Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆதித்ய இளம்பிறையன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  660
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by ஆதித்ய இளம்பிறையன்

 1. காட்சியை இணைத்தமைக்கு நன்றி நிலாமதி. வரவேற்றலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நிழலி, சுவி. கற்பனை மிகுதின் கட்டிலும் சிறக்குமே தலைவா!
 2. இது ஒரு பழைய பாடல் தான்.. பல முறை கேட்டு கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அப்படி இல்லை. புத்தனுக்கு ஞானம் வந்ததுபோல், ஓர் மாலையில் காதில் விழுந்த இந்த வரிகளும் எண்ணுறக்கம் திண்கிறது. பாடல் வரிகளை கேட்பதனால் இன்பமா இல்லை அது மீட்டுத்தரும் நினைவுகள் இன்பமா தெரியவில்லை. பாடலில் ஒளிந்திருக்கும் மறைபொருள் இதுவோ!? அதுவோ ?!! என்று என் கற்பனைகளையும் அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது உடலெங்கும் இன்பம் தோய்கிறது. உங்கள் கற்பனைகளே.. உங்கள் உயிர்ப்பினை உறுதி செய்யும்..! கீழ் உள்ள வரிகள் உங்களுக்காக. சுட்டிக்காட்டிய வரிகளுக்கு பொருள் அறிந்தாலும் / புரிந்தாலும் பதிவிடுங்கள். அறிய ஆவல் !! மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மயிலே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே மாறன் கணை போடும் விழியே மாலை தன்னில் பாடும் மொழியே தங்கமலர் பாதம்மேவி தாளம் போடும் கொலுசு போல அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு ஓ செங்கமலம் போல தேவி தேரில் ஏறி உன்னைக் கூட இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர என்னை தினம் பாடும் குயிலே வண்ணம் கொண்டு ஆடும் மயிலே ....... ஓ வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா மோகம் இசை பாடும் உடலே காமன் விளையாடும் திடலே
 3. வணக்கம் சுமேரியர். நான் இந்தக் கட்டுரையில் இரண்டாம் பத்தியில் குறிப்பிட்ட படியே "இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விட்டீர்கள்" அதன் உண்மைத் தன்மையை கணக்கில் கொள்ளாமலே... பல நூறு வரலாற்று ஆதாரங்கள் உலகம் முழுவதும் இலக்கியங்கள் வாயிலாகவே கண்டறியப்பட்டுளளன. அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவைகளிலிருந்து உண்மைத் தன்மையை எடுப்பதே ஆய்வாளனின் வேலை. 1. இறையனார் அகப்பொருள் உரை ஓர் இலக்கண நூல். அது இலக்கியமன்று. அவை கூறிய அனைத்தும் கற்பனை எனக் கொண்டால், அவற்றில் சொல்லப்பட்டுள்ள. இன்று நம்மிடம் உள்ள தொல்காப்பியத்தையும் கற்பனை என்று கொள்ளலாகுமா? அகப்பொருள் உரை சொன்ன கடைச் சங்கத்தின் கடைசி அரசனான உக்கிரப் பெருவழுதியை கற்பனை என்ற சொல்லலாமா? இரண்டுமே இன்று நம் கண்முன் இருக்கும் சான்றுகள். ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்லை என்பதற்க்காக மற்ற அனைத்து விடயங்களும் பொய்யாகி விடாது. 2. நீங்கள் கடற்கோள் என்றால் அது சுனாமியாகத்தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அது அவ்வாறன்று. இலக்கியங்களில் சொல்லப்பட்ட "மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்" (கலித்தொகை) - அலைகள் ஊர்ந்து நிலப் பரப்பை ஆக்ரமித்துக் கொண்டது. "குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" (சிலப்பதிகாரம்) - கொடுமையான கடல் கவர்ந்து விட்டது. எனவே தான் நான் அது கடல் மட்ட உயர்வாகக்(Meltwater pulse) கூட இருக்கலாம் என்று எழுதினேன். "Melt Water Pulses -1A" and "Melt Water Pulses -1B" என்பவை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நீங்கள் விக்கிப்பீடியாவை நம்பாவிடில் இன்னொமொரு இணைப்பையும் தருகிறேன். நீங்களும் இணையத்தில் தேடிக் கொள்ளலாம். https://www.researchgate.net/publication/225624983_Reconsidering_melt-water_pulses_1A_and_1B_Global_impacts_of_rapid_sea-level_rise
 4. இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்லை என்பதற்க்காக அது பொய்யாகி விடாது. மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் நிலம், கடற்கோளினால் அமிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே ஆதாரங்களை இன்று இருக்கும் நிலப்பரப்பில் தேடுவது எந்தவிதமான நன்மையையும் கொணராது.நிற்க. உலகத்தில் உள்ள தொல்குடிகளிடம் எல்லாம் கடல் கோளினால் உலகம் அழிந்தது பற்றி தொன்மக் கதைகள் அல்லது இலக்கியக் குறிப்புகள் இருக்கிறது. தமிழர்களிடமும் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் இருக்கிறது. 1. மற்ற தொல்குடிகள் எல்லாம் ஒரே ஒரு கடல் கோளினைப் பற்றித்தான் பேசுகின்றன. ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மூன்று கடற்கோள்களை பற்றி பேசுகின்றோம். 2. மற்ற தொல்குடி கதைகளில் கடற்கோள் நடந்த காலம் பற்றி ஏதும் கிடையாது. ஆனால் நம்மிடம் மட்டும்தாம் கடற்கோள் நடந்த காலம் ஆண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்கோள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியக் குறிப்புகளுக்கு வருவோம். சிவன் (இறையனார்) தன்னையே பாட்டுடைத் தலைவனாக வைத்து எழுதிய நூல்தான் இறையனார் அகப்பொருள் எனப்பட்டது. இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரனார், மூன்று தமிழ்ச் சங்கங்கள் தமிழில் இருந்ததையும் அவற்றின் காலத்தையும் பின்வருமாறு வரையறுக்கிறார். முதற்சங்கம் தென்மதுரையில் 4440 ஆண்டுகள் இருந்து பின் கடற்கோளினால் அழிந்தது. பின்னர் இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இருந்து அழிவுற்றது. இறுதியாக கடைச்சங்கம் வடமதுரையில் (இப்போதைய மதுரை) 1850 ஆண்டுகள் இருந்தது. சங்கங்களில் எழுதிய நூல்களையும், அவற்றின் ஆசிரியர்களையும் சங்கம் அமைத்து போற்றிய மன்னர்களின் பெயர்களையும் நக்கீரனார் குறிப்பிடுகிறார். காலத்தின் கணிப்புகளில் கொஞ்சம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் இவை கற்பனையென முற்றிலும் புறந்தள்ள முடியாது. இடைச்சங்கத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட தொல்காப்பியம் இன்று நம்மிடம் இருக்கிறது. கடைச்சங்கத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட குறுந்தொகை, நற்றிணை இன்னும் பல நூல்கள் இன்று நம்மிடம் உள்ளன. அப்படியெனில் அவர் சொன்னவற்றில் மூன்று சங்கங்கள் இருந்தது என்பது உண்மை என்று புலப்படுகிறது. https://ta.wikipedia.org/wiki/கடைச்சங்கம் https://ta.wikipedia.org/wiki/கபாடபுரம் அறிவியலுக்கு வருவோம். தற்பொழுது செயற்கைக்கோள் பதிவுகள், தொல்பொருள் இடங்கள் மற்றும் வண்டல் படிவுகள் ஆகியவற்றின் சான்றுகளைப் பயன்படுத்தி கடல் மட்ட உயர்வின் விகிதங்கள் மதிப்பிடப்படுகின்றன. இவ்வாய்வின்படி கடைசியாக நடந்த பனியுறைக் காலம் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முடிந்து விட்டது. அப்பொழுது கடல் மட்டம் தற்பொழுது இருந்ததைவிட 130 அடிக்கும் கீழே இருந்தது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 14,500 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் உருகுவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பனிப்பாறைகள் வியத்தகு முறையில் உருகின. கடல் மட்டம் வேகமாக உயர்ந்தது("உருகும் நீர் துடிப்பு 1A" அல்லது "Melt Water Pulses -1A" என அழைக்கப்படுகிறது). இந்தக் காலகட்டத்தில் கடல் மட்டம் 16 முதல் 24 மீட்டர் வரை உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்பு மீண்டும் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் குறைகிறது. சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு, காலநிலை மீண்டும் திடீரென வெப்பமடைந்தது. பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் 28 மீட்டர் வரை உயர்கிறது (MWP-1B). கடைசியாக 8,200 and 7,600 ஆண்டு வாக்கில் கடல் மட்டம் மீண்டும் உயர்கிறது. கடல் மட்டம் மெல்ல மெல்ல குறிப்பிடும் அளவுக்கு ஏறி இறங்கியுள்ளது என்பது அறிவியலால் நிறுவப்பட்ட உண்மை. எனவே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடற்கோள்கள் என்பது உண்மையாகும். இதைப்பற்றி இன்னும் விரிவான தகவல் இருக்குமாயின் மற்றவர்கள் பதியவும். கீழே இணைக்கப்பட்ட படங்களை நோக்கவும். https://en.wikipedia.org/wiki/Past_sea_level https://www.giss.nasa.gov/research/briefs/gornitz_09/ https://wattsupwiththat.com/2014/05/13/what-caused-a-1300-year-deep-freeze-12800-years-ago-new-pnas-paper-says-it-wasnt-an-impact/
 5. இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்.. குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ??? கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப் பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப் போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன் வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங் கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால் இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப் பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான் பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா.
 6. போர் என்றுமே இனிப்பாக இருந்ததில்லை. கொலை, களவு, பாலியல் வல்லுறவு இவை யாவும் போரின் அங்கமே. இச்செயல்கள் உலகம் முழுமைக்கும் நடந்தவையே. சோழர்கள் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. மற்றபடி தமிழர்களின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அவர்கள் வென்ற இடங்களில் தமிழர்களை குடியேற்றம் செய்வதில்லை. கள்வர் என்ற குழு தமிழத்தில் இருந்தது. பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் உணவுத் தேவைக்காக வழிப்போக்கர்களிடம் கவர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தது. இது சங்க இலக்கியம் முழுமைக்கும் பதியப்பட்டு இருக்கிறது. தோழி தனது தலைவன் ஆரலைக் கள்வர்களிடம் அகப்படாமல் வரவேண்டும் என்று உருகி வேண்டிய பாடல்கள் ஏராளம். இப்பாலை நில மக்களின் கடவுளே கொற்றவை. போர்க் காலங்களில் இவர்களை மன்னன் படைகளில் சேர்த்துக் கொள்வதுண்டு. இவர்களே படைகளின் முன்னணியில் இருப்பார்கள். கோட்டைச் சுவர்களில் ஏறி படைகளுக்கு பாதைகளை ஏற்படுத்துவது இவர்களது முக்கியப் பணி. அதற்குப் பிரதிபலனாக போர்களில் கவர்ந்த செல்வங்களை அவர்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவர். பின்னர் இவர்களது குலம் பெருகி, அவர்களுக்கு அரசன் படை, கொடி என்பன பல உண்டாகிற்று. அகநானூற்றுப் பாடல் ஒன்றில் "கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்" கள்வர்களுக்கு அரசன் என்ற செய்தியைக் காணலாம். சங்க காலத்தில் ஆநிரைக் கவர்தல் என்ற போர் மரபே இருந்தது. இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.
 7. தமிழில் எழுதப்பட்ட, தற்பொழுது நம்மிடம் உள்ள மிகப்பழைய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் கால வரையறை விக்கிப்பீடியா தகவலின் படி கி.மு 2100 (ஏற்ககுறைய வருட 4000 பழமையான நூல்). தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் தொல்காப்பியர் ஐந்திரம் மற்றும் 'முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஆகையால் தொல்காப்பியத்திற்கு முனபே பல இலக்கண நூல்கள் இருந்தது உண்மை. தொல்காப்பியம் 4000 வருட பழமையான நூல் எனில் தமிழ் மொழியின் தோற்றம் அதைவிட பழமையாக இருக்க வேண்டும். விக்கிப்பீடியா காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன், பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆராய்ந்தான் என இறையனார் களவியல் உரைகூறுகிறது. மேலும் 9 அரசர்கள் 4440ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக கூறுகிறது. இசங்கத்தில் இயற்றிய நூல்களின் வரிசையும் கூறுகிறது. இறையனார் களவியல் உரையில் முதற்சங்க நூல்களின் பட்டியலில் தொல்காப்பியம் கூறப்படவில்லை. மேலும் தொல்காப்பியம் எழுதப்பட்டது இடைச் சங்க கால நூல் என தமிழ் பண்டிதர்கள் கூற்று. இது உண்மையெனில் தமிழ் மொழியின் தோற்றம் ஏறக்குறைய 8000 ஆண்டுகள் பழமையானது உண்மை என்னவெனில் தமிழ் மானுடம் பிறந்ததிலிருந்து பேசப்படும் மொழி. தமிழ் ஒரு இறை மொழி அது என்றும் இறவா மொழி !!
 8. தமிழ் எல்லா சமயங்களுக்கும் இடம் கொடுத்தது. எல்லா சமயங்களும் தமிழுக்கும் இடம் கொடுத்தன. எந்தெந்த சமயங்கள் தமிழுலகில் நுழைந்ததோ அத்தனை சமயங்களும் உரிமை கொண்டாடும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகிறது. ஒரு நூல் போதும்... தமிழர்களின் வாழ்க்கைக்கு; இந்த ஒரு நூல் போதும்; அந்தளவுக்கு நமது வாழ்க்கை முழுவதையும் ஒரு சிறிய நூலுக்குள் அடக்கி எளிமையாகத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். இது தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய சொத்து. இந்த சொத்தை பொதுவுடமையாக்கி உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்ட நமது *"திருக்குறள்”* நூலை அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யபட்ட போதும், அது கத்தார் நூலகத்தில் இல்லாதது பெரும் குறையாக இதுநாள் வரை எங்களுக்கு இருந்து வந்தது. அது நமது செந்தமிழர் பாசறை கத்தார் உறவுகள் மூலம் இன்று தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நமது திருமறை, மற்றும் *"பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்"* தொகுப்பு இரண்டையும் "செந்தமிழர் பாசறை கத்தார்" உறவுகளின் முயற்சியில், நமது தாயகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, *கத்தார் நூலகத்தில்* வைப்பதற்கு அனுமதியும் பெற்று, 13-10-2018 அன்று கத்தார் தேசிய நூலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய சிறப்பான செயலினை நடத்திக் காட்டிய அனைத்து செந்தமிழர் பாசறை கத்தார் உறவுகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளும், வணக்கங்களும். இந்நேரத்தில் அரபு மொழியில் திருக்குறளையும், பாரதிதாசன் கவிதைகளையும் பொழிபெயர்ப்பு செய்த *"டாக்டர் திரு. ஜாகிர் ஹூசைன்"* (சென்னை பல்கலை கழக அரபு மொழி துனை பேராசிரியர்) அவர்களுக்கும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம். தமிழால் இணைவோம் நாம் தமிழராய் நிமிர்வோம் *செந்தமிழர் பாசறை கத்தார்* Source : Verified Whatsapp Message
 9. இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை. படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா. இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை
 10. எனது படங்களை பதிவேற்ற இயலவில்லை... எல்லா வடிவங்களிலும் முயன்று விட்டேன் (.png,.jpg ). 1MB க்கு குறைவுதான்
 11. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தாமரை எழுதிய இந்த வரிகளையும் கேட்டுப் பாருங்களேன்... மறு வார்த்தை பேசாதே! மடிமீது நீ தூங்கிடு! இமை போல நான்காக்க.. கனவாய் நீ மாறிடு ! ..... மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே ..! பிரிந்தாலும் என் அன்பு.. ஒருபோதும் பொய்யில்லையே ! ..... இதழ் என்னும் மலர்கொண்டு.. கடிதங்கள் வரைந்தாய்! பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் ..!
 12. திரிதபாதி அல்ல திரிபதாதி. இது இலக்கியப் பாங்குகளில் ஒருவகை. பரிதிமாற் கலைஞர்(வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) எழுதிய சிந்திரக் கவி விளக்கம் என்ற நூலில் திரிபதாதி பற்றி சொல்லப்படுகிறது. "மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ றன்ற பொருள்பிற வாந்திரி பதாதி "
 13. சரியான விடை வாலி !! மெச்சுகிறேன் வேந்தனுக்கு செய்திகளை விரைந்து தருபவன் --> வேவாள் முதல் போயின் பெண்ணின் அங்கத்திற்கு உவமையாவது ஆபத்தானதும் கூட --> வாள் இடை போயின் தலைகாக்கும் செயல் --> வேள் - உதவி
 14. சரியான பதில்.. தகழி - உண்கலம் காற்றும் இசையாகும் இதனிலடைத்தால் => கழி =>மூங்கில் கம்பு காற்றும் புகாது காதலர்கள் செய்தால் => தழி => தழுவு ஆகா பச்சை இல்லையே !! நாளை இடுகிறேன் வல்வை ...
 15. முற்காலத்தில் கோட்டை மதில்களை ஒட்டிய நீர்நிலைகளை குறிக்கப் பயன்படுத்தும் சொல்லை ஒத்தது. முயன்று பாருங்கள்
 16. கீழே உள்ளவற்றிற்கு விடை கூறுங்கள் பார்க்கலாம். 1. விண்கலம் போல உண்ணப் பயன்படும் கலம். முதல் அழிந்தால் காற்றும் இசையாகும் இதனிலடைத்தால் இடை அழிந்தால் காற்றும் புகாது காதலர்கள் செய்தால் 2. வேந்தனுக்கு செய்திகளை விரைந்து தருபவன். முதல் போயின் பெண்ணின் அங்கத்திற்கு உவமையாவது ஆபத்தானதும் கூட இடை போயின் தலைகாக்கும் செயல்
 17. நாரிகை என்ற சொல்லில் முதல் அகற்றிப் பார்த்தால் பொருள் ஏதும் இல்லையே ?? திரிபதாதி சொல்லாக வேண்டுமெனில் முதல் அகன்று அச்சொல் ஒரு பொருள் தர வேண்டுமே!! இலக்கணம் இதுவல்லவோ.. மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும்.
 18. நாரிகை முதல் அகன்றால் -> ரிகை அல்லது இகை இகை = கொடு; ரிகை = ஏதேனும் அர்த்தமுண்டா? நாகை -> கடல் சூழ் பட்டினம் கடை அகன்ற வார்த்தைகள் விதிகளுக்குள் அடங்காதே??
 19. சங்க காலத்தில் பார்ப்பன் என்ற சொல் தலைவன் தலைவி இடையே நிகழும் பிணக்குகளை தீர்க்க தூது செல்பவர்களை(அறிவிற் சிறந்தோர்) அழைக்கப் பயன்படுத்தப்பட்டது என்று இரவான காவியம் எழுதிய குழந்தை வேலு குறிப்பிட்டுள்ளார். நாளடைவில் வடக்கில் இருந்து வந்த ஆரியர்கள் பொதுவாக அமைதியான குணத்தை கொண்டபடியால் தூது செல்லும் வேலைக்க்கு அமர்த்தப்பட்டார்கள். அந்த பார்ப்பன் என்ற வார்த்தையின் நீட்சியே பார்ப்பணன்.
 20. பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை... மதம் என்பது எம்முடைய அடையாளம். ஆம் இந்த மதம்தான் எம் மீது சாதிய கட்டமைப்புகளை அமிழ்த்துகிறது. இந்த மதத்தின் பெயரில்தான் மனுஸ்மிருதி உருவாக்கப்பட்டது. அதன் பெயரிலேயே நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் . அதன் பெயரிலேயே எனது பாட்டன் முப்பாட்டன் மிக கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். அதன் பெயரிலேயே எமக்கு சமூக நீதி மறுக்கபப்டுகிறது. நான் இந்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் கீதை இருக்கும், கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரம் இருக்கும். அதன் பெயரால் நான் மீண்டும் துன்புறுத்தப்படலாம். வேறு எங்கும் சாதிப் பாகுபாடு இருக்கிறதோ இல்லையோ? சுரண்டல் இருக்கிறதோ இல்லையோ?? தெரியாது. அதைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை. ஆனால் இங்கு இருக்கிறது அதுவும் மிக கடுமையாக இருக்கிறது. சாதியின் பெயரால் சிதைக்கப்படுகிறார்கள். வறுமையின் பெயலால் வதைக்கபப்டுகிறார்கள். சமூக நீதி பெறவும், வறுமையிலிருந்து விடுபடவும் யாரவது உதவ மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். சில பேர் வருகிறார்கள் அவர்கள் அடையாளத்தை மற்றக் கோருகிறார்கள். இந்த அடையாளத்தை மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு வறுமையில் இருந்து தப்பிக்க ஒரு வழி தெரிகிறது. தனது தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. மாறுவது என முடிவு கொண்டு மாறுகிறார்கள். ஏனெனில் இந்த அடையாளம் நல்ல வாழ்வைத் தரவில்லை வசதியை தரவில்லை. இதனால் யாருக்கு என்ன கோபம்?? இவ்வளவு காலம் நான் சுரண்டப்படும்போது குரல் கொடுத்தார்களா? இல்லை. வதைக்கப்படும்பொது வாழ்வு கொடுத்தார்களா? இல்லை. அப்புறம் இன்ன இப்பொழுது?? ஏன் அடிமை எண்ணிக்கை ஒன்று குறைகிறதே என்று வருத்தமா? பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை...
 21. யாரவது முதல்ல இந்துனா யாருன்னு வரையறை செய்யுங்க. எனக்கு நான் இந்துவானு ஒரே குழப்பமா இருக்கு !!??
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.