Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  544
 • Joined

Everything posted by முதல்வன்

 1. ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை. அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே, வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.
 2. கதிர்காமரை சொல்லலாம். மாமனிதர் ரவிராஜ் இதற்குள் எப்படி அடங்குவார். அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
 3. கண்ணீர் அஞ்சலிகள். நல்லதொரு மனிதனை தமிழுலகம் இழந்துவிட்டது.
 4. பஸ் மட்டுமில்ல ரெயின் எல்லாம் கொண்டுபோய் போடவேணும். TR பாலு மற்றும் தமிழக மாபியா மீன் முதலாளிகளின் தொழிலுக்காக எங்கள் மக்களின் வாழ்வாதாரமும் மீன் வளமும் முற்றாக அழிக்கப்படுகிறது. போரினால் அழிந்ததுபோக இப்ப இவர்களால், இதுதான் தொப்புள் கொடி உறவுகளுக்கு செய்யும் கைமாறா.? இதுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வாயை திறக்கமாட்டார்கள் வளவன்.
 5. தாழ்வு மனப்பான்மைக்கும் உயர்வு மனப்பான்மைக்கும் இடையிலான வலி சொல்லில் அடங்காது. அருமையாக எழுதி இருக்கிறீங்கள்.
 6. நந்தன் அண்ணை சண்டை காபூலில் தானே, தனங்கிளப்பில் இல்லைத்தானே, நித்திரையால எழும்பி யாழை பார்த்து கொஞ்சம் குழம்பிப்போனேன்.
 7. அங்காலை மத்திய அரசு காசி ஆனந்தனை கூப்பிட்டு வட்டுக்கோட்டை இரண்டாவது தீர்மானம் போட இருக்கிற மாதிரித்தான் உந்தக்கதையும். இந்தியாவின் எல்லா விளையாட்டும் எங்களுக்கு உயிர்போற விளையாட்டு. பார்த்து பத்திரமா இருங்கோ.
 8. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்
 9. நாங்கள் இரண்டு பிரிவாக இயங்கவேண்டும். ஒரு பிரிவு இந்திய அமெரிக்க சார்பு நிலையும் மற்றைய பிரிவு சீன சார்பு நிலையும் எடுக்க வேண்டும். ஒரு சமநிலை சார்பு பேச்சுவார்த்தைகளும் தூண்டல்களும் இடம்பெறவேண்டும். அதற்கு முதலில் சீனாவில் ஒரு தமிழ் சங்கமோ, அமைப்போ, வானோலியோ ஆரம்பித்து சீனாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புகளை பேணவேண்டும். அதைக்கொண்டு மேற்குடன் பேச வேண்டும். எங்களின் சகல அறிவும் ஒற்றைப்போக்கும், தான் பெருசு என்று காட்டுவதில் தான் அழிகிறது.
 10. சீனாவுடன் அதன் நலன் சார்ந்த (திருகோணமலை துறைமுகம்) குத்தகை திட்டத்துடன் மறைமுக பேச்சுவார்த்தை நடாத்திப்பார்க்கலாம். எமக்கும் இந்தியாவுக்குமான பகையை நிச்சயமாக சீனா அறிந்திருக்கும், ஆனால் எங்களின் பிரதிநிதியாக யாருடன் பேசுவது, நான் மேற்சொன்ன திட்டத்திற்கோ அல்லது வேறு திட்டதிற்கோ உறுதியளிக்கும் பிரதிநிதிகள் யார் என்பது தான் தற்போதைய கேள்வி.
 11. இந்திய உளவுத்துறை பல்வேறு மட்டத்துக்குள்ளும் ஊடுருவி தனக்கான தளத்தை உருவாக்க பாடுபடுகிறது.
 12. 87 இல் மிராஜ் விட்டு பூமாலை போட்ட மாதிரி நினைச்சாங்கள் போல. இந்தியா இப்பத்தான் கோமாவால் எழும்பினது போல. திரும்ப போய்படுத்துடும்.
 13. இந்தியாவோ இந்திய அரசியல்வாதிகளோ தமிழரை சுயமாக விட்டாலே போதும். இதையாரும் இந்தியாவுக்கு சொல்லமாட்டீங்களா .?
 14. அழகான ஆணித்தரமான கேள்வி. அரசியல்வாதிகளால் தமிழ் இளைஞர்கள் உணர்வூட்டப்பட்டார்கள். அரசியல்வாதிகள் அதை வாக்குகளாக மாற்றி தம்மை வெற்றியடையச்செய்வதோடு அந்த தமிழ் இளைஞர்களை தம்மால் அடக்கி ஆளலாம் என்று நினைத்தார்கள். அது அப்படியே எதிர்மறையாகி புலிகள் ஆயுதத்தால் அரசியல்வாதிகளை அடக்கலாம் என்று நினைத்தார்கள். தம்மைத்தூண்டி போராட அழைத்துவிட்டு அற்ப சலுகைகளுக்காக விலைபோவதாக எண்ணினார்கள். அரசியல் நேர்மையற்றவர்களுக்கு புகட்டும் பாடம் பின்னர் வரும் அரசியல்வாதிகளை புடம்போடுவதோடு தங்கள் சொற்படி நடப்பார்கள் என நினைத்தார்கள். ஒரு சில இராணுவ வெற்றிகளும் தமிழ் அரசியவாதிகளின் கையகலாத்தன்மையினால் ஏற்பட்ட அரசியல் தோல்விகளும் புலிகளை தாம் நடாத்தும் போராட்டம் தான் தமிழருக்கான ஒரே தீர்வு என்று நினைத்தார்கள். எண்பதுகளில் புரட்சி / நாடுகளின் விடுதலை அவர்கள் அப்படி எண்ணி இருக்க இலகுவாக வழிவகுத்து இருக்கலாம். அதேவேளை இந்தியாவை அதன் பூகோள நலனுக்காக இலங்கையில் நடாத்தும் விளையாட்டுகளை புலிகள் புரிந்துகொண்ட அளவுக்கு வேறு யாரும் புரிந்தார்களா தெரியவில்லை. திலீபனின் பன்னிருவேங்கைகளின் உயிரைக்கொடுத்து மக்களுக்கு புரியவைத்தார்கள் அதை இன்றுவரை மக்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்றார்கள். அவ்வாறே இந்திய இராணுவம் நடாத்திய கொலைவெறி ஆட்டத்துக்கு ராணுவ ரீதியாக உதவியவர்களுக்கு நிகரனாவர்கள் அரசியல் ரீதியாக உதவியவர்களும் தான். தங்களால் தூண்டப்பட்டு தங்களை மீறி செயற்படும் தங்களின் இடைவெளியை நிரப்பும் எவரையும் அவர்களுக்கு பிடிக்காது. கருணாநிதி அமிர்தலிங்கம் போன்றவர்கள் அந்த வகையறாவுக்குள் தான் வருவார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஆனால் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். அப்போது புலிகளுக்கு இருந்த இலகுவான தெரிவாக கொலை இருந்திருக்கலாம். நான் இந்த பதிவுகளை என் கண்ணோட்டத்தில் இருந்தே பதிகிறேன். வேறு சிலருக்கு வேறு கண்ணோட்டம் இருக்கலாம். நான் எந்த அமைப்பினதோ புலிகளினதோ பிரதிநிதி அல்லர். உங்களைபோன்ற தமிழர் விடுதலை மீது பற்றுக்கொண்ட தமிழன். நீலன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். நான் எழுதுவதில் பிழை இருக்கலாம் எல்லாரும் எழுதுங்கள் வரும் சந்ததி சரியெனபடுவதை எடுக்கும் தெளிவுகொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எம்மனதில் சுழலும் கேள்விகளை பாரங்களையும் இறக்கும் இடமாக இந்த களத்தை பாவியுங்கள் அது நீங்கள் உட்பட அனைவருக்கும் அவசியமானதும் நன்மைபயக்கவைப்பதும் ஆகும்.
 15. தரப்படுத்தல் அறிமுகபடுத்தப்பட்டதன் ஆரம்ப நோக்கம் தமிழர்கள் படித்து பட்டம் பெறுவதை தடுப்பதே. அது இன ஒடுக்குமுறையும் ஒரு படி அது பலரை போரடத்தூண்டியது. அது இப்போது இருக்கும் நிலைக்கு மாற பல்வேறு ஆண்டுகள் எடுத்தன. இப்போது இருக்கும் Merit பின்னர் மாவட்டரீதியான தரப்படுத்தல் இருந்திருந்தால் கூட மாற்றம் வேறுவிதமாக இருந்திருக்க கூடும். ஒவ்வொரு தாக்கமும் அப்போதிருந்த சூழ்நிலையால் ஏற்பட்டு இருக்கும். தாம் வஞ்சிக்கப்படுவதாக அடக்குமுறைக்கு உள்ளாக்கபடுவதாக அந்த காலத்து இளைஞர்கள் உணர்ந்தார்கள். இப்போ அந்த முறைதான் பல்வேறு மாணவர்கள் மேற்படிப்பை தொடர உதவுகிறது என்றாலும் இந்த முறையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். (பொருளாதார இட ஒதுக்கீடு, நகரத்திலிருந்தான தூரம் என்பனவும் கணிப்பிடப்படவேண்டும்.) அனலைதீவும் யாழ் பருத்தித்துறை நகரமும் ஒன்றல்ல. முழங்காவில் நாச்சிக்குடாவும் கிளிநோச்சி வட்டக்கச்சி மல்லாவியும் ஒன்றல்ல.
 16. நிச்சயமாக. நான் அந்த திரியில் தொடங்கிவைத்துள்ளேன். உங்கள் மனதில் இந்தவிடயங்கள் நடக்காமல் இருந்தால், அல்லது வேறுவிதமாக (என்ன விதம் என்பதையும் குறிப்பிட்டால் நல்லது) நடந்திருந்தால் நாம் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்க தேவை இல்லை என்ற விமர்சனங்களை ஒன்றொன்றாக முன்வையுங்கள். எல்லார் மனதிலும் வெளி சொல்லாத கேள்விகளும் இருக்கும் விடைகளும் இருக்கும். அது எம் விடிவுக்கு பயன்பட்டால் நாமும் விடுதலைப் போராளிகளே.
 17. தமிழீழ தமிழர்களின் விடிவுக்காக் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம், அரசியல் நடவடிக்கைகள் மீது பல்வேறு தரப்பினர் விமர்சங்களை வைப்பது வழமை. அவற்றை வெறுமனே விமர்சனங்களாக, எதிரியின் துரோகிகளின் கூவல்களாக கடந்து சென்று விடிவை அடைய முடியாது. புலிகளே தற்போது இருந்தாலும் தாங்கள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிகழ்வை, தமிழ்மக்களின் அரசியல் தொடர்பாக கடந்து வந்த பாதையை நிச்சயமாக ஆராய்வார்கள். இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். எல்லாருக்கும் ஒரு நியாயயம் இருக்கும் தங்களின் நியாயம் தான் உலகில் மிகப்பெரியது என்று நினைப்பதால் தான் முரண்பாடுகள் வருகின்றன. ஆனால் ஒவ்வொருவரின் நியாயத்தையும் ஆராய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இந்த விமர்சனங்களும் அதற்கான கலந்துரையாடல்களும் எதிர்காலத்தில் எம் விடுதலைக்கு எந்த விதத்தில் ஆவது உதவ வேண்டும் என்பதை மனதில் வைத்து பதிவுகளை எழுதுங்கள். ஒருவரை ஒருவர் வென்றுவிடுவதால் விடிவு கிடைத்துவிடும் என்றால் நான் ஒரு தோல்வியாளனாக முதலில் பதிவு செய்துவிடுகிறேன்.
 18. புலிகளே இப்போ இருந்தாலும் துல்பன் போன்றவர்கள் தான் புலிகளுக்கு இப்போ அவசியமாக தேவையானவர்கள் கண்மூடிதனமாக ஆதரிப்பவர்களைவிட.
 19. நானும் அந்தவிவாதத்தில் பங்கு கொள்ள தயார் கோசானுடன். @tulpen இதே அரசியல் அலசல் பகுதியில் திரி ஒன்றை திறந்து கற்றுகொள்ளவேண்டிய பாடங்கள், அல்லது இனி எவ்வாறான நடவடிக்கைகள் பலனைத்தரும் என்ற தலைப்பில் திரியை திறவுங்கள் விவாதிப்போம். அது பலருக்கும் பயனுள்ளதாக ஒரே திரியில் வாசிக்க கூடியதாக வரலாற்றை முன்னகர்த்தக்கூடியதாக இருக்கும். உங்கள் கேள்விகள், கருத்துகள் இன்னொரு பரிமாணத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை அலட்சியமாக தாண்டி முன்னேற்றகரமாக எதையும் செய்துவிட முடியாது. போராடிய தரப்பை குறைசொல்வதால் மட்டும் எதுவும் மாறிவிடப்போவதுமில்லை, போராடிய தரப்பின் மீதான விமர்சனங்களை புறந்தள்ளுவதினாலும் எதுவும் நடந்துவிடப்போவதுமில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கு தெரிந்த வரையில் தனக்கு நியாயமான வகையில் போராட்டத்தை நடாத்தியது. அதற்கு தடைக்கற்களாக இருந்த தரப்புகளை எதிரிகளாக துரோகிகளாக அடையாளம் காட்டி போரிட்டது. அந்த போரின் முடிவில் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போது தமிழ்மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை என்பது இதுவரை நடக்கும் அரசியல் நிகழ்வுகளில் கண்கூடு.அதற்கான காரணம் தமிழ்மக்களின் அரசியல் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு மேல் கட்டமைக்கப்பட்டமை தான். தொடர்ந்தும் விவாதிக்க ஆசை ஆனால் இந்த திரியில் அல்ல. அப்படியில்லை விசுகு அண்ணை, துல்பன் போன்றவர்கள் தான் இப்போ எமக்குத்தேவை. அவர் புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் புலிகள் மீது அளவுகடந்த பற்றும், நம்பிக்கையும் வைத்திருந்தமையே காரணம். அவர்கள் அவ்வளவு செய்தும் தமிழ் மக்களுக்கு விடிவுகிடைக்கவில்லையே என்ற ஆதங்கங்கள் அவரை புலிகள் எங்கே பிழைவிட்டார்கள் என்ற தேடலையும் கேள்விகளையும் முன்வைக்க உந்துகிறது. நாங்கள் உண்மையான எதிரிகளை இனங்காணாது கேள்வி கேட்பவர்களை எதிரியாக்குகின்றோம். அவர் தமிழ் மக்களின் விடிவு என்ற கொள்கைக்கு எதிரானவர் அல்ல. அதற்கு இப்போ என்ன தேவை என்ற தேடலுக்கு விடைதேடுபவர்.
 20. ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 21. உண்மைதான் புங்கை அண்ணா. ஆனால் இதை ஐநாவில் சொல்வதுக்குத்தான் எங்களுக்கு என்று ஒருநாடும் இல்லையே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.