• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,101
 • Joined

 • Days Won

  47

Everything posted by போல்

 1. ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தற்போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த மாவட்டங்களில் தளரத்தப்பட்டுள்ளது. எனினும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை நாடு தழுவிய ரீதியில் தினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143716?ref=rightsidebar
 2. முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று; வீடுகள் பகுதியளவில் சேதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது இந்த வகையில் மாங்குளம் பகுதியில் ஒரு வீட்டின் உட்கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த தாயாரும் பிள்ளைகளும் பாதுகாப்பான முறையில் வெளியேறி இருக்கிறார்கள் இந்த சம்பவம் இரவு 1.10 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய காற்று மற்றும் பலத்த மழை காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் ஆக நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது. குறிப்பாக இந்த பயனாளிகளுக்கான அனர்த்த கொடுப்பனவாக முதல்கட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளில் சேதங்கள் கணக்கிடப்பட்டு அதற்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143702
 3. கொடூர பாசிசவாத ஆட்சிமுறைக்குள் ஸ்ரீலங்கா! எச்சரிக்கை விடுத்துள்ள பிரமுகர் ஆட்சியிலுள்ள அதிகார வர்க்கத்தினரது அரசியல் நோக்கங்களுக்காகவே படையினர் பலவித குற்றச் செயல்களை கடந்த காலங்களில் நிகழ்த்தியிருப்பதாக விமர்சனம் வெளியிட்டுள்ள நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தற்போது அந்த இரு அணியினரும் ஒன்றிணைந்திருப்பதால் பாரிய ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார். கொடூர பாசிசவாத ஆட்சிமுறைக்கு ஸ்ரீலங்கா சென்று கொண்டிருப்பதாகவும் அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா படையினரின் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தனர். அவர்கள் தத்தமது நோக்கங்களுக்காக அவற்றை செய்யவில்லை. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக செய்தார்கள். இன்று ஆட்சியிலுள்ளவர்களுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றனர். அரச உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும் 60 வயதாகின்ற போது எப்படியாவது தொடர்ந்தும் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கே விரும்புகின்றனர். தங்களுக்குத் தெரிந்த விடயங்களை வைத்து அரச அனுசரணையைப் பெற்று வாகனங்களைப் பெற்று சுகபோகங்களை அனுபவிக்கவும், அதிகாரங்களை பயன்படுத்தவும் 90 வயதுவரையும் இப்படியே இருக்க விரும்புகின்றனர். ஆட்சியாளர்களுக்காக சட்டங்களை வளைக்கவும், திருத்தவும் மாற்றியெழுதவும் அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். அவர்கள் இராணுவத்திலும் இருக்கின்றார்கள். இந்த அனைவருமே தமது இனவாத, மதவாத அதிகாரிகளை இணைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு செல்ல ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். குறிப்பிட்ட 5 வருடங்களிற்குள் தேவையான வசதிகளை அமைத்துக் கொள்வதற்கு திறமையுடைய பலரையும் இணைத்திருப்பதால் அதற்கேற்ற வகையிலான வழிகளை அமைத்துக்கொள்கிறார்கள். கொடூர பாசிசவாதத்திற்கு வெள்ளைச் சுண்ணாம்பு இட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியின் மற்றுமொரு அங்கத்தையே ஆட்சியாளர்கள் செய்யத் தயராகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143710
 4. உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல் தற்போதைய சூழ்நிலையில், இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார். கால அட்டவணைகளுக்கு அமைய பாடத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும். அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட உள்ளதாக என்.எச்.எம். சித்ரானந்த கூறினார். https://www.ibctamil.com/srilanka/80/143707
 5. வடக்கில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவை யாழில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக குறித்த பயண சேவைகள்யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளதாகவும் சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து குறித்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/வடக்கில்-நாளை-முதல்-மட்ட/
 6. போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, 'எம்மைப்போன்ற ஒரு சிறிய நாட்டில் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ள படைவீரர்கள் தேவையற்றஅழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை' என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தங்கள் நிலைபாடு என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தொடர்பில் பேசிய அவர், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டமைப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/politics/01/246624?ref=home-top-trending
 7. பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக்குழுவும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டினார். தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்கத் தரப்பு காட்டாமாக உள்ளார்கள் என்றும் இன்று அது அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டிய மனோ கணேசன் இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143745?ref=ibctamil-recommendation
 8. நாடாளுமன்றை மீள கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனை பயன்படுத்த தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன்.அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக்கூடாது. நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.இந்த நாடாளுமன்றின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசியலமைப்பின்படி என்னசெய்யமுடியுமோ அதனை நான் செய்வேன். நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143745?ref=ibctamil-recommendation
 9. யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவெமான்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. யாழ்.நகரை அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஸ்ட பெண் சட்டத்தரணி தனது சிரேஸ்ட சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை அவர் இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என கோரிய இராணுவத்தினர் கைப்பையினுள் இருந்த பொருட்களை வீதிகளில் கொட்டி , கைப்பையை சோதனையிட்ட பின்னர் வீதியில் கொட்டப்பட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு சம்மதிக்காத சட்டத்தரணி , பொருட்களை வீதியில் கைவிட்டு விட்டு தனது கைப்பையை இராணுவத்தினரிடமிருந்து வாங்கி சென்றுள்ளனர். இராணுவத்தினரின் இந்த அநாகரிக செயற்பாடு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது. யாழில். கடந்த இரு தினங்களாக மாலை வேளைகளில் பல இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதி சோதனை நடவடிக்கைகளும் பதிவுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143747?ref=imp-news
 10. கடும் காற்றால் பாதையின் குறுக்கே வீழ்ந்த பாலை மரம் – மின் விநியோகமும் துண்டிப்பு கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த மரம் முறிந்து விழ்ந்துள்ளது. இதனால் மின்சார சபை மற்றும் ரெலிகொம் நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்துள்ளன. அத்துடன் கம்பங்களும் முறிந்துள்ளன. இதன் காரணமாக வட்டக்கச்சி, இராமநாதபுரம், திருவையாறு, பன்னங்கண்டி உள்ளிட்ட பல கிராமங்களிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த மரத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://athavannews.com/கடும்-காற்றால்-பாதையின்/ யாழில் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் சேதம் – விவசாயிகள் கவலை யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பல விவசாயிகள் தமது விளைபொருட்களை சரி வர சந்தைப்படுத்த முடியாத நிலையில் நஷ்டப்பட்டுப் போயுள்ள சூழலில் வாழை, பப்பாசி போன்ற இலகு மரங்கள் கடும் காற்றினால் சேதமடைந்து விவசாயிகளை மேலும் கவலையுள் ஆழ்த்தியுள்ளது. http://athavannews.com/யாழில்-கடும்-காற்றினால்/
 11. பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாகாணத்தில் நாளையதினம் தொடங்கும் சேவை வடக்கு மாகாணத்தில் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த நிலையில் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறித்த பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளுக்கு அமைவாக குறித்த பயண சேவைகள் யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்கள் கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி நடத்துனர் களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/143671
 12. கொறோனா முகக் கவசத்திற்குள் இன அழிப்பு துண்டுப் பிரசுரம்! பிரான்ஸ் தமிழ் இளைஞரின் புதிய யுக்தி!! தமிழர்களின் முள்ளிவாய்கால் நினைவுகூரலை வித்தியாசமான முறையில் செய்து காண்பித்த ஒரு இளைஞன் பற்றிய பதிவு இது. கொரோனா தொற்று சூழலில் முகக் கவசங்களை தயாரித்து, அதனுள் தமிழின அழிப்பு பற்றிய துண்டுப்பிரசுரங்களை வைத்து பிரெஞ்சு மக்களுக்கு இலவசமாக வழங்கி, தமிழ் இன அழிப்பை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு காரியத்தை அவர் செய்திருந்தார்: https://www.ibctamil.com/france/80/143668?ref=home-imp-flag
 13. விவசாய நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த எண்மருக்கே இவ்வாறு வயரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலேயே குறித்த சம்பவம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த கடற்படையை ஒத்த சீருடை தரித்த மற்றும் சிவில் உடையில் நின்றவர்களாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களது உடல்களில் பலத்த கண்டல்கள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக மருத்துவமனைக்கு செல்லாமலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உழவு இயந்திரம், மோட்டார்சைக்கிள், சைக்கிள் போன்ற வாககனங்களில் தனித்தனியாக பயணித்தவர்கள் என்றும் எதற்காக தாக்குதல் நடாத்தப்பட்டது என்று தமக்கு காரணம் தெரியவில்லை என்றும் அச்சம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார் இதேவேளை ஊரடங்குச் சட்டம் இரவு 8மணிக்கே நடைமுறைப்படுத்தப்படுகின்ற சூழலில் 7.30 மணிக்கே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143673?ref=imp-news
 14. யாழில் காற்றின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார். அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார். கடந்த பதினேழு மற்றும் பதினெட்டாம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலத்திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/143589
 15. மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு -சிவகரனிடம் இரண்டுமணிநேரம் விசாரணை நடத்திய ரி ஐ டி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லங்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு மேற்கொண்டமை தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினுடைய தலைவர் சிவகரனிடம் இன்றைய தினம் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இரண்டு மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறித்த விசாரணையின் போது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் நிகழ்வை தொடர்சியாக அரசாங்கத்துக்கு எதிராக நடாத்திவருகின்றமை தொடர்பாக சிவகரனிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளதுடன் குறித்த விடையம் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனி வரும் நாட்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வோம் எனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த திடீர் விசாரணை தமிழ் உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143666
 16. உண்மை! சிங்கள-பௌத்த கொலைகாரக் கலாச்சாரத்தை சனநாயக கலாச்சாரமாக சுமந்திரன் போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் கருதுவதில் வியப்பில்லை!
 17. உண்மை! இந்த கொலைகாரக் கலாச்சாரத்தை வன்முறையற்ற கலாச்சாரமாக சுமந்திரன் போன்ற ஒட்டுண்ணிகள் கருதுவதில் வியப்பில்லை!
 18. லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143557 சிங்கள-பௌத்த மிலேச்ச கொலைகாரர்களுக்கும் சிங்கள-பௌத்த மிலேச்ச பயங்கரவாதிகளுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பதவியுயர்வு அளித்து எக்காளமிடுகின்றனர்!
 19. வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல் அம்பான் சூறாவளி வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டுள்ள அம்பான் சூறாவளி நாளை பிற்பகல் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30க்கு மையம் கொண்டுள்ளது. இது நாளை 20ஆம் திகதி பிற்பகல் வேளையில் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும். மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும். வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143562
 20. வடபகுதி மக்கள் தொடர்பில் படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! வடபகுதியில் மக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமாக ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்குமாறு வடக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஆயிரத்தை நெருங்கும் நிலையில், பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுப்போக்குவரத்தும் இப்போது வழமை போன்று இயங்க ஆரம்பித்துள்ளதால் மக்கள் அதிகம் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அவசியமான தேவை கருதி வெளியில் செல்லுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா வைரஸ் அபாயம் இன்னும் நீங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அநாவசியமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/143547?ref=imp-news
 21. பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்புகளின் அடையாளமாகும். அந்த அபிலாஷைகளை அடைந்துகொண்டுள்ள ஒரு சூழலில் இம்முறை படைவீரர்கள் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கிடைத்திருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட அனைத்து பிரஜைகளும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்திருந்தனர். உலகின் ஒழுக்கக் கட்டுப்பாடான இராணுவம் என்ற கீர்த்திக்குரிய எமது இராணுவ அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதிக்கும் பல நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன. இதனால் மனவேதனையடைந்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு சட்டமற்ற நிலைக்கு பதிலாக சட்டத்தையும், அநீதிக்கு பதிலாக நீதியையும் உறுதிப்படுத்தி படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளுக்கான உரிய கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். இந்த எதிர்பார்ப்புகளை எமக்கு நிறைவேற்ற முடியுமாக இருந்தது. நாம் அடைந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அர்த்தப்படுத்துவதற்கு ஒரு சுதந்திர தேசம் என்ற வகையில் நாம் ஒன்றுபட்டு எழுந்திருக்க வேண்டும். பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் தேசத்தின் நன்மையை முதன்மைப்படுத்தி உலகின் ஏனைய நாடுகளுடனும் இணைந்து எமது இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும். கொவிட் 19 நோய்த்தொற்று போன்ற தடைகள் வந்தாலும் நாம் ஒரு போதும் பின்னோக்கிச் செல்லப்போவதில்லை. தேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச பொறிமுறையினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. நாடு பிளவுபடுவதை தடுத்து நிறுத்திய படைவீரர்களுக்கும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய மக்களுக்கும் வழங்கமுடியுமான உயர்ந்த கௌரவம் அதுவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன். தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மற்றும் பல்வேறு தியாகங்களை செய்த படைவீரர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜனாதிபதி-யுத்த-வெற்றிநாள/
 22. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்ட இராணுவத்தினர் யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக சுடரேற்றபட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக அக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சிலருடன், சுகாதார விதிமுறைகளை பேணி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் எட்டு இராணுவத்தினர் ஏன் தீபம் ஏற்றுகின்றீர்கள் ? அதற்கு அனுமதி இல்லை உங்களை கைது செய்வோம் என மிரட்டி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைந்தனர். அதற்கு கட்சியின் செயலாளர் நாம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே அஞ்சலி செலுத்துகின்றோம். உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த தடையில்லை என கூறி அஞ்சலி நிகழ்வினை நடாத்தினார்கள். சிறிது நேரத்தில் அஞ்சலி நிகழ்வை முடித்து விட்டு , தீபத்தை அகற்றி விட்டு உள்ளே செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தியமைக்கு அமைவாக ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டு இருந்ததனால் , அதனை அணைக்காது , அது அணைந்த பின்னர் அதனை அகற்றுகின்றோம் என கட்சியின் செயலாளர் கூறி அவர்கள் அலுவலகத்திற்குள் சென்றுள்ளனர். அதனை அடுத்து அவ்விடத்தில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினரும் பொலிசாரும் சில நிமிடத்தில் இராணுவத்தினர் மட்டும் தமது ஜீப் ரக வாகனத்தில் திரும்பி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து அதனை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட தீபத்தை அணைத்து அதனை தூக்கி வீசிய இராணுவத்தின் அநாகரிக செயற்பாடு உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களை அவமதிக்கும் செயற்பாடு. என கட்சியினர் தெரிவித்தனர். http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-19/
 23. 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற மிகப் பாரிய சூறாவளியானது மிக மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து நேற்று (2020 மே 18ஆம் திகதி) காலை 05.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 765 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.30 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும்மேலாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிக மிகப் பாரிய மீயுயர் சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மே 20ஆம் திகதி வடக்கு – வடகிழக்கு திசையில் பிற்பகலளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில்அடுத்த 12 மணித்தியாலங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை: கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/150-மில்லிமீற்றர்-மழைவீழ்ச/
 24. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 2019 மே 19 ஆம் திகதி 30 வருட யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து முப்படையினரும், பொலிஸாரும், சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் வரை நாட்டில் ஒரு பயங்கரவாத சம்பவம் கூட நிகழாதை உறுதி செய்து அமைதியை பாதுகாத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியை சேர்ந்த 29 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் வெற்றிக்கான தங்களது நீண்ட பயணத்தின் போது 14 ஆயிரம் யுத்தவீரர்கள் வாழ்நாள் காயங்களை சந்தித்து சக்கர நாற்காலிகளுக்குள்ளும் கட்டில்களிற்குள்ளும் முடக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் நீடித்த இறுதிகட்ட வன்னி நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 900 படைவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். 29 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகி நிரந்தரமான கடும் காயங்களுடன் வாழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தேசத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/எந்த-சக்தியும்-தேசிய-பாத/