• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

chinnavan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  2,863
 • Joined

 • Last visited

Everything posted by chinnavan

 1. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவன் கிட்டி என்ற உத்தம்ஜெயின். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளை பெற்றுள்ளனர். பழைய சிம்கார்டுகளை அழித்து விட்டு மீண்டும் புதிய சிம் கார்டுகளை பெற்று தங்கள் செயல்களை தொடர்ந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விவரங்கள், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் பதிவாகி உள்ள தகவல்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமான வகையில் பெட்டிங் அமைத்து சூதாடுபவர்களை தங்களுக்கு லாபம் ஏற்படும் வகையில் பெட்டிங் கட்ட வைத்து அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். தொலை தொடர்பு ஆராய்ச்சி துறை முக்கிய நபர்களுக்கும் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது புலனாகியுள்ளது. இவர்கள் குற்ற செயலுக்கு துணை போனார்களா? அவர்களது தொழிலுக்கு பண உதவி செய்தார்களா? கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது. உத்தம் ஜெயின் என்ற கிட்டி 2011-ம் வருடம் தனது வருமானமாக ரூ.50 லட்சத்தை கணக்கு காட்டியுள்ளார். ஆனால் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இவரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரின் சகோதரர்கள் பத்தீஸ் மற்றும் பிரவீன் இருவரும் கிட்டிக்கு உதவியாக இருந்து பெரிய அளவில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் அதிபரின் மனைவி கிட்டியை 100 முறைக்குமேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களது தினசரி தொடர்புக்கான காரணங்கள் குறித்தும் விசாரித்த வருகிறார்கள். கிட்டியையும் அவரது சகோதரர்களையும் விசாரணை செய்தால் இந்த கிரிக்கெட் சூதாட்ட மோசடியின் முழு வீச்சும் அவர்களின் செயல்முறையும் பணம் எவ்வாறு பெறப்பட்டு எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வரும். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14937:cricket-in-gambling-the-star-s-wife-in-hotel&catid=40&Itemid=108
 2. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிகை லட்சுமிராய் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஸ்ரீசாந்தை சூதாட்ட புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். சூதாட்டத்தில் சேர்த்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீசாந்துடன் தொடர்பு வைத்து இருந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் கைதாகி வருகிறார்கள். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மும்பை போலீசார் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசாந்தும் இந்தி நடிகை சுர்வின் சாவ்லாவும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கட்டிப்பிடித்து நடனம் ஆடினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு பரவியது. ஸ்ரீசாந்த் கைது பற்றி சுர்வின் சாவ்லாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் இப்போது எங்களுக்குள் தொடர்பு இல்லை என்று மறுத்தார். ஸ்ரீசாந்திடம் பேசி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்றும் கூறினார். சுர்வின் சாவ்லாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீசாந்துடன் லட்மிராயை இணைத்தும் செய்திகள் வந்தன. லட்சுமிராய் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தூதுவராக பணியாற்றி உள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கு செல்வது கிரிக்கெட் வீரர்களுக்கான விருந்துகளில் பங்கேற்பது என இருந்தார். ந்த நிலையில் சூதாட்டத்தில் கைதான கிரிக்கெட் வீரர்களுடன் லட்சுமிராயை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாயின. இதனால் லட்சுமிராய் அதிர்ச்சியானார். இக்குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களுடன் என்னை இணைத்து பேசப்படுவதில் உண்மை இல்லை. எனக்கு அது வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்பித்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூதுவராக இருந்தேன். இப்போது கிரிக்கெட் அணியுடன் எந்த தொடர்பும் இல்லை. டைரக்டர் பிரியதர்ஷன் அழைத்ததால் கேரளாவில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று லட்சுமிராய் கூறியுள்ளார் இதையடுத்து லட்சுமி ராயும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளன இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுப்பது போலவும் லட்சுமிராயை ஸ்ரீசாந்த் தூக்கிவைத்திருப்பது போன்றும் இப்படங்கள் வந்துள்ளன. நடிகை பாவனாவும் ஸ்ரீசாந்தும் போஸ் கொடுக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14932:sreesanth-lakshmi-close-photos&catid=39:cinema&Itemid=107
 3. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். பின்னர் மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மூன்று மணிநேரம் நடைபெற்றது. விசாராணைக்கு பின் குருநாத்தை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸ் அறிவித்துள்ளது. கூட்டுச்சதி மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14908:ipl-gurunaath-meiyappan&catid=40:sports&Itemid=108
 4. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, 'நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்' என்றார். இது சம்பந்தமான விசாரணையை தற்போது போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள் பற்றி கணக்கெடுக்கப்படுவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் நடிகைகள் பலர் இதில் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு நடிகைகளும் இதில் மாட்டுகிறார்கள். கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்த சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்கப்படும் என்று போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தரகர்களின் மொபைல் போன்களில் நடிகைகள் போன் நம்பர்கள் உள்ளனவா என்றும் போலீசார் ஆய்வு செய்கிறார்கள். கவர்ச்சி நடிகைகளாக வலம் வரும் இரண்டு நடிகைகள் மீது மட்டும் போலீசாரின் சந்தேகப் பார்வை இறுகியுள்ளது. மேலும் சில இளம் நடிகைகளும் கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14877:cricket-gambling-c-tamil-actress-news-information&catid=39:cinema&Itemid=107
 5. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர். சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர், சூதாட்டத் தரகர்களுடனும் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர். எனவே, இந்த சூதாட்டத்தில் குருநாத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மும்பை போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் குருநாத்திடமும், சீனிவாசனிடமும் விசாரணை நடத்தினர். பிசிசிஐ தலைவர் சீனிவாசன் சூதாட்ட தொடர்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த போலீசார் அவரது உறவினர் சிக்கியிருப்பதால் சீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். இன்று காலை 10 மணி முதல் சென்னை போட் கிளப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டில் இந்த விசாரணை நடந்தது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14876:ipl-,-gambling-chennai-super-kings-srinivasan,-the-mumbai-police-investigation-kurunat-meyyappan&catid=40:sports&Itemid=108
 6. ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14875:new-delhi-start-ipl-player-gambling-pakistan-umpire-police-trap&catid=40:sports&Itemid=108
 7. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் வின்டூ சிங்கிற்கு சென்னை ஐபிஎல் அணியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகரும் மல்யுத்த வீரருமான தாராசிங்கின் மகன் தான் வின்டூ சிங். சூதாட்டத் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வின்டூ சிங்கை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-மும்பை இடையேயான போட்டியில், தோனியின் மனைவி சாக்சியுடன் அமர்ந்து வின்டூ சிங் போட்டியை ரசித்துள்ளார். இதுதவிர விருந்துகளிலும் வீரர்களுடன் அவர் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. இதனால் ஐ.பி.எல் அணிகள் மற்றும் வீரர்களுடனான தொடர்பு பற்றியும் வின்டூ சிங்கிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14859:ipl-dhoni-s-wife-in-gambling-with-cakci-chennai-team-affair&catid=40:sports&Itemid=108
 8. “குரு”, “பா”, “ஹே பேபி” போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ… * கேன்ஸ் திரைப்பட விழா அனுபவம் குறித்து? வித்தியாசமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. சிறந்த படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவிலும் இடம் பெற்றிருப்பதால், பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட, சிறந்த படங்களை பார்க்கும் அனுபவம் கிடைத்து உள்ளது. இந்த அனுபவத்தை, படங்களில் நடிக்கும்போது, பயன்படுத்துவேன். * விழாவில், உங்களின் உடை அலங்காரம் வித்தியாசமாக இருந்ததே? நம் நாட்டின், பாரம்பரிய உடை அலங்காரத்துடன், விழாவில் பங்கேற்றேன். மூக்கில் வளையம், வித்தியாசமான புடவை, நகைகளை அணிந்திருந்ததால், பார்வையாளர்கள் கண்களுக்கு, அது, புதுமையானதாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தது. * புடவை மீது, உங்களுக்கு அப்படி என்ன காதல்? எப்போதுமே, எனக்கு பிடித்த உடை, புடவை தான். தூங்கும்போது கூட, புடவையுடன் தூங்க வேண்டும் என, விரும்புவேன். முக்கிய விழாக்களுக்கு செல்லும்போது, புடவை தான், என் முதல் சாய்ஸ். கேன்ஸ் திரைப்பட விழாவிலும், புடவை அணிந்து சென்றது, இதனால் தான். * உங்களுடன் பங்கேற்றுள்ள சக நடுவர்கள் யார்? ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், “லைப் ஆப் பை பட இயக்குனர், ஆங் லீ, ஹாலிவுட் நடிகை, நிக்கோல் கிட்மான், ஆஸ்கர் விருது பெற்ற, கிறிஸ்டோப் வால்ட்ஸ், ஜப்பான் இயக்குனர், நவோமி கவாஸ் உள்ளிட்ட ஜாம்பவான்களுடனும், நடுவர் குழுவில், நானும் ஒருத்தியாக இருப்பதை, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். * திருமணத்துக்கு பின் வித்யா பாலன் எப்படி? திருமணம் நடந்து, நான்கு மாதங்கள் ஆகின்றன. அதனால், இது தொடர்பாக, எந்த தகவலையும், தற்போது தெரிவிப்பது, சரியாக இருக்காது என, நினைக்கிறேன். ஆனாலும், இந்த நான்கு மாத கால திருமண பந்தம், என் வாழ்க்கையில், பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14831:vidya-balan-s-strange-desire&catid=39:cinema&Itemid=107
 9. ‘வெளுத்துகட்டு’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி. தற்போது ‘போடிநாயக்கனூர் கணேசன்’, ‘நேற்று இன்று’, படங்களில் நடித்து வருகிறார். ‘நேற்று இன்று’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்தில் அருந்ததி நீச்சல் உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நான்கைந்து ஆண்களுடன் நீச்சல் உடையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்துள்ளன. இதை பார்த்து அருந்ததி அதிர்ச்சியாகியுள்ளார். தன்னை ஆபாசமாக படம்பிடித்து விட்டதாக இயக்குனர் பத்மாமகனிடம் அவர் சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மீதான கோபத்தில் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டாராம். அருந்ததியின் குளியல் படங்களை பார்த்து மற்ற இயக்குனர்களும் தங்கள் படங்களில் அதுபோல் கவர்ச்சி காட்டும்படி நிர்ப்பந்திக்கிறார்களாம். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14824:sex-in-the-bath-scene-arundhati-conflict-with-the-director&catid=39:cinema&Itemid=107
 10. நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார். வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் நடித்ததால், அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்ற கனவோடு வந்தாராம். அதோடு, எஸ்.ஏ.சி மூலமாக விஜய்யுடனும் டூயட் பாடி விட வேண்டும் என்றெல்லாம்கூட பெரிய கனவே வளர்த்து வைத்திருந்தாராம். ஆனால், நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் அருந்ததியின் மார்க்கெட் சறுக்கி விட்டதோடு, அவரது விஜய் கனவும் கலைந்து போய் விட்டதாம். இப்படி சொல்லி புலம்பும் அவர், இந்த நேரம்பார்த்து, 'நேற்று இன்று' என்ற படத்தில் என்னை தோலுரித்து விட்டார்கள். அப்படத்தில் வெளியான ட்ரெய்லரைப்பார்த்து விட்டு, அனைவரும் என்னை ஆபாச நடிகை என்றே முடிவு செய்து விட்டனர். ஆனால், சொல்லப்போனால் நான் ஏமாந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னிடம் கதை ஒரு மாதிரியாக சொல்லிவிட்டு, படமாக்கும்போது வேறு கோணத்தில் படமாக்கி, என்னையும் தண்ணீரில் குளிக்க விட்டதோடு, ஆபாச ஆட்டம் போட வைத்து விட்டனர். இதனால் எனது இமேஜ் வேறு மாதிரியாகி விட்டது. ஆனால் இந்த நிலையிலும், நான் நடித்துள்ள சரவணப்பொய்கை, வெற்றி ஆகிய படங்களில் எனக்கு ஹோம்லியான வேடம். அதனால் அந்த படங்கள் இருக்கிற ஆறுதல்தான் என்னை தொடர்ந்து சென்னையில் இருக்க வைத்திருக்கிறது. இல்லையேல் எப்போதோ ஆந்திராவுக்கு பறந்து போயிருப்பேன் என்கிறார் அருந்ததி. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14802:actor-vijay-netru-indru-movie-netru-indru-movie-actress-arundhati&catid=39:cinema&Itemid=107
 11. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1/2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இன்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பேர் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைதாகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய், லேப்-டாப்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லேப்-டாப்களில் என்னென்ன சூதாட்ட தகவல்கள் பதிவாகி உள்ளன என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கைதான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களை டெல்லி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த 2-வது நாள் விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன. குறிப்பாக ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணியில் இருக்கும் பெரிய முதலைகள் யார் என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கி இருக்கிறது. இது தவிர ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தரகர்கள் அனைவரும் ரகசியமாக ஒருங்கிணைந்து செயல்படுவது அம்பலமாகி உள்ளது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் 3 பேரும் நேற்று கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான பல தகவல்களை போலீசாரிடம் ஒளிவு மறைவின்றி கூறிவிட்டதாக தெரிகிறது. இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பல அடுக்கு தரகர்களுடன் சங்கிலி தொடர்போல் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் 15 போட்டிகளில் சூதாட்டம் நடந்து இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதை உறுதிபடுத்த போலீசார் ரகசிய விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐ.பி.எல். ஆட்டங்களில் மொத்தம் 9 அணிகள் ஈடுபட்டுள்ளன. இந்த 9 அணிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக இதுவரை நடந்துள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரள்வதும் அதில் கணிசமான தொகை கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் கிடைப்பதும் ஆதாரப்பூர்வமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்ற மாநில போலீசாருடன் இணைந்து நடத்தியுள்ள விசாரணைகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த சீசனில் விளையாடி வரும் ஐ.பி.எல். வீரர்களில் சுமார் 25 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடு பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த 25 வீரர்கள் யார், யார் என்ற தகவலை வெளியிட மறுத்து விட்ட டெல்லி போலீசார், அந்த 25 வீரர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து இருப்பதாக கூறினார்கள். சந்தேகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 25 வீரர்களில் 6 பேர் தங்களது எல்லா ஆட்டங்களிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எனவே அவர்கள் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. டெல்லி போலீசாரிடம் நேற்று அங்கீத் சவான் வாக்குமூலம் கொடுக்கும் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மேலும் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவலை கூறியுள்ளார். அவர்கள் இருவரும் பேட்ஸ்மேன்கள். அதில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் வெளிநாட்டுக்காரர். இவர்கள் தவிர மற்ற ஐ.பி.எல். அணிகளில் உள்ள 8 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசாரின் சந்தேகப் பார்வையில், கிரிக்கெட் வீரர்கள் கெவான் கூப்பர், பிரட்ஹாக், சித்தார்த் திவேதி, ரகானே ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீதான சந்தேகம் உறுதி செய்யப்பட்டால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இத்தகைய அதிரடியால் ஐ.பி.எல். வீரர்கள், சூதாட்ட தரகர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14776:ipl-gambling-the-25-players-for-the-contact&catid=40:sports&Itemid=108
 12. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தவிர வேறு எதுவும் கிடையாது. தேர்தல் சமயங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்று சூதாட்டம் நடத்துவார்கள். தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் நாடு முழுவதும் வசதி படைத்த இளைஞர்கள் கிரிக்கெட் மோகத்தில் சிக்கி உள்ளனர். இதனால் கிரிக்கெட் போட்டிகள் திருவிழா போல நடந்து வருகிறது. எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதில் இளைஞர்களிடையே ஆர்வமிகுதி ஏற்பட்டுள்ளது. இதை சூதாட்ட கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றி பணத்தை அள்ள திட்டமிடும் சூதாட்டக்காரர்கள் இதற்காக முதலில் வீரர்களுக்கு வலை விரிப்பார்கள். வீரர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. அவருக்கு நெருக்கமானவர்கள் யார்? நண்பர்கள் யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களுக்கு முதலில் விருந்து வைத்து குளிப்பாட்டுவார்கள். அடுத்து நண்பர் மூலம் வீரர்களை வலைத்து விடுவார்கள். முதலில் சாதாரண நட்பு முறையில் விருந்து இருக்கும். அழகிகள், நடிகைகளையும் நட்பு ரீதியில் சப்ளை செய்வார்கள். இதில் மயங்கிய வீரர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் அழகிகளுடன் உல்லாச காட்சிகளை படம் பிடித்து வைத்துக்கொள்வார்கள். முதலில் சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசுவார்கள். தங்கள் வலையில் சிக்கியது பவுலர் என்றால் பந்து வீச்சில் எப்படி நடந்து கொள்வது, சைகை காட்டும் வீதம் போன்றவற்றை முடிவு செய்து விடுவார்கள். பேட்ஸ்மேன் என்றால் அதற்கு தக்கபடி ரகசிய ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இதற்கு சம்மதிக்க தயங்கும் வீரர்களை சூதாட்டக்கும்பல் உல்லாச படங்களையும், வீடி யோக்களையும் காட்டி மிரட்டவும் தயங்க மாட்டார்கள். அப்படித்தான் ஸ்ரீசாந்த் சிக்கி இருக்கிறார். ஸ்ரீசாந்த்துக்கு பிஜூ என்பவர் நெருங்கிய நண்பராவார். ஸ்ரீசாந்த் கூடவே இருப்பார். மற்றொரு வீரரான சண்டிலாவும் அவருக்கு நெருக்கம். சூதாட்டக்கும்பல் முதலில் நண்பரைப் பிடித்து அழகிகளை சப்ளை செய்து மடக்கியது. பெண்கள் விஷயத்தில் ஸ்ரீசாந்த் பலவீனமானவர் என்பதை தெரிந்து கொண்டு அவருக்கும் விருந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுபோல் 5 முறை அழகிகளை அனுப்பி வைத்து உல்லாசமாக இருக்க வைத்து விருந்து வைத்திருக்கிறார்கள். பெண்களை அனுப்பி வைத்துவிட்டு தரகர்கள் வீரர்களுக்கு தகவல் கொடுப்பார்கள். அவர்கள் வந்து சேர்ந்ததும் வீரர்கள் அதை உறுதி செய்து பதில் தருவார்கள். இந்த உரையாடல்களை போலீசார் ரகசியமாக பதிவு செய்துள்ளனர். ஸ்ரீசாந்த் மும்பை ஓட்டலில் கைது செய்யப்பட்டபோது அவருடன் ஒரு அழகியும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. போலீஸ் காவலில் ஸ்ரீசாந்த் மிகவும் இறுகிய முகத்துடன் இருந்தார். எந்த தகவலையும் சொல்ல மறுத்தார். படிப்படியாக மவுனத்தை கலைத்தார். தன்னை சுற்றி இருந்தது சூதாட்டக் கும்பல் என்று தெரியாமல் அவர்கள் வலையில் வீழ்ந்துவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். சூதாட்ட தரகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் கம்ப்யூட்டர்களில் கிரிக்கெட் வீரர்கள் ஓட்டல் அறைக்குள் அழகிகளுடன் நுழையும் காட்சிகள் உள்ளது. எனவே தரகர்கள் திட்டமிட்டு வீரர்களை சிக்க வைப்பதற்காக முன் கூட்டியே அறைகளில் வீடியோ காமிராக்கள் பொருத்தி ஏற்பாடு செய்துள்ளனர். இந்த வீடியோக்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14772:sreesanth-out-of-the-bedroom-scenes-blackmail&catid=40:sports&Itemid=108
 13. தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்து பேசி தங்களது நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாகவும் அத்துடன் நிற்காமல் இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக கூடிக்குழாவி விருந்து சாப்பிட்டு மகிழ்வதாக‌ செய்தி பரவியுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14744:cricket-batsman-suresh-raina-shruti-closely-the-secret-meeting-star-hotel&catid=39:cinema&Itemid=107
 14. மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், ‘வேணல் கினாவுகல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அஞ்சு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அஞ்சு அரவிந்தின் இ&மெயில் முகவரியை தெரிந்து கொண்ட அசீம் பலமுறை அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய கோரியும் தகவல் அனுப்பியுள்ளார். இ&மெயில் மூலம் பலமுறை அவருக்கு அஞ்சு அரவிந்த் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அசீம், அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் மார்பிங் மூலம் நிர்வாண படங் களை வெளியிட்டதாக விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14717:the-publisher-of-a-popular-actress-in-pornographic-films-to-facebook&catid=39:cinema&Itemid=107
 15. நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' பட இமாலய வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'முனி 3'. இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த வேடத்தில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு இப்போது டாப்ஸி நடித்து வருகிறார். இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 3 மற்றும் அனிருத்தின் எதிர்நீச்சல் படப்பாடல்களும் சூப்பர்ஹிட்டானதால் 'முனி 3' படத்துக்கு அவரையே கமிட் செய்திருக்கிறார் லாரன்ஸ். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கிய முனி, முனி 2(காஞ்சனா) ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றன. இந்நிலையில் முனி 3 முந்தைய இரண்டு படங்களை விட திகில் நிறைந்ததாக இருக்குமாம். இதைவிட காஞ்சனாவில் மூன்று வேடங்களில் நடித்த லாரன்ஸ் இந்தப் படத்தில 6 வேடங்களில் அசத்த இருக்கிறாராம். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14671:muni-3-movie-raghava-lawrence-six-cadeptapsee-tamil-cinema-news&catid=39:cinema&Itemid=107
 16. தமிழில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்ட லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. எனவே தாய்மொழியான கன்னட சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். என்றாலும் இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியே அவருக்கு இருப்பதால், பெங்களூர்வாசியான அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனது 25வது பிறந்த நாளை மும்பை கடலின் நடுப்பகுதிக்கு சென்று கொண்டாட திட்டமிட்ட லட்சுமிராய், தனது குடும்பத்தாருடன் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். தனது 25வது பிறந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடுக்கடலுக்குள் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிவித்துள்ளார் லட்சுமிராய். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14633:birthday-celebrated-in-mid-lakshmi&catid=39:cinema&Itemid=107
 17. பெரும் தொகை கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனை, போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை தி.நகரை சேர்ந்த வெங்கம்மா என்ற லட்சுமி (வயது 46) மற்றும் கிருஷ்ணசாமி (45) ஆகியோரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் தி.நகரில் அலுவலகம் அமைத்து, கடன் தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கடன் கேட்டு வரும் நபர்களை சீனிவாசன், பல்வேறு விதமான மோசடி வார்த்தைகளை கூறி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மோசடி செய்த பணத்தில், வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கமிஷன் தொகை பெற்றுள்ளனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிகாரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார். இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010–ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14615:2-women-arrested-in-connection-with-the-power-star&catid=36:tamilnadu&Itemid=102
 18. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால், ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு! அப்படி என்னதான் சொன்னார்? “இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார். நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாதான்னு, சத்தியம் கூட பண்ணுவேன்” என, உருகி உருகிக் கூறினார். சும்மாவே சுந்தர்.சி படத்தில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவது ‘குறைந்த’ உடைதான்! இவர் ஹன்சிகாவின் குறைந்த உடை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், இந்தம்மா அப்டி என்னதான் உடை அணிந்தாங்களோ! http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14591:hansika-illinka-kulirave-to-reduce-the-dress&catid=39:cinema&Itemid=107
 19. சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது. சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு சத்யராஜ் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு சீமான் பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க . ;இது போக மிருதுளா ஹன்சிபா , கோமல் ஷர்மா என சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை. அமைதிப்படை முதல் பாகத்தை எதிர்பார்த்து செல்பவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திப்பார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14583:chola-tasks-emeemele-home&catid=39:cinema&Itemid=107
 20. டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்து செமத்தியான குத்தாட்டமும் போட்டு அசத்தியுள்ளாராம் பூனம் பாஜ்வா. ஹரி டைரக்ட் செய்த சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தார். சமீபகாலமாக தமிழில் எந்த புதிய பட வாய்ப்பும் இல்லாததால் சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக,"எதிரி எண் 3” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. இதில், வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஸ்ரீகாந்தை மீட்க முயற்சி எடுக்கும் காட்சிகளில், "ரிஸ்க்’ எடுத்து நடித்துள்ளாராம். மேலும், முதன்முறையாக ஒரு குத்துப் பாட்டுக்கும் இந்தப்படத்தில் செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறாராம் பூனம்பாஜ்வா. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14565:i-want-kuttattam-poonam-pajva-the-next-action&catid=39:cinema&Itemid=107
 21. செக்ஸ் உள்ளிட்ட சமாச்சாரங்களை அள்ளித் தெளிக்கும் பிரபல மாத இதழான ‘மேக்ஸிம்’ இதழுக்காக ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். ‘மேக்ஸிம்’ மாத இதழின் இந்தியப் பதிப்பின் இந்த மே மாத இதழின் அட்டைப்படத்தில் ஸ்ருதியின் படு கவர்ச்சியான படம் ஆபாசத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்ததைப் போல வெளிவந்துள்ளது. இதை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஒருபக்கம் முகம் சுளிக்க, இன்னொரு பக்கம் ஸ்ருதிஹாசனின் அப்பாவும், உலக நாயகனுமாகிய கமல் ஸ்ருதியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறாராம். அந்த வகையில் இந்த போட்டோஷூட் குறித்து அவரிடம் எந்த தகவலையும் ஸ்ருதி தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கமல் எப்போதுமே மகள் ஸ்ருதியின் முடிவுகளில் தலையிடுவதில்லை என்பதால் இதுபற்றி அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்பொழுது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனின் இந்த அதிரடியான கவர்ச்சி போட்டோக்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள பிரபல நடிகைகளின் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். ‘மேக்ஸிம்’ எடுத்த இந்த பிரத்யேக போட்டோஷுட்டுக்காக பெரிய தொகை ஒன்றையும் ஸ்ருதி சம்பளமாக பெற்றுள்ளார். ஸ்ருதியின் இந்த படுகவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த பலரும் பல விதத்தில் விமர்சனம் செய்தாலும், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14534:srutihacan-pose-semi-nude-in-sex-movies&catid=39:cinema&Itemid=107 Share this post
 22. நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். "என்றென்றும் புன்னகை" படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. பின்னர் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். திரிஷாவுக்கு துணையாக அவரது தாய் உமாவும் சென்று இருந்தார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் "ரூம்" போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள். எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு ரகளையிலும் ஈடுபட்டார். தயாரிப்பு நிர்வாகிகளிடமும் ஆவேசமாக பேசி சண்டை போட்டாராம். ஆனால் படக்குழுவினர் ஒரு ரூம் தான் ஒதுக்க முடியும் என பிடிவாதமாக கூறினார்களாம். இதையடுத்து ரூமில் தங்க முடியாது என அடம் பிடித்து படப்பிடிப்புக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. திரிஷா ரகளையால் ஓட்டல் ஊழியர்களும் அங்கு திரண்டார்கள். தகவல் அறிந்து இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் அங்கு விரைந்தனர். திரிஷாவை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள். அவர் விருப்பப்படியே தாய்க்கு தனி ரூம் போட்டு கொடுத்தனர். அதன் பிறகு திரிஷா அமைதியானார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14488:actress-trisha-rakalai-to-a-separate-room&catid=39:cinema&Itemid=107
 23. நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை. அதற்காக ஆவேசப்பட்டுக் கொண்டு இருக்கமுடியாது. ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிட வேண்டும். அதையே நினைத்து அழுது கொண்டு இருக்கமாட்டேன், அப்படி இருந்தால் வேறு வேலைகள் செய்ய முடியாது. கே:- உங்களுக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும்? ப:- கிரிக்கெட் வீரர் வீராட் கோலி மாதிரி எனக்கு கணவர் அமைய வேண்டும். வீராட் கோலி மாதிரி துறுதுறுவென்று ஆக்டிவ் ஆகவும் இருக்க வேண்டும். அவரை நான் பார்க்கிறபோது இளையராஜாவின் மெலடி பாடல்கள் நெஞ்சுக்குள் ஓடவேண்டும். ஒரு முடிவு எடுத்த பிறகு அதில் உறுதியாக இருக்க வேண்டும். மாற்றக்கூடாது. அடிக்கடி ஷேவ் பண்ணி முகத்தை பளிச் என வைத்துக் கொள்ளும் ஆண்களை பிடிக்காது. முடியை டிரிம் செய்பவர்களைத்தான் பிடிக்கும். இப்படிப்பட்ட தகுதியில் ஒருத்தர் எனக்கு கணவராக வரவேண்டும். கே:- சினிமாவில் லட்சியம் என்ன? ப: நான் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகத்தான் என் சினிமா வாழ்வை துவக்கினேன். இப்போது நடிகையாக வளர்ந்துள்ளேன். சாவித்திரிபோல் பெயர் வாங்க வேண்டும் என எல்லா நடிகைகளும் நினைப்பார்கள் அந்த அளவுக்கு வரமுடியாது என்றாலும்கூட நான் சினிமாவை விட்டு விலகிய பிறகும் பத்து வருடங்கள் ரசிகர்கள் நினைக்கிற மாதிரி படங்களில் நடிக்க வேண்டும். அதுதான் என் ஆசை. கே:- மறக்க முடியாத பாராட்டு எது? ப:- இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு படவிழாவில் அஞ்சலி சிறந்த நடிகை இயற்கையாக நடிக்கிறார் என்றார். அதை பெரிய பாராட்டாக கருதுகிறேன். கே:- தமிழில் உங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களே? ப:- 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கு பின் ரசிகர்கள் பெருகிவிட்டனர். ரசிகர்கள் பாராட்டு டானிக் போன்றது. வளர்த்து விடுவதும் அதாள பாதாளத்தில் தள்ளி விடுவதும் அவர்கள்தான். கே:- நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி? ப:- நான் கலகலப்பான டைப் கூச்ச சுபாவம் கிடையாது. சுலபமாக மற்றவர்களுடன் கலந்து விடுவேன். கே:- முத்த காட்சிகளில் நடிக்கிறீர்களே?. ப:- எல்லா நடிகைகளுமே முத்தக்காட்சி வேண்டாம் என்று பெயரளவுக்குத்தான் சொல்கிறார்கள். ஆனால் பணத்திற்காக காட்சிக்கு முக்கியம் என்று டைரக்டர் சொல்வதாக பொய் சொல்லி சமாளிக்கிறார்கள். சேட்டையில் நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான். இவ்வாறு அஞ்சலி கூறினார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14463:arya-gave-a-kiss-anjali&catid=39:cinema&Itemid=107
 24. நான் மகான் அல்லமாற்றான்துப்பாக்கி போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ஜில்லா கார்த்தியுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம்.. சம்பளத்தை அவர் 1 கோடியாக உயர்த்தியதுதான் என்று கூறப்படுகிறது. தமிழ் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் உள்ளது. தெலுங்கில் ராம் சரணுடன் நாயக் ஜூனியர் என்டிஆருடன் பாட்ஷா என 2 படங்கள் மட்டுமே கைவசம் இருந்தது. அப்படங்கள் முடிந்து திரைக்கு வந்துவிட்டது. படங்கள் கமர்ஷியலாக ஓடினாலும் காஜலுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை. பவன் கல்யாணுடன் கப்பர் சிங் 2படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது அந்நிறுவனமும் வேறு ஹீரோயினை தேடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியிலும் புதிய படங்கள் எதுவும் கைவசம் இல்லையாம்.இதனால், காஜல் மட்டுமல்ல.. ஒரு கோடி சம்பள கனவில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லோருமே கலக்கம் அடைந்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14461:kajal-agarwal-came-to-the-terukkoti-a-dream&catid=39:cinema&Itemid=107
 25. சித்தார்த், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் 'தீயா வேலை செய்யனும்குமாரு'. சுந்தர்.சி இயக்குகிறார். யூ.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் தயாரிக்கின்றன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் சுந்தர்.சி பங்கேற்று பேசியதாவது:- ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்க வைத்தது நல்ல அனுபவம். நான் படம் ஆரம்பிக்கும் முன்கதை விவாதத்துக்கு நிறைய நாள் எடுத்துக் கொள்வேன். படப்பிடிப்பு தொடங்கியதும் ஆறு மாதத்துக்குள் படத்தை முடித்து விட நினைப்பேன். விரைவாக முடிந்தால் தான் படத்தின் புதுத்தன்மை மாறாமல் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்லது. அதற்கேற்றபடி ஹன்சிகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கிறார்கள். உருவத்தால் மட்டுமல்ல, நல்ல நடிகை என்ற விதத்திலும் ஹன்சிகா என்னை கவர்ந்து விட்டார். குஷ்புவை வைத்து மூன்று படங்கள் இயக்கி இருப்பேன். அவர் அர்ப்பணிப்பு ஆச்சரியமாக இருக்கும். குஷ்புவுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகை ஹன்சிகா. காலையில் ஏழு மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுவார். அவ்வப்போது கேரவேனுக்குள் போய் ஒளிந்து கொள்கிற வழக்கம் அவரிடம் கிடையாது. படப்பிடிப்பு முடிந்துதான் போவார். இந்த அர்ப்பணிப்பு உணர்வு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கு மட்டுமல்ல ஜப்பான் போனபோதும் இப்படித்தான் நடந்து கொண்டார். கடுமையான குளிரில் நடித்தார். கதாநாயகி எப்படி உடை அணிந்து இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி குறைந்த உடையுடன் உறைய வைக்கும் குளிரில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நடித்து கொடுத்தார். நான் எத்தனையோ நடிகைகளை இயக்கி இருக்கிறேன். யாரும் இப்படி ஒத்துழைப்பு கொடுத்தது இல்லை. ஏன் சொல்லப்போனால் இந்த ஒத்துழைப்பை நான் குஷ்புவிடம் இருந்துகூட பெற்றதில்லை. சித்தார்த்தும் கூடப்பிறந்த தம்பி மாதிரி ஆகிவிட்டார். இவ்வாறு சுந்தர்.சி பேசினார். விழாவில் நடிகை குஷ்பு தனது மகள்கள் அவந்திகா, அனந்திதா ஆகியோருடன் கலந்து கொண்டார். நடிகர்கள் ஆர்யா, சித்தார்த், நடிகை ஹன்சிகா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ், கே.வி.ஆனந்த், நலன் குமார சாமி, பாலாஜிமோகன், தயாரிப்பாளர்கள் யு.டி.வி.தனஞ்செயன், கே.எஸ்.சீனிவாசன், எம்.முரளி, டி.சிவா ஆகியோர் பங்கேற்றனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14455:hansika-is-better-than-kumar-cooperation-sundar-c&catid=39:cinema&Itemid=107