Jump to content

nilmini

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    908
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by nilmini

  1. அவருக்கு தைரொய்ட் கான்சரா ? இரண்டு விதமான கான்செர் உண்டு(papillary and follicular thyroid cancer) இரண்டுமே சத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம். சிலவேளை தான் திருப்பி வரும். சில வருடங்களில் இருந்து சில தசாப்தங்களிலும் வரும். வந்தால் திரும்ப சத்திர சிகிச்சை செய்ய முடியும் . ஸ்டேஜ் 1,2 கான்செர் என்றால் 85% நோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 3,4,5 என்றால் 55% தான் குணமடைவார்கள்.
  2. தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை, எல்லாவிதமான தானியங்கள் மற்றும் zinc நிறைந்த உணவுகளான நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine வகையான மருந்தை ஒவ்வொரு நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம். இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
  3. சுவிக்கும் கிருபனுக்கும் எனது நன்றிகள். சிறி எப்படி சுகங்கள் ? சோம்பல் இல்லாமல் எழுதத்தான் வேணும். உற்சாகம் தந்தமைக்கு நன்றி
  4. மிகவும் நன்றி. நான் செய்த உணவு வகைகளை செய்முறையோடு பதிவேற்ற இருக்கிறேன்
  5. இப்ப இருந்து எழுதுவதாக இருக்கிறேன். படங்கள் தரவேற்றம் லிங்க் ஒருமுறை பகிர முடியுமா?
  6. நான் வகுப்புகளுக்கு ஒழுங்கா வருகிறேன். பதிவுகள் தான் போடவில்லை. பங்களிக்கவும் இல்லை. தவறுதான்
  7. எங்கட வீடு நாய்களுக்கு இவ்வளவு செல்லம் இல்லாவிட்டாலும் நிறையவே செல்லம் கொடுத்தோம். அப்பாவும் சேர்ந்து ( அம்மா செல்லம் இல்லை- எங்களுக்கும் சேர்த்து அடிதான்). ரெண்டு கதிரை மெத்தை . காலம பால் தேத்தண்ணி உடன் நாள் தொடங்கும்.
  8. தாயை இழப்பது மிகவும் துன்பமான விடயம். எமது தாயை முடிந்தளவு சந்தோசமாக வைத்திருக்கிறோம்
  9. நீங்கள் யார் என்பதை கண்டறியுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள் எவை என்று கண்டறியுங்கள். ஒரு பொழுதுபோக்கை தெரிந்தெடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்வதுக்கு சிறு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இவர்தான் , நீங்கள் இப்படித்தான் என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த அடையாளத்தை நன்றாக செதுக்கி உங்களை நீங்களே மேம்படுத்துங்கள். உங்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும், கடினமான தருணங்களிலும் உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். அந்த பொழுதுபோக்கில் வெளி உலக அழுத்தங்களை மறக்க கற்று கொள்ளுங்கள் இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன் 117/5000 இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்
  10. நானும் எதோ நல்ல விசயம் என்று விறு விறு என்று பார்த்தால் ........
  11. பாதுகாப்பு அப்படி.... தேச நன்மையை கருத்தில் கொண்டு. எங்கட நாட்டை போல இல்லை
  12. சுனாமிக்கு கிடைச்ச பெருந்தொகை பணம் சிங்களவர்களுக்கே போய் சேரவில்லை. முழு நாடுகளும் சேர்ந்து கொடுத்த பணத்தை விட அமெரிக்கர்கள் தாமாக கொடுத்த பணம் அதிகம். எல்லாம் முதலை மாதிரி விழுங்கியாச்சு.
  13. நான் எனது அம்மம்மாவை நினைத்து சித்ரா பௌர்ணமியை அனுஷ்டித்தேன் . அம்மா என்னும் எங்களுடன் வசிக்கிறது ஒரு வரம்தான் நல்ல சுத்தமான யாழ்பாணத்து தமிழ். வெள்ளைக்காரர்களின் நான் கவனித்த ஒன்று. ஏதாவது ஒன்றை பிடித்து போய்விட்டால் அதை முழுமையாக செய்வார்கள்.
  14. தங்களை இந்த யாழ் களத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் மடலுக்கு பதில் போட்டுள்ளேன். படிக்கவும். அப்பாவின் சொந்தங்கள் எல்லோரும் ஒருநாள் ஒன்று கூடல் வைக்கவேண்டும் . அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
  15. தங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி. இருக்கும் வீடுகளோ வெறிச்சோடி இருக்கிறது, பெயர் பறிமாறப்பட்ட மனிதர்களோ இன்று இல்லை. எனது பெயர் முழுமையாக இல்லாவிட்டாலும் எனது வேலை தளத்தில் இருந்து பெயர், படம் வேலை அலுவலக தொலைபேசி, ஈமெயில் எல்லாமே இணையத்தளத்தில் எவரும் பார்க்கலாம். அதானல் தான் பெரிதாக பாதுகாப்பை பற்றி கவலை படவில்லை
  16. மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான் நான். After all its a small world. I don't know how to send personal message on this. I will try to send my email address. Amma is very happy when I told her.
  17. நன்றி. அப்பாவின் சொந்தங்கள் எல்லாம் உடையார் ஒழுங்கை.ஒரு மச்சான் செல்வராஜா வீடு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துக்கு வீடு
  18. பழமைக்கு ஊரில் இப்ப இடமில்லை நாக்கிளி புழுவுடன் இருந்தால் சரி
  19. இல்லை அப்படியே பழமையை பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுதான் வீடு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.