போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,427
 • Joined

 • Last visited

 • Days Won

  6

போல் last won the day on February 3

போல் had the most liked content!

Community Reputation

822 பிரகாசம்

1 Follower

About போல்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Interests
  வாசித்தல், இசை, விளையாட்டு, ...

Recent Profile Visitors

2,748 profile views
 1. இல்லை நிழலி! எம்மிடம் வரிகளை சுரண்டி, எமது சொத்துக்களை கொள்ளையடித்து, எமது சொத்துக்களை ஆக்கிரமித்து இயங்கும் அரசு ஒரு ஆக்கிரமிப்பு அரசாக இருந்தாலும் அதில் எமக்குரிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது சந்தர்ப்பவாதம் ஆகவே முடியாது! அது வேறுவழிகளின்றி வரிகளை செலுத்தும் ஒருவரது அடிப்படை உரிமை! அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும் என்பது இங்கு நடைமுறை. தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளில் இது போன்ற சூழ்நிலைகளும் ஒன்று என்பதை விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்! நிச்சயமாக சந்தர்ப்பவாதம் ஆகாது! ஒரு வீரப் பெண்மணி தவறான முடிவுகளை எடுத்திருப்பார் எனக் கருத இடமில்லை. அவருக்கு உதவாவிட்டாலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளின் முரண்பாடுகளை வைத்து அவரை கொச்சைப்படுத்துவது அழகல்ல!
 2. நிழலி! இது உண்மை! அவர் தனது சொந்த உழைப்பில் வாழ நினைப்பதால் கிடைத்த ஒரு வேலைவாய்ப்பை, சந்தர்ப்பத்தை, தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துகிறார் எனக் கருதுகிறேன்! இது கவுரவமான மனிதர்களின் குணங்களில் ஒன்று எனக் கருதுகிறேன்! பாராட்டப்பட வேண்டிய ஒன்று! இது தவறு! தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தி பேசுபவர்கள் தமக்குள் பேசப்போகும் விடயதானங்களை தம்முள் பகிர்ந்து பிரித்துக்கொள்ளவது வழமை! அந்த அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் பொது உடன்பாடு அடிப்படையில் பிரிக்கப்படும்! கிடைக்கும் நேரத்தை முழுமையாக/பயனுள்ளதாக பயன்படுத்த முன்னமே தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு பொது இணக்கத்துடன் இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழமை. தனது கடமையை அனந்தி சரிவர செய்திருந்தார்! இவ்வாறு பிரிக்கப்படும் போது தனிப்பட்ட நபர்கள் வாழும் சூழ்நிலை, இடங்கள், அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் போன்றவையும் கருதப்பட்டு, பரவலாக ஆராய்ந்து பேசவேண்டிய விடயதானங்கள் முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு இராஜதந்திர நகர்வு என்று கருதலாம்.
 3. மீண்டும் சொல்கிறேன் உங்கள் தர்க்க ரீதியான விவாதம் "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதற்கு ஒத்ததாகும்! கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை! சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் ஆதரவு /பாதுகாப்பு தமக்கு இருக்கும் என்ற துணிவில் திருட்டுகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருடர்கள் சமூக விரோதிகள் இதன் பின்னர் அந்த பகுதிக்கு செல்ல அச்சப்படுவர்! இது தான் உண்மை! அது தான் அந்த மக்கள் சாதித்த சாதனை! இது இயற்கை நீதி! எழுதப்பட்ட சட்டங்களை விட வலிமையானது இயற்கை நீதி! எனவே கடைசியில் போலீசிடம் கொடுத்துள்ளார்கள் என்பது உண்மையை உணர மறுக்கும் விதண்டாவாதம்! நீங்கள் கருதுவது போல ஊர்மக்களின் தண்டனையால் இவர் திருந்தமாட்டார் என்றால், அதனது கருத்து அவருக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை போதாது என்பது தான்! பல நாகரிகமான நாடுகளில் கசையடி தண்டனை இன்றும் உண்டு!
 4. கள சூழ்நிலைகளை சிறிதும் உணர்ந்தவராக உங்கள் கருத்து அமையவில்லை! உங்கள் கோணத்தில் சிந்திப்பதென்றால் அதற்கான ஒரே தீர்வு உடனடியாக சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் கும்பல்களை வட மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் நீதியை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை கட்டமைப்பை ஏற்படுத்துவதும் தான்! இது உடனடியாக சாத்தியமில்லை என்றால் தற்போதைய கள யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிகள் இல்லை! இங்கு நடந்த சம்பவம் ஒரு குழுவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் இல்லை. சமூக விரோத செயல் இடம்பெற்ற போது அயலவர்களால் / ஊர் மக்களால் சடுதியாக ஒன்று கூடி, சூழ்நிலைக்கேற்ப செயற்படுத்தப்பட்ட இயற்கை நீதி! இதற்கு காரணம் 10 வருடங்களாக தமிழ் மண்ணில் பரவலாக நடக்கும் 95% ஆன சமூக விரோத செயல்கள், தமிழின விரோத காட்டுமிராண்டித் தனங்கள் அனைத்திலும் சிங்கள-பௌத்த இராணுவ மற்றும் போலீஸ் பயங்கரவாதக் கும்பல்களின் நேரடி பங்களிப்பு தான்.
 5. ஜெனிவாவில் உலகை ஏமாற்றும் மற்றொரு முயற்சியாக யாழ் நூலகத்தை எரித்த, சிறைகளில் இருக்கவேண்டிய பயங்கரவாதக் கும்பல் வட மாகாணத்தில் 3 நாள் உல்லாச பயணம் செய்கிறது. இதற்கு தமிழரசுக் கட்சியின் ஒட்டுண்ணிக் கும்பல் பூரண ஆதரவு வழங்கும் எனத் தெரிகிறது!
 6. அது தான் உண்மை! சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் இராணுவ கும்பல்கள் ஒருபக்கம் சட்டவிரோத புத்தர் சிலைகளை நிறுவிக்கொண்டு மறுபுறத்தில் சகல சமூக விரோத செயல்களிலும் வழிகாட்டிகளாகவும் பங்காளிகளாகவும் இருந்து கொண்டு புத்தர் சிலை என்பது காட்டுமிராண்டிகளின் சின்னம் என்பதை நிலைநிறுத்தி வருகின்றனர். இவர்களின் காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டுப்படுத்த தமிழர் பகுதியில் உரிய கட்டமைப்புகள் தற்போது இல்லை. இந்தப் பின்னணியில் வேறுவழியின்றி தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும், சமூகவிரோத கும்பல்களை கட்டுப்படுத்தும், காமுகர் பிடியிலிருந்து தப்பும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்தும் முயற்சியில், தமது பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில் மக்கள் தாங்களே ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 7. போதைப் பொருள் கடத்தல் மாபியாக்களும் மகிந்த ராஜபக்ச குடும்ப கும்பலின் ஆதரவில் இயங்கியதாக கூறப்பட்டுள்ளது.
 8. தொல்பொருள் திணைக்களம் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட வேண்டிய மிக மோசமானதொரு சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்! சம்மந்தனும் சுத்துமாத்து சுமந்திரனும் யாழ் நூலகத்தை எரித்த பயங்கரவாதக் கும்பலை பிரதமர் பதவியில் தக்கவைத்து அதன் மூலம் கிடைக்கும் சுயலாபங்களை எண்ணுவதில் மூழ்கியுள்ளார்கள் போலுள்ளது.
 9. பல வகையில் நெருக்கடி! இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தான் இந்தியப் பிச்சைக்காரர்கள் சிங்களக் கொலைகாரர்களிடம் கப்பம் பெறுவது வழமை! அந்த வகையிலும் ஒரு நெருக்கடி.
 10. மொத்தத்தில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத குழுக்களின் சட்டவிரோத கடத்தல் கலாச்சாரம் நீண்டகால வரலாற்றைக் கொண்டது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் மிலேச்ச பயங்கரவாதி கோத்தபாய!
 11. "100% சுயநல அரசியல்", "கிணற்றுத் தவளை அரசியல்", "குடும்பக் கட்சி அரசியல்", "அரைவேக்காட்டு அரசியல்" போன்ற பல அரிய கொள்கைகளில் இருந்து இறங்கிவந்து நாங்கள் ஒருநாளும் திருந்த, முன்னேற முயற்சிக்க மாட்டோம் என்ற உண்மைகளை தெரிவித்துள்ளனர்.
 12. ஏறத்தாழ நாற்பதாண்டு கால வரலாற்றில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஒட்டுண்ணிக் குழுக்களாக செயற்பட்ட வரலாற்றைக் கொண்டதே ஈ.பீ.ஆர்.எல்.எவ். என்ற உண்மைகளை மூடி மறைப்பது எதற்காக?
 13. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் கொடிகட்டி பறக்கும் ஹிந்தியப் பயங்கரவாதிகள் ஊழலில் சிக்கிய ஒரு வவுனியா அரசியல்வாதியை தலைவராக்க முயல்கின்றனர்.
 14. சிறு வயதிலேயே அவசியமான கட்டுப்பாடுகளை மீறும் பெற்றோர்கள் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள்!