Jump to content

chinnavan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  2,863
 • Joined

 • Last visited

Everything posted by chinnavan

 1. "தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்று
 2. மாறி மாறி ஆண்ட சிறீலங்கா பேரினவாதிகளால் காலம் காலமாக தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளது.ததொடர்ந்தும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றது. இன்நிலையினை உணர்ந்த மக்கள் எந்தெந்தக்காலகட்டத்திலெல்லாம் தமிழீழம் என்ற உணர்வோடு மக்கள் புரட்சியின் உச்சத்திற்கு வருகின்றார்களோ அந்தந்த காலகட்டத்திலெல்லாம் சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தின் வீச்சை தணித்து பலவீனமான போராட்டமாக மாற்ற முனைந்தார்கள் இதர்க்கு சரியான தெளிவில்லாத தமிழர்களும் தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாக இருந்தார்கள் இதனால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறுகள்தான் எமது போராட்ட பாதையில் நி
 3. அன்புக்குரிய தமிழீழ மக்களே! இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத
 4. எமது போராட்ட செய்திகள் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் ஊடகங்களால் புறக்கணிக்கபடுகிறது. எனது செய்தி அனைவரிடமும் சென்றடையவேனும். எமது இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள். https://www.facebook.com/tamilnaduhungerstrike
 5. சிங்கள பேரினவாத அரசானது கடல்கடந்து தமிழ் மக்கள் மீது, தமிழீழ விடுதலைக்காக உழைத்தவர்கள் மீது தனது கொலைவெறியினை ஏற்படுத்தி மக்களின் மனதில் பயத்தினை உண்டு பண்ணும் வகையில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளின் படுகொலைக்கு உள்ளான லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் ஆகியோரது 16 வது ஆண்டு நினைவு வணக்கம் பிரான்சில் ஒபவில்லியே என்னும் இடத்தில் அவர்கள் துயில் கொள்ளும் துயிலும் இல்லத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 15.30 மணிக்கு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவ் வணக்க நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. த. சத்தியதாசன் அவர்கள் ஏற்றிவை
 6. அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்குத் “தேவர்” தலைமைதாங்கிக் கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். “நிதர்சனம்” ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா, நாலா பக்கங்களிலு
 7. “தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்
 8. 02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவட
 9. ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. இன்று அவரின் நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார்.
 10. 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள
 11. ‘பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.” தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே.பிரபாகரன். எழுத முடியாத காவியங்கள் எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கி
 12. 05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது. Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமத
 13. யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமாகி போனது இந்த பதிவு . எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான். அப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான். 1997 ஆணி மாதம் மட்டக்க
 14. 26 .06 .1999 ம் ஆண்டு மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினை தழுவிக்கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம். http://thaaitamil.com/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5/
 15. லெப் கேணல் அன்பு 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகியின் வீரவணக்க நாள். லெப். கேணல் கவியழகி குடத்தனை – யாழ்ப்பாணம். 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF
 16. கண்டிவீதியைக் கைப்பற்றவென ‘வெற்றி நிச்சயம்” (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது. 13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையு
 17. 10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம். அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின. இ
 18. பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.