பகலவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,626
 • Joined

 • Days Won

  19

Everything posted by பகலவன்

 1. சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். 1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம். 2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம். 3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம். 4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம் 5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம் 6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம் 7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம். 8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம் 10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம். மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம். இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
 2. விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை. தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை. பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை. எனக்கு அவை தேவையும் இல்லை.
 3. அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள். சந்தோஷுடன் பேசியும் இருக்கிறேன். உங்களின் தமிழ் உணர்வையும் பற்றையும் மதிக்கிறேன். அதற்காக கண்மூடித்தனமாக நம்பிக்கைகளும், உணர்வுபூர்வமான முடிவுகளும் உங்கள் தேடலை மட்டுப்படுத்திவிடும்.
 4. அன்புள்ள மருதங்கேணி, ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது. புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன். பணிவுடன், பகலவன் குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.
 5. ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்
 6. வாழ்த்துக்கள் ராசவன்னியர். உங்கள் பணி தொடர்க.
 7. நன்றாக இருக்கிறது. தொடருங்கள் கோசான்.
 8. அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை. இவற்றைத்தான் அம்மா இருக்கும் போது செய்ய வேண்டியவை/ செய்திருக்க வேண்டியவை என்று என்னால் பட்டியலிட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. இதை அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது. உலகில் எல்லா அம்மாக்களுக்கும் தங்களின் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் நன்றாக வாழவேண்டும் என்று ஒரு ஆசை சில வேளைகளில் பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது அம்மாக்களால் மட்டுமே முடியும். தங்களின் கனவுகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்ற ஒரு ஆதங்கதிலுமே பெரும்பாலும் வாழுவார்கள். சிறு வயதில் கல்வி முதல், வளர்ந்த வயதுகளில் பொருளாதாரம், நற்குடும்ப வாழ்க்கை, பேரன்கள்/பேத்திகள் என அவர்களின் கனவுகள் நீண்டுகொண்டே போகும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி என்று வாழ பழகிக்கொள்வார்கள். பிள்ளைகள் கூட உலகில் யாரிடமும் கொட்டித்தீர்க்க முடியாத பிரச்சனைகளை அம்மவிடம் சொல்லி ஆறுதலடையகூடிய மைய்யப்புள்ளியாக அம்மா இருப்பா. அம்மாவின் கனவுகளை/ஆசைகளை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளே அம்மவையும் பிள்ளையையும் இணைக்கும் ஒரு ஒற்றைப்புள்ளி. அதை நிறைவேற்றினாலே பாதி அம்மாக்களை மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும். தன் பிள்ளை கஷ்டப்படாமல் வாழுகிறான் என்ற வசனமே அம்மாவுக்கு நிறை உணவாக இருக்கும். சரி எனக்கு உலகத்து அம்மாக்களை விட என் அம்மாவைத்தான் அதிகம் தெரியும். அவவின் கல்விகனவுகளை நான் பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். நற்பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து இருக்கிறேன். ரீச்சரின் பிள்ளைகள் என்றால் யார் என்ற அடிப்படை நியமங்களை ஒரளவுக்கேனும் உருவாக்கி இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் அம்மா எனக்கு விதித்த நியம உயரங்களை எல்லாம் தாண்டி அவவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறேன். அந்த அடிப்படை அஸ்திவாரங்களை வைத்து அம்மா கட்டிய கோட்டையை என்னால் முழுமையாக பூரணபடுத்த முடியவில்லை. இருப்பினும் கோட்டையை கட்டும் அளவுக்கு அம்மாவை தயார்படுத்தினேன் என்ற திருப்தி எனக்கு எப்பவும் உண்டு. வாத்தியார் பிள்ளைகள் மக்கு என்ற அடிபடை நியமவிதிகளை என் அம்மாவின் பிள்ளைகள் உடைத்தெறிந்து காலங்கள் ஆகிவிட்டன. அம்மாவின் ஆசைகள் வரையறைகுட்பட்டன அல்ல. அவை காலத்துடனும் சூழ்நிலைகளுடனும் வேரூன்றி விருட்சமாக வளரகூடியன. அம்மாவின் வயசுடன் ஆசைகள் மாறிப்போகும். அறுபது வயதில் கொழும்பில் வீடு வாங்க ஆசைப்பட்ட அம்மா, சாகும்போது பழைய வீட்டில் பலாமரம் நட ஆசைப்பட்டா. இது தான் அம்மா. இது தான் நியதி. என்னால் முடிந்தவற்றை எந்தவித மனகோணலும் இல்லாமல், அதற்கு ஒரு படி மேலே ஆழ்மன திருப்தியுடனே நான் நிறைவேற்ற முயற்சி செய்தேன். இது எந்த வித கண்ணீரும் இல்லாமல் இப்போ இதை எழுத்வதற்காகினும் எனக்கு உதவுகிறது. தன் பிள்ளைகள் தன் முதுமைக்காலத்தில் தன்னுடன் அல்லது தனக்கு அருகில் இருக்கவேண்டும் என்பது அம்மாக்களின் நியமவிதி. இதில் என் அம்மா விதி விலக்கல்ல. எழுதமுடியாக்காரணங்களுக்காக அம்மாவின் பிள்ளைகள் தூரவே இருந்தாலும் இன்றைய தொழினுட்ப உதவியுடன் அம்மா ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் தன் நடுங்கும் கைகளால், ஏதோ ஒரு வகையில் ஐபோனை இயக்கி தொடர்பெடுக்கும் அம்மவுக்கு ஒரு திருப்தி. நாங்களே எடுக்காவிட்டாலும், வரும் அழைப்பை நேரமின்மை என்ற ஒற்றை வார்த்தைமூலம் தட்டி கழிக்கும் தருணங்களே அதிகமாகிப்போய்விட்ட காலத்தில் உங்களுக்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அம்மாவின் அழைப்பை மட்டும் எடுக்காது விடாதீர்கள் அது அவவின் கடைசி அழைப்பாக கூட இருக்கலாம். அப்படியே அந்த அழைப்பை எடுத்தாலும் உங்களின் உணர்வுகளை அதில் காட்டிவிடாதீர்கள். அன்பாக ஆறுதலாக தூரத்தில் இருந்தாலும் அன்பை காட்டும் ஒரே ஊடகமாக அதனை பாவியுங்கள். இல்லையேல் இந்த குற்ற உணர்ச்சியே உங்களை மெல்ல கொன்றுவிடும். உங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப அடிக்கடி அம்மாவைப்போய் பாருங்கள். நான் வருகிறேன் என்று கேட்டபோது தனக்கு ஆசை தான், ஆனால் நீ வரவேண்டாம் என்று தடுக்கும் உள்ளம் அம்மாவைத்தவிர யாருக்கும் வரமுடியாது. அம்மா ஆசைப்படும் இடங்களை/ வாழ்ந்த இடங்களை கொண்டு சென்று காட்டுங்கள். அம்மா ஆசைப்படும் உணவுகளை ஒரு தடவையேனும் வாங்கி கொடுங்கள். ஒரு முறையேனும் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள், தன் தட்டில் இருந்து உங்கள் தட்டுக்கு அம்மாபோடும் அப்பளத்திற்கு இருக்கும் சுவை உலகில் நீங்கள் எங்கு சாப்பிட்டாலும் கிடைக்காது. ஒரு முறையேனும் அம்மாவுக்கு அருகில் படுத்து உறங்குங்கள். உங்களுக்கு வியர்க்கும்போது அம்மா மட்டை எடுத்து விசுக்கும் வரம் ஒருவருக்கும் கிடைக்காது. காலையில் ஒரு முறையேனும் பல் துலக்கிவிடுங்கள், முகம் கழுவி விடுங்கள். அவ காட்டும் சாமிக்கு பூப்பறித்து வையுங்கள்.(இவையெல்லாம் நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது அம்மா நாள் தோறும் செய்தவை.) அம்மா விரும்பும் பாடல்களை, படங்களை அவவுக்கு போட்டு காட்டுங்கள், அவற்றை பார்க்கும் போது அம்மாவின் முகத்தில் வரும் மலர்ச்சி உங்களின் வாழ்க்கையில் வரலாறாக பதியும். அம்மாவை திரும்பி எழும்பி நடக்கவைக்கும் சாத்தியங்கள் இல்லை என்று எனக்கு தெரிந்தாலும், அம்மாவின் நம்பிக்கையை எப்போதுமே உடைக்க விரும்பியதில்லை. என் அம்மா தன் சாவுக்கு கூட நான் வந்தால் எனக்கு பிரச்சனை ஆகும் என்று வராமல் தடுக்கும் அளவுக்கு என் மீது பாசம் கொண்டவ. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே தனது மகிழ்ச்சி என பல முறை சொல்லி இருக்கிறா. நான் செய்யும் வேலை என் உடலை வருத்துமா என்று அடிக்கடி கேட்பா. என்னை கஷ்டபடுத்த கூடாது என்று யாழ் சென்று வாழ நினைத்தவ. எனக்கு வேலை இல்லை என்றாலும் என் கஷ்டத்தை அம்மாவுக்கு காட்டினால் எங்கே ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் விட்டுவிடுவா என்று கடன் வாங்கித்தான் கடந்த சில மாதங்களாக காசு அனுப்புவேன். காசு திரும்ப எப்பவும் உழைச்சு கொள்ளலாம், ஆனால் காட்டவேண்டிய அன்பை அரவணைப்பை சரியான நேரத்தில் காட்டவில்லை என்றால் எதை எப்பவும் மீளளிக்கமுடியாது. என்னை பார்க்க ஐரோப்பா வரும்போதும் அண்ணாவை பார்க்க அவுஸ்ரேலியா போகும் போதும், அதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னமே அம்மாவின் தயார்படுத்தல்கள் தொடங்கிவிடும். அம்மாவின் உற்சாகத்துக்கு அளவிருக்காது. இது நாடு பார்க்கும் ஆசை அல்ல. மகன்களை / பேரப்பிள்ளைகளை பார்க்கும் ஆசை. அம்மாக்களுக்கு மட்டுமே வரும் ஆசை. தயவு செய்து தவறவிட்டுவிடாதீர்கள். நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் ஒரு நாளாவது அம்மாவுடன் தங்குங்கள். அம்மாவின் கையால் ஒரு முறையேனும் ஒரு வாய் சோறேனும் சாப்பிடுங்கள். வாழ்வில் ஒரு முறையேனும் தாயை வீழ்ந்து வணங்குங்கள். அம்மா எப்பவுமே தான் பெற்ற பிள்ளைகளை சமனாகத்தான் பார்ப்பா. கம்முயூனஸம் என்றால் என்ன என்பதை அம்மாவிடம் கற்று தெரிந்து கொள்ளுங்கள். சாவு யாரையும் விட்டுவைப்பதில்லை. அது உங்கள் அம்மா என்று தனிப்பட்ட பரிவு காட்டப்போவதுமில்லை. பெற்ற பிள்ளைகள் நாங்கள் இருக்கும்போது பரிவுகாட்டச்சொல்லி கேட்பதில் நியாயமும் இல்லை. பரிவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் இன்னும் தமிழில் நிகர் சொற்களுண்டோ அனைத்தையும் அம்மா வாழும்போதே காட்ட வேண்டிய அனைத்து கடைப்பாடுகளும் எங்களுக்கே உண்டு. “கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நான் கண் உள்ளபோதே சூரிய வணக்கம் செய்தவன் என்ற தார்மீக உரிமையில் கேட்கிறேன். “அம்மாவை கவனியுங்கள்.” எங்கோ ஒரு ஓரத்தில் உங்களை மட்டுமே தினமும் நினைத்துருகும் ஒரு சுயனலமற்ற உயிர் உள்ளது என்றால் அது அம்மாவின் இதயதுடிப்பு மட்டும் தான். “தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை” “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” “அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே” “தாய் – கடவுளின் மனித உருவம்” இன்னும் எத்தனையோ தாய் புகழ்பாடும் குறள்களும், பாடல்களும், பழமொழிகளும் வந்தாலும், அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை என்று இன்றும் எழுத வேண்டிவருகிறது என்றால் எங்கோ என்னமோ நாங்கள் பிழைவிடுகிறோம் என்று தானே அர்த்தம். எங்கள் பிழைகளை நாங்கள் மட்டுமே திருத்த முடியும் என்பது உலகறிந்த தத்துவம். நான் சொன்னவையெல்லாம், நான் செய்தவை இதை எல்லாம் நீங்கள் செய்யவேண்டும் என்ற கட்டளையை இடும் தார்மீக உரிமை எனக்கு இல்லை. இருந்தாலும் செய்யாமல் விடுவதால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு விலக்களிக்க இந்த உலகில் யாருக்குமே வலிமை இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.
 9. உங்கள் பேபால் இற்கு 5 பங்குகளுக்குரிய பணம் அனுப்பி உள்ளேன். நன்றி
 10. தொடர்ந்தும் எழுதுங்கள். இது நீங்கள் கடந்து வந்த பாதை. உங்கள் உணர்வுகள். உங்களால் மட்டுமே எழுத முடியும்.
 11. கரும்புலிகளுக்கு வீரவணக்கம். அத்துடன் இத்தாக்குதலுக்கு துணைநின்று இரகசியம் காக்க தங்களை ஆகுதியாக்கிய இரகசியப் புலனாய்வுப்பிரிவு போராளிகளுக்கும் வீரவணக்கம். இவர்கள் பெயர்கள் தமிழீழம் கிடக்கும் வரை வெளிவராது. (கொட்டாஞ்சேனை வெதுப்பகத்தில் தன்னை கரியாக்கிய மாவீரன் உட்பட) நீங்கள் இல்லை என்றால் இந்த தாக்குதல் ஒரு கனவு மட்டுமே. சிங்களத்தை சமாதானத்துக்கு கொண்டுவந்தது இந்த தாக்குதல் தான். சமாதான பேச்சுவார்த்தை தராசில் புலிகளின் பலத்தை உயர்த்தி காட்டிய தாக்குதல் இது. போர்நிறுத்ததின் அவசியத்தை சிங்களத்துக்கு உணர்த்திய தாக்குதல் இது.புலிகள் பிறநாட்டு பொதுமக்களுக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் நடாத்திய தாக்குதல் உத்தியை உலக நாடுகள் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
 12. விளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம்.
 13. கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு. ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.
 14. இன்னொரு பக்கத்தால் புலிகள் பதுக்கிவைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தாள் என்று ஒரு மூட்டை மிளகாயை அரைக்கவும் ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு எந்த வலயப்பணிப்பாளர் மாட்டப்போறாரோ
 15. வெற்றிபெற்ற சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சங்க தலைவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள். கொள்கையே வெல்லும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய ஈழப்பிரியனுக்கும் உதவிய கிருபனுக்கும் மற்றும் இந்த திரியை கலகலப்பாக கொன்டு சென்ற பையனுக்கும் கோஷன் சேயுக்கும் நன்றிகள்.
 16. அல்லது நோர்வே-சுவீடன் போல நகர உள்நுழைவு கட்டணங்கள் அறவிடலாம். இது நகரங்களுக்குள் வரும் வாகனங்களின் அளவை குறைக்கும். பொதுபோக்குவரத்தை பயன்படுத்தும் நிலையை அதிகரிக்கும்.
 17. அது ஓவர்த்துரோ இல்லை. எறியும் போது பென் ஸ்ரோக்சின் மட்டையில் பட்டு தான் எல்லை தாண்டியது. அதற்கு பென் ஸ்ரோக்ஸ் மன்னிப்பும் கேட்டார். அவர் அறியாமலே பட்டது. அதை நியுசிலாந்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே எடுத்தது.
 18. இங்கிலாந்துக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும் நியூசிலாந்தின் நேர்மையையும் பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் மனங்களை வென்றுவிட்டார்கள். எல்லைகளை தாண்டிய பந்துகள் அடிப்படையில்