-
Posts
40948 -
Joined
-
Days Won
406
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by குமாரசாமி
-
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்து ஐமேல் உந்திஅலமந்த போது அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடனம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சிசில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே....
-
அதிகமாய் பேசுற வாயும் அர்த்த ராத்திரியில் குலைக்கிற நாயும் அடிவாங்காமல் போனதாக சரித்திரமே கிடையாது.
-
நான் காண்பிப்பேன்..ஆனால் நீ பார்க்கக் கூடாது என்பதுதான் இன்றைய பெண்ணிய வாதம்.
-
சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது
-
துரோகத்திற்குப் பிறகு துளியளவும் குற்ற உணர்வே இல்லாமல் அவர்களால் சிரிக்க முடிகிறதென்றால் நம்மால் ஏன் மீண்டு வாழமுடியாது?
-
மனிதனை தவிர வேறு எந்த உயிரனமும் வாழ்க்கையை பாரமாக நினைப்பதில்லை. ஏனெனில் அவை வாழ்வோடு போராடுவதில்லை ஒத்துபோகின்றன..
-
கோவில் உள்ளே செல்வந்தர்களும் வெளியே பிச்சைகாரர்களும்
பிச்சை எடுக்கும் இடம். -
முன்னாள் காதலியைச் சந்தித்தேன்.
ஞாபகம் இருக்கா? என்றாள். ம் என்றேன். எதையென அவளும் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை! -
உண்ணும் உணவே மருந்தாக இருந்த காலம் போய்....மருந்தையே உணவாக எடுக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
-
சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.
-
உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா?
அப்படியென்றால் சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய். -
முதியோர் இல்லத்திற்கு பணம் கொடு,பொருள்கொடு,உணவு கொடு,உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே.