநாட்டின் ஊடே தனது திக்விஜயத்தை சோழப்படைகள் தொடர்ந்தன.

    முதலில் திருவனந்தபுரம் வழியாக சேரநாட்டில் புகுந்த சோழப்படைகள் ஆய்குல அரசர்கள் ஆட்சிக்கு உட்பட்ட காந்தளூர்ச்சாலையை அழித்தன. ‘வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து’ என்று இந்த நிகழ்வை ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி குறிக்கிறது.

    அதன்பின் அருகே உள்ள வேணாட்டில் புகுந்தன. வேணாடு என்பது தற்போதைய கொல்லம் பகுதி. பின்னால் இது விரிவடைந்து ஆய் நாட்டையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது. ‘வேள் நாடு’ என்பதே வேணாடு என்று திரிந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். சேரநாட்டின் தென்பகுதியில் இருந்த வலிமையான அரசு அது.

    thamizhnattu-porkalangal-ch18-1.jpg

    அங்கிருந்த அரசனைக் கொன்று அவனை வீரசுவர்க்கம் அனுப்பியதை ‘வேணாட்டரசை சேணாட்டொதுக்கி’ என்று ராஜாதிராஜன் மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது. அவனுக்கு உதவ வந்த மற்றொரு சிற்றரசனான கூபக நாட்டு வேந்தனையும் தோற்கடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தான் ராஜாதிராஜன். வேணாட்டை வெற்றி கொண்டு சேரர்களின் தலைநகரான மாக்கோதையை நோக்கிச் சென்றன சோழர்களின் படைகள்.

    சோழப்படைகள் முன்னேறி வருவதைக் கண்ட சேரமன்னன் தன் தலைநகரை விட்டு காட்டில் ஓடி ஒளிந்துகொண்டான்.

    ‘மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன்
    நாடுவிட் டோடிக் காடுபுக் கொளிப்ப
    வஞ்சியும் புதுமலர் தலைந்தாங் கொஞ்சலில்’

    என்கிறது மெய்க்கீர்த்தி. இப்படி சேரர் தலைநகரை அதிக சேதமில்லாமல் கைப்பற்றிய சோழப்படைகள், அதன்பின் மேலும் முன்னேறி வடக்கே சென்றன. அடுத்து அவர்கள் வெற்றி கொண்டது சேரநாட்டின் வடபகுதியை. ‘மேவு புகழ் இராமகுட மூவர் கெட முனிந்து’ சோழர்கள் வெற்றி கொண்டனர் என்கிறது மெய்க்கீர்த்தி.

    இந்த வரிகள் இராமகுடம் என்ற அரசை ஆண்ட மூன்று இளவரசர்களை சோழப்படைகள் வெற்றி கொண்டனர் என்று குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் எலிமலை என்ற சேரநாட்டின் வடபகுதியை (தற்போது தென் கர்நாடகாவில் உள்ளது) ஆண்ட அரச வம்சமே ராமகுடம் என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கல்வெட்டால் தெரியவந்தது. அது கோலத்துநாடு என்றும் அழைக்கப்பட்டது.

    ‘கோலம்’ எனப்பட்ட தெய்வ ஆட்டங்களை அதிகமாக ஆடும் இடம் என்பதால் அதற்குக் கோலத்துநாடு என்று பெயர் வந்தது. தற்போதைய கேரளாவின் வடபகுதியும் கர்நாடகாவின் தென்பகுதியும் அடங்கியது கோலநாடு. அதை ஆண்டவர்கள் ‘ராமகட மூஷிகர்கள்’ என்று வடமொழியில் அழைக்கப்பட்டனர்.

    மூஷிகர் என்பது அங்குள்ள பழங்குடியினரின் பெயராக இருந்திருக்கக்கூடும் என்கிறார் ஆய்வாளர் எம்.ஜி.எஸ் நாராயணன். க்ஷத்திரியர்கள் அனைவரையும் வென்று சேரநாட்டை தன் இருப்பிடமாக ஆக்கிக்கொண்ட பரசுராமனால் முடிசூட்டப்பட்டவர்கள் இவர்கள் என்கிறது தொன்மங்கள்.

    பொயு 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமகுட மூவர் திருவடியான காரிவர்மனின் கல்வெட்டு ஒன்று எலிமலைப் பகுதியில் கிடைத்துள்ளது. அதில் ராஜேந்திர சோழ சமய சேனாதிபதி என்பவனைப் பற்றிய செய்தி இருப்பதைக் கொண்டு ராஜாதிராஜன் படையெடுப்பின் போது அங்கே ஆட்சி செய்தவன் காரிவர்மனே என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார்.

    thamizhnattu-porkalangal-ch18-2.jpg

    இப்படிச் சேரநாட்டின் தென்பகுதியான வேணாட்டிலிருந்து வடபகுதியான எலிமலை வரை வெற்றி கொண்ட ராஜாதிராஜன், தன் திக்விஜயத்தை முடித்துகொண்டு சோழநாடு திரும்பினான். அந்தப் பகுதிகளையெல்லாம் அடுத்து ஆட்சி செய்தவர்கள் சோழர்களுக்கு அடங்கி ஆட்சி செய்யும்படியான நிலையை ஏற்படுத்தினான் அவன்.

    ஆனால் இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. ராஜாதிராஜனின் இந்த அதிரடித் தாக்குதலால் சேரர்களின் அரசு நிலைகுலைந்தது. ஏற்கெனவே அதிகாரம் குறைந்த நிலையில் ஆட்சி செய்துகொண்டிருந்த மாக்கோதை அரசர்கள், மேலும் வலுவிழந்தனர். வடக்கிலிருந்து தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த குடியேற்றங்களாலும், கடல் கடந்து வணிகம் செய்ய வந்த அந்நியர்களும் இங்கே வந்து குடிபுகுந்ததாலும் சேரநாடு பல குழப்பங்களைச் சந்தித்தது. வேணாடு, கோலத்துநாடு, வள்ளுவநாடு போன்ற பகுதிகளை ஆண்ட சிற்றரசர்கள் தன்னாட்சி பெறத் தலைப்பட்டனர்.

    இவர்களை ஒடுக்க முதல் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவன் மகனான விக்கிரம சோழன் காலத்திலும் இருமுறை சோழர்கள் படையெடுத்தனர். ஆனாலும் அவர்களால் சேரர்களின் மத்திய அரசை மேலும் வலுவிழக்கச் செய்ய முடிந்ததே தவிர, சேரநாட்டின் பகுதிகளை சோழநாட்டின் ஆட்சியின்கீழ் கொண்டு வர முடியவில்லை. முடிவில், சேர நாடு 17 பகுதிகளாகப் பிரிந்தது. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அரசர்கள் தன்னாட்சி செய்ய ஆரம்பித்தனர். அது தமிழகத்தின் வேர்களிலிருந்து கேரளம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-18/

    • Like 2
  10. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

    thamizhnattu-porkalangal-ch17.jpg

    “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
    தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
    காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி”

    தமிழ்நாட்டுப் போர்க்களங்களிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான இடமாக இருப்பது காந்தளூர்ச்சாலைதான். இதைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லாமலிருப்பது ஒரு புறம் என்றால், இருப்பதையும் முழுதாக ஆராயாமல் சாதாரணப் புனைவு ஆசிரியர்கள், சரித்திரப் புனைவு ஆசிரியர்கள், தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப வளைப்பவர்கள் என்று ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்லி எல்லாருமாகச் சேர்ந்து குழப்பியடித்த போர்க்களமாகவே இன்று வரை காந்தளூர்ச்சாலை இருக்கிறது.

    ஒரு சரித்திரப் புனைவின் அடிப்படையில் எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லாமல் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் காந்தளூர்ச்சாலைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கதை கட்டுபவர்களும் இதில் அடக்கம். ஆகவே இவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு கறாரான வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் இந்தப் போர்க்களத்தை ஆராயவேண்டும்.

    மேற்குறிப்பிட்ட ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் முதலில் குறிப்பிடப்படுவது காந்தளூர்ச்சாலைதான். ஆனால் இதுதான் ராஜராஜனின் முதல் போரா? அரசுப் பொறுப்பேற்ற பிறகு அவன் முதலில் போர்களில் ஈடுபடக் காரணம் என்ன?

    ஆதித்த சோழனின் காலத்தில் அபராஜித பல்லவனோடு முடிவுக்கு வந்த பல்லவ வம்சம் அதன் பிறகு தலை தூக்கவே இல்லை. அவ்வப்போது ஓரிரு சிற்றரசர்கள் அந்தப் பரம்பரையில் தோன்றினாலும் அவர்கள் சோழர்களுக்கும் பின்னால் மேலெழுந்த பாண்டியர்களுக்கும் பெரும் சவாலாக அமையவில்லை. ஆகவே, தொண்டை நாடு பெரும்பாலும் சோழர்களிடமோ அல்லது அவர்களின் சிற்றரசர்களிடமோதான் இருந்தது.

    ஆனால் பாண்டிய நாடு அப்படியல்ல. அவர்களுடைய தொடர் அரசுமுறை வியூகத்தின் காரணமாக பாண்டிய வம்சத்தின் ஏதாவது ஒரு கிளை மதுரை அரியணைக்குச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு இருந்தது. பல நேரங்களில் பஞ்ச பாண்டியர்கள் என்று ஐந்து இடங்களில் பாண்டியர்களின் தாயாதிகள் ஆட்சி செய்ததைக் காணலாம். இதன் காரணமாக பாண்டிய நாட்டில் இருந்து சோழர்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் வந்தன. பாண்டியர்களுக்கு உறுதுணையாக இலங்கை அரசர்களும் மேற்கில் ஆய்வேளிர் குல மன்னர்களும் சேரர்களும் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். போர்களில் பாண்டியர்கள் தோற்றுத் தலைமறைவாகும்போது அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது மலைநாடாகவே இருந்தது என்பதை வரலாற்றின் பல இடங்களில் பார்க்கலாம்.

    அதே போலத்தான் ராஜராஜனின் காலத்திலும் நடந்தது. வீரபாண்டியனைக் கொன்று மதுரையை மீண்டும் சோழநாட்டோடு ஆதித்த கரிகாலன் இணைத்த பின் சில காலம் அங்கே அமைதி நிலவினாலும், ராஜராஜன் அரியணை ஏறியவுடன் அங்கே அமரபுஜங்கன் என்ற பாண்டியன் தோன்றினான். ஆகவே மீண்டும் ஒரு முறை பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கவேண்டிய அவசியம் ராஜராஜனுக்கு ஏற்பட்டது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

    thamizhnattu-porkalangal-ch17-1.jpg

    முதன்முதலாக திரிசங்குவின் (தெற்கு) திசையில் ராஜராஜன் தன் திக்விஜயத்தைத் தொடங்கினான். பாண்டியர்கள் தனது வம்சத்தவர், ஆகவே அவர்களைக் காப்பது என் கடமை என்று கர்வம் கொண்டு சோழனோடு போர்புரியவந்த சந்திரன் கூட ராஜராஜனுக்கு வெண்சாமரம் வீசினான். பாண்டியன் அமரபுஜங்கன் தோற்கடிக்கப்பட்டான். அவனைச் சேர்ந்த அரசர்கள் ரகசியமாகப் படைதிரட்டினாலும் ராஜராஜனைப் பார்த்துப் பயந்தனர். பாம்புகள் ஓடி ஒளிவதைப் போல ஒளிந்துகொள்ள நினைத்தனர். சோழ குலத்தின் ஆபரணமான ராஜராஜன் கடலை அகழியாகக் கொண்டதும் பெரும் கொத்தளங்களை உடையதும் உடைய விழிஞத்தைக் கைப்பற்றினான்.’

    இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்திகள்:

    ⁃ ராஜராஜன் செய்த முதல் போர் அமரபுஜங்கனோடு நடந்தது. தெற்கு நோக்கிய திக்விஜயத்தில் முதலில் வருவது பாண்டியநாடு. எனவே அமரபுஜங்கனை வென்றது முதலில் நடந்தது.

    ⁃ அவனைச் சேர்ந்த அரசர்கள், ரகசியமாகப் படை திரட்டியவர்கள் ஓடி ஒளிந்தனர் என்ற வரிகளின் மூலம் பாண்டியனுக்கு உதவி செய்த அரசர்களை அடுத்து ராஜராஜன் குறி வைத்தது தெளிவு. அவர்கள் யார் என்பதற்கு அடுத்த வரியிலேயே விடை கிடைக்கிறது

    ⁃ அடுத்து அவன் போர் செய்து கைப்பற்றியது விழிஞம் துறையை. தற்போதைய அதானி காலம் வரை செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் விழிஞத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இது ஆய் வேளிர்களின் நாட்டில் இருந்த துறைமுகம்.

    thamizhnattu-porkalangal-ch17-2-750x528.

    பொயு 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனும் விழிஞத்தை வெற்றி கொண்டிருக்கிறான். அதைப் பற்றி ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் சொல்வதென்ன?

    thamizhnattu-porkalangal-ch17-3.jpg

     

    பெரிய மதில்களை உடைய கடற்கரைப் பட்டினமான விழிஞத்தை (நெடுஞ்சடையன்) வென்றான். வெற்றிப் படைகளை உடைய வேள் மன்னனைத் தோற்கடித்தான் என்கிறது அந்தச் செப்பேடுகள். ஆகவே அக்காலத்திலிருந்து பெரும் மதில்களை உடைய கடற்படைத் தளமாக விழிஞம் இருந்தது என்பதும் அது ஆய் வேள் மன்னனைச் சேர்ந்தது என்பதும் தெளிவாகிறது.

    அதே போல ஆய் வேளிர் பாண்டியர்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகு அவர்களது சிற்றரசர்களாகவே பெரும்பாலும் இருந்தனர். எனவே பாண்டியர்களுக்கு அவர்கள் உதவி செய்ததிலும் வியப்பேதும் இல்லை. அந்த உதவியை உடைக்கவேண்டும் என்ற காரணத்தால்தான் ராஜராஜன் அவர்களது முக்கியக் கடற்படைத் தளமான விழிஞத்தை வென்றான்.

    இப்போது காந்தளூர்ச்சாலைக்கு வருவோம். இந்த இடம் எங்கே இருக்கிறது என்பது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. சதாசிவப் பண்டாரத்தார் இது திருவனந்தபுரத்தின் அருகே உள்ள வலியசாலை என்று குறிப்பிடுகிறார். கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள காந்தளூர் இது என்று சொல்வோரும் உண்டு. ஆனால் காந்தளூர் கடற்கரையில் இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

    முதலாம் ராஜாதிராஜனுடைய மெய்க்கீர்த்தி ‘வேலை கெழு காந்தளூர்ச்சாலை கலமறுத்து’ என்று குறிப்பிடுகிறது. கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் ‘வேலை கொண்டதும் விழிஞம் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டு கொண்டு அல்லவோ’ என்று முதலாம் குலோத்துங்கனுடைய புகழைப் பாடுகிறார். வேலை என்றால் கடல். ஆகவே காந்தளூர்ச்சாலை கடலின் அருகே இருந்த ஊர் என்பது புலப்படுகிறது.

    கலிங்கத்துப் பரணியைத் தவிர தவிர விக்கிரமசோழனின் சிற்றரசனாக இருந்த சடையவர்மன் பராந்தக பாண்டியனின் மெய்க்கீர்த்தியும் ‘குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்து’ என்று விழிஞத்துடன் தொடர்புடையதாகவே காந்தளூர்ச்சாலையைக் குறிக்கிறது.

    இப்படி கடற்படைத் தளமான விழிஞத்துடன் சேர்ந்து குறிப்பிடப்படுவதால் காந்தளூர்ச்சாலை அதன் அருகே இருந்திருக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது. ஆகவே திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள வலிய சாலையே இது என்ற பண்டாரத்தாரின் கருத்தோடு இது ஒத்துப்போகிறது.

    thamizhnattu-porkalangal-ch17-4-750x528.

     

    இந்தச் சாலையை ஏன் அழிக்கவேண்டும்? அதோடு குறிப்பிடப்படும் கலம் என்பதன் பொருள் என்ன?

    ஆய் குல மன்னனான கருந்தடக்கனின் பார்த்திசேகரபுரச் செப்பேடுகள் அந்த ஊரில் அவன் வேதம் கற்பதற்கு ஒரு ‘சாலை’ அமைத்ததையும் அதற்கு காந்தளூரில் உள்ள ஒரு சாலையை மாதிரியாக எடுத்துக்கொண்டதையும் குறிப்பிடுகிறது. பார்த்திவசேகரபுரச் சாலை மீமாம்சம், வியாகரணம், புரோஹிதம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கும் இடமாகக் குறிப்பிடப்படுகிறது.

    thamizhnattu-porkalangal-ch17-5.jpg

    தவிர, அதில் வேதம் படிக்கும் மாணவர்கள் ஆயுதங்களைக் கையாளாதவர்களாக இருக்கவேண்டும் என்பது போன்று நிபந்தனைகள் கூறப்படுகின்றன.

    thamizhnattu-porkalangal-ch17-6.jpg

     

    இதில் கூறப்பட்ட காந்தளூர்ச்சாலைதான் ராஜராஜன் தாக்கிய சாலை என்று எடுத்துக்கொண்டால் எதற்கு வேதம் ஓதும், ஆயுதம் ஏந்தாத மாணவர்களை ராஜராஜன் தாக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்குப் பதில் சொல்ல முனைந்த சிலர் இங்கே ‘கலம்’ என்பது தகராறுகளைக் குறிக்கும், அதைத் தீர்த்துவைத்ததுதான் கலம் அறுத்தது என்றும், கலம் என்பது உணவுப் பொருள். அது தொடர்பான சர்ச்சையை ராஜராஜன் தீர்த்து வைத்தான் என்றும் பலவிதமாகப் பொருள் சொல்லிவந்தனர்.

    ராஜராஜனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டிலிருந்து அவனுடைய வீரச்செயலான காந்தளூர்ச்சாலை விவகாரம் குறிப்பிடப்படுகிறது ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்த ஶ்ரீ ராஜகேசரிவர்மன்’ என்றும் ‘சாலை கலமறுத்தருளிய ஶ்ரீ ராஜராஜ தேவன்’ என்றும் கல்வெட்டுகள் ராஜராஜனைக் குறிப்பிடுவதால், வெறும் தகராறுகளைத் தீர்த்த செய்தி இவ்வளவு பெருமையாகக் குறிப்பிடப்படுமா என்று ஒரு கேள்வி எழுந்தது.

    அதற்கான விடை செங்கத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் இருந்தது. ‘தண்டேவிச் சாலைய் கலமறுத்து அங்குள்ள மலை ஆளர் தலை அறுத்து’ என்று ராஜராஜனின் வீரச்செயலை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    thamizhnattu-porkalangal-ch17-7.jpg

    தண்டு என்றால் படை. ‘மலை ஆளர்’ என்பது ‘மலை ஆழர்’ என்ற சொல்லின் திரிபு. மேற்குத் தொடர்ச்சி மலையின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களைக் குறிப்பது அது. (அதுவே இப்போது மலையாளி என்று வழங்குகிறது). ஆகவே படையை ஏவி அங்குள்ள மலை ஆளர் என்று அழைக்கப்பட்ட மக்களின் தலையை அறுத்ததாக இந்தக் கல்வெட்டு தெரிவிப்பதை அறியலாம்.

    இந்தச் செய்திகளால் அங்கு நடைபெற்றது போர் என்பது தெரிகிறது. வெறும் வேதம் ஓதும் ஆட்களை வெல்ல படை ஏவுவதும் அவர்கள் தலையை அறுப்பதும் பொருந்தாத செயல் என்பதால், பார்த்திவசேகரச் செப்பேட்டில் கூறப்பட்ட சாலையும் மெய்க்கீர்த்தியில் வரும் சாலையும் வேறு வேறு என்பதையும் அறியலாம்.

    காந்தளூர் என்பது முற்காலக் காஞ்சியைப் போல, இக்கால மணிப்பால் போல கல்விக்கூடங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்கக்கூடும். அங்கே வேதம் பயிற்றுவிக்கும் சாலைகளும் போர்ப்பயிற்சி குறிப்பாக கடற்படைப் பயிற்சி அளிக்கும் சாலைகளும் இருந்திருக்கலாம். அப்படி ஒரு கடற்படைப் பயிற்சி சாலையை அழித்த நிகழ்வுதான் காந்தளூர்ச்சாலை கலமறுத்த நிகழ்வு.

    இங்கே கலம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு என்றாலும், மெய்க்கீர்த்திகளில் எந்தப் பொருளில் அது வந்திருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்றே தொடங்குகிறது. ஆகவே கலம் என்பது கப்பல். காந்தளூர்ச்சாலை கப்பல் படைப் பயிற்சி கொடுக்கும் இடம். கடற்படைத் தளமான விழிஞத்திற்கு அருகே இருந்த இந்தப் பயிற்சி நிலையத்தையும் சேர்த்து விழிஞத்தை வென்றவர்கள் படைகொண்டு அழித்திருக்கக்கூடும். அதைத்தான் முதலாம் குலோத்துங்கனின் புகழ் பாடும் ஜெயங்கொண்டாரும் குறிப்பிடுகிறார்.

    விழிஞத்தை பலர் முன்பு வென்றிருக்கிறார்கள். ஆனால் குறிப்பாக காந்தளூர்ச்சாலையை வென்றது ராஜராஜன் என்ற காரணத்தால்தான் அவனுடைய வெற்றிகளில் அது சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. காந்தளூர்ச் சாலை வெறும் நிலப்போர் மட்டுமல்ல. ஆய் குல மன்னர்களின் கடல் பலத்தை உடைக்கும் கடுமையான கடல் போராகவும் இருந்திருக்கூடும். சோழர் கடற்படையின் வலிமையை காட்டிய முதல் போர் என்பதாலும் அது சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அப்போது பாண்டியனை வென்றது ஏன் மெய்க்கீர்த்தியில் வரவில்லை என்று கேட்டால், மெய்க்கீர்த்தியின் முத்தாய்ப்பாக வருவதே ‘செழியரைத் தேசு கொள் கோ ராஜகேசரி வர்மன்’ என்று பாண்டியரின் ஒளியை மழுங்கச் செய்த ராஜாராஜனின் புகழைப் பாடும் வரிகள்தான்.

    ராஜராஜ சோழனைத் தவிர முதலாம் ராஜாதிராஜ சோழனும், முதல் குலோத்துங்க சோழனும் விக்கிரம சோழனின் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்த சடையவர்மன் பராந்தக பாண்டியனும் காந்தளூர்ச்சாலையில் கலம் அறுத்திருக்கிறார்கள். தாக்கி அழிக்கப்பட்ட கல்விக்கூடங்கள் உடனே மீண்டெழுவது எளிதல்ல. ஆனால் அழிக்கப்பட்ட கேந்திரமான படைத்தளங்களும் படைப் பயிற்சி நிலையங்களும் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் சாத்தியங்கள் அதிகம்.

    அதனால்தான் தொடர்ந்து சோழ மன்னர்கள் காந்தளூர்ச்சாலை என்ற போர்ப்பயிற்சி நிலையத்தை குறிவைத்துப் போர் தொடுத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட வகையில் மிகக் குறிப்பிடத்தக்க போர்த்தளமாக காந்தளூர்ச்சாலை மூன்று நூற்றாண்டுகளுக்கு விளங்கியிருக்கிறது.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-17/

    • Like 1
  11. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

     

    thamizhnattu-porkalangal-ch16.jpg

    சோழநாட்டின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த கங்கர்களையும் ராஷ்ட்ரகூடர்களையும் சமாளிப்பதில் முதல் பராந்தக சோழன் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தெற்கே பாண்டியர்கள் தாங்கள் இழந்த அரசை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

    பராந்தகனால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்ட ராஜசிம்ம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் ஒரு வலுவான படையைத் திரட்டி சோழர்களைத் தாக்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். தக்கோலப் பெரும்போரில் தோல்வியடைந்து தொண்டை மண்டலத்தை பறிகொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய மகனும் இளவரசனுமான ராஜாதித்தனை இழந்த பராந்தகன் அதன்பின் நீண்ட நாள் உயிர் வாழவில்லை. பராந்தக சோழனுக்குப் பிறகு அவனுடைய இரண்டாம் மகனான கண்டராதித்த சோழன் அரியணை ஏறினான்.

    கண்டராதித்த சோழன் பெரும் சிவபக்தன். அதுமட்டுமின்றிப் பெரும் தமிழ்ப் புலவனாகவும் விளங்கினான். சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் கண்டராதித்தன் பாடிய பதிகங்கள் திருவிசைப்பா என்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    ‘சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
    காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
    ஆரா இன்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
    பேரா வுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே’

    என்று அந்தப் பதிகத்தில் தஞ்சையர் கோன் என்றும் கோழி வேந்தன் என்றும் தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறான் இந்த அரசன். இப்படிச் சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்தியதால், போர்களிலோ நாட்டை விஸ்தரிப்பதிலோ இவன் உள்ளம் செல்லவில்லை.

    இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வீரபாண்டியன் மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அது மட்டுமின்றி சோழர்களின் மீது தாக்குதல் ஒன்றையும் தொடுத்தான். பொயு 953ல் நடந்த இந்தப் போரில் வீரபாண்டியன் பெரு வெற்றி பெற்றான். அதோடு மட்டுமல்லாமல் சோழன் ஒருவனை அவன் போரில் கொன்றிருக்கவேண்டும் என்பதும் தெரிகிறது.

    thakolam.jpg

    இந்தக் காரணத்தால் அவன் தனது கல்வெட்டுகளில் தன்னை ‘சோழன் தலை கொண்ட கோ வீரபாண்டியன்’ என்று அழைத்துக்கொள்கிறான். மதுரைக்கு அருகே இந்த வெற்றியின் நினைவாக சோழகுலாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் அவன் அமைத்தான். அது தற்போது சோழவந்தான் என்று அழைக்கப்படுகிறது.

    வீரபாண்டியனால் கொல்லப்பட்ட சோழன் யாரென்பது தெரியவில்லை. முதல் பராந்தக சோழனுக்கு நான்கு மகன்கள் என்பதும் அவர்களின் பெயர்கள் ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என்பதும் பல்வேறு கல்வெட்டுகளால் தெரியவருகிறது. இதில் உத்தமசீலியைப் பற்றி அதிகம் தகவல் இல்லை (கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் கல்வெட்டு உத்தமசீலி விளக்கேற்ற நிவந்தம் கொடுத்த செய்தி ஒன்றைப் பேசுகிறது).

    ஆகவே வீரபாண்டியன் கொன்றது சோழ இளவரசனான உத்தமசீலி என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. எப்படியிருந்தாலும் இழந்த பகுதிகளை மீட்டெடுத்து வீரபாண்டியன் சுதந்தரமாக ஆட்சி செய்யத் தொடங்கினான் என்பது பாண்டிய நாட்டில் பல்வேறு இடங்களில் கிடைக்கும் அவனுடைய கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

    கண்டராதித்தனின் ஆட்சிக்காலத்தில் தொண்டை மண்டலத்தையும் பாண்டி நாட்டையும் இழந்து சோழ நாடு முன்பு போலச் சுருங்கிவிட்டது. கண்டராதித்தன் ‘மேற்கெழுந்தருளிய’ பிறகு (அவர் மேற்குத் திசை நோக்கி யாத்திரை சென்றதாகவும் திரும்ப வரவில்லை என்றும் கூறப்படுகிறது) பராந்தக சோழனின் மூன்றாம் மகனான அரிஞ்சய சோழன் சோழ அரசுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

    கண்டராதித்தனுக்கு அவனுடைய இரண்டாம் மனைவியான செம்பியன் மாதேவி மூலம் மதுராந்தகன் என்ற மகன் இருந்தான். ஆனால் கண்டராதித்தன் மறைந்த போது அவன் சிறுவனாக இருந்ததால், அரிஞ்சய சோழன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.

    சோழ நாடு இழந்த பகுதிகளை, குறிப்பாகத் தொண்டை மண்டலத்தை மீட்பதில் கவனம் செலுத்தினான் அரிஞ்சயன். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே, ராஷ்ட்ரகூடர்கள் தொண்டை நாட்டில் தங்கள் பிரதிநிதிகளாக ஆட்சி செய்யப் பணித்திருந்த சிற்றரசர்களோடு மோதினான் இவன். அந்த முயற்சியில் ஆற்றூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வீரமரணமடைந்து ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயன் என்ற பெயர் பெற்றான். பின்னாளில் இவனது பேரனான ராஜராஜ சோழன் மேல்பாடி என்ற இடத்தில் இவனுக்குப் பள்ளிப்படைக் கோவில் ஒன்று எடுத்தான்.

    image-2023-10-06-201041765.png

    குறுகிய காலத்திலேயே அரிஞ்சய சோழன் இறந்துபட்டதால் அவனது மகனான சுந்தர சோழன் இரண்டாம் பராந்தகன் என்ற பெயருடன் பொயு 957ல் ஆட்சிக் கட்டிலில் ஏறினான். தன்னுடைய தகப்பனைப் போலவே இவனும் சோழ நாடு இழந்த பகுதிகளை மீட்பதில் கவனம் செலுத்தினான். முதலில் தொண்டை நாட்டின் பகுதிகளை அங்கே இருந்த ராஷ்ட்ரகூடர்களின் பிரதிநிதிகளான சிற்றரசர்களிடமிருந்து சிறிது சிறிதாக மீட்டான். இதற்குப் பல்லவ வம்சத்தில் வந்தவனான பார்த்திபேந்திரன் என்ற சிற்றரசன் உதவியாக இருந்தான்.

    பொயு 963 வாக்கில் தொண்டை நாட்டின் பகுதிகள் சுந்தர சோழனது ஆட்சியின் கீழ் வந்தன. போலவே, தெற்கிலும் பாண்டியர்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்திய இந்த அரசன், பொயு 962ல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். இரு தரப்பும் சேவூர் என்ற இடத்தில் மோதின.

    இந்தச் சேவூர் எது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் இது கொங்கு நாட்டில் இருக்கும் சேவூர் என்று கூறுகின்றனர். ஆனால் பாண்டியர்களும் சோழர்களும் கொங்கு நாட்டிற்கு ஏன் சென்று மோதவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஆகவே இது சோழ-பாண்டிய நாட்டு எல்லையில் இருந்த ஊராகவே இருக்கவேண்டும்.

    சேவூர்ப்போரில் வீரபாண்டியனுக்கு உதவியாக இலங்கை அரசனான நான்காம் மகிந்தன் தன்னுடைய படையை அனுப்பியிருந்தான். ஆனால், இந்தப் போரில் பாண்டியர்கள் தோல்வியடைந்தனர். வீரபாண்டியன் போர்க்களத்தை விட்டு ஓடி மறைந்துகொண்டான். வெற்றி பெற்ற சுந்தர சோழன் தன்னை ‘மதுரை கொண்ட கோ ராஜகேசரி வர்மன்’ என்றும் ‘வீரபாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமாள்’ என்றும் அழைத்துக்கொள்கிறான்.

    image-2023-10-06-201529572.png

    வெற்றியோடு தஞ்சை திரும்பிய சுந்தரசோழனின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. மலைப்பகுதியிலிருந்து வெளியே வந்த வீரபாண்டியன் மீண்டும் மதுரையைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினான். பொயு 966ல் தன்னுடைய மூத்த மகனான ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவைத்து அவன் தலைமையில் ஒரு பெரும் படையை மீண்டும் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி வைத்தான் சுந்தர சோழன்.

    ஆதித்த கரிகாலனுக்குத் துணையாக பல்லவன் பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் அரசன் பூதிவிக்கிரம கேசரியும் சென்றனர். மீண்டும் மீண்டும் தங்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் பாண்டிய வம்சத்தை ஒரேயடியாக அழிக்கவேண்டும் என்ற ஆவேசத்தோடு சோழப்படைகள் கடுமையாகப் போர் செய்தன. போரில் இறுதியில் ஆதித்த கரிகாலன், வீரபாண்டியனின் தலையை வெட்டி எறிந்தான். அதோடு மட்டுமல்லாமல், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் வரை ஊர்வலமாக வந்து, தஞ்சாவூர்க் கோட்டை வாசலில் அதைத் தொங்கவிட்டான். இந்தச் செய்தியை எசாலம் செப்பேடுகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன.

    veera.jpg

    ‘தத்ப்ராதா கரிகால சோள ந்ருபதி வீரச்ரியா லிங்கிதோ
    ஹத்வா பாண்ட்ய நரேந்த்ர மாஹவமுகே சித்வா ததீயம் சிர
    தஞ்சா த்வார கதோருதாரு சிரஸி நியஸ யோத்தமாங்கம் ரிபோ
    ஸப்தாம்போ நிதிமேகலாம் வஸுமதீம் பாலோ அப்யரக்ஷத் சிரம்’

    இதன் பொருள் ‘ராஜராஜனின் அண்ணனான கரிகாலன் பாண்டிய மன்னனின் தலையைத் துண்டித்ததுடன், அந்தத் தலையை தஞ்சாவூர் கோட்டை வாசலில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டான்’ என்பதாகும்.

    அதற்குப் பிறகு ஆதித்த கரிகாலன் மட்டுமின்றி பார்த்திபேந்திர வர்மனும் பூதிவிக்கிரம கேசரியும் கூட தங்கள் கல்வெட்டுகளில் தங்களை ‘வீரபாண்டியன் தலை கொண்ட’ என்ற அடைமொழிகளோடு அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்.

    thamizhnattu-porkalangal-ch16-1.jpg

                                   ( ஆதித்த கரிகாலன் கல்வெட்டு )

    thamizhnattu-porkalangal-ch16-2.jpg

                                           ( பார்த்திபேந்திரன் கல்வெட்டு – உத்தரமேரூர் )

     

    இப்படி அதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத ஒரு கொடூரமான செயலைச் செய்தவன் ஆதித்த கரிகாலன். அதன் காரணமாக ஆத்திரமடைந்த பாண்டிய நாட்டு அதிகாரிகள் சிலர் சோழ நாட்டில் உயர்பதவிகளில் இருந்த தன் உறவினர்களோடு சேர்ந்து ஆதித்த கரிகாலனைப் படுகொலை செய்தனர். உடையார்குடியில் இருந்த ஒரு கல்வெட்டால் இது அறியப்படுகிறது.

    சேவூரில் நடைபெற்ற இந்தப் போரோடு பாண்டிய நாட்டில், பாண்டியர்களது ஆட்சி அறவே அழிந்துபோனது. மீண்டும் அவர்கள் ஆட்சியை மீட்க சில நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-16/

    டிஸ்கி

    தொடர்புடைய காணோளிகள்

     

    அரிஞ்சய சோழன் - மேல்பாடி பள்ளிபடை 

    தலையை வெட்டியது உண்மையா..?

    உடையாளூர் கல்வெட்டு ஆய்வுகள்

    • Like 1
  12. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

    thakolamtemple.jpg

                 ( தக்கோலம் - போர் நடந்த இடம் )

    ‘தொண்டை நாடு பரவி’ அபராஜித வர்மனைக் கொன்று பல்லவ நாட்டை ஆதித்த சோழன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதையும் வென்றான். இப்படி வட தமிழகம் முழுவதும் சோழநாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததால், ஆதித்தனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகனான முதல் பராந்தக சோழன், தென் தமிழகத்தின் மீது தனது கவனத்தைச் செலுத்தினான். தொடர்ந்து நடந்த போர்களால் பலவீனமடைந்திருந்த பாண்டியர்களைத் தோற்கடிப்பது பராந்தகனுக்கு எளிய செயலாகவே இருந்தது.

    சோழர்களின் வலுவான படை பாண்டியநாடு நோக்கி வருவதை அறிந்த பாண்டிய மன்னனான ராஜசிம்ம பாண்டியன், இலங்கை அரசன் ஐந்தாம் காசிபனை உதவிக்கு அழைத்திருந்தான். அதை ஏற்று இலங்கை அரசனும் தன்னுடைய படைத்தலைவனான சக்க சேனாதிபதியின் தலைமையில் ஒரு படையை அனுப்பியிருந்தான். இருப்பினும் இந்தக் கூட்டுப் படையாலும் சோழர்களை வெல்ல முடியவில்லை.

    சோழர்களிடம் தோற்றாலும், பாண்டியர்களது குலதனங்களான மணிமுடியையும், ரத்தின ஹாரத்தையும் பிறவற்றையும் இலங்கையில் மறைத்து வைத்துவிட்டு ராஜசிம்ம பாண்டியன் தலைமறைவானான். அதன்பின் பாண்டிய நாடு முழுவதும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

    பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை அரசனின் மீதும் ஆத்திரமடைந்த பராந்தக சோழன் இலங்கையின் மீது படையெடுத்தான். அப்போது அங்கே நான்காம் உதயன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். சோழப் படை இலங்கைப் படையைத் தோற்கடித்தாலும், உதயன் பாண்டியர்களின் குலதனங்களை எடுத்துக்கொண்டு இலங்கையின் தென்பகுதியான ரோஹண நாட்டிற்குச் சென்றுவிட்டான்.

    பாண்டிய நாட்டையும் இலங்கையையும் வென்ற காரணத்தால் முதல் பராந்தகனது கல்வெட்டுகள் அவனை ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்று புகழ்கின்றன. இப்படி தமிழகம் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்த அரசன் என்ற பெருமையை முதலில் பெற்றவன் முதல் பராந்தக சோழன்.

    சோழ அரசை வலுவான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களிடம் நட்புப் பேணுவதில் கவனம் செலுத்தினான் பராந்தகன். சேர அரசரின் மகளை மணந்தவன் அவன். அடுத்ததாக, வடக்கில் அப்போது வலுவாக இருந்த ராஷ்ட்ரகூடர்களிடம் மண உறவு வைத்துக்கொள்ள முனைந்தான். தன்னுடைய மகளான வீரமாதேவியை ராஷ்ட்ரகூட அரசன் மூன்றாம் இந்திரனின் மகனான நான்காம் கோவிந்தனுக்கு திருமணம் செய்துகொடுத்து அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டான்.

    மேலும் திருப்புறம்பியம் போரில் பல்லவ-சோழர்கள் சார்பில் போர் புரிந்த கங்க மன்னர்களுடனும் பராந்தகனின் நட்பு தொடர்ந்தது. கங்க மன்னன் இரண்டாம் ப்ருதிவீபதி சோழர்களுடன் சேர்ந்து செப்பேடு (உதயேந்திரம் செப்பேடுகள்) வெளியிடும் அளவிற்கு இந்த நட்பு இருந்தது.

    பராந்தக சோழனுக்கு நான்கு மகன்கள். அவர்களில் முதல் மகனும் பெருவீரனுமான ராஜாதித்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவைத்தான் அவன். இவ்வாறாக, தனது ஆட்சியை மிகத் திறமையாக நிலைநிறுத்தி சுற்றிலும் பகைவர்களே இல்லாத நிலைக்குக் கொண்டு வந்து சோழப் பேரரசின் பெருமையைப் பல மடங்கு உயர்த்திய பராந்தகனுக்கு பிரச்சனை எதிர்பாராத விதமாக வந்தது. அது பற்றித் தெரிந்து கொள்ள ராஷ்ட்ரகூட அரசியலைக் கொஞ்சம் ஆராயவேண்டும்.

    ராஷ்ட்ரகூட அரசன் மூன்றாம் இந்திரனின் முதல் மகன் இரண்டாம் அமோகவர்ஷன். இந்திரனுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அவனை, அவனது தம்பியும் பராந்தக சோழனின் மாப்பிள்ளையுமான நான்காம் கோவிந்தன் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடித்தான். அதோடு விடாமல், ஒரு கொடுங்கோல் ஆட்சியைத் தனது நாட்டு மக்களுக்கு அளித்தான் கோவிந்தன். இதனால் மக்கள் அவன் மீது பெரும் அதிருப்தி அடைந்திருந்தனர்.

    ராஷ்ட்ரகூடச் சிற்றரசர்களும் அரசு அதிகாரிகளும் கூட கோவிந்தனின் ஆட்சியை விரும்பவில்லை. இந்த நிலையில் பொயு 934ல் கீழைச்சாளுக்கிய நாட்டில் ஏற்பட்ட ஒரு அரசுரிமைப் போட்டியில் தலையிட்ட கோவிந்தன், அங்கே நடைபெற்ற போரில் பங்கேற்றான்.

    இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டான் மூன்றாம் இந்திரனின் சகோதரனான மூன்றாம் அமோகவர்ஷனின் மகனும் பெரும் அறிவாளியும் திறமைசாலியுமான மூன்றாம் கிருஷ்ணதேவன். உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்தி ராஷ்ட்ரகூட அரசைக் கவர்ந்துகொண்டு தன் தந்தையான மூன்றாம் அமோகவர்ஷனை அரசனாக ஆக்கிவிட்டான் அவன்.

    வலுவான எதிரியான கிருஷ்ணனைத் தவிர அதிகார வர்க்கமும் மக்களுமே தனக்கு எதிராக இருப்பதைக் கண்ட கோவிந்தன், தன் மாமனாரான பராந்தக சோழன் வீட்டில் தன் மனைவியுடன் தஞ்சம் புகுந்தான். ‘கன்னரதேவன்’ என்று அழைக்கப்பட்ட மூன்றாம் கிருஷ்ணன், அதோடு இல்லாமல் கங்க நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு அரசனைக் கொன்று அந்த வம்சத்தின் கிளையைச் சேர்ந்த இரண்டாம் பூதுகன் என்பவனை கங்க நாட்டின் அரசனாக்கினான். அவனுக்கு தன் சகோதரியான ரேவக நிம்மடியைத் திருமணம் செய்து கொடுத்து கங்க அரசர்களோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டான் கிருஷ்ணன்.

    இதைப் பற்றிக் கவலைப்படாமல், தனது மாப்பிள்ளையான கோவிந்தன் இழந்த அரசைத் திரும்பப் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு பராந்தக சோழன் பொயு 939ல் ஒரு படையை ராஷ்ட்ரகூடர்களுக்கு எதிராக அனுப்பி வைத்தான். அப்போது அங்கே மூன்றாம் கிருஷ்ணன் அரியணை ஏறியிருந்தான். அவனுக்குத் துணையாக கங்க மன்னன் பூதுகன் ஒரு படையோடு வந்தான்.

    ராஷ்ட்ரகூட நாட்டில் பொயு 940ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தப் போரில் சோழர் படை தோல்வியுற்றது. தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்ட கிருஷ்ணன், தனது உள்நாட்டுப் பிரச்சனையில் சோழர்கள் தலையிட்டதை ரசிக்கவில்லை. சோழர்கள் மீது பெரும் பகை கொண்ட அவன், அவர்களைத் தோற்கடிக்கப் படை திரட்டத்தொடங்கினான்.

    இப்படி சோழநாட்டிற்கு வடக்கில் இருந்த அரசர்கள் பகைவர்களாக மாறிவிட்டதால், வட தமிழகத்தைப் பலப்படுத்த தன் மகனும் இளவரசனுமான ராஜாதித்தனின் தலைமையில் ஒரு பெரும் படையை திருமுனைப்பாடி நோக்கி அனுப்பினான் பராந்தக சோழன்.

    p1.jpg

    போர் ஏதும் தொடங்காத காலத்தில், இந்த வீரர்களைக் கொண்டு ஒரு பெரும் ஏரியைத் தன் தகப்பனான பராந்தக வீரநாராயணன் பெயரில் ஏற்படுத்தினான் ராஜாதித்தன். இதுவே வீரநாராயண ஏரி (வீராணம்) என்ற பெயரில் விளங்குகிறது. தவிர, திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்தி பல நற்செயல்களைச் செய்தான் ராஜாதித்தன். அங்கேயுள்ள பல கல்வெட்டுகள் இவற்றை உணர்த்துகின்றன.

    சுமார் ஒன்பது ஆண்டுகள் தாமதித்து, வலுவான படை ஒன்றைத் திரட்டிய பின் பொயு 949ம் ஆண்டு மூன்றாம் கிருஷ்ணன் அந்தப் படையோடு சோழநாட்டில் பகுந்தான். அவனுக்குத் துணையாக அவனுடைய மைத்துனன் இரண்டாம் பூதுகன் கங்க நாட்டுப் படையோடு வந்தான். சோழர் படையின் பலமும் அல்பசொல்பமானதல்ல. இரு படைகளும் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள தக்கோலம் என்ற இடத்தில் மோதிக்கொண்டன.

    thamizhnattu-porkalangal-ch15-1.jpg

    பல நாட்கள் கடுமையான போர் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் இதில் இறந்து பட்டனர். இரு தரப்புப் படைகளும் தங்களுடைய நிலையை விட்டுவிடாமல் மோதிக் கொண்டன. போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி இரு தரப்பிற்கும் சென்றது. ஒரு கட்டத்தில் யானை மீதிலிருந்து போர் செய்துகொண்டிருந்த ராஜாதித்தன் மேல் கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகன் அம்பு ஒன்றை விட்டு அவரைக் கொன்றான். இந்த நிகழ்வு மாண்டியா அருகில் உள்ள ஆதக்கூரில் கிடைத்த ஒரு கல்வெட்டில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள மொழிபெயர்ப்பு வாசகம்

    thamizhnattu-porkalangal-ch15-3.jpg

    மூலத்தில் உள்ள வாசகத்தை ‘பிசுகயே கள்ளனாகி’ என்று படித்த வரலாற்று அறிஞர் ப்ளீட், இதற்கு பூதுகன் யானை மேல் அம்பாரியில் வஞ்சகமாக மறைந்திருந்து ராஜாதித்தனைக் கொன்றான் என்று பொருள் கொண்டு அதையே பதித்தும் வைத்தார். ஆனால், அண்மைக்காலத்தில் இந்த வரிகளை ‘பிசுகயே களனாகி’ என்று சில அறிஞர்கள் படித்து யானை மேல் இருந்த அம்பாரியைப் போர்க்களமாக்கி பூதுகன் ராஜாதித்தரைக் கொன்றான் என்று கூறுகின்றனர்.

    பிரதான படைத்தலைவனும் இளவரசனுமாகிய ராஜாதித்தனை இழந்த சோழப்படைகள் ஊக்கம் இழந்து தோற்று ஓடத்தொடங்கின. வெற்றி அடைந்த ராஷ்ட்ரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் கிட்டத்தட்ட தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டான். அந்தப் பகுதிகளில் கிடைக்கும் அக்காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன.

    thakolam2.jpg

    இந்த வெற்றியைத் தனக்குத் தேடித்தந்த பூதுகனுக்கு சூத்ரகன், சாகர திரிநேத்ரன் ஆகிய பட்டங்களை கன்னரதேவன் வழங்கினான். தவிர, வனவாசி, பன்னீராயிரம், பெல்வோலா, பெலெகெரே, கிசுகாடு, பெகெநவாடு ஆகிய பகுதிகளையும் பூதுகன் பெற்றான். இந்தத் தோல்வியின் காரணமாக தொண்டை நாட்டை இழந்த சோழர்கள் மீண்டும் அதை மீட்க சில காலம் ஆயிற்று.

    எந்தத் தொண்டை மண்டலத்தை யானையின் மீதிருந்து அபராஜித பல்லவனைக் கொன்று ஆதித்த சோழன் வென்றானோ, அதே தொண்டை மண்டலத்தை ராஜாதித்த சோழனை யானை மீதிருந்து போர் புரிந்து கொன்று ராஷ்ட்ரகூடனான மூன்றாம் கிருஷ்ணன் வென்றது ஒரு விந்தைதான்.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-15/

    • Like 1
  13. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – பல்லவ பாண்டியப் போர்கள் .

    சோழர் வரலாற்றில் திருப்பம் தந்த - திருப்புறம்பியம்.

     

    p1.jpg

     

    இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த போர்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது இடையில் இருந்த சோழ நாடுதான். அதற்குக் காரணம் பெரும்பாலான போர்கள் சோழ நாட்டில் நடந்தவை. நாட்டின் படைபலமும் பொருளாதாரமும் பலவீனமாவதைக் கண்ட பாண்டிய அரசன் இரண்டாம் வரகுணன், இந்தப் போர்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டியே பல்லவ அரசன் நிருபதுங்கவர்மனோடு நட்புக் கொண்டான். ஆனால் விதி விளையாடியது.

    நிருபதுங்கவர்மனின் மூத்த சகோதரனான கம்பவர்மன், தனக்குக் கிடைக்கவேண்டிய அரசு தன்னுடைய தம்பிக்குச் சென்றதை விரும்பவில்லை என்று பார்த்தோம். நீண்ட நாட்களாக இருந்த வந்த இந்தப் புகைச்சலுக்கு கம்பவர்மனின் மகனான அபராஜிதவர்மன் முடிவு கட்டினான்.

    கம்பவர்மனுக்கும் கங்க நாட்டு அரசமகளான விஜயாவுக்கும் பிறந்தவன் அபராஜித வர்மன். அவன் துணையுடன் கம்பவர்மன், நிருபதுங்கவர்மனை போரில் தோற்கடித்தான். நிருபதுங்கனை அரியணையிலிருந்து அகற்றி பல்லவ நாட்டைக் கம்பவர்மன் கைப்பற்றியதாக அபராஜிதனின் வேலஞ்சேரிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அடுத்ததாக அபராஜித வர்மன் பொயு 870 வாக்கில் பல்லவ அரியணையில் ஏறினான். ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டைச் சீர்செய்யும் முயற்சியில் இறங்கினான் அபராஜிதன்.

    இதற்கிடையில் வரகுண பாண்டியன், ஒரு சிறு படையுடன் இடவை என்ற இடத்திற்கு வந்தான். இந்த இடவை எது என்பது பற்றி ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். சிலர் இது திருவிடைமருதூர் என்று கூறுகின்றனர். சிலரோ இது திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு இடம் என்று குறிக்கின்றனர். எப்படியிருந்தாலும் இது சோழ தேசத்தில் இருந்தது என்பது தெளிவு.

    முதலாம் வரகுண பாண்டியனின் காலத்தில் பல்லவ நாட்டின் தென்பகுதி வரை பாண்டிய ஆதிக்கம் நிலவியது என்பதைப் பார்த்தோம். அப்படிப் பாண்டியப் பேரரசின் கீழ் சோழ நாடு இருந்தபோது இந்த இடவையில் முதலாம் வரகுண பாண்டியன் தனக்காக ஒரு அரண்மனை கட்டியிருந்தான். தன்னுடைய பாட்டன் கட்டிய அரண்மனையில் தங்குவதற்காக இரண்டாம் வரகுணன் இடவைக்கு வந்தான்.

    அந்த சமயம், சோழ நாட்டில் விஜயாலய சோழனின் ஆட்சி முடிந்து அவன் மகனான ஆதித்த சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தான். தனது எதிரியான பாண்டியன், தன்னுடைய நாட்டில் படையோடு வந்து தங்கியிருப்பதை ஆதித்தன் விரும்பவில்லை. அதே சமயம் வலுவான பாண்டியர்களுடன் தன்னந்தனியாக போரில் இறங்கவும் அவன் விரும்பவில்லை. பல்லவ நாட்டின் ஒரு பகுதியாகவே சோழ நாடு அப்போது செயல்பட்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    இதனால், பல்லவ அரசனான அபராஜிதனுக்கு அவன் இந்தச் செய்தியைத் தெரிவித்தான். ஒரு காலத்தில் அபராஜிதனின் தந்தையான கம்பவர்மனுக்கு எதிரியாக இருந்தவர்களும் அவன் பகைவனான நிருபதுங்கனுடன் சேர்ந்து போரிட்டவர்களுமான சோழர்கள், அபராஜிதனிடம் நட்புக் கொண்டு உதவி கோரியது ஒரு விந்தையான விஷயம்தான்.

    தன்னுடைய நாட்டில் ஒரு பகுதியில், பரம வைரியான பாண்டியன் வந்து தங்கியிருந்ததை அபராஜிதனும் விரும்பவில்லை. நிருபதுங்கவர்மனின் நண்பன் வரகுணன் என்பதையும் அபராஜிதன் அறிந்திருந்தான். எனவே பாண்டியனைத் தோற்கடிக்க ஒரு படையை சோழநாட்டிற்கு அனுப்பி வைத்தான் அபராஜிதவர்மன். இந்தப் படைகளோடு சோழப் படைகளும் சேர்ந்து கொண்டன.

    திடுதிப்பென்று ஒரு கூட்டணிப் படை இடவை நோக்கி வருவதை அறிந்த வரகுணன் அதிர்ச்சியடைந்தான். அவர்களோடு போரில் இறங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளான வரகுணனால், பல்லவ சோழப் படைகளைச் சமாளிக்க இயலவில்லை. எனவே அவன் பாண்டிய நாடு நோக்கி தோற்று ஓட வேண்டியதாயிற்று. ஆனால், அவன் சும்மா இருக்கவில்லை. அவமான உணர்ச்சி உந்தித்தள்ள ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு மீண்டும் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.

    இம்முறை பல்லவ சோழப் படைகளுக்கு உதவியாக அபராஜிதனின் உறவினனான கங்க மன்னன் முதலாம் ப்ருதிவீபதி தானே ஒரு படையோடு வந்தான். இந்த மூவர் கூட்டணி வரகுண பாண்டியனை, மண்ணியாற்றின் கரையில் இருந்த திருப்புறம்பியம் என்ற இடத்தில் எதிர்கொண்டது. திருப்புறம்பியம் பழங்காலத்திலிருந்தே பிரபலமான ஒரு ஊர். அங்கே உள்ள சாட்சிநாதேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். அந்தக் கோவிலில் உள்ள கிளிஞ்சல்களால் ஆன திருவுருவத்தைக் கொண்ட விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டு.

    p5.jpg

                                                      (சாட்சிநாதேஸ்வரர் கோவில்)

    இப்படிச் சிறப்புகள் பெற்ற திருப்புறம்பியத்திற்கு வெளியே உள்ள ஒரு பொட்டலில் பொயு 880ல் நடைபெற்ற இந்தப் போர் மிகக் கடுமையானதாகும். இரு தரப்புப் படைகளும் அகோரமான யுத்தத்தைப் புரிந்தன. ரத்த ஆறு ஓடியது. ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்தில் இறந்து பட்டனர். இரண்டு தரப்பிலும் சேதம் அதிகமானதாக இருந்தது.

    இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப் படையின் மாதண்ட நாயக்கராகப் போரிட்டார். 
    அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில், தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண்பதற்காக பல்லக்கில் சென்றிருந்தார். 
    அங்கே போர் முகாமில் பல்லவ- சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததைக் கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயச் சோழன், 
    இரு வீரர்களின் தோளில் ஏறிக்கொண்டு வாளைச் சுழற்றிக்கொண்டு போரில் களமிறங்கினார்.இதனால் புத்துணர்வு அடைந்த சோழர் படை மீண்டும் போராடியது.

    image-2023-10-03-130941377.png

     

    வலுவானதாக இருந்தாலும், மூன்று அரசுகளின் படைகளை எதிர்க்க இயலாமல் பாண்டியப் படை தத்தளித்தது. ஒரு கட்டத்தில் கங்க மன்னன் ப்ருதிவீபதி இந்தப் போரில் கொல்லப்பட்டான். ஆனாலும் பல்லவ சோழப்படைகள் விடாமல் தாக்குதல் தொடுத்தன. முடிவில் பாண்டியப் படைகள் தோற்றுப் பின்வாங்கின. பல்லவ-சோழ-கங்கப் படைகள் வெற்றி பெற்றன. பலத்த சேதத்துடன் மீண்டும் இரண்டாம் வரகுண பாண்டியன் மதுரையை நோக்கிப் பின்வாங்கினான்.

    வரகுண பாண்டியனை கொள்ளிடம் ஆற்றைக் கடந்து விரட்டிச் சென்றார் முதலாம் ஆதித்தன் 
    அப்போது தொடர்ந்து மீன் கொடியுடன் ஓடினால், தனக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால், மீன் கொடியை சுருட்டிகொண்டு வரகுண பாண்டியன் ஓடியதால், 
    மீன் கொடியை சுருட்டிய இடம்தான் தற்போது மீன்சுருட்டி என்ற ஊராக விளங்குகிறது.

    image-2023-10-04-204123793.png

    இந்தப் போரைப் பற்றி கங்க மன்னன் இரண்டாம் ப்ருதிவீபதியின் உதயேந்திரம் செப்பேடுகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன. இந்தச் செப்பேடுகள் ஆதித்தனின் மகனான முதல் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கீழ் வெளியிடப்பட்டன.

    ‘ஶ்ரீபுரம்பியத்தில் நடைபெற்ற பெரும்போரில பாண்டிய அரசன் வரகுணனைத் தோற்கடித்து, தன் நண்பனான அபராஜிதனின் பெயரை உண்மையாக்கிய (அபராஜிதன் என்றால் தோற்கடிக்க முடியாதவன் என்று பொருள்) பிறகு வீரனான ப்ருதிவீபதி தன் உயிரைத் தியாகம் செய்து இந்திரனின் இருப்பிடமான சொர்க்கத்தை அடைந்தான்.’

    போரில் இறந்த ப்ருதிவீபதிக்கு அபராஜிதவர்ம பல்லவன் பள்ளிப்படைக் கோவில் ஒன்றைக் கட்டியதாகவும், அது திருப்புறம்பியத்தில் இருப்பதாகவும் போர் நடந்த இடத்திற்கு உதிரப்பட்டி என்ற பெயர் உள்ளதாகவும் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். தவிர கச்சியாண்டவன் கோவில் என்ற இன்னொரு பள்ளிப்படை இருப்பதாகவும், அது ஒரு பல்லவ அரசனின் நடுகல் இருந்த இடம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

    thamizhnattu-porkalangal-ch14-3.jpg

                                (போரின் சாட்சியாக நிற்கும் பள்ளிப்படைக் கோவில் )

    திருப்புறம்பியம் போரில் அபராஜித வர்மன் வெற்றிபெற்றாலும் அவனுடைய தரப்பில் நேர்ந்த சேதமும் கொஞ்ச நஞ்சமல்ல. ப்ருதிவீபதியை இழந்தது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே தொடர்ந்து நடந்த போர்களால் பலவீனமடைந்திருந்த பல்லவநாட்டை மேலும் தளரச் செய்தது இந்தப் போர். அதன் காரணமாக சோழநாட்டின் பல பகுதிகளை ஆதித்த சோழனுக்கு சுதந்தரமாக ஆட்சி செய்ய அபராஜிதன் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் இருந்து அபராஜிதனின் கல்வெட்டுகள் சோழ நாட்டில் காணக்கிடைக்கவில்லை.

    குறைந்த அளவு சேதத்தோடு தப்பித்த ஆதித்தன், அடுத்த சில ஆண்டுகளில் தன்னுடைய படைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினான். அதன் பின், பல்லவ நாட்டின் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்திய ஆதித்த சோழன், அபராஜிதன் மீது போர் தொடுத்தான். பலவீனமான பல்லவப் படைகளால் புத்துணர்ச்சி பெற்ற சோழர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன் வரை நண்பனாக இருந்த அபராஜிதனை, போரில் கொன்று பல்லவ நாட்டை தங்களுடன் இணைத்துக்கொண்டான் ஆதித்தன். இதனால் ‘தொண்டை நாடு பரவிய சோழன்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். பல்லவர்களின் பரம்பரை அத்தோடு முடிவுக்கு வந்தது. பலவீனமான நிலையில் இருந்த பாண்டிய அரசின் ஆதிக்கமும் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மங்கியே போனது. மாறாக சோழப்பேரரசு உன்னத நிலையை அடைந்தது.

    இப்படியாக, பிற்காலச் சோழப்பேரரசுக்கு அடிகோலிய முக்கியமான திருப்பம், திருப்புறம்பியத்தில் நடந்தது. அந்த வகையில் தமிழக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இந்தப் போரைச் சொல்லலாம்.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-14/

    டிஸ்கி :

    அமரர் திரு. கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனில் இச்சம்பவத்தினை மிக அழகாக சொல்லியிருப்பார்.
    தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழ மன்னனை திருப்புறம்பயம் போரில் இறக்கியது, "எவ்வளவு பெரிய தவறு என்று பல்லவ மன்னன் அப்பொழுது சிறிதும் சிந்திக்கவில்லை. 
    இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது. விஜயாலயனும், போரின் இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் 
    ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவு கூடக் காணவில்லை. இப்போருக்கு பின் பல்லவ மன்னனை ஆதித்த சோழன் போரில் வென்று 
    சோழ அரசை தனியரசாக நிறுவினான். தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தவர் விசயலாய சோழரே ஆவார். 
    அரசியல் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வே உதாரணமாகும். 

    • Like 1
  14. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #13 – பல்லவ பாண்டியப் போர்கள் தெள்ளாறு , குடமூக்கு (கும்பகோணம்)

    thamizhnattu-porkalangal-ch13.jpg

    மிகச்சிறிய வயதிலேயே அரியணை ஏறிய நந்திவர்ம பல்லவ மல்லன், தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே அதிக காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகிறது.

    தன்னுடைய ஆட்சிக்காலத்தின் ஆரம்பப் பகுதியில் உட்பகைவர்களாலும், வெளியிலிருந்து தொல்லை கொடுத்த எதிரிகளாலும் சிக்கல்களைச் சந்தித்தாலும் தன்னுடைய தளபதியான உதயசந்திரனின் உதவியால் அவற்றைச் சமாளித்து நிலையான ஆட்சியை பல்லவ நாட்டில் அவனால் ஏற்படுத்த முடிந்தது.

    ஆட்சியை ஸ்திரப்படுத்திய பிறகு நாட்டின் நலனில் கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல் ஆன்மிகப்பணியிலும் அவன் ஈடுபட்டான். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரின் சீடனாகிய நந்திவர்மன், பரமவைஷ்ணவனாகத் திகழ்ந்தான்.

    ‘மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்
    தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி’

    என்று தன்னுடைய பாசுரங்களில் திருமங்கையாழ்வார் நந்திவர்ம பல்லவனைக் குறிப்பிட்டுப் பாடுகிறார். காஞ்சியிலுள்ள பரமேஸ்வர விண்ணகரம், பழையாறை நந்திபுர விண்ணகரம் என்று பல விஷ்ணு கோவில்களுக்குத் திருப்பணி செய்தான் நந்திவர்மன். காசக்குடிச் செப்பேடுகள் இவனை ‘ஹரி சரணபரன்’ என்றும் தண்டன் தோட்டச் செப்பேடுகள் ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் தலை வணங்காதவன்’ என்றும் குறிப்பிடுகின்றன.

    அதே சமயம், பாண்டிய நாட்டில் ராஜசிம்ம பாண்டியனுக்கு அடுத்தபடியாக அவனுடைய மகனான பராந்தக நெடுஞ்சடையன் பொயு 765ல் அரியணை ஏறினான்.

    ‘பரமவைஷ்ணவன் தானாகி நின்றிலங்கும்
    மணி நீண்முடி நிலமன்னவன் நெடுஞ்சடையன்’

    என்று ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுவதிலிருந்து இவனும் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றியவன் என்று அறியலாம். ஆனைமலை நரசிம்மர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உட்பட பாண்டிய நாட்டில் பல குடைவரைக் கோவில்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டன.

    பெரும் வீரனான நெடுஞ்சடையன், முதலில் தன்னுடைய கவனத்தைக் கொங்கு நாட்டின் மீது செலுத்தினான். கொங்கு தேசத்தை அவனுடைய தந்தையான ராஜசிம்ம பாண்டியன் ஏற்கெனவே கைப்பற்றியிருந்தாலும் அதியனின் வம்சத்தில் தோன்றிய அரசன் ஒருவன் அதை மீண்டும் கைப்பற்றி தன்னாட்சி செய்ய முயன்று கொண்டிருந்தான். ஆகவே நெடுஞ்சடையன் கொங்கு நாட்டின் மீது படையெடுக்க வேண்டியதாயிற்று.

    ‘காவிரி வடகரை ஆயிரவேலி அயிரூர் தன்னிலும்
    புகழியூரிலுந் திகழ்வேல் அதியனை
    ஓடுபுறங் கண்டவனொலியுடை மணித்தே
    ராடல் வெம்மா அவை உடன் கவர்ந்தும்’

    என்று ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் இந்தப் போர் வெற்றியைப் புகழ் பாடுகின்றன. ஆயிரவேலி அயிரூரில் கொங்கு அரசனோடு பாண்டியன் சண்டையிட்டபோது, அதியனுக்கு உதவியாக பல்லவன் நந்திவர்மன் தன் படையை அனுப்பி வைத்தான். இப்படிப்பட்ட திடீர்த் தலையிட்டுக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.

    அதியன் பல்லவனின் நண்பனாக இருந்திருக்கலாம் அல்லது கொங்கு நாட்டைவென்ற பிறகு பல்லவ நாட்டின் மீது நெடுஞ்சடையன் திரும்பக்கூடும் என்ற எச்சரிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதியனுக்கு உதவ வந்த பல்லவனையும் சேரனையும் பராந்தக நெடுஞ்சடையன் தோற்கடித்தான்.

    ‘பல்லவனும் கேரளனும் ஆங்கவர்க்குப் பாங்காகிப் பல்படையோடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து குடபாலும் குணபாலும் மணுகவந்து விட்டிருப்ப வெல்படையோடு மேற்சென்றங்கு இருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்து’

    என்று நெடுஞ்சடையன் தோற்கடித்தகாக ஶ்ரீவரமங்கலச் செப்பேடுகள் மேலும் குறிக்கின்றன.

    ஆனால், கொங்கு நாட்டு அரசனோடு ஏற்பட்ட போரில் எதிர்பாராத விதமாக பல்லவன் தலையிட்டதை பாண்டியன் ரசிக்கவில்லை என்பது தெளிவு. ஏற்கெனவே நீறுபூத்த நெருப்பாக இருந்த பல்லவ பாண்டியப் பகையை ஊதிவிட்டது போல ஆகிவிட்டது இந்தச் செய்கை. இதன் காரணமாக பல்லவன் இரண்டாம் நந்திவர்மனோடு பாண்டியன் நெடுஞ்சடையன் நேரடியாக மோதினான்.

    ‘நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக்
    கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையப்
    பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல்
    தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும்’
    (வேள்விக்குடிச் செப்பேடுகள்)

    நான்கு பெரும் படைகளோடு வந்த பல்லவ மன்னவனை மலர்சோலைகள் நிறைந்த பெண்ணாகடம் என்ற ஊரில் நெடுஞ்சடையன் சந்தித்தான். பல்லவனின் படைகள் அளவில் பெரியதாக இருந்தாலும் பாண்டியப் படைகளும் சளைக்காமல் சண்டையிட்டன. பாண்டியனின் மிகச்சிறந்த படைத்தலைவனான மாறன் காரி இந்தப் போரில் பங்குபெற்றான். கடுமையான இந்தப் போரில் பாண்டியர்களே வெற்றி பெற்றனர்.

    தற்போது பெண்ணாடம் என்று வழங்கப்படும் ஊர் இது இல்லை என்றும் காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு ஊர் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுவதால், இது தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஒரு ஊர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்தப் போர் பாண்டிய-பல்லவ நாட்டு எல்லையாக அப்போது விளங்கிய சோழ நாட்டில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு.

    அதியனை மட்டுமல்லாது, பல்லவர்களையும் தோற்கடித்து பெரும் புகழ் பெற்றான் பராந்தக நெடுஞ்சடையன். அவன் காலத்தில் தொடங்கிய பல்லவர்களின் மீதான பாண்டியர்களின் ஆதிக்கம், இரண்டாம் நந்திவர்மனின் மகனான தந்திவர்மனின் காலத்திலும் தொடர்ந்தது. ‘கொற்றவர்கள் தொழு சுழற்காற் கோ வரகுண மகராசன்’ என்று புகழப்பட்ட முதலாம் வரகுணன் காலத்தில் பெண்ணையாற்றங்கரை வரையிலான பல்லவ நாட்டின் பகுதி பாண்டியர் வசமிருந்தது.

    தந்திவர்மனின் மகனும் அடுத்து பல்லவ ஆட்சிப்பொறுப்பை ஏற்றவனுமான மூன்றாம் நந்திவர்மன், இந்தக் களங்கத்தை அழிக்க முனைந்தான். பாண்டியர் ஆதிக்கத்தை அகற்ற அவன் முயன்றபோது பாண்டிய அரசனாக ஶ்ரீமாற ஶ்ரீவல்லபன் பொறுப்பேற்றிருந்தான். பல்லவன் படையெழுச்சியைக் கண்ட ஶ்ரீமாறன் தன்னுடைய படைகளுடன் பல்லவ நாட்டிற்குள் புகுந்தான். தொண்டை நாட்டில் திண்டிவனம் அருகில் உள்ள தெள்ளாறு என்ற இடத்தில் பல்லவ பாண்டியப் படைகள் மோதின. பொயு 835-838 வாக்கில் இந்தப் போர் நடந்திருக்கவேண்டும்.

    thamizhnattu-porkalangal-ch13-1.jpg

    கோரமாக நடந்த இந்தப் போரில் இரு தரப்புப் படைகளும் பெரும் சேதத்தை அடைந்தன. முடிவில் நந்திவர்மன் வெற்றி பெற்றான். இதன் காரணமாக அவன் ‘தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்று புகழப்படுகிறான். தெள்ளாற்றில் தோற்று ஓடிய பாண்டியப் படைகளை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு என்ற இடங்களிலும் துரத்திச் சென்று விரட்டினான் நந்திவர்மன் என்று அவன் புகழைப் பாடும் "நந்திக்கலம்பகம்" குறிப்பிடுகிறது.

     

    ‘வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
    உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால்
    தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
    யார்வேந்தர் ஏற்பார் எதிர்’

    என்று இந்தப் போரை பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் பாடிப் புகழ்ந்திருக்கிறார். ஆகவே அக்காலத்தில் நடந்த மிக முக்கியமான போர்களில் ஒன்றாக தெள்ளாற்றுப் போரைக் கருதலாம்.

    nandi.jpg

                                         ( நந்திக்கலம்பக அரங்கேற்றம் )

    பல்லவர்களுடனான போரில் படுதோல்வி அடைந்து பாண்டிய நாடு திரும்பிய ஶ்ரீமாற பாண்டியனுக்கு உள்நாட்டிலும் தொல்லைகள் தொடங்கின. ஆட்சிக்குப் போட்டியாக வந்த மாயா பாண்டியனையும் அவனுக்குத் துணையாக வந்த இலங்கை அரசனையும் முறியடிப்பதில் கவனம் செலுத்தினான் பரச்சக்ர கோலாகலன் என்று அழைக்கப்பட்ட ஶ்ரீமாறன். ஒருவழியாக அவர்கள் இருவரையும் வென்று தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு, பல்லவர்களுடன் ஏற்பட்ட போரின் அவமானத்தைத் துடைப்பதில் மீண்டும் ஈடுபட்டான் அவன்.

    அச்சமயம், பல்லவ நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நடந்திருந்தது. பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் கம்பவர்மன், இளையவன் நிருபதுங்கவர்மன். இதில் நிருபதுங்கன், ராஷ்ட்ரகூட அரசனான அமோகவர்ஷனின் மகளான சங்காவின் மூலம் நந்திவர்மனுக்குப் பிறந்தவன். அதன் காரணமாகவோ என்னவோ, அடுத்த ஆட்சிப்பொறுப்பை நிருபதுங்கவர்மனுக்கு அளித்தான் நந்திவர்மன். இதை மூத்தவனான கம்பவர்மன் விரும்பவில்லை என்றாலும், தம்பியோடு ஆட்சிப்பொறுப்பில் சேர்ந்துகொண்டான்.

    இதைத்தவிர இன்னொரு முக்கியமான அரசியல் மாற்றமும் தமிழகத்தில் நடந்திருந்தது. இடைக்காலத்தில் பல்லவ பாண்டியப் பேரரசுகள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, சிற்றரசாக நீண்ட காலம் இருந்த சோழ நாட்டில் ஒரு புது ஒளி தோன்றியது.

    அந்த வம்சத்தைச் சேர்ந்த விஜயாலய சோழன், செந்தலையை ஆண்ட முத்தரையர்களை வென்று சோழ நாட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். அதை எதிர்த்துப் போர் புரிய வந்த கம்பவர்மனையும் அவன் தோற்கடித்து தன்னுடைய அரசை நிலைநிறுத்திக்கொண்டிருந்தான். ஆனாலும், அதற்கு மேல் அகலக்கால் வைக்க விரும்பாமல் தகுந்த சமயத்தை எதிர்நோக்கியிருந்தான்.

    இந்தக் காலகட்டத்தில்தான் ஶ்ரீமாற ஶ்ரீவல்லபபாண்டியன் பல்லவர்கள் மீது மீண்டும் படையெடுத்தான். வழக்கம்போல, இருநாட்டிற்கும் எல்லையில் இருந்த சோழநாட்டில்தான் பல்லவ பாண்டியப் படைகள் மோதிக்கொண்டன. தற்போது கும்பகோணம் என்று அழைக்கப்படும் குடமூக்கு நகருக்கு அருகில் மிக உக்கிரமான போர் நடந்தது.

    thamizhnattu-porkalangal-ch13-2.jpg

    இந்தப் போரில் நேரடியாக நிருபதுங்கவர்மன் பங்கு பெறவில்லை. ஆனால் பல்லவப் படைகளுக்குத் துணையாக சேரனும் சோழ அரசனான விஜயாலயனும் சேர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் பாண்டியப் படைகளின் வலிமையும் அல்பசொல்பமானதல்ல. குடமூக்குப் போரில் பாண்டியர்களே வெற்றி பெற்றனர்.

    ‘குடகுட்டுவர் குணசோழர் தென்கூபகர் வடபுலவர்
    அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன்
    களிறொன்றூ வண்குடந்தைக் கதிகாட்டி யம்புரசீலன்’

    என்று தளவாய்புரச் செப்பேடுகளும்,

    ‘கொங்கலர் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து
    வந்தெதிர்ந்த கங்கபல்லவ சோளகலிங்க மாகதாதிகள்
    குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கணை தொடைஞெகிழ்த்துப்
    பருதியாற்ற லொடுவிளங்கின பரச்சக்ர கோலாலனும்’

    என்று சின்னமனூர்ப் பெரிய செப்பேடுகளும் புகழ்கின்றன.

    thamizhnattu-porkalangal-ch13-3.jpg

    ( சின்னமனூர்ச் செப்பேடுகள் )

     

    அதாவது ‘வாசனைகள் நிரம்பிய மலர்கள் நிறைந்த குடமூக்கில் தன்னை வந்து எதிர்த்த கங்கர்கள், பல்லவர்கள், சோழர்கள், மாகதர்கள் ஆகிய அரசர்கள் குருதி வெள்ளத்தில் குளிக்கும்படி செய்தவனும் கூர்மையும் கொடுமையும் உள்ள அம்புகளை அந்தப் போர்க்களத்தில் செலுத்தி கதிரவனுக்கு இணையாக விளங்கியவனுமான பரச்சக்ர கோலாகலன்’ என்று புகழ்கின்றன சின்னமனூர்ச் செப்பேடுகள்.

    இப்படிக் கொடூரமாக நடந்த இந்தப் போரில் ஶ்ரீமாறன் வெற்றி பெற்றதை பல்லவ நிருபதுங்கவர்மனின் பாகூர்ச் செப்பேடுகளும் ஒப்புக்கொள்கின்றன. ‘பாண்டியனிடம் தோல்வியுற்ற பல்லவர் படை’ என்று அது குறிப்பிடுவதால், குடமூக்கில் ஏற்பட்ட தோல்வியையே அது குறிப்பதாகக் கொள்ளலாம்.

    image-2023-09-30-202208453.png

    ஆனால் விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. பல்லவப் படைகள் மீண்டும் ஒன்றுகூடி பாண்டியர்களோடு மோதின. இந்தப் போர் நடந்தது அரிசிலாற்றங்கரையில். இம்முறை நிருபதுங்கவர்மனே நேரடியாக ஹோதாவில் இறங்கினான். ஏற்கெனவே ஒரு கடும் போர் செய்து சளைத்திருந்த பாண்டியப் படைகளால் இம்முறை பல்லவப் படைகளை சமாளிக்க இயலவில்லை. அரிசிலாற்றுப் போரில் பல்லவப்படைகள் வெற்றி பெற்றன. ஶ்ரீமாற பாண்டியன் தோல்வியோடு பாண்டியநாடு திரும்பினான்.

    அடுத்ததாக பொயு 862ல் ஶ்ரீமாற பாண்டியனின் மகன் இரண்டாம் வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டில் அரசுரிமை அடைந்தான். ‘பிள்ளைப் பிறைச் சடையணிந்த பினாகபாணி எம்பெருமானை உள்ளதில் இருத்தி உலகங்காக்கின்றவன்’ என்று குறிப்பிடப்படும் இரண்டாம் வரகுணன் பெரும் சிவபக்தன்.

    தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த பல்லவ பாண்டியப்போர்களைத் தவிர்க்க விரும்பிய அவன் நிருபதுங்கவர்மனோடு நட்புக்கொண்டான். தொண்டை நாட்டிலுள்ள திருவதிகை வீரட்டானத்தில் உள்ள நிருபதுங்கவர்மனது பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் இரு அரசர்களுக்கும் இருந்த நட்பு தெளிவாகிறது. இந்த நட்புறவின் மூலம் தமிழகத்தில் அமைதி திரும்பும் என்று கனவு கண்டான் அவன்.

    வரகுணனின் கனவு பலித்ததா ?

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-13/

    • Like 1
  15. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள் - நாதன் கோயில்

    thamizhnattu-porkalangal-ch12.jpg

    ( இரணியவர்மனை இறைஞ்சும் பல்லவ அதிகாரிகள் – காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பம்.. )

    பொயு 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர் என்பதையும் அதனால் தமிழகத்தில் அமைதி நிலவியது என்பதையும் பார்த்தோம்.

    இரண்டு அரசுகளுக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவு இதற்குப் பேருதவி புரிந்தது. கோ சடையன் ரணதீரன், தனக்குப் பல்லவ அரசகுமாரி மூலம் பிறந்த மகனுக்கு பல்லவ அரசனான ராஜசிம்மனின் பெயரை வைக்குமளவிற்கு இரு அரசுகளும் நெருக்கமாக இருந்தன. ஆனால் இந்த அமைதி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.

    ராஜசிம்ம பல்லவனுக்குப் பிறகு பல்லவ அரியணையில் ஏறிய இரண்டாம் பரமேஸ்வரவர்மன், சாளுக்கியர்களின் தாக்குதலை மீண்டும் சந்திக்க நேரிட்டது. சாளுக்கிய இளவரசனான இரண்டாம் விக்கிரமாதித்தன், தன்னுடைய முப்பாட்டன் முதலாம் விக்கிரமாதித்தனைப் போலவே பல்லவர்கள் மீது பழிதீர்க்க அடங்கா ஆர்வத்துடன் காத்திருந்தான். இரண்டாம் பரமேஸ்வரன் அரியணை ஏறியவுடன், கங்கர்கள் துணையுடன் பல்லவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் தோற்கடித்தான்.

    இந்தத் தோல்விக்கு எதிர்வினையாக சிறிது காலத்திற்குப் பிறகு, பரமேஸ்வரவர்மன் கங்கர்கள் மீது படையெடுத்தான். விளிந்தை என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கங்க அரசன் ஶ்ரீபுருஷனால் அவன் கொல்லப்பட்டான். ‘தன்னுடைய வெண்கொற்றக்குடையையும் உக்ரோதயம் என்ற ஆபரணத்தையும் காடுவெட்டி இந்தப் போரில் இழந்தான்’ என்று கங்கர்களின் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

    இப்படி அகாலத்தில் பல்லவ அரசன் இறந்துபட்டதால், அடுத்த அரசன் யார் என்ற குழப்பம் பல்லவ நாட்டில் ஏற்பட்டது. பரமேஸ்வர வர்மனுக்கு சித்திரமாயன் என்ற மகன் இருந்தான். ஆனால் என்ன காரணத்தாலோ, அவனை அடுத்த அரசனாக நியமிக்க பல்லவ அதிகாரவர்க்கம் விரும்பவில்லை. வேறொரு அரசனைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

    பல்லவ அரசனாக இருந்த சிம்மவிஷ்ணுவிற்கு பீமவர்மன் என்ற சகோதரன் இருந்தான். சிம்மவிஷ்ணு காலத்தில் பீமவர்மனின் குடும்பம் இடம் பெயர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து வந்தனர். பீமவர்மனின் வம்சத்தில் வந்த இரணியவர்மனை ‘மூலப்பிரகிருதியாரும் அமைச்சர்களும்’ கண்டனர். பல்லவ அரசுப் பொறுப்பை ஏற்குமாறு இரணியவர்மனை அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் இரணியவர்மன் ஆட்சியை ஏற்க மறுத்துவிட்டான். தங்கள் முயற்சியில் மனம் தளராத முதல் அமைச்சர் தரணிகொண்ட போசரும், காடக முத்தரையரும் ஏனைய அதிகாரிகளும் இரணியவர்மனின் மகன்களில் ஒருவரை பல்லவ அரசுக்குத் தருமாறு கோரினர்.

    இரணியவர்மனும் தன்னுடைய நான்கு மகன்களை அழைத்து இந்தக் கோரிக்கையைத் தெரிவித்தான். ஆனால் அவனுடைய முதல் மூன்று மகன்களான ஶ்ரீமல்லன், இரணமல்லன், சங்கிராம மல்லன் ஆகியோர் இரணியவர்மனைப் போலவே பல்லவ அரசுப் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் நான்காவது மகனும் பன்னிரண்டே  வயதானவனுமான பல்லவமல்லன், தான் பல்லவ அரசனாக சம்மதம் தெரிவித்தான்.

    இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த தரணி கொண்ட போசரும் மற்ற அரசு அதிகாரிகளும் பல மலைகளையும் கடலையும் தாண்டி அவனை காஞ்சி அழைத்து வந்தனர். நந்திவர்மன் என்ற அபிஷேகப் பெயருடன் பல்லவமல்லன் பல்லவ அரசனாகப் பொறுப்பேற்றான். இந்த விவரங்கள் எல்லாம் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

    thamizhnattu-porkalangal-ch12-1.jpg

                                                          ( வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு )

    தனக்குக் கிடைக்கவேண்டிய அரசு வேறொருவனுக்குச் சென்றதைக் கண்ட சித்திரமாயன் ஆத்திரம் அடைந்தான். ஆனால் பெருவாரியான அதிகாரவர்க்கமும் பொதுமக்களும் அவனுக்கு எதிராக நின்றதால், சித்திரமாயனால் ஏதும் செய்ய இயலவில்லை. ஆகவே, அவன் தன்னுடைய உறவினனான பாண்டிய அரசன் ராஜசிம்ம பாண்டியனைச் சரணடைந்தான். சித்திரமாயனுக்குப் பல்லவ அரசைத் திரும்ப அளிப்பதாக உறுதியளித்த ராஜசிம்ம பாண்டியன், அதற்கான தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

    p8.jpg

    ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில நாட்களில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் நாதன் கோவில் என்று அழைக்கப்பட்டதும் சோழர் தலைநகர்களில் ஒன்றான பழையாறையின் ஒரு பகுதியாக விளங்கியதுமான நந்திபுர விண்ணகரத்தைத் தரிசிக்க பல்லவ மல்லன் வந்திருந்தான். அந்த நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட ராஜசிம்ம பாண்டியன் ஒரு பெரும் படையுடன் சென்று கோட்டையை முற்றுகையிட்டான். எதிர்பாராத சமயத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வினால் நந்திவர்ம பல்லவமல்லன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

    அப்போது பல்லவர்களின் சேனாதிபதியாக இருந்தவன் ‘வில்வலம்’ என்ற ஊருக்கும் வேகவதி ஆற்றுக்கும் தலைவனாக இருந்தவனும் ‘பூசான்’ என்ற மரபில் பிறந்தவனுமான உதயசந்திரன். பெரும் வீரனும் அறிவாளியுமான உதயசந்திரன், தன்னுடைய அரசன் முற்றுகையில் சிக்கிக்கொண்டதை அறிந்த பிறகு ஒரு பெரும் படையுடன் விரைந்து வந்தான்.

    image-2023-10-02-111820715.png

                          ( நந்திபுரவிண்ணகரம் )

    பாண்டியர்களின் படையை பின்னாலிருந்து பல்லவப் படைகள் தாக்கின. அதே சமயம் கோட்டைக்குள் இருந்து வெளியே வந்த நந்திவர்மனும் தன்னுடன் வந்த படை வீரர்களைக் கொண்டு பாண்டியப் படைவீரர்களைத் தாக்கினான். இப்படி இரு புறமும் தாக்கப்பட்டதால் திக்குமுக்காடிய பாண்டியப் படை சிதறி ஓடியது. நந்திவர்மனும் விடுவிக்கப்பட்டான்.

    ஓடிய பாண்டியப் படைகளை பல்லவப் படைகள் துரத்தின. இரு தரப்பினரும் பாண்டிய நாட்டு எல்லையான புதுக்கோட்டைப் பகுதியில் பல இடங்களில் மோதிக்கொண்டன. இந்தப் போர்களைப் பற்றி இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன

    ‘நந்திபுரக் கோட்டையில் எதிரி மன்னர்களால் நந்திவர்மன் முற்றுகையில் அகப்பட்டதைக் கேள்விப்பட்ட உதயசந்திரன் எதிரிகளில் படையில் காலனைப் போல ஊடுருவினான். நிம்பவனம், சூதவனம், சங்கிரகிராமம், மண்ணைக்குறிச்சி, நெல்வேலி, சூரவழுந்தூர் ஆகிய இடங்களில் பல்லவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தான்’ என்று அந்தச் செப்பேடுகளில் உள்ளது.

    thamizhnattu-porkalangal-ch12-3.jpg

    பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடுகள் இந்தப் போர்களின் விவரங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன.

    ‘மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக்
    கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்துக்
    கறுவடைந்த மனத்தவரைக் குறுமுடைவாய்க் கூர்ப்பழித்து
    மன்னிக்கிறுச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து
    மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப்
    பூவலூர்ப் புறங்கண்டும்
    கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார்
    கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும்
    சேவ….கூடாத பல்லவனைக் குழும்பூருட் டேசழிய
    எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும்
    தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும்’

    அதாவது மதங்கொண்ட யானையைப் போல எதிரிகளின் படைக்குள் ஊடுருவி பெருமை பொருந்திய வேலை ஏந்தி எதிர்த்தவர்களை எல்லாம் நெடுவயல் என்ற ஊரில் அழித்து, கோபம் கொண்ட மனத்தவர்களை குறுமடை என்ற இடத்தில் சந்தித்து அவர்களில் பெருமையையும் வீரத்தையும் அழித்து, மன்னிக்குறிச்சி, திருமங்கை ஆகிய ஊர்களில் எதிரிகளில் வலிமையை அழித்து, பகைவர்களுடைய கடல் போன்ற சேனையை பூவலூரில் தோற்று ஓடச்செய்து, வளைந்த பெரும் மதில் சுவர்களையும் ஆழமான அகழிகளையும் கொண்ட கொடும்பாளூரில் எதிரிகளில் யானைகளையும் குதிரைகளையும் ஒளி பொருந்திய வேலினால் கைக்கொண்டு, தன்னுடன் இணக்கமாகச் செல்லாத பல்லவனின் ஒளியை குழும்பூரில் மங்கச்செய்து, எண்ணிக்கையில்லாத யானைகளையும் குதிரைகளையும் இன்னும் பல போர்த்தளவாடங்களையும் கவர்ந்து பகைவர்களின் பெருமையை பெரியலூரில் அழித்து வெற்றியடைந்தான் ராஜசிம்ம பாண்டியன் என்று அந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

    அதெப்படி பல்லவர் பாண்டியர் என்ற இருதரப்பும் வெற்றியடைந்ததாகச் சொல்லிக்கொள்ள முடியும்? சற்று கூர்ந்து ஆராய்ந்தால், இங்கே குறிப்பிடப்பட்ட ஊர்களில் மண்ணிக்குறிச்சியைத் தவிர மற்ற ஊர்கள் எல்லாம் உதயேந்திரம் செப்பேட்டிலும் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் வேறுபடுவதைக் காணலாம்.

    p9.jpg

     ஆக நந்திபுர வெற்றியைத் தொடர்ந்து பல்லவ பாண்டியப் படைகள் மேற்குறிப்பிட்ட  ஊர்கள் அனைத்திலும் போர் புரிந்திருக்கின்றன. அதில் சில இடங்களில் பல்லவர்களுக்கும் சில இடங்களில் பாண்டியர்களுக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. இதில் மண்ணிக்குறிச்சி என்பது மணக்குடி என்ற ஊர் (அறந்தாங்கியின் அருகில் இருப்பது) நிம்பவனம் என்பது வேப்பங்காடு, சூதவனம் என்பது கோவிலூர், சங்கரகிராமம் என்பது சங்கரனார் குடிக்காடு என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இப்படிப் பல இடங்களில் போர் நடந்தாலும் முடிவில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிராவில்’ இந்தச் சுற்று முடிந்ததாகவே நாம் கருதலாம். இந்தப் போர்களில் ஒன்றில் ‘அல்லிமலர் இதழ்போல் ஒளிர்ந்த தன் வாளால் சித்திரமாயனையும் மற்றும் பலரையும்’ உதயசந்திரன் கொன்றான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

    ஆகவே, தனக்குப் போட்டியாக இருந்த சித்திரமாயன் இறந்ததால், நந்திவர்மன் தனது அரசை நிலைப்படுத்திக்கொண்டான். ஆகவே ஒரு வகையில் பல்லவர்களுக்கு இது வெற்றிதான். பல்லவ பாண்டிய எல்லைகள் இந்தப் போர்களினால் அதிகம் மாற்றம் அடையவில்லை. ஆயினும் இந்தக் காலகட்டத்தில் தோன்றிய பல்லவ பாண்டியப் பகை சில ஆண்டுகள் நீடித்து மேலும் பல போர்களுக்கு வழிவகுத்தது.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-12/

    டிஸ்கி :

    // பல்லவ அரசனாக இருந்த சிம்மவிஷ்ணுவிற்கு பீமவர்மன் என்ற சகோதரன் இருந்தான். சிம்மவிஷ்ணு காலத்தில் பீமவர்மனின் குடும்பம் இடம் பெயர்ந்து தென்கிழக்கு ஆசியாவில் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து வந்தனர். //

    அது எந்த தென்கிழக்கு ஆசிய நாடு ..? எனக்கு தெரிந்து அது கம்போடியாவாகத்தான் இருக்க முடியும். வர்மன் என்ற பல்லவர் பெயருக்கும் கம்போடிய அரசர்கள் பெயர்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது போல் தெரிகிறது. கள உறவுகளின் கருத்து என்ன ? ரெல் மீ..

    • Like 1
    • Thanks 1
  16. 2 hours ago, நன்னிச் சோழன் said:

    இதில் ஒரு இடத்தில் அதியமான் கோட்டை உள்ளதாகக் கூறியுள்ளார் எழுத்தாளர்... மெய்யில் அது இன்னமும் உருப்படியாக உள்ளதா? இவர் கூறியுள்ளது உண்மையா என்பது குறித்து த.நா. சேர்ந்த ஆரேனும் விளக்குவீர்களா?

    அதியமான் கோட்டை ஒர் ஊர். அவ்வூரில் சில வரலாற்று எச்சங்கள் தான் உள்ளன.

     

    2 hours ago, நன்னிச் சோழன் said:

    இதே போல், இன்னொரு சமர்க்களம் ஒன்று பற்றி நான் சின்ன வயதில் வாசித்துள்ளேன். அது எதுவென ஞாபகமில்லை. அச்சமர்க்களத்தில் தமிழர்கள் "கல்லெறி கவண்" மூலம் மதில் மேல் பாறைகளை எறிந்தனர் என்பதாகும். அது எதுவெனத் தெரியவில்லை.

    ஆனால் பெருங்குறையொன்று என்னவென்றால், எந்தவொரு குறிப்பிலும் எப்படியான வியூகங்களில் அணிவகுத்திருந்தனர் என்றோ, அல்லது எப்படிப்பட்ட படைக்கலங்கள் மற்றும் கவசங்களைப் பயன்படுத்தினர் என்பது பற்றி எங்கும் பதிந்திருக்காது முன்னோர் செய்தது வேதனையானதாகும். படைஞர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படவில்லை சரியாக!

     

    இரும்பு மண்ணிலிருந்து பிரித்து எடுத்த பகுதி தகடூர் என பல அறிஞர்கள் கருதுகின்றனர். உலோகத் தகட்டை உருவாக்கிய இடம் என்பதால் தகடூர் எனப் பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

    மேலும், உலோகங்களையும் தயாரிப்பதோடு, அவற்றைப் பயன்படுத்தி வீரர்களின் உதவியின்றி செயல்படும் தானியங்கி இயந்திரங்களையும், பொறிகளையும், உருவாக்கி சேரல் இரும்பொறை தனது கோட்டை முற்றுதலின் போது பயன்படுத்தியதாகத் தகடூர் யாத்திரை எனும் நூல் பாடல் குறிப்பிடுகிறது.

    மறனுடைய மறவர்க் கேறஇடன் இன்றி
    நெய்யோ டைஅவி அப்பிய எவ்வாயும்
    எந்திரப் பறவை இயற்றின நிறீஇக்
    கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும்
    வில்லுங் கணையும் பலபட பரப்பி
    பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
    என்றிவை பலவும் சென்றுசென் றெறியு
    முந்தை மகளிரை இயற்றிப் பின்றை
    எய்பெரும் பகழி வாயில் துக்கிச்
    சுட்டல் போயின் றாயினும் வட்டத்
    தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
    நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும்
    தாக்கரும் தானை இறும்பொறை
    பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே

    வீரர்களின் ஆற்றலைத் தேக்கிவைத்துப் பாயும் இயந்திரக் கல்லெறி பெரும் கவண், கணை எறி பொறி, சூடேற்றிய நெய்யை விசிறும் கலம், திருமால் கை ஆழி போல வட்டவடிவிலான எறியும் எரிபந்தம், என நவீனக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி முதலியவைகளின் முன்னோடிகள் கோட்டை தாக்குதலின்போது பயன்பட்டது பற்றிக் குறிக்கப்படுகின்றன.

    மேலும், தானே சென்று எதிரிகளை வதைத்துக் கொல்லும் இயந்திர பறவைகளைப் போரில் பயன்படுத்தினான் என, “எந்திரப் பறவை இயற்றின நிறீஇக்” என்ற தகடூர் யாத்திரை பாடல் வரி நமக்கு உணர்த்துகின்றது. அது மட்டுமல்லாது பெண்களைப் போல இயங்கும் பொம்மைகள் செய்து எதிரிகளை மயக்கி திணறடித்து, அவை வாயின் வழியே அம்பு எய்தி கொல்லும் எனக் குறிப்பிடுகிறது.

    இவ்வாறு பேராற்றலுடன் இயங்கிய தானியங்கி இயந்திரப் பறவைகளையும் தகடூர் கோட்டை முழுவதிலும் சேரல் இரும்பொறை அமைத்ததால், எதிரி வீரர்களைத் தினமும் அவை கொத்து கொத்தாகக் கொன்றன. இதனால் எதிரி வீரர்களின் மனைவிகள் தினமும் தீயில் பாய்ந்து உயிர் விட்டதைக் கண்டு சேரல் இரும்பொறையே மனமுடைந்ததாகப் பாடல் வரிகள் முடிகின்றது.

    https://www.heritager.in/articles/2315/

  17. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

    thamizhnattu-porkalangal-ch11.jpg

     

    தமிழகத்தை ஆண்ட அரசர்களில் வேளிர் குலத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு. இவர்கள் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சிற்றரசர்களாக சங்க காலத்தில் இருந்தனர் என்பது பல்வேறு இலக்கியங்கள் அளிக்கும் செய்தி. வேளிர்கள் யாதவ வம்சத்தினர் என்றும், அகத்தியர்தான் இவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தார் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    இந்த வேளிர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சேர நாட்டின் தென் பகுதியை ஆட்சி செய்த ஆய் வேளிர். சங்க காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களில் ஒருவனாக இந்த வம்சத்தில் வந்த ஓர் அரசன் குறிப்பிடப்படுகிறான். சிறுபாணாற்றுப்படை போன்ற இலக்கியங்கள் ஆய் வம்ச அரசர்களைப் பற்றிச் சிறப்புடன் பேசுகின்றன. பொதிகை மலைத்தலைவன் என்று ஆய் வேளிர்கள் குறிப்பிடப்படுவதிலிருந்து அவர்கள் தென்தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    இன்று கேரளாவில் வேணாடு என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரை ஆய் வம்சத்து அரசர்களின் ஆட்சி இருந்தது. இன்றைக்கும் அந்தப் பகுதியில் ஆய்குடி என்ற ஊர் இருக்கிறது. அதுவே ஆய் நாட்டின் தலைநகர் என்று சொல்வதுண்டு. மேற்குத் தொடர்ச்சி மலைகளே இந்நாட்டரசர்களுக்கு அரணாகவும் இருந்தது.

    மற்றொரு புறம் கடற்பகுதி. அங்கே இருந்த விழிஞம் போன்ற துறைமுகங்களும் இந்த அரசர்களின் வசம் இருந்தன. ‘ஆய்’ என்பது ஆயர் என்ற சொல்லிலிருந்து வருவதால் இவர்களும் யாதவ குலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அதற்கேற்ப விக்கிரமாதித்த வரகுணன் என்ற அரசன் அளித்த செப்பேடு ஒன்றில் வ்ருஷ்ணி குலத்தின் பெருமை நான்கு ஸ்லோகங்களில் கூறப்பட்டு, ஆய் குலத்தில் வந்த அரசர்கள் அந்த வ்ருஷ்ணி குலத்தோன்றல்கள் என்று புகழப்பட்டுள்ளது.

    சங்க காலத்திலிருந்தே இவர்கள் சேர அரசர்களின் சிற்றரசர்களாக இருந்தனர் என்றாலும் சில காலகட்டங்களில் இவர்கள் தன்னாட்சியும் செய்திருக்கின்றனர். சங்ககாலத்தைப் பொருத்தவரை ஆய் அண்டிரன் என்ற அரசன் இந்தப் பரம்பரையைச் சேர்ந்த சிறந்த அரசனாகப் புகழப்படுகிறான். புறநானூற்றுப் பாடல் ஒன்றில்,

    ‘வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
    தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
    பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே’

    வட திசையில் உள்ள இமயமும் தென் திசையில் இருக்கும் ஆய்குடியும் இல்லையென்றால் இந்த உலகம் தலைகீழாக மாறிவிடும் என்றெல்லாம் புகழப்படும் அரசு இவனுடையது. கடலோடியான தாலமியும் நெல்சிந்தா என்ற நீலகண்ட நகரத்திலிருந்து கன்னியாகுமரி வரைப்பட்ட நிலப்பகுதி இவர்களுடையது (ஆயோய்) என்று குறிப்பிட்டுள்ளார்.

    களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மூவேந்தர்களுடைய ஆட்சி அகன்ற போதிலும், ஆய் வேளிர்களின் வம்சம் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்ததாகவே தெரிகிறது. அதன் பின் தற்போதைய திருநெல்வேலி, நாகர்கோவில் மாவட்டங்கள் அடங்கிய பகுதி இவர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. களப்பிரர் ஆட்சியைத் தொடர்ந்து பாண்டியர்களின் ஆட்சி மதுரையில் ஏற்பட்டபோது, ஆய் வேளிருக்கும் பாண்டியர்களுக்கும் சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டன.

    நெடுமாற பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகனான கோச்சடையன் ரணதீரன் பாண்டிய அரசுக்கட்டில் ஏறினான். இவன் வீரம் மிக்கவன் என்பதையும் நெல்வேலியில் சாளுக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவன் என்பதையும் பார்த்தோம். தந்தையைப் போல சிறந்த சிவபக்தனாக இருந்தாலும், பாண்டியப் பேரரசின் விரிவாக்கத்தில் இவன் கவனம் செலுத்தினான். தென் பாண்டி நாட்டில் இவன் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றபோது அங்கே ஏற்கெனவே ஆட்சி செய்துகொண்டிருந்த ஆய் வேளிரோடு போர் புரிய நேரிட்டது.

    போரில் ஆய் வேளிரும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களிடமும் ஒரு பெரும் படை இருந்தது. இந்த இரண்டு அரசர்களுக்கு இடையே முதல் போர் மருதூர் என்ற இடத்தில் நடந்தது. பாண்டியர்களின் வம்சாவளியைக் குறிப்பிடும் வேள்விக்குடிச் செப்பேடுகள் ரணதீரனின் முதல் போராக மருதூர்ப் போரையே குறிப்பிடுகின்றன.

    ‘பொருதூருங் கடல்தானையை மருதூருண் மாண்பழித்து
    ஆய்வேளை அகப்பட எய்யென்னாமை எறிந்தழித்துச்
    செங்கொடியும் புதான்கோட்டுச் செருவென்றவர் சினந்தவிர்த்து’

    என்கிறது அச்செப்பேடுகள். இந்த வரிகளிலிருந்து ஆய் நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற ரணதீரன் அவர்களின் கடல் போன்ற படைகளை பல இடங்களில் தோற்கடித்தான் என்று தெரிகிறது. மருதூர் என்று இங்கே குறிப்பிடப்படும் ஊர் தற்காலத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்புடைமருதூராகவே இருக்கக்கூடும்.

    தென் பாண்டி நாட்டில் தன்னுடைய ஆட்சிப்பரப்பை விரிக்க வேண்டியே ரணதீரன், மருதூரில் ஆய் வேளிரைத் தோற்கடித்தது மட்டும் அல்லாமல், தொடர்ந்து அவர்களோடு போர் புரிந்தான். செங்கோடு அல்லது செங்கொடி, புதான் கோடு ஆகிய இரு இடங்களிலும் கூட பாண்டியப்படைகள் ஆய்வேளிரைத் தோற்கடித்தன. வேள்விக்குடிச் செப்பேடுகள் இங்கே குறிப்பிடும் செங்கொடி, தற்போது செங்கோட்டை என்று அழைக்கப்படும் ஊர். போலவே புதான்கோடு என்பது குமரிக்கு அருகே உள்ள அதங்கோடு என்ற ஊர்.

    தொல்காப்பிய காலப் புலவரான அதங்கோட்டு ஆசான் வாழ்ந்த ஊர் அது. ஆய் வேளிரோடு போரிட்டு இப்படித் தென் தமிழகம் முழுவதையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமை கோச்சடையன் ரணதீரனையே சேரும். இந்தக் காரணங்களால், ஆய் வேளிரின் ஆட்சிப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் சுருங்கிவிட்டது. பாண்டியப் பேரரசும் வலுவடைந்தது.

    இது ஒருபுறமிருக்க, பொதுப்பகைவனான சாளுக்கிய விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததாலோ என்னவோ பல்லவ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவியது. இது அவர்களுக்கிடையே ஏற்பட்ட மண உறவால் மேலும் வலுப்பட்டது. பல்லவ அரசகுமாரியை கோச்சடையன் ரணதீரன் மணந்துகொண்டான்.

    அடுத்தபடியாக தன்னுடைய ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்த ரணதீரனின் கவனம் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருந்த கொங்கு நாட்டின் மீது சென்றது. அப்போதைய கொங்கு நாடு கேரளத்தின் வடபகுதிகளையும் தென் கன்னடப்பகுதிகளையும் தன்னுள்ளே அடக்கியதாக இருந்தது. அங்கே ரணதீரன் பெற்ற வெற்றியைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடுகள் இப்படிப் புகழ்கின்றன.

    ‘கொங்கலரு நறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும்
    மங்கலபுரமெனும் மாநகருண் மகாரதரை எறிந்தழித்து’

    இங்கே மகாரதர் என்பதற்கு பெரும் தேர் வீரர் என்று பொருள். அப்படிப் பெரிய வீரர்கள் கொண்ட படை அங்கே யாரிடம் இருந்தது என்று பார்த்தால், தென் கன்னடப்பகுதியில் அக்காலத்தில் அலுபா என்ற வம்சத்தின் அரசர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்களுக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. பொயு 2ம் நூற்றாண்டிலிருந்து தென் கன்னடப் பகுதியில் அலூபா வம்சத்தினரின் ஆட்சி இருந்ததாகக் குறிப்புகள் உண்டு.

    p5.jpg

    சாளுக்கிய வம்சம் மேலெழுந்தபோது இவர்கள் சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்களுடைய தலைநகராக மங்கலபுரம் இருந்தது (தற்போதைய மங்களூர்). ரணதீரன் இந்த ஊரின் மீது படையெடுத்து அந்த அரசர்களை வென்றதைத்தான் வேள்விக்குடிச் செப்பேடுகள் இப்படிக் குறிப்பிடுகின்றன. “மதுர கருநாடகன்” என்ற சிறப்புப் பெயரும் கோச்சடையன் ரணதீரனுக்கு உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருந்த அலுபர்களுக்கும் அவர்களின் எதிரியான பாண்டியர்களுக்கும் பகைமை இருந்ததில் ஆச்சரியம் இல்லை. எப்படி சாளுக்கியர்களின் மற்றொரு சிற்றரசான கங்கர்கள் பல்லவர்களோடு பகைமை கொண்டு சாளுக்கியப் படைகளோடு சேர்ந்துகொண்டு தமிழகத்தைத் தாக்கினரோ அதே போன்று அலுபர்களும் செய்யக்கூடும் என்ற எண்ணத்தால் அதை முறியடிக்க மங்கலபுரத்தை ரணதீரன் தக்கியிருக்கக்கூடும்.

    மங்கலபுரம் என்பது தமிழகத்தில் திருச்சிக்கு அருகே இருக்கும் ஓர் ஊர் என்றும் அங்கே பாண்டியன் தோற்கடித்தது சாளுக்கியர்களையோ அல்லது அங்கே ஆண்ட வேறு ஒரு அரசனையோ என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், பெருவளநல்லூரில் தோற்றுச் சென்ற பிறகு கொங்குப் பகுதிக்கு எந்தச் சாளுக்கியப் படையும் வந்ததாக குறிப்பு ஏதும் இல்லை. தவிர மகாரதர்கள் என்று அழைக்கப்பட்ட பேரரசர்கள் யாரும் அங்கே அக்காலத்தில் ஆட்சி செய்ததாக தகவல் ஏதும் இல்லை. இக்காரணங்களால் அலுபா அரசர்களோடு நடந்ததே இந்தப் போர் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியதாக இருக்கிறது.

    மகாரதர் என்று அலுபர்களைக் குறிப்பிடுவதால் அவர்களது படையும் வலுவானதாகவே இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. மதுரையிலிருந்து மங்களூர் வரை படை திரட்டிச் சென்று அவர்களைத் தோற்கடித்து மேல் கொங்கு என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தென் கன்னட- வட கேரளப்பகுதிகளை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் பாண்டியன் ரணதீரன். இதன் விளைவாக அலுபா வம்சத்தினரின் கொடிகளிலும் நாணயங்களிலும் பாண்டியர்களின் மீன் சின்னம் இடம்பெற்றது என்று கருதுகிறார் வரலாற்று ஆய்வாளர் திரு. நாகசாமி.

    இப்படிப் பல்லவ-பாண்டிய அரசுகள் தமிழகம் முழுவதையும் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததாலும், அந்த இரண்டு அரசுகளுக்கும் இடையே சுமுக உறவு இருந்ததாலும் தமிழகத்தில் சில காலம் அமைதி நிலவியது. அது நீடித்ததா?

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-11/

    • Like 1
  18. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

    thamizhnattu-porkalangal-ch10.jpg

    எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி இடியின் ஓசையைப் போல பயமுறுத்தியது. வீரர்களின் உறையிலிருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல் போலக் கண்களைப் பறித்தன.

    ‘யானைகள் மேகக்கூட்டங்கள் நகர்வதைப் போல நகர்ந்து மழைக்காலத்தை நினைவூட்டின. உயரமான குதிரைப் படைகள் போர்க்களத்தில் நகர்ந்து வந்த காட்சி கடல் அலைகள் நகர்வதைப் போலத் தோற்றமளித்தது. அந்தக் குதிரைகளுக்கு இடையில் யானைகள் புகுந்து குழப்பம் விளைவித்தது, கடலில் திமிங்கிலம் போன்ற பெரும் உயிரினங்கள் செல்லும்போது ஏற்படும் சுழலை ஒத்திருந்தது. படைவீரர்கள் முழக்கம் செய்வதற்காக எடுத்த சங்குகள், கடலிலிருந்து கிளம்பிய சங்குகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருந்தது. கத்திகளும் கேடயங்களும் களத்தில் பறந்தன.’

    தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு அளிக்கப்படும் நேர்முக வர்ணனையைப் போல கூரம் செப்பேடுகளில் தரப்பட்டுள்ள போர் வர்ணனைதான் நாம் மேலே பார்த்தது. தமிழகத்தில் முதல் முதலாக, இவ்வளவு விரிவாகப் பதிவுசெய்யப்பட்ட இந்தப் போர் எங்கே நடந்தது ? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள சற்றே பின்னோக்கிச் செல்லவேண்டும்.

    சாளுக்கிய விக்கிரமாதித்தன், காஞ்சியை வென்று அதன் பின் உறையூர் வரை வந்து, பாண்டியர்களுடன் நெல்வேலியில் போரிட்டு, தோல்வியடைந்து மீண்டும் உறையூர் திரும்பினான் என்றும் அதன் பின் சாளுக்கிய நாடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தான் என்றும் பார்த்தோம். இந்தக் காலகட்டத்தில் காஞ்சியிலிருந்து வெளியேறிய பல்லவன் பரமேஸ்வரவர்மன், ஆந்திர நாடு சென்றிருந்தான். இரண்டாம் புலகேசியின் சகோதரனான குப்ஜ விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்ததையும் அவனே கீழைச் சாளுக்கிய வம்சத்தை ஸ்தாபித்தவன் என்பதையும் பார்த்தோம்.

    புலகேசியின் மறைவுக்குப் பிறகு, இந்த வம்சம் ஆந்திர நாட்டில் தன்னாட்சியை ஏற்படுத்தியது. இதை வாதாபிச் சாளுக்கியர்கள் விரும்பவில்லை. ஆகவே அவர்களுக்கு இடையே உரசல் மூண்டது. வலுவான படைபலத்தைக் கொண்ட விக்கிரமாதித்தனைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் தன்னிடமும் பெரும் படை ஒன்று வேண்டும் என்று புரிந்துகொண்ட பரமேஸ்வரவர்மன், இந்தப் பூசலைப் பயன்படுத்திக்கொண்டான்.

    ஆந்திர அரசிடம் உதவி கோரி அங்கிருந்து ஒரு படையை அழைத்து வந்தான். இந்தப் படையோடு பல்லவப் படைகளும் சேர்ந்து கொண்டன. விக்கிரமாதித்தன் தெற்கு நோக்கிச் சென்றிருப்பதை அறிந்த பரமேஸ்வரவர்மன், அவனைச் சந்திக்க தானும் தென் தமிழகத்தை நோக்கி விரைந்தான். சாளுக்கிய நாடு திரும்பிக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனின் படைகளும் பல்லவன் பரமேஸ்வரவர்மனின் படைகளும் உறையூருக்கு வடகிழக்கே கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ள பெருவளநல்லூர் என்ற இடத்தில் சந்தித்துக்கொண்டன.

    thamizhnattu-porkalangal-ch10-1.jpg

    அங்கே நடைபெற்ற போர் வர்ணனைதான் பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் இப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட வரிகளில் இந்தப் போர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    நெல்வேலிப் போரில் தோல்வியடைந்து சோர்வடைந்திருந்தாலும் சாளுக்கியப் படைகள் பல்லவர்களோடு வீரமாகப் போரிட்டன. இந்தப் போரைப் பற்றி கூரம் செப்பேடுகள் மேலும் கூறுவதாவது

    ‘போர் வீரர்கள் நாகம், திலக, புன்னாகம் போன்ற மரங்கள் காடுகளில் நிற்பதைப் போல அணி அணியாக நின்றனர். வீரர்கள் போரிட்டு களத்தில் வீழ்ந்து கிடந்த காட்சி காண்டாமிருகத்தால் முறிக்கப்பட்டு மரங்களும் செடிகளும் காடு எங்கும் வீழ்ந்து கிடந்ததைப் போல இருந்தது. வீரர்களின் விற்களில் இருந்து கிளம்பிய அம்புகளின் ஒலி, காட்டில் காற்றடிக்கும்போது கேட்கும் பேரொலியைப் போல இருந்தது. அம்புகள் வீரர்கள் இடையே வேகமாகப் பறந்து சென்றபோது அவற்றைப் பிடித்து ஒடித்து வீழ்த்தினர் சிலர். ஈட்டிகளும், அங்குசங்களும் குத்துவாட்களும் கதைகளும் வேல்களும் கேடயங்களும் போர்க்களமெங்கும் பறந்தன. யானைகள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டபோது அவற்றின் தந்தங்களால் ஒன்றையொன்று குத்திக்கொண்டு அவற்றை எடுக்க முடியாது தத்தளித்தன.

    ‘குதிரை வீரர்களின் வாட்கள் ஒன்றோடொன்று சண்டையிட்ட போது அவை பின்னிக்கொண்டு பிரிக்கமுடியாமல் நின்றன. வாளோடு வாள் சண்டையிடுவதில் பிரசித்தி பெற்ற வீரர்கள் எதிரிகளின் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு சண்டையிட்டனர். வீரர்களின் கதைகள் மோதும்போது பெரும் ஓசை கிளம்பியது. குருதியும் யானைகளின் மத நீரும் கலந்து நிலத்தின் மஞ்சள் ஆறாக ஓடியது. வீரர்கள், யானைகள், குதிரைகளுடைய தலைகள், கைகள், தொடைகள், பற்கள் ஆகியவை போர்க்களமெங்கும் சிதறிக்கிடந்தன.

    ‘இரண்டு படைகளும் முன்னும் பின்னும் ஓடிப் போர்புரிந்தன. ஆறாக ஓடிய குருதியின் மேல் பாலம் போன்று யானைகள் வீழ்ந்து கிடந்தன. அவற்றின் மேல் ஏறி வீரர்கள் போரிட்டனர். வெற்றியென்னும் அதிர்ஷ்ட தேவதை ஊஞ்சலைப் போல இரு தரப்புக்கும் இடையே மாறி மாறி ஆடினாள். போரில் இறந்த வீரர்கள் கையில் வாட்கள் அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். தங்கள் கடமையை நிறைவேற்றிய அவர்களின் உதடுகள் கடிக்கப்பட்ட நிலையிலும் கண்கள் திறந்து சிவந்திருந்தும் காணப்பட்டன. அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோ பொடிப்பொடியாகிக் கிடந்தன. ராட்சசர்களும் பேய்களும் குருதியைக் குடித்து கூத்தாடி மதிமயங்கின.’

    image-2023-09-30-203409589.png

    இப்படி இரு தரப்புக்கும் கடுமையாக நடைபெற்ற போரில் "அரிவாரணம்" என்ற பெயருடைய யானையின் மீதும் "அதிசயம்" என்ற பெயர் கொண்ட குதிரையின் மீதும் மாறி மாறி ஏறிச் சண்டையிட்டான் பல்லவன் பரமேஸ்வரவர்மன். அரிவாரணம் என்ற யானை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் ஆயிரம் யானைகள் பின் தொடர போர்க்களத்திற்குச் சென்றதாகவும் கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. அதிசயம் என்ற குதிரை இந்திரனுடைய குதிரையைப் போல மங்களகரமானது என்றும் ரத்தினக்கற்கள் சேர்த்து செய்த சேணத்தை உடையது என்றும் இச்செப்பெடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    பல நாட்கள் நடந்த இந்தப் போரில், புத்துணர்ச்சியோடு வந்த பல்லவப் படைகளைச் சமாளிக்க முடியாமல் சாளுக்கியப் படை தோல்வியடைந்தது. ஏழு லட்சம் படைவீரர்களோடு போர் புரிந்த விக்கிரமாதித்தன் படுதோல்வியடைந்து தனி ஆளாக கந்தையைப் போர்த்து கொண்டு ஓடி ஒளிந்தான் என்று கூரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

    எதிரிகளை அழித்துவிட்டு பகை அரசனின் மனத்திலிருந்த பயத்தையும் கவலையையும் போக்கிவிட்டு (மன்னித்துவிட்டு) அனைத்து திசைகளிலும் தன்னுடைய புகழைப் பரப்பிவிட்டு, ஏற்கெனவே அழகான தன்னுடைய உடலில் (அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக) எல்லா ஆபரணங்களையும் பரமேஸ்வரவர்மன் அணிந்துகொண்டான். அவனை வெற்றித்திருமகள் நன்றாகத் தழுவிக்கொண்டாள் என்றும் அச்செப்பேடுகள் புகழ்கின்றன.

    பரமேஸ்வரவர்மனின் மகனும் இரண்டாம் நரசிம்மன் என்ற பெயரில் அடுத்த பட்டமேற்றவனுமான ராஜசிம்ம பல்லவன் இந்தப் போரில் தந்தையோடு பங்கேற்றான். அதனால் தன்னை "ரணஜெயன்" என்று அழைத்துக்கொண்டான். நெல்வேலியிருந்து தோற்றோடிய விக்கிரமாதித்தனைத் தொடர்ந்து வந்த பாண்டியப் படைகளும் இந்தப் போரில் பங்கேற்றிருக்கவேண்டும். விக்கிரமாதித்தனுடைய மகனான விநயாதித்தனுடைய கேந்தூர் செப்பெடு ‘தமிழக அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்’ என்று குறிப்பிடுகிறது.

    இந்தப் போரைப் பற்றி பின்னால் வந்த பல்லவ அரசர்களும் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரச் செப்பேடுகள் ‘பரமேஸ்வரவர்மன் வல்லபனின் (விக்கிரமாதித்தனின்) படைகளை பெருவளநல்லூரில் நடந்த பெரும்போரில் முறியடித்தான்’ என்று உரைக்கிறது. மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட வேலூர்ப்பாளையச் செப்பேடுகள் ‘பரமேஸ்வரவர்மன் தனது பகைவர்களில் ஆணவத்தை அடக்கினன். சாளுக்கிய அரசனது பகை என்ற இருளை அழிக்கும் வீரனாக அவன் இருந்தான்’ என்கிறது.

    நரசிம்மவர்மனுக்கு அடுத்தபடியாக சாளுக்கியர்களைப் படுதோல்வி அடையச் செய்ததன் மூலம் பெரும் புகழைப் பெற்றான் பரமேஸ்வரன். இந்தக் காரணத்தால் சிறிது காலத்திற்கு படையெடுப்புகள் இல்லாமல் பல்லவ நாட்டில் அமைதி நிலவியது. ராஜசிம்ம பல்லவனின் ஆட்சிக்காலமும் பெருமளவு அமைதியாகவே இருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்தக் காரணத்தினால் கோவில் கட்டடக் கலை பல்லவ நாட்டில் பெருமளவு வளர்ச்சியடைந்தது.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-10/

    • Like 1
  19. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி (நெய்வேலி)

    thamizhnattu-porkalangal-ch09.jpg

     

    பொயு 642ம் ஆண்டு பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பல்லவப் படைகள் வாதாபி நகரை நிர்மூலமாக்கியதையும் அந்தப் போரில் இரண்டாம் புலகேசி கொல்லப்பட்டதையும் பார்த்தோம். நரசிம்மவர்ம பல்லவனுக்கு ‘வாதாபி கொண்டான்’ என்ற பெயரை அளித்த இந்தக் கடுமையான போரினால் பெரும் பின்னடைவைச் சந்தித்த சாளுக்கியப் பேரரசில் அதன்பின் சில ஆண்டுகள் பெரும் குழப்பம் நிலவியது.

    புலகேசியின் மகன், பெயரன், மருமகள் என்று அடுத்தடுத்து சில பலகீனமான அரசர்கள் அந்த அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தனர். பொயு 655இல் இரண்டாம் புலகேசியின் மகன்களில் ஒருவனான முதலாம் விக்கிரமாதித்தன் பட்டத்திற்கு வந்தான். அவனுடைய கல்வெட்டுகள் ‘விக்கிரமாதித்தன் தன் தந்தையின் ஆட்சியுரிமையை தன்னுடைய பலத்தால் அடைந்தான். மூன்று அரசர்களை வென்று தன் உரிமையை நிலைநாட்டினான்’ என்றெல்லாம் கூறுகின்றன. இவனும் தன் தந்தையைப் போலவே வீரனாகவும் வலிமை உடையவனாகவும் இருந்தான் என்பது இந்தக் குறிப்புகளால் தெரிகிறது.

    பல்லவர்களால் தங்கள் கோ நகரான வாதாபி அழிக்கப்பட்டது விக்கிரமாதித்தனின் மனதில் ஆறாத வடுவாக இருந்தது என்பது அவனுடைய பல கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது. பல்லவர்களின் செயலுக்குப் பழிதீர்க்க நினைத்த விக்கிரமாதித்தன் ஒரு வலுவான படையைத் திரட்டிக்கொண்டு தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

    இதற்கிடையில் பல்லவநாட்டிலும் ஆட்சி மாற்றங்கள் நடந்திருந்தன. நரசிம்மவர்மனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவனது மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் இரண்டு ஆண்டுகளிலேயே மறைந்துவிட, மகேந்திரனின் மகனான பரமேஸ்வரவர்மன் பொயு 670இல் அரியணை ஏறினான். அதே சமயத்தில் தென் தமிழகத்தில் பாண்டியப் பேரரசும் வலிமை அடைந்துகொண்டிருந்தது.

    தன்னுடைய பாட்டனாரைப் போல பெரும் படை ஒன்றை பரமேஸ்வரவர்மன் வைத்திருக்கவில்லை என்று தெரிகிறது. பெரும் கலையார்வம் கொண்ட பரமேஸ்வரவர்மன், கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்தினான். இந்த நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தன், பொயு 673 வாக்கில் பல்லவ நாடு நோக்கிப் படையெடுத்தான்.

    சாளுக்கியப் பெரும் படையொன்று காஞ்சியை அணுகுவதை அறிந்துகொண்ட பரமேஸ்வரவர்மன் நாம் முன்பே பார்த்த பல்லவர்களின் போர் வியூகத்தையே இப்போதும் பயன்படுத்தினான். விக்கிரமாதித்தனை எதிர்க்கக்கூடிய படை வலிமை இல்லாததால், தன் தலைநகரான காஞ்சியை விட்டு நீங்கி வெளியே சென்றுவிட்டான் பல்லவன். எதிர்ப்பேதும் இல்லாமல் எளிதாகக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான் விக்கிரமாதித்தன்.

    thamizhnattu-porkalangal-ch09-1.jpg

          ( கத்வல் செப்பேடுகள். எபிக்ராபியா இண்டிகா – தொகுதி 10 )

    ‘ஶ்ரீவல்லப விக்கிரமாதித்தன், நரசிம்மவர்மனின் புகழை அழித்தான், மகேந்திரனின் வலிமையை முறித்தான், ஈஸ்வரனை (பரமேஸ்வர வர்மனை) தன் அரசியல் அறிவால் வீழ்த்தினான், தென்னகத்தின் பேரழகியான காஞ்சிபுரம் என்னும் கன்னியின் ஒட்டியாணத்தை இறுகப் பிடித்து அவளைக் கைக்கொண்டான். ‘ரணரஸிகனான’ (போர்களில் விருப்பமுள்ள) அவன் தன்னுடைய வலுவான தோள்களால் பல்லவர்களை வென்றான், மாமல்லனின் குடும்பத்தைத் தோற்கடித்த அவனுக்கு ‘ராஜமல்லன்’ என்ற பெயர் பொருத்தமானதன்றோ. ஈஸ்வர-போதிராஜனை (பரமேஸ்வரவர்மனை) தோற்கடித்து பெரும் கோட்டைச் சுவர்களை உடையதும் உடைக்கக் கடினமானதும் ஆழமான அகழிகளை உடையதுமான தென்னகத்தின் ஒட்டியாணமான காஞ்சி நகரைக் கைப்பற்றினான்’ என்று இந்த வெற்றியைப் பற்றி அவனுடைய கத்வல் செப்பேடுகள் புகழாரம் சூட்டுகின்றன.

    நரசிம்மனைத் தனியாகக் குறிப்பதிலிருந்தும் மாமல்லனின் குடும்பத்தைத் தோற்கடித்தேன் என்று குறிப்பாக இந்தச் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்தும் நரசிம்மவர்மன் மீதும் பல்லவர்கள் மீதும் அவனுக்கு இருந்த ஆத்திரத்தின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

    ஆயினும், காஞ்சிபுரத்திற்கோ அருகில் உள்ள மாமல்லபுரத்தின் கலைச்செல்வங்களுக்கோ எந்தக் கெடுதலும் சாளுக்கியர்களால் நேரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெருந்தன்மையோடு நடந்துகொண்ட விக்கிரமாதித்தன், தன் தந்தையைப் போலவே தமிழகத்தின் தென் பகுதியை நோக்கித் தன் படையைச் செலுத்தினான். சோழர்களின் தலைநகராக இருந்த உறையூரை அடைந்து அங்கே சில காலம் தங்கியிருந்தான் அவன். அப்போது வெளியிட்டதே நாம் மேலே பார்த்த கத்வால் செப்பேடுகள்.

    அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்ட நாட்குறிப்புகளிலிருந்து அது வெளியிடப்பட்ட சரியான தேதி (25-04-674) கிடைக்கப்பெறுகிறது. ‘சோழிக நாட்டின் உரகபுரத்திலிருந்து’ இந்தச் செப்பேடுகளை அவன் அளித்ததாக அதிலுள்ள குறிப்புத் தெரிவிக்கிறது. இதனால் வட தமிழ்நாட்டிலிருந்து உறையூர் வரையிலான பகுதிகளை அவன் கைப்பற்றிவிட்டதை நாம் அறிந்துகொள்ளலாம்.

    அத்தோடு தன் திக்விஜயத்தை முடித்துக்கொண்டு சாளுக்கிய நாட்டிற்கு விக்கிரமாதித்தன் திரும்பியிருந்தால் வரலாறு வேறு திசையில் சென்றிருக்கும். ஆனால் ஆசை யாரை விட்டது? அகலக்கால் வைக்கத் தொடங்கிய விக்கிரமாதித்தன், பாண்டியர்கள் மீது படையெடுத்தான்.

    பாண்டிய நாட்டில் அப்போது நெடுமாற பாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். திருஞான சம்பந்தரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவனும் சிவபக்திச் செல்வனுமான நெடுமாறன், 63 நாயன்மார்களில் ஒருவராக வணங்கப்படுபவன். அதே சமயம் பெரிய வீரனும் கூட. சாளுக்கியப் படைகளை பாண்டிய நாட்டிற்குள் உட்புக விடாமல் நாட்டின் எல்லையிலேயே, புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த நெல்வேலி (தற்போது நெய்வேலி என்று வழங்கப்படும்) என்ற இடத்தில் சந்தித்தான் நெடுமாறன்.

    thamizhnattu-porkalangal-ch09-2.jpg

    இந்தப் போரைப் பற்றி சேக்கிழார் பெரிய புராணத்தில் ஐந்து பாடல்களில் குறிப்பிடுகிறார்.

    ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்தேற்ற
    சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
    பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
    காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்.
    (பெரிய புராணம் – நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்)

    போரினை வேண்டி நெடுந்தூரத்தில் இருந்து வந்த பகைவர்களோடு நெல்வேலிப் போர்க்களத்தில் நெடுமாறன் போரிட்டான். கடல் போன்று பரவிய அவர்களின் படையில் இருந்த வெள்ளம் போன்ற குதிரைப் படையையும் சினத்தோடு வந்த யானைப் படையையும் கடந்தான் (அழித்தான்) அவன் என்கிறார் சேக்கிழார். ‘போரினை வேண்டி வந்தவர்கள்’ என்று குறிப்பாகச் சொல்வதால், இந்தப் போர் நெடுமாற பாண்டியன் விரும்பியதல்ல, எதிரிகள் போரை வேண்டி வந்ததால் தற்காப்புக்காகவே பாண்டியர்கள் போரிட நேர்ந்தது என்பதே இதன் மூலம் அவர் உணர்த்துவது.

    மேலும் அவர் சொல்வது, இருபக்கப் படைகளிலும் போரிட்ட வீரர்கள் வீழ்த்திய யானைகளின் உடல் துண்டுகளும் குதிரைகளின் அறுபட்ட உடல்களும் போர்க்களம் முழுவதும் நிரம்பிக் கிடந்தன. அவற்றோடு போர்வீரர்களின் தலைகள் மலைகளாகக் குவிந்து கிடந்தன. ரத்த ஆறு கடல்போல ஓடியது. முன்பு கடலைத் தடுக்க உக்கிரபாண்டியர் வேல் எறிந்தது போல இப்போதும் எறிய வேண்டுமோ என்று எண்ணுமாறு இருந்தது அந்தக் குருதிக் கடல்.

    image-2023-09-29-115824676.png

    வெற்றிபெற்ற குதிரைகள் களிப்பால் கனைத்தன. மலைபோன்ற யானைகள் பிளிறின. வீரர்கள் கோஷமிட்ட ஒலிகளும் இவற்றோடு சேர்ந்து கொண்டு ஊழிக்காலத்தில் மேகங்கள் முழக்கமிடுவதுபோல ஒலித்து அச்சத்தை ஏற்படுத்தியது. அத்தோடு வீரர்களின் படைக்கலங்கள் எறியப்படும் ஓசையும், மோதும் ஓசையும் சேர்ந்துகொண்டது. தீப்பொறி பறக்க வாள்களும் வேல்களும் மோதிக்கொண்டன. அவற்றால் வெட்டுண்ட உடல்கள் போர்க்களத்தில் வீழ்ந்துகிடந்தன. பூதங்களும் பேய்களும் அவற்றை உண்டு கூத்தாடின என்றெல்லாம் இந்தக் கோரமான போரின் காட்சிகளை விவரிக்கிறார் சேக்கிழார். அப்படிப் பட்ட கொடிய போரில்

    பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குஉடைந்து
    முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்
    புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.

    பனை போன்ற துதிக்கைகளை உடைய மதயானைகளைக் கொண்ட பாண்டியரின் படைகளை எதிர்க்க இயலாமல் வடபுலத்திலிருந்து வந்த சாளுக்கியப் படைகளின் படை சிதறி ஓடியது என்றும் போரில் வெற்றி பெற்றதால் நெடுமாறன் பாண்டியருக்கு உரிய வேப்ப மாலையோடு வெற்றிக்கு உரிய வாகைப் பூவையும் சூடிக்கொண்டான் என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

    இந்தப் போர் நெடுமாறனின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் (பொயு 674) நடந்ததால் அவனுடைய மகனும் இப்போரில் பங்கு கொண்டிருக்கவேண்டும். சடையன், மாறன் என்று மாறி மாறிப் பெயர் சூட்டிக்கொண்ட பாண்டிய வம்சத்தில் கோ சடையன் என்று பெயர் பெற்ற அவன், இந்தப் போரில் ரணரஸிகன் என்று தன்னை அழைத்துக்கொண்ட விக்கிரமாதித்தனைத் தோற்கடித்ததால் ரணதீரன் என்ற பெயரைப் பெற்றான்.

    கடல் போன்ற சாளுக்கியப் படைகளை அனாயாசமாகத் தோற்கடித்த நெடுமாறனின் இந்த வெற்றி ‘வில்வேலிக் கடல்தானையை நெல்வேலிச் செருவென்றும்’ என்று பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடுகளும், ‘வில்லவனை நெல்வேலிஉம்…….. புறங்கொண்ட பராங்குசன்’ என்று சின்னமனூர்ச் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன.

    thamizhnattu-porkalangal-ch09-3.jpg

                ( வேள்விக்குடிச் செப்பேடுகள் )

    thamizhnattu-porkalangal-ch09-4.jpg

                       சின்னமனூர் (பெரிய) செப்பேடுகள்

    இங்கே வில்வேலி என்பது சாளுக்கியப் படைத் தலைவர்களில் ஒருவனாக இருக்கலாம். வில்லவன் என்பது வல்லபன் என்பதன் திரிபு. வல்லபர்கள் என்பது சாளுக்கியர்களின் பொதுப்பெயர். ஆகவே இந்தச் சொல் என்ற சாளுக்கியர்களைக் குறிப்பிடுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

    நெல்வேலிப் போர் சாளுக்கியர்களோடு நடந்ததுதானா என்று சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், வடபுலத்திலிருந்து அக்காலத்தில் வந்த ‘கடல் போன்ற’ சேனை சாளுக்கியர்களுடையது மட்டுமே என்பதாலும், பலர் இந்தப் போரை சிறப்பித்துக் குறிப்பிட்டிருப்பதாலும் இந்த நெல்வேலிப் போர் பாண்டியன் நெடுமாறனுக்கும் சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்கும் நடந்ததே என்பதில் சந்தேகமில்லை.

    ‘நிறை கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் இப்போரைச் சிறப்பாகக் குறிப்பிட்டு பாண்டியன் நெடுமாறனுக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

    நெல்வேலியில் தோற்றுத் திரும்பி உறையூர் அடைந்த பிறகு தன்னுடைய நாட்டிற்குத் திரும்ப முனைந்தான் விக்கிரமாதித்தன். அதன்பின் என்ன நடந்தது?

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-09/

    • Like 2
  20. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியும் பல்லவர்களும் - காஞ்சிபுரம்

    thamizhnattu-porkalangal-ch08.jpg

    சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும்.

    சாளுக்கிய வம்சத்தில் பொயு 610ல் ஆட்சிக்கு வந்த பெரும் வீரனும் திறமைசாலியுமான இரண்டாம் புலகேசி தன்னுடைய அரசை விரிவாக்க முனைந்து தக்காணத்தில் இருந்த பல அரச வம்சங்களைத் தோற்கடித்தான். போதாதென்று வட பாரதத்தின் சக்கரவர்த்தியாக இருந்த ஹர்ஷவர்த்தனரோடும் மோதத் துணிந்தான்.

    புலகேசியின் திறமையான காலட்படைகள் ஹர்ஷரின் படைகளைத் தோற்கடித்ததாக அவன் புகழ்பாடும் ஐஹோளே கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதன்பின் தன்னுடைய கவனத்தை கிழக்குத் தக்காணத்தின் மீது திருப்பிய புலகேசி வேங்கியை ஆண்டுகொண்டிருந்த விஷ்ணுகுண்டின வம்சத்தவர் மீது போர் தொடுத்தான். அதில் முக்கியப் பங்கேற்றவன் புலகேசியின் தம்பியான குப்ஜ விஷ்ணுவர்த்தனன்.

    இந்தப் போரில் விஷ்ணுகுண்டினருக்கு காஞ்சிபுரத்தை ஆண்டுகொண்டிருந்த பல்லவர்கள் உதவி செய்தனர். ஆனாலும் சாளுக்கியர்களே இப்போரில் வெற்றி பெற்றனர். வேங்கியில் தன்னுடைய பிரதிநிதியாக தம்பி விஷ்ணுவர்த்தனனை புலகேசி நியமித்தான். பின்னாளில் கீழைச்சாளுக்கிய வம்சம் விஷ்ணுவர்த்தனனால் தோற்றுவிக்கப்பட்டது.

    போரில் வெற்றி பெற்றாலும், தனது எதிரிகளுக்கு உதவிய பல்லவர்கள் மீது புலகேசியின் கோபம் திரும்பியது. தவிர, குண்டூர் பகுதியை வென்று அதனைத் தங்களுடன் இணைத்துக் கொண்டிருந்தனர் பல்லவர்கள். அதனால், காஞ்சியை நோக்கி தன்னுடைய படைகளை அனுப்பி வைத்தான் இரண்டாம் புலகேசி.

    அப்போது காஞ்சியை ஆண்டுகொண்டிருந்தவன் சித்திரகாரப்புலி, விசித்திரசித்தன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பல்லவன் மகேந்திரவர்மன். பல்துறை நிபுணனான மகேந்திரன் அப்பர் பெருமானின் முயற்சியால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவன். தமிழ்நாட்டுக் கோவில் கட்டும் கலையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவனும் மகேந்திர பல்லவனே. ஆனால் அவனிடம் படைபலம் அதிகமாக இல்லை. பெரும் எண்ணிக்கையும் வலிமையும் கொண்ட புலகேசியின் படைகளோடு நேரடியாக மோத விரும்பாத மகேந்திரன், காஞ்சியின் கோட்டைக் கதவுகளை மூடி வைத்துவிட்டான். சாளுக்கியப் படைகள் காஞ்சியை முற்றுகையிட்டன. ஆனால் இரு தரப்பும் தங்களுடைய நிலையை விட்டுக்கொடுக்கவில்லை.

    ‘அழுக்கில்லாத வெண்சாமரங்களையும் கொடிகளையும் பிடித்துக்கொண்டு ஆறு மடங்கு அதிகமான புலகேசியின் படைகள் காஞ்சியை நோக்கிச் சென்றன. அதிலிருந்து கிளம்பிய தூசி, பல்லவராஜனுடைய ஒளியை மங்கச் செய்துவிட்டது. கடல் போல வந்த புலகேசியின் படைகளைக் கண்டு காஞ்சியின் மன்னன் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்’ என்று புலகேசியின் ஐஹோளே கல்வெட்டு இந்நிகழ்வை வர்ணிக்கிறது.

    thamizhnattu-porkalangal-ch08-1.jpg

    பல நாட்கள் நீடித்த இந்த முற்றுகையில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடைக்காததால், புலகேசியின் படைகள் காஞ்சியின் சுற்றுப்புறங்களை நாசம் செய்தன. அதன்பின் புலகேசி தன் படைகளைத் தெற்கு நோக்கிக் கொண்டு சென்றான். உறையூர் அருகே தமிழகத்தின் மூவேந்தர்களையும் அவன் சந்தித்ததாக ஐஹோளே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மதநீர் ஓடும் சாளுக்கியர்களது யானைகளால் துள்ளும் மீன்கள் நிறைந்த காவிரியின் நீரோட்டம் தடைப்பட்டு அந்த நதி கடலில் கலக்க முடியாமல் போயிற்று. கதிரவன் போன்ற தன்னுடைய வெப்பத்தால் பனி போன்ற பல்லவர்களுடைய திறனை மங்கச்செய்து, சேர, சோழ, பாண்டியர்களைக் களிப்புறச் செய்தான் புலகேசி’ என்கிறது அந்தக் கல்வெட்டு.

    இதனால், மகேந்திரவர்மனின் படைகளை முற்றுகையிட்டு பல்லவர்களின் பகைவர்களாக இருந்த மூவேந்தர்களை மகிழச்செய்தான் என்ற செய்தி வெளிப்படுகிறதே தவிர, பல்லவர்கள் தோல்வி அடைந்தார்கள் என்பது எங்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை.

    அதன்பின் புலகேசியின் படைகள் சாளுக்கிய நாடு திரும்பத் தொடங்கின. காஞ்சிபுரத்திற்கு அருகில் புள்ளலூர் என்ற இடத்தின் அருகே அந்தப் படைகள் சென்று கொண்டிருந்தபோது, பல்லவர்களின் படைகள் அவர்கள் மீது மின்னல் வேகத்தாக்குதல் ஒன்றைத் தொடுத்தன.

    thamizhnattu-porkalangal-ch08-2.jpg

    இந்தப் போர் தொடங்கி பல்லவர்களின் போர் வியூகம் இதே முறையில் இருந்ததை நாம் தொடர்ந்து பார்க்கலாம். அதாவது, பகைவர்களின் படைகளை நன்றாகத் தங்களுடைய நாட்டிற்குள் உள்ளிழுத்து அவர்கள் எதிர்பாராத விதத்தில் தாம் விரும்பும் இடத்திலும் நேரத்திலும் திடீர்த்தாக்குதல் நடத்தி அவர்களைத் தோற்கடிப்பது என்பது பல்லவர்களின் போர் வியூகமாக இருந்தது. நெடுந்தூரம் வந்து, முற்றுகையினாலும் அதன் பின் உறையூர் நோக்கிச் சென்று திரும்பிய களைப்பினாலும் சோர்ந்திருந்த புலகேசியின் படைகளால் பல்லவர்களின் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.

    image-2023-09-28-204603803.png

                                   காஞ்சிபுரம்

    இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் காசக்குடிச் செப்பேடுகள் ‘மகேந்திரன் தன்னுடைய முக்கியமான எதிரிகளை புள்ளலூரில் தோற்கடித்தான்’ என்று குறிப்பிடுகிறது. அப்போது பல்லவர்களுக்கு இருந்த ‘முக்கியமான’ எதிரிகள் சாளுக்கியர்கள்தான் என்பதால், அந்தப் போரில் தோற்றது புலகேசியின் சாளுக்கியப்படைகளே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    புள்ளலூர்ப்போரில் சாளுக்கியர்களுக்கு உதவியாக கங்க மன்னன் துர்விநீதனும் பங்கேற்றான் என்று தெரிகிறது. சாளுக்கியர்களுடன் மண உறவு கொண்டிருந்த துர்விநீதன் அவர்களுக்கு உதவ வந்ததில் வியப்பு ஏதும் இல்லை. துர்விநீதனுடைய கல்வெட்டுகள் புள்ளலூர்ப்போரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. தவிர, ‘சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்தியாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீர சுவர்க்கம் அடைந்தான்’ என்று கங்க மன்னனுடைய கன்னடக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

    இதனால், இந்தப் படையெடுப்பில் பல்லவ சேனைகள் ஒருபுறமும் சாளுக்கிய-கங்க சேனைகள் மற்றொரு புறமும் போரிட்டிருக்கிறது என்பது தெளிவு. காஞ்சி முற்றுகையைப் பற்றி பல்லவ ஆவணங்களிலும் இந்த புள்ளலூர்ப் போரைப் பற்றி சாளுக்கிய ஆவணங்களிலும் குறிப்பு ஏதும் இல்லை. அதற்கான காரணங்களை ஊகிப்பதும் எளிது.

    பல்லவர்களுக்கு எதிரான தன்னுடைய முதல் படையெடுப்பில் முழு வெற்றியும் அடையாமல் கடைசிப் போரில் தோல்வியுற்றுத் திரும்பிய புலகேசி, மீண்டும் ஒரு படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தான். இதற்கிடையில் பொயு 630ல் பல்லவன் மகேந்திரவர்மனை அடுத்து அவன் மகனான முதலாம் நரசிம்ம வர்மன் காஞ்சி அரியணையில் ஏறினான். நரசிம்மனும் பெரிய வீரன். மல்லர்களைத் தோற்கடித்து மகாமல்லன் என்ற விருதுப்பெயரை அடைந்தவன்.

    அவனுக்கு எதிராக சாளுக்கியப் படைகள் மீண்டுமொருமுறை தமிழகத்தை நோக்கி வந்தன. பல்லவர்களின் சிற்றரசர்களும் ஆந்திரத்தின் தென்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்களுமான பாணர்களைத் தோற்கடித்த பின் பல்லவ நாட்டிற்குள் புகுந்தன புலகேசியின் படைகள். பல்லவப் படைகளுக்குத் தளபதியாக இருந்தவர் பின்னால் சிறுத்தொண்ட நாயனார் என்று புகழ் பெற்ற பரஞ்சோதி.

    இம்முறையும் சாளுக்கியப் படைகளை பல்லவநாட்டில் உட்புக விட்ட பல்லவர்கள், காஞ்சிபுரத்திற்கு அருகில் பரியலம் என்ற இடத்தில் அவர்களைத் தாக்கினர். அங்கே நடைபெற்ற கடுமையான போரில் சாளுக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கின. அவர்களைத் துரத்திச் சென்ற பல்லவப் படைகள் மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களிலும் சாளுக்கியப்படைகளைத் தோற்கடித்துத் துரத்தின.

    thamizhnattu-porkalangal-ch08-3.jpg

    இந்த மூன்று இடங்களில் மணிமங்கலம் இன்றும் அதே பெயரில் வழங்குவதால் தெளிவாகத் தெரிகிறது. பரியலம், சூரமாரம் ஆகிய ஊர்கள் இருந்த இடங்களின் விவரம் தெரியவில்லை.

    இந்த வெற்றிகளைப் பல்லவர் செப்பேடுகள் பலவிதமாகப் புகழ்கின்றன.

    thamizhnattu-porkalangal-ch08-4.jpg

    (நரசிம்மவர்மனின் வெற்றியைப் போற்றும் கூரம் செப்பேடுகள்)

    முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடுகள் ‘நரசிங்கப் பெருமானே தோன்றியது போல் வந்தவனும் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் புலகேசி தோற்று ஓடியபோது வெற்றி எனும் மொழியை அவன் முதுகாகிய ஏட்டில் எழுதியவனுமான நரசிம்மவர்மன்’ என்று இப்போரில் நரசிம்மவர்மன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிடுகிறது.

    இதிலிருந்து பல்லவப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் புலகேசி புறமுதுகு காட்டி ஓடியது புலப்படுகிறது. இரண்டாம் நந்திவர்மனின் உதயசந்திரமங்கலச் செப்பேடுகள் ‘வாதாபியை அழித்த அகத்தியனைப் போன்ற நரசிம்மன், வல்லப அரசனான புலகேசியை பரியலம், மணிமங்கலம், சூரமாரம் போன்ற இடங்களில் வென்றவன்’ என்று குறிப்பிடுகிறது. அகத்தியர் வாதாபி என்ற அரக்கனை அழித்தது போல நரசிம்மன் வாதாபி நகரத்தை அழித்தது இங்கே சிலேடையாக எழுதப்பட்டிருக்கிறது.

    இந்த மூன்று இடங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியைச் சந்தித்து சாளுக்கிய நாடு நோக்கி ஓடிய புலகேசியின் படைகளை பரஞ்சோதியின் தலைமையிலான பல்லவப் படைகள் விடாமல் துரத்திச் சென்று சாளுக்கியத் தலைநகரான வாதாபி வரைக்கும் சென்றன. அங்கே நடந்த போரில் புலகேசி கொல்லப்பட்டதும் வாதாபி தீக்கிரையாகப்பட்டதும் வரலாறு.

    ‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
    தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப்
    பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
    இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்’

    என்று பெரியபுராணம் பரஞ்சோதி வாதாபி சென்று பெற்ற வெற்றியைக் குறிப்பிடுகிறது. அங்கே நரசிம்மவர்மன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் நிறுவிய ஜெயஸ்தம்பத்தை இன்றும் காணலாம். இந்நிகழ்வுகள் எல்லாம் பொயு 642ல் நடந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    இருப்பினும் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையேயான பகை இத்துடன் தீர்ந்துவிடவில்லை.

    (தொடரும்)

    krishnan-100x100.jpg

    எஸ். கிருஷ்ணன்

    மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

    http://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-08/

    டிஸ்கி :

    image-2023-09-28-204029758.png

    கட்டுரையாளர் ஏன் புலிகேசியை "புலகேசி" என்டு குறிப்பிடுகிறார் தெரியவில்லை உங்களுக்கு தெரியுமா..? ரெல் மீ..

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.