நெற்கொழு தாசன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  487
 • Joined

 • Last visited

 • Days Won

  16

நெற்கொழு தாசன் last won the day on November 4 2015

நெற்கொழு தாசன் had the most liked content!

Community Reputation

629 பிரகாசம்

About நெற்கொழு தாசன்

 • Rank
  உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  http://netkoluvan.blogspot.fr

Profile Information

 • Gender
  Male
 • Location
  france
 • Interests
  எல்லாம் வாசிக்க பிடிக்கும்
  தமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போல, எஞ்சிய நாட்கள் குறித்த அவஸ்தை உடலெங்கும் பரவி வளரத்தொடங்கியது. எல்லைகள் நிர்ணயிக்கப்படாத கண்காணிப்பு வளையமொன்றுக்குள் தன்னை அமிழ்த்தி வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டவன், அந்த வளையத்தை உடைப்பதற்காக மோசமான வழிமுறைகளைக் கையாளத் தொடங்கினான். முதலில் அந்த நீலநிறக் கண்களை ஒரு நீண்ட குத்தீட்டி கொண்டு குத்தினான். பின் கண்கள் இருந்த இடத்தில் இரண்டு சிவப்பு கோளங்கள் பிதுங்கிக் கிடப்பதாகவும், அந்தப் பிதுங்கிக்கிடக்கும் சிவப்புக் கோளங்கள் தகிக்கும் வெப்பத்தை உண்டாக்குவது போலவும் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். தனித்திருக்கும்போது பெருகும் இவ்வாறான நினைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, தன் குறியினைக் கசக்கியும் மலவாசலில் விரல்களை நுழைத்தும் வலிகளை உருவாக்குவதை வழக்கப்படுத்திக் கொண்டான். பின்வந்த நாளொன்றில் நிலைக்கண்ணாடி ஒன்றின் முன்பாக நிர்வாணமாகத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டான். 2) நீலநிற விழியுடைய அந்த மனிதன், ஃபாரில் ஒதுக்கமாக இருக்கும் இடமொன்றினைத் தெரிவு செய்து அமர்ந்துகொண்டான். தான் வழமையாக அருந்தும் மென்மதுவினைத் தவிர்த்து அதிக போதை தரக்கூடிய மதுவினை வரவழைத்துக்கொண்டான். பரிஸியன் பத்திரிகையை எடுத்துத் தன் நீலநிற விழிகளை அதன் மீது விழுத்தி நகர்த்தினான். ஒசாமா பின்லேடனின் மகன் இருபது வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா பின்லேடனைச் சர்வதேசத் தீவிரவாதியாக அமெரிக்கா அறிவிருந்தமை பிரதான செய்தியாக வரையப்பட்டிருந்தது. நீலக்கண்களில் ஹம்ஸாவினுடைய மெலிந்த உருவமும், கண்களில் வழிகின்ற முதிர்வின்மையும் அவனை உறுத்துவதாக உணர்ந்து கொண்டான். பின் தாளமுடியாத வெறுமையுடன் பரிமாறுபவரை அழைத்து மீண்டும் மதுவினை வரவழைத்துக்கொண்டான். அது முதலில் அருந்திய மதுவாக இல்லாமலிருந்தது. மழுங்கிய ஒளிபட்டு தெறிக்கும் மேசையின் கண்ணாடியை அழுத்தமாகத் துடைத்து அதில் முகத்தினை உற்றுப் பார்த்தான். மெல்லிய நடுக்கமொன்றினை விழிகளில் உணர்ந்தவன் ஒரே தடவையில் மேசை மீதிருந்த மதுவை அருந்தி முடித்தான். பின் வேகமாக வெளியேறி நீண்ட வீதியில் அசைந்துகொண்டிருக்கும் தொடர்புகளற்ற சனத்திரளில் கலந்து தன்னைத் தொலைத்துவிட முழுதுமாக முயன்றான். அறிமுகமில்லாத அந்தச் சனத்திரளின் தனியன்கள் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்ளும்போது எழுகின்ற மகிழ்வில் நீலநிற விழிகளில் இருந்த நடுக்கம் குறைவதை உணர்ந்துகொண்டான். எதுவுமற்றதான ஒருவித வெறுமை தன்னைச் சுற்றிக் கிடப்பதையும் கொண்டாட்டமான பழைய மனநிலைக்குத் திரும்ப முடியாதிருப்பதையும் உணர்ந்துகொண்ட போதில் உருவாக்கி வைத்திருந்த பெருமிதம் சிதையத்தொடங்கியது. ஏதேதோ வார்த்தைகளையெல்லாம் அவனையறியாமல் உதடுகள் உச்சரித்தன. பாரிஸின் நெருக்கடி மிகுந்த அந்தத் தெருவில் அமைந்திருந்த ஒரு நவீன குளிரூட்டப்பட்ட விற்பனை நிலையத்தில் மூன்று யூரோவிற்கு ஒரு போத்தல் வைனை வாங்கினான். வெளியே வந்து ஒரு பாண் வேண்டுவதற்காக மிகுதிச் சில்லறையை எண்ணியபோது இருபது சதம் குறைந்திருந்தது. தன்னைச் சுற்றி மனதினை அலைவித்தான். வீதியின் ஓரங்களில் ஒருவர் இருவராக ஆங்காங்கு பெண்கள் கூடி நின்றனர். அவர்களின் உதடுகள் அசைந்து கொண்டிருந்தாலும் விழிகளாலும் உடலாலும் அழைப்பு விடுத்துக்கொண்டிருப்பதை அவதானித்தவன், அந்த நிலத்தில் காறித்துப்பினான். தன் கன்னத்தில் அறைந்துகொண்டான். அலைகின்ற மனதினை கால்களுக்கு இறக்கிய போதில் அவன் நின்றிருந்த இடம் மெதுவாகப் பின்நோக்கி அசையத்தொடங்கியது. உடல் அமைப்பையும், உடை பாவனைகளையும் வைத்து அவளை ஒரு தென்னிந்திய நாட்டவள் என்று உணர்ந்துகொண்ட அவன், நீல விழிகள் மின்ன அவளிடம் கையேந்தினான். சிவந்த உதடுகளை மென்மையாக அசைத்தான். அது அவளிடம் இருபது சதம் தரும்படி அதிர்வுகளை உருவாகியது. அப்போது அவனது நீல விழிகளில் தெறித்த அதிகாரம் அவள் நிமிர்ந்து பார்த்த ஒவ்வொரு தலைகளிலும் ஒளிவளையம்போல மினுங்கியது. சரியாக எட்டு மாதங்களுக்கு முன் பாரிஸின் சாள்ஸ் து கோல் விமான நிலையத்தில் தன்னை மணந்துகொண்டவனை எதிர்கொண்ட போதும் இதுபோன்ற ஒரு வளையத்தை உணர்ந்திருப்பதாகக் கண்டுகொண்டாள். 3) அவளது போட்டோ கிடைத்த போது எடுப்பான மார்பகங்களைத்தான் முதலில் கவனித்தான். பழுப்பு நிறமான அவளையே திருமணம் முடித்து ஃபிரான்சுக்கு அழைத்தும் கொண்டான். கர்ப்பிணியான அவளை வேலைக்குச் செல்லும் படி ஆக்கினை செய்தான். அரசின் கொடுப்பனவுகளை நம்பியிருக்கும் அவனது வார்த்தைகளையும், செயல்களையும் புரிந்துகொள்ளச் செய்துகொண்டிருக்கும் வேலை உதவியது. அவனை மட்டுமல்ல படாடோபமாக இயங்குவதாக நம்பிக்கொண்டிருக்கும் பாரிஸின் முகத்தினையும் அடையாளப்படுத்தியது. பாடப்புத்தகத்தில் உலக அதிசயம் என வியந்து கற்று மூளைக்குள் ஏற்றிக்கொண்ட ஈபிள் கோபுரம் இப்போதெல்லாம் இரும்புக்குவியல் போல் கிடந்தது. அந்தக் குவியலுக்குள் சிறை வைக்கப்பட்ட ஒரு சுதந்திரதேவியை நினைத்துப் பார்ப்பாள். அதனையே தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்வாள். தன் தலைக்குள்ளும் அதே போன்றதான நரம்புக் குவியல் வெண் புழுக்கள் போல குவிந்திருப்பது போலவும் அதிலிருந்து அன்பு ,பாசம் ,நேசம், குலப்பெருமை ,பண்பாடு எனப் பல கூக்குரல்கள் கேட்பதுபோலவும், அந்தக் குரல்கள் சயனைட்வில்லை கட்டிய கயிறுபோல முறுகிக் கிடப்பதாகவும் தன்னுடன் வேலைசெய்யும் வியட்நாமிய நண்பிக்குத் தினமும் சொல்லுவாள். வியட்நாமிய நண்பி தான் அவளுக்குப் பாரிஸிலிருக்கும் ஒரு உண்மையான நண்பி. கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அவள் குறித்து ஒரு முறைப்பாட்டினை முதன்மையாளருக்குத் தெரிவித்த நாளில், அவள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள். விசாரணைகளை நடத்திய தான் இப்படியானதொரு விசாரணைக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருந்ததில்லை என்று பின்னொருநாள் வியட்னாம் பெண், நண்பியாகிய பின் சொல்லி இருந்தாள். அப்போது அவளின் கண்களில் படர்ந்த ஒளி பிறகு எப்போதுமிருந்ததில்லை. அந்த விசாரணையின் போது உதவி செய்தமைக்காக வியட்நாமிய நண்பிக்கு நன்றி சொல்வாள். அப்படிச் சொல்லும் போதெல்லாம் வியட்நாமியப் பெண் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுவாள். பின் அந்த முத்தத்திற்காகவே அவள் அடிக்கடி நன்றி சொல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். தன்னைவிட இருபது வயது அதிகமான பிரெஞ்சு மனிதரைத் திருமணம் செய்து இங்கு குடிவந்த அந்த வியட்நாமிய பெண், ஒவ்வொரு நாளையும் ஆனந்தமாகவே கொண்டாடுபவளாக காட்டிக்கொண்டாள். எப்போதாவது தன்னை மீறித் தன் கதைகளைச் சொல்லும் சில நாட்களில் கண் கலங்கி இருக்கிறாள்.தற்போது வரை, பாரிஸின் இருபதாவது வட்டாரத்தில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில்தான் தன் கணவருடன் வாழ்கிறாள். அவள் முதன்முதல் வியட்னாம் பெண்ணுடன் பேசியபோது தன்னைச் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர் என்று அறிமுகப்படுத்தினாள். உடனேயே அவளிடம் புத்தரின் நாடு தானே என்று குறுகிய கண்கள் விரியக் கேட்டாள். ‘ஓம்’ என்று தன்னையறியாமலேயே சொல்லியபின் ‘புத்தரின் நாடு’ என்று மறுபடி சொல்லி மெதுவாகச் சிரித்துக்கொண்டாள். 4) தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க நூறு யூரோ பணமும், ஏதாவது ஒரு உணவுவிடுதியில் உணவும் வேண்டித்தந்தால் போதுமானது என்று, அறிமுகமாகி பத்தாவது நிமிடத்தில் எனக்குச் சொன்னவளை உற்றுப் பார்த்தேன். இருபத்தைந்துகளில் இருக்ககூடும். எங்காவது ஒரு கல்லூரியில் படிப்பவளாகவும் இருக்கக்கூடும். அன்று அவளின் தொலைபேசி இலக்கத்தை மட்டும் பெற்றுக்கொண்ட நான், அடுத்தநாள் இரவே அவளை அழைத்துக்கொண்டேன். இத்தாலியைச் சேர்ந்த அவள், வேலை செய்து படிக்கலாம் என்று இங்கு வந்ததாகவும் தற்சமயம் கல்வியை விட வேலைதான் முக்கியமாக இருப்பதாகவும் அந்த இரவில் கூறினாள். நூறு யூரோவை எண்ணி மேசையில் வைத்தேன். அவளது அகன்ற தொடைகளில் தலையினை புதைத்துக்கொண்ட நான், நான் வேலை செய்யும் ரெஸ்ரோரண்டில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக உறுதியளித்ததன் பின் அவள் உடல் கொஞ்சம் மென்மையானது. அவளது சிறிய மார்பினில் முத்தமிட்டு முலையை வருடிய அந்தக் கணத்தில் என் இரண்டாவது வாழ்வு ஆரம்பமாகியது போல உணர்ந்தேன். அந்த நாளின் பின் வாரத்தில் இரண்டு தடவைகளாவது அவளுடன் உணவருந்தவும் இரவைக் கழிக்கவும் ஆரம்பித்தேன். பின்னர் நான் வேலை செய்த அதே உணவகத்தில் அவளையும் வேலைக்குச் சேர்த்துவிட்டேன். அன்றிலிருந்து அவள் என்னிடம் பணத்தினை எதிர்பார்ப்பதில்லை. . தாய், தனது தந்தையை விவாகரத்துச் செய்தபின் மணந்துகொண்டவன் தன்னுடன் படித்த நண்பன் என்றும், அவன் தன் தாயைவிட இருபது வயது இளையவன் என்றும், நேரகாலமின்றி எந்த நேரமும் இருவரும் ஒன்றாக இருப்பதால் தான் தாயிடமிருந்து பிரிந்து வந்துவிட்டதாகவும், ஆனாலும் தாயைத் தன்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றும் கூறினாள். இன்னும் தாய் மற்றும் தந்தையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை எனக்கு அறிமுகம் செய்வதாகவும் கூறினாள். நான் எந்தத் தந்தை என்று கேட்கவில்லை. என் குடும்ப விபரங்களைக் கேட்டாள். நான் ஒரு தனியன் என்றேன். அவளது வாயில் இருந்து வரும் சிகரெட் மணம் என்னைப் பலதடைகள் உச்சம் கொள்ள வைத்திருக்கிறது. புணர்ச்சியின் பின் அவள் தருகின்ற சூடான தேநீர் அற்புதமானது! இதை அவளிடம் பகிர்ந்துகொள்ளும் போது ... ‘நீ இலங்கைக்குப் போகும்போது என்னையும் அழைத்துச்செல்வாயா?’ என்று மட்டும் கேட்பாள். 5) அவனை நான் சந்தித்தது ஒரு எதிர்பாராத நேரத்தில், தமிழர்கள் மிக அதிகமாக வந்துபோகும் லா சப்பலின் பிரதான வீதியில் நின்றுகொண்டு ‘டேய் நீங்கள் எல்லாரும் கள்ளர். உங்கட பெண்டுகள் எல்லோரும் வேசிகள்’ என்று இடைவிடாது கூறிக்கொண்டிருந்தான். யாரும் அவனருகில் செல்லவில்லை எதிர்ப் புறமாகவிருந்த வீதியூடாக அவனைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தனர். அருகிலிருந்த ஒரு கடை உரிமையாளர் வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டுவந்து அவன் மீது ஊற்றினார். ஒளி மழுங்கிய அந்தவேளையில் பனி தூவத்தொடங்கி இருந்தது. அவன் மீது ஊற்றிய தண்ணீர் அவனை நனைத்து கோடென ஓடிக் கடை உரிமையாளரின் காலடி வரை நீண்டு கண்ணீரைப் போல தழும்பு விழுத்தி உறைந்து போனது. ‘ஏன் தமிழர்கள் எல்லோரும் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை அல்லது தெரிந்து கொண்டும் தெரியாத மாதிரி இருக்கக் காட்டிக் கொண்டேன். அன்றிரவு அவளுடன் இருந்தபோது கேட்டாள். ‘அந்த மனிதரின் கண்களில் இருந்த நடுக்கத்தைப் பார்த்தாயா?’ என்று. வியட்நாமிய பெண் அவளது தொலைபேசிக்கு அழைத்த நேரத்திலிருந்து அவள் மறுமுனையில் அழுது கொண்டே இருந்தாள். நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியபோது மட்டும் வேண்டாம் என்று கூறினாள். தன் கணவரையும் அழைத்துக்கொண்டு அவளின் வீடு சென்றவளுக்கு அதன் பின் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கனவு போலவே இருந்தது. கணவரின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறைந்த வாடகைக்கு அவளைக் குடியேற்றும் வரை எதையுமே யோசிக்கவில்லை. வியட்நாமில் கூட இப்படியான கொடுமையைத் தான் கண்திடல்லை என்று அவளது முதுகைத் தடவியபடி அழுதாள். முதுகிலும் தொடைகளிலும் இருந்த காயங்களைப் பார்த்த காவல்அதிகாரி அவளது கணவனைக் கைது செய்திருந்தனர். அவன் முதலில் எதையும் பேசவில்லை பின் மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான் ‘இருந்து பார்! அந்த எளிய தோறையை எரிச்சுப்போட்டு நானும் சாவன்’. அவளை அந்தக் கடையில் பார்த்த மூன்றாவது தடவை ‘‘என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?’’ என்று கேட்டேன். நிமிர்ந்து பார்த்தவள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றுவிட்டுத் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தாள். விரல்களின் ஊடாக கடந்த நடுக்கம் அவள் அடுக்கிக்கொண்டிருந்த பொருள்களில் விழுந்து வழிந்து அவள் நின்ற நிலத்தை நடுங்க வைப்பதாகக் கால்களால் உணர்ந்து கொண்டவள் மீண்டும் நிமிர்ந்து எனக்குக் கணவரும் இருக்கிறார். ‘தயவு செய்து பொறுப்பாளரிடம் ஏதும் முறையிட்டுவிடாதீர்கள்!’ என்றாள். நீண்ட தலைமுடியும் பழுப்பு நிறமுடைய உடலும், உதடுகளின் ஒருங்கிய வளைவும் முதல்நாள் இரவு பார்த்த நீலப்படத்தில் நடிக்கவைக்கப்பட லத்தீன்காரியை நினைவூட்டியது. 6) பாரிஸின் அதிகபட்ச குளிர் நிலவிய நாளொன்றில் சனநெருக்கடி மிகுந்த அந்த வீதியில் சுருண்டு ஒடுங்கிப் போர்வைக்குள் தன்னை அரைகுறையாக மூடிக்கொண்ட அந்த மனிதரை, நகர நிர்வாகப் பிரிவினர் காப்பகம் ஒன்றுக்கு அழைத்துச்சென்றனர். அம்மனிதரின் இரு விழிகளும் நீலநிறமாக இருந்தன.போர்வையும் உணவும் வழங்கி நீண்ட ஒரு மண்டபத்தினுள் அழைத்துச்சென்றார்கள். அந்நீலவிழி மனிதன் தனக்கு அருகில் இருந்தவனை அருவருப்புடன் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவனது கனவில், கொடிய மிருகம் தன்னைப் புணர முயற்சிப்பது போலவும் தான் நாயாக மாறி வாலை ஒடுங்கித் தன் குதத்தினைப் பாதுகாப்பது போலவும் மெல்லிய பெருமூச்சுசுடன் மிகுந்த சுமையொன்று தன் மீதுவிழுந்து அமிழ்த்துவது போலவும் கண்டான். சட்டென யாவும் மாறி வசந்தகால மரமொன்றின் சாம்பல்நிற இலைகளின் மறைவில் புணரும் அணில்களைக் கண்டான். அந்த மௌனத்தில் பாம்பு விடும் கொட்டாவியின் மணம் எழுந்தது. விறைத்த குறியொன்று தும்பிக்கைபோல நீண்டு வளர்ந்து வாயருகில் வருவதுபோல உணர்கையில் திடுக்கிட்டு எழுந்தவனுக்கு தன் முதுகோடு ஒட்டியபடி கிடந்த உடலையும் கன்னங்களுக்கு அருகில் நீலவிழிகளையும் கண்டான். அந்த மனிதனின் தொடைகள் வரை இறக்கப்பட்டிருந்த ஆடையையும், விறைத்த குறியைத் தன் மீது திணிக்க முயன்று கொண்டிருப்பதையும் பார்த்தான். மறுநாள் அதிகாலையில் சிவந்து கிடந்த அந்த நீலவிழிகளைப் பார்த்தவன், அங்கிருந்து தப்பியோடி லா சப்பலை வந்தடைந்தான். நெருங்கி வரும் நிழல்களைக் கண்டு அச்சமுற்று ஒதுங்கினான். எங்கிருந்தோ ஒரு கரம் வந்து ஆடைகளை உருவுவது போலவும், கண்களைப் பொத்தி விளையாடுவது போலவும் உணர்ந்தான். மூதாதையர் வழிபட்ட ஆதித்தெய்வமொன்று நிர்வாணமாகத் தன் முன் நிற்பதுபோலவும், வரமொன்று கேள் என்று அருகில் வருவது போலவும் கண்டான். திடீரென அதுவொரு பேருந்தாக மாறி அவனருகில் நின்றது. பாய்ந்து சுவரோடு தோளை ஒட்டிக்கொண்டு எல்லோரையும் பேசத்தொடங்கினான். ‘உன் வாழ்வைச் சிதைக்காதே!’ என்ற வியட்னாம் நண்பியின் முகத்தினைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். அவளின் கரங்களைத் தடவியபடியே அவளிடம், ‘உனக்குத்தெரியும் தானே எனது வாழ்வு எப்படிப்பட்டதென்று, ஆனாலும் நாமும் வாழத்தான் வேண்டும்! எனது கணவன் கொஞ்சம் வயதானவனாக இருப்பதால் இப்போது துன்பமில்லை ஆனாலும் அவனும் முதல் மனைவிக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல...’ என்று முடிக்க முடியாமல் தொடர்ந்தவளின் கரங்களை அழுத்தினாள். அந்த இரவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. எங்காவது அந்தப் பழுப்பு நிறத்தோல் தென்படுகிறதாவென நீலவிழிகளைத் தூர எறிந்து தேடினான். அவனது உடலில் இருந்து வந்த வியர்வை வாசம் அவன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் அந்தக் காப்பகத்தில் அவனால் தனித்திருக்க முடியாதென உணர்ந்துகொண்டான். அவர்கள் கொடுத்த பணத்துடன் அங்கிருந்து வெளியேறி பழுப்பு நிறத்தோலுடைய அவனைத்தேடத் தொடங்கினான். இப்போதெல்லாம் நெருக்கடி மிகுந்த அந்த வீதியில் அவனைக் கடக்கும் ஒவ்வொரு பழுப்பு நிறத் தோலுடையவர்களையும் உற்றுப்பார்த்துவிட்டு மௌனமாக ஒதுங்கித் தன்னுடலை வருடிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான். நான் அவளைத் தேடி அநேக நாட்கள் அந்தக் கடைக்கு செல்லத்தொடங்கினேன். பின்னொருநாளில் அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டேன். பலி கொடுக்கப்பட்ட ஒரு ஆட்டின் கண்களை ஒத்திருந்தன அவளது கண்கள். பரந்த முதுகும் ஒடுங்கிப்பின் அகன்ற பின்புறங்களும் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தன. சிலநாட்களில் அவள் தொலைபேசி இலக்கத்தைத் தந்துவிடவும் கூடும். அவளது அறைக்குள் நுழைந்தபோதே “யார் வந்திருந்தார்கள் என்று கேட்டேன்.” மனம் ஒரு ஆண்வாடையை அந்த அறையில் தேடி முகர்ந்து தோற்றுக் கொண்டிருந்தது. முகம் தெரியாதவொரு ஆணுரு கதிரையில் மேசையில் கட்டிலில் என நான் அவளைப் புணர்ந்த இடங்களிலெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருந்தது. பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே "இன்று உனக்கு பிறந்தநாள் அல்லவா வாழ்த்துக்கள் செல்லம்". என்றபடி உதடுகளில் முத்தமிட வந்தவளை விலக்கினேன். கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அவள் கைகளில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய கண்ணாடிக் குமிழ் கட்டிலருகில் விழுந்து சிதறியது. திகைத்து நிமிர்ந்தவள் ‘போடா நாயே வெளியே’ என்று கத்தினாள். பொலீசுக்கு அடிக்க முதல் இங்கிருந்துபோய் விடு என்று எச்சரித்தாள். கட்டிலருகில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துகள்களை பார்த்தபடி வெளியேறினேன். கதவை அறைந்து பூட்டினாள். திரும்பிக் கதவை எட்டி உதைந்துவிட்டு மிக வேகமாக இறங்கினேன். இறுதிப்படிகளை அண்மித்தபோது, எதிரில் இருந்த சுவரில் யாரோ எப்பவோ வரைந்திருந்த கண்களாலான குறியின் படம் என்னை நோக்கியிருந்தது.
 2. "ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு". ????? தீரிஸ்ராரில பிளட் இருந்திச்சா???
 3. அக்கா ஒரு அச்சு ஊடகத்திற்கு அனுப்புவம் என்ற நினைப்பில் அப்படி செய்தது.... மன்னிக்கணும் யாழ் இணையம் என்னை அடையாளப்படுத்திய ஒரு தளம் இதனை எப்பவும் மறப்பதில்லை. நன்றியும் அன்பும் அக்கா
 4. கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது. இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்தது. அவன் கொல்லப்பட்டவன்! ஆம் ஒரு மாலையின் முடிவுக்கும் இரவின் ஆரம்பத்துக்கும் இடையில்,முகத்தில் முடியேதுமில்லாதவர்களால் கொல்லப்பட்டவன். எதற்காக கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் பேரில் ஒருவனாக கொல்லப்பட்டவன். காற்றின் கனதிகளாய் சாவின் செய்திகள் நிறைந்துபோய் நின்ற நாட்களில், எங்காவது சென்று வாழ்ந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டலைந்த நாளொன்றில் கொல்லப்பட்டவன். நான் பரிசின் புறநகரொன்றில், ஓரளவு நெருக்கம் குறைந்த அடுக்குமாடிகள் கொண்ட இடத்தில் வசிக்கிறேன். இங்கேயே இந்த ஒதுக்கமான இடத்திலேயே யாருமறியாமல் இறந்துபோகவும் விரும்புகிறேன். எப்போதும் பூட்டப்பட்ட கதவுகளின் பின் ஒரு பூனையைப் போல சத்தமின்றி நடந்து பழகிய கால்கள் எனதாயின. படிகளிலோ பக்கத்து வீடுகளிலோ சப்தம் ஏதும் கேட்டால் அதே இடத்தில் அசையாமல் நின்றுகொள்ளவும்,அமைதியாக கதவின் துவாரத்தின் ஊடாக அவதானிக்கவும் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன். இந்த ஆண்டின் வரும் மாதத்தின் முதல் கிழமையோடு நான் பிரான்ஸில் அகதியாகி சரியாக இரண்டு வருடங்களாகின்றன. நான் குடியிருக்கும் இந்தவீடு ஒரு தமிழருடையது. ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்களால் இந்த அடுக்குமாடித்தொடர் நிறைந்தபோது தன்னால், தனது பிள்ளைகளை இனியும் இந்த இடத்தில் வைத்திருந்து வளர்க்க முடியாது எனவும், அதனால் தான் வாடகைக்கு கொடுக்க முன் வந்ததாகவும் கூறினார். தமிழரைத்தவிர வேற்றினத்தவருக்கு வாடகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அதைஎங்கட ஆக்களுக்கு செய்யும் உதவியாகத் தான் நினைப்பதாகவும் பேச்சின் இடையில் குறிப்பிட்டதாக நினைவு. இருக்கும் இடத்தை வீடென்பவர்களுக்கு மத்தியில், குடிக்கவும் படுக்கவும் நினைத்தபோது சமைக்கவும் எனக்குக் கிடைத்திருப்பது வீடென்றபோதில் பேறுதான். வீட்டுக்குக் குடிவந்த மூன்றாவதுநாளில் மெத்தைக்கும் கட்டில் விளிம்புக்கும் இடையில் கிடந்த ஒரு கொப்பியை எடுத்து விரித்தபோது முதற்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தது; ”முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்”. நான் குடியிருக்கும் வீட்டுக்கு நேரே கீழ் வீட்டில் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் மட்டுமே இருக்கிறார்கள். காதலர்களோ அல்லது திருமணம் முடித்து இருப்பவர்களோ தெரியவில்லை. களையான அந்த இளம்பெண்ணின் முகத்தில் ஒருமென்மையான சிரிப்பு இருக்கும். அனேகமாக அவர்கள் இருவரும் சம வயதுடையவர்களாக இருக்கலாம். சில நாட்களில் அந்தப் பெண் என்னைக் கடக்கும்போது மட்டும்தான் மெல்லியதாகப் புன்னகைப்பதைக் கண்டுகொண்டேன். எனக்கும் அந்தப் பெண்ணைக் பார்க்கையில் பெரியம்மாவின் மகள் அமுதா அக்காவின் நினைவுகள் தான் வரும் . அவளைப் போலவே ஒற்றைநாடி உடல். மெல்லிய கழுத்து. நடக்கும்போதும், திரும்பும்போதும் எந்த ஒரு அதிர்வுமில்லாமல் இலகுவாக திரும்புவது என இந்தப் பெண், எனக்கு என் ஒன்றுவிட்ட அக்காவை நினைவூட்டிக் கொண்டிருந்ததால் நானும் பதிலுக்கு சிரிப்பதுண்டு. என்றாவது ஒருநாள் அமுதா அக்காவின் போட்டோவினை அவளுக்குக் காட்டவேண்டும் என்றும் நினைத்ததுண்டு. ஒருநாள் மதியம், மெதுவாக வீட்டுக்கதவினைத் தட்டும் ஓசைகேட்டது. பூனைமாதிரி சப்தமில்லாமல் நடந்துசென்று கதவின் துளையூடாகப் பார்த்தேன். தலையை துணியினால் சுற்றி மொட்டாக்கு போட்டபடி கீழ்வீட்டில் வசிக்கும் பெண் பதற்றத்துடன் நின்றாள். கணநேர சிந்தனையின்பின் கதவினைத்திறந்தேன். சடாரென உள்ளே நுழைந்த அவள், கதவை மெல்லியதாக சாத்தி விட்டு கையில் இருந்த ஒரு பெரிய பையை இங்கே வைக்கமுடியுமா என்று கேட்டாள். நாளை காலை தான் வந்து எடுத்துக்கொள்ளுவதாகவும் அதுவரை கவனமாக வைத்திருக்கமுடியுமா என்றும் கேட்டாள். என்னை மீறி தலையை ஆட்டினேன். வீட்டின் வரவேற்பறையில் ஓட்டப்படிருந்த காலம் தந்த தலைவன் என எழுதியிருந்த பிரபாகரனின் படத்தையும், அருகிலேயே இருந்த கேர்ணல் பருதியின் மாலைபோட்ட படத்தையும்பார்த்தவள், தன் மார்பில் கைவைத்துவிட்டு, எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு "நீ செய்யும் இந்த உதவிக்காக நன்றி நன்றி" என்று பல தடவைகள் கூறினாள். சட்டென்று அவள் சப்தமில்லாமல் சென்றுவிட, கனம் மிகுந்த அந்தப் பையை இழுத்துச்சென்று கட்டிலின் கீழ் தள்ளி வைத்தேன். கீழ்வீட்டில் இரண்டு நாள்களும் புதிய புதிய மனிதர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். சில நாள்கள் கழிந்த நிலையில், இணையத்தளமொன்றின் தமிழ் செய்தியில், கீழ்வீட்டில் வசித்த பெண்ணின் படத்துடன், பாரிஸின் புளோமினில் என்ற புறநகர்ப் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்,உள் முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்றும் கொலையாளிகளை தேடிவருவதாகவும் காவல்துறை அறிவித்திருப்பதாக இருந்தது. திகைப்புடன் படத்தினைப் பார்த்தேன். எழுந்துசென்று அவள் கொண்டுவந்துதந்திருந்த பையை இழுத்தெடுத்துத் திறந்தேன். அதற்குள் அப்துல்லா ஒச்சலானின் புகைப்படங்களும், பல குறிப்புப் புத்தகங்களும் அந்தப்பெண்ணின் அல்பம் ஒன்றும் பாஸ்போட், வங்கி அட்டை மற்றும் இன்னும் பல ஆவணங்களும்கிடந்தன. அல்பத்தினை புரட்டியபோது இராணுவ உடையில் மிக அழகான புன்னகையுடன் அந்தப் பெண் நின்றிருந்தாள். என்னையறியாமல் எனது விரல்கள் அந்தப் புகைப்படத்தை வருடின. எழுந்து எனது நாட்குறிப்புப்புத்தகத்திலிருந்து அமுதா அக்காவின் படத்தினை எடுத்தேன். அமுதா அக்காவும் அதேபோன்றதான ஒரு சீருடையில் அதேபோன்றதானதொரு புன்னகையுடன் நின்றிருந்தாள். அவர்கள் அவர்கள் யாருமல்ல, எனது மொழி பேசுபவர்கள்தான். எனது இறைவனை வணங்கியவர்கள்தான். எனக்கும் - அவனுக்கும் - அவர்களுக்கும் இடையில் இடைவெளியேதும் இருந்ததில்லை. மொழியில் நிறத்தில் மாறுபட்டிருந்ததுமில்லை. ஆனால் அவர்கள் கொல்லத் தூண்டினார்கள். ஏனென்றால் அவர்களிடம் ஆயுதம் இருந்தது. ஆயுததாரிகளின் சிநேகத்தால் ஊட்டப்பட்ட தைரியம் இருந்தது. கொலை ஒன்றை சிநேகிப்பதற்கான மனதும் இருந்தது. முதல் முறை வாசிகசாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றார்கள். இரண்டாம் முறை கூட்டத்தினை நடாத்த உதவிசெய்தார்கள். மூன்றாம் முறை கூட்டத்தினை நடாத்தினார்கள். முதல்முறை மக்களுடன் இருந்தார்கள். இரண்டாம்முறை ஒரு குழுவாக இருந்தார்கள். மூன்றாம்முறை எல்லாவற்றிலிருந்தும் விலகி அப்படியாகிய எல்லாவற்றிக்கும் மேலாக தங்களை உயர்த்திக்கொண்டார்கள். அவர்கள் முதலில் மக்களிடம் உணவு கேட்டார்கள். இரண்டாம்முறை ஆடுமாடுகளை பிடித்துச் சென்றார்கள். மூன்றாம்முறை நகை, பணம், கார், சைக்கிள் என கிடைப்பதை எடுத்துச்சென்றார்கள். முதல் தடவை மக்கள் பேசினார்கள். பின் முனுமுனுத்தார்கள், இறுதியாக மௌனித்தார்கள். ஆனாலும் தமக்குள் பேசிக்கொண்டார்கள் "இது ஒன்றும் மேலிடத்திற்கு தெரியாது. இவங்கள் இங்கை இருக்கிற சில்லறயள பிடிச்சுக்கொண்டு துள்ளுகினம். ஒருக்கால் அறிவிச்சால் காணும்". மக்கள் நம்பினார்கள். நம்பிக்கையோடிருந்தார்கள். பின்னொரு நாளில் துணைப்படை அணிவகுப்பில் அவர்களைப் பார்த்தபோது அவர்களே பெருமூச்சுடன் தலைகுனிந்தனர். எங்கும் யுத்தத்தின் வேர்கள் மீண்டும் உயிர்த்தன. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலைபோல இறுக்கத்தொடங்கியது. நாட்டின் எந்த ஒரு மூலையிலும் எந்த நேரத்திலும் என்னவும் நடந்துவிடக்கூடும் என்ற அச்சம் மிகுந்திருந்தது. எல்லவழிகளும் துண்டாடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் யாழ்குடா நாட்டில் குறிகாட்டிகளை வைத்துக் கொலைசெய்யத்தொடங்கினர். அவர்களில் சிலர் இராணுவத்துடன் நட்பாகினர். சிலர் மக்களிடம் போர்க்கால நிதி என்று மிரட்டிப்பெற்ற பணத்துடன் தலைமறைவாகினர். பணத்திற்காக, அனைத்தையும் துறந்து சிலுவை சுமந்தவர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். மிஞ்சியோரில் சிலர் கொல்லப்பட்டனர். அவன் இராணுவத்தால் நீ கொல்லபடக்கூடும், எதற்கும் நீ போறது நல்லம் மச்சான் அவங்கள் வேற உவங்களோட திரியுறாங்கள் - இதுதான் அவன் இறுதியாக எனக்குச் சொன்ன வார்த்தை. அன்று மாலை கிரவுண்டில் இருந்து திரும்பும் போதும் இப்படித்தான் கூறினான். எனக்கும் காரணம் தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தே செய்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நிச்சயம் இதனைச் செய்வார்கள் என்பதை அவன் ஊகித்தே இருந்தான். எனக்கும் அவனுக்கும் இடையே எந்த ஒளிவு மறைவுகளும் இருந்ததில்லை. அவனின் காதல் கடிதத்ததைக் கூட அவன் சொல்லச்சொல்ல எழுதி இருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவனுடன் துணைக்குச் சென்றும் இருக்கிறேன். நான் செல்லும் திசை குறித்த கேள்விகள் நிறைய அவனிடம் இருந்தது. சிலவற்றை கேட்டும் இருக்கிறான். ஆரம்பம் முதலே அவர்களின் நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தவன், இப்போது அதிகம் என்னைத் திட்டவும் தொடங்கி இருந்தான். அப்போதெல்லாம் எல்லாம் சரி வரும், வடிவா பழகுவினம் என்று சிரித்த நான் இப்போது மௌனமாகவே இருக்கத் தொடங்கியிருந்தேன். எனது மௌனிப்பு கையறுநிலை தான் என்று தெளிவாக புரிந்துகொண்டு பேசாமல் இருப்பதும், எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தரப்படுவதுமாகவே அவனது பொழுதுகள் இருந்ததன. அவனுடன் பிறந்தவர்கள் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட, தாய் தந்தையர் தனித்துப் போவார்கள் என்று அவர்களுடனேயே இருந்தவன். கல்லூரி முடித்து வெளிவாரிப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தான்,கிடைக்கும் முதல் வேலைக்கே செல்வது என்றும், பிற்காலத்தில் ஒரு சிறுவர் இல்லம் மற்றும் பெரியதொரு பண்ணை அமைக்கவேண்டும் என்றும் தன் கனவுகளை எப்போதாவது தன்னை மீறிச் சொல்லுவான். அந்த இரவின் ஆரம்பப் பொழுதில், அவனைப் பேர் சொல்லி அழைத்தவர்களுடன் அவர்களும் வந்திருந்தார்களாம். அவனை அழைத்து எனது வீட்டுக்கு போகவேண்டும் தங்களுடன் கூட வரும்படி அழைத்தார்களாம். விளக்குடன் வந்த தன்னை "ஒன்றுமில்லை, நீங்கள் போங்கோ அம்மா இவன் இப்ப வந்திடுவான்" என்று அவர்களில் ஒருவன்தான் சொன்னானாம். அப்படிச் சொன்னவன் சிலகாலத்திற்குமுன் தினமும் வீட்டுக்கு வந்திருந்தவன் என்பதால் தான் உள்ளே சென்றுவிட்டதாக அம்மா பின்னொருநாளில் சொன்னாள். அப்படிச் சொன்னவனுக்கு, முன்பொருநாள் தான் கடும்புப்பால் காய்ச்சி காவலிருந்து கொடுத்ததைச் சொன்னபோது ஓங்கி அழுதிருந்தாள். அவன் மறுத்திருக்கிறான். அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உரையாடல் நீண்டுவலுத்த அந்தவேளையில் எழுந்த வெடியோசை எனது வீட்டின் சுவர்களில் எதிரொலித்தபோது நான் எனது வீட்டில் அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டேன். ************************************************************ மேல் வீட்டில் ஒரு மனிதன் தனித்து இருப்பதாகவும், அவன் சிலசமயங்களில் கூச்சலிடுவதாகவும், "கொண்டுட்டாங்கள், கொண்டுட்டாங்கள்” என்று அழுவதாகவும், ஆனால் அநேகமான வேளைகளில் தலைகுனிந்தபடி எல்லோரையும் கடந்துபோவதாகவும் அந்த மனிதரால் இதுவரை ஒருவருக்கும் பிரச்சனை வந்தது இல்லை என்றும் கீழ் வீட்டில் புதிதாக குடிவந்தவர்கள் என்னைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் ஒருநாள் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டேன். இன்னொருநாள் தபால்பெட்டிக்குள் இருந்து கடிதங்களை எடுத்தபோது எப்போதோ தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான துண்டுப்பிரசுர அழைப்பிதழ் கிடந்தது. இன்னொரு நாள், தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகேட்கும்பேரணி, ஐநாவே பதில் கூறு என்ற இரு தலைப்புக்களில் தமிழிழுலும் பிரெஞ்சிலும் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் இருந்தது. அன்றைய தினமே, குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவிசெய்வதாகவும் அதனாலேயே அவர்களின் தாக்குதல் பலம் அதிகரித்திருப்பதாகவும் இணையச்செய்தி ஒன்றில் வாசித்தேன். உலகளாவிய பெருந்தமிழ்தேசியத்தை அமைக்க முன்வாருங்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகள் வந்திருக்கிறோம் என்ற கோரிக்கையோடு நாம் தமிழர் பிரான்ஸ் என்ற அமைப்பினரால் உரிமை கோரப்பட்ட தனியான கடிதமொன்று கதவின் கீழ்இடுக்கினூடாக இன்னொருநாளில் தள்ளப்பட்டிருந்தது. இன்று, கடந்த மூன்றுநாள்களாக அலைவுறும் அவாந்திர மனநிலையோடு மாடியில்இருந்து சூரியன் மறையும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்குவானம் அமைதியாக இருளடையலாயிற்று. வரவேற்பறை சுவரில் இருந்த படங்களைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் மீண்டும் கதவு தட்டப்படும் என்ற அச்சம் எழலாயிற்று. விரைந்து சென்று அறையின் மூலையில் குவித்து வைத்திருந்த உடுப்புக் குவியலுக்குள் ஒளிந்துகொள்ளத் தொடங்கினேன்.. நன்றி; புதியசொல் சஞ்சிகை
 5. தடமழிந்த நிலமிருந்து எழுகின்ற குரல் கேட்கிறதா, சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில் உறைந்து கிடக்கும் உயிர்ச்சூடு புரிகிறதா, துயர் துடைக்கும் கனவைச் சுமந்தவர்களின் நடையோசை எதிரொலிக்கிறதா, தோழர்களே.... கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா இவை, அன்றொருநாள் எம் நிலமெங்கும் ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா, இதோ, வீழ்ந்துபட்ட நிலமிருந்து தமிழ்க்கிழவி அழைக்கிறாள் யாருமில்லையாம் குரல் செவிமடுக்க, ************************************* காலம் தன்னை நிசப்தமாக்கிக்கிடக்கிறது. முதுநிலமும் நெடிதுயர்ந்த மரங்களும் கணப்பொழுதில் கலைந்துருமாறும் கார்த்திகை மேகங்களும் நீண்ட குரலெடுக்கும் கருங்குருவிகளும் அமைதியாகிக் கிடக்கிறது யுகத்தொடர்ச்சியின் சிதைவுகளிலிருந்து பரவுகின்ற ஓலமொன்று எல்லாம் மீறிக்கேட்கிறது. இருந்தும் பெருநிலமிருந்து பாடிக்கொண்டிருக்கிறாள் தமிழ்க்கிழவி அவள், பிளவுண்ட நிலமிருக்கும் தன்னுயிர்க்கூடுகள் உறங்கவொரு தாலாட்டைத்தான் பாடுகிறாள். உருகியழிந்தவர்கள் கனவின் மீதியைத்தான் பாடுகிறாள். ********************************** எங்களிடம் செவிகளில்லை எங்களிடம் விழிகளில்லை எங்களிடம் தான் மொழியுமில்லை வீரயுகமொன்றின் முடிவில் எஞ்சியவர்கள் நாம். எங்களுடையவை என்பதால் அழிக்கப்பட்டன எங்களுடையவை என்பதால் சிதைக்கப்பட்டன எங்களுடையவை என்பதால் உருமாற்றப்பட்டன ஊழியின் முடிவில் தனித்துவிடப்படவர்கள் நாங்கள். எங்கள் முதுநிலம் இன்னமும் கருவழிந்த வலி சுமந்தேயிருக்கிறது. எங்கே எங்கள் குரல்கள்…….. எங்கே எங்கள் பாடல்கள்…………
 6. சோழியன் அண்ணா, மிகவும் துயரமாக இருக்கிறது எத்தனை எத்தனை தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும், சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா. நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்...
 7. செம கதை ஒன்று நீண்டநாளுக்குப் பிறகு, எங்க அர்ஜுன் அண்ணை கையை கொடுங்கோ
 8. வல்வைப் படுகொலை என்ற ஒரு ஆவணப் புத்தகத்தை வல்வை ஆனந்தராஜ் (அப்போதைய பிரஜைகள் குழுவில் இருந்தவர். முன்னாள் வல்வை நகரசபைத்தலைவர் ) வெளியிட்டிருந்தார். இங்கே தேடுகிறேன் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மிக சிறப்பான பதிவு அது
 9. நன்றியும் அன்பும் சுவி ஐயா மிக்க நன்றி அம்மா .. அப்புறம் பேஸ்புக்கில அம்மாவைக் காணேம்
 10. நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது என யோசித்தபடி, தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான். மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ என்கிறதும், ஒருமணித்தியாலம் வா, இரண்டுமணித்தியாலம் செய்துதா என்கிறதும் ... ஒருநாளைக்கு இவருக்கு கிடக்கு வேலை.. பேஸ்புக்கை நோன்டிக்கொண்டிருந்தாலும் நினைவுகள் எல்லாம் விடிய வேலைக்கு போறது குறித்தே ஓடிக்கொண்டிருந்தது. லீவு நாளில் வேலைக்கு போறதென்பது கொலைக்களத்துக்கு வலிந்து செல்வதற்கு ஒப்பானது. ஊரில் சனிக்கிழமை பள்ளிக்கூடம் போகச் சொன்னால் என்னமாதிரியான விசர் வருமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத மனநிலைதான் லீவுநாளில் வேலைக்கு போவதிலும் வருகிறது. வேலை என்ற நினைப்பு மூளைக்குள் ஆயிரம் இலையான்களின் இரைச்சலை ஒரேநேரத்தில் உருவாக்கியது போல உணர்ந்தவன் போனை வைத்துவிட்டு நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டான். முகிலன் ஒரு அகதியாக இலங்கையிலும், வெளிநாட்டிலுமாக மொத்தம் பதினைந்து தடவைகள் இடம்பெயர்ந்தலைந்து இரண்டாண்டுக்கு முதல் பாரிஸினை வந்தடைந்திருந்தான், முதல் மூன்று மாதங்களும் எப்படிப் போனது என்று தெரியவில்லை பொலிஸ், கேஸ், பதிவு, அது ,இது என அலைந்து திரிந்ததில் நாட்களும் மிக வேகமாக போயிருந்தன. பாரிஸ் பற்றிய கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையவுந்தொடங்கியது. ************************************************* மூன்று பேருக்கு அந்த ரூமை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள். அதன் மூலம் அவர்களுக்கு சுமார் எண்ணூறு யூரோ வருமானம் மேலதிகமாக கிடைத்தது. வீட்டின் செலவுகள் உட்பட மேலதிக செலவுகள் சிலவற்றுக்கும் அந்தப் பணம் உதவியதால் வீட்டு உரிமையாளரும் ஓரளவு மென்போக்குடன் தான் இவர்களுடன் நடந்துகொள்வார். மூன்று ரூம் கொண்ட வீடு அது. ஒரு ரூமில் அவர்கள் தங்கிக்கொண்டு மற்ற ஒரு ரூமை இவர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ரூமில் இருந்த இரண்டு நண்பர்களும் விடியவே வேலைக்கு என்று சென்றுவிடுவார்கள். அவர்கள் இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். முகிலன் வேலை எதுவுமில்லாததால் கொஞ்சம் பிந்தி ஒன்பது மணியளவில் நித்திரைவிட்டு எழும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவன் நித்திரைவிட்டு எழும்பும் நேரம் வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். வீட்டுக்கார அக்காவும் பிள்ளையை பாடசாலைக்கு கொண்டுபோய் விடுவதற்காக சென்றுவிடுவார். துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு செல்வான். துவாயை கம்பியில் கொழுவிவிட்டு கொமெட்டில் போய் உட்காருவான். முகிலன் தன்னை மறந்து எல்லாவற்றையும் பற்றி யோசித்துக்கொண்டிருப்பது இந்த கொமெட்டில் இருக்கும் நேரம்தான். வசதியாக அமர்ந்திருந்து ஒவ்வொன்றாக அசைமீட்டுக்கொண்டு இருப்பதில் நேரத்தினை மறந்துவிடுவான். வீட்டில் யாரும் இல்லாததால் ஒருவித சுகந்திரத்துடன் தன் காலைக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வான் . தினசரி வீட்டுக் கதவு திறக்கும் ஓசை கேட்டதும் அந்தரப்பட்டுக்கொண்டு எழும்பி தண்ணீரை அமத்திவிட்டு அப்படியே குளிக்க செல்வான். எல்லாம் முடித்து அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டுவிட்டால், வீட்டுகார அக்கா கதவை தட்டி ஏதும் கேட்டால் பதில் சொல்வானே தவிர மற்றபடி வெளியில் வருவதுமில்லை. கதைப்பதுமில்லை. அன்றும் அப்படித்தான், அக்கா போகட்டும் என்று விட்டு கட்டிலில் படுத்திருந்தவன் வீட்டின் கதவு பூட்டும் ஓசை கேட்டதும் வழமைபோல துவாயை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான். துவாயை கம்பியில் கொளுவ கையை நீட்டினான். அப்போதுதான் வீட்டுக்கார அக்காவின் ஈர உள்உடுப்புகள் அந்தக் கம்பியில் கொளுவப்பட்டு இருந்ததை பார்த்தான். கைகால் எல்லாம் ஒருகணம் நடுங்க திகைத்துப் போய் நின்றவனை அந்த கருப்புநிற உள்ளாடைகள் இரண்டும் பூதம் போல தின்னத்தொடங்கியது. சூழ்ந்திருந்த அமைதியும் இருள் கலந்த மெல்லிய மஞ்சள் ஒளியும் அந்த அறையின் தனிமையும் இணைந்து ஒரு சூடான பெருமூச்சாக வெளிவந்தது. ஆளுயரக் கண்ணாடியில் தெறித்த தன் நிர்வாணத்தை நெருங்கிப் பார்த்தான். அந்த உள்ளாடைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று முட்டாமல் சிறிய இடைவெளி விட்டு கொளுவப்பட்டு இருந்ததை கண்டவன் மெதுவாக அருகில் சென்று நின்றான். உடலெங்கும் அமிலக் கரைசல் பட்டதுபோல ஒரு மெல்லிய உணர்வு எழுந்து அடங்கியது. சடுதியான உணர்ச்சி வேகத்தால் தன்னையிழந்து அந்த நேரத்தில் எதை செய்யமுடியுமோ அதை செய்துமுடித்தான். இனி எப்படி அக்காவின் முகத்தில் முழிப்பது என்ற சங்கடம் பிடித்துக்கொண்டது. தன்னைத் திட்டியபடியே குளித்தான். இருவேறு மன நிலைகளில் தவித்து அலைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் தன்னையும் மீறி அக்காவை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கத்தொடங்கினான். பின்பெல்லாம் குளியலறையில் உள்ளாடைகள் கிடப்பது வழமையாகியது. நான்காவது மாதத்தின் ஆரம்பநாட்களில் அந்த வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு மாறிச்சென்றான். மாறிச்சென்ற வீடு முதல் இருந்த வீட்டில் இருந்து ஒரு முன்னூறு மீற்றர் தூரத்தில் வீதி வளைவோடு இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த வீட்டில் மொத்தமாக ஐந்து பேருடன் சேர்ந்து வசித்துவருகிறான். குடி கூத்து கும்மாளம் சமையல் சாப்பாடு சண்டை என எல்லாவற்றையும் கடந்து ஒருவித நின்மதி இந்த வீட்டில் இருப்பதாகவே முகிலனுக்குப் பட்டது. இப்போது செய்கின்ற வேலையும் முதல் இருந்த வீட்டுஉரிமையாளர் தான் எடுத்துக்கொடுத்திருந்தார். அதன் பின் இந்த வீட்டில் இருக்கும் இருவரை தான் வேலையும் ரெஸ்ரோரண்டில் வேலைக்கு சேர்த்தும் விட்டான் முகிலன். சமையல் மற்றும் வீட்டு வேலைகளை ஒவ்வொருவரும் பிரித்து கொள்வார்கள். அவசரமான வேலையென்றால் மாறியும், சில நாள்களில் எல்லோரும் சேர்ந்தும் செய்துகொள்வார்கள். இப்போதெல்லாம் முகிலன் குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதில்லை. எதுவிட சங்கடங்களும் இல்லாமல் நேரம் காலம் என்றில்லாமல் குளிக்கவோ அல்லது வேறு தேவைகளுக்கோ, அல்லது வீட்டின் எந்தப்பகுதிக்குமோ செல்ல முடிந்தது. ஊரில் நண்பர்களுடன் இருக்கும் உணர்வு அடிக்கடி எழும். வீடு வேலை திரும்ப வீடு பேஸ்புக் படம் நித்திரை திருப்ப வேலை எப்பவாவது லாசெப்பல். இதுவே வாழ்க்கை முறையாகியது. முகிலன் ஒரு நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்கு ஒன்றுக்குள் அவனையறியாமல் இயங்கத்தொடங்கினான். **************************************************************** போனில் அலாரம் அலறியதும் கையை நீட்டி நிறுத்தினான். கண்கள் இரண்டும் எரிந்தன. தலை மெல்லியதாய் வலித்து. சரியில்லை வேலை எடுத்துத் தந்த மனுசன் என்னவோ அவசரமோ கேட்டிட்டார் ஓம் என்றாச்சு போகத்தான் வேணும் என்று நினைத்தபடி எழுந்தவன் இருபதாவது நிமிடம் வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு ரோட்டில் இறங்கினான். அதிலிருந்து இருபது நிமிடத்தில் வேலைசெய்யும் ரெஸ்ரோரண்டில் நின்றான். தம்பி குறைநினைக்காதை என்றவரை மெல்லிய சிரிப்புடன் கடந்தான். அந்த சிரிப்பில் இருந்தது சுயநலம் கலந்த நன்றியுணர்வென்பதை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. லீவு நாளில் வேலைசெய்தால் கிடைக்கும் பணம் மேலதிக வருமானம் என்பதனையும் அதன் மூலம் நிறைவேறும் சில தேவைகளையும் அந்த தேவைகளே லீவு நாளிலும் வேலைக்கு அழைத்தவுடன் ஓடு எனக் கலைத்தமையையும் எப்படி நேரடியாக ஒப்புக்கொள்வான். வேலைக்கான உடுப்பினை மாற்றிக்கொண்டுவர, அம்மாவுக்கு சுகமில்லையாம் நான் ஊருக்கு போகணும் அதுதான் தம்பி உன்னை செய்யசொல்லி கேட்டனான் அனேகமாக நாளைக்கு வெளிகிடுவன். இடைக்கிடை வீட்டை ஒருக்கா எட்டிப் பார். அக்கா தனிய பாவம். வேலையை செய்தபடியே கதைத்தவரை நிமிர்ந்துபார்த்தான். உந்தாளுக்குகென்ன தலைஎழுத்து. பாவம். இப்படி கிடந்தது முறிகிறார் என நினைத்தபடி, ஓம் அண்ணை ஏதும் தேவை என்றால் போன் அடிக்க சொல்லுங்க ,அம்மாவுக்கு என்ன வருத்தமாம் எனக் கேட்டான் முகிலன். தெரியேல்லை போய் தான் பார்க்கணும் போனவருசம் போகேக்கை கொஞ்சம் தளம்பித்தான் இருந்தவ. வயதும் போடுத்து. நாங்களே இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கேக்கை அதுகள் இவ்வளவு காலம் இருந்ததும் பெரிய விசயம்தான். என்றவரைக் கடந்து முகிலனின் நினைவுகள் தாயிடம் சென்று மீண்டது. இப்பெல்லாம் அம்மா பெரிதாக கதைப்பதில்லை. மாமாவின் மகளை கலியாணம் கட்டச்சொன்னதுக்கு மாட்டன் என்ற கோபம். நான் என்ன செய்ய இன்னும் இங்கு வாழ்க்கை ஒரு நிலைக்கு வருகுதில்லை. அதில் அவளையும் கூப்பிட்டு என்ன செய்ய என்று கேட்ட கோபம். இங்கிருந்து என்ன சொன்னாலும் விளங்கப்போவதில்லை. அம்மாவும் என்ன செய்வா. யோசித்துக்கொண்டிருந்தவனை தொடர்ந்தும் யோசிக்க விடாமல் வேலை நெருக்கியது. இயந்திரத்தனமான வேலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து போனான் முகிலன். ஆறு அடி அகலமும் பத்து அடி நீளமும் கொண்டதான ஒரு நீள் சதுரமே முகிலன் வேலை செய்யும் இடம். அந்த சிறிய இடத்திற்குள் நான்கு அடுப்புகள் அதை ஒட்டி இரண்டடி நீளஅகல கரண்ட அடுப்பு பக்கத்தில் ஒரு சுடுநீர் தொட்டி. இவைக்கு எதிராக மற்ற மூலையில் இரண்டு கழுவும் தொட்டிகள். இரண்டு கழுவும் மிசின்கள். நடந்து திரிவதற்கும் வேலை செய்வதற்கும் இரண்டடி அகலத்தில் ஆறடி நீளத்தில் இருக்கும் ஒரு குறுகிய இடம் மட்டும். இந்த இடத்திற்குள் தான் இருவரும் நிற்கவும் வேண்டும் வேலை செய்யவேண்டும். இருநூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உணவுவகைகையும் தயார் செய்யவும் வேண்டும். இடுப்பு உயரத்துக்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் ஸ்ரேயின் ஸ்டீலில் செய்யப்பட்ட மேசைகள். அவற்றின் கீழே முழுவதும் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு குளிரூட்டிகள். ஒரு குசினி அறைக்கான பாதுகாப்போ அல்லது அமைப்போ கொண்டிருக்காத ஒரு பகுதி அது. அதற்கு சரி நேர்மாறாக சாப்பிடும் கூடம் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அழகிய மின் விளக்குகள் பூட்டப்பட்டு, சித்திரங்கள், பழைய காலத்து வீட்டு உபகரணங்கள் வைத்தும் மக்களை கவர்ந்து கொள்வதற்காக அவற்றைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். பத்து வருடங்களாக குசினிக்குள் வேலைசெய்த மாலி நாட்டவன் றஹீம் வேலையைவிட்டு போகும் போது கட்டிப்பிடித்தபடி சொன்ன வார்த்தைகளை எப்போதும் நினைத்துப்பார்ப்பான் முகிலன். நண்பா , இங்கே எத்தனை வருடம் வேண்டுமானாலும் வேலைசெய்யலாம். ஒருபோதும் பரிசோதகர்கள் வரமாட்டாங்கள். ஏனென்றால் முதலாளி ஒரு ஒறியினல் பிரெஞ்சுக்காரன். ஆனால் அவன் உங்களை முழுதுமாக உறிஞ்சி விடுவான். இதோ இன்றோடு நான் இந்த வேலையை விடுகிறேன். தந்த பணத்தைக் கொண்டு போக வேண்டியதுதான். நாளைக்கு என் நாட்டுக்கு போய் ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான். இதே காலத்தை என் ஊரில் என் சொந்தங்களுடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசம். எல்லாத்தையும் இழந்து இந்தக் காசைக் கொண்டுபோய் என்ன செய்ய ...என்றபடி கண் கலங்க விடைபெற்றவன் அவன். இவ்வளவுக்கும் றஹீம் வாழ்க்கையை அனுபவிக்காதவன் இல்லை. கிழமையில் இரண்டுநாள் லீவிலும் ஏதாவது கிளப்பிலும் விடுதிகளிலும் தான் இருப்பான். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பெண்களை சாப்பிட அழைத்துவருவான். கேட்டால் நண்பர்கள் என்று சிரித்தபடி கூறுவான் போதைப்பொருள்கள், குடி என எல்லாவற்றையும் அனுபவித்தவன். வேலை தவிர்ந்த நேரங்களில் அவனைச்சுற்றி நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள் "நாளைச் சுமக்காத ஒரு மனிதன் அவன்." காசு காசு என்று இரண்டு வேலைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருக்க நேரமில்லாமல் நண்பர்களும் இல்லாமல், சாப்பிடாமல் கிடந்து வீடு நகை கார் என சொத்துக்களையும் சேர்த்துக்கொண்டு பிள்ளைகளோடு கதைக்க நேரமே இல்லாமல் மனுசியோடு நாலு இடத்துக்கு போக வர நேரமில்லாமல் அவையின்ர சுக துக்கங்களை கேளாமல் இருந்துகொண்டு, உழைக்கிற காசை ஊருக்கு அனுப்பி கோயில் குளம் மடம் என கட்டி அதில் பேரை வேற போட்டுக் கொண்டு இருக்கிற எங்கட ஆக்களுக்கு, எப்பவாவது றஹீமுக்கு தோன்றியது போல தோன்றுமோ என எண்ணிப்பார்ப்பான். இவர்களுக்கு தாங்கள் விட்ட பிழையை உணரும் போது குடும்பம் சிதைந்து எல்லா உறவுகளும் அறுந்து அந்தரத்தில் வாழ்ந்து மன அழுத்தத்தில் ரெயினிலோ மாடியாலோ விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது மித மிஞ்சி குடித்து தங்களை மறந்து போகிறார்கள். பல தடவைகள் திருப்ப திருப்ப இவற்றை நினைப்பான். ஒரு கோர்வையில்லாமல் நினைவுகள் அங்குமிங்குமாய் அலைந்து அலைந்து வீட்டிலும் ரெஸ்ரோரண்டிலும் வந்து நிற்கும். ரெயினில், வீட்டில், கட்டிலில் என எப்போது இப்படி சலிப்பான நினைவுகள் தோன்றும் என்று தெரியாது. இப்படியான நினைவுகள் வரும்நாள்களில் நீண்ட நேரம் குளிப்பதை வழமையாக கொண்டிருந்தான் முகிலன். குளித்துமுடிந்து பல்கனியில் நிற்கும் போது ஒரு மெல்லிய காற்று உடலை தழுவும் அந்த கணத்தில் தாடியை தடவிக்கொண்டு எல்லாம் மறந்து சாதரனமானவனாக நிற்பான். வீட்டுக்கார அண்ணர் ஊருக்குப் போய் எட்டாவது நாள் மதியம். நித்திரையில் இருந்தவன் போன் அதிர எடுத்துப் பார்த்தான். அகன்ற திரையில் அக்கா என்று இலத்திரனியல் எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ********************************************** இப்படியாக கதையை எழுதி முடித்துவிட்டு பிரபல இணைய சஞ்சிகை ஒன்றுக்கு அனுப்பினேன். மூன்று நாள்களின் பின் மிகவும் பிற்போக்குத்தனமாக சிந்தனையுள்ள கதையாக இருப்பதால் பிரசுரிக்க முடியாது என்று பதில் அனுப்பினார்கள். சரி போகட்டும் என்று விட்டு ஒரு புதிதாக ஆரம்பித்து வளர்ந்துவரும் சஞ்சிகைக்கு அனுப்பினேன். அன்றே பதில் அனுப்பி இருந்தார்கள். நல்ல கதை நல்ல மொழி நடை. ஒரு சிறிய மாற்றம் அந்த குளியலறையில் அக்காவின் உள்ளுடுப்புகளை பற்றிய பந்தியை நீக்கி விட்டு போடுவதென்றால் நாங்கள் பிரசுரிக்கிறோம் என. நான் ஒரு எழுத்தாளன் என் கதையை இவர்கள் திருத்துவதா என்ற திமிரில் மன்னிக்கவும் என்று பதில் அனுப்பி விட்டு, என் காதலிக்கு அனுப்பினேன். இதை வாசித்து விட்டு சொல்லுடி என்று, நாயே என்னடா எழுதி வைத்திருக்கிறாய் நீயெல்லாம் மனுசனோ கதையை இப்படி எழுதுவாங்களோ ஏன்டா நாங்கள் போடுற உள் உடுப்பை பார்க்க உங்களுக்கு என்னடா. அது வெறும் துணிதானே. வெறும் சதைகளை பற்றியே நினையுங்கோடா. எங்களையும் மனிசன் எங்களுக்கும் ஒரு மனசு இருக்கு என்று நினைக்காதையுங்கோ. நீயும் இப்படிதானோ இனி இப்படி கதை எழுதாதை என்று பதில் வந்தது . என்னடா இது கதை காதலுக்கே ஆப்பை வைத்துவிடுமோ என்று விட்டு உடனே போன் எடுத்து கதைத்து சமாளித்த பின்னும் எழுதிய மனம் விடவில்லை. இன்னொரு இலக்கிய நண்பனுக்கு அனுப்பினேன். அவன் அண்மையில் வந்திருந்த ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதி இருந்தான். அதில் அந்த நாவலை பின்நவீனத்தின் முழுமையான அடையாளங்களை கொண்ட நாவல் என்றும் மிக மிக எளிமையான மொழி மூலம் அந்த நாவல் பின்னப்பட்டிருப்பதாகவும் மையம் என்பதே இல்லை அதனால் தமிழில் குறிப்பிடத்தக்க பின்னவீனத்துவ நாவல்களில் ஒன்று எனவும் எழுதி இருந்தவன். எனக்கு அந்த நாவலை வாசிக்க ஜேம்ஸ் பாண்டின் காமிக்ஸ் கதை நினைவுக்கு வந்ததை இந்த இடத்தில் மறந்துவிட்டுதான் அவனுக்கு அனுப்பினேன். இரண்டாவது நாள் அவன் பதில் அனுப்பினான். "உண்மையில் மிக சிறந்த படைப்பு இது. ஆற்றொழுக்கான மொழி மூலம் கதையை நகர்த்தி இருக்கிறாய். ஒரு திணிப்பாக இல்லாமல் ஒவ்வொரு பாத்திரங்களையும் அதன் போக்கில் விடிருப்பது சிறுகதைக்குரிய நல்ல பண்பு. பின்னவீனத்துவ பாணி என்று சொல்லமுடியாவிட்டாலும் அதில் நீ முயற்சி செய்திருக்கிறாய். மைய சிதைவு நல்லமுறையில் வந்திருக்கிறது. நல்ல சஞ்சிகைக்கு அனுப்பு. அடுத்தது நீ ஒரு நாவல் எழுதவேண்டும். என்று. இவன் வீணாப் போனவன் இப்படிதான் சொல்லுவான் என்றுவிட்டு சாதியப் பிரச்சனைகளையும் மாக்சிய கோட்பாடுகளையும் நிதமும் பேசுகின்ற பெரியவருக்கு அனுப்பி கருத்தினைக் கேட்டேன். முகிலன் என்ற பாத்திரம் ஒரு மேட்டுக்குடியினை பிரதிபலிப்பாக இருக்கிறது. இதில் எங்கேயும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலினைக் காணமுடியவில்லை. அந்த வேலை தளத்தில் ஒரு தொழில்ச் சங்கமும் இல்லை தொழிலாளிகள் சுரண்டப்படுவதைப்பற்றிய சித்திரங்கள் எதுவும் இல்லை. மற்றைய கதா பாத்திரங்களுக்கு பெயர் சூட்டாமல் விடுவதிலிருந்து கதையாசிரியர் ஒரு நழுவும் போக்கினை கொண்டு தப்பி செல்கிறார். இலக்கியக் கோட்பாடு எனபது கருத்துநிலைப்பட்ட பிரகடனமாக இல்லாது மனிதனின் சமூக இயக்கம் பற்றிய தெளிவு அடைவதாகவிருத்தல் வேண்டும் அக் கோட்பாடு ஒரு உலகம் பற்றிய முழுமையான விளக்கத்தை தரவேண்டும் மேலும் அது நெகிழ்வுடையதாக இருத்தல் வேண்டும் இலக்கியக் கோட்பாடு தெளிவினை அல்லது தெளிவின்மையை அடிப்படையாகக் கொண்டு தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நோக்கும் போது எழுத்தாளன் ஒருவன் சமூகப்பிரச்சனையை விளங்கிக்கொள்வதற்கும் பிற துறையினர் விளங்கிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. மேலே கூறிய தெளிவு இல்லாதவிடத்து ஒரு ஒரு சமூகப்பிரச்சனையை இலக்கியமாக மாற்றும் அறிவுத்தெளிவு இல்லாமல் போய்விடும். எனினும் இலக்கிய கோட்பாடு பற்றிய சுகந்திரம் எழுத்தாளனுக்கு உண்டு. ஆனாலும் அந்த சுகந்திரத்துக்கூடாக வாசகன் விளங்கிக் கொள்வதற்கான சட்டகத்தை எழுத்தாளன் உருவாக்கவேண்டும்.இது வாசகனுடைய நுகர்ச்சி தொடர்பிலானது என்றாலும் .... இன்னும் இரண்டு பக்கங்களில் இப்படியான விளக்கம் இருக்கவே, அத்தோடு வாசிப்பதை நிறுத்திவிட்டேன் இனி இது கதையா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு உங்களுடையது. (காக்கை சிறகினிலே இதழ் நடத்திய போட்டிக்கு அனுப்பிய கதை )
 11. "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாறவேண்டும் "--பெரியார் தனித் தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன் ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம், நவீனம் என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது. மரபுரிமை, பண்பாடு, கலாசாரம் என்ற இசங்களை ஒரு சமூகமானது அவ்வப்போது களைந்துகொள்வதும், இயங்கியலின் தன்மைக்கு ஏற்ப அவைகளை மாற்றியமைப்பதுவும் தான் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதன் குறியீடாக இருக்கமுடியும். சமூக எண்ணக்கருக்கள் மூடுண்ட நிலையில் இருக்குமென்றால் சமூக சிந்தனையும், செயலும் மூடுண்ட நிலையிலேயே இருந்துவிடும். தேசவழமைச் சட்டம் எமது மரபுரிமை என்று கூறிக்கொண்டு, அதில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலையிலேயே வைத்திருக்கிறோமா? சமூக மாற்றத்திற்கேற்ப மாற்றங்களூடாக இன்று தேச வழமைச்சட்டம் என்பது காணி,சொத்துரிமை தொடர்பிலானதாக மட்டும் காணப்படுகிறது. கலாசாரம் பண்பாடு என்ற இசங்களை கேள்விக்குற்படுத்தும் அதிகாரங்களை இங்கே கோரவில்லை. இப்பத்தி எழுப்புகின்ற கேள்வி எமது சமூகம் ஒரு அசைவியக்கம் கொண்ட சமூகமா இல்லையா என்பதே. தெய்வ வழிபாடுகள் எவ்வகையான மாற்றங்களை உள்வாங்கி இருக்கின்றன என்பதை ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் வளர்ச்சியோடும் கலாசர பண்பாடு மாற்றங்களோடும் இணைத்தே பார்க்கமுடியும். அதற்காக தெய்வ வழிபாடுகள் சிறப்புற்ற இடங்கள் எல்லாம் வளர்ந்தன என்று வாதிடமுடியாது. சமூக வளர்ச்சி பன்முகமானது. இதுதான் வழிபாடு நிகழ்த்தும் தளங்களுக்கும் கொல்களங்களுக்குமான (இறைச்சிக் கடை ) நுண்மையான வேறுபாடு. தெய்வங்களுக்கான பலியிடல் என்பது என்ன நோக்கத்திற்காக ஆதி மனிதர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இது வெறுமனே இந்துசமயத்தினதோ அல்லது எம் சிறுதெய்வ வழிபாட்டினதோ அல்ல. அனைத்து இனக்குழுமங்களுக்குமானதாகவே இருந்திருக்கிறது. தான் சார்ந்த நிலத்தில் வாழ்வியலை எதுவித இடையூறுகளும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு இறைவனை அல்லது தன்னை மீறிய சக்தியினை திருப்திப் படுத்தும் நோக்கில் இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது. எமது வாழ்வியலை நாமே திட்டமிடும் பகுத்தறிவு பெற்ற நாம் இன்று என்ன நோக்கத்திற்காக, யாரை திருப்திப்படுத்துவதற்காக, இந்த பலியிடலை தொடரவேண்டும்? ஆதியில் உயிர்ப்பலி என்பது குறைகளற்ற ஆணை, அல்லது கன்னிப் பெண்ணை பலியிடுவதாகவே இருந்திருக்கிறது. பின் காலநீட்சியில் குழந்தைகள் பலியிடப்பட்டு, இப்போது மிருகங்களாக வந்தடைந்துள்ளது. இப்போதும் சில இடங்களில் குழந்தைகளை பலிகொடுக்கும் இழிவு நடைபெற்றுவருகிறது என்பதை பதிவு செய்யவேண்டிய அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம். இவையெல்லாம் இன்றைய பலிகொடுத்தலின் தொன்மங்களாக கண்முன் வந்து நிற்கின்றன. இன்று நேற்றல்ல, பலியிடல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன .திருத்தொண்டர்புராணம் முதல் மறைமலையடிகள் வரை இவற்றை காணலாம். இன்றும், மிருகங்களைதானே பலியிடுகிறோம் என்று நாம் சிந்திக்க தலைப்பட்டால் நாம் நம்மை மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதுமில்லை. பெண் தெய்வங்களுக்கு கருத்தரித்த மறி ஆட்டினை பலி கொடுக்கும் வழக்கம் ஒரு சடங்காக, மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது. இதனை சூலாடுகுத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைப்பார்கள் (பண்பாட்டு அசைவுகள் தோ. பரமசிவன் )நேர்ந்துவிடப்படும் ஆட்டை இணை சேர விடுவதில்லை. விதிவிலக்காக பலி கொடுக்கப்படும் நாள் அல்லது அதற்கு முதல் நாள் இணைசேர்ப்பவர்களும் உண்டு. இதை நல்லின ஆடுகள் உற்பத்தியினை பெருக்கும் செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா? நேர்த்தி ஆடுகள் வளர்ப்பு முறையானது பொருளாதார நோக்கினைக் கொண்டதும் தான். பொதுவாக ஆட்டினை வளர்த்தவர்கள் சாப்பிடமாட்டார்கள். (இதுவும் மரபு, பண்பாடு சார்ந்தது. இன்று எப்படியோ தெரியவில்லை) ஆகவே அவர்கள் நோக்கம் பலியாக வெட்டப்படும் ஆடுகளை உயர்ந்த விலைக்கு விற்றுவிடுதல் தான். பலி கொடுக்கும் நிகழ்வு முடிந்து பேரம் பேசும் நிகழ்வை அவதானிப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். யாருடைய உரிமைகளையும் மறுப்பதோ நிராகரிப்பதோ நோக்கமல்ல. யாரையும் காட்டுமிராண்டிகள் என்று வரையறை செய்வதில் சிறிதும் உடன்பாடில்லை, ஒவ்வொரு மனிதரின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பதே சிறந்த மனிதப் பண்பும் ஆகும். நாட்டார்மரபு அல்லது குல ஒழுக்கம் அல்லது இனக்குழும ஒழுக்கம் என்பதனை, வாழும் பருவ சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருட்கள் ,உற்பத்தி பொருளாதார நிலைகள், சமூக உறவுநிலைகள் போன்ற பல சமூக இயங்கியல் காரணிகள் தீர்மானிக்கின்றன. காலநீட்சியில் இவை மாறிவிடும் என்பது யதார்த்தமானது. வெளிப்படையானது. இன்றும் பல ஆலயங்களில் பலி கொடுத்தல் நிகழ்வு ஒரு சடங்காக நடைபெறுகிறது. அங்கு உயிர் காவு வாங்கப்படுவதில்லை. நீதிமன்ற பரிசோதனைகளும் இல்லை. வெறுமனே மஞ்சள் தண்ணியோ, பூவோ, பொட்டோ இடுவதுடன் அந்த சடங்கு முடிவுறுகிறது. இது மாற்றம்தான். உடன்கட்டை ஏறுதல் இல்லாமல் போய் ஒரு கோழி முட்டையைப் பிணத்துடன் எரிப்பதில் நிற்கிறது. இதுவும் நாளை மாறக்கூடும். அதற்காக இந்தப் பலிகொடுத்தல் நிகழ்வு தன்னியக்கமாக மாறும் என்று காத்திருப்பதும் தவறானது. அதேவேளை சட்டம் அல்லது வன்முறை மூலம் இந்த மரபினை நிறுத்தும் அதிகாரம் என்பதுவும் கேள்விகுற்படுத்தப்பட வேண்டியதே. பன்முகப் பண்பாட்டு படிநிலையில் இதனை நாங்கள் புறநிலையாகத்தான் பார்க்கவேண்டும். மிருகங்கள் உலகத்தில் உள்ளன. மனிதன் உலகத்தில் மட்டுமல்ல, உலகத்தோடும் உள்ளவன். மனிதசமூகம் ஒற்றைப் பரிமாணத்தில் சிக்கிக்கொள்வதிலை. மனிதன் இயற்கையைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறான். விலங்குகள் இயற்கைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன. நாங்கள் மனிதராக இருக்கப்போகிறோமோ என்பதே கேள்வியாகிறது. இந்த இடத்தில், வல்லிபுரக் கோவில், செல்வசந்நிதி , கற்கோவளம் பேச்சியம்மன் ஆலய சூழலையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பது யாழ்ப்பாண சமூக இயங்கியலில் தெய்வங்களின் அல்லது ஆலயங்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள உதவலாம். இதில் பேச்சியம்மன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் "மச்சப்படையல்" நிகழ்வு முன்னர் நடைபெற்றுவந்திருந்தது. இது மிருகபலி நிறுத்தப்பட்டு வேறு ஒரு இடத்திலிருந்து மாமிசஉணவு வகைகளைக் கொண்டுவந்து சமைத்து உண்பதாக மாறி இருக்கிறது. அம்மன் பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் மாறிவிட, தற்போது ஆலய வளவில் இருந்து குறிப்பிட தூர இடவித்தியாசத்தில் வேறு ஒரு பேச்சியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செல்வச்சந்நிதி ஆலயம் அது சார்ந்து இயங்கும் பண்பாட்டுத்தளம் இன்னொருவகையில் முக்கியமானது. ஒடுக்கப்பட சாதியினரால் நடத்தப்படும் பூசை நிகழ்வுகளில் எல்லோரும் சமமாகக் கொள்ளப்பட்டு உற்சவம் செய்பவரும் தன்னை ஒரு வணங்கியாகக் கருதிப் பூசை செய்யும் நிகழ்வு நடைபெறும்.(விரிவாக பார்க்க யாழ்ப்பாணம்.சிவத்தம்பி ) இவை இரண்டு எடுத்துக் காட்டுகளே. சமூகபண்பாட்டு நகர்வில் ஆலயங்கள் எவ்வகையில் பங்களிக்கின்றன என்பதனை இவற்றினூடாகவே புரிந்துகொள்ளமுடியும். வேள்வியை தடை செய்யக்கோருவது இந்துத்துவவாதிகள் அல்லது உயர்ஆதிக்க சாதியினர் ஆகவே இதனைச் சாதிஅரசியல் சார்ந்தே நாம் அணுகவேண்டும் என்ற கருத்துருவாக்கமும் இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டியதே. முதலில் பொருளாதார நிலைப்பட்ட யாழ்ப்பாண சமூகம் இந்துத்துவ சமூகமாக இல்லை என்ற பெரும் உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். வெள்ளாள மேலாண்மை கொண்டதாகவே இருக்கிறது. இதில் சம்பந்தப்பட அந்த ஆலயம் சூழ்ந்த அல்லது அந்த ஆலயத்தினை நிர்வகிக்கின்ற சாதியினர் யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறானதொரு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது. வீரசைவர் என்ற அந்தச் சமூகம் ஒரு படிநிலை ஆதிக்க சமூகம் தான். மிருகபலி என்பதை எதிர்க்கும் அதே மனநிலையில் நின்றுதான் சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிகழ்வுகளையும் எதிர்க்கவேண்டி இருக்கிறது. அரசினை நிராகரித்தல் என்பதற்காக அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிராகரித்துவிடுதல் ஏற்புடையதல்ல. இது பதில்களை வைத்துக்கொண்டு கேள்விகளை வரைவது போன்றதாகும். சட்டவிதிகளை மீறிப் பெரும்பான்மை அல்லது மாதிரி என்ற சொல்லாடல்களைக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது என்று எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. இந்த மிருக பலியிடலை வெறுமனே சாதியப் பிரச்சனையாக சுருக்கிவிட முடியாது. இதன் அகக்கூறுகளை நோக்கவேண்டும். அதன் விளைவுகளை இனம் காணவேண்டும். அதன் பன்முகத்தன்மையினை இனம் கண்டு கேள்விக்குற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே மிருகபலியிடல் கொண்டிருக்கும் பண்பாட்டு அரசியலை வெளிக்கொண்டுவர முடியும். இங்கு பண்பாட்டினை மீறக் கோருதல் என்பது பண்பாட்டை முற்றாக மறுப்பதன் மூலம் மீறுதல் அல்ல, பண்பாட்டின் கூறுகளை மறுப்பதால் மீறுதல் என்பதுதான். ஒரு இனக்குழுமத்தின் பண்பாட்டின் சில கூறுகளை நீக்கம் செய்வதினூடாகப் பண்பாடு அழிந்துவிடப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் பண்பாட்டிசம் காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருப்பதும் வெளிப்படையானது. நாம் ஈழத்தமிழ் இனத்தின் காலத்திற்கு ஒவ்வாத பண்பாட்டின் கூறுகளைத் தான் நீக்கம் செய்ய வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். உயிர்ப்பலி வழிபாட்டுமுறையானது, ஒடுக்கப்பட்ட சாதியினரது உரிமை. இதனை நிறுத்துவது அவர்களை மேலும் ஒடுக்குவதாகவே அமையும் என்ற கருத்தினை உடைத்தெறியவேண்டியது அவசியமானது. தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மரபுகளைக் கைக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க நிர்ப்பந்திக்கும் ஆதிக்கசக்திகளின் ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே இதனைக்கொள்ள முடியும். மொழி. கலாசாரம். பண்பாடு என்ற ஒவ்வொரு சமூகத்தின் கூறுகளிலும் மதம் விரவிக்கிடக்கிறது. அதன் வேர்கள் மூலம் ஒவ்வொரு தளத்தினையும் பற்றி வைத்திருக்கிறது. இவற்றினை அனுசரித்தே ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நிகழ்த்தமுடியும். அது நவீனத்தின் முழுமையான மத நீக்கமாக இருக்கமுடியாவிட்டாலும், நவீன சமூகமயப்பட்ட, நவீன பண்பாட்டு வயப்பட்ட மாற்றமாக இருக்கவேண்டியது அவசியமாகும். நன்றி ; பொங்குதமிழ் இணையம்
 12. நன்றி நண்பர்களே, உங்கள் அன்பும் வாழ்த்தும் தான் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருப்போம். இணைப்பினைப் பகிர்ந்த கிருபன் அண்ணைக்கும் என் அன்புகள். ////புலம்பெயர் சிறுகதை போட்டி என்றுவிட்டு, இலங்கை, இந்தியா ஆக்களுக்கு கொடுத்திருக்கு? கதைக்களமா அல்லது எழுத்தாளரா புலம்பெயர்?//// எனக்கும் உதே சந்தேகம் இருக்கிறது கோசான்.
 13. காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி இறந்தவன் எனக்கொள்க. ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின் மறைப்பில் நீளுமெனது நிர்வாணம் காலத்தால் வாழ்ந்தவன் எனக்கொள்க, சாத்தியமேயில்லாத இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில் விழிகளை திறந்து போட்டிருக்கிறேன். கபாலத்தைப் பிளப்பது போலொன்றும் இலகுவாயில்லை காலத்தைப் பிளப்பது. பெயரை அழித்துவிடுதலும் எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும் ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை. நேற்று நேற்றாயிருந்தது இன்று நேற்றாயிருந்தது நாளையும் நேற்றாய்த்தானிருக்கும். மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது. ஆணிகளைத் தூர வீசுங்கள் உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.
 14. நன்றியும் அன்பும் சுவி ஐயா நன்றி தலை செருப்புக்கு முன்னாலையும் கனக்க கதை இருக்கு அக்கா நன்றியும் அன்பும்
 15. தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்காக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன. பாரிசின் புறநகரில் இருந்து தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் லாசெப்பல் செல்வதற்காகவும், வேலைக்கு செல்வதற்காகவும் தினமும் இந்த தொடருந்து நிலையத்தை தான் பாவிப்பதுண்டு. வீட்டில் இருந்து புறப்பட்டால் தானியங்கி போல ஒவ்வொன்றாக நிகழும். தொடருந்து நேரத்தைப் பார்ப்பது மாத பயணசீட்டை அதற்கான இயந்திரத்தில் பொருத்தி கதவினை திறந்துகொண்டு தொடருந்து நிலையத்துள் நுழைவது பின்னர் ஓரிரு நிமிடங்களில் வரும் தொடருந்தில் ஏறி லாசெப்பலில் இறங்கிக்கொள்வது. அல்லது வேலைத்தளத்திற்கு சென்றுவிடுவது. . ஆனால் இன்று எதேற்சையாக கண்ணில் பட்ட அந்த செருப்பு ஒருகணம் உடலை சில்லிட வைத்தது. விழிகளை விட்டு விலகாமல் கண்களுக்குள்ளேயே ஆடிக்கொண்டு கிடந்தது. இதற்கு முன்னும் சிலசந்தர்ப்பங்களில் இப்படி ஒற்றை செருப்பினை கண்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத உணர்வு ஏன் இப்போது மட்டும் ஏற்பட்டது. புரியவில்லை. மனித மனங்கள் விந்தையானவை. தனக்கு ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் சூழலை ஆறுதலாகவும் அமைதியாகவும் அணுகுகின்றன. அலைந்து உலைந்து குழம்பி நிற்கும் சந்தர்ப்பங்களில் சூழலின் ஒன்னொரு பக்கங்களை தமக்கு சார்பாக்கி பார்க்கின்றன. இப்போது எனது மனநிலை என்னவாக இருக்கிறது. தனிமையா? பிரிவா ? ஏக்கமா ? தற்கொலையொன்றின் மீதான ஈடாட்டமா ? திடீரென முகத்தில் பட்ட காற்றின் உதைப்பு என்னை இயல்புக்கு கொண்டுவந்தது. மிக வேகமாக என்னைக்கடந்துகொண்டிருந்தது தொடருந்து. தண்டவாளத்தைப் பார்க்கிறேன் செருப்பு அப்படியே கிடக்கிறது. தொடருந்தின் சில்லுகள் அதன் மேலாக சீரான ஒரு இடைவேளிகொண்டு பாய்கின்றன. அமைதியாக, தனிமையாக, எதுவித அசைவுக்களுமின்றி நிர்ப்பயமாக செருப்பு அப்படியே கிடக்கிறது. மனதில் உருவாகிய கிலேசத்துடன் இருக்கையை விட்டு எழுந்து அடுத்தபக்க தரிப்பில் நின்ற தொடருந்தில் ஓடிச்சென்று ஏறி ஒரு இருக்கையில் அமர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆற்றுப்படுத்திவிட முனைகையில், அங்குமிங்கும் அலைந்து திரியும் மனிதர்களிடையே இருந்து மீண்டும் அந்த தனியாக கிடந்த செருப்பு எழுந்து கொண்டது. லாசெப்பலில் இறங்கி நடக்கதொடங்குகிறேன். பின் தலையோடு ஒட்டியபடி அந்த தனிச்செருப்பு என்னைத்தொடர்வதுபோல இருந்தது. லாசெப்பல் பாரிஸில் வாழும் தமிழர்களின் கடைகளால் நிறைந்திருக்கும் ஒரு நகரம். அந்த தமிழ்க்கடைகளிலும் கண்கள் செருப்பையே தேடுகின்றன. யாழ்ப்பாணத்து மிளகாய் தூளில் இருந்து கொழும்பு சித்தாலேப, கோடாலித் தைலம் போன்ற மூலிகை மருந்துகள் மட்டுமல்ல நாக்கு வழிக்கும் மெல்லிரும்பு கூட இங்கு கிடைக்கும். ஆனால் செருப்பு மட்டும் இந்த தமிழர்களின் கடைகளில் இல்லை. திரும்ப திரும்ப யோசித்தும் இந்தக் கடைகளில் ஏன் செருப்பு விற்பனைக்கு இல்லை என்பது புரிபடவே இல்லை. பட்டுவேட்டியும் பட்டுக்கூறையும் பஞ்சாபியும் குர்தாவும் அவற்றுக்கான ஏனைய அணிகலன்களும் தாரளமாகவே கிடைக்கும் இந்த வர்த்தகப் பெருநகரத்தில் ஏன் ஊரில் போடும் செருப்பு மட்டும் இல்லை. மிக உயரந்த அலங்கார காலணிகள் எல்லாம் கிடைக்கும் அவற்றுக்கான பிரத்தியேக பெயர்களில் அவற்றை அழைப்பார்கள். ஆனால் செருப்பு மட்டும் இல்லை. சாதரணமாக பாரிஸில், நகர்ப்புறங்களில் நடத்தப்படும் சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் இருக்கும் செருப்பை ஏனோ தெரியவில்லை மனது நாடுவதில்லை. அதன் அலங்காரத்தன்மை ஒரு அன்னியத்தை மனதுக்குள் உருவாக்கிவிடுகிறது போலும். அல்லது ஊரின் நினைவுகளும் ஊரின் பொருட்களுமே திருப்ப திருப்ப பாவனையில் கொண்டிருப்பதாலோ என்னவோ செருப்பையும் அங்கிருந்து பெறவேண்டும் என்றே மனது அவாவுகிறது. செருப்பு இந்த தமிழ்க்கடைகளில் விற்கப்படாதிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும். செருப்பு போன்ற வேறு என்ன பொருட்கள் இங்கே இல்லை என்று தேடிப் பார்க்க வேண்டும். அதற்கு முதலில் யாழ்ப்பாணத்தில் செருப்பு என்ன சமூகப் பெறுமானம் கொண்டிருந்தது என்று யாரிடமாவது கேட்டுப்பார்க்க வேண்டும். தேவகாந்தன் எழுதிய நினைவேற்றம் என்ற பத்தியில் 1959- 1960 களில் இந்த செருப்பு யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமானது என்று எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எனக்கு அறிமுகமாகியது 93 களில் தான் அதுவும் என் நண்பன் ஒருவனின் மூலம். அவன் அப்போது கொழும்பில் இருந்து வந்திருந்தான். எமது ஊருக்குள் செருப்புடன் வந்த எமது வயதொத்தவன் அவனாகத்தான் இருப்பான். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். எனது வயதேயான எல்லோரும் வெறும் காலுடன் தான் பாடசாலைக்கு செல்வோம் ஒரு சிலர் அரிதிலும் அரிதாக கால் முழுவதும் மூடியிருக்கும் படியான காலணிகளை அணிந்திருப்பார்கள். பாடசாலையில் பொதுநீர்த் தாங்கியிலிருந்து குழாய்வழியாக வரும் தண்ணீரை, கால்களை அகலவிரித்துக்கொண்டு கொஞ்சம் குனிந்து நின்று கைகளால் ஏந்திக் குடிப்பைதைப் பார்க்க மாடுகள் சிறுநீர் கழிக்கும் போது நிற்கும் கோலம் தான் நினைவுக்கு வரும். கொழும்பில்இருந்து வந்தவனும் நானும் நல்ல நண்பர்களானோம். முதன் முதலாக அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் மிதி (பெடல்) கால்களில் எதுவித வலிகளையும் தரவில்லை. "மெத்" என்று இதமாக இருந்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அன்றிலிருந்து சைக்கிளில் போகும் போது அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு ஓடுவது வழமையாகியது. எப்போதாவது கால் பிறேக் அடிக்கும் போது செருப்பு "ரியூப்வால்வில்" பட்டு காற்றினை வெளியேற்றிவிடும். 'வால்கட்டை' என்ற அந்த பகுதி எங்காவது தூரத்தில் விழுந்து தொலைந்துபோகும். இவ்வாறான நாட்களில் தான் எனக்கும் ஒரு செருப்பு வேண்டிப் போடும் ஆசை வந்தது. அம்மாவிடம் காசினைக் கேட்டேன். மூன்றோ நான்கோ நாளின் பின் அம்மா தானும் வந்து செருப்பினை வேண்டித்தருவதாக சொன்னார். அம்மாவுடன் சென்றால் விரும்பிய செருப்பினை வேண்டமுடியாது என்று அடம்பிடித்து காசினை வேண்டிக்கொண்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு உடுப்பிட்டியில் பண்டிதர் கடை என்ற ஒரு அங்காடியில் முதல் முதலாக எனக்கென்று ஒரு செருப்பை வேண்டுகிறேன். விலை முப்பத்தொன்பது ரூபா தொண்ணூற்று ஒன்பது சதம். அந்த நாள்களில் ஒரு ரூபாவுக்கு மூன்று கல்பணிஸ் தருவார்கள். அது ஒரு நீலக் கலர் செருப்பு. குதிக்கால் படுமிடத்தில் நீள்வட்டத்திற்குள் BATA என்று எழுதி இருக்கும். ஒரு இஞ்சி உயரம். அதன் நடுவில் இரண்டு வெள்ளைக் கோடுகள் வளைந்து வளைந்து சுற்றிவர இருக்கும். மெல்லிய இரண்டு பட்டிகள் (பார்கள்). அவற்றில் ஒன்று நடுவில் கொஞ்சம் முட்டை வடிவில் அகன்று அதில "BATA" என எழுதி இருக்கும். அவசரத்தில் செருப்பினை காலில் கொழுவும் போது அந்த அகன்ற பகுதி சிலநேரம் முறுகிவிடும். கையால் நிமிர்த்திவிடவேண்டும். நடக்கும் போது மண்ணில் சிறு சிறு பெட்டிகளாக நிறைய தோன்றும். அதற்காகவே வீதியின் புழுதி ஓரங்களால் நடந்து திரிவதும் உண்டு. பின் சிலகாலங்களில், ஓரளவு வெளியூர் பொருட்கள் யாழிற்கு வரத்தொடங்கியபின் "முள்ளு முள்ளு செருப்பு" என்ற ஒன்று வந்து சேர்ந்தது. மற்றையதை விட விலையும் அதிகம். கருப்பு மற்றும் மென் நீல நிறத்தில் அதிகம் கிடைத்த அந்த செருப்பு மென்மையானது இலகுவில் வளைந்து கொடுக்க கூடியது. தண்ணீரில் கழுவியவுடன் போட்டுக்கொண்டு நடந்தால் "சர்க் சார்க்" என்று சாத்தம் எழுப்பும். ஆனால் விரைவில் தேய்ந்துவிடும். சைக்கிள் ஓடும்போது சைக்கிள்மிதி இந்த செருப்பை நடுவில் மட்டும் கிழித்தும் விடும். கொஞ்சம் கௌரவமான ஒரு உணர்வை இந்த செருப்பு தந்தது என்பது என்னவோ உண்மைதான். அந்த நாட்களில் பாடசாலை சீருடை நீலக் கலர் காற்சட்டையும் வெள்ளை சேட்டுமாக இருந்தது. எங்களுடைய வகுப்பறை மண் நிலத்தில் தான் இயங்கியது. கடைசி மேசையில் இருக்கும் நானும் நண்பனும் மண்ணில் செருப்பின் முன் பக்கத்தை மடித்து மண்ணைக் கிளறி விடுவோம் வகுப்பறை மற்றும் முன்னால் இருக்கும் நண்பனின் ஆடைகள் எல்லாம் மண்ணில் தொய்ந்துவிடும். விளையாடப் போகும் போதெல்லாம் சைக்கிள் பூட்டின் உள்ளே இரண்டு செருப்பின் பட்டிகளையும் விட்டுதான் பூட்டினைப் பூட்டுவது. அப்போதெல்லாம் செருப்பு என்றால் ஒரு அரிய ஆடம்பரமான பொருளாகத்தான் இருந்தது தெரிந்தது. ஆனால் அந்தக் காலத்திலும் செருப்பினை விட விலை கூடிய பல பாதணிகளை அணியும் பல மாணவ நண்பர்கள் இருந்தனர். தாங்கள் அணிந்திருக்கும் காலனியின் விலையினை சொல்லி கொண்டாடும் ஒரு மனநிலை அவர்களிடம் இருந்தது. இருந்தபோதும் அதனை ஏக்கத்தோடு பார்க்கும் மனநிலை மட்டும் எம்மிடம் வரவேயில்லை. காரணம் அப்போதெல்லாம் எமது தேவைகளும் பொழுதுபோக்குகளும் வேறாக இருந்தன என்பதுதான். இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன் எத்தனையோ தோழிகளுடன் தனகி முரண்பட்டு இருப்போம். அவர்களில் ஒருத்தி கூட அந்த நாளில் செருப்பால் அடிப்பேன் என்றோ, குறைந்தது செருப்பை எடுத்துக் காட்டியதோ இல்லை. சிலநேரம் அவர்களுக்கும் அந்த செருப்பு முக்கியமான பொருளாக இருந்திருக்குமோ அல்லது அந்த செருப்பின் பெறுமதி எங்களுக்கு இல்லையோ தெரியவில்லை. அந்த நாட்களில்,நண்பர்களை வீட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்படி சென்றால் நண்பனின் அப்பாவிடம் அல்லது அக்காவிடம் மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. சில நேரம் படித்த பாடங்களில் கூட கேள்விகளை கேட்பார்கள். வீதியால் சைக்கிளில் எட்டிப் பார்ப்பது வாசலில் செருப்பு இருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று விசில் அடித்துவிட்டு சென்றுவிடுவோம். சைக்கிளில் செல்லும் போது யாராவது தோழிகளைக் கண்டால் செருப்பினை தெரியாதமாதிரி கழற்றி விழுத்தி விட்டு சைக்கிளால் இறங்கி ஆறுதலாக நின்று அவர்களை வடிவாகப் பார்த்து பின் செருப்பினை எடுத்துக்கொண்டு போவோம். சிலநேரம் அவர்களே "பொடியா செருப்பு விழுந்துகிடக்கு' என்றும் சொல்வார்கள். அந்த பொடியாவில் இருக்கும் இன்பம் இப்போது தோழி அல்லது தோழா என்று சொல்லும் போது கிடைப்பதில்லை. இந்தக் காலப்பகுதியில் இராணுவம் யாழ்குடாவை கைப்பற்றிக் கொண்டது. நாங்களும் செருப்பு என்ற பொருளை சாதரணமாகவே பாவிக்கத்தொடங்கி விட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லாமல் எங்கேயும் போவதில்லை. அதேவேளை எங்கே போனாலும் காலில் செருப்புதான். அதற்கு மாற்றும் இல்லை. உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதென்றால் குறைந்தது முப்பத்து இரண்டு இடங்களில் இராணுவ சோதனைச்சாவடி இருந்த காலம் அப்பவும் நாம் செருப்புடன் தான் திரிந்தோம். கல்யாணத்தில் இருந்து கருமாதி வரை செருப்புடன் தான் போவோம். பலதடவைகள் செருப்புக்காகவே ராணுவத்தினர் மறித்து சோதிப்பதும் வெருட்டுவதும் என கடந்திருக்கிறோம். ஒருதடவை நூலக வாசலில் செருப்புகள் இரண்டும் கிடக்க நண்பனொருவன் காணாமல் போயிருந்தான். சைக்கிளில் சென்ற இராணுவத்தினர் அவனை கைது செய்து சென்றிருந்தனர். செருப்பு மட்டும் இருப்பதை பார்த்தே அவனுக்கு எதோ நடந்துவிட்டது என்று அப்போதைய பிரஜைகள் குழுவில் முறையிட்டு அவர்கள் எடுத்த நடவெடிக்கைகளால் பின்னர் பருத்தித்துறை முகாமிலிருந்து அவனை விடுதலை செய்தனர். இன்னொரு நண்பன் தனது செருப்பில் தனது பெயரையும் காதலிப்பவள் பெயரையும் வெட்டி வைத்திருந்தான். அதனை பார்த்த இராணுவத்தினர் எதோ பெரிதாக கண்டுபிடித்துவிட்டதுபோல அவனை நான்குநாட்கள் வல்வெட்டித்துறை முகாமில் தடுத்து வைத்திருந்தனர். செருப்பில் பேர் எழுதியதற்காக கண்மண் தெரியாமல் அடிவேண்டியவன் அவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும். ஒருதடவை விடுதலைப்புலிகள் உடுப்பிட்டி சந்தியில் இராணுவத்தினரை சுட்டுவிட்டார்கள். படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பன் அவசரத்தில் இரு வேறு செருப்புக்களை மாறிப் போட்டுக்கொண்டு வீடுநோக்கி ஓடிச்சென்ற சென்றபோது பிடித்த இராணுவம் அவன்தான் சுட்டுவிட்டு எங்கோ கிடந்த செருப்பை போட்டுக் கொண்டு வருவதாக கூறி கைதுசெய்து இரண்டரை வருடங்கள் காங்கேசன்துறை சிறையில் அடைத்திருந்தனர். பருத்தித்துறையில் இராணுவத்தினர் நடத்திய மலிவுவிற்பனைக் கடையில் கொக்கோ கோலா குடிக்கவென்று சென்ற நண்பனை அவர்களே கைது செய்து சிறைக்கு அனுப்பியபின், அவனின் உடைமைகள் என்று அவனுடைய செருப்பையும் கறுத்தபட்டி மணிக்கூட்டையும் தொப்பியையும் தந்திருந்தனர். அவனது தாயை சைக்கிளில் ஏற்றிவரும்போது அந்த செருப்பின் கனம் மனமெங்கும் புதைந்துகிடந்தது. கணவனுடன் சண்டைபிடித்துக்கொண்டு முதல் நாள் வீட்டைவிட்டு வெளியேறிய மலர் அக்காவின் செருப்பு வயல் கிணற்றில் கிடந்ததைப் பார்த்தவர்கள் மலர் அக்காவின் கணவரிடம் அதை சொல்ல, அவர் குழறியபடியே ஓடிவந்து கிணற்றடியில் மயங்கி விழுந்து கிடந்ததும் நாங்கள் எல்லாம் கிணற்றுக்குள் இறங்கி மூச்சடக்கி தேடியதும் புகையிலை உணத்தும் (பதப்படுத்தும்) குடிலுக்குள் ஒளித்திருந்த மலர் அக்கா சிரித்துக்கொண்டே வெளியாலை வந்ததும், பிறகு சாப்பிடக் கூப்பிட்டு தான் வேணுமென்றே செருப்பை கிணற்றில் போட்டதாக கூறி எங்களை பார்த்து சிரித்ததும் கூட நேற்றுப் போலவே இருக்கிறது. ஐயோ என்ர பிள்ளை செருப்பு கேட்டவள் என்றபடி வெள்ளைப்பூரான் கடித்து மரணித்த ஆறுவயது ரம்யாவை பாடையில் வைத்து தூக்கும் போது புதுச்செருப்பை எடுத்துவைத்த தந்தையின் அழுகையும், கழிப்பு கழிச்ச இடத்தில இருந்து செருப்பை எடுத்துவந்திட்டான் என்று ஏசியதை தாங்கமாட்டாமல் வீட்டு வளையில் துக்குப் போட்டு இறந்துபோன சுமனையும், அதை சொல்லி சொல்லியே அழுது அரற்றிய அவன் தாய் கமலா அக்காவையும் எப்படித்தான் மறப்பது. அன்றும் அப்படித்தான் காலைவேளை உதைபந்தாட்ட பயிற்சி முடிந்து கோவிலடியில் தண்ணீரைக் குடித்துவிட்டு பக்கத்தில் இருந்த மடத்தில் கூடியிருந்தோம். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் பயணிகள் இருவர் எங்களைப் பார்த்து எதோ கேட்க முனைந்த அதே கணத்தில் எமது சிரிப்பு சத்தத்தை ஊடறத்து மூன்று துப்பாக்கி வேட்டுக்கள் விழுந்தன. படுத்திருந்த நான் நிமிர்ந்து எழும்பவும் பக்கத்தில் இருந்த நண்பன் விழுந்தான். ஏனையவர்களும் என்னைப்போல திகைத்து நிமிரமுதல் எங்களைத்தாண்டி மோட்டார் சைக்கிள் மிக வேகமாக சென்று மறைந்தது. முழங்காலிலும் நெஞ்சிலும் சன்னங்கள் துளைபோட்டு கிடக்க கால்கள் நிலம் நோக்கி தொங்கியபடி இருந்த அதே நிலையில் விழுந்து கிடந்தான் அவன். செய்வதறியாது திகைத்து அவனது உடலை தூக்கியபோது காலின் கீழே இருந்த முள்ளு முள்ளு செருப்பின் பள்ளங்களில் எல்லாம் இரத்தம் தேங்கி நிறைந்து போய் நின்றது. அன்றிலிருந்து மூன்றாவதுமாதம் எனது தாய்மடியில் இருந்து பிரிக்கப்பட்டேன். ஆம் ஊரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டேன். கொழும்பில் இருந்த நான்கு மாதங்களும் செருப்பினை என் கால்கள் காணவே இல்லை விலை உயர்ந்த சப்பாத்துக்களால் கால்களை மூடிக்கொண்டேன். மனதையும்கூட. எப்படியோ பாரிஸ் வந்தடைந்த போது வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்ற நண்பன், வாசலில் சப்பாத்தை கழற்றியபின் வெறும் காலுடன் உள்நுழைந்த என்னைப் பார்த்து அந்த செருப்பை போட்டுக்கொண்டு வா குளிரும் என்றான். வீட்டுக்குள் செருப்பை எப்படி போடுவது என்று யோசித்த என்னை புரிந்துகொண்டு, அது வீட்டுக்க போடுற செருப்புதான் போடு என்றான். வீட்டுக்குள் செருப்பை போடுவதா என்று எண்ணியபடி செருப்பை காலில் அணிந்துகொண்ட கணத்தில் மனதின் ஒரு மூலையில் சின்னதாக ஒரு பிசையல் எழுந்தது. செருப்பு சரியில்லை. லாசெப்பலில் இருந்து வீடுதிரும்பும் போது தொடருந்து நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தில் இருந்த ஒற்றை செருப்பை பார்க்கிறேன். காணவில்லை. சற்றுத்தொலைவில் தண்டவாளத்தில் குப்பைகளைப் அகற்றிக்கொண்டு ஒரு சுத்திகரிப்பு தொழிலாளி சென்றுகொண்டிருந்தார். அவரிடம் இப்போது அந்த செருப்பும் ஒரு மனிதனின் நினைவை பகிரக்கூடும்.