பாரதிப்பிரியன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  19
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About பாரதிப்பிரியன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 1. என்றாவது ஒருநாள் கற்றவை பின்பொரு காலத்தில் கட்டாயம் பலனைத் தரும்..உங்கள் முயற்சி, பின்னர் வெற்றிநடை போட்டது எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்து ஒரு முன்னுதாரணமாக திகழவேண்டும்..கதையை கதையாக குறிப்பிட்ட விதமும் நன்று. மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 2. எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை உன் மீது எனக்குப் பொறாமை உன் பதவி மீதும் எனக்கு ஆசை நீ வாழும் மாளிகை எனக்கு வேண்டும் என உரைத்தான் ஒரு மானிடன் காது கொடுத்துக் கேட்டேன் கதைத்தது தமிழன்தான்.... எனக்குச் சுதந்திரம் வேண்டும் நீ அழிந்தால்தான் எனக்குக் கிடைக்கும் என்னுடைய உரிமை வெல்லுவேன் உன்னுடைய உரிமையைப் பறித்து இங்கும் ஒரு குரல், இவன் உரைப்பதெல்லாம் தன்னைக் கொன்றுவிட்டு, ஏனெனில் எமக்கென்று நினைக்க மாட்டா அவனும் தமிழனே.... தமிழனுடன் சேர்ந்திடின் சோர்வு எனக்கு ஒன்று சேர நினைப்பதெல்லாம் சிங்கம் ஈன்ற பரம்பரையுடனே செத்திடினும் சோறு போடுவர் அவர்கள் இந்தக் குரலுக்குரித்தவன் வேற்று நாட்டனல்ல தந்திரம் என்று சொல்லி ஊராரை ஏய்த்திடுவான்... அவனும் என் சகோதரத் தமிழனே.. அன்றிருந்தோமா ஒற்றுமையாக...? இல்லை மாந்தர்காள்...கேளீர்.. என்றுமே எமக்கு எதிரி நாமே... சுந்தரச் சோழனாம்... செந்தமிழ்ப் பாண்டியனாம்..... வென்றனர் ஊர் முழுவதுமே... தமிழ் வீரம் உயர்ந்தது உலகிலே.. வீரம் காட்டி என்ன பயன்... தமக்குள்ளே பெரியவர் யார் என்ற வீரம் காட்டினார்களே... அழிந்தது சோழ பரம்பரை, அழிந்தது தமிழன் வீரமும்தான்.... அன்றிலிருந்து இன்றுவரை அதுதானே நடக்குது... மணிமகுட விழாவொன்று தொடங்கியது துரோக தேவதைக்கு எட்டப்பன் விளக்கேற்ற.... காக்கைவன்னியன் குடை பிடிக்க கருணை உள்ளங்கள் மகுடம் அணிந்தன.. எத்தனை நாள் இது.....? மகுடங்கள் இருக்கும்வரை மடையராய் வாழ்வதோ...? என்று இந்த காலம் மடியுமோ... அன்றுதான் தமிழா உனக்கு விடியும் அதுவரை... தமிழன் என்று சொல்வதை தற்காலிகமாய் நிறுத்திடு... இல்லை நீ தமிழன் என்றால்.. ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்திடு...
 3. கதையின் போக்கு மிகவும் நன்று, பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் எழுத்து வல்லமை.
 4. உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை கேட்டீர் உங்களுக்கு என் பரிசு கரும்பு, எம் காதல் என்றென்றும் அடையாது அதுதான் இறப்பு.
 5. நன்றாக இருக்கிறது, குறிப்பாக துரோகிகள் பற்றிய கவிதை நன்றாகப் பொருந்தி அமைகின்றது. பாராட்டுக்கள்....மேன்மேலும் ஹைக்கூக்கள் எழுத வாழ்த்துக்கள்.. இன்று இன்னமும் தமிழில் ஹைகூக் கவிதைகளிற்கு சரியான வரைவிலக்கணம் இல்லை. யப்பானில் தோன்றிய ஹைக்கூக்கவிதைகள் பின்னர் பிறமொழிகளில் தத்தம் மொழிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் பட்டன, எனினும் மூன்று வரியில் சொல்லப்படுவதே ஹைக்கூவின் அழகு. முன்னர் 5, 7, 5 என்ற அசைவின் படி எழுதப்பட்ட ஹைக்கூக்கள் இப்போது அவ்வாறு எழுதப்படுவதில்லை. உதாரணமாக ஒன்று: மொழி தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள் தயாரானான் மொழிபெயர்ப்பாளன் மழலையின் தந்தை! - சிவகரன் உதாரணம் இரண்டு: பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் - நா.முத்துக்குமார் இங்கு முதல் இரண்டு வரிகளும் ஏதோ ஒரு பொருளைக் குறிக்கும், மூன்றாவது அதைப்பற்றி விபரிக்கும்....இதுவும் ஹைக்கூ எழுதுவதில் ஒரு வகை, எனினும் உங்கள் முயற்சியும் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்...!
 6. வருக வருக சக்தி, உங்கள் சக்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 7. தங்கள் எல்லோரது வரவேற்பிற்கும் எனது அன்பான நன்றிகள்.
 8. தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது..."தமிழா நீ பேசுவது தமிழா....."
 9. நன்றி நிலாமதி, உங்கள் ஊக்குவிப்போடு தொடருவேன் என நம்புகிறேன். நன்றி ஜீவா, என்ன செய்வது.....என்றாவது ஒரு நாள் விடிவு வந்திடாதா என்று, அன்றுவரை இன்று தொட்டு ஏங்கியே எமது வாழ்வு செல்கின்றது... நன்றி காவாலி
 10. வரவேற்பிற்கு நன்றி வந்தேன்...வாதவூரான் அவர்களே, நன்றி... வரவேற்பிற்கு நன்றி...
 11. நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல் முடியாது என்று முடித்துவிடக் கூடாமல் என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்... நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்? தமிழே நீ நலமா... நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் ஆனால்... பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்.... நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்
 12. நல்ல சிந்தனைக்குரிய கவிதை, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நுனாவிலான், அத்துடன் கவியை எழுதிய அருள் குமாரிற்கும் பாராட்டுக்கள்.
 13. உங்கள் விளக்கத்திற்கு இனிய நன்றிகள்.