வணக்கம் தம்பி Kapithan,
நீரிழிவு ஒரு நோயே அல்ல. அது உண்மையில் இன்சுலின் குறைபாடு (Type 2 Diabetes). இது border level இல் இருக்கும்போது சுலபமாக மீண்டு வந்துவிடலாம். அந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டால் வாழ் நாள் முழுவதும் மருத்துவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு அதன்படி நடக்க வேணும். மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்து, உடற்பயிற்சி செய்து, சாப்பாட்டு பழக்கவழக்கங்களையும் மாற்றவேணும். மிகவும் ஆரம்ப கால டியபெடீஸ் என்றால் கடினமான lifestyle மாற்றத்தால் மருந்து எடுக்காமலேயே மாற்றலாம் என்று ஆராச்சிகள் கூறுகின்றன. கட்டுப்படுத்தப்படாத டியபெடீஸ் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் பாதிக்கும். அந்தவகையில் சிறுநீரகம் மிகவும் பாதிப்படையும். ஆங்கில மருத்துவ முறையில் இதற்கு இப்போதைக்கு சிகிச்சைகள் இல்லை. ஆனால் ஆயுர்வேத முறையில் இஞ்சி ஒத்தடம், அல்லது இஞ்சித்தேநீர் நல்ல பலன்களை தருகிறது என்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவிலும் பலர் இதனை செய்கிறார்கள்.
உங்களது அம்மாவுக்கு சிறுநீரகம் பாதித்ததால் அதற்காக ஏதாவது மருந்து எடுத்தார்களா? ஏனெனில் சில மருந்துகள் சிறுநீரகத்தை மேலும் பாதிக்கும். ஒரு வைத்தியரின் ஆலோசனையுடன் நிற்காமல் பல நாடுகளில் இருக்கும் வைத்தியர்களிடம் ஆலோசனைகள் எடுப்பது நல்லது.
உங்களது அம்மா, மாச்சத்து சாப்பிடுவதை மிக மிக குறைத்து, நடை பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் மேலு நல்ல பலனை பெறலாம். இஞ்சி ஒத்தடம் மற்றும் green tea with ginger தொடர்ந்து செய்து வரவும். இஞ்சி, சிறுநீரக குழாய்களை சுத்திகரித்து, நீரிழிவால் புண்பட்ட திசுக்களை திருத்தி, நச்சு பொருட்களை அகற்றி சிறுநீரகத்தை மிக நல்ல வகையில் செயல்பட வைக்கும்.
உங்களது அம்மா இந்த முறைகளாலும், மருந்துகளாலும் டயாபடீஸ் ஐயும் அதன் தாக்கங்களையும் குறைத்து நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் நில்மினி அக்கா