Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ம.தி.சுதா

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  20
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by ம.தி.சுதா

 1. மிக்க நன்றிகள் நான் தனியே தான் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் முழுமையாக ஊடகங்களை அணுக முடியவில்லை. சிலர் மட்டும் தாமாகவே செய்தி சேகரித்து பிரசுரிக்கின்றார்கள். இங்கு சரியான அமைப்புக்கள் கட்டமைக்கப்படவில்லை. அது உடனே உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. காரணம் அவற்றுக்கான பக்குவநிலையை ஒருமிக்க எல்லோரும் அடைய வேண்டும்.
 2. அன்பு உறவுகளுக்கு நன்றியும் வணக்கமும். எனது திரைப்பட முயற்சியின் வரலாற்றுப் பதிவில் இணைந்து கொண்ட அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் வணக்கம். திரைப்படம் தற்போது விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. தங்களது முதலீட்டுக்குரிய பற்றுச்சீட்டுக்கள் அனுப்பி வைத்திருந்தேன். அவை கிடைக்காத யாராவது இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளும்படி அன்போடு வேண்டி நிற்கின்றேன். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதிசுதா
 3. மிக்க நன்றிகள்... வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் யாழ் களத்துக்கு அடிக்கடி வருவேன். பிற்பட்ட காலத்தில் கால கையிருப்பு பிரச்சனையால் அவ்வப்போது மட்டுமே வருவதுண்டு. ஆனால் எனது புதிய திரைப்படத்துக்கு யாழ் கருத்துக்கள உறுவுகளும் முதலிட்டிருந்தார்கள்.
 4. நன்றி, வேலைப்பழுக்களால் சில நாட்கள் யாழுக்கு வரவில்லை அதனால் தவற விட்டிருக்கின்றேன்.. தற்போது இரு படங்களும் ஒரே பெயரில் தான் வெளியாகும் என முடிவாகியுள்ளது. மிக்க நன்றிகள்.... அது தொடர்பாக இந்திய ஊடகத்துக்கு அளித்த செவ்வியில் நீங்கள் குறிப்பிட்டதைத் தான் கூறியிருந்தேன். அவர்களுக்காக எனது தலைப்பை மாற்றுவதன்பது இன்று நான் உயிர் வாழக் காரணமானவருக்கு நான் செய்யும் துரோகமாகும்... இது தான் அச் செவ்வி...
 5. மிக்க நன்றிகள் சகோதரர்... படம் முக்கிய கட்டத்தை கடந்துள்ளது. படம் போர்க்காலக் கதையாக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் கதை மட்டும் தான் உள்ளடக்கப்பட்டுள்ளது எந்த தரப்பினதும் ஆயுத அரசியலைப் பேசாமல் போரின் வலியை மட்டும் பதிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு அனுமதியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. படத்தின் மிகுதி வேலைகளையும் முடித்து விட்டு பேசுகிறேன் நன்றிச் செதுக்கலுடன் மதிசுதா
 6. ஆமாம், நோக்கம் பொதுவாக இருப்பதால் நிச்சயம் எல்லோரும் கவனத்தில் எடுப்பார்கள் ...
 7. மிக்க நன்றிகள் நிழலி அண்ணா, காவலூர் கண்மணி அக்கா நன்றிகள் உடையார், மீரா மற்றும் புங்கை ஊரான் உங்கள் பணங்கள் பெற்றுக் கொண்டேன். நன்றிகள் மணிமாறன் அண்ணா அவர்கட்கு, ஆனால் உங்கள் பணத்தைப் பெறுவதில் சின்ன சிக்கல் உருவாகியுள்ளது. paypal இல் பணத்தை அனுப்பும் போது இரண்டு வழி முறைக் கூடதாக ஏற்பார்கள் 1) நண்பருக்கு 2) பொருள்கள் மற்றும் சேவைக்கு என நீங்கள் இரண்டாவதில் இட்டுள்ளதால் அச்சேவையில் உங்களுக்கு திருப்தி என நீங்கள் பேய்பாலுக்கு உறுதிப்படுத்தினால் தான் பணத்தை நான் பெற முடியும் தயவு செய்து அதை உறுதிப்படுத்தி விடுங்கள் அண்ணா. அத்துடன் அப்படி பொருட்கள் சேவைகளுக்கு என்று பணம் பரிமாறும் போது பேய்பால் 3 $ களை தனக்கு எடுத்து விட்டுத் தான் வரவு வைக்கும் வழமையாகவே பணத்தை மீளெடுக்கும் போது மொத்தத் தொகையின் 3.7 % களை அவர்களுக்கு பரிமாற்றச் செலவாக அளிக்க வேண்டும். பணத்தை நண்பருக்கு என்று பரிமாறும் போது அவர்களது எந்த இடைத்தரகுச் செயற்பாடுகளும் இருக்காது. இதுவரை யாழ் களத்தில் இருந்து 509 அமெரிக்க டொலர்களையும் 535 நோர்வேயியன் குரோணர்களையும் (பரிமாற்றச் செலவு கழிக்கப்படாமல்)பெற்றிருக்கிறேன் என்பதை மன மகிழ்வுடன் அறியத் தருகின்றேன். யாழ் களம் கொடுத்த 14 பேருடன் எனத குழுமச் சேகரிப்பில் இணைந்துள்ளவரின் மொத்தத் தொகை 151 ஆக அதிகரித்துள்ளது அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்
 8. யாழ் கள உறவுகளுக்க வணக்கம், இக்குறிப்பிட்ட ஒரு சில நாளில் கொடுத்த வரவேற்பால் என்னை திக்கு முக்காட வைத்ததற்கு நன்றி. என்னை நம்பி இதுவரை 438 அமெரிக்க டொலர்கள் (பரிமாற்றச் செலவு கழிக்கப்படாமல்) வரவிட்டுள்ளீர்கள். வல்வை சகாறா , கிருபன் , தமிழ் சிறி, நீர்வேலியான் , பகலவன், நிழலி , விசுகு, ஈழப்பிரியன் அனைவருக்கும் நன்றிகள். மொசப்பதேனியா என்ற பெயரில் உள்ள அக்கா இவ்வருட ஆரம்பத்திலேயே எனக்கு நேரில் தந்து விட்டார் அவருக்கும் நன்றிகள். ஒரு அன்பு வேண்டுகோள் ஒன்று. பண விடயத்தில் தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதால் தொடர்பாடலுக்கு ஏற்ற வகையில் தங்களது ஏதவது ஒரு தனிப்பட்ட தொடர்பை தந்து வைக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் இதனுடன் இணைக்கும் பேஸ்புக் குழுமத்தில் இணைந்து தரவேற்றங்களை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்டிருக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். (முகவெளிப்பாடற்று இணையப் பிரவேசம் செய்பவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்) மீண்டும் யாழ் களத்திற்கு பெரு நன்றிகள் நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதிசுதா குறிப்பு – இதனுடன் இதுவரை சேர்ந்துள்ள பணத்தின் விபரத்தை இணைக்கிறேன். இதில் சேர்ந்துள்ள மற்றும் சேர வேண்டிய வீதங்கள் தரவு அடிப்படையில் உள்ளது. ஆர்வமுள்ள தங்கள் நண்பர்கள் யாரேனும் இருந்தால் இப்படத்தை பகிர்ந்துதவ முடியுமா ?
 9. மிக்க நன்றிகள் அக்கா பணத்தைப் பெற்றுக் கொண்டேன். என்னை நம்பி இட்ட முதலுக்கு மிக்க மிக்க நன்றிகள்
 10. அனைவருக்கும் வணக்கம், இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றியுடன் மதிசுதா paypal.me/mathisutha
 11. அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். உண்மையில் இன்று எனக்கு மிகப் பெரும் வியப்பான நாள் ஒரே நாளில் இத்தனை பேர் கிடைத்தது அதிசயமாகவே இருக்கிறது. யாழ் களத்தில் இத்தனை ஊக்குவிப்பாளர்கள் இருப்பது தான் யாழ் களத்தின் பலம் என நினைக்கிறேன். இலங்கைக்கு paypal பரிமாற்றம் பூரண சேவை வழங்கலில் இல்லை, வெளிநாட்டில் உள்ள ஒருவரை ஒழுங்குபடுத்து விட்டு அவரை இணைத்து விடட்டுமா ?
 12. முதலில் இவ் யாழ் களத்திற்கு பெரு நன்றியுடன் பதிலை ஆரம்பிக்கிறேன். காரணம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக முயற்சித்து என்னால் 129 பேரையே இணைக்க முடிந்தது. ஆனால் யாழ் களத்தில் ஒரு நாளில் இத்தனை பேரை அடையாளம் கண்டிருக்கிறேன் என்பதே எனக்கு பெரு மகிழ்ச்சியாக உள்ளது. இப் பணச் சேகரிப்புக்கு என ஒரு பொதுக் கணக்கு வைத்திருக்கிறேன். அதைப் பகிர்கிறேன். பணமிடுபவர் பகிரங்கத்திலோ தனிமடலிலோ தயவு செய்து உறுதிப்படுத்துங்கள். crowedfunding என்ற முயற்சியானது ஒட்டு மொத்த இலங்கையில் கூட இன்னும் வெற்றியடையவில்லை. அதனால் இம் முதல் முயற்சி எவ்வித அப்பழுக்கற்றதாக முடித்து வெற்றி அடைந்து எல்லாப் படைப்பாளிகளுக்குமான ஒரு பாதையை திறக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே சில நிபந்தனைகளை இடுகிறேன் யாரும் அதைத் தப்பாக எடுத்து விட வேண்டாம். இலங்கைக்கு தனித் தனியே பணம் அனுப்புவது பரிமாற்றச் செலவை அதிகரிக்கும். உங்கள் உங்கள் நாடுகளைத் தெரியப்படுத்தினாலும் பணச் சேகரிப்புக்கு உள்ள எனது நண்பர்களை தொடர்புபடுத்தி விடுகிறேன். என்னில் நம்பிக்கை வைத்து இக்குழு உழைப்புக்குள் கால் பதிக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு பெரு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். thillaiampalam suthakaran account number 1000036907 (current account) commercial bank nelliady. குறிப்பு - இதில் ஆர்வ முள்ள உங்கள் நண்பர்கள் யாருக்காவது இம்முயற்சி பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரியப்படுத்தி விட முடியுமா ? அடுத்த இரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் காரணம் நவம்பர் 16 க்கு பின் வரும் ஆட்சியாளர் எப்படியோ தெரியாது. தற்போதுள்ள நல்லாட்சி அரசு (அப்படிச் சொல்லிக் கொள்ளும்) படப்பிடிப்புக்கான அனுமதியை சட்டரீதியாகத் தந்துள்ளது. ஆனால் இனி வரும் அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்குமோ தெரியாது.
 13. அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன். தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன். படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven) கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம் படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும். ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதிசுதா ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1 இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில.... 1) பாதுகை 2) தாத்தா
 14. 10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்...

  அன்பு உறவுகளுக்கு வணக்கம்..

  எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன்.

  இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன்.

  தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன்.

  படத்தலைப்பு - சொர்க்கத்தின் இருள் நாட்கள் (Dark days of heaven)

  கதைச் சுருக்கம் - இறுதி யுத்த காலத்தில் ஒரு காணிக்குள் மாட்டுப்பட்டுள்ள ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டம்

  படத்துக்குரிய செலவு - 28 இலட்சத்து 50 ஆயிரமாகும்.

  ஒரு பங்கின் பெறுமதி 1000 இலங்கை ரூபாயாகும். (மிக மிக குறைந்த பட்ஜெட் படம் என்பதால் பணம் மீளளிப்பிற்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது) இம்முயற்சிக்கு தற்போது உங்களால் இணைய முடியாவிட்டாலும் உங்கள் நண்பர்களுக்காவது இத்தகவலை அறிமுகப்படுத்தி விடும்படி அன்போடு வேண்டி நிற்கிறேன்.

  நன்றிச் செதுக்கலுடன்

  அன்புச் சகோதரன்

  மதிசுதா

   

  70485212_2406268776160125_62101116773508

   

  ஒப்பந்த விபரம் இத் தொடுப்பில் உள்ளது

  https://drive.google.com/open?id=1G2SxnfvJ_cqzus2Dc8idI1sw7x3liku1

  இதுவரை நான் செய்த குறும்படங்கள் சில....

   

  1) பாதுகை

  2) தாத்தா

   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.