Jump to content

nilmini

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    908
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Posts posted by nilmini

  1. கேள்விப்படாத தகவல். பகிர்ந்ததுக்கு நன்றி. அமெரிக்கா தபால் நிலைய இணையதளத்தில் மேலும் விபரங்களுக்கு தேடிப்பார்த்தேன். நம்பிக்கையான தபால் கார்களுடன் முன்கூட்டியே கதைத்து தனிப்பட்ட முறையில்தான் அனுப்பி இருக்கிறார்கள். முத்திரை, காப்புறுதி எல்லாம் எடுத்ததுதான்.

    • Like 1
  2. 3 hours ago, விளங்க நினைப்பவன் said:

     

    "மரணத்ததிற்கு பின்பு எதுவவுமே இல்லை என்ற உண்மை"  

    இந்த மிகப்பெரிய உண்மையாய் விளங்கிகொண்ண்ட மனிதர்களில் ஒருவர் நீங்கள். ஒரு சிறிய வட்டத்தில் இருந்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில், இந்த பூமியில் வாழ்ந்து மடிந்த   மனிதர்களின் இருப்பே உண்மை என்று நம்புவதில்ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

    11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

    மேடம் நீங்கள் ஒரு டாக்டர்.. நீங்களுமா..?????

    அந்த அறிவு இருப்பதால் தான் எனக்கு தெரியாதவை எல்லாவற்றையும் மறுக்காமல் மேலும் படித்து, அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம்

  3. 2 hours ago, ஏராளன் said:

    அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

    https://thinakkural.lk/article/270982

    மரணத்துக்கு பின் நிச்சயம் எதோ ஒன்று நடக்கிறது. ஆனால் யாராலும் என்ன என்று சொல்லமுடியாது. சில மனிதர்கள் தமக்கு முந்திய பிறப்புகளை பற்றி ஞாபகம் இருக்கு என்று சொல்கிறார்கள். இதை நான் நம்புகிறேன். பல யோகிகளும் ஞானிகளும் மரணத்தின் பின்னான நிகழ்வுகளை விளக்கியுள்ளார்கள். அவர்கள் இந்த அறிவை தாமாகவே பெற்றுக்கொண்டதால் அவற்றிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  எது உண்மை, எது பொய்யோ, எமது ஐம்புலன்களால் அறியமுடியாத விடயங்கள் எவ்வளவோ இருப்பது மட்டும் உண்மை. *** Near death expereince is different from after death****

    • Like 1
  4. 6 hours ago, நிழலி said:

    இறுதிச் சண்டையில் போராடப் போய் காணாமல் போன தன் மாமாவுக்காக (தாயின் தம்பி) கில்மிஷா பாடிய 'கண்டால் வரச் சொல்லுங்க' பாடல்.

    மிகவும் நன்றாக பாடும் ஒரு சிறுமி. பல வருடங்களுக்கு முன்பு Rap Ceylon YouTube வீடியோவில் முதல் தடவையாக கில்மிஷாவின் பாட்டை கேட்டேன்.

    https://www.youtube.com/watch?v=aypvkjEm24U

    https://www.tamildhool.net/zee-tamil/zee-tamil-show/

  5. 6 hours ago, ஏராளன் said:

    Published By: NANTHINI

    02 AUG, 2023 | 10:46 AM
    மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். 
    1970  தொடக்கத்தில் எமது குடும்பம் மாத்தளையில் இருந்து கொழும்புக்கு இடம் மாறி வந்தபோது இவர்கள் வீட்டு அனெக்ஸ் இல் தான்  வாடகைக்கு இருந்தோம் (வெள்ளவத்தை பெனிகுக் லேனில் உள்ள கனால் ஒழுங்கை). அப்போதே சட்டப்படிப்பு முடித்து திருமணம் ஆகி தனியாக போய்விட்டார். அனால் அடிக்கடி வீடு வருவார். பெற்றோரின் வேண்டுகோளுக்காகத்தான் சட்டம் படித்தார். 
     
    அவரும் அவரது தங்கை யோகா தில்லைநாதனும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிறுவர் நிகழ்ச்சி ஒளியும் ஒலியும் என பல நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தினர்.நானும் அவர்களுடன் சிலதடவை சென்று சிறுவர் நிகழ்ச்சியில் கதையும் வாசித்து இருக்கிறேன். அவரது தம்பி ஒரு வைத்தியர் 60 வயதில் இறந்துவிட்டார். அவரது மனைவி பத்மாவும் ஒரு வழக்கறிஞர். லண்டனில் ஒரு சட்ட நிறுவனம் ஒன்றை இருவரும் நடத்தி வந்தார்கள். மிகவும் பெருந்தன்மையான நல்ல ஒரு மனிதர். 
     
    அவரது தம்பி இறந்தபோது ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். :
    My beloved Brother Dr RAVE SOCKANATHAN departed in October 2011 in Colombo, Now walking amongst Gods and Holy Saints on streets strewn with Beautiful Flowers. 
    இன்று அவரும் கடவுளுடனும், ஞானிகளுடனும் பூக்கள் தூவிய வீதிகளில் தம்பியுடன் நடந்து சென்றுகொண்டிருப்பார். may his sould rest with God🌹🙏🌹
    • Like 1
    • Thanks 1
  6. On 22/7/2023 at 09:41, தமிழ் சிறி said:

    @ஈழப்பிரியன், @Maruthankerny, @nilmini, @nunaviIan , @theeya
    எல்லாரும் அரிசி வாங்கி விட்டீர்களா? 🤗

    போன கிழமை 20 றாத்தல் முத்து சம்பா, சிவத்தப்பச்சை அரிசி எல்லாம் ஒன்லைனில் வாங்கி, இந்தியன் கடையில் கேரளா குத்தரிசி, சோனா மைசூரி அரிசி எல்லாம் வாங்கியாச்சு சிறி.

  7. On 10/6/2023 at 04:27, தமிழ் சிறி said:

    @ஈழப்பிரியன்@nunaviIan, @nilmini, @Maruthankerny
    ஆகியோரை,  ஜூலி சங்... சந்திக்கவில்லையா. 😂
    அல்லது எங்களுக்கு தெரியாமல், இரகசிய  சந்திப்பு நடந்ததா? 🤣

    எங்களுக்கு வந்ததும் தெரியாது போனதும் தெரியாது சிறி.

    • Like 1
  8. 1 hour ago, குமாரசாமி said:

    இந்த விளையாட்டு போட்டி முடியும் மட்டும் மாலைக்கண் இருக்கும். :rolling_on_the_floor_laughing:

    அப்பிடி இருந்துட்டா பிரச்னை இல்லை😂

    19 hours ago, பையன்26 said:

    அக்கா தாத்தா புள்ளிய‌ பார்த்து ம‌ன‌ம் நோகிறாரோ இல்லையோ  ஆனால் என‌க்கு ரொம்ப‌ வ‌லிக்குது😥...............பாவ‌ம் ம‌னுஷ‌ன் தான் பார்வையாள‌ரா இருக்கிறேன் என்று சொல்ல‌ நான் கூட்டி வ‌ந்து பால‌ம் கிண‌ற்றுக்கை த‌ள்ளின‌ மாதிரி ஒரு குற்ற‌ உண‌ர்வு என‌க்குள்..................உந்த‌ கோதாரி பிடிச்ச‌ ராஜ‌ஸ்தான் ம‌ற்றும் வ‌ங்க‌ளூர் உள்ள‌ போய் இருந்தா நில‌மை வேறு................இர‌ண்டு அணிக‌ளும் ஏமாற்றி போட்டாங்க‌ள்🥹😢......................

    கு சா அண்ணா போட்டிக்குள்ள இருந்தால்தானே சுவாரஸ்யம் பையன்.எண்டாலும் பாவம்தான். பக்க பலமா நானும் கீழ இறங்கிட்டன். கொஞ்சம் மேல போற மாதிரி இருந்திச்சு பிறகு சறுக்கிட்டுது.😂

  9. 7 minutes ago, கிருபன் said:

     

    வாழ்த்துக்கள் சுவி. என்ன ரெண்டு அண்ணாமாரு கீழ போயிட்டினம்? கு சா அண்ணாவுக்கு மாலைக்கண் மாறிட்டுதோ. அல்லது இன்னும் இருக்கா😂

  10. 7 hours ago, பையன்26 said:

     

    உட‌ல் நிலை ச‌ரி இல்லை

    த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

    பையன் நன்றாக சாப்பிட்டு, மருந்துகளை எடுத்து விரைவில் குணமடைந்து யாழ் வரவும்

    • Like 1
  11. 6 hours ago, குமாரசாமி said:

    நான் எப்பவும் சித்தன் போக்கு சிவன் போக்கு பாணி. யார் வம்புதும்புக்கும் போறதில்லை...:beaming_face_with_smiling_eyes:

     

    கு சா அண்ணா ஒரு ஞானி. ஒரு வம்பு தும்புக்கும் போவதில்லை. சும்மா மற்றவர்கள்தான் அவரை விளங்கிக்கொள்ளாமல் அவர் எதோ போட்டி போடுவதாக நினைக்கினம்🤣

    • Haha 1
  12. On 4/4/2023 at 17:06, குமாரசாமி said:

    மன்னிக்கோணும். கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. எனக்கு சிமோல் மாலைக்கண் பிரச்சனை . அதாலை லிஸ்ரிலை எனக்கு கீழை ஆரார் நிக்கினம் எண்டு பார்த்து சொல்லுறியளே? :cool:

    அதுதான் நல்ல பழக்கம். மேல ஆர் இருக்கினம் என்று பாக்காமல் கீழ இருப்பவர்களை பார்த்து சந்தோசப்படவேணும்.

    2 hours ago, ஈழப்பிரியன் said:

     

    1 சுவி 60

    வாழ்த்துக்கள் முதல்வர்.

     

    வாழ்த்துக்கள் சுவி.பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறோம்

    • Like 1
    • Haha 1
  13. 23 hours ago, பையன்26 said:

    என்ன‌ இந்த‌ ப‌க்க‌ம் @nilmini

    அக்காவை காண‌ வில்லை.................

    பலதடவை யாழ் வந்தேன் எட்டி பார்த்துதுடன் சரி பையன். இப்பதான் பழைய போஸ்டுகளை பார்க்கப்போகிறேன். கொஞ்சம் பயணம், மற்றும் சில இழப்புகள் தான் காரணம். விசாரித்ததற்கு நன்றி.

     

  14. எமது தோல் நிறத்துக்கு குறைந்தது 3மணி நேரம் காலை 10 மணியிலிருந்து பகல் 3  மணிவரையான வெயில் நேராக படவேண்டும். வீட்டுக்கு வெளியே அல்லது யன்னலில் சூரியன் வெளிச்சம் வரும் இடத்தில் இருந்து ஏதாவது ஒரு வேலையை செய்தால் நல்லது.

    • Like 1
  15. 8 hours ago, Nathamuni said:

    இந்த நாய், பூணை சாப்பாடுகள் மிக மோசமானது.

    மனிதர், சுவைத்துப் பாரார் என்று, மனிதர் சாப்பிடாத பல ஜயிட்டங்களை அரைத்துக் கலப்பார்கள்.

    உதாரணமாக, குடல் பிரட்டல், மூளைப் பொரியல் , ரத்தவறை என்று நம்ம ஊரில் வறுமை காரணமாக உண்பவைகளை, வெள்ளையர் சீண்டுவதில்லை.

    அவைகள் வளர்ப்பு பிராணிகள் உணவாகும்.

    பணம் இருப்பவர்கள், இதுதான் வேண்டும் என்று ஓடர் பண்ணுவர்.

    உண்மை. ஆனாலும் வெள்ளைகார்கள் நிறைய நோய்களுக்கு ஆளாகிறவர்கள் தான். தசைகளை விட மற்ற உறுப்புகள் நிறய அனாவசியமான தாதுக்களை சேகரித்து வைத்திருக்கும்.

  16. 2 hours ago, Nathamuni said:

    அதுகளுக்கும் வருத்தங்கள் வருகுது.

    நாய் வளர்ப்பவர்கள் பேசும் போது, சொல்லும் விபரங்களை கேட்கும் போது ஆச்சிரியம் வருகிறது.

    பிரஷர் இருக்குது, சுகர் இருக்குது.....

    ஆக, கண்டுபிடிக்கிற மருந்துகளில, அதுகளுக்கும் சுகமாக கொடுக்க வேணும். 

    A.jpg

    a1.jpg

    A2.jpg

    இவர்தான் அலெக்ஸ். 11 வயது 6 மாதங்கள்.

    • Haha 1
  17. 2 hours ago, Nathamuni said:

    அதுகளுக்கும் வருத்தங்கள் வருகுது.

    நாய் வளர்ப்பவர்கள் பேசும் போது, சொல்லும் விபரங்களை கேட்கும் போது ஆச்சிரியம் வருகிறது.

    பிரஷர் இருக்குது, சுகர் இருக்குது.....

    ஆக, கண்டுபிடிக்கிற மருந்துகளில, அதுகளுக்கும் சுகமாக கொடுக்க வேணும். 

    மிருகங்களுக்கு வருத்தங்கள் வருவது குறைவு. வாழ்நாளும் கொஞ்சம்தானே? அளவான சாப்பாடு, நடை, விளையாட்டு அத்துடன் அன்பும் கொடுத்தால் நோய்நொடி இல்லாமல் வாழும்.  செயற்கையான கலப்பின நாய்கள், மிகவும் சிறிய அல்லது மிகவும் பெரிய நாய் பூனைகளுக்கு வருத்தம் வருவது கூட. 
     
    செல்லப்பிராணிகளுடன் விளையாடாமல், நடக்க கூட்டிக்கொண்டு போகாமல் இருந்துகொண்டு சாப்பாட்டையும் , ட்ரீட் களையும் கொடுப்பவர்களால் தான் பிரச்சனை.
     
     அநேகமான ட்ரீட்டுகள் சீனாவில் செய்யப்பட்டு மேலை நாடுகளில் பொதி செய்யப்பட்டு விற்கும்போது பொதி செய்யப்பட்ட நாட்டின் பெயரை பெரிதாகவும், சீனாவின் பெயரை சின்னதாகவும் போடுவார்கள். அதைப்பார்த்து எல்லோரும் வேண்டுகிறார்கள். மனிதர்களை போல குழம்பிப்போய் இருக்கும் இனம் ஒன்றும் இல்லை 🙄
    • Like 2
    • Thanks 1
  18. 1 hour ago, இணையவன் said:

    மருத்துவ பரிசோதனை ஆராச்சிகளுக்காக இருக்கலாம்.

    இந்த மனிதர்களை காப்பாற்றுவற்காக விலங்குகள் அனுபவிக்கும் சித்திரவதைக்கு அளவேயில்லை😥

    58 minutes ago, Nathamuni said:

    ஒரு இலட்சமே? 🥴

     

    மிச்சம் சாப்பிட 

  19. 1 minute ago, உடையார் said:

    இது பராவாயில்லை, ஜப்பான் காரன் இனி என்ன கேட்க போகின்றானோ😁

    அவன் கடலுக்குள்ள, ஆற்றுக்குள்ள இருக்கிறதை தான் அதிகம் கேப்பான்.

  20. 2 hours ago, குமாரசாமி said:

    அப்பிடியே 10 லட்சம் தெரு நாய்களையும் கேட்டால் புண்ணியமாய் போகும்..:cool:

     

    ஏன் பிலிப்பினோ காரங்கள் மாதிரி பண்ணி சாப்பிடவோ? நான் இலங்கை நாய்களை காப்பாற்றும் இயக்கத்தில் இருக்கிறேன் கு சா அண்ணா.

  21. 6 hours ago, கிருபன் said:

    ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

    Published By: Digital Desk 5

    12 Apr, 2023 | 10:56 AM
    image

    சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

    https://www.virakesari.lk/article/152719

    ஆ கடவுளே எல்லா குரங்குகளையும் பொரிச்சு அவித்து சாப்பிடபோறானுகள் சீனர்கள். IMF  இடம் கடன் வாங்கினால் இப்படி எல்லாவற்றையும் கொடுக்க வேண்டிதான் வரும்.
     
    1 hour ago, சுவைப்பிரியன் said:

    என்னட்டையும் கொஞ்சம் இருக்கு.

    மனிதக்குரங்குளாக்கும்😁

    • Like 1
  22. 5 hours ago, குமாரசாமி said:
    21 குமாரசாமி 10

     

    மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
    வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
    அந்த நதியே காஞ்சி போயிட்டா....
    துன்பப் படுற்வங்க எல்லாம்
    அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
    முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
    கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
    யாராலே ஆறுதல் சொல்ல முடியும்? 

    வற்றாத நதிகள் கொஞ்சம் இன்னும் இருக்கு குசா அண்ணா. அவை வந்து கட்டயாம் ஆறுதல் சொல்லும் 🤣

    11 hours ago, கிருபன் said:

    மத்திய இலண்டனுக்கு காரில் போவது நேரம் எடுக்கும் என்று பப்ளிக் பிரயாணத்தில் போனேன். ஈஸ்டர் ஞாயிறு என்பதால் இரவு பஸ்ஸில் அலைந்து வந்து சேரவேண்டியதாகிவிட்டது!

     

    இன்று @nilmini அக்கா முதல்வராக வர சந்தர்ப்பம் இருந்தது! ஆனால் அது RCBக்கு LSG அடித்த வேகத்தில் பறந்துபோய்விட்டது🙂

    ஆ சந்தர்ப்பத்தை சொதப்பிவிட்டார்களே🙄கிருபன்

    • Haha 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.