Jump to content

Queen

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    841
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by Queen

  1. http://keetru.com/index.php?option=com_content&view=article&id=23319%3A2013-03-21-05-38-29&catid=1%3Aarticles&Itemid=264 அமெரிக்க தீர்மானம் - இனி நாம் செய்ய வேண்டியது என்ன? கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றைய நமது நிலைப்பாடுகள்: தனித் தமிழீழம் என்பது மட்டுமே ஈழத் தமிழ் மக்களின் துயரற்ற, கண்ணியமான‌ எதிர்கால வாழ்விற்கான நிரந்தரத் தீர்வு. இந்த கருத்தைப் பரந்த அளவில் அனைத்து மக்களிடமும் கடந்த சில நாட்களில் நாம் கொண்டு சென்றிருக்கிறோம் – வெற்றிகரமாக. ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனின் முன்பாக மார்ச் 21 ஆம் தேதியன்று ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுரிமை குறித்து அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இந்தத் தீர்மானம் ஒன்றுபட்ட இலங்கை என்ற நியாயமற்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே அதனை நாம் நிராகரித்துள்ளோம். அமெரிக்க அரசினைப் போலவே இந்திய அரசும், தமிழக அரசும், தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் ஒன்றுபட்ட இலங்கை என்பதன் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன. எனவே அவற்றையும் தவறானவை என்று நாம் நிராகரித்துள்ளோம். நான்காம் ஈழப்போரின் போதும், அதன் முன்னரும், பின்பும் இலங்கையின் சிங்கள அரசால் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை விசாரிக்கக் கால வரம்பிற்குட்பட்ட சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் என்பது நமது கோரிக்கை. நமது இந்தக் கோரிக்கையை இன்று தமிழக அரசும், தி.மு.க போன்ற அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஐ.நா.மனித உரிமைக் கமிஷன் முன்பாகக் கொண்டு வரப்படவுள்ள அமெரிக்க அரசின் தீர்மானமும், மத்திய அரசின் நிலைப்பாடும் சர்வதேச விசாரணை தேவையில்லை என்கின்றன. இனப்படுகொலை குறித்த விசாரணையை இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசே நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று அவை கூறி வருகின்றன. 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த திரு.சரத் டி சில்வா அவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட முள்வேலி முகாமைப் பார்வையிட்ட போது கூறிய உண்மையை அவர்கள் ஏனோ மறந்து போய்விட்டார்கள். “இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்த நாட்டின் நீதி அமைப்பில் அவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை” என்பதுவே திரு.சில்வாவின் கூற்று. ஐ.நா.சபை மற்றும் அமெரிக்க அரசின் மேற்பார்வையில் 2011 ஜனவரி 9-15 தேதிகளில் சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்து செல்வதனைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தெற்கு சூடானைச் சேர்ந்த 98.83% மக்கள் பிரிந்து செல்வதுதான் தீர்வு என்று வாக்களித்தனர். 2011 ஜூலை 9 ஆம் தேதியன்று தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதுபோலவே 1993 ஏப்ரலில் எத்தியோப்பியாவில் இருந்து எரிட்ரியா தனி நாடாகப் பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து சென்றது. இந்த முன்னுதாரணங்களின் அடிப்படையிலேயே இலங்கையில் இருந்து தமிழ் ஈழம் பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பை ஈழத் தமிழ் மக்களிடம் சர்வதேச நாடுகளும், அமைப்புகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதான தமது கருத்துக்களை இன்றுவரை தமிழக அரசும், தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக முன்வைக்க மறுத்து வருகின்றன. இன்றைய சூழ்நிலை: கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்து விட்டால் நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்ற தமிழக அரசின் கணக்கு தவறாகியுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்ட பின்னரே நமது போராட்டம் பரந்து விரிந்துள்ளது. ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனில் மார்ச் 21 ஆம் தேதியன்று அமெரிக்க அரசின் தீர்மானத்தின் மீது நடக்க உள்ள வாக்கெடுப்பிற்குப் பிறகு நமது போராட்டம் முடிவுக்கு வந்து விடும் என்பதே அரசு மற்றும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நமது போராட்டத்தினைக் கண்டு தமிழக அரசியல் கட்சிகள் பொதுவான அச்சத்தைக் கொண்டிருக்கின்றன. நமது கோரிக்கைகளுக்கு உடன்படாது போனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமக்குப் பின்னடைவுகள் ஏற்படலாமோ என்ற அடிப்படை அச்சம் அவற்றிற்கு இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் கூட, அவை தனி ஈழம் தொடர்பான பொது வாக்கெடுப்பு குறித்த தமது நிலைப்பாட்டை இன்றளவும் மாற்றத் தயாராயில்லை. என்ன காரணத்திற்காகவோ, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினை முதலில் ஆதரித்ததைப் போலவே நமது போராட்டத்திற்கும் தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. மார்ச் 21-ற்குப் பிறகு இந்த நிலைப்பாடு தொடருமா என்பது தெரியாது. காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் இடது கம்யூனிஸ்டு போன்ற தேசியக் கட்சிகளும் நமது கோரிக்கைகளை இன்றளவும் உதாசீனப்படுத்தி வருகின்றன. இந்து பத்திரிகையோ நமது நிலைப்பாடு தவறானது என்று தலையங்கம் எழுதியுள்ளது. ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்க அரசிற்கு இன்றளவும் நாம் ஒரு பொருட்டாக இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை. இனப்படுகொலைக்கான விசாரணை குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலேயே இலங்கைக் கடற்படையானது தமிழக மீனவர்களை அடித்து இழுத்து சென்றிருக்கிறது. இது குறித்து மத்திய அரசானது வழக்கம் போலவே எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை. எனவே, சில அடிப்படைக் கேள்விகளை நாம் இங்கு நம்மிடமே எழுப்ப வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. லட்சக் கணக்கில் பெருந்திரளாக இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தினை நம்மால் எவ்வளவு காலத்திற்குத் தொடர முடியும்? நாம் முன் வைத்துள்ள கோரிக்கைகளை பரந்த அளவில் பிறருக்குத் தெரிவிப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அவற்றை நம்மால் நிறைவேற்றிட முடியுமா? போராடுவதற்கான சூழ்நிலையை அரசும், கல்வி நிறுவனங்களும் அடைத்திடும் பட்சத்தில் நமது கோரிக்கைகளை நிறைவேற்றிட நாம் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகள் யாவை? அரசுகளின் செயல்பாடுகளும், நாமும் இலங்கையின் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை மத்திய அரசு துரிதமாகப் பெற்றுத் தரவேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழக சட்டசபை 2011 ஜூன் 8 ஆம் தேதியன்று இயற்றியது. மேலும், போர்க் குற்றங்களை செய்த குற்றவாளிகளின் பெயர்களை ஐ.நா.சபையை வெளியிட வைக்க வேண்டும் என்றும் அது மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு இன்றளவும் கண்டு கொள்ளவேயில்லை. மாறாக, இலங்கை அரசுக்கு உதவிடும் பல்வேறு நடவடிக்கைகளை அது பின்னர் மேற்கொண்டது. மாநில மக்களவையின் தீர்மானத்திற்கே செவி சாய்க்காத மத்திய அரசு மாணவர்களான நமது (கால வரம்பிற்குட்பட்ட) போராட்டத்திற்கு எவ்வாறு செவி சாய்க்கும்? 2009 ஜனவரி 29 அன்று நெருப்பிட்டு வீர மரணமடைந்த முத்துக்குமாருக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியானது அரசு, கட்சிகள் மற்றும் ஊடகங்களின் தந்திரத்தால் நீர்த்துப்போன நிலையை அடைய நேரிட்டதைப் போல நமது போராட்டமும் நீர்த்துப் போகும் நிலையை எட்டாது என்பதற்கு உத்திரவாதம் உண்டா? இதுபோன்ற தடைகளையும், இடர்பாடுகளையும் மீறி நம்மால் நமது கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்ய முடியுமா? முடியும் என்றுதான் நம்மால் கருத முடிகிறது. வெற்றிக்கான வழி என்ன? அமெரிக்க அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையில் உள்ள இன்றைய உறவைப் புரிந்து கொண்டால்தான் இதற்கான வழியினைக் கண்டறிய முடியும். 2005 ஜூலை 18 ஆம் தேதியன்று இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை முன் வைத்தன. இந்தியாவில் இயங்கிவந்த அணு மின் நிலையங்களை ராணுவ மற்றும் மின்சார மின் நிலையங்களாக வகைப்படுத்த இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதன் பிறகு வந்த காலகட்டத்தில்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்துமே அமெரிக்க அரசால் இயக்கப்படுபவையோ என்ற அளவிற்கு சந்தேகத்தை எழுப்பின. 1987 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கையின் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் இந்திய அரசின் அனுமதியின்றி பிற நாடுகளின் இராணுவங்கள் உபயோகிக்க இலங்கை அரசு அனுமதி வழங்க முடியாது. ஆனால் 2007 மார்ச் 5 ஆம் தேதியன்று இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இதற்காக ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதுகுறித்து இந்திய இராணுவ நிபுணர்கள் கவலை தெரிவித்தும் கூட ராஜீவ் வழி வந்த காங்கிரஸ் அரசு இதனைக் கண்டு கொள்ளவேயில்லை. இலங்கையின் மீது தனக்கிருந்த ஆளுமையை அமெரிக்க அரசிடம் முழுமையாக விட்டுக் கொடுப்பதில் அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இதுவே இலங்கையில் இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையில் ஏற்பட்ட கூட்டின் துவக்கம். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பாராளுமன்ற ஒப்புதலை வாங்க 2008 ஜுலை 10 ஆம் தேதியன்று காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வரலாறு காணாத கேலிக்கூத்துகள் அமெரிக்க அரசினை மத்திய அரசு எவ்வாறு கருதுகிறது என்பதனைத் தெளிவு படுத்தியது. இந்திய மக்களின் நலனைக் காப்பதை விட அமெரிக்க அரசின் நலன்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுவே தனது கடமை என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்பதுபோல இதன்பின்னர் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஆக, அமெரிக்க அரசின் ஆளுமையின் கீழ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இயங்குகிறதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. 2009 மே 13 ஆம் தேதியன்று பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தது. மத்தியில் காங்கிரசுக்குப் பதில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திடும் பட்சத்தில் இதுகாறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் காங்கிரஸ் அரசால் விட்டுக் கொடுக்கப்பட்ட இலங்கையின் மீதான தனது ஆளுமையை பா.ஜ.க. ஒருவேளை கோரினால் என்ன செய்வது? அப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக பா.ஜ.க.வை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக மே 15 ஆம் தேதியன்று அமெரிக்கக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் கீட்டிங் இந்தியா வந்தார். “இலங்கைக்குள் எவரும் வரலாம்; போகலாம். சீனா வரக் கூடாது என்று இந்தியா சொல்லக்கூடாது. அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகளை அது தனியாகவே சமாளித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் உதவி கிடைக்காது” என்று எச்சரித்தார். மே 17 ஆம் தேதியன்று மீண்டும் காங்கிரசே ஆட்சியைப் பிடித்ததனால் அந்த எச்சரிக்கைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. எனவேதான் அமெரிக்க அரசின் முழு ஆளுமையின் கீழ்தான் மத்திய அரசு இயங்கி வருகிறது என்று நாம் கருத வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட மத்திய அரசிடம்தான் அமெரிக்க அரசின் தீர்மானத்தை மாற்றி அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவரும் மனு கொடுத்துள்ளார்கள். இந்த மனு வழக்கம்போல கண்டு கொள்ளப்பட மாட்டாது என்பது உறுதி. எனவே, இப்படிப்பட்ட மத்திய அரசிடம் நமது கோரிக்கைகளை முன் வைப்பது என்பது நமது நேரத்தை விரையமாக்கும் செயலாக இருக்குமேயொழிய பயனுள்ள ஒன்றாக இருக்க முடியாது. எனவே, நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசிடம் வைப்பது மட்டுமே நமக்குள்ள ஒரே வழியாக உள்ளது. மத்திய அரசே நம்மைக் கண்டுகொள்ளாதபோது அமெரிக்க அரசா நம்மைக் கண்டுகொள்ளப் போகிறது என்ற கேள்வி எழும். மத்திய அரசையாவது தேர்தலின்போது மாற்றிட முடியும். அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை நமது பெருந்திரள் போராட்டங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் எவ்வாறு மாற்ற முடியும்? ஈராக் மீதான படையெடுப்பைக் கண்டித்து அமெரிக்காவில் நடந்த பெருந்திரள் மக்கள் போராட்டங்களையே கண்டு கொள்ளாத அமெரிக்க அரசா நமது போராட்டங்களைக் கண்டு கொள்ளப் போகிறது? என்ற கேள்வி எழுகிறது. நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கானது; அது தொடர்பான அமெரிக்க தீர்மானம் பற்றியது. எனவே அதனை எரிக்கின்ற, பாடையில் ஏற்றி புதைக்கின்ற சிம்பாலிக் போராட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். ஆனால், எரிக்கப்படுவது ஈழ மக்களின் வாழ்வுரிமைக்கான அமெரிக்கத் தீர்மானமாக இருக்கும்போது அதனை அமெரிக்கா கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால் இதில் அமெரிக்காவிற்கு இழக்க ஒன்றுமில்லை. இந்தத் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக இந்தியாவைக் கட்டிப் போட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை நாம் எதிர்க்கும் பட்சத்தில் அமெரிக்காவிற்கு அது இழப்புகளை – அதாவது சந்தை இழப்புகளை – கொண்டு வருவதாக அமையும். “தெற்கு சூடானை சூடானில் இருந்து பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தியதைப் போல தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவோம்; தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரித்து தண்டனை அளிப்போம்” என்ற நமது கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தனது பழைய தீர்மானத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றி அமைக்காவிட்டால் மாற்றி அமைக்கும் வரை நமது வாழ்விலிருந்து அமெரிக்க நிறுவனங்களைத் துடைத்து எறிவோம். கின்லே, அக்குவாபினா, ஸ்ப்ரைட், பெப்சி, கோக்கோ-கோலா, லேஸ் சிப்ஸ், ஃபோர்ட், செவர்லே கார்கள், வால்மார்ட் போன்றவற்றைப் புறக்கணிப்போம். அதுபோலவே நமது நாட்டையும், நமது வளங்களையும் கட்டிப்போட முனையும் அனைத்து அமெரிக்க ஒப்பந்தங்களுக்கும் பாடை கட்டுவோம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான தீர்வு என்ற தீர்மானத்திற்குப் பாடை கட்டும்போது கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க அரசானது இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தங்கள். கின் லே தண்ணீர் போன்ற பொருட்கள் ஆகியவற்றிற்குப் பாடை கட்டும்போது அதிர்ச்சி அடையும். இந்தப் போராட்டங்கள் அனைத்தையும் நாம் நம் கல்லூரிகளுக்குச் சென்றுகொண்டே மேற்கொள்ள முடியும் என்பதால், இவ்வகைப் போராட்டத்தினை மார்ச் 21 –ற்குப் பிறகும் கூட நம்மால் செவ்வனே நடத்திட முடியும். இந்த நடவடிக்கைகளே நம்மைச் சுற்றிப் படர்ந்துள்ள இருளை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ள முதல் நடவடிக்கைகளாம். இந்த நடவடிக்கைகளையே இனி நாம் கை கொள்வோம். நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். - கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள்
  2. http://www.ndtv.com/video/player/india-decides-9/human-rights-battle-should-india-vote-against-lanka-at-un/268897 Human rights battle: should India vote against Lanka at UN? http://www.ndtv.com/video/player/news/hundreds-of-students-arrested-in-chennai-for-anti-lanka-protests/268838?vod-related Hundreds of students taking part in anti-Lanka protests were arrested in Chennai today when they tried to lay siege on the Raj Bhavan. They are demanding that India move a resolution against Sri Lanka -- for alleged war crimes against its Tamil population -- at the UN's human rights body meet in Geneva. They also want India to seek amendments to a resolution being sponsored against Colombo by the US to make it tougher. The UN Human Rights Council is slated to vote on this resolution on March 22. State-wide student protests over the issue have escalated today even as the Congress-led UPA government tries to hammer out a political consensus with its major ally, the DMK
  3. Pls share this....IIT students protest and their demands....... REJECT ANYTHING LESS THAN A NUREMBURG LIKE WAR CRIME TRIAL IN TAMIL EALAM POGRAM! PROTEST BY STUDENTS IIT MADRAS ON 17.03.2013 Followed by the release of videos by Channel 4 on the Tamil Ealam pogrom and the forthcoming resolutions going to be passed by America in Geneva, recently there is a welcoming student uprising throughout Tamil Nadu. What is regrettable here is, the demands putforth by the students are mere reflections of the electoral parties’. On one hand we are behind the TESO resolution - demanding India to support America’s “Lessons Learned and Reconcilation Committee” resolution in Geneva to investigate the 2009 war crimes committed by Rajapakshe’s of his own. On the other, we are behind those who are insisting India to come up with an independent resolution in UN against Sri Lanka’s war-crimes. In putting forth such demands, we - students are being deceived ourselves by an illusion. The Geneva resolution going to be passed by America has no other motive rather than pressurising Rajapakshe Govt. and thus bringing Sri Lanka under its feet. Through this resolution America somehow wants to be a political, economical and stratagical beneficiary in the south asian province with or without the consent of India. When Mullivaiykkal Pogrom was committed by Sri Lanka in 2009, America was an active participant. The outcry of worldwide Tamil communities for the intervention of International communities against that pogrom (then covered widely by international media) never reached its ears. Meanwhile American intelligence received the support of Sri Lankan government for its illegal abduction of its enemies around the world and even for Afgan invasion. America is a superhegemony which always use ‘human rights’ as a trump card to enslave other soverign countries. It is the same which foster the totaliterians around the world to violate human rights and then in the name of the same human rights, it invades those countries. We have the examples like Iraq, Afgan, Libiya and so on. Now America is moving this coin deliberately. Now the question before us is, whether we are going to be that coin in the hands of America or not. Mullivaiykkal Pogrom was planned, directed and led by Indian Government. Not only Rajapakshe, even the Indian government is a war criminal in this massacre. Since 1987 (When it sent IPKF to Sri Lanka), Indian government is consistently in the forefront in supporting Singala Rascists to massacre Tamils. Indian Government gave training for the Sri Lankan army in India and rendered technical supports like detecting the aircrafts of LTTE with radars and even arms. India’s role on Mullivaiykal Pogrom came to light when some from the Indian Force were among those killed during the war. In the words of Rajapakshe, “actually, it’s a war committed for India by Sri lanka”. India’s war crimes are not only against Eala Tamils. In Kashmir, North East, Central India, Koodaunkulam, whereever people protest for their livelihood, Indian government is waging destructive war against its own people. It’s the urge for India to bring the South Asian Province under its arm pits based on its expansion policy. It is controversial as well as ridiculous in asking for justice and compelling to pass a resolution to such a perpetrator like Indian government. So we-the students have to raise the slogan portraying India as a war criminal. All the National political parties are against the Eala Tamils. The regional parties like DMK and ADMK etc.. are utilising Eala Tamils as a token to cultivate votes in the forthcoming election. There is not any question of accepting the resolution going to be passed by America. For us, the war criminal Rajapakshe should be punished by a trial court like the Post-World war II Nuremberg trial. Not only Rajapakshe, we should demand to punish even those Indian officials and Politicaians who are responsible for this pogrom. These demands can’t be executed merely by giving petitions to Indian Government. No other demands less than this, even it may be practical cant achieve justice. As the citizens of India, we the students have the responsbility to fight against our government’s expansion policy and its que st for regional monopoly. People of every nation has their own right to fight against their totaletarian rulers. No other countries can intervene on those people’s right. By establishing that the Indian Government responsible for its war crimes, we have to build a mass movement. That mass movement lead by the student community only can make the Indian Government to bow down. DELHI, UN AND US ARE ACCOMPLICES OF RAJAPAKSA! DON’T SEEK JUSTICE FROM WAR CRIMINALS! REJECT ANYTHING LESS THAN A NURENBURG LIKE WAR CRIME TRIAL! STRIVE AND RELY UPON A PEOPLES RESURGENCE IN TAMILNADU! No short cuts o To punish Rajapaksa for genocide o To resist ethnic cleansing, sinhala settlements and military occupation o To assert right to self determination Ignite the revolt of the 80s in the streets of tamilnadu Do not allow the issue of genocide to become a pawn in the hands of parliamenary parties! They turned the mullivaikkal tears into votes during 2009 parliamentary elections. Now it is geneva resolution for 2014 elections The "turncoats" have finally discovered the indian hand in genocide! Yet they cannot help but pleading with the indian war criminals for justice! Shame on you! Ridiculous to legitimise u.s and its imperialist allies as international community and seek justice from them! Those who conceal the killing of prabakaran by sinhala army, Are not preserving the image of prabakaran! They conceal the war crime and preserve Rajapaksa! Rajapaksa is the criminal and Rajapaksa is the prosecutor – that is llrc, Manmohan govt is the criminal that led the genocide, And manmohan is beseeched to bring the resolution in geneva What is the difference between the un hypocracy and our "parliamentary conspiracy" All national parties, from cong, bjp to cpi and cpm, Are always against right to self determination of eelam tamils From Facebook of Loyolahungerstrike
  4. Pls share this....IIT students protest and their demands....... REJECT ANYTHING LESS THAN A NUREMBURG LIKE WAR CRIME TRIAL IN TAMIL EALAM POGRAM! PROTEST BY STUDENTS IIT MADRAS ON 17.03.2013 Followed by the release of videos by Channel 4 on the Tamil Ealam pogrom and the forthcoming resolutions going to be passed by America in Geneva, recently there is a welcoming student uprising throughout Tamil Nadu. What is regrettable here is, the demands putforth by the students are mere reflections of the electoral parties’. On one hand we are behind the TESO resolution - demanding India to support America’s “Lessons Learned and Reconcilation Committee” resolution in Geneva to investigate the 2009 war crimes committed by Rajapakshe’s of his own. On the other, we are behind those who are insisting India to come up with an independent resolution in UN against Sri Lanka’s war-crimes. In putting forth such demands, we - students are being deceived ourselves by an illusion. The Geneva resolution going to be passed by America has no other motive rather than pressurising Rajapakshe Govt. and thus bringing Sri Lanka under its feet. Through this resolution America somehow wants to be a political, economical and stratagical beneficiary in the south asian province with or without the consent of India. When Mullivaiykkal Pogrom was committed by Sri Lanka in 2009, America was an active participant. The outcry of worldwide Tamil communities for the intervention of International communities against that pogrom (then covered widely by international media) never reached its ears. Meanwhile American intelligence received the support of Sri Lankan government for its illegal abduction of its enemies around the world and even for Afgan invasion. America is a superhegemony which always use ‘human rights’ as a trump card to enslave other soverign countries. It is the same which foster the totaliterians around the world to violate human rights and then in the name of the same human rights, it invades those countries. We have the examples like Iraq, Afgan, Libiya and so on. Now America is moving this coin deliberately. Now the question before us is, whether we are going to be that coin in the hands of America or not. Mullivaiykkal Pogrom was planned, directed and led by Indian Government. Not only Rajapakshe, even the Indian government is a war criminal in this massacre. Since 1987 (When it sent IPKF to Sri Lanka), Indian government is consistently in the forefront in supporting Singala Rascists to massacre Tamils. Indian Government gave training for the Sri Lankan army in India and rendered technical supports like detecting the aircrafts of LTTE with radars and even arms. India’s role on Mullivaiykal Pogrom came to light when some from the Indian Force were among those killed during the war. In the words of Rajapakshe, “actually, it’s a war committed for India by Sri lanka”. India’s war crimes are not only against Eala Tamils. In Kashmir, North East, Central India, Koodaunkulam, whereever people protest for their livelihood, Indian government is waging destructive war against its own people. It’s the urge for India to bring the South Asian Province under its arm pits based on its expansion policy. It is controversial as well as ridiculous in asking for justice and compelling to pass a resolution to such a perpetrator like Indian government. So we-the students have to raise the slogan portraying India as a war criminal. All the National political parties are against the Eala Tamils. The regional parties like DMK and ADMK etc.. are utilising Eala Tamils as a token to cultivate votes in the forthcoming election. There is not any question of accepting the resolution going to be passed by America. For us, the war criminal Rajapakshe should be punished by a trial court like the Post-World war II Nuremberg trial. Not only Rajapakshe, we should demand to punish even those Indian officials and Politicaians who are responsible for this pogrom. These demands can’t be executed merely by giving petitions to Indian Government. No other demands less than this, even it may be practical cant achieve justice. As the citizens of India, we the students have the responsbility to fight against our government’s expansion policy and its que st for regional monopoly. People of every nation has their own right to fight against their totaletarian rulers. No other countries can intervene on those people’s right. By establishing that the Indian Government responsible for its war crimes, we have to build a mass movement. That mass movement lead by the student community only can make the Indian Government to bow down. DELHI, UN AND US ARE ACCOMPLICES OF RAJAPAKSA! DON’T SEEK JUSTICE FROM WAR CRIMINALS! REJECT ANYTHING LESS THAN A NURENBURG LIKE WAR CRIME TRIAL! STRIVE AND RELY UPON A PEOPLES RESURGENCE IN TAMILNADU! No short cuts o To punish Rajapaksa for genocide o To resist ethnic cleansing, sinhala settlements and military occupation o To assert right to self determination Ignite the revolt of the 80s in the streets of tamilnadu Do not allow the issue of genocide to become a pawn in the hands of parliamenary parties! They turned the mullivaikkal tears into votes during 2009 parliamentary elections. Now it is geneva resolution for 2014 elections The "turncoats" have finally discovered the indian hand in genocide! Yet they cannot help but pleading with the indian war criminals for justice! Shame on you! Ridiculous to legitimise u.s and its imperialist allies as international community and seek justice from them! Those who conceal the killing of prabakaran by sinhala army, Are not preserving the image of prabakaran! They conceal the war crime and preserve Rajapaksa! Rajapaksa is the criminal and Rajapaksa is the prosecutor – that is llrc, Manmohan govt is the criminal that led the genocide, And manmohan is beseeched to bring the resolution in geneva What is the difference between the un hypocracy and our "parliamentary conspiracy" All national parties, from cong, bjp to cpi and cpm, Are always against right to self determination of eelam tamils From Facebook LayolaHugerStrike https://m.facebook.com/story.php?story_fbid=595215727157123&id=591654024179960&__user=100000317070277
  5. (from Facebook) S.p. Udayakumar இடிந்தகரைக் கடிதம்-1 இடிந்தகரை மார்ச் 16, 2013 அன்பார்ந்த தமிழக மாணவ, மாணவியர்க்கு: வணக்கம். தமிழகம் முழுக்க தமிழின விடுதலை உணர்வும், உரிமை வேட்கையும் கொண்ட நம் மாணவ, மாணவியர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று பல்வேறுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. அடிமைப்பட்டுப்போன இனம் கண் விழிக்கிறதே, காலூன்றி எழுகிறதே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நமது மாணவ மாணவியர் செய்துகொண்டிருக்கிறீர்கள். பொறுமையோடு, பொறுப்புணர்வோடு, அற்புதமாகப் பணியாற்றுகிறீர்கள். தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசிவருகிறேன். அழகான தமிழில், அருமையானக் கருத்துக்களை, ஆணித்தரமாக எடுத்து வைக்கும் விதம், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, அபாரமான துணிவு – உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துளிர் விடுகிறது மனதில். சாதி, மதம் எனும் ஆயுதங்கள் கொண்டு தாக்க வருவோரிடமும், அரசியல் பித்தலாட்டங்கள் நடத்தி உங்களை உபயோகிக்க வருவோரிடமும் கவனமாக இருங்கள். “கல்வி கெட்டுப் போகுமே, எதிர்காலம் இருண்டு போகுமே” என்று அங்கலாய்ப்பவர்களிடம் சொல்லுங்கள். எந்தக் கல்லூரியும், எந்தப் பேராசிரியரும் கற்றுத்தராத அறிவினை, கலைகளை, திறமைகளை இந்தப் போராட்டக்களம் கற்றுத்தருகிறது என்பதை. பேச்சுக்கலை, கேட்கும் திறன், அலசி ஆராயும் பக்குவம், கருத்துப் பரிமாற்றம் நடத்தும் முதிர்ச்சி, கூடிப்பேசி முடிவெடுக்கும் ஆக்கம், ஆளுமைத் திறன் என ஏராளமான விடயங்களை நீங்கள் படித்து அடுத்தத் தலைமுறை தலைவர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறீர்கள். பொதுவாக ‘சேவைக்குமுன் சுயம்’ (self before service) என்பதுதான் நமது கல்லூரிக் கல்வியின் அணுகுமுறை. ஆனால் இப்போது நீங்கள் கடைபிடிப்பது ‘சேவை வழி சுயம்’ (self through service). முதல் வழியில் கல்லூரிப் பேராசிரியர்கள் உங்களைத் தயாரிக்கிறார்கள்; இரண்டாவது வழியில் நீங்களே உங்களைத் தயாரிக்கிறீர்கள். லஞ்சம், ஊழல், சுயநலம், திறமையின்மை, முதுமை, கயமை என அழுகி நாறிக் கொண்டிருக்கும் இன்றையத் தலைவர்கள் மாற்றப்பட்டாகவேண்டும். குழந்தைக்கு அடிக்கடி டயாப்பர் (diaper) மாற்றுவது போல, ஒரு நாட்டுக்கும் அவ்வப்போது தலைமையை மாற்றியாக வேண்டும். மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டால், இரண்டுமே நாறிப் போகும், இரண்டுக்குமே நோய் வந்து விடும். தமிழினம் இன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறது. தமிழ்க்கடலுக்கு அந்தப் பக்கம் தமிழீழ மக்கள் சிங்களப் பேரினவாத வைரசால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து, ஏராளமான குடும்பங்களை நிர்மூலமாக்கி, எண்ணற்ற தனி மனிதர்களை நாசமாக்கி நசுக்கி அழித்து, வளர்ச்சியைத் தடுத்து, அமைதியைக் கெடுத்து ஒரு கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த வைரசோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்க்கடலுக்கு அந்தப்பக்கம் தமிழீழம் மலர்ந்தேயாக வேண்டும். தமிழ்க் கடலுக்கு இந்தப் பக்கமோ, “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” நம்மைப் பிடித்தாட்டுகிறது. பகட்டாக ‘டாக்டர்’ என்று வருகிறவர்களெல்லாம் மோசமான மன நோயாளிகளாக இருக்கிறார்கள். தலைவர் என்று தம்மை முன்னிறுத்துபவர்கள் பெரும்பாலானோர் தகைமையற்ற கயவர்களாக, தரகர்களாக இருக்கின்றனர். நிறைய அரசியல்வாதிகள் அட்டகாசமாக நடிக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அப்பட்டமாக அரசியல் செய்கிறார்கள். இரண்டு கூட்டத்துக்குமேத் தேவை தமிழனின், தமிழச்சியின் பணம் மட்டும்தான். தமிழ்க் கடலுக்கு அந்தப்பக்கம் தமிழ் இளைஞர்கள் போராடி, ஒரு தற்காலிக பின்னடைவை சந்தித்து நிற்கிறார்கள். தந்தை செல்வா, பெரியவர் பொன்னம்பலம் போன்றோர் நடத்திய அறவழிப் போராட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோது, நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டபோது மென்முறை வன்முறையிடம் தோற்றது. இளைஞர்கள் போராட்டத்தைப் போராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களிடமிருந்துப் பெற்ற உண்மையை, திமிரை, பொதுநலத்தை நமக்கே உரித்தான மென்முறைச் சிறப்புக்களுடன் சேர்த்து அவர்களுக்குக் கைகொடுக்க விழைந்து நிற்கிறோம் தமிழ்க் கடலின் இந்தப் பக்கம். அங்கேயும், இங்கேயும் ஏராளமான எதிரிகளும், துரோகிகளும் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள். அங்கே ராஜபக்ஷேயும், அவனது இராணுவமும், புத்த பிக்குகளும் மட்டும்தான். இங்கே எத்தனையோ பேர்! கதர் முசோலினிகளும், காவி ஹிட்லர்களும் தில்லியிலே நம்மை எதிர்க்கிறார்கள்; அவர்களின் தமிழக ஏஜெண்டுகள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நம்மை சிதைக்க வருகிறார்கள். “ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட்கள்” என்று சி‌பி‌ஐ (CPI) தோழர்களோடுகூட கைகோர்க்க முடியாத கையாலாகாத மார்க்சிஸ்ட்களும், எஸ்.எஃப்.ஐ (SFI) அடிப்பொடிகளும் “ஒருங்கிணைந்த இலங்கை” என்று வாய் கிழியப் பேசுகிறார்கள். இரண்டு பஞ்சாப்கள் இருக்கலாமாம், இரண்டு வங்காளங்கள் இருக்கலாமாம்; ஆனால் இரண்டு தமிழகங்கள் இருக்கக் கூடாதாம். தமிழினத்தின் மீது தன்னை தலைவராகத் திணித்துக் கொண்ட ஒருவர், நாளொரு நாடகமும், பொழுதொருப் புளுகுமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். நாமெல்லாம் இன்னும் ஏமாந்துகொண்டிருப்பதாக மனப்பால் வேறு குடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்கவாத்தியங்கள் வாசிக்க ஒரு சுயநலவாதக் கூட்டம் படையெடுத்து நிற்கிறது. தமிழகத்தின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இன்னொருவரோ தனது ஆட்சிதான் மீட்சி, நீங்களெல்லாம் வெறும் சாட்சி என்று காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் தமிழ்க் கடலின் இரண்டு பக்கமும் ஒரு முழுப் புரட்சி நடந்தாக வேண்டும். அதை நடத்தும் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தோன்றியிருக்கிறீர்கள் நீங்கள். தமிழ்க் கடலுக்கு அங்கே இனப்படுகொலை செய்த ராஜபக்சே, அவன் குடும்பத்தினர், சிங்கள இராணுவம், புத்த பிக்குகள், அவர்களின் பன்னாட்டுத் தோழர்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும். பாஸ்னிய (Bosnia) முஸ்‌லீம்களை இனச்சுத்தம் (ethnic cleansing) என்ற பெயரில் 1995-ஆம் ஆண்டு கொன்றுகுவித்த செர்பியாவின் (Serbia) அதிபர் ஸ்லோபோடான் மிலோசவிச் (Slobodan Milosevic) இனப்படுகொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு, விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே 2006-ஆம் ஆண்டு சிறையில் இறந்தான். ருவாண்டா (Rwanda) நாட்டின் டுட்சி (Tutsi) இன மக்களை 1994-ஆம் ஆண்டு கொன்றொழித்த ஜான் பால் அகயேசு (Jean Paul Akayesu) எனும் கொடூர ஹுட்டு (Hutu) இன அரசியல்வாதி 1998-ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தற்போது மாலி நாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். ராஜபக்சே கூட்டத்தைக் கூண்டுக்கு அனுப்புவோம். சேனநாயக்க காலம் முதல் ஜெயவர்தனே காலம் வரை நீறுபூத்த நெருப்பாக இருந்து, பின்னர் சந்திரிகா காலம் வரை கொளுந்துவிட்டு எரிந்த தமிழீழக் கனவை ராஜபக்சே காட்டுத்தீயாகப் பரப்பிவிட்டான். உயிர் துறந்த மாவீரரும், மக்களும் தமிழீழத்துக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டார்; அதன்மீது நாம் கட்டியெழுப்பியாகவேண்டும். தமிழ்க் கடலுக்கு இங்கே தமிழர்கள் என்ற இன உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். சாதாரணத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் நம் மண்ணும், மலையும், நீரும், கடலும், காடும், காற்றும் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். எங்கள் தலைமுறை 40 ஆண்டுகள் மின்சாரம் பெறுவதற்காக, உங்கள் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக, உடல்நலமில்லாதவர்களாகப் பிறக்கட்டும் என நினைக்கும் பேடித்தனத்தை கேள்விக்குள்ளாக்கியேத் தீரவேண்டும். கிட்டத்தட்ட 600 தமிழ் மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டப் பிறகும் சென்னை தில்லிக்கு கடிதம் எழுதுவது, தில்லி சொல்லி வைத்தாற்போல சும்மா இருப்பது எனும் நாடகத்தை முடித்தாக வேண்டும். சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். லஞ்சம், ஊழல், திறமையின்மை முற்றிலும் அகற்றப்பட்டாக வேண்டும். பொதுவாழ்வுக்கு வருவோர் உண்மையும் தூய்மையும் ஒழுக்கமும் உடையோராய் இருக்க வேண்டும்; இல்லையேல் வேரோடு, வேரடி மண்ணோடுக் களையப்பட வேண்டும். அறவழியில், அறிவு வழியில் தொடருங்கள், தோழர்களே! அனைத்து உதவிகளும் செய்ய நம் மக்கள் அணியமாய் இருக்கிறார்கள். சீப்பை ஒளித்து வைப்பதால், திருமணங்கள் நின்று விடுவதில்லை. கல்லூரிகளை, விடுதிகளை மூடிவிடுவதால் புரட்சிகள் அழிந்து விடுவதில்லை. தமிழகமெங்கும் தவமிருக்கும் உங்களை நானோ, நண்பர்கள் புஷ்பராயனோ, மை.பா. நன்மாறனோ, முகிலனோ, மில்டனோ, கெபிஸ்டனோ, எங்களை இயக்கும் சகோதரிகளோ வந்து சந்திக்க இயலாமைக்கு உளமாற வருந்துகிறோம். இடிந்தகரை ஊரைவிட்டு வெளியே வந்தால் கைது செய்யக் காத்திருக்கிறது தமிழகக் காவல்துறை. நேற்று (மார்ச் 15) எங்கள் போராட்டக்குழுவிலுள்ள கூடங்குளத்தைச் சார்ந்த தோழர் கணேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். எங்கள் உடல்கள் இங்கேயிருந்தாலும், உயிர்களும், உணர்வுகளும் உங்களைச் சுற்றியே வட்டமிட்டவண்ணம் இருக்கின்றன. சிறைப்பட்டிருக்கும் நாங்கள் முக்கியமல்ல; நமது இனம் விடுதலை அடைந்தாக வேண்டும். இனவிடுதலை என்பது இன்னொருவரிடம் யாசித்துப் பெறுவதல்ல; நாமே எடுத்துக் கொள்வது. புது வாழ்வு என்பது இன்னொருவர் நமக்குப் பிச்சைப் போடுவதல்ல; நாமே அமைத்துக் கொள்வது. வாருங்கள் தோழர்களே, வழி நடத்துங்கள்! அன்புடன், சுப. உதயகுமாரன் ஒருங்கிணைப்பாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.