Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3060
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Posts posted by தமிழினி

  1. உங்களது அளப்பரிய சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஏராளன்.

    நாமும் எய்டனின் பெயரில் non profit organization ஆரம்பித்து அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ( வெளிநாட்டு உதவி இல்லாதவர்களுக்கு) உதவி செய்ய ஆரம்பித்துள்ளோம்.  முதலில் பண உதவியும் பின்னர் அவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்பை ஆரம்பித்து வைக்கவும் உதவுவது தான் எமது தற்போதைய திட்டம். வைத்தியர்கள் மூலம் உறுதி செய்த பின்பே உதவி செய்கின்றோம். எமது தொண்டு நிறுவனம் ஒரளவிற்கு வளர்ச்சியடைந்த பின்பு நிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு உங்களூடாகவும் உதவிகள் செய்வோம்.

    மீண்டும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்படுவோருக்கும் மிக்க நன்றிகள் 🙏

     

    • Like 10
    • Thanks 3
  2. 11 minutes ago, goshan_che said:

    இந்த ஆக்கம் சொல்வதை ஏற்று கொண்டாலும், அந்த கணவனில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

    இதே தியாகங்களை ஊருக்கு ஊர் ஓடி வேலை பார்க்கும் அவரும் செய்திருப்பார் அல்லவா? ஆனால் ஆம்பிளை - யாருடனும் போய் என்னை பாராட்டுவார் இல்லையே என சொல்லி வருந்தி இருக்கமாட்டார்.

    இதுவே மனைவி இறக்க அந்த கணவன் இறந்திருந்தால்? இன்சூரன்ஸ் பணம் வந்திருக்கும் எல்லாரும் அவரை மெல்ல மெல்ல மறந்து தத்தம் காரியங்களில் மூழ்கிப்போயிருப்பார்கள்.

    மனைவி இறந்தால் டெனிஸ் விளையாட கூடாதா? அதை அவரை ஆற்று படுத்தும் ஒரு செயலாக நண்பர்கள் செய்தும் இருக்கலாம்.

    எவ்வளவு பொறுப்பாக, வேலை மாற்றல் எடுத்து, மனைவியின் வேலைகளை எல்லாவற்றையும் கவனிக்க பொறுப்பான ஏற்பாடுகளை 1 மாதத்தில் செய்து முடித்துள்ளார் - நிச்சயம் அவருக்கு ஒரு சபாஷ்.

    ஆக்கத்தை எழுதியவர் இந்த செய்தியை உயிருடன் இருக்கும் போது தோழிக்கு சொல்லி இருக்க வேண்டும். இப்போ கணவன் தேவதாசாக திரியவில்லை என்று குறைப்படாமல்.

    இதை முகபுத்தகத்தில் எழுதினால் - நட்பு வட்டத்தில் யாரை சொல்கிறார் என்பது இலகுவாக தெரியும். இதெல்லாம் இழி குணம் அல்லவா?

    வாழ்க்கையை வாழுங்கள் நிச்சயமாக - ஆனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. அவர்கள் வாழ்வில் உங்களுக்கு தெரியாத, நீங்கள் எதிர்பாராத காரணங்கள் இருக்கும்.

    Stop judging, start living.

    இந்த ஆக்கத்தை வாசித்தபோது நீங்கள் பார்த்த கோணத்தில் எல்லோரும் பார்க்கப்போவதில்லை. அந்த பெண்ணின் கணவரை குறை சொல்வதாக நான் பார்க்கவில்லை மாறாக அந்த பெண் தனக்காகவும் சிறிது நேரம் செலவழித்திருக்கலாம் என்று தான் தோன்றியது. அதைத்தான் அந்த தோழியும் குடும்பம் குடும்பம் என்று தமக்காக எந்த நேரத்தையும் செலவுசெய்யாத பெண்களுக்கு சொல்லமுனைகின்றார்.

    moral of this story: வாழ்க்கை அழகானது அதை அனுபவித்து வாழுங்கள்!! 

    • Thanks 1
  3. On 8/7/2021 at 21:33, புங்கையூரன் said:

    மனதை மிகவும் நெருடிய கதை....!

    சிலரது இயல்பே....எல்லாப் பொறுப்புக்களையும் தனது தலையில் தூக்கிச் சுமந்து கொள்வது...!

    உங்கள் நண்பி...அனேகமாகக் குடும்பத்தில் முதலாவது பிள்ளையாகப் பிறந்திருப்பார் என்பது எனது அனுமானம்!

    அவளது குழந்தைகள், அவள் பட்ட கஷ்டங்களை...நிச்சயம் அவதானித்திருப்பார்கள்!

    அவர்கள் தந்தைக்கு ஒரு நாள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    நன்றி தமிழினி....!

    நன்றி புங்கையூரான் அண்ணா. இந்த ஆக்கத்தை நான் சுட்டது முகநூலில் இருந்து அதனால் விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

    நம்மில் அனேகமானவர்கள் மற்றவர்களுக்காகவே வாழப்பழகிவிட்டோம். இனிவரும் தலைமுறை எம்மைப்போல் வாழாமல்  தமக்கான வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள்.

  4. படித்ததில் பிடித்தது:

    வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்...

    எங்கள் தோழி...

    50 வயதைக்  கடந்தவள்..

    அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின்  மரண செய்தி... 

    பேரதிர்ச்சி எங்களுக்கு..

    அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை  அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்...

    எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை,  எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்...

    ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

    அதில் தொனித்த வேதனையை  எங்களால் இனம் காண முடிந்தது..

    அவள் இறந்து  1 மாதமாயிற்று...

    பாவம் அவள் கணவர்...

    இப்போது எப்படி சமாளிக்கிறாரோ?? பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்.. 

    பதில் இல்லை. அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்.. 

    எப்படி இருக்கிறீர்கள் என்றேன்..

    பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்..

    வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

    சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்..

    பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்..

    "பிள்ளைகள் நலம்..நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்..

    சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ...

    என் கண்கள் குளமாகியது. என் தோழி நினைவிற்கு வந்தாள். பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை. அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது, எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற  திரைப்படத்திற்கு அவள் வரவில்லை, காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்..

    இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்..

    அவளுக்காக அவள் வாழவே இல்லை..

    மற்றவர்களுக்காக மட்டுமே  வாழ்ந்திருக்கிறாள்..இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை..

    இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன்

    இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு  இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும்,  நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..

    ஆனால் இதையெல்லாம்  சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை...

    தோழிகளே..

    எத்தனை .பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும்

    உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. 

    அது உங்கள் நேரம்..

    உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள் 

    பள்ளி, கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,பகிருங்கள், சிரியுங்கள்..வாழ்க்கையை அனுபவியுங்கள்..

    இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. 

    உங்களுக்கான இன்பத்தை  மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்..

    நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..

     இறுதியாக ஒரே ஒரு வார்த்தை..

     வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்...

    அனுபவித்து வாழுங்கள்

    வாழ்க்கை அழகானது

     

     

     

     

     

     

    • Like 8
    • Thanks 3
  5. பெல்ஜியம் எதிர் இத்தாலி
    சுவிற்சர்லாந்து எதிர் ஸ்பெயின்
    டென்மார்க் எதிர் செக் குடியரசு
    இங்கிலாந்து எதிர் உக்ரைன் 

  6. தற்போது கனடாவில் Pfizer vaccine க்கு தட்டுப்பாடு வந்துள்ளமையால் முதலாவது dose ஆக  Pfizer எடுத்தவர்கள் 2வது dose ஆக  moderna போடலாம் என்று சொல்கின்றார்கள். இரண்டையும் mix பண்ணி எடுப்பது பற்றிய உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

  7. 4 minutes ago, நிழலி said:

    இதை எப்படி யூகித்தீர்கள்? நான் மண்டையை போட்டு ஆட்டி  மூளையைக் கசக்கி பார்த்து வந்த வரிகள் இவை

    1. இரத்த பூட்டு பூவே ஆட்டம் பத்து ராகம்
    2. சிவப்பு ஆமைப்பூட்டே நீ பத்து ஆட்டம் போடுறாய்
    3. சிவப்பு பூட்டே செவ்வந்தியோடு ஆட்டமா போடுறாய்
    ....

     சிவப்பிற்கு வேறு பெயர்கள் யோசித்த போது வரவில்லை ஆனால் பூட்டிற்கு தாழ் என்று யோசித்தபோது செந்தாழம் பூ மனதிற்குள் மணி அடித்தது  :)

    • Like 3
  8. 2. 🩸🔒🌻🕺🔟🎶

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    11. ☁️🌙🏖🚶‍♂️🤷‍♀️

    ஆகாய வெண்ணிலா தரை மீது வந்ததேனோ

     

    இரண்டும் ஒரு guess தான். 

    • Like 1
    • Thanks 1
  9. விசுகு அண்ணாவின் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!💐
    இன்னும் பல வருடங்கள் சுகமாக வாழ இறைவனை வேண்டுகின்றேன்🙏

  10. தற்போது grape seeds oil நல்லதென்று அதை வாங்கி பாவிக்கின்றேன். உண்மையில் நல்லதா அல்லது அதுவும் வியாபார யுக்தியாக என்று தெரியவில்லை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.