யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  26,911
 • Joined

 • Last visited

 • Days Won

  129

Everything posted by குமாரசாமி

 1. சொந்தமாய் மிளகாய்த்தூள் அரைக்கத்தெரியாத ஆக்கள் கறிக்கு உறைப்பு வேணுமெண்டால் இரண்டு செத்தல் மிளகாயை வறுத்தோ வறுக்காமலோ அருவல் நொருவலாக்கிப்போட்டு கறியோடை சேர்த்து சமையுங்கோ.......ஒரு பிரச்சனையுமேயில்லை.பின் விளைவு பக்க விளைவு எதுவுமேயில்லை. கோதாரி விழுந்த உந்த போத்தில் தூளுகளை வாங்கி பாவிச்சு வருத்தத்தை தேடாதேங்கோ....இல்லாட்டி இரண்டு உறைப்பான பச்சைமிளகாயை வாங்கி கடிச்சு சாப்பாட்டோடை சாப்பிட்டாலோ கறிக்கை போட்டு சமைச்சாலோ நல்லாய்த்தான் இருக்கும். போத்தில் மிளகாய்த்தூள்..........ஐயோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்ட ரேஞ்சிலை நான் இருக்கிறன். உங்கடை இனம் தெரியாத வருத்தத்துக்காக பின்னாலையும் முன்னாலையும் கமராவிட்டு செக்கிங் பண்ணுற அளவுக்கு உந்த போத்தில் தூளின்ரை விக்கனம் எக்கச்சக்கம் கண்டியளோ.. #அனுபவம் பேசுது#
 2. இனி சிங்களம் தனக்கிருக்கிற அனுதாப அலையை பெருப்பிக்கிறதுக்காக மூலைமுடுக்குகளுக்கை தானே வெடிக்காத குண்டை வைச்சிட்டு ஐயோ அல்லா எண்டு கத்தப்போகுது. சீன வெடி வெடிச்சாலும் புலி குண்டு வைச்சிட்டுது எண்டு நாடகம் போட்ட சிங்களமெல்லே.... உலகத்திலையே ஆர்ரையும் அழிவிலை சுகபோகம் அனுபவிக்கிறதெண்டால் சிங்கள தேசம் மட்டும் தான்.
 3. வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வருவோமா.....?????? இல்லாட்டி பாயை விரிச்சு இங்கேயே படுப்போமா.....???????
 4. ஏற்கனவே சர்வதேசத்திடமிருந்து சிங்கள சிறிலங்காவிற்கு அனுதாப அலைகள் பெரிய அளவில் இருக்கின்றது. முதலாவது சுனாமி அனுதாப அலை. இரண்டாவது உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அனுதாப அலை. மூன்றாவது இன்றைய ஈஸ்டர் தின தொடர் குண்டுவெடிப்புகளால் வந்த இன்னும் பெரிய அனுதாப அலை. இதில் கொடுமை என்னவென்றால் இந்த மூன்றிலும் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழர்கள். ஆனால் ஆதாயத்தையும் அனுதாபத்தையும் அள்ளுவது சிங்களம் மட்டும்.
 5. இதிலை என்ன சுவாரசியம் கிடக்கெண்டு தெரியாமல் கேக்கிறன்??? ஓரு கட்டில் கிடைக்காமால் கொத்தார் பட்ட கஷ்டத்தை நினைக்க எனக்கு கண்ணீர் ஆறாய் ஓடுது...
 6. உந்த ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா எண்டுதானே முந்தி கனபேர் கதைச்சவையள்.
 7. இது செய்தது முழுக்க ஐஎஸ் பயங்கரவாதிகள்.சிலோன் முஸ்லீமுக்கும் இதுக்கும் தொடர்பில்லை...அவர்கள் நல்லவர்கள் எண்டு வாதாடினாலும் வாதாடுங்கள்.
 8. நாங்கள் வேலிக்கு மேலாலையும் பாய்ஞ்சு போயிருக்கிறம்.... வேலிக்கு கீழாலையும் தவண்டு போயிருக்கிறம்
 9. இது விடுதலைப்புலிகள் காலத்து செய்தியாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் பல மாற்றுக்கருத்து மாணிக்கங்களிடம் காணக்கூடியதாக இருக்கின்றது.எதற்கெடுத்தாலும் விடுதலைப்புலிகளையே திட்டி பழக்கப்பட்ட வாய்களும் சுயநல ஊடகங்களும் அண்ணார்ந்து காறித்துப்பிய கதையாகவே இருக்கின்றது.இன்றைய சம்பவத்திற்கு அவர்கள் இல்லாதது பெரும் வெற்றிடமாகவே பார்க்கின்றார்கள்.எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது பழி போட்டவர்கள் இன்று என்ன சொல்லப்போகின்றார்கள்? அன்று தொடக்கம் இலங்கையை கலவர பூமியாகவே வைத்திருக்க விரும்பியவர்கள் இன்றும் அதை தொடர்கின்றார்கள். கொஞ்ச காலம் இனக்கலவரங்கள்.பின்னர் விடுதலைப்போர்.இன்று இந்த புதிய வடிவில் பல கொடூரங்கள்.இது இன்னும் தொடரும்.
 10. புனிதத்திருநாளில் இறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள். யாரோ ஒரு குழுவின் அரசியல் லாபத்திற்க்காக நடத்தப்பட்ட தாக்குதல் போல் தெரிகின்றது.