யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பகலவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,586
 • Joined

 • Last visited

 • Days Won

  18

பகலவன் last won the day on July 30 2018

பகலவன் had the most liked content!

Community Reputation

797 பிரகாசம்

About பகலவன்

 • Rank
  Advanced Member
 • Birthday March 15

Profile Information

 • Gender
  Male
 • Interests
  கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,மகன்.

Recent Profile Visitors

3,430 profile views
 1. கிருபன் தொடர்ச்சியாக இணைப்பதற்கு நன்றி. இவற்றை வாசிக்கும்போது எதையாவது சொல்ல தோன்றினாலும் எழுத விரும்புவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்பு மட்டுமன்றி இயக்கத்தில் மேலோட்டமான/புனையபட்டு வேண்டுமென்றே கசியவிடப்பட்ட கதைகளை உண்மையென்று எழுதுவதில் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ("0"/ராதா வான்காப்பு/படையப்புலனாய்வு, வெளிநாட்டு முகவர் அமைப்பு) போன்றவற்றில் பணியாற்றியவர்களின் தொகுப்பாக அமைகிறது. இருந்தாலும் இதை வாசிக்க ஒரேயொரு காரணம் தான் இருக்கிறது. இதில் இடம்பெறும் சம்பவங்களும், சில புனை கதைகளும் எங்களுக்கு பலவற்றை மீண்டும் நினைவூட்டுவதாக அமைகிறது. ஒழுங்கற்று கிடக்கும் எண்ணங்களை ஒருமைப்படுத்துகிறது. இந்த கதைகளில் வரும் நாயகர்கள், நாயகிகள்,உருவாக்கப்பட்ட/மிகைப்படுத்தப்பட்ட நாயகர்கள் என பலருடன் பழகிய வாய்ப்புக்கிடைதமை இந்த பிறவியில் கிடைத்த வரமாக கருதுகிறேன்.
 2. அதுமட்டுமல்ல இந்தியா சர்ஜிக்கல் ஸ்ரைக் என்றபெயரில் நடந்த தாக்குதலில் எந்த முகாமும் தாக்கி அழிக்கபடவும் இல்லை.
 3. நன்றாக எழுதியிருக்கிறீங்கள் நாதமுனி. அப்படியே உக்ரேன் தேர்தலில் தொலைகாட்சியில் அதிபராக நகைசுவை வேடம் தாங்கியவர் வென்றதையும் (முதல் கட்ட முடிவில்), சவுதி பத்திரிக்கயாளர் ஜமால் கொலையால் சவுதி Hack செய்து பிரித்த அமேசான் நிறுவனர் ஜெப் குடும்பம் பற்றியும் மொழிபெயர்த்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறோம்.
 4. இரணைமடு குளத்தை அண்மித்த பகுதியில் தலைவருடன் தொடர்புபட்ட முகாமொன்று விமானதாக்குதலுக்குள்ளாகி முற்றிலுமாக சேதமடைந்தது. (எக்ஸ்ரெ வன் (X1)). இருப்பினும் தொலைத்தொடர்புகளிலிருந்து அந்த முகாம் தாக்கப்பட்டது தெரியாமல் இருக்க உடனடியாகவே உடையார்கட்டில் இருந்த நிலக்கீழ் பதுங்குகுழியுடன் அமைந்த ஒரு முகாமுக்கு எக்ஸ்ரே வன் என்ற பெயர் மாற்றி வைக்கபட்டு தொலைத்தொடர்பில் அடிக்கடி அந்த முகாம் வருமாறு செய்யப்பட்டது. (Virtually keeping the base alive). பப்பா ஒஸ்கார் , தாங்கோ சேரா, நவம்பர் விஸ்கி, பப்பா லீமா போன்று எல்லாராலும் அனுமானிக்க கூடிய தளபதிகளின் சங்கேத பெயர்களை போராளிகளின் குரல் வழி (voice over) கசிய விட்டாலும், பெரும்பாலும் தளபதிகளுக்கு எண்களை கொண்ட சங்கேத பெயர்களே தொலைத்தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக மூத்த தளபதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சங்கேத எண்களும் அமைந்தன. முகாம்களுக்கு பெரும்பாலும் ஒரு ஆங்கில எழுத்தும் ஒரு எண்ணும் அமைந்த சங்கேத குறியீடுகளே பயன்பட்டன. சில முகாம்கள் அந்த தளபதியின் சங்கேத எண்களாலும் அமைந்தன. எல்லாம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டன. தமிழ்செல்வனின் தொலைத்தொடர்பாளரான சரவணனை எளிதில் யாராலும் மறந்துவிடமுடியாது.
 5. ஜஸ்ரினின் அண்ணையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!!!
 6. வைத்திய கலாநிதி நிமால் மற்றும் அவருக்கு துணை நின்றவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இங்கு விமலநாதன் என்று பதியபட்டிருக்கும் அவரின் உண்மையான பெயர் வைத்திய கலாநிதி நிமலநாதன்(இருதய சத்திரசிகிச்சை நிபுணர்).
 7. உண்மை தான். அந்த காலத்தில் Assembly,GWBasic, Pascal, FORTRAN, Prolog, COBOL, RPG 400 (AS 400 Languages) இல் எழுதுவதற்கும், இப்போது C#, Java இல் எழுதுவதற்கும் இடையில் எங்கையோ எதையோ இழந்த உணர்வுகள். இருந்தாலும் Python மீண்டும் C/C++ இல் எழுதும் உணர்வுகளை தருகிறது. 2020 காலங்களில் Machine Learning/AI and Data Scientist/Data Mining தான் உலகத்தை ஆளும். வாழ்த்துக்கள் நெடுக்ஸ். உங்கள் வளர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். யாழின் தொழினுட்ப களத்தில் எம்மவர்களின் பங்களிப்பை அதிகபடுத்தவேண்டும். எங்கள் அடுத்த தலைமுறை தொழினுட்பத்தால் உலகை ஆளவேண்டும். RPA(Robotic Process Automation) சம்பந்தமாக UiPath/BluePrism பற்றி ஏதாவது எழுதுவம் என்று இருக்கிறேன். நிச்சயமாக எங்கள் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்று நம்புகிறேன்.
 8. பயனுள்ள கட்டுரைத்தொகுப்பு. தொடர்ந்து இணைபதற்கு நன்றி கிருபன்.
 9. போரின் வடு ஆழமானது.
 10. எல்லாவற்றையும் ஒருமுறை கண்முன்னே கொண்டுவந்து சென்றுள்ளார். யதார்த்தமான எழுத்து நடை. இணைப்புக்கு நன்றி கிருபன்.
 11. கருணாவால் சுட்டுகொல்லப்பட்டதாக கருதப்படும் போராளி செஞ்சுடர் பற்றியும் சில வசனங்கள் சொல்லி இருக்கலாம்.
 12. இந்தியாவின் காக்கிநாடாவில் இருந்து ஜோடான் நாட்டுக்கு சென்றுகொண்டிருந்த அரிசி கப்பல் இயந்திர கோளாறால் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒதுங்கியது. அதிலிருந்த கணனி மற்றும் தொழினுட்ப கருவிகள் கடற்புலிகளாலும் அரிசி நிதி துறையாலும் கைப்பற்றப்பட்டன. புலனாய்வுத்துறையின் ஆரம்ப விசாரணைகளுக்கு பிறகு அரசியல்துறையூடாக அனைத்து கப்பல் பணியாளர்களும் ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதலில் விடுதலைப்புலிகளின் பாவனைக்கு என்று ஒதுக்கிய அரிசி மிதமிஞ்சவே பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அது உள்ளூர் அரிசி உற்பத்தியை பாதித்து விவசாயிகள் விசனத்துக்குளாகினர். அந்த அரிசி, மாட்டுக்கு கரைச்சு வைக்கும் அளவுக்கு மலிந்துபோனது. அது தவிர அந்த கப்பல் கிபிர் தாக்குதலுக்கு உள்ளாககூடும் என்று எண்ணியமையால் கப்பலை வெட்டி பொதுமக்களின் உதவியுடன் அரிசி இறக்கும் பணி இடம்பெற்றது. ஊதியமாக அரிசியே வழங்கப்பட்டது. குறிப்பு: அந்த இடம் இறுதியுத்தகாலத்தில் “கப்பலடி” என்று அழைக்கப்பட்டது.