• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

chinnavan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  2,863
 • Joined

 • Last visited

Everything posted by chinnavan

 1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ‘கோச்சடையான்’ பற்றிய புதியபுதிய தகவல்கள் எல்லாமே அவ்வப்போது கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.அந்த வகையில் இந்தப்படத்தில் அப்படி என்னதான் விசேஷம் உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்க, தற்போது கோச்சைடையானில் ராட்சத சுறாவுடன் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல மிகப்பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையானில் ரஜினி அப்பா, மகன் இரட்டை கேரக்டரில் வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. மேலும் படத்தில் சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். 3-டியில் வெளியாகும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட எந்த ஒரு மேட்டரும் இதுவரை மீடியாக்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் படம் குறித்து ஒரு புதிய தகவல் கசிந்திருக்கிறது. ஆமாம், இந்தப் படத்தில் ரஜினி ஒரு பிரமாண்ட சுறா மீனுடன் மோதுவது போன்ற காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு நிகராக காட்சிப்படுத்தியிருக்கிறாராம் டைரக்டர் செளந்தர்யா ரஜினிகாந்த். ஆனால் இதில் பெரும்பகுதி கிராபிக்ஸ்தான். என்றாலும் இந்தக் காட்சி ரசிகர்களை மிரளவைக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறது கோச்சடையான் டீம். http://dinaithal.com/cinema/16426-collision-with-shark-superstar-koccataiyan-expectancy-will-jump.html
 2. குத்துப்பாடல் ஒன்றுக்கு டி.ஆர்.ராஜேந்திரனுடன் ஆட்டம் போட முடியாமல் திணறினாராம் முமைத் கான். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் உருவான "ஆர்யா சூர்யா" படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறார் டி.ஆர். இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்தும் பாடியிருக்கிறார். இதன் படப்பிடிப்பானது சமீபத்தில் சென்னையில் நடந்தபோது டி.ஆரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி போனராம் முமைத் கான். முதல் நாள் ஆட்டத்திலேயே திணறிய அவர், இரண்டு நாட்கள் கழித்து ஒருவழியாக ஆடி முடித்து விட்டாராம். இது குறித்து முமைத் கான் கூறுகையில், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், முன்னாள் நாயகன் ஒருவருடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். இதற்கு காரணம் இந்த வயதிலும் டி.ஆர் தனது நடனத்தில் இளவட்டமாக உள்ளார் என கூறினாராம். -தின இதழ் செய்தி குழு http://www.dinaithal.com/cinema/16398-d-r-unable-to-cope-with-the-tinariya-mumait-khan.html
 3. ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் துரோனம்ராஜு ரவிகுமார் கூறும்போது, கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு' பட டிரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு சென்சார் குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ் அளித்துள்ளனர். எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு, பிலிம்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு அளித்திருக்கிறோம் என்றார். இதற்கு பதில் அளித்த பட இயக்குனர் மலினேனி கோபிசந்த் கூறும்போது எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்போம். படத்தை சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம் என்றார். http://dinaithal.com/cinema/16276-srutihacan-film-the-sudden-anti-brahmin-association.html
 4. துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். முன்னதாகத் தலைவர்களைப் பற்றிய லேசர் வரைகலையில் பிரபாகரன் காட்டப் படாததில் ஏற்கனவே பலர் அதிருப்தியில் இருக்க, புரட்சித் தமிழன் மற்றும் ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய சத்யராஜ் மட்டும் விதிவிலக்கா என்ன..? மேடையில் ஏறிய அவர், ” உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்… நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!” என்கிற தனது ஆதங்கத்தினை வெளிபட்டுத்தினார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16266:pirapakaranai-knight-peerless-leader-why-not-parliamentary-katuppakiya&catid=39:cinema&Itemid=107
 5. துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆடியோ சி.டி.யை நடிகர் விஜய் வெளியிட்டார். நாளை நடிகர் விஜய்-ன் பிறந்தநாள் என்பதால் விழாவில் அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விஜய் தன் ரசிகர்களுக்கு தலைவா பாடல்களை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். படவிழாவில் கலந்து கொண்ட சத்யராஜ், இயக்குனர் விஜய் தென்னிந்திய 'ஜேம்ஸ்கேமரூன்' என்று புகழாரம் சூட்டினார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16251:vijay-s-boss-audio-release&catid=39:cinema&Itemid=107
 6. அரசியலுக்குள் நுழையத் தயாராகிவிட்டாராம் நமீதா. அவர் அரசியல் சேவையாற்றப் போகும் கட்சி பாஜக. படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டாத நமீதா சொந்தப் படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று ஓரமாக வைத்துவிட்டு, வேறொரு முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் நமீதா. அது அரசியல். சமீபத்தில் இரு பெரிய தேசிய கட்சிகள் அவரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றில் காவிக் கட்சிதான் நமீதாவை அள்ளிக் கொண்டு போவதில் அதிக ஆர்வம் காட்டுகிறதாம். தமிழக பாஜகவை வலுப்படுத்தப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஐடியா இது என்கிறார்கள். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதாவும், சீக்கிரமே தமிழக மேடைகளில் தோன்றி மச்சான்ஸ் ஆதரவை பாஜகவுக்குக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16166:add-strength-to-the-bjp-and-modi-kalamir-namitha-glamor&catid=39:cinema&Itemid=107
 7. நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன. அவரது காமெடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது காமெடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து காமெடி செய்திருந்தார் வடிவேலு. தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16154:civakarttikeyan-natpirk-merged-with-the-story&catid=39:cinema&Itemid=107
 8. பொதுவாக தமிழ் திரையுலகில் ஹீரோயினுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார். அல்லது டிவி சீரியல், அக்கா, அண்ணி வேடங்களில் நடிகக் போய்விடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் திருமணம் ஆனாலும் ஹீரோயின்களாக வலம் வருவார்கள். இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் வந்துவிட்டது. கரீனாகபூர், ஐஸ்வர்யாராய் போன்றோர் திருமணம் ஆனபின்பும் ஹீரோயின்களாக அதுவும் கிளாமராக நடிக்க தயங்கியதில்லை. தற்போது இந்த கலாச்சாரத்தை சினேகா கோலிவுட்டில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கவர்ச்சி வேடங்களில் அக்கறை காட்டாத சினேகா, தற்போது படு கவர்ச்சியாக நடிக்க முன்வந்துள்ளார். இவரது முடிவு பிரசன்னாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தற்போது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள சினேகா, படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அவரது கவர்ச்சி போஸ்களை பார்த்து திருப்தியடைந்த இயக்குனர், அவரது சம்பளத்தையும் உயர்த்த தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்தாராம்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16106:sneha-sexy-waiting-in-the-mix-prasanna-shock&catid=39&Itemid=107
 9. இந்திபட நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் இலங்கையில் 70 வயது சிரானி சமரசேகராவும் ஒருவர். ஷாருக்கான் மீது சிரானி பைத்தியமாக இருப்பதை அறிந்த அவரது மகன், தனது தாயின் 70 வது பிறந்தநாள் அன்று ஷாருக்கானை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினர். இதற்காக அவர் ஷாருக்கானின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஷாருக்கை சந்திப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து தனது தாயார் சிரானி சமரசேகராவுடன் இந்தியா வந்தார். ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது ஷாருக்கான் தனது 70 வயது இலங்கை ரசிகையை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த சிங்கள இனத்தவரின் பிறந்தநாளை ஷாருக்கான் கொண்டாடியது தமிழ் அமைப்புகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுக்கு தமிழ் ரசிகர்கள் பலர் உள்ளனர். அதை மனதில் வைத்து அவர் செயல்பட வேண்டும் என்றும், மேலும் அவருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16107:shah-rukh-khan-celebrated-the-birthday-with-fans&catid=39:cinema&Itemid=107
 10. "கண்ணா லட்டு தின்ன" ஆசையா படத்தின் வெற்றி காரணமாக பவர் ஸ்டாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த இயக்குனர் இராம.நாராயணன் பவர் ஸ்டாரை நாயகனாக்கி “ஆர்யா சூர்யா” என்ற படத்தை இயக்கினார். படமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், மோசடி வழக்கில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். இதனால் தற்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில் இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும் இதில் பவர் ஸ்டார் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டி.ஆருக்கு கிடைத்திருக்கிறது. அவரையே நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இராமநாராயணன். டி.ஆரே பாடலாசிரியர், பாடகர் என்பதால் அந்த பாட்டை நீங்களே எழுதி பாடிவிடுங்கள் என்று சொல்ல படு உற்சாகமாக இருக்கிறாராம் டி.ஆர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16046:star-power-ranked-tr&catid=39:cinema&Itemid=107
 11. கடந்த 1993ம் ஆண்டில் வெளிவந்த மணிச்சித்திரத்தாளு என்ற படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர். தற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை. ஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படமும் சூப்பர்ஹிட் வெற்றிப்படமானது. இந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார். கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஷோபனா கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல் சந்திரமுகி இரண்டாம் பாகமும் வருமா? அதிலும் ரஜினிகாந்த் நடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16022:will-chandramukhi-2-again&catid=39:cinema&Itemid=107
 12. கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்கு முன் 1981-ம் வருடம் வெளிவந்த தில்லுமுல்லு திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்கள் 32 பற்களும் தெரிய சிரித்து மகிழ, பத்ரி இயக்கத்தில் மிர்சி சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது! முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. மிர்சி சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்பு நேர்காணலுக்கு, சிவாவை தன் உறவு என காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைக்கிறார். முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது ரூட்டிலேயே போய் கவிழ்த்து, கவர்ந்து... நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை கைப்பற்றும் சிவா, அதை தக்க வைத்துக்கொள்ள போடும் டபுள் ஆக்டிங்கும், நான்வெஜ் பார்ட்டியான தற்காப்பு கலை தெரிந்த தம்பி கங்கு-லீன்னும் டிராமாவும் அவர்மீது பிரகாஷ்ராஜின் மகளும் நாயகியுமான இஷா தல்வாருக்கு ஏற்படும் காதலும் கலாட்டாவும்தான் தில்லுமுல்லு படத்தின் லொள்ளு ஜொல்லு கதை மொத்தமும். முருகபக்தர் பசுபதி - கராத்தே கங்கு-லீ என இருவேறு கெட்-அப்புகளில் மிர்சி சிவா செம பில்டப் காட்டி நடித்திருக்கிறார். பலே, பலே! அதிலும் தீவிர முருகபக்தரான உங்களுக்கு பசுபதிங்கற பெயர் தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருக்கிறதே...?! என பிரகாஷ்ராஜ் இன்டர்வியூவுக்கு வந்த சிவாவிடம்  திடீரென  கேட்குமிடத்தில், விக்கித்துப்போகும் சிவா, ஒரு சில நொடிகளில் சமாளித்துக்கொண்டு பசுபதிங்கற பெயருக்குள்ளே முருகனின் ஆறுபடை வீடும் அடங்கியிருக்குன்னுதான் எனக்கு அந்தப்பெயரே வச்சாங்க... என்று ப-பழனி, சு-சுவாமிமலை, மீண்டும் ப-பழமுதிர்சோலை, கடைசி தி-யில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணின்னு 3 படை வீடுகளும் ஒட்டு மொத்தமா அடங்கியிருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பீல் - பீல் பண்ணிக்குங்கன்னு கொடுப்பாரு பாருங்க ஒரு விளக்கம். தியேட்டரில் அதில் ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் சீன் பை சீன் தொடர்ந்து க்ளைமாக்சிலும் தொற்றிக்கொள்வது தில்லுமுல்லு படத்திற்கு மட்டுமல்ல, சிவாவிற்கும் பிளஸ்! பழைய தில்லுமுல்லுவில் தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை இதில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருக்கிறார். சவாலான பாத்திரம் என்றாலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் மனிதர். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்து மனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா, முருக அடிமை என நம்பி அவர் காலில் விழும் இடங்களில் பிரகாஷ்ராஜ், சிவாவை மட்டுமல்ல, தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் என்றால் மிகையல்ல! கோவை சரளா, அலகும் பேசமுடியாத வாயுமாக கிளப்பி இருக்கிறார். கதாநாயகி இஷாதல்வார் கொஞ்சகாலம் தமிழ் சினிமாவில் கிளாமராக காலம் தள்ளுவார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா எல்லாரும் படம் முழுக்க இருந்தாலும் க்ளைமாக்சில் வரும் சந்தானம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார். லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு அழகு அருமை! எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தில்லுமுல்லு பாடலுக்கு அவர்கள் போடும் ஆட்டமும் இளமை புதுமை! படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்புகளில் பழைய தில்லுமுல்லுவில் இருந்து முற்றிலும் புதுமையாக நிறைய யோசித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தாலும் பழைய ராகங்கள் பாடலை அப்படியே வைத்திருக்கும் இடத்தில் இயக்குநர் பத்ரி நின்றிருக்கிறார் வென்றிருக்கிறார் . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=68&Itemid=145
 13. இனமான தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15895:mani-died-political-leaders,-actors,-actresses-tribute-150-pics&catid=39:cinema&Itemid=107
 14. பட வாய்ப்ப்புகள் இல்லாமல் கிடைக்கிற படங்களை கமிட் செய்து நடித்து வரும் ஸ்ரேயா தற்போது பவித்ரா என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படம் தமிழில் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற டைட்டிலில் டப் ஆகிறது. ஸ்ரேயாவை இதுவரை மாடர்ன் ட்ரெஸ்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது கேரக்டரும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்பதால் தமிழில் டப் செய்கிறார்கள். இதற்கிடையே இந்தப்படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்ததைப் பற்றி வாய் திறந்திருக்கும் ஸ்ரேயா “விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். மேலும் இதுகூறித்து அவர் கூறும்போது : இதுபோன்ற கேரக்டர்களில் தான் நடிப்பில் ஸ்கோர் பண்ண முடியும். இந்த படத்தில் விலைமாதுகளுக்கே உரிய செக்ஸியான நடிப்பை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அது ரசிகர்களுக்கு அறுவறுப்பை தராது. மேலும், இந்த பவித்ராவில் நான் விலைமாதுவாக நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பான கேரக்டரில் நான் நடித்ததைப் போல முகம் சுழிக்கிறார்கள். அப்படி ஒன்றும் மோசமான கேரக்டரில் நான் நடிக்கவில்லை. இவ்வாறு ஸ்ரேயா கூறியிருக்கிறார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15802:what-s-wrong-with-prostitute-character-in-the-film-asks-shreya-what-s-wrong-with-prostitute-character-in-the-film-asks-shreya&catid=39:cinema&Itemid=107
 15. கமல் இயக்கி நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் காஜல் அகர்வாலிடம் கால்சீட் பேசி வந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை வெளியில் சொல்ல மறுக்கும் காஜல், தன்னிடம் அதுபற்றி விசாரிப்பவர்களிடம், அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு படம் இருப்பதால் என்னால் கால்சீட் தர முடியவில்லை என்று சொல்லி சமாளித்து வருகிறார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா(குத்து படத்தில் நடித்த ரம்யாதான் இந்த திவ்யா ஸ்பாந்தனா) அல்லது லேகா வாஷிங்டனை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். அதிலும் திவ்யா ஸ்பாந்தனாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்தாம் இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்குகிறது. கமல் இயக்குவதால் தனது படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளை அவர் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். சிம்பு, தனுஷ், சூர்யாவுடன் நடித்த திவ்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட் தான்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15747:kamal-pair-kajal-ramya-stab-at-answering&catid=39:cinema&Itemid=107
 16. பாலிவுட் நடிகை ஜியாகானின் மறைவிற்கு நீதி கிடைக்க வேண்டி போராட பேஸ்புக்கில் ஒரு பக்கம் உருவாக்க பட்டுள்ளது. சொந்த வாழ்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களால் மன விரக்திக்கு உள்ளான அவர் சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று "Justice for Jiah Khan", (URL:https://www.facebook.com/Justice.For.Jiah.Khan). என்ற பக்கம் துவங்கப்பட்டு உள்ளது. இது செய்தி மற்றும் இணையதளம் மூலம் எடுக்கப்படும் ஒரு முயற்சி ஆகும். அநேக திரை உலக கலைஞர்களும் ஊடகவியலாளர்களும் இதனைப்பெரிதும் ஆதரிக்கின்றனர். ஜியா கானின் மரணமானது யாரும் எதிர் பாராதது என்றும், நொடியில் திடீர் என்று நடந்து முடிந்து விட்டது என்றும் அந்தப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் ஒரு தைரியமான பெண்மணி என்று அவரது கண்களை உற்று பார்க்கும் பொழுதே அவரது உறுதி தெரியும் என்றும் கூறப்பட்டு உள்ளது..எனவே நீங்கள் இந்த பக்கத்தை "LIKE" செய்யுங்கள், மற்றும் உண்மையை உறுதிப்படுத்த உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.. -தின இதழ் செய்தி குழுhttp://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15753:jiyakan-death-to-justice-facebook-in-one-page&catid=39&Itemid=107
 17. உடுமலை ஒன்றியப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், முதல்வகுப்பு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில், ஆங்கில வழி கல்வி வகுப்பு துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு ஒன்றியங்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்து பட்டியல் வழங்க உத்தரவிட்டது. இதற்கான கருத்துரும் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டன. உடுமலையில், காமராஜ் நகர், கண்ணமநாயக்கனூர், பெரியவாளவாடி, எலையமுத்தூர், சிவசக்தி காலனி, சுண்டக்கம்பாளையம், சின்ன பூலாங்கிணர், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளில் முதல் வகுப்பு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. பெரியகோட்டை ஊராட்சி காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் மற்றும் முதல்வகுப்பு ஆங்கில வழி கல்வி துவக்க விழா நடந்தது. ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மரகதம் வரவேற்றார். உதவித்தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி ஆங்கில வழி கல்வி வகுப்பினை துவக்கி வைத்தார். பள்ளி கல்விக்குழு தலைவர் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15739%3Aenglish-began-in-aracuppallikal-valikkalvi&catid=167%3Atirupur&Itemid=101
 18. பெரும்பாளும் இயக்குநர் கவுதம் மேனனின் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதில் தவியாய் தவிப்பார்கள் ஹீரோயின்கள். ஏன் எனில் அவரது திரைப்படங்கள் எல்லாம் கதநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சமுள்ள படங்களாக இருக்கும். இந்நிலையில் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா. ஏற்கனவே கவுதம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து அசத்தியவர் த்ரிஷா, இதனால் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதில் த்ரிஷா நடிப்பது 50 சதவீதம்தான் உறுதியாகியுள்ளது. காரணம், பட ஹீரோயின் வேடத்துக்காக அமலா பால் பொருத்தமாக இருப்பார் என்றும் யூனிட்டில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். அதனால் அமலா பாலிடம் கவுதம் தரப்பில் பேசப் பட்டுள்ளதாம். இது குறித்து அமலா பால் டுவிட்டரில் குறிப்பிடும்போது, நான் எதிர்பார்த்திருந்த நேரம் வந்துவிட்டது. முக்கியமான வாய்ப்பை நான் பெறப்போகிறேன். உறுதியானதும் அது பற்றி விவரமாக சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதை அறிந்து த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், கவுதம் தரப்பிலிருந்துதான் அவரிடம் பேசப்பட்டதாம். அதனால் எப்படியும் இந்த வாய்ப்பை பெற வேண்டும் என போட்டி களத்தில் குதித்திருக்கிறார் த்ரிஷா. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15726:trisha-to-pair-with-surya-the-conflict-amalap&catid=39:cinema&Itemid=107
 19. நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நாளை நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம். விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிரகக்பிரவேச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானிதான் சிம்புவை கைப்பிடிக்கும் மணப்பெண்ணாக இருக்கக்கூடுமோ? என சினிமா வட்டாராங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு விடை நாளை தெரிந்து விடும். வாலு என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15722:actor-simbu-married-soon,-girl-s-name-will-be-announced-at&catid=39:cinema&Itemid=107
 20. ராம்சரண் தேசா மற்றும் ஸ்ருதி ஹாசன் மெயின் கேரக்டரில் நடிக்கும் ஏவடு என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க எமி ஜாக்சன் புக் ஆகியுள்ளார். சுவிட்சர்லாந்து கடற்கரையில் எமிஜாக்சன் மற்றும் ராம்சரண் இருவரும் கடற்கரையில் நடித்த பாடல் காட்சி ஒன்று சென்ற வாரம் படமாக்கபட்டது. இந்த பாடலில் படுகவர்ச்சியாக நீச்சலுடையில் நடித்து கலக்கியிருக்கிறார் எமி ஜாக்சன். அவருடைய காஸ்ட்யூமை பார்த்து ராம்சரணே அதிர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தனது கவர்ச்சியால் தெலுங்கு படவுலகை ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எண்ணத்தில் திடீரென மண் அள்ளிப்போட்டிருக்கிறார் எமிஜாக்சன். இதனால் தனக்கும் ஒரு கவர்ச்சியான பாடல் வைக்கும்படி இயக்குனர் வம்சியை இம்சித்து வருகிறார். எமிஜாக்சனின் சுவிஸ் நாட்டு நீச்சலுடை புகைப்படங்கள் தற்போது டோலிவுட்டை கலக்கி வருகிறது.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15693:emi-in-swimsuit-jackson-swiss-srutihacan-on-the-beach&catid=39:cinema&Itemid=107
 21. சிங்கமுத்துவை தவிர தன் பழைய கூட்டத்தை அப்படியே மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட்டாராம் !வடிவேலு. 'இந்திரனே... சந்திரனே...' ஜால்ராக்களும் கூடவே செட்டுக்குள் இறக்கப்பட, தெனாலிராமன் ஷுட்டிங் எங்கிலும் ஒரே ஜிங்சாக் சப்தம்தான் என்கிறார்கள். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கும்போது 'பங்காளி பங்காளி' என்று வடிவேலுவும், தம்பி ராமய்யாவும் பாசத்தோடு பழகி வந்தார்கள். படம் பப்படா என்றானதும்தான் தனது சொந்த வாயை திறந்து சோக கீதம் வாசித்தார் தம்பி. 'என்னைய ஷுட்டிங் எடுக்கவே விடல என்னோட பங்காளி. அவரே ஷாட் வச்சார். அவரே டயலாக் சொல்லிக் கொடுத்தார். அவரே மானிட்டர் பக்கத்துல ஒக்கார்ந்து சரி தப்பு சொல்லிக்கிட்டு இருந்தார்' என்று இவர் சொல்ல சொல்ல, படத்தின் தோல்வி செய்தி அப்படியே வடிவேலு தோளில் ஏறிக்கொண்டது. சேஃப் ஆக வெளியே வந்த தம்பி ராமய்யா தேசிய விருது வரைக்கும் போய்விட்டார். போகட்டும்... வடிவேலுவின் தற்போதைய நிலைமை எப்படி? மீண்டும் மானிட்டர் பக்கத்தில் உட்கார்ந்து மைக்கில் உத்தரவுகளை போடுகிறாராம். அப்படின்னா படத்தின் டைரக்டர் யுவராஜ்? ரிலீசுக்கு பிறகு தம்பி ராமய்யா மாதிரி பேட்டி கொடுப்பாரோ என்னவோ?http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15659:intirane-cantirane-vadivelu-jincak-around&catid=39:cinema&Itemid=107
 22. பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஜியா கானுடன் கடைசியாக அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) பேசியது தெரியவந்தது. ஜியா கானும், சூரஜ் பஞ்சோலியும் நெருங்கி பழகியதாகவும், அந்த நட்பு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கடந்த 4-ம் தேதி சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஜியா கானும், அவரது தாயாரும் எங்கள் நண்பர்கள் என்று கூறிய ஆதித்யா பஞ்சோலி, ஜியா தற்கொலை விஷயத்தில் தன் மகனை வில்லன் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜியா கான் தற்கொலைக்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தை அவரது பெற்றோர் போலீசில் அளித்தனர். 6 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில் ஜியா கான் கூறியிருப்பதாவது:- இந்த கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் இந்த உலகத்தைவிட்டு சென்றிருப்பேன். நான் மிகவும் உடைந்துபோய்விட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு என்னை உன்னிடம் இழந்தேன். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதாக கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டாய். பார்ட்டிகளும், பெண்களும்தான் உன்னுடைய வாழ்க்கையாக இருக்கிறது. நீயும், என் வேலையும்தான் என்னுடைய வாழ்க்கை. நான் இந்த உலகத்தில் இருந்தால் உன்னிடம் கெஞ்சுவேன், உனக்காக ஏங்குவேன். எனவே, நான் போகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் சூரஜ் பஞ்சோலியை குறிப்பிட்டுத்தான் அவர் எழுதியிருப்பதாக அவரது தாயார் ரபியா கான் தெரிவித்தார். அதன் அடிப்படையில், சூரஜ் பஞ்சோலியிடம் போலீசார் இன்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர். ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரே பாட்டீல் உறுதி செய்தார். கைது செய்யப்பட்டுள்ள சுரஜ் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15632:zia-khan,-a-sudden-twist-in-the-case-of-suicide-suraj-arrested-pancoli&catid=39:cinema&Itemid=107
 23. விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே காமெடி கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. காமெடி கேரக்டரில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார். Share this posthttp://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15588:kamal-s-new-film-optimal-villain-lingusamy-produced&catid=39&Itemid=107
 24. தொடர்ந்து பெருத்துக் கோண்டே போகும் உடம்பால் அப்செட்டாகியிருக்கும் ஹன்ஷிகா மோத்வானி தற்போது தீவிர எடைக்குறைப்பில் இருக்கிறாராம். எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் படங்களில் நடித்தபோது அநியாயத்துக்கு பெருத்துப் போயிருந்தார் நடிகை ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கூட அவரைப் பார்த்த எல்லோரும் ‘குட்டி குஷ்பு’ போல இருக்கிறார் என்று சொல்ல ரொம்பவே குஷியான ஹன்ஷிகா அந்த சந்தோஷத்திலேயே உடம்பை இன்னும் கொஞ்சம் பெருக்க வைத்தார். ஆனால் அதைப்பார்த்த சில டைரக்டர்கள் இப்போ உங்களைப் பார்த்தா ‘குட்டி குஷ்பு’ மாதிரி இல்ல.., ‘குண்டு ஆன்ட்டி’ மாதிரி இருக்கீங்க என்று அவரிடம் நேரடியாகவே சொல்லத்தொடங்கி விட்டார்களாம். இதனால் தனது உடல் எடை பெருத்து விட்டதை புரிந்து கொண்ட ஹன்சிகா, தற்போது சில மாதங்களாக சாப்பாட்டில் கட்டுப்பாடு, ஜிம்முக்குச் சென்று தீவிரமாக உடற்பயிற்சி என்று தொடர்ந்து உடல் எடைக்குறைப்பில் கவனமாக இருக்கிறாராம். அதனாலோ என்னவோ சுமார் 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து சூர்யாவுடன் சிங்கம்-2 படத்தில் நடித்திருக்கிறார் ஹன்ஷிகா. சிங்கம் 2 படத்தில் ஹன்சிகாவை, சூர்யா அலேக்காக தூக்கிக்கொண்டு ஸ்கூல் கிரவுண்டில் ஓடி வருவது போல் ஒரு காட்சியை படமாக்கினாராம் டைரக்டர் ஹரி. ஆனால், ஹன்சிகா உயரத்திற்கேற்ற நல்ல வெயிட்டான உடல்வாகு கொண்டவர் என்பதால், அவரை தூக்குவதற்கு ரொம்பவே சிரமப்பட்டாராம் சூர்யா. என்றாலும், இப்போது நான் முன்பை விட எடையைக் குறைத்து விட்டேன் என்று ஹன்ஷிகா சொன்னதால கஷ்டப்படாமல் அவரை தூக்கிக் கொண்டு ஓடினாராம் சூர்யா. இனியும் நம்மோடு ஹீரோவாக நடிக்கும் எந்த ஹீரோவுக்கு இந்தமாதிரியான ஒரு பிரச்சனை வரக்கூடாது என்று யோசித்த ஹன்ஷிகா தற்போது மீண்டும் ஒரு 5 கிலோ வரை எடையைக் குறைக்க திட்டமிட்டு வருகிறாராம். அப்படியே உங்க சம்பளத்தையும் கொறைச்சீங்கன்னா ஒரு நாலு புரொடியூசர்ஸ் நல்லாருப்பாங்க...மேடம்http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15581:bomb-anti-became-a-petty-khushboo-hansika-in-extreme-etaikkuraip&catid=39:cinema&Itemid=107
 25. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு சென்னை திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிட்டனர். அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்த தேர்தலில் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், விசுவுக்கு 556 வாக்குகளும் கிடைத்தது. 716 வாக்குகள் வாங்கிய விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15543:vikkiraman-union-election-victory-in-a-match-with-the-director-vicu&catid=39:cinema&Itemid=107