• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,101
 • Joined

 • Days Won

  47

Everything posted by போல்

 1. தொண்டமான் கும்பலின் பொறுப்பற்ற மரணவிழா அரசியலைக் கட்டுப்படுத்த நுவரெலியாவில் மே 31வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 2. மலையக மக்களின் வாக்குப்பலத்தை கொண்டு கிடைத்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழினப் படுகொலைகாரர்களில் ஒருவரான ஹிந்தியாவுக்கு விசுவாசமான அடிமையாக காலத்தை ஓட்டிய ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்த மலையக மக்களுக்கு விசுவாசமாக நடந்தது இல்லை. இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.
 3. உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அந்த போராட்டத்தில் தங்களை அகுதியாக்கிய மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும்படியான கருத்துக்களை அண்மையில் சுமந்திரன் வெளியிட்டதாகக் கூறி களத்திலும், புலத்திலும் பாரிய எதிர்வினையாற்றப்பட்ட நிலையில், தற்பொழுது த.தே.ம.முன்னியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றது. https://www.ibctamil.com/srilanka/80/143952?ref=home-imp-flag
 4. மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் பலியாகியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் எலிக்காய்ச்சலும் தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் இருவரே எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143977
 5. கொரோனா வைரஸ் என்றால் என்ன? யாழ்.மக்களின் பதில் சீனாவின் வுகான் மாநிலத்தில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுதையும் புரட்டிப்போட்டுள்ளது. இந்த வைரஸ் எங்கிருந்தது வந்தது? கொரோனா வைரஸ் என்றால் என்ன? என்ற கேள்விக்கு யாழ். மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவற்றை கீழே காணொளியில் காணலாம்... https://www.ibctamil.com/srilanka/80/143999
 6. தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை மறந்த நயவஞ்சகர்கள் என்று தெளிவாகவே அடையாளம் காணப்பட்டுள்ள சம்மந்தன், சுமந்திரன் இருவருமே அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள். இந்த இரண்டு நயவஞ்சகர்களும் 2009 இன் பின்னர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்.
 7. மந்திகையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய புத்தளம்வாசி சிக்கினார் மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். “சாவகச்சேரியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புத்தளத்தைச் சேர்ந்த சந்தேக நபர் சாவகச்சேரியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் சங்கிலிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பருத்தித்துறையில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று அறியப்பட்டது. அத்துடன், கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கல் ஒன்றால் தாக்கிய சம்பவத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/144007
 8. வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் யாழிலிருந்து ஆரம்பம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காரைநகர் சாலையிலிருந்து புறப்படும் பேருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்று அதிகாலை 5.45 மணிக்கு நீர்கொழும்பு வரையான சேவையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நீர்கொழும்பு வரை அனுமதிக்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ளது. அத்தோடு திருகோணமலை, மட்டக்களப்பு - அக்கரைப்பற்று மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாளை பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றும் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/144010
 9. இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென உயிரிழந்துள்ளார். http://athavannews.com/இலங்கையில்-கொரோனாவினால்/
 10. படிப்பிக்கிறார்கள்! ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும்.
 11. சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டில் அத்துமீறித் தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது, வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி ஆயுததாரிகள் அட்டகாசம் புரிந்தனர். குறித்த சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்வதாக சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு வரும் திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம். பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் திரு.றோய் டிலக்சன் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சட்டத்தரணி-றோய்-டிலக்சனி/
 12. நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு - சற்றுமுன் வெளியான தகவல் எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143853
 13. நிர்க்கதிக்குள்ளான 1500 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு மேல் மாகாணத்தில் ஊரடங்கால் நிர்க்கதிக்குள்ளான 1500 பேர் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுகததாச விளையாட்டரங்கிற்கு அழைக்கப்பட்டு சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டதன் பின்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 42 பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து நிர்க்கதிக்குள்ளான 16,000 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143859
 14. காசு அறவிடுவது நீதிமன்றினால் நிறுத்தப்பட்டுள்ளது. பௌத்த ஆக்கிரமிப்பு சுற்றிவர இருந்தாலும் அது இன்னமும் இந்துக்களின் சொத்தாகவே இருந்து வருகிறது.
 15. யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபர் தொடர்ந்து தெரிவிக்கையில்.. யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 21ஆம் திகதியில் இருந்து காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும், மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது. 6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள் அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளது எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி யுள்ளோம். தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு புதிய விதிப்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படஇருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது கொழும்பு கம்பகா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய விடயங்களை செயற்படுத்துவதற்காக தீர்மானித்துள்ளோம். தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது உள்ளூர் போக்குவரத்து சற்று அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெற்று வருகின்றது அதிலும் குறிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுவதோடு அவை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது. அதோடு தனியார் போக்குவரத்துச் சேவையில் நின்டுகொண்டு பயணிகள் பயணம் செய்வது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே இது தொடர்பில் நாங்கள் தனியார் போக்குவரத்து சபையினருடன் பேச உள்ளோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். அத்தோடு தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கும் வழமைபோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது. காற்றின் தாக்கத்தின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் தீவு பகுதிக்கான போக்குவரத்து சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது. ஆலயங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் அறிவித்துள்ளோம் அதிலும் மத வழிபாட்டுத்தலங்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன். எங்களுடைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக "சௌபாக்கியா "கொள்கை அதாவது விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சி உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வீட்டு தோட்டங்கள். விதை நாற்றுகள் மரக்கன்றுகள் போன்றவை சுமார் 26,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன அதே போல உரவிநியோகமும் விவசாய உள்ளீடுகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாய உள்ளீடுகள் போதுமானஅளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் நாங்கள் உரிய இடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் அதேபோல் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பன இந்த விடயத்தை மிகவும் சிறப்பாக செயற்படுத்தி வருகின்றார்கள். சௌபாக்கியா வேலைத்திட்டமானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது எனினும் அது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடேயன்றி அது ஒரு பிரச்சினையான விடயமல்ல அது விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143908
 16. தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு -மகிந்த அணி கடும் தாக்கு "பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது." இவ்வாறு மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது. "தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் எதிரணியினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராகவும் செயற்பட்டு வருகின்றார். இவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகக் ஹுலை நியமித்த அரசமைப்புப் பேரவை அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/143941
 17. தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் இறுதிப் போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதி என்று நாங்கள் அவரை அடையாளப்படுத்தியிருந்த போதிலும் தலைவன் என்ற ரீதியில் இறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய காரணத்தினால் பிரபாகரன் மீது மரியாதை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றிலிருந்து, இராணுவத் தலைமையகம் நோக்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் தமக்கு பிரபாகரனின் மரணம் பற்றிய தகவலை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளையும் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் பிரபாகரன் உயிரிழந்த செய்தி கிடைக்கும் வரையில் ஆங்காங்கே சிற்சில சமர்கள் இடம்பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மே மாதம் 17ம் திகதி ஆரம்பமான மோதல்கள் மே மாதம் 19ம் திகதி வரையில் நீடித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143922?ref=imp-news
 18. தமிழின அழிப்புக்கு துணை செய்யும் வியாக்கியானத்தை செய்வது சுமந்திரனா? டக்ளசா? என்ற போட்டி கொலைகாரர்களின் எடுபிடிகளுக்கிடையே நடக்கிறது.
 19. நல்ல விடயம். தொலைபேசிகள் தொல்லைபேசிகளாக மாறாமல் இருக்கவேண்டும். இந்த தொலைபேசிகள் இரவல் பெறும் அடிப்படையில் வழங்கப்படுவது நல்லது.
 20. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் சுமந்திரனால் களமிறக்கப்பட்டவர் அம்பிகா. இவர் கடந்த ஜெனீவா பயணத்தின் போது அங்கு சிவில் சமூக பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார். அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்களரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை ஏனையோருக்கு வேடிக்கையாவே இருந்தது என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளரான சுதா தெரிவித்திருந்தார். லங்காசிறியின் 24 மணிநேர செய்திச் சேவையில் கலந்துகொண்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பிலும் மேலும் பல விடயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். https://www.tamilwin.com/politics/01/246631?ref=imp-news
 21. யுத்த வெற்றியின் 11ஆவது ஆண்டுப் பூர்த்தியின் போது விடுதலைப் புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சித்து புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்... https://youtu.be/EdFlBUajnTs https://youtu.be/71XE5oHYLwI https://www.tamilwin.com/statements/01/246628?ref=home-feed
 22. திருகோணமலை - மூதூர் பகுதியில் யுவதியொருவரை கடத்திச் சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரொருவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார். நடுத்தீவு, மூதூர் - 7, பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வெருகல் பகுதியில் உள்ள 23 வயதுடைய தமிழ் யுவதியொருவரை கடத்தி சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்திச் செல்வதாக அப்பிரதேச பள்ளிவாசலினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்த குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilwin.com/community/01/246630?ref=home-feed