• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரதிப்பிரியன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    19
  • Joined

  • Last visited

Posts posted by பாரதிப்பிரியன்


  1. நன்றாக இருக்கிறது, குறிப்பாக துரோகிகள் பற்றிய கவிதை நன்றாகப் பொருந்தி அமைகின்றது. பாராட்டுக்கள்....மேன்மேலும் ஹைக்கூக்கள் எழுத வாழ்த்துக்கள்..

    இன்று இன்னமும் தமிழில் ஹைகூக் கவிதைகளிற்கு சரியான வரைவிலக்கணம் இல்லை. யப்பானில் தோன்றிய ஹைக்கூக்கவிதைகள் பின்னர் பிறமொழிகளில் தத்தம் மொழிகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் பட்டன, எனினும் மூன்று வரியில் சொல்லப்படுவதே ஹைக்கூவின் அழகு.

    முன்னர் 5, 7, 5 என்ற அசைவின் படி எழுதப்பட்ட ஹைக்கூக்கள் இப்போது அவ்வாறு எழுதப்படுவதில்லை.

    உதாரணமாக ஒன்று:

    மொழி

    தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள்

    தயாரானான் மொழிபெயர்ப்பாளன்

    மழலையின் தந்தை!

    - சிவகரன்

    உதாரணம் இரண்டு:

    பிம்பங்களற்ற தனிமையில்

    ஒன்றிலொன்று முகம் பார்த்தன

    சலூன் கண்ணாடிகள்

    - நா.முத்துக்குமார்

    இங்கு முதல் இரண்டு வரிகளும் ஏதோ ஒரு பொருளைக் குறிக்கும், மூன்றாவது அதைப்பற்றி விபரிக்கும்....இதுவும் ஹைக்கூ எழுதுவதில் ஒரு வகை, எனினும் உங்கள் முயற்சியும் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்...!

    • Like 1