Jump to content

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2192
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Posts posted by வாதவூரான்

 1. 3 hours ago, nedukkalapoovan said:

  இது ஏலவே அறியப்பட்ட விடயம் தானே. கருணா - பிள்ளையான் மற்றும் ஈபிடிபி புளொட் கும்பல்கள் தான் இவர்களை இராணுவக் கொத்தடிமைகளாக வித்தார்கள். கோத்தாவுக்கு இதில் முக்கிய பங்குண்டு. 

  நெடுக்ஸ் இந்த தலைப்பைப் பற்றி பீபிசிக்கு இரு முறைப்பாடு செய்து விடுங்கோவன்

 2. 2 minutes ago, goshan_che said:

  😆 நாடு இருக்கும் கஸ்ட சூழ்நிலையில், பெண்கள் சரிவரமாட்டார்கள் - ஹரின், மனுஸ்ய போன்ற துடிப்பான இளம் ஆண்கள்தான் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள் என புதிய ஜனாதிபதி நினைக்கிறார் போலும்😆.

   

  கோசான் இப்ப வயதான ஆக்கள் தானாம் உற்சாகமாக வேலை செய்யினமாம்

  • Haha 2
 3. 4 hours ago, ரஞ்சித் said:

  புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசாரம் - விதுர விக்கிரமநாயக்க

  குருந்தூர் மலை புத்தர் சிலை தொடக்கம் எல்லா தொல்பொருள் இடங்களிலும் வைக்கிற புத்தர் சிலைக்கு இவன் தான் காரணம்.

 4. 16 hours ago, Nathamuni said:

  ஆக.... நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை, இந்திய இன்றைய ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. 😁

  நாதம் இந்தியாவிலை எப்பவும் சனாதிபதியை மக்கள் தெரிவதில்லை தானே

 5. 2 hours ago, கிருபன் said:

  போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

  போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

  கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

  இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

  போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

  29.jpg
   

   

  https://www.virakesari.lk/article/132004

  நீங்கள்நல்லா கவலைப்படுங்கோ, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யாமல் கைகட்டி இருந்து விட்டு இப்ப ஒரு சின்ன தாக்குதலுக்கே இப்பிடி 

  • Sad 1
 6. 6 hours ago, goshan_che said:

  என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

  வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா?

  மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn  (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ?

  பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு  அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும்.

  இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? 

  இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.

  உண்மை. நானும் அப்பிடி தான் உணர்கிறேன்

 7. 2 minutes ago, தமிழ் சிறி said:

  தமிழர்களின் பிரச்சினை ரணிலுக்கு தெரியும்! மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அரசுக்கு ஆதரவு - சம்பந்தன் தகவல் - ஐபிசி தமிழ்

  50 வருடமாக... அணில் ஏற விட்ட  பிராணி மாதிரி...ஏமாற,
  தமிழர் தரப்பு தயாராக இல்லை.  பிரதமர் பதவி கிடைத்து... 
  ஜனாதிபதி ரணில் முன் சத்தியப் பிராமணம் எடுத்த கையுடன்...
  கிடப்பிலை கிடந்த... தமிழர் பிரச்சினை எல்லாத்தையும்,
  தூசி தட்டி எடுத்து, சுடச் சுட பிரதமர் சம்பந்தர் அவர்களால் தீர்த்து வைக்கப் படும். 😂

  நீங்கள் இங்காலை யார் வருவினம் எண்டு விவாதிக்க அங்காலை மொட்டுக் கட்சி ரணிலைநிரந்தரமாக்க திட்டம் போடுகினம். சம்பந்தரை ஜனாதிபதியாக்கும்  உங்கள் திட்டம் சரிவராது போலை

 8. 1 minute ago, தமிழ் சிறி said:

  Tug Of War Gif Dog

  மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜
  சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...  
  போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣

  சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த, 
  அனுபவம் கைகொடுக்கும் என்பதால்....
  சம்பந்தனை ஏகமனதாக,  பிரதமர் பதவியில் உட்கார  வைப்பது நல்லது. 😂

  சிலவேளை செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் ஒரு கல்லிலை இரண்டு மூன்று மாங்காய் அடிக்கலாம். முதலாவதுநல்ல எஜமான விசுவாசம் காட்டுவார்,இரண்டாவது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுவார்,  மூன்றாவது என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பேப்பர் படிச்சுக்கொண்டு இருப்பார்,நாலாவது முதலாவது சிறுபான்மை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை,மனித உரிமை மீறல் எல்லாம் குப்பையிலை போடுபடும்

  • Like 1
 9. 1 hour ago, Nathamuni said:

  யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
   

  1. Ranil

  2. Sajith

  3. Sarath

  4. Dullas 

  5. Peris

  6. Sampakka

  7. Ratna Siri Thera

  8. Harsha de Silva

  9. Anura Kumara Disanayaka

  10. Sumandren

  11. Sambander

  12. Dammikka Perera

  13. Speaker Yappa

  14. Namal Rajapakse 

  15. Douglas Devananda

   

  நாதம், எங்கையப்பா என்னுடைய பெயர்?

  • Haha 1
 10. 5 hours ago, satan said:

  இப்போ எல்லோருக்கும் திடீர் திடீரென  ஞானோதயம் பிறந்திருக்கு. வீட்டு அம்மையார் விறகோடுதான் போராடுகிறாவோ! சீசீ இந்தப் பழம் புளிக்கும்.

  சும்மா கடற்படையிலை குப்பை கொட்டினவனையெல்லாம்நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்தால் இதுவும் சொல்லுவாங்கள் இன்னும் சொல்லுவாங்கள்

  • Thanks 1
 11. 2 hours ago, nunavilan said:

  ராஜபக்ச குடும்பத்தை தவிர வெறெவருக்கும் ஆட்சி செய்யும் தகமை இல்லையா? 

   

  பசில் வந்திடுவார் பசில் வந்திடுவார் எண்டு சொல்லிச் சொல்லியே ஒண்டும் செய்யாமல் விடுற திட்டம் தான். முந்திநல்லாட்சி அரசாங்கத்திலை அர்சியல் கைதியளை விடுவதற்கு மகிந்த வந்திடுவார் மகிந்த வந்திடுவார் எண்டு சொன்னமாதிரி. இது ஒரு பூச்சாண்டி காட்டுறது தான்

 12. இப்பவும் தமிழ் மக்களுக்கு ஒண்டும் குடுக்க விருப்பமில்லை ஆனால் அவர்களின் காசு மட்டும் வேணும்

  • Like 1
 13. 2 hours ago, nunavilan said:
   

  அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை!

  அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை!

   

   
   
   
  தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.

  பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார்.

  சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.

  கீதா குமாரசிங்க தமது உரையின்போது, தாம் அரசியலில் இருந்து விடைபெற உள்ளதாக அழுகையுடன் கூறினார்.

  தமது வீடு தாக்கப்பட்டபோது, தாம் தனியாக ஒரு அறையில் பயத்துடன் நடுங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

  விலக விருப்பம் எண்டால் விலகலாம் தானே பிறகு என்னத்துக்கு சுவிஸ் பிரஜாவுரிமை இருந்தும் இங்கைநிற்கிறியள்

 14. 5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

  அமெரிக்கா முதலே வரவேற்பு கொடுத்துவிட்டது

  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தா இன்னும் பதவி விலகேலை ஒரு அதிகாரமும் இல்லாத பிரதமர் மாறின உடனை ஏன் எல்லாரும் துள்ளிக் குதிக்கினம். எனக்கு ஒண்டும் விளங்கேலை

  • Like 1
 15. 1 minute ago, தமிழ் சிறி said:

  கொலை செய்து விட்டு... மறியலில் இருந்தவனே, வெளியில் வந்து அமைச்சராகலாம்.  

  ரணில் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்டுதான் பயபுள்ளை அவ்வளவுநம்பிக்கையாக சொல்லுது

 16. 29 minutes ago, நிழலி said:

  ரணில் வந்தால், இசை யாழுக்கு வருகின்றார். இருவருக்கும் இடையில் ஒரு ஊடல் இருக்கு என்று கொளுத்திப் போடுவமா?😂

  மீள்வரவுக்கு வாழ்த்துகள்!

  இசைக்கு ஒரு அமைச்சர் பதவி பார்சல்!

 17. 6 minutes ago, nunavilan said:

  சனநாயக ரீதியில் பார்த்தால்  சஜித் அல்லது அநுர தான் பிரதமராக வந்திருக்க வேண்டும். 
  மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடியவர் ரனில் என்பதால் அவரை தெரிந்து இருக்கிறார்கள்.

  எங்கடை சம்பந்தர் சுமந்திரனுக்கு அந்த தகுதி இல்லையோ. இந்த சந்தர்ப்பத்திலை ஒரு தமிழ்ச்சிங்களவரை பிரதமராக்கினால் ஒரு கல்லிலை பத்து மாங்காய் அடிக்கலாம் அல்லோ?

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.