• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

chinnavan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  2,863
 • Joined

 • Last visited

Everything posted by chinnavan

 1. இம்சை அரசன், இரும்புக்கோட்டையில் முரட்டு சிங்கம் என தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு வீறு நடை போட்ட டைரக்டர் சிம்பு தேவனுக்கு கோடம்பாக்கத்து மார்க்கெட்டில் இது கடையடைப்பு நேரம்! மீண்டும் வடிவேலுவை வைத்து அவர் இயக்க நினைத்தாலும் புயலின் கதவு மூடியே கிடப்பதால் வேறு யார் யாரையோ சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இவரிடம் சிஷ்யனாக பணியாற்றிய டைரக்டர் பாண்டிராஜே 'நான் உங்களுக்கு வாய்ப்பு தர்றேன். என் தயாரிப்பில் நீங்க படம் இயக்குங்க' என்றாராம். ஆனால் ஹீரோ கிடைக்க வேண்டுமே! அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் சிவகார்த்திகேயனை அழைத்த பாண்டி, 'சிம்புதேவன் படத்துல நடிச்சுக் கொடுங்க. நான்தான் தயாரிக்கிறேன்' என்று சொல்ல முள்ளு கரண்டியால பல்லு விளக்குன நிலைமைக்கு ஆளாகிவிட்டார் சிவா. 'யாரு படத்துல வேணும்னாலும் நடிக்கிறேன். சிம்புதேவன் மட்டும் வேணாம், ப்ளீஸ்' என்றாராம். எங்கேயோ கீறி எப்பவோ ரத்தம் வந்துருக்கணும். இல்லேன்னா எதுக்கு இப்படியொரு பதில்? http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15538:who-want-civakarttikeyan-hands-and-and&catid=39:cinema&Itemid=107
 2. சந்தானம் ஜோடியாக விசாகா நடித்த கண்னா லட்டு தின்ன ஆசையா படத்தை அடுத்து மீண்டும் அதே ஜோடியயை வைத்து சாய் கோகுல் நாம்நாத் என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம், விசாகாவுடன் மற்றொரு ஹீரோயினாக சூது கவ்வும் படத்தின் விஜய் சேதுபதியின் கற்பனைக் காதலியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இதில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறாராம். விசாகா மனநோயாளியாகவும், சந்தானத்தின் காதலியாகவும் வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். காதல், காமெடி செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக இது அமைகிறது என இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15479:in-the-re-join-the-young-king-santhanam-vishaka&catid=39:cinema&Itemid=107
 3. வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷியோடு வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, வடிவேலோ அதுபற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏழரையைக் கூட்டிக் கொண்டு அளப்பறையைக் கொடுக்கிறாராம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வடிவேலு தமிழ்சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகிறார் என்றதும் ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சந்தோஷம் இன்னும் ஒரு மாசம் கூட நீடிக்காது போலிருக்கிறது. காரணம் அந்தளவுக்கு வடிவேலுவின் அளப்பறை ஓவராக இருக்கிறதாம். யுவராஜ் டைரக்ட் செய்து வரும் 'கஜபுஜராஜ தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கும் வடிவேலு சமீபத்தில் தான் அந்தப்பத்துக்காக ஒரு பாடலையும் பாடினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து முடித்ததும் வீட்டுக்கு போகாமல் அங்கே டேரா போட்டுக்கொண்டு தங்கி விடும் வடிவேலு அந்த இடத்தை விட்டு நகர்வதே இல்லை. மாறாக மற்ற ஆர்டிஸ்டுகள் நடிப்பதை வேடிக்கைப் பார்த்து என்ன நீ இப்படி நடிக்குற?, ஏன் இவ்ளோ கேவலமா மேக்கப் போட்டுருக்க..? என்று சக நடிகர்களுடன் ஏழரையைக் கூட்டுவதோடு, படத்தின் ஸ்கிரிப்டிலும் எக்கச்சக்கமா மூக்கை நுழைக்கிறாராம். ஆனால் பெரிய அளவில் ஹிட்டாகாத 'பட்டாபட்டி' படத்திற்குப் பிறகு இந்த படத்தையே பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கும் டைரக்டர் யுவராஜோ வடிவேலுவின் இந்த நடவடிக்கைகளை பார்த்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கிக் கிடக்கிறார். சரிதான் சைத்தான் சைக்கிள்ல வருது... http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15469:the-story-on-the-shooting-spot-alapparaiyai&catid=39:cinema&Itemid=107
 4. தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ஹன்சிகா மோத்வானி. தமிழ் திரையுலகில் சிவ கார்த்திகேயனுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணாவிட்டாலும் இவர் கொடுத்த அனைத்துபடங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் தான் என்னமோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண்டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது சிவா கார்த்திகேயனுக்கு தமிழில் சிங்கம் 2 ,தீயா வேலை செய்யணும் குமாரு . இந்த படங்களத் தொடர்ந்து ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டு வந்த ஹன்சிகாவுக்கு ஏ.ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் டைரக்டராக பணி புரிந்த திருக்குமரன் இயக்கும் படத்தில், முருகதாஸின் ஸ்க்ரிப்ட்டில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஹன்சிகா மோத்வானி. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15394:combined-with-civakarttikeyan-small-khushboo-hansika&catid=39:cinema&Itemid=107
 5. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐ.பி.எல் போட்டியிலிருந்து நீக்குவது குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் ஜூன் 10ந் தேதி கூடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஐ.பி.எல் சூதாட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இழந்ததாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அணியின் மற்றொரு உரிமையாளரும், குந்தராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கப்படும் என விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து நீக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தன் மீது கூறப்படும் சூதாட்ட புகார்களை ஷில்பா ஷெட்டி மறுத்துள்ளார். இதனிடையே அவரது கணவர் ராஜ் குந்தரா விரைவில் கைது செய்யப்படுவார் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15393:rajasthan-royals-ipl-match-nikkappatuma-from-bcci-the-meeting-of-the-emergency-committee&catid=40:sports&Itemid=108
 6. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா. கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார். சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், "ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொன்னார். காரில் சென்றால் தாமதமாகும் என கருதி பைக்கிலேயே போய்விட்டோம். நாங்கள் அப்படி வந்ததைக் கேட்டு... 'ஏன் ஏன் இப்படி?' என்று கேட்ட ரஜினி, பின்னர் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை கேட்டு சந்தோஷப்பட்டார். படம் நல்லா வரும்னுதான் தோணுது என்றார். 'சரி.. என்னென்ன பாடல்களை யூஸ் பண்ணப் போறீங்க?" என்று கேட்டார். `தில்லு முல்லு தில்லு முல்லு' மற்றும் `ராகங்கள் பதினாறு உருவான வரலாறு' பாடல்களை பயன்படுத்தப் போவதாகக் கூறியதும், "சூப்பர்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ராகங்கள் பதினாறு.." என்று கூறி வாழ்த்தினார். இந்தப் படம் பெரிய அளவில் வரும் என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்," என்றார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15383:tillu-mullu-why,-why-heard-that-rajini&catid=39:cinema&Itemid=107
 7. கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலும் அவர் மீது மோசடி வழக்குகள் குவிந்துள்ளன. தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களிலும் வழக்கு பாய்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அடுத்து ஆந்திர மாநில போலீசாரும், அவரை பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழகத்தை பொறுத்தமட்டில் ரூ.7 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், வெளிமாநில வழக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் பல கோடிகளை அவர் ஏப்பம் போட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரது 2-வது மனைவி ஜுலி, 3-வது மனைவி துரியா ஆகியோரும் வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யவும் போலீசார் குறி வைத்துள்ளனர். அனுமார்வால் போல, பவர்ஸ்டார் மீது புகார்களும், வழக்குகளும் தொடர்ந்து முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. அவர் முக்கிய அரசியல் கட்சியின் பெயரையும், முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, மிரட்டி மோசடி லீலைகளில் ஈடுபட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பவர்ஸ்டார் மீது குண்டர் சட்டமும் பாய தயாராகிறது. அதற்கான முன் ஏற்பாடுகள் நடக்கின்றன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15377:srinivasan-pavarstar-thug-on-the-points-of-law-in-the-name-of-the-actor-threatened-flows&catid=39:cinema&Itemid=107
 8. கல்கி பட கதாநாயகி நடிகை ஸ்ருதி தன்னுடன் கல்வி பயின்றவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தென்கன்னட மாவட்டம் புத்தூரைச் சேந்தவர் பிரியதர்ஷினி (எ) ஸ்ருதி. இவர் 1990-ல் வெளியான கன்னட திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமாரின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் இயக்குனரும், நடிகருமான துவாரகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி என்கிற படம் வெற்றி அடைந்தயடுத்து அதில் கதாநாயகியாக நடத்ததால் பிரியதர்ஷினி என்ற தனது பெயரை ஸ்ருதி என்று மாற்றி கொண்டு, தமிழில் பாலசந்தரின் கல்வி உள்பட மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் , ஒரு குழந்தை பெற்றெடுத்தப்பிற்கு, ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தன்னுடன் இளம் வயதில் படித்த பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான சந்திரசேகர் (எ) சந்திரசூட சக்ரவர்த்தியை இன்று வியாழக்கிழமை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அவரது மகள் கௌரி புகைப்படம் எடுத்தார். வயது முதிர்ச்சி இல்லாததால் திருமணத்திற்கு கௌரியிடம் ஒப்புதல் பெறவில்லை என்று ஸ்ருதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15371:was-married-to-actress-shruti&catid=39:cinema&Itemid=107
 9. நண்டு கொழுத்தா வலையில தங்காது.. வாய் கொழுத்தா வாழ்க்கை தங்காதுன்னு சொல்வாங்க… அது சிலர் விஷயத்தில் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. சின்மயி விஷயத்தில் இது எப்படி என்று கீழ் வரும் அவரது பேஸ்புக் ஸ்டேடஸைப் படித்துவிட்டு சொல்லுங்கள்… ட்விட்டர், பேஸ்புக்கில் குழாயடிச் சண்டை நடத்தி, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமைதியாக இருந்த சின்மயிக்கு, இப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன, பாடுவதற்கு. அந்த தைரியத்திலோ என்னமோ அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள சவால் ஸ்டேடஸைப் பாருங்கஷள்… “ஒரு வருடம் கூட ஆகல. தமிழ்நாட்டிலேந்தே துரத்த்தறேன், நீ பாடாம இருக்க அத செய்யறேன் இத செய்யறேன் ன்னு இந்த பேஜ் லயே வந்து மிரட்டினாங்க சில பேர். கடவுள் என்னையும் என் தாயாராயும் நல்லா காப்பாத்தி கொண்டுவருகிறார். ஹிந்தி தமிழ் தெலுகுல பாடல்கள் பாடி வருகிறேன், கடவுள் அனுக்ரஹத்துல. கடவுள் கால்ல மட்டும் தான் விழுந்தேன். வேற எந்த கஷ்டமும் எங்களுக்கு குடுக்கல. Marie Claire Influencers லிஸ்ட் மறுபடியும் கடவுள் எங்களுக்கு தந்த வரப்பிரசாதம். கடவுள் எங்கள கை விடவில்ல்லை தொடர்ந்து எங்களுடன் இருப்பார். வாச் திஸ் ஸ்பேஸ். திஸ் போஸ்ட் was for all the கார்டூநிஸ்ட்ஸ், raavans and whomsoever இட் மே concern..” -சின்மயி எழுதியதை அப்படியே இங்கு தந்திருக்கிறோம். அது சரி.. காத்துல யாருக்கு கத்தி வீசுறீங்க…!! http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15365:play-back-singer-chinmayi-is-again-gearing-up-for-word-of-war-after-few-months&catid=39:cinema&Itemid=107
 10. அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது. அதன்பிறகு விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் போனார். அதனால் தமிழ்சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்ன நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டால் உடனே மறுக்கிறார். “என்னைப் பொறுத்தவரை கிளாமருக்கு ஒருபோதும் நான் தடை சொன்னதில்லை. காரணம் என் உடல்கட்டுக்கு கிளாமர் உடைகள்தான் மேட்சாக இருக்கும். பையா படத்தில்கூட நான் மழையில் நனைந்தபடி ஆடிப்பாடிய பாடல்களைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள். அந்த வகையில், என்னால் முடிந்த வரை கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன். முழுக்க நனைந்த பிறகு யாராவது முக்காடு போட என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லும் தமன்னா, அஜீத் படத்தில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்க சொன்னாலும் ரெடியாக இருக்கிறேன்” என்கிறார் தமன்னா. தின இதழ் செய்தி குழு.. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15357:aviod-to-act-sexy-tamanna-boiling&catid=39&Itemid=107
 11. கொடிய போரில் ரத்தத்தில் தீக்குளித்த இலங்கை நாட்டின் மேப் போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இந்த புகைப்படம் உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் என பன்முக திறன் கொண்டவர். தற்போது இவர் 'இனம்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த போரின் போது அதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில மாதங்கள் இலங்கையில் இருந்து ஆய்வு செய்து இந்தப்படத்தை எடுத்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட கைரேகையினை இலங்கை மேப் போல வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் இப்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் போது போரில் பாதிக்கப்பட்ட அந்த சிறுவர்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார் சந்தோஷ் சிவன். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15272:battle-deadly-tikkulitta-blood-sri-lanka-poster-immersed-in-surprise&catid=39:cinema&Itemid=107
 12. ஹரியின் இயக்கத்தில், சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் நடப்பது போன்று கதை பண்ணியுள்ளார்களாம். அதனால் அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கதாபாத்திரம் தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம். இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அத்துடன் சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்ததும் ஆந்திராவுக்கு சென்று விட்டாராம். அதையடுத்து சிங்கம்-2வை படம் என்னாச்சு? ஏதாச்சு? என்பது பற்றிய விவரங்களை கேட்பதில்கூட அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அதேசமயம், ஹன்சிகாவோ, சேட்டை கவிழ்த்து விட்ட தன்னை சிங்கம்-2 கைகொடுத்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உற்சாகமாய் இருக்கிறார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15265:anushka-in-pain-hansika-excited&catid=39:cinema&Itemid=107
 13. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர். 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெற்ற பணம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கன்னட நடிகைகள் இருவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்தது. இதில் ஒரு நடிகையின் பெயர் சஞ்சனா அர்ச்சனா. மற்றொருவர் முன்னணி நடிகையாவார். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்த இருவரிடமும் மும்பை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- அந்த நடிகைகள் பற்றிய விவரங்களை மும்பை போலீஸ் சேகரித்துள்ளது. அவர்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர்கள். ஸ்ரீசாந்துடன் இந்த இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ஸ்பாட் பிக்சிங் குறித்து நடிகைகளிடம் விசாரணை நடத்த உள்ளோம். சம்மன் அனுப்பி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். பெங்களூரை சேர்ந்த சஞ்சனாவும் மற்றொரு கன்னட நடிகையும் ஸ்ரீசாந்துடன் நெருங்கி பழகி வந்தனர். இதன் காரணமாகவே மும்பை போலீசார் இருவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். 2009-ம் ஆண்டு கோவாவில் ஸ்ரீசாந்துடன் சஞ்சனா ஒன்றாக சுற்றி திரிந்து உள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாடிய புகைப்படங்கள் வெளியானது. மேலும் ஐ.பி.எல். போட்டி விருந்து நிகழ்ச்சியில் அடிக்கடி கலந்து கொள்வார். இதையெல்லாம் அவர் மறுத்துள்ளார். சஞ்சனா ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15231:sreesanth-close-to-the-actress-told-the-inquiry&catid=40:sports&Itemid=108
 14. நடிகைகள் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே அஞ்சலி 'ஊர்சுற்றி புராணம்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். அப்படத்தில் தற்போது நடிக்க மறுப்பதால் பாதியில் நிற்கிறது. ஸ்ருதிஹாசனுக்கும் தமிழ் படங்கள் கைவசம் இல்லை. ஆனால் இருவரும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்கள். அஞ்சலி பலுபு, கோல்மால் என இரு படங்களில் நடிக்கிறார். 'பலுபு' படத்தில் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகனாக ரவிதேஜா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பலுபு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் பங்கேற்றனர். ரவிதேஜாவுடன் அருகருகே இருவரும் அமர்ந்து இருந்தார்கள். பின்னர் ஸ்ருதிஹாசன் மேடையில் ஏறி ஒரு பாடலுக்கு ரவிதேஜாவுடன் இணைந்து நடனம் ஆடினார். கூட்டத்தினர் கைதட்டி ரசித்தனர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15195:srutihacan-in-telugu-film-festival,-anjali-movies&catid=39:cinema&Itemid=107
 15. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘சிங்கம் -2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நாளை ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 2010- ஆம் ஆண்டு ரிலீஸான ‘சிங்கம்’ படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் அந்தப்படம் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக்காகி வசூலில் சாதனை படைத்தது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டி டைரக்டர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை 'சிங்கம்-2' என்ற பெயரில் டைரக்ட் செய்துள்ளார். இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இதற்கிடையே 'சிங்கம் 2' படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நாளை 2-ஆம்தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையிலுள்ள பிரபல வர்த்தக மையமான நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் இந்த பிரம்மாண்டமான விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான், கன்னட நடிகர் சுதீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அஜய் தேவ்கான் ஹிந்தியில் தயாரான சிங்கம் படத்திலும் சுதீப் கன்னடத்தில் தயரான சிங்கம் படத்திலும் சூர்யா கேரக்டரில் நடித்தவர்கள். இவர்களைத் தவிர படத்தின் ஹீரோ சூர்யா, ஹீரோயின்கள் அனுஷ்கா, ஹன்ஷிகா மோத்வானி உட்பட படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். பிரபல நடிகர், நடிகைகள் நடனம், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சி என விழா ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டத்துடன் நடைபெற உள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15192:actors-and-actresses-with-the-kuttattat-singam-2-audio-release-movies&catid=39:cinema&Itemid=107
 16. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அல்லவா? இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் தீபிகா படுகோனேயுடன் பேச்சுவார்த்தை நடந்தது. முன்னணி நடிகைகள் பலரும் விஜய்யுடன் நடிக்க ஆவலுடன் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே தேதி இல்லை என்று கூறி மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு நடிகையை தேட ஆரம்பித்த முருகதாஸ், தீபிகா படுகோனேவுக்கு பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அப்படி அமையும்பட்சத்தில் விஜய், சமந்தா இணையும் முதல் படமாக இப்படம் இருக்கும். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15186:hey-r-murugadoss,-vijay-coalition-mating-samantha&catid=39:cinema&Itemid=107
 17. தொடர்ந்து தன்னைத் தேடி வருகின்ற எல்லா மொழிப்படங்களையும் அப்படியே கவ்விக் கொண்டு படங்களில் பிஸியாக நடித்து நயன் தாரா தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். ஆமாம், நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தாலும் அதில், அவருக்கு திருப்தியே இல்லையாம். காரணம் சமீபகாலமாக அவர் கமிட்டாகி நடித்து வரும் எல்லா படங்களிலும் அவரை ஒரு ஹெஸ்ட்ரோல் மாதிரி தான் பயன்படுத்துகிறார்களாம். அதே படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுக்குத் தான் முக்கியமான கேரக்டர்களை கொடுக்கிறார்களாம் டைரக்டர்கள். குறிப்பாக நயன்தாரா நடித்து வரும் "வலை படத்தில், டாப்சிக்கும், "ராஜா ராணி" படத்தில், நஸ்ரியா நஸிமுக்கும், ஹீரோக்களுடன் டூயட் ஆடும் கேரக்டர்களாம். மேலும் படத்தின் கதைகளும் கூட ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதைகளாக இருப்பதால் உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் நயன்தாரா இனிமேல், படங்களை கமிட் செய்யும்போது ஹீரோயின்களுக்கு அதிக வாய்ப்புள்ள கதையாக இருக்கும்படி, பார்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15180:dummy-only-pizza-i-have-the-movie-ultimate-tension&catid=39:cinema&Itemid=107
 18. நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல்வன், பம்பாய் படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் தனுஷ் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்காவில் மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மலையாளத்தில் தயாராகும் 'எடவபதி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், மனிஷா இதில் நடித்து கொடுக்க வருகிறார் என்றும் படத்தின் இயக்குனர் லெனின் ராஜேந்திரன் தெரிவித்தார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு பாதி முடிந்துள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15136:manisha-koirala-malayalam-film-stars&catid=39:cinema&Itemid=107
 19. ஐபிஎல். சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நடுவர் மும்பையில் உள்ள 2 நட்சத்திர விடுதியில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தரகர் விண்டூ தாரா சிங் கஜகஸ்தான் அழகிகளை சப்ளை செய்துள்ளார் என்ற தகவலும் விசாரணையில் வெளியாகியுள்ளது. விண்டூவுக்கு பல தரகர்களுடன் தொடர்புள்ளது. அவர்களைக் குழிப்படுத்த அழகிகளை சப்ளை செய்துள்ளார் விண்டூ. முக்கியத் தரகர்களாக விளங்கும் பவன் ஜெய்ப்பூர், மற்றும் சஞ்சய் ஜெய்ப்பூர் ஆகியோருக்கு விண்டூ கடும் உதவிகளைச் செய்துள்ளார். இவர்கள் மும்பை ஜுகு கடற்கரையில் உள்ள 2 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இங்கு பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுஃபும் தங்கியுள்ளார். இவர்களுக்குத்தான் விண்டூ கஜகஸ்தான் அழகிகளை சப்ளை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் விடுதியின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் தரகர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதற்கும் விண்டூ உதவி புரிந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியன்வந்துள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15117:pak-with-models-umpire-asad-rauhp-flirt&catid=40:sports&Itemid=108
 20. ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட நயன்தாரா மறுத்ததால் அவருக்கு பதில் பிரியாமணி ஆடினார். ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், மனோரமா உட்பட அதிகமான தமிழ் நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷாருக்கானுடன் தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவரை ஆட வைத்து குத்தாட்ட பாடல் காட்சியொன்றை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக நயன்தாராவை அணுகி கேட்டனர். ஆனால் அவர் ஒரு பாடலுக்கு ஆட முடியாது என மறுத்து விட்டார். அதே நேரம் தனுஷ் அழைப்பை ஏற்று அவர் தயாரித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு சம்பளம் வாங்காமல் ஆடி கொடுத்தார். ஷாருக்கானுடன் நயன்தாரா ஆட மறுத்ததால் பிரியாமணியை அணுகியதும் அவர் உடனே சரியென்று சம்மதித்தார். இதையடுத்து ஷாருக்கானும் பிரியாமணியும் ஆடும் இப்பாடல் காட்சியை அதிக செலவில் அரங்குகள் அமைத்து சமீபத்தில் படமாக்கினர். டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனம் அமைத்து கொடுத்தார். இந்த குத்தாட்ட பாடல் காட்சி ரசிகர்களை மிகவும் கவரும் என்கின்றனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15086:nayan-shah-rukh-khan-refused-to-put-up-with-kuttattam-rates-kuttattam&catid=39:cinema&Itemid=107
 21. இனவெறி சிங்கள அரசினால் துரத்தி அடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வலிகளைச் சொல்ல ‘சிவப்பு’ என்ற டைட்டிலில் ஒரு படம் தயாராகி வருகிறது. நாயகன், பொல்லாதவன், தில்லு முல்லு, சிம்லா ஸ்பெஷல், சூரிய காந்தி, அந்தமான் காதலி, கதாநாயகன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்ஷிணி கோவிந்த் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் தான் இந்த சிவப்பு. ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் ஹீரோக்களாக நடிக்கும் இந்தப்படத்தில் ஹீரோயினாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். கழுகு என்ற ஹிட் படத்தை கொடுத்த சத்யசிவா இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை டைரக்ட் செய்கிறார். ‘சிவப்பு’ என்பது ஒரு கலராகத்தான் தெரியும். ஆனால், அதில் காதல், வறுமை, கோபம், கம்யூனிஷம், வன்முறை என்ற கலரை மீறிய அம்சங்களும் உண்டு. இவை எல்லாவற்றையும் இணைத்து தான் கதையை உருவாக்கியுள்ளேன் என்கிறார் சத்யசிவா. மேலும், இலங்கைப் போரில் சிதறுண்டு போன மக்கள் தப்பியோடி இந்தியாவுக்கு வருகிறார்கள். அங்கே இழந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்க இங்கே வந்தால் இங்கும் மறுக்கப்படுகிற அவலம். அங்கே முள்வேலி முகாம்கள், இங்கே அகதிகள் முகாம்கள். தம் இனத்தை நாடி வந்த அவர்களுக்கு என்ன மாதிரியான வலி . துரத்தி அடிக்கப்பட்ட அந்த ஜீவன்களின் உள்ளுணர்வின் பிரதிபலிப்பே இந்த ‘சிவப்பு’ படக்கதையின் அஸ்திவாரம். மன வலியுள்ள ஒரு கதையை சினிமாவாக்கியிருக்கிறேன் என்ற சிவா நான் டைரக்ட் செய்த ‘கழுகு’ எப்படி ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வெற்றி பெற்றதோ அதை விட நூறு மடங்கு இந்தப்படம் பாராட்டுப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் சிவா. படம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது ஆசையும்.... http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15077:refugee-camps-s-s-being-smart-to-say-red-movies&catid=39:cinema&Itemid=107
 22. மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தலைப்பே படத்தின் மதிப்பை அறிவிக்கும். நல்ல கதாபாத்திரங்களில் கதாநாயகர்கள் நடித்தனர். இதனால் அவர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர். தற்போது வர்த்தக நோக்கத்தில் சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. சமுதாயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், வன்முறைகள் செய்வது தவறு இல்லை என்ற கருத்து சினிமா படங்களில் கூறப்படுகிறது. கதாநாயகர்கள் குற்றம் செய்துவிட்டு இறுதியில் தண்டனை பெறாமல் எளிதில் தப்பி விடுவது போல கதைகள் வருகின்றன. இது இளைய சமுதாயத்தின் மனதை கெடுக்கும். இதற்கு சினிமா தணிக்கைத் துறையினர் (சென்சார் போர்டு) சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. இதனால் நாட்டில் வன்முறை அதிகமாகிறது. இதை தவிர்க்க வேண்டும்.சினிமா படத்துக்கு தலைப்புகள் சரியாக வைப்பது இல்லை. சில படங்களில் வன்முறையைத் தூண்டும் வார்த்தைகள், கொடூர காட்சிகள் இடம் பெறுகிறது. சில குற்றவாளிகள் சினிமா படத்தை பார்த்து குற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு படத்தில் இருந்து ஆலோசனை கிடைக்கிறது. மடிசார் மாமி மதன மாமா என்ற படத்தின் தலைப்பு சிறிது நாட்களுக்கு பிறகு மடிசார் மாமி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. படத்துக்கு யூ/ஏ சான்றிதழை சென்சார் போர்டு கொடுத்துள்ளது. கடுமையான வன்முறைக் காட்சிகள், கொடூர காட்சிகள், குற்றவாளிகளை புகழ்வது ஆகியவற்றை சினிமாவில் பார்க்கும்போது, இதற்கு தணிக்கைத்துறை எப்படி சான்றிதழ் வழங்கியது என்று தெரியவில்லை. தணிக்கைத் துறைக்கு தனி பொறுப்பு உள்ளது. தணிக்கை குழுவில் அரசியல் பின்னணி உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது. இது தொடர்பாக தணிக்கை குழுவினர் ஜூன் 12ந் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவேண்டும். இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். படத்தின் பெயரை மாற்றி தயாரிப்பாளர் படத்தை திரையிடலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15019:aunt-maticar-high-court-banned-the-film-screening&catid=39:cinema&Itemid=107
 23. மிக அழகான நடிகை ஹன்ஷிகா தான் என்று சிம்பு ஒருபக்கம் அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார், ஆனால் ஹன்ஷிகாவோ சித்தார்த் தான் செம க்யூட்டான நடிகர் என்றும், அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால், நம்மை நிஜ காதலி போலவே பார்ப்பார் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கில் சித்தார்த்துடன் பல படங்களில் டூயட் பாடியவர் தான் ஹன்சிகா. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், தொடர்ந்து பட படங்களில் இணைந்து நடித்த அவர்கள், சில படங்களில் அதிக நெருக்கத்துடனும் நடித்தனர். இதனால் தெலுங்கில் அவர் ரொமாண்டிக் ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் தமிழில் ஹன்ஷிகாவுகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தந்தால் தெலுங்கு பட உலகை விட்டு வந்தார். இதனால் தொடர்ந்து அவரால் சித்தார்த்துடன் இணைய முடியவில்லை. ஆனால், தற்போது சித்தார்த்துடன் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். மீண்டும் சித்தார்த்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை பற்றி ஹன்ஷிகா கூறும்போது : சித்தார்த்தைப் பொறுத்தவரை கேரக்டரில் முழு இன்வால்வுமெண்டுடன் நடிப்பார். அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால், நம்மை நிஜகாதலி போன்றுதான் பார்ப்பார். அந்த பார்வையின் அர்த்தம் அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கும் என் போன்றவர்களுக்குத்தான் தெரியும் என்று சொல்லி சிரிக்கும் ஹன்சிகா, என்னைப்பொறுத்தவரை சித்தார்த் தான் மிக அழகான, ரொம்ப க்யூட்டான நடிகர் என்றும் வர்ணித்திருக்கிறார். உஷாரா இருங்க சமந்தா.. ஹன்சிகாவின் இந்த பேச்சால் சித்தார்த்தின் நிஜ காதலி சமந்தாவுக்கு பலத்த எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனால் ஹன்சிகாவை கடும் கோபத்தில் திட்டிதீர்க்கிறாராம் நடிகை சமந்தா. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14973:hansika-kulaikirar-siddha-me&catid=39&Itemid=107
 24. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களையும் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வருவோம் என்கிறது சி.பி. சி.ஐ.டி. போலீஸ். இதனால் பிரபல நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் தூதராக நியமிக்கப்பட்டவர் நடிகர் விஜய், இவருக்கு ஜோடியாக நயன்தாராவைச் சேர்த்தனர். இவர்களை அழைத்து வந்தது சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன். ஒரு விருந்தின் போது, குருநாத்துக்கும் நயன்தாராவுக்கும் மோதல் நடந்ததால் ஐ.பி.எல்.லில் இருந்து விலகிக் கொண்டார் நயன்தாரா. இருவருக்கும் ஏன் மோதல் நடந்தது? வீரர்களுடன் நெருக்கமாக இருக்க நயன்தாரா வலியுறுத்தப்பட்டாரா? என்பது பற்றி விசாரிக்கப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம். நயன்தாராவை அடுத்து த்ரிஷா, லட்சுமிராய், தற்போது கமலின் மகள் ஸ்ருதி வரை ஐ.பி.எல்.லுக்குள் அழைத்து வந்து வீரர்களோடு நட்பை உருவாக்கினார் குருநாத். இப்படி, தோனியின் நட்பைப் பெற்று அவரது காதலியாகவே மாறியவர் லட்சுமிராய். தற்போது கமலின் மகள் ஸ்ருதியை அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னாவின் "நட்பு' வளையத்துக்குள் நுழைத்தவரும் இந்த குருநாத் தான் என்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம். அதனால், ஐ.பி.எல்.லோடு சம்பந்தப்பட்டுள்ள இந்த நடிகைகள் கதிகலங்கியுள்ளனராம். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14958:c-in-gambling-and-nayantara,-trisha,-pitch&catid=39:cinema&Itemid=107
 25. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் நிர்வாண ஓவியம் ஏலத்துக்கு வருகிறது. பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (37). இவர் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதை சுவீடனை சேர்ந்த ஓவியர் ஜோகன் ஆண்டர்சன் வரைந்துள்ளார். இந்த ஓவியம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. இது ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவர பூமியாக உள்ள காங்கோ நாட்டில் அன்பு மற்றும் சமாதான பிரசாரத்துக்காக இந்த நிதி ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14948:actress-angelina-jolie-s-nude-painting-auction&catid=39:cinema&Itemid=107