போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,111
 • Joined

 • Days Won

  16

Everything posted by போல்

 1. ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்ற நிலையில், தமிழர் தரப்பினர் அனைவரும் இணைந்து பலமான அணியாக கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்திலேயே சிங்கள தலைமைகள் கவனம்செலுத்தும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுக்கு ஒரு வருடத்திற்குள் எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். https://www.ibctamil.com/srilanka/80/128053
 2. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/65088
 3. 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இம் முறை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அத்துடன் அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இம்முறை மாறுப்பட்ட விதத்தில் 17 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளமை முக்கிய அம்சமாகும் https://www.virakesari.lk/article/65085
 4. அவர்கள் உயர் பதவிகளில் ஏற முட்டுக்கொடுத்த மோசமான கயவர்களில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர்.
 5. கண்டி தலதாமாளிகளியில் சம முக்கியத்துவம் கொடுத்து சர்ச்சும், கோவிலும், மசூதியும் கட்டும் போது தான் உண்மையான மத நல்லிணக்கத்துக்கு முதற்படியாக அமையும்.
 6. உண்மையான கொலைகாரர்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதிகளான ஹிந்தியப் பயங்கரவாதிகள் செய்த கொலைகளை நீதிமன்றங்களில் காட்டிக்கொடுக்க வேண்டாமென்று கேட்கப் போயிருப்பார். , .
 7. முரளிதரன், தான் ஒரு மிக மோசமான சந்தர்ப்பவாதி என்பதை பலதரம் நிரூபித்துள்ள ஒரு கறுப்பாடு.
 8. 50 வருசமா மாவை சேனாதிராஜா சொல்லாத பொய்யா, மாவை சேனாதிராஜா அளவுக்கு மக்களை ஏமாற்றியவர்கள் 100 க்கு உள்ளே தான் இருப்பார்கள். மாவை சேனாதிராஜா தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கக் கூடாதென்று போராடுகிறார்.
 9. சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியைச் மொஹமட் நசாத் மொஹமட் அசார் எனும் முஸ்லீம் பயங்கரவாதியை முஸ்லீம் இல்லை என்று முஸ்லீம் சந்தர்ப்பவாதிகள் அறிவிக்கின்றனர். அதன் பின்னர் குறித்த முஸ்லீம் பயங்கரவாதியின் சொந்த ஊரான காத்தான்குடியில் முஸ்லீம் மயானங்களில் புதைக்க அனுமதி இல்லை என்றும் முஸ்லீம் மதவெறியர்கள் அறிவிக்கின்றனர். அதற்கு தலை வணங்கிய சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு முஸ்லீம் நீதிபதி அந்த முஸ்லீம் பயங்கரவாதியை முஸ்லீம்கள் இல்லாத பகுதியில் புதைக்க கட்டளையிடுகிறார். இந்துக்களை இளிச்சவாயர்களாக கருதிய இந்த கூட்டுச் சதியின் படி, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் இரவோடிரவாக அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் புதைக்கின்றனர். விசயம் உடனடியாக வெளியே வந்தாலும், மக்கள் ஆத்திரப்பட்டாலும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுக்கும் சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுபிடிக் கும்பல் மௌனமாக இருந்தனர். 3 மாதங்களுக்கு மேலாக மக்களின் அமைதியான எதிர்ப்புக்கள் பலனைத் தரவில்லை. பொறுமை காத்து நீதி கிடைக்கவில்லை என்ற நிலையில் இறுதியில் மட்டக்களப்பு இந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு முஸ்லீம் நீதிபதியும் இந்துக்களை மிரட்டும் முயற்சியில் இறங்கினர். எனினும், எதற்கும் அச்சப்படாத இந்துக்களின் போராட்டத்தைக் கண்டு, இறுதியில் சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு முஸ்லீம் நீதிபதியும் அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் இருந்து தற்போது அகற்ற முனைகின்றனர். எனவே, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் தளராத முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது. பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.
 10. இவர்களுக்கு தெரிந்த போராட்டம் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்றவை தான். இவர்களின் தொழிலை இப்போது சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் முப்படைக் காடையர்கள் செய்வதால், இவர்களுக்கு ஏற்பட்ட பாரிய தொய்வுகளால் முகங்களில் கவலை ஏற்பட்டிருக்கலாம்.
 11. திட்டங்களை முறையாக முன்னெடுத்தால் அருமையான திட்டங்களாக அமையும்.
 12. இவர்கள் தாய்மண்ணுக்கு திரும்புவது சிறந்த முடிவாக இருக்கும். அதை விடுத்து மகளின் திறமையை வைத்து பெற்றோர்கள் பிச்சைக்காரப் பிழைப்பை முன்னெடுப்பதை எந்தவிதத்திலும் பாராட்ட முடியாது.
 13. தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்கும் கைக்கூலிக் கும்பல்களின் தலைவர்கள் சிலர். இதில் சித்தார்த்தன், அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி, தொண்டமான் போன்ற நீண்டகால எடுபிடிக்கள் அடங்கவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதக் கும்பலிடம் போதியளவு பணம் இல்லைப் போலும். இங்கே இவரை தமிழினத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுக்கும் கைக்கூலிக் கும்பல்களின் தலைவராக குறிப்பிட்டுள்ளனர்.
 14. இது மைத்திரி மட்டும் தனித்து செய்யும் காரியமல்ல. சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் கூட்டு சதித்திட்டம் 1950 களில் இருந்து கட்டம்கட்டமாக அரங்கேற்றப்படுகிறது. அதன் தொடர்ச்சியே இப்போதும் நடப்பது. மிலேச்ச பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கள-பௌத்தர்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே குறைந்தபட்ச தீர்வு என்பதை சொல்லும் முதுகெலும்புள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.
 15. தற்­போது சம்­பந்தன் ஐயாவின் காலத்தில் அவ­ரு­டைய அனைத்து முயற்­சி­களும் தோல்வி கண்­டுள்­ளன. அவ­ரு­டைய விட்­டுக்­கொ­டுப்­புக்­களை அரசு மதிக்­க­வில்லை. அவ­ரு­டைய இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் வெற்­றி­பெ­ற­வில்லை. தன்னை தென்­னி­லங்கை தலை­வர்கள் அனை­வரும் ஏமாற்­றி­விட்­டார்கள் என்­பதை அவர் உணர்ந்­துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு, யார் ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் அவர்­களால் நாம் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்டே வந்­தி­ருக்­கின்றோம். தமி­ழர்­க­ளுக்­கான தேசிய விடு­தலை அங்­கீ­காரம் செய­லி­ழந்த பின்னர் போர் வெற்­றியை முன்­னி­லைப்­ப­டுத்தி மஹிந்த ராஜ­பக் ஷ இரு­த­ட­வைகள் ஆட்­சியை தன்­ன­கப்­ப­டுத்­தினார். தேசிய இனப்­பி­ரச்­சினை குறித்து அவ­ருடன் கூட்­ட­மைப்பு 19தட­வைகள் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்­த­போதும் ஏமாற்­றமே எஞ்­சி­யது. மஹிந்த இரா­ணுவ வெற்­றியை முன்­னி­லைப்­ப­டுத்­தி­னாரே தவிர புரை­யோ­டிப்­போ­யி­ருந்த பிரச்­சி­னை­க­ளுக்கு ஜன­நா­யக அர­சியல் ரீதி­யான தீர்­வு­களை காண்­ப­தற்கு சிந்­திக்­கவே இல்லை. 2015இல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாம் அர­சியல் புரட்­சியின் மூலம் ஆட்­சிப்­பீ­டத்தில் அமர்த்­தினோம். நெல்சன் மண்­டே­லாவே வருக என்று எமது தலைவர் அவரை ஆரா­தித்­தி­ருந்தார். ஆனால் அவர் வினைத்­தி­ற­னாக செயற்­ப­டு­வ­தற்கு பதி­லாக கடந்த காலத்தில் இருந்த ஜனா­தி­ப­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு பல­ ப­டிகள் அப்பாற் சென்று சிங்­கள பௌத்த இன­வாத சிந்­த­னையில் செயற்­பட்டார். இதனால் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­க­மு­டி­யா­த­வாறு அடி­யோடு புரட்­டிப்­போட்டு விட்டார். ஆகவே அடுத்த தேர்­தலில் யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பதில் ஆழ­மாகச் சிந்­தித்து நிதா­ன­மா­கவே முடி­வெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்சிக்கு அப­ரி­த­மாக முண்­டு­கொ­டுத்­தி­ருக்­கின்றோம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்­டி­யுள்­ளது. எமது மக்­க­ளுக்கு ஒரு­சில நன்­மைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை ஐ.தே.க முன்­னெ­டுத்­தி­ருந்­தாலும் எமது அடிப்­படை அபி­லா­ஷை­களை தீர்ப்­ப­தற்­கான செயற்­பாட்டில் அக்­கட்சி இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே கடந்த காலத்தில் விட்ட தவ­று­களை சுய­ப­ரி­சீ­லனை செய்து கொண்டு அடுத்­த­கட்டம் குறித்த தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/127049?ref=imp-news
 16. இவை அனைத்தும் இந்த படுகொலைகள் கடந்த 30 வருடத்துக்குள் நடந்தவை என்றும், இந்த படுகொலைகள் ஸ்ரீலங்கா சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் செய்யப்பட்டவை என்றும் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இந்த படுகொலைகளை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் மறைக்க எடுத்த முயற்சிகள் மூலமும் அவர்களே கொலைகாரர்கள் என்பது உறுதியாகிறது.
 17. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக மலையகத்திலும் ஒன்றிணைந்த உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்துக்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோர்வூட் சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வினை வெகுவிரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என இதன்போது போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது. இதேவேளை போராட்டகாரர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்துக்கு ஆசி வேண்டி சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியதோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்திவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/127044
 18. இந்த மனமாற்றம் தற்கொலைக்கு(முயற்சிக்கு) தூண்டிய குற்றத்துக்காக சிறையில் தான் அடைபடுவதை தவிர்ப்பதற்காக தம்பியால் செய்யப்பட்ட குள்ளநரித்தன முயற்சியாகத் தான் இருக்க வேண்டும். இந்தக் கையாடலைச் செய்தவர் சிலவருடங்கள் சிறைகளில் அடைபட வேண்டியவர்.
 19. நாணயப் புழக்கம் அரிதான / இல்லாத காலத்தில் தங்கத்தை ஒரு சொத்தாக சேர்த்து வைத்திருந்தனர். அந்த பொருளாதார நடவடிக்கையை மறந்து தற்காலத்தில் கல்யாண வீடுகளிலும், விசேட வைபவங்களிலும், கோவில்களிலும் அதனை ஒரு கண்காட்சிப் பொருளாக (ஆண்/பெண்/அய்யர்) பேய்கள் பயன்படுத்துகிறார்கள்.
 20. அநாகரிகமான பண்பாட்டைக் கொண்ட கூட்டமைப்பினர் அநாகரிகமான ஜனாதிபதியை பிறந்ததின வைபவங்களுக்கு அழைத்துவிட்டு இப்போது தங்கள் அநாகரீகங்களை மறந்து கதைக்கின்றனர்.
 21. இலங்கையில் பகிடிவதை என்ற பெயரில் தற்போது காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபடுபவர்களே உள்ளனர். இவர்களால் பாதிக்கப்படுபவர்கள் பலர். சில விடயங்களே வெளிப்படுகின்றன. அண்மையில் தெற்கில் ருகுணை பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனை பாலியல் கொடுமைகளுக்கு உற்படுத்திய 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த வருடம் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்த இருவர் தற்கொலைக்கு முயன்றனர். கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட பொறியியல் பீடத்தில் படிக்கும் யாழ் இந்துக்கல்லூரி மற்றும் ஹாட்லிக் கல்லூரி மாணவ காடையர்களைப் பற்றி சமூகவலைத் தளங்களில் செய்திகள் வந்திருந்தது. பேராதனை, யாழ், ருகுணை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கையாலாகாத பேர்வழிகள் என்பது ஏற்கனவே நிரூபணமான ஒன்று. பகிடிவதை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடும் காடையர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனையுடன், பட்டம் வழங்காமல் இருப்பதுடன், அரச வேலைவாய்ப்பு போன்ற வரப்பிரசாதங்களை தடையும் வேண்டும். அதைப் போலவே பேராதனை, யாழ், ருகுணை பல்கலைக்கழக கையாலாகாத துணைவேந்தர்களையும் சிறைகளில் அடைக்க வேண்டும்.
 22. நாம் வீதிகளில் நின்று கதறுவது சர்வதேசத்திற்கு கேட்கவில்லையா..? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்றையதினம் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கல்முனையில் மாபெரும் பேரணி ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து இன்றையதினம் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கல்முனையில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் அவர்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் தலைவிகள், உறவினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர். அதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து வெயில், பனி, மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள். நாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேட்கவில்லையா? அரசியல் தலைவர்களின் மாற்றங்களினால் நாங்கள் கூட காணாமல் போவதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. அரசாங்கம் மாற முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். இன்று வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் போராட்டம் இடம்பெற்றது. அனைத்து தமிழ் உறவுகள், பொது அமைப்புகள், என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களால் வெள்ளைவானில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய், கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? Omp வேண்டாம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். https://www.tamilwin.com/community/01/224655?ref=home-feed
 23. நூற்றுக்கணக்கானோரின் கண்ணீருடன் மன்னாரில் மாபெரும் போராட்டம்! ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு யுத்தம் நிறைவடந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் ஒழுங்கான தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் விடுவிக்க கோரியும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரு கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. இந்த போராட்டம் இன்று மன்னார் பாலத்திற்கு அருகில் காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் காணமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் உறவினர்கள் அருட்தந்தையர்கள் மத குருக்கள் சமூக ஆர்வலர்கள் மன்னார் நகரசபை தலைவர் என பலரும் கலந்து கொண்டனர். போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்த கொண்டனர். அந்த வகையில், நிலைமாறுகால நீதி எங்கே, இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா? உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியவாரு கண்ணீருடன் போரட்டத்தில் கலந்து கொண்டனர். https://www.ibctamil.com/srilanka/80/126936 இலங்கை அரசே உண்மையை மறைக்காதே!- மன்னாரில் உறவுகள் ஆர்ப்பாட்டம் “இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலக்ததிற்கு முன் குறித்த போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், குறித்து அரசாங்கம் உரிய பதிலை இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வலர்கள், மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், ‘நிலைமாறுகால நீதி எங்கே?’, ‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும்’, ‘இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?’, ‘உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்’ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி கண்ணீருடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கை-அரசே-உண்மையை-மறைக/
 24. இலங்கையில் முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது. தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, விநாயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் டி.எம். நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகியோர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவஷரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அண்மையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். https://www.ibctamil.com/srilanka/80/126931
 25. ஈழபோராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர். அங்கு ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தரவேண்டும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ச. சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலாங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.ibctamil.com/srilanka/80/126937 காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும் போராட்டம்! சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களின் விடுதலையை வேண்டி அவர்களது உறவுகளால் தீச்சட்டி எடுக்கப்பட்டு, தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’, ‘சர்வதேசமே பதில் கூறு’ உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். http://athavannews.com/காணாமலாக்கப்பட்டோர்-தின/