குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  29,162
 • Joined

 • Days Won

  170

Posts posted by குமாரசாமி


 1. படத்தில் காணப்பட்ட கூத்துக்களை ஜேர்மனியில் பார்ப்பது அரிது.
  ஏதும் அவசர தேவையெண்டால் கடைக்கு போறம் ....வாங்குறம்...வாறம் அவ்வளவுதான்.


 2. 2 hours ago, Kali said:

  அதை கலி என்றும் சொல்லலாம், களி என்றும் சொல்லலாம். காளி என்றும் சொல்லலாம். உங்கட விருப்பம். 

  என்ன கோதாரியெண்டாலும் வந்து துலையுங்கோ...😂


 3. 8 hours ago, பெருமாள் said:

  இங்கை மனுஷன் படுகிற பாடு காணாது என்று இவளுகள் வேறை .

  8 hours ago, தமிழ் சிறி said:

  Made in India  கலாச்சாரம்.  😎

   

  6 hours ago, ராசவன்னியன் said:

  ஆண்களிடமிருந்து  புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஓவர்..! :)

  6 hours ago, சுவைப்பிரியன் said:

  அது தெரிந்த விடையம் தானே.நான் சொன்னது இவருக்கு எதிராக புகார்.😁

  இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

  Bild

  ஆண்டிஸ் கேங்

   

   


 4. 18 minutes ago, பெருமாள் said:

  தற்போது உள்ள நிலையில் விமானம் மூலமா அதுவும் பிரென்ச் ஆட்க்கள்  குடுத்த ஓடரை விட கூடுதல் விலை குடுத்து ரன்வேயில் வைத்தே அமெரிக்காவுக்கு திசை திருப்ப படுது  என்று பிரெஞ்சு அதிகாரி  நேற்று அழுதவர்  இன்று கனடா காரரை அழவைத்து கொண்டு இருக்கினம் .

  https://www.independent.co.uk/news/world/americas/coronavirus-trump-trudeau-us-canada-face-masks-supplies-doctors-a9446841.html?utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR0MXKZcAIKNxmu8YIzT50_P3WhRQDR_GyOLQDPKDEMVUXbBZwyxpNW8rmg#Echobox=1585940178

   

  ஜேர்மனியும் மூக்காலை அழுது.....வாற வழியிலை வைச்சே வண்டிலை அமெரிக்காவுக்கு திருப்பிட்டாங்களாம்.

   


 5. ரெஸ்ரோரன்ட்,பப்பு,கொட்டல் எல்லாத்தையும் மூடிவிட்டால் வியாபாரமும் இல்லைத்தானே.
  அதோடை என்னைப்போல ஆக்களை வீட்டுக்குள்ளை பூட்டி வைச்சால் வியாபாரம் என்னெண்டு ஆகும்?😎


 6. 51 minutes ago, தமிழ் சிறி said:

  இப்பவும்... அமெரிக்க மக்களிடம்,  
  ட்ரம்ப் நல்லவரா?  கெட் டவரா? என்று கேட்டால்.... 
  "யெஸ்... ஹீ  இஸ்,  வெறி குட்  மான்"   என்று தான் சொல்வார்கள். 🤣

  ஈழப்பிரியன்   நுணாவிலான், மருதங்கேணி, நில்மினி, ஜஸ்ரின் போன்ற...
  யாழ். களத்து  உறவுகள்... என்ன சொல்கிறார்கள் என்று,  தெரியவில்லை அண்ணே...... :grin: 

  உதிலை நீங்கள் சொன்ன ஆக்களிலை ஆர் பதில் சொன்னாலும் முதல் பெயர்க்காரர் வாயே திறக்க மாட்டார்.😎


 7. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஊரில் இருக்கும் போது சர்வசாரணமாகவே வாழ்ந்திருப்பார்கள். குறிப்பாக சொல்லப்போனால் மத வெறுப்புகள் ஏதுமின்றி அவரவர் மதம் சார்ந்து வாழ்ந்திருப்பார்கள். தமது மத பண்டிகைகளை வரவேற்று சந்தோசத்துடன் கொண்டாடியிருப்பார்கள். நான் ஊரில் இருந்த வரைக்கும் மத துவேசிகளை நான் காணவேயில்லை. 
  அதே போல் இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
  அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 
  இப்போதும் நாகூர் ஹனிபாவின் பாடல்களை கேட்கும் போது அந்த முஸ்லீம் நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும்.

   

   

  • Like 1

 8. 4 hours ago, வாதவூரான் said:

  இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது

  ஏற்கனவே வெளிநாட்டு நிதிகளில் வாழும் நாடு.
  அதில் சுனாமி மூலம் பெரும் வருவாயை பெற்றது.
  அதற்கு பின் 2009 இன அழிப்பின் உலக நாடுகள் கொடுத்த வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு கொடுத்த வருவாய் எண்ணிலடங்காது.
  இப்போது கொரோனா நிதியுதவி மற்றும் கடன் தள்ளுபடிகள்.

  அழிவுகள் மூலம் வரும் நிதிகளை வைத்து வயிறு வளர்க்கும் நாடு சிறிலங்கா.


 9. 19 hours ago, ibnuasad said:

  பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன் இன்று அணு அளவு வைரஸுக்கு பயந்து  வீட்டில் பதுங்கிக் கிடக்கின்றான்.

  முதலில் ஊரடங்கு, வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப்பட்டாலும் நாட்கள் கடந்து வாரங்களாக மாறும்போது வருமானங்கள் இன்றி செலவுகள் ஏற்படத்துவங்கும் போதுதான் நாம் பொருளாதார ரீதியாகவும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளோம் என்பதை உணர்ந்தோம். சர்வதேச, உள்நாட்டு மட்டத்தில் கொரோனாவின் பரவலானது பெருக்கல் விருத்தியாக விருத்தியடைவதால் உலகளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தற்போது உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் பல மாதங்களுக்கு உலகளாவிய ரீதியில் இந்நிலமை தொடர்ந்தால். குறைந்த பட்சம் ஓர் மாதத்திற்கு தொடர்ந்தாலும் முதலில் அடிப்படைத் தேவையாக உள்ள உணவில்தான் பஞ்சம் ஏற்படும். அல்லாஹ் இந்த மாதிரி பஞ்சத்தை நமக்கு ஏற்படுத்தக்கூடாது. என்றாலும்  பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு எதிர் கொள்வது பற்றி நபி  யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பொருளாதாரக் கோட்பாட்டின்  மூலம் ஓரளவு தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

  ஸூரா யூசுப் பின் ஆரம்பத்தில், அஸ்ஸூராவை பற்றி அல்லாஹ் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றான்.

  (நபியே!) நிச்சயமாக யூஸுஃபின் சரித்திரத்திலும் அவரது சகோதரர்களின் சரித்திரத்திலும் வினவுகின்றவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 12:7)

  உண்மையில் நல்ல விடயங்கள் சொல்லப்படுகின்றன. மனிதர்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.


 10. 2 hours ago, தமிழ் சிறி said:

   

   

  அட... அமெரிக்க அதிபர்  டிரம்ப்புக்கு... மருத்துவமும்  தெரியுமா?    
  நான் இதுவரை...  அவர் ஒரு முன்னாள் குத்துச்  சண்டை வீரர், தொழிலதிபர்... 
  என்று தான்... நினைத்துக் கொண்டிருந்தேன்.  :grin:

  உவர்ரை உந்த பழைய கூட்டுவள் இப்ப என்ன செய்யினமாம்?😂


 11. 1 hour ago, ampanai said:

  உதவிகளை, ஆலயங்கள் தவிர்த்து, வேறு யார்மூலம் மக்களுக்கு  செய்யலாம்? 

  அங்கே பணிபுரிபவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால்  உதவிகள் செய்ய ஆலயங்கள் சிறந்த இடம்.


 12. 4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  நாட்டில் ஊரங்கு சட்டம் போட்டானுகள் காசு இருக்குறவன் சாமான்களை வாங்கி வைத்துள்ளான் ஆனால் நாள் தோறும் கடல் ,ஆறு , குளம் என அலைந்து மீன்பிடித்து வாழும் மக்களை என்ன செய்வது  எங்கு பிரச்சினை நடந்தாலும் அது ஏழைகளையே பாதிக்கிறது  மீன் பிடித்து வந்தாலும் அதை விற்க முடியாமலும் இருக்கின்றனர் வியாபாரிகள் இல்லை விற்பதற்கு .

  ஆழ்ந்த இரங்கல்கள் 

  இயற்கை அழிவிற்கும் செயற்கை அழிவிற்கும் பலிக்கடா ஆவது ஏழை மக்களே.

  ஆழ்ந்த இரங்கல்கள்.


 13. 35 minutes ago, தமிழ் சிறி said:

  மிகக் சரியான... கருத்து, இணையவன். 
  எமக்கு முன், கண்ணுக்கு தெரியாத ஆபத்து ஒன்று,  வந்து கொண்டிருக்கின்றது.. 
  என்பதை அறியாமல்... பலரும்,  தவறு செய்து விட்டார்கள். 😢

  முக்கியமாய் டொனால்ட் ரம்ப் 


 14. 49 minutes ago, Nathamuni said:

  தாரு..... நீங்களா, பயப்பிடுற ஆளு?

  சும்மா சுத்தவேண்டாம்....

  அத்தார்... பாவம் அப்பிராணி... அவர் இப்படி எழுதினால் நியாயம் இருக்கும்....

  33 minutes ago, suvy said:

  என்ன திடீரென்று ஞானோதயம் வந்தது மாதிரி.....!  😁

  57 minutes ago, ரதி said:

  ஆணை நினைத்து பயப்பிடுகிறீர்களளோ அல்லது சுத்தி இருக்கும் பெண்களை நினைத்து பயப்பிடுறீங்களோ :42_confused:

  எல்லாம் உந்த கொரோனா லொக் டவுண் செய்யிற  வேலை🕵🏾‍♂️
  அதாலை இப்ப கொஞ்ச நாளாய் கொத்தார்ரை கையிலை பலகை வெட்டுற மிசின்....சுத்தியல்...அடிமட்டம்.....வாள்.....மண்வெட்டி எண்டு புளங்குது எல்லோ :cool:

   

   


 15. 34 minutes ago, ampanai said:

  அமெரிக்கன் வாழ்ந்தால் தான் பிரெஞ்சும் ஜெர்மனியும் கனடாவும் வாழும்.

  அமேரிக்கா வீழ்ந்து சீனா வென்றால், எங்களுக்கும்  நாயும், எலியும் வவ்வாலும் தான்   😁

  அமெரிக்காவின்ரை வரலாறு சில நூறு வருடங்கள் தான்....
  சீனாவின்ரை வரலாறு பல ஆயிரம் வருடங்கள்...
  இப்பவும் அமெரிக்காவுக்கு சீனாதான் கை கொடுக்குது....ரஷ்யாவும் எண்டது வேறை விசயம்.
  ஐரோப்பாவிலை இங்கிலாந்தை தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு வரையறையோடை சீனாவை ஆதரித்து சமாளித்துத்தான் நடக்கின்றார்கள்.ரஷ்யாவுடன் இன்னும் அதிகம்
  போன கிழமையும் சைனா வைரஸ் சைனா வைரஸ் எண்டு கத்திப்போட்டு இப்ப சீனாவின்ரை காலிலை விழுந்து போய் கிடக்கிறார் டொனால்ட் ரம்ப்.🤣

  படிப்பை விட அனுபவம் முக்கியம் ராசா....அதுதான் இப்ப வேலை செய்யுது.😎


 16. முந்தி ஊரிலையெல்லாம் மினி தியேட்டர் எண்டு இருந்தது எல்லாருக்கும் தெரியுமெண்டு நினைக்கிறன்.மட்டக்களப்பிலை கொஞ்சம் வடிவாய் கொட்டில் போட்டு உறுப்பாய் வைச்சிருந்தவையள். ஆனால் என்ரை ஊரிலை சூடடிக்கிற படங்கை  மறைப்பாய் கட்டிப்போட்டு சினிமா காட்சியள் களைகட்டும். அதிலை ஒரு  ஒரு கிளுகிளுப்பை சொல்லுறன்.
  சிவந்தமண் படம் பாக்க போனனான்.காசு எவ்வளவெண்டு ஞாபகமில்லை.ஒரு புல்லு முள்ளு காணிக்கை படங்கை சுத்தி கட்டிப்போட்டு( வின்சர் தியேட்டராம்) வெறும் நிலைத்திலை எல்லாரையும் இருத்திப்போட்டு படம் காட்ட வெளிக்கிட்டினம்.சனம் கும்பல்லா கோவிந்தாவாய் கலந்து கட்டி இருந்ததாலை எனக்கு படம் பாக்கிறதிலை பெரிசாய் ஈடுபாடு வரேல்லை. ஏனெண்டால் எனக்கு பக்கத்திலை இருந்த ஒராள். கிட்டக்கிட்ட நெருக்கமாய் இருந்ததாலை உடம்பும் கொஞ்சம் சூடாகித்தான் இருந்தது.தெரிஞ்சோ தெரியாமலோ  இரண்டு பேரின்ரை கைகளும் முட்டுப்பட்டுப்போச்சுது. அதுக்குப்பிறகு....

  கட்....கட்.....கட்.....கட்...கட்.....கட்.✂️
   

  இந்த பாட்டு கேட்கிற நேரமெல்லாம் அதே சிந்தனைதான் வரும்..😍

   

  • Haha 2

 17. 20 minutes ago, ரதி said:

  உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
  எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
  எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

  அப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி? 😁


 18. 4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

  நீங்கள் பீட்சா என்னிடம் ஓடர் செய்துகிறீர்கள் நான் உங்களிடம் டெலிவரி செய்ய வரும் போது மனம் மாறியோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுகாரர் கேட்டு கொண்டதிற்காகவோ பிட்சாவை அவரிடம் ஒப்படைத்தால் தவறு என்னுடையதும் தானே

  முதலாளிமார் டெலிவரி செய்யுறது குறைவு.அதுக்கெண்டு ஆக்கள் இருப்பினம்.டெலிவரி செய்யிறவன் அமெரிக்கனாய் இருந்தால்?????