Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

MEERA

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  4,420
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by MEERA

 1. கோசான், நகையை சிறீலங்கவில் வாங்குவதிலும் பார்க்க இங்கு வாங்குவது இலாபமும், பாதுகாப்பானதும். காப்புறுதி செய்யக் கூடியகாகவும் இருக்கும்…
 2. அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களை நாசம் செய்யப் போகின்றது…….
 3. தனி ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்…? மக்கள் வீட்டுத்தோட்டம் செய்தும் உள்ளாடைகளை தைச்சு போட்டும் இருநேரம் சாப்பிட்டும் சிறீலங்காவின் பொருளாதரத்தை உயர்த்துகிறார்கள். சில நாட்களில் நாம் £ 100 கொடுத்து ஓரு சிறீலங்கன் ரூபாயை வாங்கப்போகின்றோம்.
 4. இது பிழையான கருத்து… ஆசியாவிலிருந்து ஐரோப்பா நோக்கிய கொள்கலனுக்கான கட்டணம் 10 மடங்கிற்கு அதிகமாக கூடிவிட்டது. சீனாவிலிருந்து 40 அடி கொள்கலன் $ 10,000 இற்கும் கிடையாது.. இது இந்த மாதத்திற்கான நிலைமை… தற்போது சிறீலங்காவில் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்தி உள்ளதால் கொள்கலன் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டணம் அதிகரிக்கும். இதனால் தமிழ் கடைகளில் விலைகள் அதிகரிக்கும்.
 5. உங்களுக்கு விளக்கம் குறைவு என்று தெரியும்… ஆனாலும் தனியின் பதில் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்..0
 6. நாங்கள் இங்கு design design ஆ போட்டுக் கொண்டு அங்கு உள்ளவர்களை தைச்சு போடு என்பது சரியா? ஆட்சியில் உள்ளவர்களின் தவறுக்கு சாதாரண மக்கள் பலிக்கடாவா???
 7. ஏன் நீங்கள் முன்னர் தைச்சு போட்டனீங்களோ?
 8. ஏன் மூலம் இருந்தால் தான் நம்புவீர்களா…? Google இல் “ sri lanka import restrictions “ எனத் தேடிப்பாருங்கள் போதியளவு உள்ளது. (தமிழ் மொழி இணைய ஊடகங்களில் இல்லை) https://island.lk/margin-deposit-requirement-against-importation-of-non-essential-goods/
 9. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபய அரசு பதவியேற்றது. புதிய அரசு பொறுப்பேற்ற அந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவிகித்ததுக்கும் அதிகமாகச் சரிந்தது. இலங்கை மத்திய வங்கிகளின் தரவுகளின் படி 2019-ம் ஆண்டு இலங்கையின் அன்னிய செலவாணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஜூலை மாத நிலையில் இந்த கையிருப்பு வெறும் 2.8 பில்லியன் டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
 10. நீங்கள் சொன்னபடி அவர் செய்தாலும், இப்படி ஓருவர் கொடுக்கிறார் என்று கேள்விப்பட்டு சனம் திரளுவதை தடுப்பது எப்படி? ஒவ்வொரு நாளும் சதோச வின் முன்னால் திரளும் மக்களை சிறீலங்க அரச அதிகாரம் இப்படியா கையாளுகிறது???
 11. அங்க சனம் மண்ணெண்ணைக்கே வழியில்லாமல் நிக்கிறது….
 12. மருதங்கேணி நன்னீர் விடயம் உட்பட பல. தமிழர்கள் எங்கு எந்த விடயத்தை தொடங்கினால் தமக்குள் அடிபடுவார்கள் என்று தெரிந்து தான் சிங்கள பெளத்த பேரினவாதம் ஆரம்பிக்கும் அல்லது தமது கட்சிக்கூடாக எதிர்ப்பை, புரளியை கிளப்பிவிடும்.
 13. “போராட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான போராளிகளின் அரப்பணிப்பு தமிழ்பொதுமக்களின் பல ஆண்டுகால சொல்லணா துயரங்கள் இழப்புக்களின் பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட கிழக்கில் ஒரு அரசியல் அலகை ஏற்றுக்கொண்டுருந்தால் இன்று இவ்வாறு புலம்ப வேண்டிய நிலை வந்திருக்காது. காற்றுள்ள போது தூற்றி கொண்டிருக்க வேண்டும். போராடிய கடந்த தலைமுறை விட்ட தவறை பாடமாக எடுத்து அடுத்த தலைமுறையாவது அறிவு பூர்வமாக சுயமாக சித்தித்து உரிமைகளை பெறட்டும். இப்போதுள்ள தலைமுறையான நாம் எமக்குள் இவ்வாறு பத்தி பந்தியாக ஒப்பாரி வைப்பதற்கு தான் லாயக்கு” அண்ணை என்னவொரு கண்டுபிடிப்பு…?
 14. நாதம்ஸ் அது மீன்பிடி அபிவிருத்தி, அதற்கு கூட GR ஒத்துவரவில்லை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மென் கடன் 400m$.
 15. தீவக தண்ணீர் பிரச்சனைக்கு ஓரே தீர்வு கடல் நீரை நன்னீராக்குவதே. அதற்கும் தெற்கு அனுமதி அளிக்கணுமே….! வடக்கு முன்னாள் ஆளுநர் கூட அண்மையில் தனது முகநூலில் தன்னால் இரண்டு வருடங்களுக்கு 400m $ செலவில் பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக அபிவிருத்தி திட்டம் விலை மனுக்கோரலுடன் (?) முடிவுக்கு வந்துவிட்டதாக, இது தொடர்பாக முழுமையாக என்ன நடந்தது என்று கூட அவரால் கூற முடியவில்லை.
 16. யாழ் வைத்தியசாலையை முற்றாக நகர்த்துவது சாத்தியமில்லை ஆயினும், சில பகுதிகளை சாதாரண ( non emergency) சத்திர சிகிச்சை, மாதாந்த அல்லது தொடர் சிகிச்சை ( routine) , அல்லது சில குறிப்பிட்ட பிரிவுகளை தீவுப்பகுதி நோக்கி நகர்த்தலாம். ஆனால் தீவுப்பகுதிகளை பாரிய அளவில் சுற்றுலா மையமாக அமைக்க சிங்கள பெளத்த பேரினவாதம் ஒரு போதும் அனுமதிக்காது.
 17. தற்போது வடகிழக்கில் உள்ள இளைஞர்கள் ஆங்கில மொழியியை உள்வாங்க தொடங்கி விட்டனர். இதற்கு சமூக வலைத்தளங்களும் ஓர் காரணம்.
 18. தமிழ் பிரதேசத்தில் பணியாற்றும் ஓர் சாதாரண தமிழ் ஊடகவியலாளர் பிரச்சனை இப்போது அரசியல் & தென் பகுதி படிப்பு , வேலை என்று வந்து உள்ளது. சிறீலங்காவில் அரசகரும மொழிகளில் ஒன்று தமிழ் என்பது பலருக்கு இங்கு மறந்துவிட்டது.
 19. சிங்களத்திற்கு வாழ்க்கைப்பட்டு போனவர்கள் சிங்களம் படியுங்கள் தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர்கள் தமிழ் படியுங்கள்….
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.