Jump to content

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  573
 • Joined

Everything posted by முதல்வன்

 1. நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
 2. நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும். அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும். இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை. இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது. இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும். இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன். அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.
 3. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும். ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும். ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும். ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.
 4. நல்ல விடயத்தை கூறி இருக்கிறீங்கள் நாதம்ஸ் அண்ணே. பாராட்டுகள்.
 5. உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து இனி சீமானின் தமிழ்தேசியம் பற்றி நான் கதைப்பதை தவிர்க்கிறேன். எங்கள் தாயகத்தில் தமிழ்தேசியத்தை முன்னிறுத்துவதை பற்றியே இனி என் கருத்தாடல் இருக்கும்
 6. ஆழ்ந்த இரங்கல்கள். நான் ரசிக்கும் கலைஞரில் இவரும் ஒருவர். இவரும் ராமரும் செய்யும் நகைச்சுவைக்கு அளவில்லை. ஆத்மா சாந்தியடையட்டும்.
 7. சருகுமான் எண்டும் சொல்லுவினம். உக்கிழான் இறைச்சி அந்த மாதிரி இருக்கும்.
 8. பெருமாள் நான் நல்லவரா கெட்டவரா என்று நாயகன் டயலொக் பேசி அது எனக்கே வந்து சேருது. எங்களை மலையாளி என்று ஒருவர் சொல்லும் போது நான் தமிழன் தான் என்று அவருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. அவரின் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை. உங்கட கதையில் மேஜர் விசு என்று ஒருத்தர் வீரச்சாவே அடையவில்லை என்றபோது தான் என்னால் முடியல என்று சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. சரி சொன்னாப்போல உங்களுக்கு மேஜர் விசுவை தெரியுமா .??
 9. வௌவால் சாப்பிட்டு இருக்கிறீங்களா .?? கொக்கு இறைச்சி மாதிரி இருக்கும். பிறகு கொக்கே சாப்பிடவில்லை என்று சொல்லக்கூடாது அழுதிடுவேன். உக்கிளானும் நல்லா இருக்கும். என்ன பழைய கதைகள் சொல்லி நாக்கில் எச்சில் வந்ததது தான் மிச்சம். நான் டயட்டில் இருக்கிறேனாக்கும் கொஞ்சம் பொறுங்கோ தலதா மாளிகை அடிச்ச படம் போகுது பார்த்திட்டு வாறன்
 10. ஒண்டுமட்டும் உண்மை அண்ணை. இந்த யாழ் இணையத்தோடு இண்டைக்கு மட்டும் நின்று விவாதிக்கிறவர்களில் 99 வீதமானவர்கள் தமிழ்தேசியத்தை மனசார நேசிக்கிறவர்கள் என்பதை மட்டும் மனசிலே வைச்சு கருத்துகளை பதியுங்கள். தமிழ்தேசியம் வெல்ல அவர்களிடம் மாற்றுகருத்துகள் இருக்கலாம் ஆனால் அதற்காக அவர்கள் துரோகிகள் அல்லர்.
 11. நிச்சயமா உடையார் அண்ணை. நானும் பலனை நினைக்கவில்லை. ஆனால் அது சங்கிலித்தொடர் போல நிறையபேர் பயன்பெறவேண்டும் என்று கோடிக்கணக்கில் முதலிட்டேன். எனக்கு காசு கேட்கவில்லை இலாபத்தை வைத்து இன்னும் பல இடங்களில் தொடங்குங்கள் என்று கேட்டேன். கடன்பட்டு அனுப்பினேன். இன்னும் கட்டிகூட முடிக்கவில்லை. பொருளாதாரம் தான் எங்களை உரிமையுடன் வாழவைக்கும் என்று நம்பினேன். எல்லாவற்றையும் என் மனத்திருப்திக்காக மட்டுமே செய்தேன் இருந்தாலும் மேலும் நிறையப்பேர் பயன்பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதுவரை யாழில் எங்கும் குறிப்பிடவேண்டும் என்று கூட நான் விரும்பவில்லை. ஏதோ இந்த திரியில் மனசில் பட்டதை எழுதுகிறோம் என்பதற்காக, ஒண்டுமே செய்யாமல் புலிகள் அழிவதில் சந்தோசமடைந்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற கருத்து மனசை பெரிதும் பாதித்தமையால் பதிந்தேன். அதற்கு விருப்பிட்டவரின் மனசை நான் புரிந்துகொள்கிறேன். அந்த இளையவரின் வயசில் நான் இருந்தபோது அவரை விட கொலைவெறியில் இருந்தேன். நான் செத்தாலும் பரவாயில்லை 2 லட்சம் சிங்களவனை கொல்லவேண்டும் என்றுக்கூட இருந்தேன். இப்போ இப்படி எழுதுகிறேன் என்றால் நீங்கள் புரிவீர்கள் என்ற நம்பிக்கை மட்டும்தான்.
 12. இப்போ இங்கே பிரச்சனை தமிழ்தேசியமல்ல. அதை கொண்டுபோகும் மூத்தவர் சீமான். எமக்குத்தேவை தமிழ்தேசியம் வெல்லவேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதில் சீமான் இல்லை என்றாலும் வெல்லும். அதுக்கு அனைவரும் தேவை. இதை நீங்கள் புரிவீங்கள் என்று நம்புகிறேன் உடையார் அண்ணா.
 13. ஆக்கபூர்வமாக தகவல் தொழினுடப்பதுறையில் சர்வதேச திட்டங்களை எடுத்து கொடுத்தால் நேர முகாமைத்துவம் இன்மை, நொண்டி சாட்டுகள் இப்படி இழந்த பொருளாதரம் தான் அதிகம். புலிகள் இருந்திருந்தால் நிலமைவேறு. வன்னி தொழினுட்பக்கல்லூரி, கணினிப்பிரிவின் கணினுட்பம் போன்றவை அவற்றை திறம்பட நாடாத்தி இருக்கும். போரின் நடுவிலும் கணினுட்பம் என்ற மாதாந்த தகவல்தொழினுட்ப சஞ்சிகை வன்னியில் வந்து கொண்டுதான் இருந்தது. இப்பொ இலங்கையில் தமிழரை வைத்து நடாத்தும் BPO ஆட்களை கேளுங்கள் எம்மவரைப்பற்றி சொல்வார்கள்.
 14. இங்கே ஒருங்கிணைக்கலாம். அங்கே ஒருங்கிணைப்பது தான் கடினம். யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள், பழைய மாணவர்கள், நேசக்கரம் என்று பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தார்கள். ஒரு முழுநேர அரசியல் கட்டமைப்பு, நடுநிலையான தமிழீழம் சார்ந்து இல்லை. கிழக்கு, வடக்கு, வன்னி, யாழ்ப்பாணம் என்று நிற்கிறார்கள். முன்னாள் போராளிகளை நம்பினேன், தலைவர் இருந்தபோது இருந்த மாதிரி இப்போ இல்லை. அம்மாவுக்கு மருந்துக்கு கூட காசு அனுப்பாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினேன். முடிவு சுழியம் தான். இணைந்து பயணிக்க இப்பவும் தயார். ஆனால் நான் உதவிசெய்வதால் மற்றவர்கள் எதையுமே செய்வதில்லை வாய் மட்டும் தான் பேசுது என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது மனதை வலிக்கும் என்று எப்போ உணருவீங்கள்
 15. மேலும் தாயகத்தில் சொந்தமுயற்சியில் சொந்தப்பணத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து தோற்றுப்போனவர் வரிசையில் நானும் ஒருவன். 75 இற்கு மேற்பட்ட போர் விதவைகளுக்கு தொழில் அமைத்து மாதாந்த வருவாய்க்காக ஒருவருடத்துக்கு மேல் பணம் செலவழித்துள்ளேன். முன்னாள் போராளிகளை இணைத்து/நம்பி பெரும்தொகை பணத்தை முதலீடு செய்தேன். எல்லாவற்றையும் வெளிபடுத்தினால் தான் நாங்கள் இங்கே கருத்துவைக்கலாம் என்றால் என்னை விடுங்கள் இந்தப்பக்கமே நான் வரவில்லை. ஆனால் சகலமுயற்சியும் தோல்வியில். உங்களிடம் ஏதும் திட்டமிருந்தால் சொல்லுங்கள் என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். நான் இங்கே எழுதுவது வேடிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நினைத்தால் சொல்லுங்கள் என் தவற்றை நான் திருத்திக்கொள்கிறேன்.
 16. மன்னிக்கவும் உடையார் அண்ணே. நான் அழுவதற்கான குறியீடாகத்தான் அதை நினைத்தேன். சிரிப்பிற்கான குறியீடாக இதை பயன்படுத்தினேன். பரவாயில்லை ஆனால் அது கவலைக்கான குறியீடுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை
 17. சரி இந்த திரியில் சீமானிசமா பிரபாகரனிசமா என்றால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் என்று நேர்மையாக பதிலளிக்க முடியுமா. தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த எந்த இசம்(தத்துவம்) தேவைப்படுகிறது. பிரபாகரனிசத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியத்தை கையில் எடுத்துவிட்டு இப்போ சீமானிசம் என்று பேசினால் உனக்கென்ன வந்திச்சு என்று மூத்தவர் சீமான் பேசியதில் தவறு இல்லையா .? யாராவது மூத்தவர் இளையவர் காணொளிகளை இணைப்பவர்கள் உங்கள் கருத்தை கூறினால் ஆக குறைந்தது உங்கள் தேசிய பார்வை எங்களுக்கு வெளிச்சமாகும் இல்லை இடும்பவனம் கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் சொல்லுற காணொளிகளை இணைத்து உங்களுக்கே விளங்காத கருத்துகளுக்கு ஆதரவு தேடப்போறீங்களா.? ஒண்டு மட்டும் உண்மை, இதே இடும்பவனம் கார்த்திக் போன்றவர்கள் இதே போல கட்சியை விட்டு வெளியேறும் போதும் நீங்கள் வந்து எனக்கு அப்பவே தெரியும் இவர் பொய் சொன்னவர் என்று சப்பைக்கட்டு கட்டுவீங்கள். சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். தலைசிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த புலிகள், மரபுவழி இராணுவமாக மாறியபோது நடந்தவை மனசிலே வந்து போகுது இப்போ புலிகள் இருந்திருந்தால் மூத்தவர் சீமான் எங்கே இருந்திருபார் என்று நினைச்சு நான் பலமாக சிரிப்பதுண்டு
 18. இந்த திரி தொடங்கிய இசை எங்கப்பா.? இசையின் கருத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம். அவரிடம் இருந்து காத்திரமான, நடுநிலையான கருத்துவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். பாக்கியராசன் கதை கேட்டு மூத்தவர் சீமான் இளையவர் கல்யாணசுந்தரத்தை விலக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சென்ற இசை பதில் சொன்னால் நல்லா இருக்கும்.
 19. அதெல்லாம் சரிதான். அவரில் தவறு என்றால் கூப்பிட்டு இதுதான் தவறு இதனால் கட்சியைவிட்டு நீக்குகிறேன் என்பது தானே ஜனநாயகம். அதென்ன 5 மாதம் பேசாமல் இருந்தேன். இப்போவந்து போனவருசம் அதை செஞ்சார். சுந்தரவள்ளியை வைச்சு எழுதினார் ரசிச்சார் என்று கதை அளப்பான். புலிகளின் சரிவு கூட “ராஜகோபுரம் எங்கள் தலைவன்” “அவர் முருகனுக்கே நிகரானவன்” என்பதில் தான் தொடங்கியது. கூப்பிட்டு நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். எங்களுக்குள் பதவிநிலை வேண்டாம். சிங்களவன் வேணுமென்றால் கேணல், பிரிகேடியர் வைச்சு கூப்பிடட்டும் என்று இருந்தால் சிலவேளைகளில் புலிகளும் இப்போ இருந்திருப்பர். வாறவன் வா, போறவன் போ என்றால் கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி எல்லாம் வந்தேறிகளா. தமிழர்கள் தானே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.