KuLavi

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,511
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Everything posted by KuLavi

 1. ஒரு பச்சையை கொட்டிவிடுகிறேன். மிகவும் அழகாக கவிதை வடித்துள்ளீர்கள். எனக்கும் ஊருக்கு போக விருப்பம் தான் ஆனா பயம். இன்றும் அந்த பசுமை நினைவுகள் தாம் இந்த வாழ்க்கை சுமையை நகர்த்த உதவுகின்றன.
 2. நல்லவன் என்றால் சிங்களவனையும் அணைக்கலாம். சிங்களவன் எங்கடையள அணைச்சு தான் அதுகள் எங்களுக்கு அலுப்பு குடுக்குதுகள். சகோதரி நான் உங்களுக்கு ஜனவரி மாதத்தில் இருநூற்றி ஐம்பது பவுண்ட்ஸ் அனுப்புகிறேன். இப்போது பல நிகழ்வுகள் வருவதால் பட்ஜெட் டைட். இவர்களில் யாராவது ஒருத்தருக்கு உதவுங்கள்.
 3. சுபேஸ், நெஞ்சை அழுத்துகிறது கதை. ஆர்மிக்காரன் செத்த சந்தோசத்தை சப்பாத்துக்காக உயிர்விட்டவன் எடுத்துவிட்டான். மிகவும் அருமையான கதை.
 4. புத்தன், வெள்ளோட்டமாக இருக்கிறது கதை. பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள். ரஞ்சிதா கோவிலுக்கு போறாள் என்று தெரிந்தவுடன் விடிய ஐஞ்சு மணிக்கு எழும்பி, அந்த குளிர் தண்ணிலையும் குளிச்சு, நந்தியாவட்டை பூ பிடுங்கி கொண்டு அம்மன் கோவிலுக்கு போன ஞாபகம் வருது. பிறகு ரஞ்சிதா, கோவில் ஐய்யாவிட மகனுக்கு தூது விடுறாள் என்று தெரிந்து எனது சின்ன இதயம் நொறுங்கிய நாளும் ஞாபகம் வருது. உங்கட இலக்கிய முயற்சி தொடரட்டும்.
 5. நன்றி புலவர். உண்மை சுபேஸ். தலைமை, தலைமை என்று எமது தலை மையை வெளிற வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
 6. ஊர் கோவில் விரதம் என்று ஐக்கிய இராச்சியத்தில் சின்னத்துரை வீட்டில் பறக்கும், நீந்தும், நாலு காலில் ஓடும் உயிர் இனங்களை பொரித்து, வறுத்து, அவித்து உண்ண தடை. வேலையால் திரும்பிய சின்னத்துரையரை சவர்மா கடை வாசலடியில் வந்த வாசம் நிறுத்தி, அவரது வயிற்றிற்கும் மூளைக்கும் போரை தொடக்கி வைத்தது. அந்த போரில் அவரது தொந்தி வயிறு உடன் வெற்றி பெற்றது. சின்னா: ஒரு கோழி சவர்மா. நல்ல உறைப்பா போடுங்கோ. சவர்மா: நல்ல உறைப்பாவாகவா? சின்னா: ஓம். நாங்கள் நல்ல உறைப்பு சாப்பிடுவம். சவர்மா: நீ ஸ்ரீ லங்கனா? சின்னா: இல்லை, ஸ்ரீ லங்காவில் இருந்து தப்பி வந்த ஒரு ஈழ தமிழன். நீ எந்த நாடு? சவர்மா: லெபனான். ஸ்ரீ லங்கா பிரச்சினையை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஏன் உங்களை கொல்கிறார்கள்? சின்னா: அவர்கள் இனவெறியர். அவர்களுக்கு ஒரு மொழி, ஒரு மத, ஒரு இன நாடு தேவை. சவர்மா: அப்படியா? எனது ஸ்ரீ லங்கன் வாடிக்கையாளன் அங்கு இசுலாமியர் எல்லாம் சுகமாக வாழ்வதாக சொன்னானே? சின்னா: அவன் ஒரு ஸ்ரீ "லை" ங்கன். அங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் வேட்டை ஆடப்படுகிறார்கள். இப்போதும் ஒரு பழைமை வாய்ந்த மசூதியை இடித்து தள்ளி விட்டார்கள். பல வளரும் இசுலாமிய இளையோரை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார்கள். சவர்மா கடைக்காரரின் முகம் கறுத்தது. அவரும் வறுத்த கோழியை ஊண்டி கத்தியால் சடார், சடார் என்று வெட்டி கொண்டே... சவர்மா: அப்படியா? சின்னா: ஆமாம். ஸ்ரீ லங்காவின் கொடியிலே அதை அவர்கள் தெளிவாக காட்டி உள்ளார்கள். சின்னா தனது கருப்பு பழத்தை(பிளக் பெரி) எடுத்து ஸ்ரீ லங்கா கொடியை கூகிளில் கொண்டு வந்தார். சின்னா: பச்சை கலர் இசுலாமியர்களையும், ஆரஞ்சு கலர் தமிழரையும் குறிக்கும். அந்த இரண்டு குறியீட்டையும் எதிர்த்து ஒரு கோபமான சிங்கம் வாளோடு நிற்கிறது. அந்த சிங்கத்தை புத்த மத இலைகள் காக்கிறது. சவர்மா: ஆமாம். ஆமாம். இந்த கொடி ஒரு இன விரோத கொடி. புத்தர்களுக்கு ஏன் வாள்? ஏன் மூர்க்கம்? சின்னா பெரு மூச்சு விட்டார். சின்னா: உனக்கு விளங்கியிருக்கிறது. பல தமிழர்களும், இசுலாமியரும் இந்த கொடியால் தம்மை போர்த்தியும், உயர்த்தி பிடித்து ஆட்டியும் திரிகிறார்கள். சவர்மா: ஏன் அப்படி செய்கிறார்கள்? அவர்கள் லூசா? சின்னா: அவர்கள் லூசிலும் பார்க்க மோசமானவர்கள். தம்மை பற்றி ஒன்றும் தெரியாத ஆட்டு மந்தைகள். சவர்மா: அந்த ஸ்ரீ லங்கா கார வாடிக்கையாளனிடம் இதை பற்றி கேட்க போகிறேன். சின்னா: தாரளமாக நாக்கை பிடுங்குவதை போல் கேள். சின்னா உணவை பெற்றுக்கொண்டு. தமிழர் பிரச்சினையை ஆர்வத்தோடு கேட்டதற்காக ஒரு ஐந்து பவுன் டிப்சும் வைத்து சென்றார். அவருக்குள் இன்னொரு ஈழ ஆதரவாளரை உருவாக்கியதில் மகிழ்ச்சி. வீடு செல்வதற்குள் பறப்பனவை பர பரப்பாக வாய்க்குள் செலுத்த தொடங்கினார்.
 7. சமூக கள வேலைகள் நிறைய இருந்த படியால் நேரம் மட்டு மட்டாகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் யாழை இரு முறையாவது கருப்பு பழத்தில் பார்த்துவிடுவேன். நன்றி புத்தர். நன்றி அண்ணா. எனக்கும் ஒவ்வொரு நாளும் வந்து யாழ் வாசகர்களை அறுக்க ஆசை தான் ஆனால் நேரத்திற்கு பஞ்சம். இனி கொஞ்சம் திடமாக வட்டமிட்டு திரிய முனைகிறேன். அகூதா, உங்களுடைய ஞாபக சக்தி அருமை. ஆமாம் நியூ யோர்கில யூதர் ஒருவருக்கு பரப்புரை செய்தவர் சின்னதுரை. மற்றும் சளைக்காமல் இந்த தளத்திற்கு நீங்கள் அளிக்கும் செய்திகள், கட்டுரைகள் அருமை. உங்களது தமிழ் சேவை தொடரட்டும்.
 8. தமிழ் நாட்டு நாழிதழ்கள் ரஜனி காந்த் செய்தி போட்டு காசு பார்ப்பது போல் சிலர் தலைவரின் பேரை பாவித்து "கிளிக்" பார்க்கிறார்கள். எல்லாம் மார்க்கெட்டிங்பா.
 9. உண்மையான புலி அமைதியாக இருக்கும். சந்தர்ப்பம் வரும் போது காரியத்தில் இறங்கும். வரிப்புலி வாயால் மிரட்ட பார்க்கும். சந்தர்ப்பம் வரும் போது வரியை மாற்றும்.
 10. எனக்கு ஈழத்து ஆதரவளார்கள் என்று கூறிவிட்டு ஸ்ரீ லங்கா கொடியை ஆட்டிக்கொண்டு கிரிக்கெட் பார்க்க போகும் தமிழரை கண்டால் பொத்திக்கொண்டு வரும். சிங்களவனே தன்னை பிரிடிஷ் அரச பரம்பரை போல் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் கொடியுடன் வாருவான் ஆனால் எங்கடையள திருத்த முடியாது. அந்த ஆதங்கமும் கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
 11. நன்றி உடையார். தமிழரில் இன்னும் பலர் பரப்புரை செய்யவேண்டும் என்பதே எனது ஆசை. அதை தூண்ட இந்த முயற்சி. இது மூன்றாவது தொடர். உங்களது பரப்புரை சேவை தொடர வாழ்த்துக்கள்.
 12. புங்கையூரன், புத்தகத்திற்கு நன்றி. நாம் புதிய இராமாயணம் படைக்கும் நாள் வெகு விரைவில் வரும். அந்த புத்தகத்தின் முடிவில் திரு அசுர ராட்சதர்கள் பார்சி ஸ்ரீ தேவர்களை வென்றார்கள் என்று இருக்கும். முதலில் நாம் தமிழர் கோவில்களில் தமிழில் வழிபாட்டையும், எந்த தமிழரும் பூசகராக வரலாம் என்பதையும் சட்டமாக கொண்டுவரவேண்டும். எனக்கு தெரிந்து ஒரு பெண்மணி இப்போது கனடாவில் மனித உரிமை அமைப்பிடம் இந்த சாதீய விடயத்தை எடுத்து சென்றிருக்கிறார்.
 13. இளங்கவி, நெஞ்சை தொடும் கவிதை. அதற்குள் நீங்கள் புகுத்தியிருக்கும் நியாயமும் அழகு.
 14. புங்கையூரான், அருமையான படைப்பு. உண்மைகளை கக்கி இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள மக்களில் தொண்ணூறு விகிதமானவர்கள் திராவிட எம். இருபது உயிர் அணுவை கொண்டவர்கள். ஆனால், கடந்த நானூறு வருடங்களாக எம்மை நேரா எதிர்க்க பயந்த பார்சி கூட்டம், எம்மை சாதி எனும் பிறப்பு தொழிலால் முடக்கி வைத்திருக்கிறார்கள். மோகன் தாஸ் காந்தி ஒரு பார்சி. நேரு ஒரு பார்சி. ஜின்னா ஒரு பார்சி. டாட்டா ஒரு பார்சி. இவர்கள் தான் சிங்கள உயர்சாதி கொவிகம, ரடல கூட்டத்தை உசுப்பி "ஸ்ரீ" லங்கா என்று பார்சி தலைப்பை எமது ஈழத்துக்கு வைத்தார்கள். ஆனால் பாருங்கள், திராவிடருக்கு எப்போதும் இராவணன் ஈழத்தில் தான் உதிப்பான். அவன் இவர்களது பெண்மையை இழிவுபடுத்து ராம ராஜீவுக்கு ஒரு பெண்ணை வைத்தே "மாலை" போட்டுவிட்டான்! தமிழ் ஈழம் கட்டாயம் கிடைக்கும். அது கிடைக்காது என்று நம்பும் ஸ்ரீ லங்கா தமிழர், இந்திய அடிபொடிகள் ஒதுங்கி நின்றாலே போதும்.
 15. பேட்டைக்காரன் கலக்கியிருந்தார். அவர் தான் அந்த படத்தில் உண்மையான ஹீரோ!
 16. நல்ல கதை. இப்பிடி ஆசை காட்டி எங்கட வெளிநாட்டு சனத்திட்ட பிடுங்கிறவை நிறைய பேர் இருக்கினம். எங்கட தமிழ் ஆக்களிலும் நிறைய பேர் சொற்ப காசுக்கு ஆசைப்பட்டு விலை மதிப்பில்லாதா மண்ணை விற்கினம். எங்கட தீவிலிருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீர்வழி வட்டாரத்தில் மக்கள் தொகையில் அறுபது விகிதம் இருக்கிறது. மூன்று இலட்சம் ஆக்கிரப்பு படை பிடித்து வைத்திருக்கும் யாழில் ஏக்கர் எண்பதாயிரம் பவுண்ட்சுக்கு போகிறது. தமிழ் ஈழம் கிடைத்தால் ஏக்கர் ஐந்து மில்லியன் பவுண்ட்ஸ் இலகுவாக தாண்டும்.
 17. சகோதரம் அகூதா, சின்னத்துரையர் ஒரு டிப்லோமட். அவர் அடுத்த முறை பாகிஸ்தானிய சிக்கன் டிக்கா கவுசில் எப்படி ஸ்ரீ லண்கவை கவிற்கிறார் என்று பாருங்களேன்.
 18. சின்னத்துரையரிண்ட கொம்பனிக்கு நியூ யோற்கில இருக்கிற ஒரு நாலு பில்லியன் டாலர் நிறுவனத்தில ஒரு இருபது மில்லியன் பவுண்ட்ஸ் கொன்ராட் பிடிக்கவேண்டும். சின்னத்துரையிரிண்ட பாஸ் நாலு பேரை இந்த முக்கிய வியாபர குழுவில் போட்டுவிட்டார். மற்றைய மூன்று பேரும் இந்த டீலை தவறவிட்டால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சின்னத்துரையரை முன்னுக்கு தள்ளிவிட்டார்கள். பாஸ் வேற சின்னா குழறுபடி செய்துபோடாதை என்று சொல்லி வெருட்டிப்போட்டார். நியூ யோற்க்கில சின்னத்துரையர் இறங்கியவுடனேயே கையில் ஏனோ ஒரு சிறு நடுக்கம். ரூபன்ஸ்டைன்: வெல்கம் சின்னா. சின்னா: நன்றி திருவாளர் ரூபன்ஸ்டைன். ரூபன்ஸ்டைன்: நான் நினைத்தேன், இலண்டனில் இருந்து ஒரு பெரிய குழுவே வரும் என்று. சின்னா: ஒ அதுவா... எங்கட கொம்பனி தான் உலகிலேயே ஸ்ட்ரீம் லைனிங்க்ல முதலாவது. அதனால், இந்த பொருளாதார சரிவு நேரம் எங்களுக்கு பயங்கர பிசி. பூசி மழுப்பினார் சின்னத்துரையர். ரூபன்ஸ்டைன்: சரி வா சின்னா. நாம் சென்று மதிய உணவை முடித்துவிட்டு வியாபாரம் பேசுவோம். சின்னத்துரையரும் சரி என்று கிழம்பி ஒரு கிளாஸ் தண்ணீர் இருபத்திமூன்று டாலர் விலை கொண்ட உணவகத்திற்கு சென்றார்கள். ரூபன்ஸ்டைன்: சின்னா கேட்கிறதென்று கோவிக்காத, நீ எங்க இருந்து இங்கிலாந்துக்கு வந்தனி? சின்னா: தமிழ் ஈழத்தில இருந்து. இப்ப ஸ்ரீ லங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி இருக்கிறது. எனது தாய் மொழி தமிழ். எங்களுக்கும், உங்களுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. ரூபன்ஸ்டைன்: அப்படியா? சின்னா: ஓம். எங்கட ஆக்களில மூன்று இலட்சம் பேரை நாசி ஸ்டைலில ஸ்ரீ லங்கா சர்வதிகாரி கொன்றழித்தார். ரூபன்ஸ்டைன்: நான் யூதன் என்று எப்படி உனக்கு தெரியும்? சின்னா: உனது பேரில் இருக்கிறதே! யூத பேரை அடையாளம் கண்டுகொண்ட பெருமிதத்தில் சிரித்தார் சின்னத்துரையர். ரூபன்ஸ்டைன்: வேறு எவ்வாறு யூதருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருக்கிறது? சின்னா: உலகப்போரின் போது சர்வதிகாரி ஹிட்லரிடம் இருந்து கப்பல்களில் தப்ப முயன்ற யூத ஏதிலிகள் திருப்பி ஹிட்லரிடம் அனுப்ப பட்ட மாதிரி எனது மக்களுக்கும் நடக்கிறது. ஸ்ரீ லங்காவின் சர்வதிகாரி முள்கம்பி முகாம்களுக்குள் வைத்து இலட்ச்ச கணக்கான மக்களை துன்புறுத்துகிறான். ரூபன்ஸ்டைன்: கேட்கவே கொடுமையை இருக்கிறது. இந்த முன்னேறிய காலத்திலும் இது எப்படி வெளியே தெரியாமல் போனது? சின்னா: அதற்கு சீனாவையும், ரசியாவையும், குற்றம் சாட்ட வேண்டும். ஸ்ரீ லங்கா இஸ்ரேலிடம் தான் முன்பு கிபிர் விமானங்கள், ட்வோர கப்பல்கள் எல்லாம் வாங்கியது. பின் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து தப்புவதற்காக சீவிடமும், ரசியாவிடமும் ஆயுதம் வாங்க தொடங்கிவிட்டார்கள். ரூபன்ஸ்டைன்: ஸ்ரீ லங்கா மேற்கு நாடுகளுக்கு எதிராக தன்னை மாற்றிவிட்டதா?? சின்னத்துரையருக்கு குஷி தாங்க முடியவில்லை. சின்னா: ஓம். ஸ்ரீ லங்கா சீனாவை இரண்டு கப்பல் தளங்களும், ஒரு விமான தளமும் கட்டவிட்டுவிட்டது. ஆனால், அமெரிக்காவை காலடி பதிக்கவிடவில்லை. மற்றும், ஸ்ரீ லங்கா ஈரானுக்கும் ஒரு ஒரு இரகசிய கப்பல் தளம் கட்ட இடம் கொடுத்திருக்கிறது. ரூபன்ஸ்டைன் முகம் சுருங்குகிறது. ரூபன்ஸ்டைன்: சின்னா, யு ஆர் ரைட்! எங்களுக்க நிறைய தொடர்பு இருக்கிறது! ஸ்ரீ லங்காவில ஒரு கண் வைக்க வேணும். சின்னா: ஓம் கட்டாயம் வைக்கவேண்டும். அவர்களுக்கு ஒரு முறையும் முதுகை காட்ட கூடாது. சரியான முதுகு குத்திகள். வட கொரியாவில் இருந்து இரானுக்கு எல்லாம் ஆயுதம் கடத்தி குடுத்தவை. பாகிஸ்தான் இசுலாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்காவை அட்டாக் பண்ண பயிற்சி கொழும்பில குடுக்கினம். ரூபன்ஸ்டைன்: சின்னா. நீ துன்பங்களை பட்டாலும், முன்னேறி, இலண்டினில் இருந்து துணிந்து தனிய வியாபாரம் பேச வந்திருக்கிறாய். எனக்கு தமிழரின் துணிவு மிகவும் பிடித்திருக்கிறது. நானே உனது உணவிற்கும் காசு கொடுக்கிறேன்! சின்னதுரையருக்கு மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை. இப்போது கை நடுக்கமும் இல்லை. எல்லாம் பரப்புரை செய்யிற வேலை.
 19. புத்த பகவான், லேடஸ்ட் நியூஸ் கேட்கலையே? எங்கட மத அமைப்பினர் லண்டனில இருந்து ஊருக்கு எட்டாயிரம் பவுண்ட்ஸ் காண்டாமணி அனுபினமாம். எங்கட கவுண்டமணிகளை நினைச்சால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. பகவான், எனக்கு மன தளம்பலை கட்டுப்படுத்த ஏதாவது தியான போஸ் சொல்லித்தாங்கோ!
 20. சகோதரி சாந்தி, உங்களது ஆதங்கம் விளங்குகிறது. எனக்கும் , நாம் செய்த, செய்து வரும் சமூக சேவைகளுக்காக ஸ்பொன்சர் தேடி அலைந்த அனுபவம் உண்டு. பலர் ஒரு ஐந்து மணி துளி சாமத்திய வீட்டுக்கு இருபாதாயிரம் பவுண்ட்ஸ் செலவழிப்பார்கள் ஆனால் தமிழ் அநாதை குழந்தைக்கு ஐம்பது பவுண்ட்ஸ் கொடுக்க நூற்றி எட்டு கேள்வி கேட்டு பத்து தடவை அவர்கள் வாசல்படி மிதிக்க வைப்பார்கள். அக்கா, நான் இப்போது தமிழரிடம் பணம் கேட்டு மெனக்கெடுவதில்லை. நமது தமிழரிலும் பார்க்க வெளிநாட்டுக்காரரே கூட பணம் அள்ளித்தருகிரார்கள். என்ன வெளிநாட்டுகாரரிடம் உதவி பெற அவர்களின் முறையில் அவர்களை அணுகவேண்டும். மற்றும், எனக்கு ஒரு இளைப்பாறிய வெளிநாட்டு தமிழரை தெரியும். அவர் முன்பு ஒரு கார் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர். அவரும் உதவி கேட்டு நொந்துவிட்டு ஒரு நூதன ஐடியாவுடன் வந்தார். அவர் பழைய கார்களை அடிமட்ட விலைகளில் வாங்கி தானே அதை திருத்தி பின் திருப்பி விற்று வரும் இலாபத்தில் தனது ஊரில் பொருளாதாரத்தால் பாவிக்கப்பட்டவர்களுக்கு பொருள் உதவி செய்து வருகிறார். இவரால் படித்து இவரது ஊரில் முன்னேறியவர்கள் பற்பலர். இவரால் மூன்று வேளை உணவருந்துவவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள். மனுஷரும் எழுபத்தி நாலு வயதிலும் பம்பரமாக சுழல்கிறார். என்ன செய்ய சொல்ல வருகிறேன் என்றால், உங்களது முயற்சி கட்டாயம் பலன் அளிக்கும். எனக்கும் வருங்காலத்தில் நேரம்/பொருள் கிடைக்கும்போது கட்டாயமாக உதவுவேன்.
 21. சகோதரி, இவரை போல் இன்னும் பல்லாயிரக்கனகானவர்கள் இருக்கிறார்கள். புலி என்று ஸ்ரீ லங்கா தனது ஜெநோசைடை மறைக்க முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ் அமைப்புகள் நேரடியாக இவர்களை காப்பாற்ற செல்வது கைதிகளுக்கு ஆபத்தில் முடியும். சிங்களவன் இவர்கள் முக்கியானவர்கள் என்று ஸ்பெஷல் விசாரணைக்கு கூட்டி சென்று விடுவான். அதற்காக, இந்த அமைப்புகள் எல்லாம் மரபு போர் வழி முறையில் ஐ. நா. போர் சட்டங்களுக்கு உட்பட்ட ஆள் சேர்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கைதிகளுக்கு உதவாமல் இருப்பதும் சரியல்ல. அமைப்புகள் இவர்களுக்கு என்று நிதி சேகரித்து நேசக்கரம் மற்றும் மத/ஊர் அமைப்புகள் ஊடாக போரால் பாதிக்கப்படவர்களுக்கு உதவலாம். அவர்களை இப்போது கைவிடல் ஆகாது!
 22. ஆனால், பாருங்கோ, இந்த ஸ்ரீ லங்கா இனவெறி அரசாங்கம் அந்நிய செலவாணியில் கண்ணை இருப்பதால் இந்த செய்திகளை பெரிது படுத்துவதில்லை. ஒவ்வொரு வருடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்ரீ லங்கா பெண்கள் பிணமாக அரபிய நாடுகளில் இருந்து நாடு திரும்புகிறார்கள். ஆனால், இந்த முறை பி.பி.சி செய்தியை உலக செய்தியாக்கிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவூதி ஸ்ரீ லங்கா பெண்மணிகளுக்கு தடைவிதித்திருக்கிறது. ஸ்ரீ லங்காவிற்கு இது ஒரு பெரிய சங்கு. இனி பேன்அரசர் துட்டகைமுனி, பிச்சை எடுக்க கிழம்புவார்.
 23. அமரர் வசம்புவின் கருத்துகளும், தமிழும் சுவையாக இருக்கின்றது. நல்ல ஒரு தமிழ் கருத்தாளர் களத்தில் குறைந்துவிட்டார்.
 24. கதாசிரியர் அபிராம். உங்களது எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கிறது. அந்த அப்பழுக்கில்லாத, எல்லாவற்றையும் துறந்து மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்ட ஒருவனின் அழியாத தியாகத்தை, அவனது கடைசி எண்ணங்களை, மிகவும் அழகாக வடித்திருக்கிறீர்கள். சருகுகள் வீழ்ந்தால் தான் மரத்துக்கு உரம் கிடைக்கும். முப்பத்தாயிரம் சருகுகள் தமிழ் ஈழம் என்ற மரத்திற்கு உரமேற்றிவிட்டு சென்றிருக்கின்றன. இந்த தியாகத்தால் வளர்ந்த மரத்தை வீழ்த்துவது முடியாத காரியம். காலம் வரும், நாம் சென்று கூடு கட்டும் காலம் திரும்பி வரும். கந்தப்பு ஐயா, எனக்கு தமிழ் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் ஜெனோசைட் பின் நம்பிக்கை இன்னும் கூடியது. இந்த ஜெனோசைட் விடயத்தை ஸ்ரீ லங்கா காரன் முடக்காமல் உலகிற்கு கூறும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் துவண்டிருப்பது சரியல்ல.
 25. மிகவும் சரியாக கூறினீர்கள் நுனாவிலான். நான் எனது வேலையில் ஒரு கங்கேரி பெண்மணியுடன் கதைக்கும்போது, தனது தாயார் உலகப்போரின் போது பிளேனில் இருந்து துண்டு போட்டு அவர் சர்ச்சுக்க்கு ஓடிப்போய் தஞ்சம் புகுந்ததாக கூறினார். நானும் எமது ஸ்ரீ லங்கா இராணுவ "அனுபவங்களை" கூறினேன். அவர் இப்போது ஒரு ஸ்ரீ லங்கா எதிர்ப்பாளி. வேலையில் ஸ்ரீ லங்கா தேயிலை இருக்க கூடாது என்று கொள்கை வைத்திருக்கிறார். எனது முதல் தமிழ் கதைக்கே ஐந்து பச்சை புள்ளி. ஆத்தா நா பாசாகிட்டேன்!