Jump to content

easyjobs

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1093
  • Joined

  • Last visited

Everything posted by easyjobs

  1. ஆளுங்கட்சியிடம் சிக்கி, தி.மு.க. படும்பாடு போதாதென்று, தே.மு.தி.க.வும் தன் பங்குக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு பணம் வந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கிளப்பி பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது தே.மு.தி.க. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது, தே.மு.தி.க.வின் சட்டமன்ற கொறடாவும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.சி.சந்திரகுமார்தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார். கூடவே, ‘அண்ணா அறிவாலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்கா இடத்தையும் அரசு மீட்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைக்க, ஆடிப்போயிருக்கிறது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமாரைச் சந்தித்தோம். ‘‘‘கடந்த தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ் மையம்’ என்றொரு அமைப்பு திடீரென்று உதயமானது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மையம்’ சார்பில் சென்னையில் ‘சங்கமம்’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பாதிரியார் ஜெகத் கஸ்பர் தமிழ் மையத்தின் பொறுப்பாளர். இந்த ‘சங்கமம்’ நிகழ்ச்சிக்குப் பெரிய தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அவைகளுக்கெல்லாம் இந்த தொழில் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட நன்கொடை கொடுக்க முன் வரவில்லை. சென்னை சங்கமத்துக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி வழங்கியுள்ளார்கள். தாங்கள் கொடுக்கும் நன்கொடையால் தங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் கூட செய்ய முடியாத நிறுவனங்களும் சங்கமத்திற்கு பணத்தை கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, தமிழகத்தில் மேற்கு மாவட்டத்தில் ‘அம்மன்’ பெயரில் ஒரு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் கனிமொழியின் ‘சென் னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த சர்க்கரை ஆலை எந்த விதத்திலும் விளம்பரம் செய்யவில்லை. அப்படியானால் எந்த அடிப்படையில் ஐந்து கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தது? தி.மு.க. ஆட்சி மாறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னால்தான் அந்த சர்க்கரை ஆலை வடமாவட்டத்தில் இன்னொரு ஆலைக்கு லைசென்ஸ் பெற்றுள்ளது. அதாவது லஞ்சத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவு தான். அந்த சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்புக்கு பணம் தாராமல் கோடிக்கணக்கான ரூபாய் நி லுவையில் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் காரியம் சாதித்துக் கொள்ள ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியைப் பயன்படுத்தி நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, 2 ஜி வழக்கில் சி.பி.ஐ. தமிழ்மையத்தில் சோதனை நடத்தியுள்ளது. இந்த மையத்துடன் இணைந்து தான் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்தின. அப்படியானால், ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்கு 2 ஜி பணம் செலவழிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விடை தெரிந்தாக வேண்டும். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிக்காக ‘தமிழ்மையம்’ அமைப்புக்கு யார், யார் மூலமாக நன்கொடை பெறப்பட்டது, அதனால் அந்த நிறுவனங்கள் அடைந்த லாபம் என்ன, நன்கொடைகள் பெறப்பட்டதா, மிரட்டி வாங்கப்பட்டதா? என்பதை விசாரித்து கண்டறிய வேண்டும் என்று தான் சட்டமன்றத்தில் பேசினேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு அம்சம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செய்த நில அபகரிப்புகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால், திமு.க.வின் தலைமை அலுவலகமான அறிவாலயமே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த போது அறிவாலயம் கட்ட போனால் போகிறது என்று அனுமதி கொடுத்தார். அப்போது அறிவாலயத்தையொட்டி ஒரு பெட்ரோல் பங்க் இருந்தது. அப்போதெல்லாம் எங்கள் கேப்டன் பிறந்தநாள் நிகழ்ச்சி அறிவாலயம் எதிர்ப்புறத்தில் இருக்கும் காமராஜர் அரங்கில் நடைபெறும். அப்போது தமிழகத்திலிருந்து கேப்டன் ரசிகர்கள் அங்கே கூடுவார்கள். திரும்பி ஊருக்குப் போகும்போது தாங்கள் வந்த வாகனத்திற்கு டீசல் அடிக்க அந்த பெட்ரோல் பங்க்கில் வரிசையாக நின்று டீசல் போட்டுக்கொண்டு போவோம். ஆனால், புரட்சித்தலைவர் மறைவுக்குப் பின்னர் அந்த பெட்ரோல் பங்க் மாயமாக மறைந்து விட்டது. அந்த இடத்தில் அறிவாலயம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. பொதுவாக சென்னை பெரு நகரங்களில் பெரிய அளவிலான ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்றால், அந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் அரசு பொது பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட பகுதி நிலத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், அறிவாலயத்தைப் பொறுத்தவரை பெட்ரோல் பங்க் இருந்த இடத்தை ஆக்கிரமித்து உள்ளே பூங்கா அமைத்துக் கொண்டார்கள். இதற்காக சில ஆவணங்கள் திருத்தப்பட்டிருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பூங்காவை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தி.மு.க.வே ஆக்கிரமித்து வைத்துக் கொண்டுள்ளது. அந்த பூங்கா இடத்தை மீட்க வேண்டும் என்றும் சட்டசபையில் கோரிக்கை வைத்து பேசினேன்’’ என்று சொல்லி முடித்தார் சந்திரகுமார். Thanks to kumudam reporter. To see the picture of this news http://www.thedipaar.com/news/news.php?id=32650
  2. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை. இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே, தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணங்களை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் இலங்கை அரசைக் கண்டித்த போதும், பக்கத்து நாடான இந்தியா சேனல் 4 ஆவணங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் இலங்கை அரசைக் காப்பாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டது. ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அதில், ‘‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இந்தியா தனக்கு ஆதரவு தரும்போது, இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கிளப்பியது. அதைத்தான் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கோத்தபய, ‘‘ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார். அவர் ஏதாவது செய்ய நினைத்தால் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்தட்டும். அதை விடுத்து போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் அவர் பேச வேண்டாம்’’ என்று கோபமாகப் பேசியிருந்தார். கூடவே தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ‘அர்த்தமற்ற தீர்மானங்கள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஒரு நாடு கேலி செய்வதோ, விமர்சிப்பதோ கண்டனத்துக்குரியது என தமிழகத் தலைவர்கள் கொந்தளித் துப் போனார்கள். ஆனால், கோத்தபய ராஜபக்ஷேவின் பேட்டி வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலும், மத்திய அரசு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றமே கருத்துத் தெரிவிக்கத் தயங்கும் நிலையில், இன்னொரு நாடு அதைக் கேலி செய்வதை இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? என் றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கும் விடை, ராஜபக்ஷேவின் பேட்டியிலேயே இருக்கிறது. இனப்படுகொலை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ‘‘இந்திய அரசு எங்களுக்கு எல்லாமாக இருந்து உதவி செய்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார் கோத்தபய. இந்திய அரசு இறையாண்மையுள்ள ஒரு நாடு. அந்நாட்டில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை கேள்வி கேட்பது இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்பதுபோல் ஆகாதா? என்று கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். மத்திய அரசின் அமைதியை கேள்வி கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, கோத்தபய ராஜபக்ஷேவுக்கு தன்னுடைய பதிலை அழுத்தமாகவே தெரிவித்துள்ளார். ‘‘எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோத்தபய எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கச்சத்தீவு பகுதிகளில் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என்கிற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்’’ என்று கோபமாக பதிலளித்துள்ள அவர், ‘‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் எச்சரித்துள்ளார். ‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது’’ என்ற ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டுக் குரல் இந்திய அரசுக்கு ஒருபோதும் கேட்காது என்ற உண்மை இன்னுமா இலங்கைக்குத் தெரியாமல் போய்விடும் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது. ‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் இலங்கை அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே கோத்தபய ராஜபக்ஷேவின் பேச்சு காட்டுகிறது’’ என்று கூறுகிறார் சீமான். ‘‘தமிழக சட்டமன்றத் தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று கோத்தபய கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலராக இருப்பதோடு, அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் மறைக்கப் பார்க்கிறார்’’ என்று சொன்னார் சீமான். ‘‘இலங்கைக்கு மத்திய அரசு சிறு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லையே?’’ என்ற கேள்விக்கு, ‘‘கோத்தபய பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை இலங்கை விமர்சித்த போதும் இந்தியா அமைதியாக இருப்பதற்கு இதுதான் காரணம்’’ என்கிறார் சீமான். ‘‘டெல்லியில் இருக்கும் இலங்கைத் தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது. தமிழர்களுக்கும் நான்தான் பிரதமர், தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை பிரதமர் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்துவாரா? Thanks to kumudam reporter to see the picture of this new... http://www.thedipaar.com/news/news.php?id=32649
  3. thank you for see my content and allow me as your friend.

  4. thank you for see my content and allow me as your friend.

  5. thank you for see my content and allow me as your friend.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.