தமிழினி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,859
 • Joined

 • Days Won

  9

தமிழினி last won the day on May 15 2018

தமிழினி had the most liked content!

Community Reputation

535 பிரகாசம்

About தமிழினி

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Female

Recent Profile Visitors

2,384 profile views
 1. கண்மணி அக்காவுடன் சேர்ந்து எனது 5 பங்குகளையும் அனுப்பிவைக்கின்றேன். உங்கள் முயற்சசி வெற்றிபெற வாழ்த்துக்கள்!
 2. கிருபன் அண்ணா உங்கள் இணைக்கு தெரிந்தவர்கள் யாழில் இருக்கின்றார்கள் அவர்கள் போட்டுகொடுக்கலாம் என்பதை எப்படி மறந்தீர்கள்? எத்தனை தடவை பார்த்தாலும் நெதர்லாண்ட் அழகு கொள்ளை அழகு!! பயண அனுபவம் நல்ல சுவார்சியமாக இருக்கின்றது தொடருங்கள் கிருபன் அண்ணா.
 3. ராஜவன்னியன் அண்ணாவிற்கு 60வது பிறந்தநாள் வாழ்த்துக்களும் 60 ம் கல்ணயான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!!
 4. எமக்காக தம்முயிரை தியாகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்!
 5. எதற்காக தென்னாபிரிக்காவிற்கு 49 ஓவர்கள் மட்டுமே விளையாட கொடுத்தார்கள்?
 6. 1 இங்கிலாந்து 2 பாகிஸ்தான் 3 நியூசிலாந்து 4 அவுஸ்திரேலியா 5 தென்னாபிரிக்கா 6 இங்கிலாந்து 7 சிறிலங்கா 8 இந்தியா 9 நியூசிலாந்து 10 அவுஸ்திரேலியா 11 பாகிஸ்தான் 12 இங்கிலாந்து 13 நியூசிலாந்து 14 அவுஸ்திரேலியா 15 தென்னாபிரிக்கா 16 பங்காளாதேஷ் 17 அவுஸ்திரேலியா 18 இந்தியா 19 இங்கிலாந்து 20 அவுஸ்திரேலியா 21 தென்னாபிரிக்கா 22 இந்தியா 23 மேற்கு இந்தியத்தீவுகள் 24 இங்கிலாந்து 25 -நியூசிலாந்து 26 அவுஸ்திரேலியா 27 இங்கிலாந்து 28 இந்தியா 29 மேற்கு இந்தியத்தீவுகள் 30 தென்னாப்பிரிக்கா 31 பங்களாதேஷ் 32 இங்கிலாந்து 33 பாகிஸ்தான் 34 இந்தியா 35 தென்னாப்பிரிக்கா 36 பாகிஸ்தான் 37 அவுஸ்திரேலியா 38 இந்தியா 39 மேற்கு இந்தியத்தீவுகள் 40 இந்தியா 41 இங்கிலாந்து 42 மேற்கு இந்தியத்தீவுகள் 43 பங்களாதேஷ் 44 இந்தியா 45 அவுஸ்திரேலியா 46 இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கு இந்தியத்தீவுகள் 47 இங்கிலாந்து, இந்தியா, மேற்கு இந்தியத்தீவுகள், அவுஸ்திரேலியா 48 ஆப்கானிஸ்தான் 49 இங்கிலாந்து 50 இந்தியா 51 இங்கிலாந்து 52 சிறிலங்கா 53 இங்கிலாந்து 54 பாகிஸ்தான் 55 அவுஸ்ரேலியா 56 மேற்கு இந்தியாதீவுகள் 57 இங்கிலாந்து 57. இங்கிலாந்து. பதிலை பதிந்த பிறகு பார்த்தால் இலக்கம் 57ஐ காணவில்லை
 7. நல்லதொரு முயற்ச்சி. இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்! பொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா? ( ஊர் ஒன்று கூடல் நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு - போன்ற பொது நிகழ்வுகள் )
 8. ஜஸ்ரினின் அண்ணா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
 9. அந்த 7 (ச்சா.. 70) நாட்களுக்காய் காத்திருக்கின்றோம். தொடருங்கள் ஈழப்பிரியன் அண்ணா!
 10. எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும் காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது. எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது. எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர் என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. வைத்தியர் வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை. பெற்றோர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதை தம் குழந்தைகளிடம் திணிப்பது மிகவும் கவலையான விடயம். கடந்த சில வருடங்களில் எத்தனை பிள்ளைகள் தம் பெற்றோரின் ஆசைக்காக அவர்களின் வற்புறுத்துதல்களால் சில துறைகளை தெரிவுசெய்து அதை அவர்களால் சரியாக படிக்க முடியாமல் மனவுளைச்சளாகி தற்கொலை வரை போயுள்ளார்கள்?. அதே நேரம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அவர்களின் கல்வியை தொடர விட்டிருந்தால் அநியாயமாக தம் குழந்தைகளை அந்த பெற்றோர்கள் இழந்திருக்கமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் நிச்சயமாக இருக்கும் அதில் அவர்கள் சாதிக்க விரும்பும் போது நாம் அதற்கு தடையாக இருப்பது முற்றிலும் தவறானது. நாம் படிக்கமுடியாததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றவேண்டும் என்று நினைப்பது சரியா?. பெற்றோர்கள் ஆசைப்படும் துறையை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தையும் விருப்பி படித்தால் எந்த பிழையும் இல்லை ஆனால் அப்படி எத்தனை வீட்டில் நடக்கின்றது? பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சில தொழில்களில் அதிக வருமானம் வரும் ஆனால் வருமானம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்து விட வழிசமைக்காது. மனதுக்கு பிடித்த தொழில் செய்வதில் வரும் மகிழ்ச்சி வருமானத்தால் வரும் மகிழச்சியை விட பன்மடங்கு பெரியது. எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!