• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

chinnavan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  2,863
 • Joined

 • Last visited

Community Reputation

40 Neutral

About chinnavan

 • Rank
  Advanced Member
 • Birthday 01/01/1986

Profile Information

 • Gender
  Male
 1. "தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர். வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள். வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா, தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த "கமெரா"க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் "கிளிக்" செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார். காலை 9.45 மணி ! உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள். எனக்கு அப்போது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலுக்கு முன்பாக கப்டன் மில்லரிடம் திட்டத்தை ஒப்படைத்து, வழியனுப்பி வைக்கிறார் மாத்தையா. அன்று மில்லர் வீரத்துக்குக் காவியம் ஒன்றையே படைத்துவிட்டு வீரமரணம் அடைந்தான். இன்று திலீபன்…? திலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும். பிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது… பிற்பகல் 2.00 மணி ! திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி- -யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது. "படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்" என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன். நான் ராஐனிடம் சொல்கிறேன். பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார். பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும். "பலஸ்தீனக் கவிதைகள்" என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். "அண்ணா திலீபா ! இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக…… நீ தவமிருக்கும் கோலத்தைக்காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது……செந்நீர் !....... சுசீலாவின் விம்மல், திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது. கவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை. ஏத்தனை இளகிய மனம் அவருக்கு? இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது? அகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்! ஏன்? ஐரிஷ் போராட்ட வீரன் "பொபி சாண்ட்ஸ்" என்ன செய்தான்? சிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான். இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார். 1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 63 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது). பகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன). ஆனால் நம் திலீபன்? உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார். அப்படியானால் அந்த முதல் நபர் யார்? அவர் வேறு யாருமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்! 1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும். இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார். இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார். திலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேறுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல்? அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான். உலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் "சிருஷ்டி கர்த்தா" என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? "இறைவா ! திலீபனைக் காப்பாற்றிவிடு!" கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன். பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது……… ஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன். அப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். " திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். எந்த காரணத்தாலாவது இதை இந்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும், ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூறமுடியும்" அவரின் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த மக்கள், அந்தப் பேச்சை வரவேற்பதுபோல் கைகளைத்தட்டி ஆரவாரஞ் செய்கின்றனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடிக்கின்றது. அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே.பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்ருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச்சென்றார். அன்றிரவு பத்திரிகை நிருபர்களும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். "முரசொலி" ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதனால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஷ்டப்பட்டு சிறிநீர் கழித்துவிட்டு, சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார். ஆவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி.அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன். நாடித்துடிப்பு :- 88 சுவாசத்துடிப்பு :- 20 அவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க- -மாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார். அவன் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருந்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாதென்று, முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். நானும் ராஐனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு "நவினன்களும்" படுக்கைபோட்டனர். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொது மக்களும் கொட்டக் கொட்ட கண் விழித்துக் கொண்டிருந்தனர். பயணம் தொடரும்........http://www.pathivu.com/news/33730/57/15-09-1987/d,article_full.aspx
 2. மாறி மாறி ஆண்ட சிறீலங்கா பேரினவாதிகளால் காலம் காலமாக தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளது.ததொடர்ந்தும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றது. இன்நிலையினை உணர்ந்த மக்கள் எந்தெந்தக்காலகட்டத்திலெல்லாம் தமிழீழம் என்ற உணர்வோடு மக்கள் புரட்சியின் உச்சத்திற்கு வருகின்றார்களோ அந்தந்த காலகட்டத்திலெல்லாம் சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தின் வீச்சை தணித்து பலவீனமான போராட்டமாக மாற்ற முனைந்தார்கள் இதர்க்கு சரியான தெளிவில்லாத தமிழர்களும் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக இருந்தார்கள் இதனால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள்தான் எமது போராட்ட பாதையில் நிரம்பி வழிகின்றது. இந்த கவலையை தியாகதீபம் அன்றே வெளிப்படுத்தியிருந்தார் ஆனால் இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்பதுதான் கற்றறிந்த பாடங்களினூடாக அறியக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக 1957 இல் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் தொடங்கி 2002 பிரபா ரணில் வரையான ஒப்பந்தம் வரைக்கும் சிறீலங்கா அரசின் பித்தலாட்டத்தை எந்தசந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிட முடியாது. உலகவரலாற்று சக்கரத்தில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டமானது எழு தசாப்தங்களை எட்டும் தூரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் இன்னும் தமிழின அழிப்பின் அகோரம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. தமிழ் மக்களின் போராட்டமானது இந்திய வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு தவிக்கின்றது என்பதை தியாகதீபம் திலீபன் அன்றே தன்னுடைய பன்னிருநாள் நீராகாரமின்றி நடாத்திய உண்ணநிலைப்போராட்டத்தினோடு வெளிப்படுத்தியிருந்தார். அமைதிப்படை என்ற போர்வை போர்த்தி எமது மண்ணை ஆக்கிரமித்து சிறீலங்காவுக்கு தாரைவார்க்க வருகின்றார்கள் என்பதை விடுதலைப்புலிகள் உணர்ந்திருந்தபோதும் மக்கள் புரியாது புளகாகிதத்தில் மிதந்தனர். இந்த ஆபத்தான சூட்சுமத்தை புரிந்துகொண்ட திலீபன் அவர்கள் 1987 செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி காலை சரித்திர சாவை ஏற்றுக்கொண்டு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை மேடையில் தன்னை மெழுகுவர்த்தியாக உருக்கி அமைதிப்படையின் கோரமுகத்தினை உலகத்திற்கு அம்பலப்படுத்தியதோடு காக்ககவந்தவர்கள் அல்ல எம்மை தாக்க வந்தவர்கள் என்ற உண்மையை ஈழத்தமிழ் மக்களுக்கு உணரவைத்ததோடு தலைவரின் பாசத்துக்குரிய தமிழக தொப்புள்க்கொடி உறவுகளுக்கும் தமிழீழத்தின் நிலையை தெளிவுபடுத்தியதோடு இந்திய வல்லாதிக்கத்தின் அரசியல் முகத்திரையை கிழித்தெறிந்து 26 செப்டம்பர்1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்டார். ஒரு ஒப்பற்ற வீரனின் நினைவு நாளிலே இன்னும் மண்ணின் விடுதலைக்காக துணிவோடும் உறுதியோடும் போராடிவருகின்ற நாம் அந்த வீரன் உறுதியான தியாகத்தை நெஞ்சில் சுமந்து போராட்டத்தை இலக்கு நோக்கி நகர்த்துவதே எமது கடமையாக அமைகின்றது. அன்று திலீபன் தீர்கதரினமாக பதிவுசெய்த பக்கங்களை புரட்டிப்பார்த்தால் இன்று தாயகத்தில் மக்கள் பரிதாபமான நிலையில் வாழ்கின்ற ஒரு சோக நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுப்பதர்க்கு இல்லை ஆனால் தமிழக உறவுகளும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களின் விடுதலைக்காக போராட்ட களங்களை திறந்திருக்கின்றார்கள் இந்த தேசிய பலத்தை சிதைப்பதர்க்கு சிலந்தி வலைகள் பின்னப்படுகின்றது என்ற எண்ணத்தை மனதில் இருத்தி இறுக்கமான கட்டமை பேணிப்பாதுகாத்து போராடவேண்டும் ஏனெனில் திலீபன் அவர்கள் குறிப்பிட்டது போல் இன்னும் சரியான புரிதல் இல்லாது இழிநிலையையும் அடக்குமுறை நிலையையும் புரிந்து கொள்ள தவறினால் வரலாற்றில் பூமிப்பந்தில் பரிதாபத்திற்குரிய இனமாக மாறிவிடுவோம் என்பதை உணர்ந்துகொண்டு திலீபன் கண்ட மக்கள் புரட்சிக்கு தமிழினம் தயாராகவேண்டும். http://www.pathivu.com/news/33866/57//d,article_full.aspx
 3. அன்புக்குரிய தமிழீழ மக்களே! இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும். எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள். தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள். தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல் , தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ , காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட இரும்பு மனிதர்கள் அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச்சென்றுள்ளார்கள். அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள்.அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்கள். நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம். இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை தமிழீழ மக்களாகிய நாம் தலைசாய்த்து வணங்கி அவர்களின் இலட்சியமான தமிழீழ விடுதலைக்கும், தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, பணிசெய்வோம் என இன் நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம். "பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்" தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள் http://www.pathivu.com/news/32165/57/2014/d,article_full.aspx
 4. /////////அவசரம் அவசியம் படிக்கவும் பகிரவும் ///////// கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும். தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும். இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி தந்து துணை நில்லுங்கள். இதையும் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறு தொடர் நிகழ்வாய்க் கருதி இன்றே தோள் கொடுப்போம் உங்கள் நிதி - தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர் சிந்திய போராளிகள் - பொதுமக்கள் - தமிழ்நாட்டில் அவர்களுக்காய் உயிர் கொடுத்த நெருப்பு மேனிகள் - மீண்டும் உயிர்ச் சிலைகளாய் நிமிர உதவும். நன்றி! காசி ஆனந்தன் தமிழீழம் நிதி அனுப்ப வேண்டிய முகவர் பழ. நெடுமாறன் தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு 8/140, டிப்போலைன், தேசிய நெடுஞ்சாலை, சி. பல்லவபுரம், சென்னை-600 043. தொலைபேசி :0091 - 44-22640451 , 0091-9444410654 [இளவழகன் ] மின்னஞ்சல் : thamiz@thenseide.com வங்கிக் கணக்கு விவரம்: உலகத் தமிழர் பேரமைப்பு (World Tamil Confederation) கணக்கு எண் : 457022479 இந்தியன் வங்கி, மயிலாப்பூர் கிளை. சென்னை - 600 004. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் https://www.facebook.com/mullivaikkalmutram
 5. ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது. கடைசியாக ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு போனார். கன்னடத்தில் ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படம் சில மாதங்களுக்கு முன் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரஜினி, விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வந்த அவர் தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இன்னொரு புறம் புதுமுக நடிகைகள் வரத்தும் ஸ்ரேயாவை ஓரம் கட்ட வைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:- நான் சினிமாவுக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. சினிமாவில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நிறைய நடித்துவிட்டேன். தமிழில் சில காலம் இடைவெளி விழுந்துவிட்டது. நல்ல கதைக்காக காத்து இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் தமிழில் மீண்டும் நடிப்பேன். நிறைய படங்களில் நடிப்பது முக்கியமல்ல. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதுபோன்ற கதைகளை தேடுகிறேன். http://goldtamil.com/?p=8022
 6. நடிகர் சிம்பு இயக்கியதாக கூறப்படும் மன்மதன் படத்தை உண்மையிலேயே சிம்பு இயக்கவில்லை வெறொருவர் இயக்கியதை தன்னுடைய பெயரை இயக்குனராக போட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மன்மதன் 2 படத்தை தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு. தனுஷ் எதை செய்தாலும் உடனே அதற்கு போட்டியாக செய்யும் குணம் படைத்த சிம்பு, தனுஷ் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருவதை கண்டு பொறுக்காமல் தான் உடனே தயாரிப்பில் இறங்குவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘மன்மதன்’.படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மதன் 2 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகாவே ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஏற்கனவே வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்களிலும் ஹன்சிகாதான் ஹீரோயின். இந்த படத்திலும் ஹன்சிகாவே நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தயாரிப்புக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம். சிம்பு தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். இப்படங்களை முடித்த பிறகு ‘மன்மதன்-2’-வை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.http://goldtamil.com/?p=7956
 7. கரீனா கபூரின் மாமியார் அதாவது சைப் அலிகானின் தாயார் கரீனா கபூரிடம் சில அன்புக்கட்டளைகளை பிறப்பித்துள்ளாராம். அவற்றில் ஒன்று சினிமாவில் கூட வேறு நடிகர்களுக்கு முத்தம் தரக்கூடாது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அது. மாமியார் ஷர்மிளா தாகூர் மீது க‌ரினாவுக்கு அளவில்லாத ம‌ரியாதை. அவருக்கு உடன்பாடில்லாத எதையும் செய்வதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறாராம் கரீனா கபூர். இதனால் பாதிக்கப்பட்டது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும்தான் என்கிறார்கள். சத்யகிரஹா படத்தில் அஜய் தேவ்கானுக்கும், க‌ரினா கபூருக்கும் நெருக்கமான காட்சி. முத்தமிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. ஆனால் முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார் க‌ரினா. இதற்கு முன் விஷால் பரத்வா‌ஜின் ஓம்காரா படத்தில் இதே ஜோடி, இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற அளவுக்கு நெருக்கமாக நடித்திருந்தது. 3 இடியட்ஸ் படத்தில்கூட இயக்குனர் சொன்னதும் அமீருடன் எந்த தயக்கமும் இன்றி முத்தம் ப‌ரிமாறியவர்தான் க‌ரினா. http://goldtamil.com/?p=7929
 8. ஐயா பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம். உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி. அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனபவித்துள்ளார்கள். நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலைக்காக போராடிய நம் இனம். உலகின் பெரும் வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து நம்மை சிதைத்துள்ளன. ஆனால் அத அத்தனைஐயுயும் தவிடுபொடியாக்கியது நம் அண்ணன் பிரபாகரன் படை. ராஐராஐ சோழனுக்குப் பிறகு தமிழனின் வீரத்தையும் மானத்தையும் தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்றினை ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் “எனும் புத்தகத்தின் வாயிலாக படித்தறியும் பொழுது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரைக்கும் சிலிர்த்தது. மேலும் அப்புத்தகம் என்னை அழ வைத்தது. தமிழரின் நிலை எண்ணி கலங்க வைத்தது. சொல்ல முடியாத கோபத்தை உண்டுபண்ணியது. உலகத்தில் எத்தனையோ மன்னர்கள் இந்த மண்ணை ஆண்டுள்ளனர். அனால் அவர்களில் எத்தனைபேர் நேர்மையாக ஆண்டார்கள். எத்தனை பேர் மக்களுக்காக உண்மையாக பணிபுரிந்தார்கள் என பார்க்கும் பொழுது உலகம் தோன்றிய காலத்திலிருந்து இனி மறையப்போகிற காலம் வரையிலும் ஒரு உன்னதமான மன்னன், மக்களை நேசித்த அரசு, ஈழம்தான். அந்த அற்புதத்தை ஒரு படைப்பாக தருவதற்கு நான் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றேன். என்னுடைய “சந்தனக்காடு” தொடர் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. தன்னை காப்பாற்ற ஓடிய ஒருவருடைய வாழ்கையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றால், ஒரு தனிமனிதன் அல்ல, ஒரு தெரு அல்ல, ஒரு ஊர் அல்ல, ஒருதேசமே தியாகம் செய்திருக்கின்றது.. தங்கள் உரிமைக்காகாவும் தங்களின் விடுதலைக்காகவும். அப்படிப்பட்ட பரிசுத்தமான தியாகத்தை ஐயா நெடுமாறன் அவர்கள் எழுதிய ஆவணப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதில் பயணம் செய்து இந்த திரைப்படத்தை தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவருக்கும் தமிழினத்தின் தியாகத்தையும், வீரத்தையும் காண்பிக்கவுள்ளேன். இந்தப் படைப்பு வெளி வருவதற்கும், அதனை செய்து முடிப்பதற்கும், உலகத் தமிழினம் பெருத்த ஆதரவு வழங்க வேண்டும் என்று ஒரு படைப்பாளியாக, ஒரு தமிழனாக கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். http://goldtamil.com/?p=7610
 9. ´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர். கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். 15 வயது சிறுமியான ஜூனியர் நடிகை ஒருவர் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஒருவர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட… அந்த பெண் கூச்சல் போட்டதையடுத்து அந்த அவரை வளைத்துப் பிடித்தனர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள். ஒரே கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே ரணகளப்பட… அந்த சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் புகார் கொடுக்கப்போவதாக சொல்ல ‘பிரச்சினையையை பெருசுபடுத்தாதீங்க’ என ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் சமாதானப்படுத்தியதோடு, நடந்த பிரச்சினைக்கு பிராயச்சித்தமாக ஒரு தொகையையும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் பிரச்சினை ஓயாமல் இருந்துவர… ஜில்லா படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தினசரி கவனித்து வரும் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்த பிரச்சினையில் தலையிட்டிருக்கிறார். நடந்த பிரச்சினையை கேட்டறிந்த ‘ஜித்தன்’ ரமேஷ், அந்த செக்யூரிட்டியை ஜில்லா படப்பிடிப்பிற்கு வரக்கூடாது என்று கூறியதோடு, அந்த சிறுமியையும் இனி படப்பிடிப்புக்கு நடிக்க வரவேண்டாம் என்று கூறிவிட்டதோடு இனி நடக்கும் பிரச்சினைகளை வெளியில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். வெளியேறிய அந்த சிறுமியின் உறவினர்கள் அந்த காவலாளியின் டூவீலரை எடுத்துக்கொண்டு ‘பிரச்சினைக்கு முடிவு கிடைச்சதும் வண்டியை வாங்கிக்கோ’ எனச் சொல்லிவிட்டு போய்விட்டார்கள். ஜில்லா திரைப்படத்தில் விஜய் பொலிஸ் கதாபாத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.http://goldtamil.com/?p=7519
 10. ‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மெட்ராஸ் கபே ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளார். இதை கண்டித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம் இலங்கையில் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் இழிவு படுத்தப்பட்டு உள்ளனர். தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் படம் வெளியிடப் படவில்லை. இந்த நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். http://goldtamil.com/?p=7413
 11. பிரபுதேவா நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை பிரிந்து, விவகாரத்து பெற்று அவரையே திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே பிரபுதேவா குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு சிலநடிகைகளுடன் கிசுகிசு ஏற்பட்டு திருமணம் செய்து கொளவதாக வதந்தியும் ஏற்பட்டது. இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், இப்போதைக்கு மறுமணம் பற்றிய எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி செய்வதவாக இருந்தால் நானே மீடியாக்களே கூப்பிட்டு சொல்வேன். தற்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. ஆனாலும் பிரபுதேவா தற்போது முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகையும் விவாகரத்து பெற்றவர் என்பதால் அவருடைய வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லையாம். கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. http://goldtamil.com/?p=7341
 12. போடா போடிக்கு பிறகு சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் படம் மதகஜராஜா. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியுடன் படு கிளாமராக நடித்திருக்கிறார். கிளாமராக நடித்திருப்பத பற்றி அவர் கூறியதாவது: நான் அல்ட்ரா மார்டன் பொண்ணு. ரியல் லைப்புலேயே நான் கிளாமரான ஆளு. அப்புறம் சினிமாவுல அப்படி நடிக்குறதுல எனக்கு என்ன தயக்கம். போடா போடியில ஒரு டான்சரா நடிச்சேன். அதுல அதிகமா கிளாமர் காட்டத் தேவையில்லாம இருந்துச்சு. மதகஜராவுல அட்டகாசம் பண்ற பெண் கேரக்டர். சாங்குல கிளாமர் இருக்கும். மார்டன் பொண்ணா வளர்ந்ததால இந்த வெட்கம், நாணம் எல்லாம் எங்கிட்ட கொஞ்சம் குறைவுதான். சுந்தர்.சி சார் தான் என்னை ஒரு பொண்ணா மாற்றி நடிக்க வச்சார். மதகஜராஜா ரிலீசுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு வேற கேரக்டர்ல நடிக்காம இருந்தேன். இனி நல்ல கதைகள் கேட்டு தொடர்ந்து நடிப்பேன் என்றார்.http://goldtamil.com/?p=7298
 13. பலாத்காரம் செய்பவர்களுடன் சண்டைபோட ஒவ்வொரு பெண்ணுக்கும் கராத்தே கற்றுத் தரவேண்டும் என்றார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் கூறியதுகடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவக்கலூரி மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் குற்றவாளிக்களுக்கு தண்டனை கிடைத்தது. அந்த வருத்தம் ஆறுவதற்குள் சமீபத்தில் மும்பையில் ரவுடிகள் சிலரால் பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள பெண்கள் எல்லோருக்கும் மார்ஷல் ஆர்ட் எனப்படும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் எல்லோருக்கும் பயிற்சி தர வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். ‘இந்த பயிற்சியால் பெண்களுக்கு சுய நம்பிக்கை உண்டாகும். கத்தி, துப்பாக்கியால் சண்டை போடும் பயிற்சிகளை அவ்வளவு எளிதில் எல்லோரும் கற்க முடியாது. ஆனால் மார்ஷல் கலை பெண்கள் ஒருமித்த குரல் கொடுக்க உதவும். பலாத்காரம் செய்ய முயலும் ஆணை கடித்தும், முகத்தில் குத்துவிட்டும் நிலை குலைய செய்ய முடியும். இதுதான் சரியான தருணம். உரிய அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியொரு துணிச்சல் பெண்ணாக ‘ஆதிபகவன் படத்தில் நடித்திருந்தேன். ஆசிய அளவில் இரண்டு முறை மார்ஷல் கலை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறேன்.இவ்வாறு நீது சந்திரா கூறினார்http://goldtamil.com/?p=7294
 14. “வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், கமர்சியல் கதாநாயகி ஆக முடிவெடுத்து விட்டார். “பட்டயக்கிளப்பு பாண்டியா என்ற படத்தில் கவர்ச்சி பிளஸ் முத்தக்காட்சி என்றெல்லாம், புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் கூறுகையில், “சினிமாவில் அறிமுகமான போது, அழுத்தமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து, நடிக்கும் முடிவில் இருந்தேன். ஆனால், சினிமா வேறு மாதிரியாக உள்ளது. அதாவது வெயிட்டான வேடமாக இருந்தாலும், பாடல் காட்சிகளில் கதாநாயகியை கிளாமராக காண்பித்து, ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய நினைக்கின்றனர். அதனால் தான் சினிமாவுக்கேற்ப, என் முடிவை மாற்றிக் கொண்டுள்ளேன் என்கிறார். மேலும் அவர், “இந்த படத்துக்கு பின், எனக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியும். தமிழில், நானும் முன்னணி நடிகையாகி விடுவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.http://goldtamil.com/?p=7168
 15. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ’மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் தடை கோரியுள்ளன. இந்நிலையில் அப்படத்தின் கதாநாயகனும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம், சென்சார் போர்டு ’மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிட அனுமதித்து நற்சான்று வழங்கியுள்ளது. எனவே அப்படத்தை நான் நிச்சயம் திரையில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இப்படத்தில், ராஜீவ் காந்தியை கதாநாயகனாகவும், பிரபாகரனை வில்லனாகவும் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்டோர் அப்படத்திற்கு தடை கோரியுள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாகிறது. அங்கு அமைதி ஏற்படுத்த அனுப்பிவைக்கப்பட்ட இந்தியா அமைதிப்படையின் ‘ரா’ அதிகாரியாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி, அவர்களை அழிக்கும் வேலையில் கதாநாயகன் ஜான் ஆபிரகாமும் ஈடுபடுகிறார். அப்போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டு அவர் கொல்லப்படுவது போல் கதை முடிகிறது. இதில் சிங்கள ராணுவ படுகொலைகள் எதுவும் காட்டப்படவில்லை. விடுதலைபுலிகளையும், ஈழத்தமிழர்களையும் வில்லனாகவும், கேரளாவை சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்துள்ளனர். http://goldtamil.com/?p=6999