இப்படி ஏதேனும் நடந்தால் முழுச் சிங்களவர்களும் எமது மதிப்புக்குரிய இஸ்லாமிய உறவுகளும் காலிமுகத்திடல் போராட்டத்தைவிட பெரும்போராட்டம் ஒன்றைச் செய்வார்கள்!
கூட்டமைப்பு ரணிலை ஆதரித்து இருந்தால் நிலாந்தன் மாஸ்டரின் கட்டுரைக்கு இன்னும் உப்பு புளி காரம் எல்லாம் கூடியிருக்கும். என்ன செய்யிறது மாஸ்டரிண்ட கெட்டகாலம் கூட்டமைப்பு ரணிலை எதிர்த்து போட்டுது!
இன்னும் குணா கவியழகன், யதீந்திரா போன்ற சான்றோரினதும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம்.
தென்னிலங்கை மக்களை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்ல போன்று தென்படுகின்றது. ராஜபக்ஷ குடும்பத்துக்கெதிரான நிலைப்பாடு தற்காலிகமானது. சாப்பாடும் எரிபொருளும் தங்குதடையின்றி கிடைத்தவுடன் மீண்டும் நவீன துட்டுகெமுனுக்கள் கொண்டாடப்படுவார்கள்.
“உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!“
EU சபைத் தலைவர் சரியாகக் கூறியுள்ளார். ரஸ்யா இந்த மானங்கெட்ட சபையில் இருந்து நிரந்தரமாக வெளியேறவேண்டும்.