Jump to content

கலையழகன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    473
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by கலையழகன்

  1. தொடர்புள்ள செய்தி அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து ஆராயவே வெளிநாடு செல்கின்றோம் ; த.தே.கூ http://thuliyam.com/?p=12507
  2. தொடர்புள்ள செய்தி ஞானசார தேரருக்கு வெலிகடை சிறைச்சாலைக்குள் விஷேட பாதுகாப்பு கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளது -சிறைச்சாலை ஆணையாளர் http://thuliyam.com/?p=12502
  3. 1987 ஜூன் மாதம் - முகாம்களுக்குள் விடுதலைப்புலிகளால் முடக்கப்பட்டு மூச்சுத்திணறிய சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூர்க்க வெறியுடன் புறப்படுகிறது.தங்களை துட்டகைமுனுக்களாக கற்பனை பண்ணிக் கொண்டிருந்த விமல் விஜயவர்த்தினா, டென்சில் கொப்பேக்கடுவ ஆகியோர் தலைமை தாங்க பலாலி படைத்தளத்திலிருந்து தொண்டமனாறு வழியாக ஒரு அணியும் அச்சுவேலி வல்லை ஊடாக இன்னொரு அணியும் நகர்கின்றன. தொண்டமானாற்றில் விடுதலைப்புலிகள், பெரும் எடுப்பில் விமானக் குண்டுவீச்சுக்கள், கவசவாகனங்களின் துணையுடன் முன்னேறிய இராணுவ அணியைத் தடுத்து சமராடுகின்றனர். கிடுகு வேலிகளும் பனை வடலிகளும் தெருவோர மரங்களும் கக்கிய நீர்ப் பிழம்பில் படையினர் சுருண்டு விழுகின்றனர். வல்வெட்டித்துறை நோக்கி ஒரு அடி கூட முன்னேற முடியாத நிலையில் ஒரு அணி உடுப்பிட்டியை நோக்கி ஊடறுக்கிறது. வல்லை வழியாக வந்த இராணுவம் மண்டான் சந்திக்கு அப்பால் அசைய முடியவில்லை. அந்த அணி திசை திரும்பி துவாளி வயல்வெளி ஊடாக புறாப்பொறுக்கியின் உட் பகுதிக்குள் இறங்குகிறது. கண்டவர்களையெல்லாம் சுடுதல், காண்பவற்றையெல்லாம் அழித்தல் என்ற வெறியுடன் நகர்ந்த இராணுவம் பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்டவர்களையெல்லாம் கொன்று தள்ளுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் தஞ்சமடைகின்றனர். புலிகள், படையினர் ஆலயங்களை நெருங்கவிடாமல் தடுத்துச் சமராடுகின்றனர். ஆயிரக்கணக்கான படையினர் முன் சில நூறு புலிகளே களமாடிய போதும் படையினரை மோதி நெல்லியடி மத்திய கல்லூரிக்குள் ஒதுக்குகின்றனர். எனினும் அடுத்த நாள் படையினர் ஏதோ ஒரு பக்கத்தால் விமானக் குண்டு வீச்சுக்களினதும் உலங்குவானூர்திகளினதும் துணையுடன் உடைக்க முயல்வார்கள் என்பதை விடுதலைப் புலிகள் நன்கே புரிந்து வைத்திருந்தனர். எனவே - கிளைகளை வெட்டுவதை விட மூல வேரையே தறித்துவிட விடுதலைப்புலிகள் முடிவெடுக்கின்றனர். கொல்லப்பட்ட மக்களின் குருதி வெள்ளம் ஏற்படுத்திய கொதிப்பு மில்லரின் நெஞ்சுக்குள் பெரும் தீயை மூட்டுகிறது. வெடி மருந்து வண்டியுடன் உயிராயுதமாக இராணுவ முகாமுக்குள் புகுந்து வெடிக்க முடிவெடுக்கிறான். 1987 ஜூன் 5 மில்லர் செலுத்திய வெடிமருந்து வண்டி வேகமாக வெளிவாசல் தடையைத் தகர்த்துக் கொண்டு முகாமுக்குள் பாய்கிறது. அருகிலுள்ள ஊர்களையே அதிரவைக்கும் ஓசையுடன் பெரு நெருப்பு எழுகிறது. கட்டிடங்கள் வெடித்துச் சிதறுகின்றன. பல நூறு படையினர் செத்து விழுகின்றனர். உயிர்தப்பியவர்கள் வேலி பாய்ந்து தோட்ட வெளிகளால் ஓட சுற்றி நின்ற போராளிகள் சுட்டுத்தள்ளுகின்றனர். வெற்றிக் கனவுடன் திமிர் கொண்டு நின்ற ஒரு படை முகாம் சரிந்து விழுகின்றது. இம் மாபெரும் சாதனையின் நாயகன் கப்டன் மில்லர் தனது உயிரையே ஆயுதமாக்கி விடுதலைப் போருக்குப் பெரும் உரமூட்டிய முதற் கரும்புலி அவன். தான் தாயக விடுதலைக்கு அர்ப்பணமாகும் நாளை நேரத்தைத் தெரிந்து கொண்டே மாபெரும் தியாக வரலாற்றை இம் மண்ணுக்கு விட்டுச் சென்ற ஒப்பற்ற விடுதலை வீரன் மில்லர். அந்த முதல் வித்து தன்னை விடுதலை வேள்விக்கு ஆகுதியாக்கிய அந்த வரலாற்றுப் பெருமை மிக்க நாளையே நாம் கரும்புலி நாளாக நெஞ்சிருத்தி நினைவு கூருகிறோம். மில்லர் வழியில் மாங்குளத்தில் லெப்.கேணல் போர்க், சிலாவத்துறையில் மேஜர் டாம்போ, கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி என உலகப் போர் வரலாற்றுக்கு ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கப்படுகிறது. இந்த முதல் வித்துக்கள் செத்துப் போய்விடவில்லை. கரும்புலி அணி என ஒரு பெரு விருட்சமாக மேலெழுந்தது. அதன் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு பழமும் எதிரியின் முள்ளந்தண்டெலும்பை முறிக்கும் வலிமை மிகு ஆயுதங்களாகின. மில்லரின் முதல் கரும்புலித் தாக்குதல் ஒரு பெரும் வரலாற்றுத் திருப்புமுனையை உருவாக்கியது. அத் தாக்குதல் சிங்களப் படையினரின் மனோ வலிமையை உடைத்தது. அதன் போரிடும் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்கியது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்திய உதவிக்கு ஓட வேண்டி வந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படையை இறக்கவேண்டியளவுக்கு ஜே.ஆர்.பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டார். மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் பொருளாதாரமே நிலைகுலைந்தது. கட்டுநாயக்கா விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதல் வெற்றி காரணமாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையில் இலங்கை விமானப் படையின் ஒரு பகுதி அழிந்து போனது. எத்தனையோ போர்க்கப்பல்கள், டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன; இன்னும் பல பாவனைக்கு உதவாமற் போயின. இனக் கொலை வெறியாட்டம் போட்ட எத்தனையோ படைத் தளபதிகள்; பாதுகாப்புச் செயலர்கள் கரும்புலிகள் வெடிப்புக்களில் சிதறிப் போனார்கள். முன்னாள் இராணுவத் தளபதியும் வட பகுதியின் கட்டளைத் தளபதியாகவுமிருந்த சரத் பொன்சேகா, ரணில் – விடுதலைப்புலிகள் பேச்சுக்களின் போது வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டுமானால் கரும்புலிகள் அணி கலைக்கப்பட வேண்டும்” என நிபந்தனை விதித்திருந்தார். இதிலிருந்து கரும்புலிகள் இலங்கைப் படைத்தரப்பை எவ்வளவு தூரம் கலக்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். கரும்புலிகள் தமது உயிர்களை ஆயுதமாக்கி விடுதலைக்கு ஆகுதியானவர்கள். பரந்து கிடக்கும் தாயக மண்ணில் எழுந்து அலை அடிக்கும் எங்கள் கடலில் தவழ்ந்து எம்மை வருடும் காற்றில் அவர்கள் கரைந்து கிடக்கிறார்கள். அவர்கள் கல்லறைக்குள் இல்லை! ஆனால் – காவியங்கள் உண்டு; இன்னும் காவியங்கள் விரியும். தமிழினம் உள்ளவரை கரும்புலிகள் வாழ்வார்கள்! அவர்களது ஒவ்வொரு வரலாறும் தமிழ் நெஞ்சங்களில் கோவில்களாக குடியிருக்கும். “நீங்கள் உங்கள் சாவைத் தோளில் சுமந்தவர்கள் நீங்கள் எங்கள் விடுதலையை நெஞ்சில் தாங்கிய வேர்கள்” -தமிழ்லீடர் http://tamilleader.com/?p=15303
  4. எனது பெயரை கலையழகன் என மாற்ற முடியுமா?
  5. மாவீரனே! மாவீரனே! -நீ மண்ணின் மைந்தனே! சாவேயுனைக் கரையாதடா-எங்கள் சந்ததிக்கே நீ உரைகல்லடா! வாழ்வுக் காகவே நீ வாழ்ந்த தில்லையே!-அன்னை தாழ்வை நிமிர்த்தவே-உயிர் தந்த பிள்ளையே! இந்தப் பொழுதிலே உன் இறக்கை முளைக்குதே! கந்தக் கோட்டத்தில் உன் கதைகள் கேட்குதே! விழிகள் உகுத்தநீர் வீழ்ச்சி காண்குதே! ஒளிகள் பொருந்திய உன் உயிரும் அழைக்குதே! சந்நிதி மருங்கில் உன்றன் சார்சிதை அழித்தும் விட்டார்! எம்மனச் சிறையில் உன்னை எவரடா அழிக்கக் கூடும்! இராட்சதர் வந்து எங்கள் இனத்தையே அழித்தும் விட்டார்! பிராட்டியும் கோனும் நின்ற பெருநிலம் மடக்கி விட்டார்! அரக்கர்கள் வருவார்! வந்து அசுரர்கள் ஆக நிற்பார்! இரக்கமில் லாதராகி எங்கள் இனத்தையே அழிப்பரென்றீர்! கரத்தினில் ஆயுதத்தைக் கண்டவெம் மாவீரனே! உகுத்தவுன் உயிரின் வேள்வி ஊழியும் வாழும் ஐயனே! -மகரம் http://www.tamilleader.com/mukiaya/7696-2012-11-25-09-07-39.html
  6. [size=4]தமிழர்கள் வாழும் இடமெங்கும் தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழீழத் தாயகத்தில் மாவீரர் நாளை வெளிப்படையாக நினைவுகொள்ள முடியாவிட்டாலும், தங்கள் ஆழ்மனத்திற்குள்ளே பூசிக்கின்ற நாளாக இருக்கும்.[/size] [size=4]தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளில் மிகவும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.[/size] [size=4]தமிழீழ விடுதலைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்படுகின்ற நிலைக்கு வந்தபோதும், தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை வெவ்வேறு முனைகளில் நகர்த்துவதற்கான உத்வேகத்தை தமிழர்கள் இன்னும் இழந்துவிடவில்லை. தமிழீழத் தேசிய விடுதலைக்கான தேவை இருந்தபோதும், அதனை அடைவதற்காக பல்வேறு முனைகளில் தமிழர்கள் தமது போராட்டத்தை நகர்த்திவருகின்றபோதும், அவர்கள் அனைவரையும் ஒரேபுள்ளியில் சந்திக்கவைக்கின்ற பலம், இறுதிவரை உறுதி குலையாமல் போராடிய மாவீரர்களையே சாரும்.[/size] [size=4]தான் வாழும் தேசத்திற்காக, தான் நேசித்த மக்களுக்காக தங்களால் செய்யக்கூடிய அதியுச்ச அர்ப்பணிப்பைச் செய்த மாவீரர்களின் வாழ்வும் அவர்கள் தியாகமும் தமிழர்கள் வரலாற்றில் என்றுமே மறக்கக்கூடியதல்ல.[/size] [size=4]உயிர்போகும் இறுதிக்கணத்திலும் ”தம்பி தம்பி” என தமிழீழத் தேசிய தலைவரை அழைத்தவாறு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் மாவீரராக வீரச்சாவடைந்த சத்தியநாதன் சங்கர் தொடக்கம் எத்தனையோ வீரர்களை நாம் இழந்திருக்கின்றோம்.[/size] [size=4]மேலும், தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் எதிரியுடன் உயிருடன் பிடிபடுவதன் மூலம் இயக்க இரகசியங்கள் எதிரிக்குச் சென்றடையக்கூடாது என சயனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்த சிவகுமாரனதும், பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீர்களினதும் தியாகங்கள் அளப்பெரியன. விடுதலைப்போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத நெருக்கடியை உடைத்தெறிவதற்காக, தனது உயிரையே வண்டியில் ஏற்றிச்சென்று எதிரிகளின் குகைக்குள்ளே வெடித்துச்சிதறிய கரும்புலி கப்டன் மில்லர், பெயருக்காகவும் புகழுக்காகவும் முண்டியடிக்கும் இவ்வுலகிலே தமது சுயத்தையே அழித்து, எமது போராட்டத்தின் தடைநீக்கிகளாக எதிரியின் குகைக்குள்ளே வெடித்த பெயர் குறிப்பிடப்படா வீரமறவர்கள், இந்திய வல்லாதிக்கம் எமது விடுதலைப்போராட்டத்திற்கான ஆணிவேரையை அசைக்கமுற்பட்டபோது, தனது உயிரையே பணயமாக வைத்து, நீரின்றி-உணவின்றி தவமிருந்து இறந்த தியாகி திலீபன், இந்திய-சிறிலங்கா படைகளின் கூட்டுக்காவலுக்கு மத்தியிலும், விடுதலைப்புலிகளின் வீரமரபுக்காக மாண்டுபோன தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள், மூலைக்குள் பதுங்கிக் கிடக்காது துணிவாய் முன்வந்து போராடி, உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாய் மறைந்த முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி, புற்றுநோய் தனதுயிரைத் தின்றுகொண்டிருக்கிறது எனத் தெளிவாகத் தெரிந்தும், தான் சாகும் முன்னர், தனது அறிவைப் புதிய போராளிகளுக்கு கற்றுக்கொடுத்துவிட வேண்டுமெனத் துடித்த கேணல் ராயு, தான் வழிநடத்தும் போராளிகள் செல்லும் பாதையை தானே நேரில் இறுதி வேவுபார்த்து, உறுதிப்படுத்தச் சென்றபோது வரலாறாகிப்போன லெப். கேணல் சேகர், இவ்வாறு எத்தனையோ வீரர்களின் அர்ப்பணிப்புக்கள்தாம் தமிழர்களின் விடுதலைக்கான வீச்சை இன்னும் கூர்மையுடன் இட்டுச்செல்ல வழியமைத்துக் கொடுத்துள்ளது.[/size] [size=4]தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை, எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி, கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, எத்தனையோ வல்லாதிக்க சக்திகளின் சவால்களையும் எதிர்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான போராட்டத்தின் வலிமையும் அதன் உறுதியும் வரலாறாகிப்போன மாவீரர் ஒவ்வொருவரின் குருதியால் கட்டியெழுப்பப்பட்டவை.[/size] [size=4]எதிரியின் பன்மடங்கு ஆயுதபலத்தின் நடுவே, ஆட்லறிகள் நவீன விமானங்கள் கொண்டு எதிரி தாக்கியபோதும், தமது மனவுறுதியை மட்டுமே முன்னிறுத்திப் போராடிய இவ்வீரர்கள், தங்களால் முடிந்தவரை உயிர்போகும் இறுதிக்கணம் வரை போரிட்டு, இன்று கண்மூடித் துயில்கின்றார்கள். அம்மாவீரர்களின் நினைவைக் கொண்டு எமது விடுதலைப்பணிக்காகத் தொடர்ந்தும் உழைப்பதே அம்மாவீர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும்.[/size] [size=4]-இளந்திரையன் [/size] http://www.tamilleader.com/mukiaya/7683-2012-11-24-06-55-34.html
  7. வேகுந்தீ ஊடேயும் ஆகு(ம்)தி யானீரே வேங்கைம கர்க்கென்றும் வீழ்விலை யே! சாகுந்தீ ஆனாலும் போகும்பு லிக்கென்றும் சாவில்லை யாமிது சத்திய மே! தாகம்தீன் தெரியாது தூரம்தான் சலியாது போகும்தி சைகாணும் சூரியர் ரே! மோகம்பெண் நாடாது வேள்விக்குக் கோடாது வேருக்குள் நீராகும் மாவீர ரே! வீட்டினுள் பெண்களாய் வீழ்ந்துகி டக்காமல் நாட்டுக்காய் உதிர்ந்த நாரிய ரே! காட்டிக்கொ டுப்பாரும் கண்டதி சைக்குள்ளும் கால்கள்ப தித்தவெம் காரிகை யே! அண்ணன்தி சையோடும் ஆகிப்ப றந்தேகும் வண்ணக்கி ளியான மாதுக ளே! மண்ணின்ம டிக்குள்ளே மானப்போர் செய்திட்ட வஞ்சிக்கு என்றென்றும் சாவிலை யே! செங்களத் தின்னுயிர் சேரம ரித்திட்ட எங்களின் பிள்ளைக ளானவ ரே! இங்குபு லத்தெங்கும் ஈகச்சு டர்ரேற்றி இறைஞ்சு கின்றோமே மாவீர ரே! -புனிதன் http://www.tamillead...3-06-35-30.html
  8. கார்த்திகை 27 - மாவீரர் நாள் பிள்ளைகள் துயிலும் கல்லறைகளுக்கு நெய்விளக்கேற்றும் திருநாள். உள்ளே உடல் வியர்த்துக் கிடப்பவரை மனதால் வெளியே தூக்கி மெய் கழுவி வாசம் பூசி முத்தம் பொழிந்து மீண்டும் குழிவைப்பதான பாவனையில் சுற்றம் சூழும் பெருநாள். தெய்வங்களுக்குப் படைப்பதில்லையே தவிர வரம் கேட்டு வணங்கும் நாள். நீண்ட விதைவயலின் வரிசையில் கூடி நிற்கும் சுற்றத்துக்கு அவர்கள் குரல்கேட்கும் தினம். பத்துமாதம் சுமந்து பகலிரவாய்க் கண்விழித்து அமுத முலைகொடுத்து தூக்கிச் சுமந்தவர் முன்னே அவர்கள் விழிதிறக்கும் நாள். பெற்றவளின் முன்னே பெரிதாய் நெடிதுயர்ந்து அம்மா என அழைப்பார்கள். அந்த ஒற்றைச்சொல் போதுமே சுமந்தவள் மெழுகாய் உருக. விதைத்த வயல்கள் பரந்து கிடக்கின்றன. தாயகத்தின் திசையெங்கும். துயிலுமில்ல வாசல் கடக்கும் ஒவ்வொருதடவையும் தண்டனையற்ற குற்றவாளிகள் போலத்தான் கடந்து போகின்றோம். உங்களை நம்பியே உள்ளே கிடக்கின்றோம் எங்கள் நெருப்பில் குளிர்காயாதீர்|| காற்றில் வருகிறது கல்லறைக்குரல். துயிலுமில்லம் நுழையும் போதில் நீதிமன்றில் நிற்பது போலத் துடிக்கிறது மனம். விட்டபணி தொடராத குற்றவுணர்வில் வேர் காய்ந்து விடுகிறது உள்ளே. மாவீரர்கள். அவர்களை எங்கிருந்து எழுதத்தொடங்குவது? எழுதத் தொடங்கினாலும் பேனா உருகிக் கரைந்து விடுகிறதே. ஈழத்தமிழர் நிமிர்வுக்கு அவர்கள்தானே வீரியம் தந்தனர். மிதித்தேறிப் போகலாமென்றிருந்த இனத்துக்கு முகமும், முகவரியும் தந்தனர். பிள்ளைப் பூச்சிகளாக எடுப்பார்கைப் பிள்ளைகளாக அழைத்தவர் பின்னே ஓடிய இனத்துக்கு நிமிர்வும், திமிர்வும் தந்தனர். காலம் எழுதிகளின் நினைவுக்கு என்ன கைமாறு செய்தோம் நாம்? ஒருநாள் கூடி பூ வைத்து நெய்விட்டு விளக்கேற்றி அந்தப் பாடலையும்பாடி நெக்குருதல் மட்டும் போதுமானதா? சின்னப் பருவத்தின் கனவைத் துறந்து இளமைக் காலத்தின் சிறகை அரிந்து தங்களை ஒறுத்துப்போன தேவைகளுக்கு என்ன நிவேதனம் படைத்தோம் நாம்? அவர்கள் கனவு மெய்ப்படாதவரை எந்தக் கிரிகையாலும் அவர்கள் ஆறமாட்டார்கள். விடுதலை அவர்களின் மூச்சாயிருந்தது போராட்டம் அவர்களின் மூச்சாயிருந்தது வெறும் பேச்சிற் கழியவில்லை அவர் பொழுது. உலகம் ஓடிவரும் ஐ-நா-சபை தேடிவரும் அகாசி வருவார் ஜோஜ் புஸ் தருவாரென நம்பியிருக்கவில்லை அவர்கள். களத்தில் நின்றனர் களத்தில் உண்டனர் களத்தில் உறங்கினர் களத்தில் உயிரையும் விட்டனர். அவர்களுக்கு எந்த மயக்கமும் இருக்கவில்லை முடிதரித்த தலையராய் உலவினர் உயிர் கொடுத்த அழகராய் உறங்கினர். எந்தச் சுமையுமற்ற மனிதராய் தலைவனை மட்டும் நம்பினர். தலைவன் இடியமாட்டான் எனும் நம்பிக்கையில் உறுதியுடன் நின்றனர் இறுதிவரையும். கார்த்திகைப் பூக்களின் திருநாள் வருகிறது பிள்ளைகளிடம் போகும் பொழுதில் என்ன எடுத்துச்செல்வோம் இம்முறை? பாடலுடன் அவர்கள் கண்திறக்கும்போது கொடுக்க என்ன இருக்கிறது எம்மிடம்? வெற்றி மட்டும்தான் வேண்டியதில்லை பின்னடைவையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எங்கள் கைகளில் இருக்கிறது அனுராதபுரம் கொடுக்க மகிழ்ச்சியுடன் எடுப்பார்கள். எனினும் எம்மில் நெருப்பெரியவேண்டும் உண்மை மனிதராய் ஒளிர வேண்டும் மயக்கமில்லாத மனமும் வழிதவறாத நிலையும் வேண்டும். விடுதலையில் வழுவாத வீரியமும் தன்னையே கொடுக்கும் சக்தியும் வேண்டும். தலைவனை நம்பிய பயணமும் தமிழீழம் என்ற உறுதியும் வேண்டும். இவற்றைச் சுமந்தால் ஏற்பார்கள் இல்லையேல் உள்ளே சிரிப்பார்கள். சுவாசிக்கும்போது உள்ளிழுப்பது சுதந்திரத்தின் கனவுகளாக இருக்கவேண்டும். மாவீரர் நாள் மயக்கமில்லாதவரின் மானப்பெருவிழா எத்தனை துயர்வரினும் இடியமாட்டோமென கல்லறைகளிற் சத்தியம் செய்யும் நாள். நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர் கண்களிலே பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர் எங்களுடன் பேசிக்களித்தீர் - போய்விட்டீர் தாயகத்தில் வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத் தூரப்பறந்துவிட்ட துணிவுப்பறவைகளே! ஈர விழியிங்கு எமக்கின்னும் காயவில்லை செங்குருதி பாய்ந்து திசை சிவந்து எதிரிகளின் தங்ககங்கள் யாவும் தணலிற் கருக்கியபின் வென்ற களிப்பில் வீடுவந்தோம் அன்றிருந்து இன்றுவரை உம்மை எவ்விடத்தும் காணலையே. கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய் சொல்லுகிறார் உங்கள் தேகம் தூங்காதே. மொட்டவிழும் பூவினிலே முகம் தெரியும் கல்லறைக்கு கிட்டவர உங்கள் கண்தெரியும் வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து எம்மை உயிர்ப்பிக்கும். -விடுதலைப் புலிகள், ஐப்பசி-கார்த்திகை 2007 http://www.tamilleader.com/mukiaya/7631-2012-11-21-19-19-01.html
  9. [size=4]நவம்பர் 21 தொடக்கம் 27![/size] [size=4]தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை நீத்த உத்தமவீரர்களை நினைவுகூரும் புனித வாரம் . இலட்சியக்கனவுடன் துயில்கொள்ளும்அந்த தெய்வங்களை பூஜிப்பதற்கு எமக்கு கிடைத்துள்ள அற்புத தருணம். தமது இனத்தின் அடிமைச்சங்கிலியை தகர்த்தெறிவதற்காக உயிரையே காணிக்கையாக்கிய அந்த தியாக செம்மல்களை வணங்குவதற்கு கிடைத்துள்ள தூய வாரம்.[/size] [size=4]ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும் சிக்கிச்சீரழிந்து உரிமைகள் பறிக்கப்பட்ட வெறும் உடலங்களாக சிஙகளதேசத்தின் அடிமைகளாக வாழ்ந்த தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதம் தரித்து தாய்மண்ணுக்காக உயிர்துறந்த அஞ்சா நெஞ்சங்களையே இவ்வாரத்தில் நாம் நினைவு கூருகிறோம். தமது இனத்தின் விடிவே தமது இலட்சியம் என்ற கொள்கை வரித்துக்கொண்ட இந்த மாவீரர்கள் தமது மக்களையும் மண்ணையும் அவ்வளவுக்கு நேசித்தார்கள். தங்களது இறப்பின் ஊடாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தவேண்டும். அந்த வலியில் ஆக்கிரமிப்பாளன் எமது தேசத்தை விட்டகலவேண்டும் என்ற கொள்கையுடன் தேசத்துக்காக உயிர் நீத்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்.[/size] [size=4]அவர்கள் தங்களது வாழ்வை பற்றிக்கவலைப்படவில்லை. தங்களது ஆசா பாசங்களை பற்றி கவலைப்படவில்லை. தமக்கு விடுதலைவேண்டும் என்றுகூட ஆசைப்படவில்லை. அடுத்தகணம் உயிர்துறப்பதற்கு தயாராகி கந்தகசுமையுடன் எதிரியுடன் மோதத்துணிந்தவர்கள் தமக்கு விடுதலைவேண்டும் என்ற போராடவில்லை. தமது மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலைவேண்டும் என்ற இலட்சியத்துடனேயே போராடினார்கள்.நெஞ்சிலே குண்டேற்று வீழ்ந்தார்கள். [/size] [size=4]எமது தேசத்தின் ஆன்மாவையும் தேசியத்தின் உறுதியையும் இனத்தின் வெற்றியையும் இன்று பாரெங்கும் உள்ளவர்கள் உற்றுப்பார்த்து உறைந்து போயுள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த மாவீரர்கள். வீரம் செறிந்தது தமிழினம் என்று எட்டுத்திங்கும் பறைசாற்றிவிட்டு சென்றவர்கள் இவர்கள். எமது இனத்துக்கு ஒரு விடிவை சிங்களதேசம் வழங்க மறுப்பினும் சர்வதேசமும் அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எழுதாத விதியை தமது உயிரால் எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size] [size=4]பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் தமிழீழ தாகத்தையும் விடுதலைப்புலிகளையும் ஒற்றைச் சொற்களுக்குள் அடக்கிவிடமுடியாது என்ற உண்மையை உலகஅரங்கிலே இன்று இந்த மாவீரர்களின் இறப்பு எழுதிச்சென்றிருக்கிறது. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடி இறந்திருக்கிறார்கள் என்றால் அதனை எவருமே ஒரு கிள்ளுக்கீரையாக ஒதுக்கிவிடமுடியாது. ஒரு இனம் தனது நியாயமான உரிமைகளையும் அபிலாஷைகளையும் வேண்டி சத்தியத்தின்வழி நின்று போராடியது என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த இனத்தின் வேண்டுதலை நிறைவுசெய்யவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்திச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்று வித்தியாசமான பரிமாணத்தை எடுத்திருக்கிறது. இந்த மாவீரர்களின் மீது சத்தியம் செய்து அவர்களின் இலட்சியக்கனவுகளை அமைதிவழியில் சென்று அடைவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்லல்படும் எமது மக்களுக்கு அமைதிவேண்டும் என்றும் அவர்களுக்கு அவர்களது உரிமைகள் வேண்டும் என்பதே மாவீரர்கள் அவா. நிறைவேறாத அவர்களது ஆசையை நாங்கள் நிறைவேற்றவேண்டிய வரலாற்று பொறுப்பாளிகளாக நாங்கள் இங்கு நின்றுகெண்டிருக்கிறோம். விதைகுழியில் தூங்குகின்ற மாவீரச்செல்வங்களின் நெஞ்சிலே கனன்ற இலட்சிய நெருப்பு எமது நெஞ்சிலும் எரியவேண்டும். அவர்களை போல கழுத்திலே நஞ்சுடன் களத்தில் நின்று போராடவேண்டிய தேவை இன்று இல்லை. அவர்களது இலட்சிக்கனவை நாங்கள் பொறுப்பேற்று விடுதலைக்காக அவர்கள் அமைத்த உறுதியான பாதையில் பயணம்செய்தாலே, அவர்களின் கனவுக்கு உரமூட்டும் பாரிய பணியாக அமையும்.[/size] [size=4]சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.[/size] [size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்.[/size] [size=4]-பகலவன்[/size] http://www.tamilleader.com/mukiaya/7596--21-27-.html
  10. ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. தமிழரின் இறைமை முற்றுமுழுதாகப் பறிபோனது பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடுதான். முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் ‘பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்’ எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஆவணி 25 ஆம் நாள் என தமிழீழ விடுதலைப் புலிகளால் மாற்றப்பட்டது. இந்த நாளுக்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு? அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடந்து வந்தது. ஆக்கிரமிக்க வந்த வெள்ளையரின் படைகள் மீது அவ்வப்போது தாக்குதல்களை நிகழ்த்தி வந்தான் பண்டாரவன்னியன். இந்நிலையில் ஒருநாள் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாகக் வரலாற்றுக் குறிப்புக்களுண்டு. அந்தநாள்தான் ஆவணி 25. பண்டார வன்னியன் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றனர் தமிழர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இந்நாள் முக்கியமானது. சுவாரசியமான முறையில் அது பண்டாரவன்னியனின் நினைவுநாளுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்புள்ளது. சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18. அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி பின்னர் மிகப்பெரும் வளர்ச்சியைக் கணடது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன. தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் விழுந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை. அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளையுமே பயன்படுத்தி வந்தார்கள். விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்தது பண்டாரவன்னியின் நினைவுநாளான ஓகஸ்ட் 25 ஆம் நாள். விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயுவும் முக்கியமானவர். புலிகளின் ஆட்லறிப்படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதல் சம்பவத்திலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். இறுதிவரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்து வந்தது. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது. ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்பு அளவிட முடியாதபடி உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருக்கும் 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்திதாம். அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணினிப் பிரிவு, நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன. விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக 'சிறுத்தைகள்' என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்த சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகி சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார். இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நாளிலேயே -25.08.2002 அன்று சாவடைந்தார். ஆவணி 25ஆம் நாள் பண்டாரவன்னியன் நினைவு நாளாகவும் கேணல் ராயு நினைவு நாளாகவும் நினைவுகூரப்படுகின்றது. -ஈழமுரசு ஒஸ்ரேலியா http://tamilleader.com/mukiaya/5718-august25thinhistoryofeelam.html
  11. [size=2] [size=3]ஈழப் போராட்டத்தில் பாடல்களின் பங்கு அளப்பரியது. வெற்றிகளின் பின்னால் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல்கள், வீழ்ந்த வீரர்களின் நினைவுப்பாடல்கள், மக்களின் துன்பதுயரங்களை வெளிப்படுத்தும் பாடல்கள், தலைவரைப் பற்றிய பாடல்கள் என பலவிதங்களில் அமைந்த பாடல்கள் போராட்டத்தில் மிகப்பெரும் உந்துசக்தியாக அமைந்தன. ஈழப்போராட்டத்தின் இசையுலகில் தனக்கென்றொரு முத்திரை பதித்துச் சென்ற பாடகன் ஒருவனின் பதினைந்தாம் ஆண்டு நினைவுநாள் ஆவணிமாதம் முதலாம் நாளாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் அவரின் கலைப்பயணத்தைத் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார். பாடகராக அறிமுகமானபின் பெருமளவு கலைத்துறை சார்ந்த கடமையே இவருக்கு வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'. இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது. ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல் அது. "சின்னச் சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்" சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும். கண்ணீரில் காவியங்கள் தொடங்கி சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு இயங்கி வந்தது. ஏனைய இசைக்குழுக்கள் போலவே இக்குழுவும் மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். தமிழீழ இசைக்குழுவின் நிகழ்வுக்கு ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணாவின் பாட்டு மட்டுமிருந்தாற்போதும், இசைக்குழு களைகட்டிவிடும். ஜெயசிக்குறு என்ற பெயரில் சிங்கள அரசு தமிழர்மேல் போர் தொடுத்தபோது வன்னிப்பெருநிலப்பரப்பே போர்க்கோலம் கொண்டது. விடுதலைப்புலிகள் பல படையணிகளை உருவாக்கிக் களம்காண ஆயத்தமாகினர். தென் தமிழீழத்திலிருந்து ஆயிரத்துக்குமதிகமான போராளிகள் ஜெயசிக்குறுவை எதிர்கொள்ளவென வன்னிக்கு வந்து சேர்ந்தனர். இந்நேரத்தில்தான் சிட்டண்ணாவும் களத்துக்குச் சென்றார். ஓரணியைத் தலைமைதாங்கி புளியங்குளம் பகுதியில் காப்பரண்கள் அமைக்கும் பணியைத் திறம்படச் செய்துமுடித்தார். சண்டை வலுத்தபோது களத்திலே இறங்கும் நேரம் சிட்டண்ணாவுக்கு வந்தது. ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று 01.08.1997 அன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார். சிட்டண்ணா வீரச்சாவடைந்த செய்தி மக்களிடத்தில் பேரதிர்ச்சியை உருவாக்கியது. ஒவ்வொரு வீட்டிலும் நேசிக்கப்பட்ட, அனைவராலும் அறியப்பட்ட சிட்டண்ணாவின் இழப்பு, கலையுலகத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் பேரழிப்பாகவே அமைந்தது. "சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற கருத்து பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தான் அமைந்திருந்தன. கரும்புலிகள் நினைவுப்பாடல்களும் பொதுவான மாவீரர் நினைவுப்பாடல்களும் பெரும்பாலும் அவரது குரலிலேயே வெளிவந்துள்ளன. தான் வீரச்சாவடைந்தால் தனக்காக ஒரு பாடலைத் தயாரியுங்கள் என்று பகடியாகச் சொல்லிச் சென்ற சிட்டண்ணாவுக்குரிய முதலாவது நினைவுப்பாடலான ‘சிட்டுச் சிட்டு சிட்டு எங்கள் மண்ணில் பூத்த மொட்டு’ என்ற பாடலை சாந்தன் அவர்கள் பாடினார். ஈழப்போராட்டத்தின் பாடற்பரப்பில் என்றும் அணையாத விடிவெள்ளியாக மிளர்ந்துகொண்டிருக்கும் மாவீரர் மேஜர் சிட்டுக்கு எமது பதினைந்தாமாண்டு நினைவு அஞ்சலி உரித்தாகட்டும்.[/size][/size][size=2] [size=3]-ஈழமுரசு ஒஸ்ரேலியா[/size][/size][size=2] http://tamilleader.com/thadangkal/5610-2012-08-20-03-08-09.html[/size]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.