Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

nilmini

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  567
 • Joined

 • Last visited

 • Days Won

  6

Everything posted by nilmini

 1. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி உடையார். எனது அப்பா போல நல்ல ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)
 2. வணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு.
 3. 1970' களில் இருந்து தெரியும். எனது மாமா யாழ் மேயர் சின்னத்தம்பி நாகராஜாவின் நல்ல நண்பர். மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தேன். 1980' களில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு சென்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மருத்துவத்தில் இருந்து என்ன உயர் கல்வி படிப்பதற்கு இடம் எடுத்துக்கொடுக்க திரு. அமிர்தலிங்கத்திலிருந்து நிறைய தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் என்னை அப்பா கூட்டிக்கொண்டு போனதால் அப்பாவே கல்லூரி அனுமதி எடுத்து என்னை விட்டுட்டு திரும்பி இலங்கை போய்விட்டார். ஆனால் நிறய வட கிழக்கு தமிழ் மாணவ மாணவியர் தனியாக இவர்களை மட்டும் நம்பி வந்து OFFER (Organisation for
 4. வணக்கம் கறுப்பி, யாழ் களத்தில் உங்களை சந்தித்தை இட்டு மகிழ்ச்சி. எனக்கும் இதே பிரச்சனை தான் 6 மாதத்துக்கு ஒருக்கா தைரொக்சின் அளவு பாக்க ரத்தம் எடுப்பார்கள். ஒரு சில அனுபவம் வாய்ந்தவர்கள் பட்டென்று எடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நிறையநேரம் சென்றுதான் தோலுக்கு அடியில் ஆழமாக இல்லாத ரத்த நாளங்களை கண்டு பிடிப்பார்கள். இப்படி நாளங்களை கண்டுபிடிக்க கஸ்டமாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கு. 1. சிலரின் நாளங்கள் வழமயான பாதையில் இல்லாமல் கொஞ்சம் விலகி இருக்கும் 2. சிலருக்கு ஊசியேற்றியபின் நாளம் பிரண்டு போய் விடும் ( அனுபவம் உள்ளவர்கள் அதை சுகமாக கையாண்டு விடுவார்கள்)
 5. இது என்ன அண்ணமாரால் எனக்கு ஒரே confusion ஆக கிடக்கு
 6. பப்பாசிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி கொஞ்சம் தேயிலையையும் போட்டு கொதிக்கவைத்து குடித்துக்கொண்டு வர யூரிக் அசிட்/Gout அகன்றுவிடும் எண்டு ஆதாரத்துடன் படித்தேன். முயற்சி செய்து பாருங்களேன்
 7. மனம் புண்பட்டிருப்பது எனக்கு மட்டுமில்லயே. எல்லோருக்கும் இருக்கிற ஆதங்கம் தானே . ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் எமது ஊருக்கு எமது மக்கள் மேன்மையடைய ஏதாவது செய்தாகவேண்டும்
 8. நல்லாவே பழக்கம் குமாரசாமி அண்ணா. எனது brother in law வின் பள்ளிக்கால நண்பன். அமெரிக்கா வரும்போதெல்லாம் தங்கை வீட்டில்தான் தங்குவார். எமது வீட்டுக்கும் வந்துள்ளார். WhatsApp இல் அடிக்கடி தொடர்பு கொள்வதுண்டு. நல்ல மனிதர்.
 9. சில இறப்புக்கள் மிகவும் அவலமும் அகாலமும் . மிஞ்சி உள்ளவர்களுக்கு கடவுள் தான் துணை
 10. என்ன செய்வது? அப்படி நினைக்கத்தான் மனம் சொல்கிறது. நீங்கள் சொல்வது மிகவும் சரி.
 11. உங்கள் அப்பாவின் ஆன்மா எப்போதும் கடவுளுடன் சங்கமித்து இருக்கும். அப்பாவின் திதியன்று இந்த சிறுமியரின் மனதையும் உடலையும் குளிர வைத்திருக்கிறீர்கள்
 12. மிகவும் அருமையான நடிப்பு. பல தடவை மெய் வெளியில் பாத்தேன். பொம்பிளையாய் நடித்தவர் ஒரு வைத்தியர். ஊடகத்துறையில் நாட்டம் மிகுந்தவர்.
 13. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எமக்கு உரித்தானவை எப்படியாவது எம்மை சேரும். மற்றெல்லாம் எவ்வழியிலாவது போய்சேர்ந்துவிடும் என்று மனப்பூர்வமாக அறிந்த சிறுமி ஜெகதீபாவுக்கு எனது பாராட்டுக்கள்
 14. மிகவும் அழகான சித்திரம். சொல்லவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் மகளிடம் கேட்டுத்தான் படிக்கவேண்டும் உடையார். என் மனதுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார், எனக்கு தெரிந்த ஒரே கலையான வீணையுடன். அழகோ அழகு
 15. மன்னிக்கவும் . பெயரை பிழையாக எழுதி இப்ப திருத்தி உள்ளேன் தம்பி Kapithan
 16. வணக்கம் Kapithan. அக்கா என்று சொல்லி குறிப்பிட்டதால் ஒரு சின்ன அறிவுரை சொல்லலாம் என்று நினைத்தேன். உங்களது பெயரும் பல்கலைக்கழக வரலாற்றில் பதிந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அந்த காரணத்திலாலும், எமது பல்கலைக்கழகம் நல்ல முறையில் முன்னேற்றத்தை நோக்கி வளரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே காரணத்தால்தான் உங்கள் மனதில் ஒரு பயமும் தலை தூக்கியுள்ளது. எனது கருத்து என்னவென்றால் எமக்கு வயது கூடிகொண்டுபோக கடவுள் பக்தியும் அதிகமாகும். அதனை நான் உற்பட எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று. சிலபேருக்கு வராமல் போகக்கூடும். மற்றது புலம் பெயர் தேசங்களில் போயிரு
 17. இப்படியே எல்லாத்தயும், எல்லாரையும் குத்தி கிளறிக்கொண்டு இருக்க சிங்களவன் இருக்கிற மிச்ச சொச்சத்தையும் கொத்திக்கொண்டு போக நாங்கள் ஆண்டி ஆகவேண்டியதுதான்
 18. மிகவும் அருமையான வரவேற்கத்தக்க பேச்சு. துணைவேந்தரின் பேச்சை எழுதி பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்: இது பெரு பொது நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயல்படவேண்டிய பதவி. 2000 ஊழியர்கள், 11,000 மாணவர்கள் ஒருமித்த குடும்பம். ஒரு மனிதனின் சங்கல்பமும் (திடசங்கற்பம்) இறைவனின் திருவருளும் கூடும்போது காரியங்கள் நடைபெறும். இலங்கையின் மற்றைய பிரதேசங்களில் இருக்கும் சாதாரண மனிதர்களுக்கு அந்த ஊரில் இருக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாரென்றே தெரியாமல் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்தில் பேக்கரி தொழிலார்கள் கொண்டு அனைவரும் யார் துணைவேந்தராக தெரிவாவர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள
 19. பூச்சிக்கடி தொல்லையாலும் , உடலை குளிர்மை படுத்துவதற்காகவும். வெயில் சுளீரெண்டு அடிக்காமல் இருக்கவும் யானைகள் மணல், சேறு இவற்றை தமீது பூசும். மணலை தும்பிக்கையால் அள்ளி அள்ளி முதுகில் போடும் குட்டி யானையை ஒருமுறை பார்த்தேன். விளையாடுவதுபோல் இருந்தது
 20. எண்ட வெட்டு கொத்துகளை வாசித்து பயந்துபோய் தனக்கு மருத்துவ அறிவுரையும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். என்னை போய் அலுவலுகளை பார்க்கச்சொல்லி குமாரசாமி அண்ணை சொல்கிறார் போல கிடக்கு உடலில் யூரிக் அமிலம் கூடுவதை hyperuricemia என்று சொல்வார்கள். இது மூட்டுகளுக்குள் சேர்ந்து ஆர்தரைடிஸ் மாதிரி வீங்கி நோகும் (Gout arthritis) அத்துடன் ரத்தம், சிறுநீரிலும் அமிலத்தன்மை கூடும். அது உடம்புக்கு தீமை விளைவிக்கும். யூரிக் அமிலம் உடலில் தேங்குவற்கு சில காரணங்கள் இருக்கு. சுயமாக கண்டுபிடிக்க ஒரே வழி மூட்டு உளைவுதான் . சிவப்பாக வந்து வீங்கும், நோகும் . கீரை வகைகள் ஓட்ஸ் மாதிரி நார் சத்து கூடிய உணவுகளை சாப்பிடுங
 21. ஈழப்பிரியன் அண்ணாவை பால் செம்பு , காவடியுடன் எப்படி இருப்பார் என்று கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்
 22. இப்பதான் குமாரசாமி அண்ணாவும் சிறியும் இங்கையும் என்னை தேடியிருக்கினம் என்று பார்த்தேன். 1885 ஆம் ஆண்டளவில் வெள்ளவத்தை நெசவு தெழிற்சாலை கட்டுவதற்காக தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இருந்து வந்த தொழிலார்களை சிறு தொடர்வீடுகளில் அமர்த்தினார்கள். அதில் ஒரு சிறு வீடு கோயிலாக மாற்றப்பட்டு அந்த தொழிலார்கள் பத்திரகாளியை கும்பிட்டு வந்தார்கள். 1970' களில் ஒரு சிறிய பழமை வாய்ந்த, நிறைய தமிழர்களால் விரும்பப்பட்ட ஒரு கோயிலாக இருந்தது. அப்போதே மிகவும் பக்தி கொண்ட நிறைய சிங்கள மக்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார மயமாக்கப்பட்ட பின் நான் போவதில்லை. 1990' களில் புதுசு புதுசா
 23. சிவ கிருபையை முன்னிற்று வாழும், இன்று பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடும் குமாரசாமி அண்ணா, புத்தன் இருவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். என்றும் இளமையுடன் சந்தோசமாக ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவாராக. அன்புடன் நில்மினி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.