• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,101
 • Joined

 • Days Won

  47

Posts posted by போல்


 1. On 28/6/2020 at 04:06, பெருமாள் said:

  நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  கட்சியைச் சேர்ந்த செயலாளர் ஒருவரே எழுப்பியிருக்கும் கேள்வியை வெறுமனே தட்டிக்கழிக்க முடியாது.

  • Like 1

 2. On 29/6/2020 at 22:51, Rajesh said:

  இது இப்ப தேர்தல் வருவதால்.

  தேர்தல் முடிஞ்சதும் இறுதிப் போரே நடக்கேலை என்டு அறிக்கை விடக்கூடிய ஒரு நம்பிக்கைத் துரோகி சம்பந்தர்!

  100% உண்மை!

  சம்மந்தன் தேர்தல் சூட்டில் சற்று உணர்ச்சி வசப்படுகிறார்!  

  சம்மந்தனையும் சுமந்திரனையும் இயக்கும் இந்தியப் பயங்கரவாதக் கும்பல் இம்முறை குளறுபடிகள் மூலம் நிலைமை சாதகமாக்குவது சிரமமாக இருக்கும்.

  • Thanks 1

 3. 11 hours ago, spyder12uk said:

  சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இன்றைய காலகட்டத்தில் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு பிரதான முட்டுகட்டையாகவும், சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு/பயங்கரவாதிகளுக்கு சார்பாகவும் இயங்கும் சுமந்திரனிடமிருந்து இது போன்று சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகளுக்கு ஆதரவான இன்னமும் பல கருத்துக்கள் வெளிவரலாம்.

   

  • Thanks 1

 4. நம்பிக்கையும் தொடர்போராட்டமும் வீண் போகாது!

  இந்த மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு எதிராக செயற்படும், சிங்கள-பௌத்த அரச கொலைகாரர்களுக்கு சார்பாகவும் முழுமூச்சுடன் செயற்படும் சுமந்திரன்,டக்ளஸ் தேவானந்தா போன்ற  எடுபிடிகள் பாராளுமன்றதுக்கு தெரிவுசெய்யப்படும் வரை சவால்கள் தொடரவே செய்யும்! 

  • Like 1

 5. போராளிகளை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு ஒருநீதி ஏனையோருக்கு இன்னொரு நீதியா?

  அப்படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை வரலாற்றில் மிகமோசமான தமிழின விரோதிகள் தமிழரசுக்கட்சியினரே என்பது நிரூபணமாகும்! அதன் பின்னரே சிங்கள/இந்திய அரச பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறுவர்.

  • Like 1

 6. 4 minutes ago, பெருமாள் said:

  இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார்.

  நடக்கவே நடக்காது!


 7. இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

  வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

  இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், இமானுவேல் ஆனோல்ட், ஏ.சுமந்திரன் ஆகியோரும் பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

  http://athavannews.com/சர்வதேசத்துடன்-இணைந்து-ப/


 8. மேலும் சில கேள்விகளுக்கு கஜேந்திரகுமார் அணியினர் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உண்டு.

  யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியை சதி செய்து குழப்பியதன் நோக்கம் என்ன?

  இறுதியாக நடந்த எழுக தமிழ் நிகழ்வை குழப்ப பல கடும் முயற்சிகள் எடுத்ததன் நோக்கம் என்ன?

  காசுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அப்பாவிகளிடம் பிணைக் காசு கட்டவேண்டும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறித்தது எதற்காக?

  காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்தை அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி அதை சிதைக்க முயன்றது எதற்காக?

  இதற்கான பதில்களை கஜேந்திரகுமார் சுயநலக் கும்பல் முன்வைக்க வேண்டும்.


 9. 11 hours ago, அக்னியஷ்த்ரா said:

  ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பூட்ஸ் கால்களை நக்கி அதை புகைப்படமாக  வெளியிட்டால் உங்களை சிறந்த தேசியவாதியாக சிங்கள மக்கள் நம்புவார்கள், தேர்தலுக்கும் உதவும்    

   


 10. தேர்தலை மனதில் வைத்து மார்ச் மாதத்தில் இருந்து நாளாந்தம் 1000 ரூபா சம்பளம் என அறிவித்து மலையக பெருந்தோட்டத் தொழிலார்களை ஏமாற்ற நினைத்த இராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் 4 மாதங்கள் கடந்தும் சொல்லியதை செய்ய வக்கில்லாமல் மீண்டும் பேச்சுவார்த்தை என்று ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்துள்ளது.

  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பல்களுடன் சேர்ந்து மலையக பெருந்தோட்டத் தொழிலார்களை ஏமாற்றுவதில் சகல மலையக அரசியவாதிகளுக்கும் பங்குண்டு. 

  • Like 2

 11. 2 hours ago, Gowin said:

  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தமக்கு வழங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

  ஹிந்தியர்களை தொடர்ச்சியாக பிச்சைக்காரர்களாக வலம் வரவைப்பதில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் 30 வருடங்களுக்கு மேலாக வெற்றி கண்டு வருகின்றனர்.

  • Like 1
  • Thanks 1

 12. 7 hours ago, கிருபன் said:

  இனப்படுகொலை புரிந்த ஆட்சியாளர்களும் அவர்களின் அரசியலறிஞர்களும் இதனை முறியடித்துஇ மூடி மறைத்துஇ சர்வதேச அரங்கிலிருந்து அகற்ற முயற்சிக்கினறனர். இவ்வாறு முயற்சிக்கும் இனப்படுகொலையாளரை தப்ப வைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமப்பினர் தொடர்ந்து உதவி வருகின்றனர்.

  தமிழ் மக்களுக்கெதிரான இந்த மகிந்த – கூட்டமைப்பு “டீலை” உடைத்து இனப்படுகொலை தீர்மானத்தைத் சர்வதேச அரங்கில் நிலை நிறுத்துவதன் மூலமே ஆட்சியாளர்க்கு அழுத்தங்களைப் பிரயோகித்து எம் மக்களுக்கான விடிவைப் பெறமுடியும்.

  10+ வருடங்களை தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டுகொடுத்து கொலைகாரர்களை காப்பாற்றியது மட்டுமல்லாது தமிழரின் உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி வந்த சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் தமிழின விரோத செயற்பாடுகளை முறியடிக்குமளவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைகள் இடம்பெறவில்லை.

  • Like 2

 13. 1 hour ago, உடையார் said:

  அங்கு நான் செய்தி சேகரிப்பதற்கான சென்றிருந்தேன். அங்கு வழமைக்கு மாறாக அதிகரித்த சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். என்னையும் வழிமறித்து சோதனை செய்தனர். எனது உடமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர். பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளை நான் புகைப்படம் எடுத்திருந்தேன்.

  இதன்போது என்னுடன் முரண்டபட்டுக் கொண்ட பொலிஸார் தமது கடமைகளுக்கு நான் இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 3 குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 30ம் திகதி நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

  வடக்கில் தமிழின விரோத சிங்கள-பௌத்த காடையர்கள் போலீஸ் அதிகாரிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது அங்கு கடந்த சில மாதங்களாக நடைபெறும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தடுப்பு முயற்சிகள், ....., வீடுகள் புகுந்து தாக்குதல், ....., கோவில்களுக்குள் காலணியுடன் செல்லும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள்,...  என .... பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  போர்க்குற்றவாளி கோட்டாபயவின் பயங்கரவாத சகாக்களாக இருக்க வேண்டும்.

  • Like 1
  • Thanks 1

 14. நேற்றைய தினம் மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது.

  ஆயினும் கூட்டத்திற்கு செல்லவிருந்த உறுப்பினர்களை முதலில் கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த சயந்தன், சசிகலா ரவிராஜை சுயமாக இயங்க விடமால் தடுப்பதற்கேதுவான அணுகுமுறைகளை கையாள்வதற்கு திட்டங்களை வகுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பின்பு அங்கிருந்து மாமனிதர் இல்லத்திற்கு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றனர். இதில் ஒரு சிலர் சயந்தனின் திட்டத்திற்கு உடன்பட்டனர்.

  குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு தென்மராட்சிப் பகுதியில் ஆதரவு வேண்டி சசிகலா ரவிராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டுமென்று மறைமுக அழுத்தங்கள் சயந்தனால் சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  ஆயினும் இதை லாவகமாக கையாண்ட சசிகலா கட்சி மற்றும் கட்சித் தலைமைக்கு விசுவாசமாகவும் கட்சியின் வெற்றிக்காகவும் தென்மராட்சிப் பகுதியில் தான் தனித்து பிரச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

  அத்துடன் மற்றைய தொகுதிகளில் அந்தந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவும் விருப்பம் தெரிவித்தார்.

  கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் குறித்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

  https://www.tamilwin.com/srilanka/01/249207?ref=home-feed

  • Like 1

 15. கஜேந்திரகுமார் சுயநலக் கும்பலின் காண்டீபன் சுமந்திரனுக்கு போட்டியாக விடுதலைப் போராளிகளை கொச்சைப்படுத்துவது எதற்காக?

   


 16. 17 hours ago, கிருபன் said:

  பிரமதாஸவே ஆயுதம் கொடுத்தார்; ‘நானே சாட்சி’ - கருணா அம்மான்

  இதை ஜெனீவாவில் போய் சொல்லலாம்!

  திரும்பி வந்து கல்லறைக்கு போக வேண்டியிருக்கும்!


 17. 14 hours ago, nunavilan said:

  ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

  தேர்தல் முடியும் வரை ஒரு சிங்கள-பௌத்த கொலைகாரக் கும்பல் மற்றைய சிங்கள-பௌத்த கொலைகாரக் கும்பலில் பிழை கண்டுபிடிக்கும் வேடிக்கைகள் நிகழும்.


 18. 6 hours ago, பெருமாள் said:

  தேர்தல் என்ற வகையில் எனக்கு 50 வீத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உதவிகளை வழங்குகின்றதுடன் என்னை நாடாளுமன்றம் அனுப்பும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

  வரும் தேர்தலில் சிங்கள-பௌத்த காடைத்தனத்தின் பின்னால் மட்டக்களப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவரும்.


 19. 53 minutes ago, உடையார் said:

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

  எலும்புத் துண்டுகளுக்கு அலையும் கூட்டம் ஒன்றிணைந்துள்ளது.

  எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டுவரும் ஹிந்திய அரச பயங்கரவாத கும்பல்கள் இனியும் எலும்புத்துண்டுகளை வீசுமா என்று தெரியவில்லை.

  • Like 1

 20. தமிழர்கள் பாதுகாக்கப்பட்ட தாயகத்தை நோக்கி நகர வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்!

  தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயக்கத்தை பெறுவதை பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

  சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

  இன்று மேற்கத்திய உலகில் தந்தையின் நாள். நாங்கள், தமிழர்கள், மெதுவாக இந்த சிறப்பு தினத்தை கொண்டாட ஆரம்பிக்கிறோம். இந்த தந்தையர் தினத்தன்று, சில வாரங்களுக்கு முன்பு காலமான எங்கள் காவலர் தந்தை ஐயா நல்லதம்பியை மீண்டும் அஞ்சலி செய்வதுடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்த புலம் பெயர்ந்த தமிழ் தந்தையர்களையும் நாம் நினைவில் கொள்ள விரும்புகிறோம்.

  அத்துடன் இங்கு, மூன்று இனங்களையும் சித்திரவதை செய்த இடங்களை கண்டுபிடிக்கும் பெயரில், மூன்று இனங்களையும் ஒன்றாக கொண்டுவருவதற்கான முயற்சி உள்ளது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம் .

  இது மூன்று இனங்களும் ஒன்றுபட்டது என்ற உணர்வை இறுதியில் உருவாக்கும். இதனால் தமிழர் பிரச்சினை உள்நாட்டு பிரசனையாக மாற்றப்படும். இது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், இந்தியாவின் தலையீட்டை முறிவடையச் செய்யும்.

  மேலும் அனைத்து சித்திரவதை முகாம்களின் இருப்பிடமும் எங்களிடம் உள்ளது. எனவே இதனை கண்டுபிடிக்க சர்வதேச தலையீடு தேவையில்லை என்று சிறிலங்கா அரசு அந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளும்.

  இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் வேண்டும் என , காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள், முல்லைத்தீவில் கேட்கிறார்கள். ஆனால் இலங்கையை சர்வதேச தலையீட்டிலிருந்து விடுவிக்குமாறு கூட்டமைப்பு தொடர்ந்து கேட்டு வருகின்றது. அழுத்தம் என்பது, மீன்பிடி ஏற்றுமதியை நிறுத்துவது போன்றது. எனவே அழுத்தம் தமிழருக்கு ஒன்றையும் செய்யாது. இது ஸ்ரீலங்காவைத்தான் பாதுகாக்கும்.

  முல்லைத்தீவு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க விரும்பினால், இலங்கையில் அமெரிக்க நேரடித் தலையீட்டையே அழைக்க வேண்டும்.

  இந்தியாவின் நேரடி ராணுவ தலையீட்டின் மூலம், 1987 ல் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண கட்டமைப்பு உருவாக்கியது. இத்தீர்வு சரியானதா அல்லது பிழையானதா என்பது கேள்வி இல்லை. இதனை நடைமுறை படுத்திய முறை தான் கவனத்துக்கு உரியது.

  அத்துடன் கூட்டாட்சி என்பது தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசியல் அமைப்பு அல்ல.

  ஏனெனில் எந்த நேரத்திலும் எந்த மாற்றங்களையும் செய்ய, சிங்களவருக்கு ⅔ பெரும்பான்மை உள்ளது, சிங்களவர்கள் வடகிழக்கில் எந்தவொரு அரசாங்க கட்டமைப்பையும் அகற்ற இராணுவத்தையும் சிங்கள காடையர்களையும் பயன்படுத்துவதுடன், கூட்டாட்சி என்பது மூன்றிற்கு மேற்பட்ட இனம் உள்ள நாட்டில் தான் நடைமுறைக்கு சாத்தியமானது.

  எனவே, தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயக்கத்தை பெறுவதை பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும் என்றனர்.

  இதேவேளை இன்று சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு காணாமல்போன தனது மகனைத்தேடி போராட்டங்களில் கலந்து கொண்டு அண்மையில் உயிரிழந்த நல்லதம்பி ஐயாவின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நச்சுபாம்பிற்கு ஒப்பிடும் படியான பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  https://www.ibctamil.com/srilanka/80/145575

   

 21. முகமாலை துப்பாக்கிச்சூடு பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு

  முகமாலை காரைக்காடு குளப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

  இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

  இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவிக்கையில், “முகமாலை காரைக்காடு குளப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட அதனோடு ஒட்டியதாக நிகழ்ந்த விடயங்கள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருக்கின்றேன்.

  அச்சம்பவம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

  இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்க மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.

  அச்சம்பவம் தொடர்பாக பூரணமான விசாரணையை முன்னெடுத்து முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறும் கோரியுள்ளேன். அத்துடன் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைதியை சீர்க்குலையக்கூடாது என்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

  http://athavannews.com/முகமாலை-துப்பாக்கிச்சூட/


 22. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி குறித்து ஆராய குழு நியமனம்

  Exam.jpg

  கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

  கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

  இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

  இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அதிபர்களுடாக அமைச்சிற்கு வழங்குமாறு அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

  இந்த கருத்துகள் மற்றும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சையை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினத்தில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  தற்போது கிடைக்கப்பெற்றுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியில் பரீட்சையை நடத்த முடியும் என பல தரப்பினரும் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

  http://athavannews.com/உயர்தரப்-பரீட்சையை-நடத்த/


 23. இந்தியர்கள் நீண்ட காலமாகவே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!