KuLavi

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,511
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Everything posted by KuLavi

 1. அடுத்த எம். ஐ. எ. , எ. ஆர். ரஹ்மான் ரெடி என்கிறீர்கள். நாம் தமிழர் உலக இசை அரங்கை கலக்க தொடங்கிவிட்டோம். பெருமை. பெருமை.
 2. ஐம்பதாயிரம் கோடி ஆன்மீக காசு பார்த்தவருக்கு கேக்கு வெட்டினம், ஐம்பது இலட்சம் மக்களுக்காக காடு பார்த்தவருக்கு திவசம் கேக்கினம். பெறாமகனுக்காக கோடி சொத்து சேர்த்தவருக்கு கேக்கு வெட்டினம், தனது மகனை எதிரியை வீழ்த்த அனுப்பியவருக்கு திவசம் கேக்கினம். ஸ்ரீ லங்கா தலைமைக்கு தங்க சங்கிலி இட்டவருக்கு கேக்கு வெட்டினம், சிங்கள அடிமை சங்கிலியை உலகிற்கு உடைத்தவருக்கு திவசம் கேக்கினம். நாமவரி அணிந்து மக்களிடம் தியானவரி கறந்தவருக்கு கேக்கு வெட்டினம், புலிவரி அணிந்து மக்களின் மயானவிதியை தடுத்தவருக்கு திவசம் கேக்கினம். இறைவனை காட்டுகிறேன் என்ற வழிபோக்கருக்கு கேக்கு வெட்டினம், நாற்பதாயிரம் தமிழ் சாமிகளுக்கு வழிகாட்டியவனுக்கு திவசம் கேக்கினம். வெறும் கைக்குள்ளால் சுவிஸ் கடிகாரம் எடுத்தவருக்கு கேக்கு வெட்டினம், வெற்றி நம் கைகளில் தான் இருக்கிறது என்றவருக்கு திவசம் கேக்கினம். =குளவி=
 3. புலியிடம் இருந்து காக்கிறேன் என்று கூறி தொன்று தொட்டு தமிழரிடமும், சிங்களவநிடமும், இந்திய அரசிடமும், காசு வாங்கி ருசியா வாழ்ந்தவை. அது காணாதென்று வாழும் வெளிநாடுகளில் டோல் வேறு எடுத்து சீட்டு போடுவார்கள். தம்மை ஏழைகள் என்றும் யாராவது புலி ஆதராவாளர் நன்றாக இருந்தால் உடனே அவர் உலகதமிழரிடம் சுருட்டியது என்று செய்தி போட்டு கல்லா கட்டியவர்கள். புலி இருந்த போது ஒரு இணைய தள பார்வைக்கு ஐந்து ரூபா கொடுத்தது ஸ்ரீ லங்கா கை கொமிசன். இப்ப மாதத்திற்கு ஐநூறு தேறினாலே பெரியவிடயம் ஆகிவிட்டது.
 4. நண்பரே, இப்போது வந்த லேட்டஸ்ட் வேலாயுதம் பாட்டு போல் சில்லாக்ஸ். ஒருவர் புலி அழிந்து போ என்று கூறினால் அது நடந்துவிடுமா? ஒவ்வொரு ஜீனோம் எம். இருபது உள்ளும் ஒரு புலி இருக்கிறது. எங்களுக்கு எப்படி தலைவரை குறைத்து சொன்னால் கோபம் வருமோ அப்படிதான் சாய் பக்தனுக்கும் இருக்கும். நாம் எல்லோருடைய நம்பிக்கையையும் மதிக்கவேண்டும் என்று தான் புலி சொல்லி தந்தது. சிலர் நிழலை கண்டு மிரண்டால் நாம் என்ன செய்ய முடியும்?
 5. அண்ணா, நீங்கள் ஸ்ரீ லங்கனா? நீங்கள் ஸ்ரீ லங்கன் என்றால், உங்கட நீர்கொழும்பில மற்றும் காலியில ஐம்பதாயிரம் சின்னஞ்ச்சிறு குழந்தைகளை வைத்து சுற்றுலா நடத்தும் நாட்டுக்காரர் நீங்கள். ஒன்றும் தெரியாவிட்டால், எந்த ஓட்டோ காரனையும் தனியா வைச்சு கேளுங்கோ.1 புலி சக்தியை அழிக்க முயலும் உங்கட ஸ்ரீ லங்கா சக்தி, அமைதி காக்கிறான் எண்டு ஹெய்தியில நூற்றி எட்டு பேர் சேர்ந்து பதின்மூன்று வயது சிறுமிகளை கற்பழித்தார்களே? 2 நீங்கள் சவுண்ட் விட்ட புலியை அழிப்பதற்கு முன் ஸ்ரீ லங்கா சக்தியை ஒரு கை பார்ப்பியலே? 1) http://www.uri.edu/artsci/wms/hughes/srilank.htm 2) http://news.bbc.co.uk/2/hi/south_asia/7076284.stm
 6. நண்பர் மருதங்கேர்னி, நான் உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன். ஆனால் கடைசி பத்தியை ஒரு ஆதாரமும் இல்லாமால் சொல்வது உறுத்துகிறது. அண்ணன் அர்ஜுன் ஒரு உதாரணம். அந்த பத்திக்கு ஆதாரம் உண்டா? நன்றி.
 7. அக்கா, இவர்களுடன் தர்க்கம் செய்து நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காதீர்கள். நித்திரை கொள்ளுறது போல நடிக்கிறவையல எழுப்ப முடியாது. ஆனால் அண்ணனின் பெயருக்கு முன்னால் மற்றோர் எல்லாம் கால் தூசி. பரப்புரை செய்யிறார் சின்னதுரை கதைக்கு ஒரு மாதத்தில் அறூநூற்றி அறுபத்தி எட்டு பார்வைகள் ஆனால் இந்த அண்ணனின் பெயரை பாவித்த கவிதை இரண்டு நாளில் ஆயிரத்து அறுநூற்றி அறுபத்தியெட்டு பார்வைகளை எடுத்து சூடான திரியாகிவிட்டது. இப்ப தெரியுது ஏன் புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம், நாள் தோறும் ஏதாவது ஒரு புலி தலைப்பை இயற்றி போடினம் எண்டு.
 8. பாபா குழுக்களில் இருந்து அடிதடி பட்டு பிரிந்து அம்மா, நித்யானந்தா, ஈஷா, ஓஷோ, கட்டிபிடி அம்மா, மகாராஜி, சீரடி பாபா, டென்மார்க் அம்மன் மற்றும் பல குருஜிக்களை பிடித்து, ஒவ்வொரு நாட்டு கொன்றாக்டை அமுக்கி, டி.வி. பார்க்க விடாமல் போட்டு தாக்கி மார்கெடிங் செய்து, ஆன்மீக காசு பார்கிறார்கள். உங்களிடம் உள்ள பொன் பாரத்தை தங்களின் காவி கோணி பைக்குள் துறக்க வழிகாட்டுவார்கள். இவர்கள் புலி கணக்கு வழக்குகளை பற்றி கதைக்கும்போது குளவியின் ஷார்ட் டெம்பர் ஷார்ட் செர்கிட் ஆகிடும். ஊக்கத்திற்கு நன்றி சகோதரம்.
 9. அஹ்தே....அஹ்தே.....நீங்களும் அந்த ஏளன பார்வைகளை பல தடவை பார்த்தவர் போல் தெரிகிறது. ;) என்ன செய்வது...ஆனால் ஒவ்வொரு பார்வையும் தமிழ் ஈழத்தை பெற இருக்கும் துடிப்பை இன்னொரு படி கூட்டிவிடும். எங்களுக்கு நம்பிக்கையை செயலில் செய்து காட்டி தந்தவன் எங்கள் கடவுள். தங்களுக்கே ஆப்படிக்கும் குரங்குகளிடம் ஏன் வீண் பேச்சு பேசி முகத்தில் விறாண்டல் வேண்டுவான்?
 10. என்ன கறுவல் இப்பிடி சொல்லிப்போட்டீங்கள். வெளிநாடுகளில் முருகனின் உடைக்கு "பிக்கினி" என்று பெயர் வைத்து அறுபது பவுண்ட்சுக்கு அரை அடி துண்டை விக்கினம்.
 11. எனது விவசாய நண்பர் கூறினார். ஒரு மரத்தின் எடையிலும் பார்க்க அதன் வேர்களின் எடை இரு மடங்கு இருக்கும் என்று. சுயநலவாதிகள் வேருக்கு சுடுகஞ்சி ஊத்த முயற்ச்சிக்கிறார்கள்.
 12. அப்ப நீங்களே உங்கட வீட்டு முல்லைக்கு தேர் தரவில்லை என்று எங்கட டூடிங் தேரை கொழுத்தினது?
 13. அஸ்வினி, தமிழீழ தேரை உயிரை கொடுத்து இழுக்கும்போது, தேரை இழுப்பவர்கள் மட்டும் முக்கியமல்ல. ஐந்தாயிரம் பேர் இழுக்கும் தேரை திசை திருப்ப ஒரு ஒல்லி நோஞ்சான் கட்டையோடு பக்கத்தில் நடந்து வருவார். அவரை போய் தேரை இழு, மேல ஏறி அருச்சனை செய், நாதஸ்வரத்திற்கு சால்ரா போடு, எண்டெல்லாம் ஆக்கினைபடுத்தினால் தேர் தடம் மாறி செல்லம்மக்காவிண்ட படலையை பிச்சு கொண்டு போயிடும். இப்போது தமிழகத்தில் வந்திருக்கும் பெரியமாற்றத்திற்கு முக்கிய காரணிகளில் காசி அண்ணன் ஒருத்தர் என்றபடியால் முதுகில் குத்த கிழம்பிவிட்டார்கள் கேள்வி கேதீஸ்வரங்கள். அது சரி, ஸ்ரீ லண்காவிண்ட பிரதி அமைச்சர் அபிவிருத்தி செய்கிறேன் என்று விட்டு கிளப்புகளில் தண்ணி அடிச்சு கெட்ட ஆட்டம் போடுவதை பற்றி தட்டி கேட்கலாமே? கேக்கலாம் ஆனால் பயம்.
 14. செம்பகன், இந்த கவிதையை முன்பு பதிவு செய்தீர்களா? அருமையாக இருக்கிறது. பச்சை கவிதைக்கு ஒரு பச்சை. எம்மவர்களுக்கு மரம் என்றால் பார்க், பார்க் என்றால் பிக்னிக். அவ்ளோ தான்.
 15. எனது வெள்ளை பிரித்தானியா இராணுவ நண்பன் கூறினான், "புலி தான் உலகிலேயே மிகவும் சிக்கனமாக அதே நேரம் தாக்கத்தை நூறு மடங்கு கூட்டி கொடுக்க கூடிய இராணுவம். புலி தான் உலகிலேயே பயங்கரமான பெண் போராளி அணியை வைத்திருக்கும் ஒரே இராணுவம்" எனக்கு பெருமை பிடிபடவில்லை..... உலகத்திற்கு தமிழன் வீரத்தை இந்த நூற்றாண்டிலும் பறைசாற்றிய வீரர்களுக்கு வணக்கம்.
 16. சக்கரவர்த்தி, தம்மிடம் இருக்கும் பலம் தெரியாமல் அந்த நம்பிக்கையை பாபா மேல் செலுத்தி சிலர் பயன் பெற்றனர். ஆனால் பலர் பந்தா காட்ட தான் தான் வியாழக்கிழமை வருவார்கள். பாபா மண்டையை போட்ட பின் மடங்களில் கலக்சன் குறைந்து அங்கும் அடிதடிகள் வரத்தொடங்கிவிட்டன.
 17. கவிதை அண்ணா, நீங்கள் எதை எழுதினாலும் கவிதையாக பாய்கிறது. ஒரு பச்சை அண்ணா. பல இளையோரை நமது மூத்த தமிழீழ ஆர்வலர்கள் கையாள தெரியாமல் அவர்கள் ஓடிய காலம் உண்டு. நானும் எங்கே என்று தேடியபோது யாழில் அது கிடைத்தது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=94544
 18. அப்ப தமிழீழம் வென்றபின் எங்களையும் உருப்படியா இருக்கவிடமாட்டீங்கள் போல. நாங்கள் சிங்கப்பூர் அரசியல் வேணும் எண்டு கனவு காணுறம் ஆனால் தமிழ் நாட்டு அரசியலை திணித்து எங்களை ஒரு கை பார்கிறதுக்கு திட்டம் போடுறீங்கள். வாழ்த்துக்கள் அகூதா அண்ணா. நான் உங்களது ஊர் புதின விசிறி.
 19. குமாரசாமி அண்ணா, எண்ட சொந்தத்திலையும் இருக்கிறதுகள். ஆனால், வியாழன் இரவு பன்னிரண்டு மணிக்கு பின் சில்லி சிக்கன் சாப்பிடலாம். நான் வரும் மாவீரர் தினத்திற்கு சிலரை உதவிக்கு நாடினால் அவர்கள் பிசி என்று விட்டு இரண்டாயிரம் பவுண்ட்ஸ் செலவழித்து கேக் செய்து அவரின் முகத்தை அதில் பிரிண்ட் செய்து மடத்திற்கு எடுத்து செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் டாக்குத்தர், என்ஜினீயர், எக்கவுண்டன்ட், பிசினசு புள்ளி என்ற உயர் கூழாம்கள் தான்.
 20. குளவி எவ்ளோ அழகா கவிதை எழுதுறீங்க! ஆனா ஒரு சாபம்... நமக்குள்ளையே உறைஞ்சு கெடக்குது மாப்பு! ஒருவனை நல்லவன்னு சொல்ல & நிறுவ , இன்னொருவரை .கெட்டவன்னு ,,,எடுகோள் காட்டுறதே ,எம்மில் பலபேருக்கு...... பொழைப்பா போச்சு! == நான் கெட்டவரின் பல கெட்ட விடயங்களை கவிதையில் கொண்டு வரவில்லை. பல நல்லவர்கள், ஈழத்தமிழ் ஆதரவாளர்களும் பாபா பக்தர்களாக இருப்பதால் மனதை கடுமையாக புண்படுத்துவதை விரும்பவில்லை. இன்னிக்கு சென்னை மக்களின் குடிதாகம் தீர்க்க ஓடிவரும் கிருஸ்ணா நதிக்கு,, வாய்க்கால் கட்டிகொடுத்து , அவங்க நாக்கு வரண்டுபோகாம காத்தது... சாய்பாபா கட்டிகொடுத்த வாய்க்கால்கள்தான்! == அது சென்னை இருக்கும் தமிழகத்தின் சொத்தை அரசியல் வாதிகளின் பிரச்சினை. பெர்ர்ர்ரிய்ய்ய்யய்ய்ய வல்லரசு அஹிம்சை இந்தியா நான்கு புதிய போர் விமானங்களுக்கு செலவழிக்கும் பணத்தில் வாய்க்காலை கிண்டி விட்டு போயிருக்கலாம். நாட்டுக்கு எது முக்கியம் போர் விமானமா, தண்ணியா? புட்டபர்த்தி இப்போ மயானம் போல ஆனாலும்... சொத்தா சேர்த்த காசில , மருத்துவ மனையும், பள்ளியும்.கட்டின இந்த சித்தர் ... பெரிசா எந்த தப்பையும் பண்ணலையே... நம்ம நித்தியானந்த ரஞ்சி(தா) சுவாமிகளைவிட! == நித்தியானந்த சுவாமிகள் கூட ஒரு நடிகையை தான் கட்டுபிடி ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினார். ஆனால், நம்மவர் பெரிய புள்ளி. பிரேமானந்த காலம் தொட்டு. அது சரி, அந்த பள்ளியில் படித்த நாலு மாணவர்களை அந்த புனித புட்டபர்த்தியில் போலீஸ் வருமுன் அடித்து கொன்றார்களே? அப்போது அது மயானமாக தெரியவில்லையா? எம் தேசபிதா பிரபாகரனை.... சாய்பாபா கூட ஒப்பிடாதீங்க..,,குளவி! அவர் வேறு இவர் வேறு........ கடவுளாய் ...தன்னை காட்டிக்கொண்ட சாய்பாபா............ தன் மறைவுக்கு பின்னாலும்... கோடி சொத்துக்களை விட்டுப்போனார்.....! எமக்காய் போராடிய எம் தலைவன்...சராசரி மனிதன்..... தனக்காய் ... தன் குடும்பத்தைகூட... எமக்காய் விட்டுபோகல! யார்கூடவும் யாரையும் ஒப்பிடாதீங்க...எதுக்கும் குளவி...!! == இங்கே ஈழத்தமிழரால் கடவுளாக பார்க்கப்படும் இருவரை ஒப்பிடுகிறேன். நீங்கள் கூறுவது போல் கவரிங் நகையை , சுத்த தங்கத்துடன் ஒப்பீடு செய்ய சங்கடமாகத்தான் இருக்கிறது. விட்டா...கொக்கு காலு நீளமா இருக்குது எங்கிறதாலதான் ,,, அது கொத்தி முழுங்குற நெத்தலியும் ,,,, நீளமா இருக்குன்னு சொல்லுவீங்களா? == நண்பர் அறிவிலி. இந்த கவிதை தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆனால், நான் உண்மைகளை தான் கூறினேன். கொக்கையும், காகத்தையும் எப்படி மீன் பிடிக்கின்றன என்று ஒப்பிடலாம்.
 21. நாங்கள் கட்சியின் பரப்புரைக்கு தான் கிளாமர் சேர்ப்போம் ஆனால் இங்கே கட்சியின் சின்னத்தையே......... வல்வை அக்கா, இதை எல்லாம் எதிர்த்து உங்களது கட்சி அறிக்கை விடாதா?
 22. சகோதரி, ஒரு பெண் அவளது இடுப்பை ஆட்டினால் அவள் போகப்பொருள் ஆகிவிடுகிறாள் ஆனால் சூர்யா சிக்ஸ் பாக்கை ஆட்டினால் அவர் ஆண்மையை காட்டுகிறார் என்று உடனே கறுப்பி படத்தை மாத்திவிடுகிறார். நம் மாண்புமிகு தமிழ் சகோதரிகளுக்கு சொல்லி கொள்வதென்னவென்றால்... எங்களது அரச மனை கவிஞர் பெண்களை புகழ்ந்து ஒவ்வொரு நாளும் ராயல் ப்ளோகில் கவிதை வடிப்பார். படிக்காத மேதைகள் ஆடு பிடித்து விளையாடுவதை பற்றி புத்தகம் எழுதி உங்களை அறுப்பார்கள். மற்றும் நாம் யாழ் களத்தில் எல்லா தமிழ் சீரியல்களின் லைவ் தொடுப்பையும் பெற்றுத்தருவோம். முத்தாரத்தில் அண்ணிக்கு ஜால்ரா அடிக்கும் மச்சாள் தன் தாய் பக்கம் பாய்வாளா என்று தெரியவேண்டுமா? அளியுங்கள் வாக்கை யா. ச. ம. விற்கு. குளவி, யா.ச. ம. வசன பீரங்கி/ஒன்றரை பரப்பு குறுநில மன்னன்.
 23. இசை, இது எங்கள் சக்கரவர்த்தி கடாபியின் பின் லிபியாவால் வரும் உலக எண்ணெய் விலை வீக்கத்தை தனது ஆலோசகிகளுடன் விவாதித்த அன்று எடுத்த படம் போல் தெரிகிறது. பாவம் மாமன்னர், மக்களுக்காக உழைத்து இந்த படத்தில் கொஞ்சம் இழைத்து, களைத்து தெரிகிறார். எம்மன்னர் எந்த கட்சியின் அரவத்தையும் தன் மீசையின் கூர்மையாலேயே அறுத்தெறிந்துவிடுவார்.
 24. மானுட இனத்தின் சக்கரவர்த்தியே, உலகில் மூத்த குடிலுக்கு கிடுகு மேய்ந்தவரே, அரசியல் ஏதிலிகளுக்கு ஏவ பிறந்தவனே, எங்களது கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் கூடி மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்த மக்கள் காசிலேயே சின்னதாக எங்களுக்கு ஒருஆபீஸ் பிடிச்சிருக்கிறோம். சக்கரவர்த்தி ஓமென்றால், நாளைக்கே பால் காய்ச்சி விடுவோம்.