யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

KuLavi

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,511
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Everything posted by KuLavi

 1. இல்லை வாத்தியார். நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதான் உறவுகளின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லி செல்ல வந்தேன். நன்றி. வருகிறேன்.
 2. நன்றி சகோதரங்களே. ஒருவனை உசுப்பி முன்னுக்கு அனுப்புவது உங்களுக்கு கை வந்த கலை. மற்றவரை குறை கூறி களைத்து, காரியத்தில் குதித்து விட்டேன். நான் தவறு செய்தால் சுட்டி காட்ட யாழில் ஒரு கூட்டமே அலைகிறது என்று தெரியாதா? ஊக்கத்துக்கு நன்றி சகோதரங்கள்.
 3. நோக்கம் அஃதே அஃதே! சாத்திரி தொழிலில் இறங்கலாம் தப்பிலி. ;) நன்றி சகோதரி.
 4. அண்ணா, இவ்வளவு நாளா என்னை விவரங்கெட்டவன் என்று சொல்லி தான் கேள்விபட்டிருக்கிறேன். புகழ்ச்சிக்கு நன்றி. நன்றி. நீங்கள் இருவரும் இந்த தளத்திற்கும் செய்யும் பணி தொடரட்டும். உங்களது இருவரது திரிகளின் விசிறி நான்.
 5. யாழுடன் உறவு, வேறு முறைகளில் தொடரும்.
 6. நன்றி தப்பிலி. செயல் திட்டங்களில் மூழ்கிவிட்டோம். யாழுக்கு நாளுக்கு ஐந்து தடவை வராவிட்டால் தலை வெடித்துவிடும். கருத்தளிக்க நேரம் இல்லை மன்னிக்கவும். மறக்க முடியுமா? தமிழின் ஊற்று. நன்றி. யாழ் உறவுகள் என்னை கை விட மாட்டார்கள். நாம் முன்பு பெற்ற துன்பத்தை இப்போதும் தொடர்ந்து அனுபவிக்கும் தமிழீழ உறவுகளை மறக்கமுடியவில்லை.
 7. நன்றி விசுகு. நான் பல செயல்திட்டங்களை எமது மக்களுக்காகவும், பிரித்தானிய மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமை. விரைவில் நான் செய்திகளில் வர இருப்பதால் என்னால் எழுத்தை தொடர முடியாது. யாழை நாளுக்கு ஐந்து தடவை பார்ப்பவன் நான். இங்கு தமிழ் சிறி, அகூதா, தமிழ் அரசு, சாத்திரி, நெடுக்காலபோவான், சாந்தி, மல்லையூரான், நெல்லையன், புழு பேர்ட் ,அர்ஜுன் என்று பல நல்ல உறுவுகளுடன் கருத்தாடியதில் பல விடயங்களை படித்தேன், கற்றேன். இப்போது அவற்றை செயலில் நிறைவேற்ற கிழம்பிவிட்டேன். விடை பெறுகிறேன். எனது பாரமான மனதை உங்களது அன்பு சொற்களால் இன்னும் பாரமாக்காதீர்கள். நன்றி யாழ் உறவுகளே. உங்கள் சேவை, தமிழுக்கு தேவை.
 8. என்னை உரிமையுடன் தட்டி கேட்கும் எனது சகோதரங்களுக்காக பதில். இல்லை. புங்கையூரான், நந்தன வருடம் எனக்கு எகிறுவதால் நான் எழுதவதை தற்காலிகமாக நிறுத்தவேண்டிய கட்டாயம். எனக்கு அரசியல் பேய் அடித்துவிட்டது அண்ணா. எனக்கும் மனம் இல்லை தான் உடையார். ஆனால் நான் முழு நேர அரசியலில் இறங்க உத்தேசம். நான் எனது ஈழத்து உறவுகளுக்காக சொல் வீரனில் இருந்து செயல் வீரனாக மாறுகிறேன் அண்ணா.
 9. கடவுளே, நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு, நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு, நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு, நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு, நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு, நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு, நாம் சீறினால் எம்மை புலியாக்கு, நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு, நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு, நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு, நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே! நன்றி, விடை பெறுகிறேன். குளவி பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும். பி.பி.கு: குளவி குழவியாக குலவி வைத்து கலையவில்லை. தமிழக வார இதழில் ஆறு வருடங்கள் ஈசனாக இருந்து, முள்ளி வாய்க்காலின் பின் குளவியானேன். இப்போது இன்னொரு பிறப்பெடுக்கிறேன். தளங்கள் வேறு, களங்கள் பல்வேறு, ஆனால் எப்போதும் குறி தமிழீழத்தில். சந்திப்போம்.
 10. எனது கடைசி கருத்து. ஆனந்தபுரத்தில் எண்ணூறு புலிகள் தான் இருந்தார்கள் அவர்களில் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டவர்கள். அண்ணாவை இரபதாயிரம் ஸ்ரீ லங்கா காடைகளும், இந்திய கூலிகளும் சுற்றி வளைத்தன. அண்ணனுடன் வெளியேறாமல் எதிரிக்கு நரகத்தை காட்டினார். தீவிர விசுவாசி. பெரும் இழப்பு தான். ஆனால் தன்னை போல் பல புலிகளை உருவாக்கி சென்றார். வீரத்தின் மறு உருவம். தமிழர் தாகம் தமிழீழ தாயகம்.
 11. பாவம் முருகன். அசந்தால் இருக்கும் துண்டையும் உருவிவிடுவார்கள் என்று நித்திரை இல்லாமல் அலைகிறான். மற்றும் மயிலை குருமா போட்டுவிடுவார்கள் என்று கைலாசத்தில் ஒழித்துவைத்திருபதாக கேள்வி.
 12. உண்மை. தமிழ் நாடு சினிமாவை கொப்பி அடித்து திருமண சடங்கு, பிள்ளைதாச்சி சடங்கெல்லாம் செய்து காப்பெல்லாம் நொறுக்கி தள்ளுகிறார்கள். வரனின் தட்சிணை கூட பெண்ணின் அப்பனின் தலையில் கட்டபட்டது. நானும் சாமத்திய வீட்டுக்கு எதிர் தான் ஆனால் இந்த கொடி டிரென்ட் வளரவேண்டும் என்று தான் ஆதரிக்கிறேன் இங்கு. அறுபது வயது ஹீரோ பதினாறில் சமைந்த பிஞ்சை பற்றி காமத்துடன் பாடுவதற்கு ஏன் சென்சார் குழு அனுமதிக்கிறது? குழுவில் பெண்களும் இருப்பார்களே?
 13. ஒன்றும் செய்ய முடியாது. மரபணுவில் ஊறிவிட்டது.
 14. மெல்ல மெல்ல புலிக்கொடி மேலே பறக்கிறது. விசுகு அந்த தமிழீழ ஆதரவாளர்களுக்கு எனது நன்றியை தெரிவியுங்கள். Situation Song? Why not?
 15. செய்தி வரும். திராவிட முருக்கன் சீறி பாயும் நாள் வரும்.
 16. நாம் இந்த உலக கல்லில் இருந்து வந்தோம் என்று காட்டவே லிங்கத்தை கல்லில் செய்தோம். ஆனால் சில நூறு வருடத்திற்கு முன் வந்த பிராமணிகள் அர்த்தத்தை சொல்லி கொடுக்காமல் மணி அடித்து கல்லை வைத்து காசு பார்கிறார்கள். நானும் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதிறன்.
 17. இருபது பவுண்ட்ஸ் உருவலாம். லண்டன் சாத்திரியார் ஒருவர் மெரீனா பீச்சில் மாளிகை வேண்டி போட்டிருக்கிறார். எருமை, கழுதைகள் தான் சாத்திரம் பார்க்க வருவதால் அவற்றை தவிர்த்திருக்கலாம். இங்கொருவர் விடுமுறையில் செல்லலாமா என்று கூட சாத்திரம் பார்த்து தான் முடிவெடுப்பார்.
 18. பல முறை வாங்கியிருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது. நாலாம் வகுப்பில் எனது தத்துவ நண்பன் இதையெல்லாம் கணக்கில் வைத்திருக்க கூடாது என்று கூறினான். எனது துணைவியார் பிள்ளைதாச்சியாக இருக்கும்போது குண்டு ஜோக் சொல்லி ஒருக்கால் வாங்கி இருக்கிறேன். இப்போது யார் குண்டு ஜோக் சொன்னாலும் கண்ணில் பயம். பெண்ணின் கை பூ போன்றது, இட்லி போன்றது என்று பொய் எழுதும் கவிகளை பிடிக்காது.
 19. முக்கியமாக எமது கோவில்களிலும், உணவக கழிவறைகளிலும் சுத்தம் வேண்டும். எமது கோவில் கழிவறைக்குள் கால் வைக்க கடவுளே பயப்படுவார். உண்மை. எனது உயர் அதிகாரி நான் உள்ளிருக்கும் போது ஒரு மினி மீட்டிங்கே வைத்து சென்றிருக்கிறார்.
 20. கதை அழகண்ணா. தொடர வாழ்த்துக்கள். நல்ல நக்கலாக செல்கிறது.
 21. தொடக்கம் சூப்பர் அண்ணா. பரோட்டா வித் கிங்பிஷர் குட் சாய்ஸ்.
 22. யாழ் பேத்தை அமைச்சரின் குடியையும் சேர்த்தால் மில்லியன் லீட்டர் தாண்டும்.
 23. சிறி சூரனை வதம் செய்த திரு முருகனை, சிறி முருகன் என்று அழப்பைதே toooo much.