Jump to content

ஆதித்ய இளம்பிறையன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    660
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by ஆதித்ய இளம்பிறையன்

  1. On ‎10‎/‎21‎/‎2018 at 6:45 PM, suvy said:

    ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!  tw_blush:

     

    இவங்க சொன்னது கொஞ்சம் தான். சிற்றிலியக்க நூலான குற்றாலக் குறவஞ்சி  வர்ணனைகள் எல்லாம் வேற மாதிரி. இந்நூல் மெல்லிய காமம் கலந்த மாதிரி இருக்கும். குறவனுக்கும் குறத்திக்கும் நடக்குமாறு எழுதியிருக்கும் ஒரு உரையாடலின் பகுதி இது... தமிழ் அறிந்தவர்கள் ரசிக்கலாம்..

     

        குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி - ???
        கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா 

       இல்லாத சுற்றெல்லா மெங்கே படித்தாய்நீ சிங்கி - நாட்டில்
        நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா

        பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி - இந்த
        வெட்ட வௌியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா

        கட்டிக்கொண் டேசற்றே முத்தங் கொடுக்கவா சிங்கி - நடுப்
        பட்டப் பகலில்நா னெட்டிக் கொடுப்பேனோ சிங்கா

         முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி - காம
        மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா

        சேலை யுடைதனைச் சற்றே நெகிழ்க்கவா சிங்கி - சும்மா
        நாலுபேர் முன்னெனை நாணங் குலையாதே சிங்கா

        பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி - மனப்
        போதம் வருடிப்போய் பூனையைக் குத்தடா சிங்கா

        நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி - உன்றன்
        வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா

         ஒக்கப் படுக்க வொதுக்கிடம் பார்க்கவோ சிங்கி - பருங்
        கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா

       விந்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி - அது
        சந்தேக மோஉன்றலைப் பேனைக் கேளடா சிங்கா

         தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி - அப்பால்
        இந்நாட்டில் வந்தென்னை யெப்படி நீகண்டாய் சிங்கா

         நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி - மணிப்
        பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா

         பாடிக்கொள் வாரெவ ராடிக்கொள் வாரெவர் சிங்கி - நீதான்
        பாடிக்கொண் டால்போது மாடிக்கொள் வேனடா சிங்கா

         பார்க்கப் பொறுக்குமோ பாவியென் னாவிதான் சிங்கி - முன்னே
        ஆக்கப்பொறுத்தவ ராறப் பொறர்களோ சிங்கா. 

    • Like 2
  2. இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை.  படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா.  இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி  சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை

    • Like 1
  3. பார்ப்பணன் என்பது தமிழில் இல்லை. ஒருவேளை பார்பணர்கள் ஆப்கனிய காடைகள் அல்லாமல் பார்சிய காடைகளா எனற்து ஆராசிக்குரியது.

     

    சங்க காலத்தில் பார்ப்பன் என்ற சொல் தலைவன் தலைவி இடையே நிகழும் பிணக்குகளை தீர்க்க தூது செல்பவர்களை(அறிவிற் சிறந்தோர்) அழைக்கப் பயன்படுத்தப்பட்டது என்று இரவான காவியம் எழுதிய குழந்தை வேலு குறிப்பிட்டுள்ளார். நாளடைவில் வடக்கில் இருந்து வந்த ஆரியர்கள் பொதுவாக அமைதியான குணத்தை கொண்டபடியால் தூது செல்லும் வேலைக்க்கு அமர்த்தப்பட்டார்கள். அந்த பார்ப்பன் என்ற வார்த்தையின் நீட்சியே பார்ப்பணன்.

  4. பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை... 
     
    மதம் என்பது எம்முடைய அடையாளம். 
    ஆம் இந்த மதம்தான் எம் மீது சாதிய கட்டமைப்புகளை அமிழ்த்துகிறது. இந்த மதத்தின் பெயரில்தான் மனுஸ்மிருதி உருவாக்கப்பட்டது. அதன் பெயரிலேயே நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் . அதன் பெயரிலேயே எனது பாட்டன் முப்பாட்டன் மிக கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். அதன் பெயரிலேயே எமக்கு சமூக நீதி மறுக்கபப்டுகிறது. நான் இந்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் கீதை இருக்கும், கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரம் இருக்கும். அதன் பெயரால் நான் மீண்டும் துன்புறுத்தப்படலாம்.
     
    வேறு எங்கும் சாதிப் பாகுபாடு இருக்கிறதோ இல்லையோ? சுரண்டல் இருக்கிறதோ இல்லையோ?? தெரியாது. அதைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை. ஆனால் இங்கு இருக்கிறது அதுவும் மிக கடுமையாக இருக்கிறது. சாதியின் பெயரால் சிதைக்கப்படுகிறார்கள். வறுமையின் பெயலால் வதைக்கபப்டுகிறார்கள். சமூக நீதி பெறவும், வறுமையிலிருந்து விடுபடவும் யாரவது உதவ மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். சில பேர் வருகிறார்கள் அவர்கள் அடையாளத்தை மற்றக் கோருகிறார்கள். இந்த அடையாளத்தை மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு வறுமையில் இருந்து தப்பிக்க ஒரு வழி தெரிகிறது. தனது தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. மாறுவது என முடிவு கொண்டு மாறுகிறார்கள். ஏனெனில் இந்த அடையாளம் நல்ல வாழ்வைத் தரவில்லை வசதியை தரவில்லை.  இதனால் யாருக்கு என்ன கோபம்?? இவ்வளவு காலம் நான் சுரண்டப்படும்போது குரல் கொடுத்தார்களா? இல்லை. வதைக்கப்படும்பொது வாழ்வு கொடுத்தார்களா? இல்லை. அப்புறம் இன்ன இப்பொழுது?? ஏன் அடிமை எண்ணிக்கை ஒன்று குறைகிறதே என்று வருத்தமா?  
     
    பணத்திற்காகவும், சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் நடக்கும்.. காரணம் களையப்படாதவரை... 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.