Jump to content

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    655
  • Joined

Everything posted by முதல்வன்

  1. தரப்படுத்தல் அறிமுகபடுத்தப்பட்டதன் ஆரம்ப நோக்கம் தமிழர்கள் படித்து பட்டம் பெறுவதை தடுப்பதே. அது இன ஒடுக்குமுறையும் ஒரு படி அது பலரை போரடத்தூண்டியது. அது இப்போது இருக்கும் நிலைக்கு மாற பல்வேறு ஆண்டுகள் எடுத்தன. இப்போது இருக்கும் Merit பின்னர் மாவட்டரீதியான தரப்படுத்தல் இருந்திருந்தால் கூட மாற்றம் வேறுவிதமாக இருந்திருக்க கூடும். ஒவ்வொரு தாக்கமும் அப்போதிருந்த சூழ்நிலையால் ஏற்பட்டு இருக்கும். தாம் வஞ்சிக்கப்படுவதாக அடக்குமுறைக்கு உள்ளாக்கபடுவதாக அந்த காலத்து இளைஞர்கள் உணர்ந்தார்கள். இப்போ அந்த முறைதான் பல்வேறு மாணவர்கள் மேற்படிப்பை தொடர உதவுகிறது என்றாலும் இந்த முறையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். (பொருளாதார இட ஒதுக்கீடு, நகரத்திலிருந்தான தூரம் என்பனவும் கணிப்பிடப்படவேண்டும்.) அனலைதீவும் யாழ் பருத்தித்துறை நகரமும் ஒன்றல்ல. முழங்காவில் நாச்சிக்குடாவும் கிளிநோச்சி வட்டக்கச்சி மல்லாவியும் ஒன்றல்ல.
  2. தமிழீழ தமிழர்களின் விடிவுக்காக் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம், அரசியல் நடவடிக்கைகள் மீது பல்வேறு தரப்பினர் விமர்சங்களை வைப்பது வழமை. அவற்றை வெறுமனே விமர்சனங்களாக, எதிரியின் துரோகிகளின் கூவல்களாக கடந்து சென்று விடிவை அடைய முடியாது. புலிகளே தற்போது இருந்தாலும் தாங்கள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிகழ்வை, தமிழ்மக்களின் அரசியல் தொடர்பாக கடந்து வந்த பாதையை நிச்சயமாக ஆராய்வார்கள். இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். எல்லாருக்கும் ஒரு நியாயயம் இருக்கும் தங்களின் நியாயம் தான் உலகில் மிகப்பெரியது என்று நினைப்பதால் தான் முரண்பாடுகள் வருகின்றன. ஆனால் ஒவ்வொருவரின் நியாயத்தையும் ஆராய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இந்த விமர்சனங்களும் அதற்கான கலந்துரையாடல்களும் எதிர்காலத்தில் எம் விடுதலைக்கு எந்த விதத்தில் ஆவது உதவ வேண்டும் என்பதை மனதில் வைத்து பதிவுகளை எழுதுங்கள். ஒருவரை ஒருவர் வென்றுவிடுவதால் விடிவு கிடைத்துவிடும் என்றால் நான் ஒரு தோல்வியாளனாக முதலில் பதிவு செய்துவிடுகிறேன்.
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.
  4. இவை அந்த நாடுகளில் தமிழர் தூதரகங்களாக இருக்க வேண்டியதில்லை. தமிழர் கலாச்சார மையங்களாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகங்களாக தமிழர் அறிவியல் கழகங்களாக தமிழர் உணவங்களாக கூட இருக்கலாம், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் தொட்டு நாட்டின் உயர் அரசியல்வாதிகள் வரை தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு வலையமைப்பை அந்த நாட்டு சட்டங்களுக்கு அமைவாக நடாத்தவேண்டும். கண்காட்சிகள், கலையரங்குகள், ஆய்வரங்குகள் மூலம் எம் தேசியத்தை எடுத்துகூறவேண்டும்.
  5. அண்மையில் ஒரு திரியில் நிர்மலனுக்கு பதிலளிக்கும் போது தான் உணர்ந்தேன். தாயக அரசியலை தக்கவைக்க புலம்பெயர் அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வளம் கொண்ட தேசியவாதிகள், இராஜதந்திரிகள் கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்குலகம், இந்தியா, சீனா, ரஷ்யா, இன்னும் தமிழர் பிரச்சனை தெளிவுறாத நாடுகளில் கிளைகள் திறக்கப்பட்டு, சட்ட பூர்வமாக எங்கள் நிலைப்பாடு, இழைக்கப்பட்ட அநீதி, வரலாறு, தேசியம் அந்த நாட்டு ராஜதந்திரிகளுக்கு கடத்தப்படவேண்டும். விலைபோகாத ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தாயக அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளவேண்டும். நீண்ட கால நோக்கில் திட்டமிடப்பட்டு நகர்வேண்டும். இதுவே புலம்பெயர் மக்களால் தாயகத்துக்கு பொருளாதர உதவி தவிர்த்து செய்யக்கூடிய அரசியல் உதவி. சுருங்ககூறின் 1000 அன்ரன் பாலசிங்கள் 100 நாட்டில் தேவை. 🤭
  6. அண்ணே இது இன்னொரு பரிமாணத்தை என் மனதில் தோற்றுவிக்கிறது. உண்மையில் தாயக மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை அறிய சுயாதீன தேசியம்சார் ஊடக அமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும். பலவேறு தரப்பிடம், பிரதேசம், பொருளாதாரம், கல்வியறிவு, முன்னாள் போராளிகள், போராளி குடும்பங்கள், புலி எதிர்ப்பாளர்கள், மதம், நகரம், கிராமம், புலம்பெயர்ந்தோர், பல்வேறு தொழில் சார்ந்தோர், சிங்கள பகுதியில் வாழ்வோர், என பல்வேறு samples இடம் ஒரு கேள்விக்கொத்தாக தகவல் திரப்படவேண்டும். இதற்கு கலந்துரையாடல், workshops போன்றவற்றையும் பயன்படுத்தலாம். Freelancer ஊடகவியலாளர்கள், தேசிய பற்றாளர்களை கொண்டு திரட்டப்பட்டும் தகவலை அடிப்படையாக வைத்து பயணிக்கவேண்டிய திசை ஆற்றப்படவேண்டிய களப்பணி என்பவற்றை தீர்மானிக்கலாம். இது ஒரு மக்கள் சக்தியூடாக நடாத்தப்படவேண்டும். ஊகங்களை விட தரவுகள் முடிவுகளை ஆணித்தரமாக்கும்.
  7. நன்றாக எழுதி இருக்கிறீங்கள் ரஞ்சித் அண்ணே. நான் இதில் மேலதிகமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஒரு எழுச்சிமிகு போராட்டத்தின் தோல்வியும் மக்களை விரக்தியுற அல்லது சோம்பல் நிலைக்கு தள்ளியுள்ளது. போராட்டத்தின் முறைதான் மாறியுள்ளது போரிடும் குணம் இன்னும் விரியமாகவேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படவேண்டும். உதாரணமாக திலீபனின் நினைவுநாளை கொண்டாட முடியவில்லை என்றால் சிறையை நிரப்பவேண்டும். 20 000 மக்களை ஒன்றாக திரட்டினால் பொலீசால் சட்டத்தால் ஒன்றுமே செய்யமுடியாது. துணிந்து செய்ய நல்ல தலைமை வேணும், அவரை நம்பும் மக்கள் பலம் வேண்டும்.
  8. திலீபன் அண்ணை இட்ட பணியைத்தொடரவேனும் ஆக்கபூர்வமாக தொடர வாரீர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
  9. ஆழமான கவிதை. திலீபன் அண்ணையின் வரலாறை உணர்வு பூர்வமாக பதிந்திருக்கிறீகள். நன்றி கோஷான்
  10. குமாரசாமி அண்ணை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் வாழ்க.
  11. நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும். அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும். இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை. இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது. இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும். இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன். அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.
  12. இது குறித்து நான் இன்னொரு திரியில் எழுதிய கருத்தையும் அதற்கு சண்டமாருதன் வழங்கிய பதிலையும் இதில் இணைக்கிறேன்.
  13. நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
  14. கைத்தொலைபேசியில் சில இடங்களில் user photos அங்கை இங்கை மாறி வருகுது
  15. உருளைக்கிழங்கு மஞ்சூரியன் பூரி அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் வேற லெவல்.
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணே ...!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்தன் அண்ணே..!! வாழ்க பல்லாண்டு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.