• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆதித்ய இளம்பிறையன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  658
 • Joined

 • Last visited

 • Days Won

  4

ஆதித்ய இளம்பிறையன் last won the day on August 8 2014

ஆதித்ய இளம்பிறையன் had the most liked content!

Community Reputation

284 ஒளி

1 Follower

About ஆதித்ய இளம்பிறையன்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  தமிழ் தேசம்
 • Interests
  தமிழ், காதல், வீரம்
 1. வணக்கம் சுமேரியர். நான் இந்தக் கட்டுரையில் இரண்டாம் பத்தியில் குறிப்பிட்ட படியே "இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விட்டீர்கள்" அதன் உண்மைத் தன்மையை கணக்கில் கொள்ளாமலே... பல நூறு வரலாற்று ஆதாரங்கள் உலகம் முழுவதும் இலக்கியங்கள் வாயிலாகவே கண்டறியப்பட்டுளளன. அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவைகளிலிருந்து உண்மைத் தன்மையை எடுப்பதே ஆய்வாளனின் வேலை. 1. இறையனார் அகப்பொருள் உரை ஓர் இலக்கண நூல். அது இலக்கியமன்று. அவை கூறிய அனைத்தும் கற்பனை எனக் கொண்டால், அவற்றில் சொல்லப்பட்டுள்ள. இன்று நம்மிடம் உள்ள தொல்காப்பியத்தையும் கற்பனை என்று கொள்ளலாகுமா? அகப்பொருள் உரை சொன்ன கடைச் சங்கத்தின் கடைசி அரசனான உக்கிரப் பெருவழுதியை கற்பனை என்ற சொல்லலாமா? இரண்டுமே இன்று நம் கண்முன் இருக்கும் சான்றுகள். ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்லை என்பதற்க்காக மற்ற அனைத்து விடயங்களும் பொய்யாகி விடாது. 2. நீங்கள் கடற்கோள் என்றால் அது சுனாமியாகத்தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அது அவ்வாறன்று. இலக்கியங்களில் சொல்லப்பட்ட "மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்" (கலித்தொகை) - அலைகள் ஊர்ந்து நிலப் பரப்பை ஆக்ரமித்துக் கொண்டது. "குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" (சிலப்பதிகாரம்) - கொடுமையான கடல் கவர்ந்து விட்டது. எனவே தான் நான் அது கடல் மட்ட உயர்வாகக்(Meltwater pulse) கூட இருக்கலாம் என்று எழுதினேன். "Melt Water Pulses -1A" and "Melt Water Pulses -1B" என்பவை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நீங்கள் விக்கிப்பீடியாவை நம்பாவிடில் இன்னொமொரு இணைப்பையும் தருகிறேன். நீங்களும் இணையத்தில் தேடிக் கொள்ளலாம். https://www.researchgate.net/publication/225624983_Reconsidering_melt-water_pulses_1A_and_1B_Global_impacts_of_rapid_sea-level_rise
 2. இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்லை என்பதற்க்காக அது பொய்யாகி விடாது. மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் நிலம், கடற்கோளினால் அமிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே ஆதாரங்களை இன்று இருக்கும் நிலப்பரப்பில் தேடுவது எந்தவிதமான நன்மையையும் கொணராது.நிற்க. உலகத்தில் உள்ள தொல்குடிகளிடம் எல்லாம் கடல் கோளினால் உலகம் அழிந்தது பற்றி தொன்மக் கதைகள் அல்லது இலக்கியக் குறிப்புகள் இருக்கிறது. தமிழர்களிடமும் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் இருக்கிறது. 1. மற்ற தொல்குடிகள் எல்லாம் ஒரே ஒரு கடல் கோளினைப் பற்றித்தான் பேசுகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மூன்று கடற்கோள்களை பற்றி பேசுகின்றோம். 2. மற்ற தொல்குடி கதைகளில் கடற்கோள் நடந்த காலம் பற்றி ஏதும் கிடையாது. ஆனால் நம்மிடம் மட்டும்தாம் கடற்கோள் நடந்த காலம் ஆண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்கோள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியக் குறிப்புகளுக்கு வருவோம். சிவன் (இறையனார்) தன்னையே பாட்டுடைத் தலைவனாக வைத்து எழுதிய நூல்தான் இறையனார் அகப்பொருள் எனப்பட்டது. இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரனார், மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழில் இருந்ததையும் அவற்றின் காலத்தையும் பின்வருமாறு வரையறுக்கிறார். முதற்சங்கம் தென்மதுரையில் 4440 ஆண்டுகள் இருந்து பின் கடற்கோளினால் அழிந்தது. பின்னர் இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இருந்து அழிவுற்றது. இறுதியாக கடைச்சங்கம் வடமதுரையில் (இப்போதைய மதுரை) 1850 ஆண்டுகள் இருந்தது. சங்கங்களில் எழுதிய நூல்களையும், அவற்றின் ஆசிரியர்களையும் சங்கம் அமைத்து போற்றிய மன்னர்களின் பெயர்களையும் நக்கீரனார் குறிப்பிடுகிறார். காலத்தின் கணிப்புகளில் கொஞ்சம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் இவை கற்பனையென முற்றிலும் புறந்தள்ள முடியாது. இடைச்சங்கத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட தொல்காப்பியம் இன்று நம்மிடம் இருக்கிறது. கடைச்சங்கத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட குறுந்தொகை, நற்றிணை இன்னும் பல நூல்கள் இன்று நம்மிடம் உள்ளன. அப்படியெனில் அவர் சொன்னவற்றில் மூன்று சங்கங்கள் இருந்தது என்பது உண்மை என்று புலப்படுகிறது. https://ta.wikipedia.org/wiki/கடைச்சங்கம் https://ta.wikipedia.org/wiki/கபாடபுரம் அறிவியலுக்கு வருவோம். தற்பொழுது செயற்கைக்கோள் பதிவுகள், தொல்பொருள் இடங்கள் மற்றும் வண்டல் படிவுகள் ஆகியவற்றின் சான்றுகளைப் பயன்படுத்தி கடல் மட்ட உயர்வின் விகிதங்கள் மதிப்பிடப்படுகின்றன. இவ்வாய்வின்படி கடைசியாக நடந்த பனியுறைக் காலம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்து விட்டது. அப்பொழுது கடல் மட்டம் தற்பொழுது இருந்ததைவிட 130 அடிக்கும் கீழே இருந்தது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 14,500 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் உருகுவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பனிப்பாறைகள் வியத்தகு முறையில் உருகின. கடல் மட்டம் வேகமாக உயர்ந்தது("உருகும் நீர் துடிப்பு 1A" அல்லது "Melt Water Pulses -1A" என அழைக்கப்படுகிறது). இந்தக் காலகட்டத்தில் கடல் மட்டம் 16 முதல் 24 மீட்டர் வரை உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்பு மீண்டும் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் குறைகிறது. சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு, காலநிலை மீண்டும் திடீரென வெப்பமடைந்தது. பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் 28 மீட்டர் வரை உயர்கிறது (MWP-1B). கடைசியாக 8,200 and 7,600 ஆண்டு வாக்கில் கடல் மட்டம் மீண்டும் உயர்கிறது. கடல் மட்டம் மெல்ல மெல்ல குறிப்பிடும் அளவுக்கு ஏறி இறங்கியுள்ளது என்பது அறிவியலால் நிறுவப்பட்ட உண்மை. எனவே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடற்கோள்கள் என்பது உண்மையாகும். இதைப்பற்றி இன்னும் விரிவான தகவல் இருக்குமாயின் மற்றவர்கள் பதியவும். கீழே இணைக்கப்பட்ட படங்களை நோக்கவும். https://en.wikipedia.org/wiki/Past_sea_level https://www.giss.nasa.gov/research/briefs/gornitz_09/ https://wattsupwiththat.com/2014/05/13/what-caused-a-1300-year-deep-freeze-12800-years-ago-new-pnas-paper-says-it-wasnt-an-impact/
 3. தமது விருப்பங்களாக (Interests) தமிழ், காதல், வீரம் என ஆதித்த இளம்பிறையன் அவர்கள் அடுக்கியது ஒரு மூன்று சொற்கவிதை. தம் வாழிடம் (Location) தமிழ் தேசம் என்றது தனிக் கவிதை. அவர்தம் வாழ்வு 'ரசனை' என்று நாம் சேர்ப்போமே !

 4. சம்பல் என்பது இலங்கை தமிழ் வழக்கு என்று படித்ததேன். இந்த வார்த்தை மலாய் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் பொதுவானது என்று பல அகராதியில் இருக்கிறது. "Historians believe that the Word Sambho is derived from "Sambho Mahadev" a honorific term used by Shaivites to praise Lord Shiva. Some historians claim that the word Sambavar came from "Sambuvarayar" a small chiefstains ruled in Thondaimandalam of ancient Tamil Nadu. Some historians believe that the term Sambavar came from Tamil word Sambal (Ta: சாம்பல்) meaning Ash used as the divine symbol for the followers of Lord Shiva. Some historians claim that the root word Sambal (Ta: சாம்பல்) denotes the skin colour of these group of people due to the tropical region temperature." https://synonymsbot.com/sambuvarayar சாம்பல் தமிழ்ச் சொல்லயின் சம்பலும் தமிழ் சொல்லயிருக்கவேண்டும் என்பது என் அனுமானம். இதனுடைய வேர்ச் சொல் அறிந்தால் தெரிந்து விடலாம். இணையத்தில் பல இடங்களில் இந்த வார்த்தை திராவிட மொழிக்கு குடும்பத்தைச் சார்ந்தது என்று வருகிறது. குறிப்பு: https://www.dictionary.com/browse/sambal http://www.wikiwand.com/en/List_of_English_words_of_Dravidian_origin https://forum.lowyat.net/topic/2879355/all http://www.altergyan.com/40-awesome-words-tamil-malayalam/
 5. சமையலில் புது வகையான மசாலா பொருட்களை சேர்ப்பதும் விலக்குவதும் காலங் காலமாக நடந்து வருவது. ஆனால் இவர்கள் எழுதுவது மராட்டியர்கள் தான் இந்த உணவை தமிழகத்திற்கு தந்தது போல் எழுதுகிறார்கள். இது எல்லா இடங்களிலும் பகிரவும் படுகிறது. உணவில் பருப்பை சேர்ப்பது என்பது தமிழர்களின் நெடிய மரபு. அது மராட்டியர்கள் கன்டுபிடிப்பு அல்ல. மராட்டியர்கள் தமிழகத்திற்கு 350 வருடத்திற்கு முன்பு தான் வந்தவர்கள். ஆனால் பருப்பு உணவு என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்களின் உணவு புழக்கத்தில் இருந்தது. இது குறித்து சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது. "நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவிர் " பாடலின் பொருள் : நீண்ட ‘குரல்’ எனும் கொத்து உடையப் பூளையின் மலரைப் போன்ற குறுகியத் தாளையுடைய வரகின் சிறிய பருக்கைகளால் ஆன ‘சொன்றி’ எனும் சோற்றை,வண்ணமயமான வேங்கைப் பூவைக் கண்டது போலக் காட்சி தரும் அவரையின் நல்ல பருப்பை இட்டு துழாவியதால் இனிமையான சுவை உடைய மூரல் எனும் சோற்றைப் பெறுவீர்கள்! அவரைப் பருப்பை இட்டு குழைத்த உணவை அப்போதே உண்டு வந்திருக்கின்றனர். தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள். சம்பல் என்ற தமிழ் வார்த்தையும் ஒப்பு நோக்குக. போன தலைமுறையில் தான் எல்லாம் சமஸ்கிரதம் தந்தது என்று எழுதி தமிழை தாழ்த்தி வைத்தார்கள். இப்பொழுதும் அதையே செய்ய முனைகிறது ஒரு கும்பல்.
 6. அருமையான பாடல். ஆனால் இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகளின் பொருள் மிகவும் ஆழமானவை... அந்தரமானவை. "பசலை இனிஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே’’ இந்த வரிகளில் மூன்று தமிழ் சொல்லுக்கு நீங்கள் என்ன பொருள் கொள்ளுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இந்தப் பாடலின் சுவை/பொருள் வேறாகும். பசலை - பெண் உடல் மெலியும்போது ஏற்படும் நிற மாறுபாடு. திதிலை - பெண் உடல் விரியும்போது ஏற்படும் நிற மாறுபாடு (கருவுற்ற பெண்களின் அடிவயிற்றில், அல்குலில் உருவாவது) அல்குல் - பெண்குறி மேடு. தீம்பால் என்பது... சீம்பால் அல்லது கன்று ஈன்ற உடன் சுரக்கும் முதல் பால் என்று கொள்ள வேண்டும். இப்பொழுது படியுங்கள் அதன் பொருளை...... நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலை , அதன் கன்றும் உண்ணாமல் , கலத்தையும் சேராமல் நிலம் உண்பது போல், எனது மேனி வனப்பு எனக்கும் உதவாமல் எனது தலைவனுக்கும் உதவாமல், உவகையால் வளர்ந்து விரிந்த மாந்தளிர் நிற அல்குலை தேமல் தின்று விடுகிறது. ஜெயமோகன் இதுபற்றி விரிவாக ஒரு பதிவே இட்டுள்ளார். பதிவு இங்கே
 7. அரசியல் வியாபாரமாகிப் போனதால், வியாபாரிகள் பொருளீட்ட வருகிறார்கள். வியாபாரத்துக்கு விளம்பரமும், கவர்ச்சியும் அவசியம் தானே..! விளம்பரத்துக்கு தொலைக்காட்சி ஒளியலை வரிசையம், கவர்ச்சிக்கு சினிமா முகத்தையும் வியாபாரிகள் விலை பேசுகிறார்கள் . அது செவ்வனே நடக்கிறது.
 8. நன்று அருள்மொழிவர்மன். உங்களது தமிழ் எழுத்து நடையும், கற்பனையும் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.
 9. இடம், சூழல் அதன் பின்னணி அறியாது எழுதி விட்டேன் என்று எண்ணுகிறேன். வருந்துகிறேன்
 10. ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின் மீதான வெறுப்பா? தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார். ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும். தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??
 11. நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே ! இது தொடர்பான ஒரு செய்தி
 12. இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்.. குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ??? கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப் பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப் போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன் வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங் கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால் இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப் பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான் பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.
 13. போர் என்றுமே இனிப்பாக இருந்ததில்லை. கொலை, களவு, பாலியல் வல்லுறவு இவை யாவும் போரின் அங்கமே. இச்செயல்கள் உலகம் முழுமைக்கும் நடந்தவையே. சோழர்கள் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. மற்றபடி தமிழர்களின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அவர்கள் வென்ற இடங்களில் தமிழர்களை குடியேற்றம் செய்வதில்லை. கள்வர் என்ற குழு தமிழத்தில் இருந்தது. பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் உணவுத் தேவைக்காக வழிப்போக்கர்களிடம் கவர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தது. இது சங்க இலக்கியம் முழுமைக்கும் பதியப்பட்டு இருக்கிறது. தோழி தனது தலைவன் ஆரலைக் கள்வர்களிடம் அகப்படாமல் வரவேண்டும் என்று உருகி வேண்டிய பாடல்கள் ஏராளம். இப்பாலை நில மக்களின் கடவுளே கொற்றவை. போர்க் காலங்களில் இவர்களை மன்னன் படைகளில் சேர்த்துக் கொள்வதுண்டு. இவர்களே படைகளின் முன்னணியில் இருப்பார்கள். கோட்டைச் சுவர்களில் ஏறி படைகளுக்கு பாதைகளை ஏற்படுத்துவது இவர்களது முக்கியப் பணி. அதற்குப் பிரதிபலனாக போர்களில் கவர்ந்த செல்வங்களை அவர்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவர். பின்னர் இவர்களது குலம் பெருகி, அவர்களுக்கு அரசன் படை, கொடி என்பன பல உண்டாகிற்று. அகநானூற்றுப் பாடல் ஒன்றில் "கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" கள்வர்களுக்கு அரசன் என்ற செய்தியைக் காணலாம். சங்க காலத்தில் ஆநிரைக் கவர்தல் என்ற போர் மரபே இருந்தது. இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.
 14. வரலாறு நமது சிறந்த வழிகாட்டி. எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும். இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும்.