Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13556
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. 'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்னும் பழமொழிக்கிணங்க உங்கள் தந்தையார் வாழ்ந்திருக்கிறார் போல உள்ளது! இப்போதெல்லாம் இவ்வாறான பெரியோர்களைக் காண்பதென்பது மிகவும் அரிதானது!
  2. முன்னாள் போராளிகள் ஊருக்குப் பயந்து வாழ்வது என்பது எமது சமூகத்தின் சாபக் கேடுகளில் ஒன்று…! மனதை நெருடிய கதை..!
  3. சாளை மீன்? குதிப்பு எண்டிறது ஒட்டி மீன் மாதிரி இருக்கும். ஓராவை விடவும் கொஞ்சம் வெளிறிய நிறமாக இருக்கும்! டாக்குத்தர் பழைய நினைவுகளைக் கிளறிப்போட்டார்..!
  4. தாமிர பரணியாற்றின் மண் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் வீடு கட்டினார்கள் என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வளவு பெருமை பெற்றவள் பொருணை…! தொடருங்கள்…!
  5. 2005 ஆம் ஆண்டு வாங்கின வரி ஏய்க்கப் பட்ட கார்களை 2024 ஆம் ஆண்டு பறிமுதல் செய்ய நீதி மன்றம் உத்தரவு..! கார்களின் தற்போதைய வயது பத்தொன்பது வருடங்கள்..!😀
  6. மிகவும் அழகிய கவிதை, சுவியர்..! குளிர் அறியாத காலத்தில்....மார்கழி மாதம் மனதைக் கவர்ந்தது என்பது உண்மை தான்...! மார்கழியைக் குழந்தையாக்கிய குளிர்களைக் கண்ட பின்னரும், மார்கழியின் காதல் இன்னும் மாறவில்லை..! மார்கழி என்றவுடன், வேற வேற நினைவெல்லாம் வருகுது..! வெட்கம் கெட்ட மனசு..!
  7. வாழ்த்துக்கள் பசுவூர்க் கோபி...! மிகவும் அதுமையான பொருள் பொதிந்த ஒரு பாடல்...! பின்னணியில் தமிழ்க் கல்வெட்டுக்கள் வருவதும் மிகவும் அழகு..! அதையும் விட அழகு...எனது மண்ணிலிருந்து இந்தக் கவிதை பிறந்தது..! அம்மா என்னும் மழலையின் ஓசையில் பிறந்தவள் அவள்! பொதிகையின் தென்றலுடன் தவழ்பவள் அவள்..! ஆரியத்தின் கூத்துக்கள் அவளிடம் பலிக்காது...!
  8. ஈழப்பிரியன். அப்படியென்றால் உங்களுக்கு இவரின் தமையன் கலாநிதி சிவனேசனையும் தெரிந்திருக்க வேண்டுமே? நீண்ட நாட்களாக அவர் அமெரிக்காவில் வாழ்கிறார்..!
  9. சிவலிங்கம் மாஸ்ரரின்ர மகன்..! பெயர் சிவானந்தன். இவர் குடும்பமே ஈழ ஆதரவாளர்கள். எதிரிகளை நாமே எனக்குள் உருவாக்க வேண்டாமே..!
  10. இது தான் ராணி இல்லம், ராசாத்தி இல்லம் என்று பேர் வைக்கிறதால வாற பிரச்சினை…!
  11. அது ரத்வத்தையின் மகன் என்று நினைக்கின்றேன், ஈழப்பிரியன்..!
  12. தொடருங்கள், ரஞ்சித்...! மிகவும் ஆவலுடன் வாசிக்கின்றேன்...!
  13. மனதைக் கவர்ந்த ஒரு அனுபவப் பகிர்வு...! தொடர்ந்து எழுதுங்கள், கவி அருணாசலம்...!
  14. கவிதை நன்றாக உள்ளது, உதயன்....! வாழ்த்துக்கள்...!
  15. கொஞ்சமும் எதிர்பாராத கதை முடிவு…! மனம் ஒரு குரங்கு என்று பெயர் வைத்திருக்கலாம்..! எனினும் ஒரு பெண்ணின் மனதில் இந்தக் கதையின் முடிவு உருவானதென்பது, உங்கள் விரிந்த மனதைப் பறை சாற்றுகின்றது என்றே கருதுகின்றேன்! வாழ்த்துக்கள், சுமே…!
  16. நீண்ட நாட்களின் பின்னர் உங்களிடமிருந்து ஒரு தொடர்…! தொடருங்கள், சுமே! ஆரம்பம் நன்றாக உள்ளது…!
  17. சிட்னியில் அமர்ந்த முருகா? உன் கருணையை என்னென்பேன்! எங்கட …புத்தன்ர சிலமனைக் காணவில்லையே…என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..! இந்தா பிடி என்று …கூட்டிக் கொண்டு வந்து விட்டாய்..! அருமையான ஒரு அனுபவப் பகிர்வு, புத்தன்..!
  18. நான் ஒரு முறை pie சாப்பிட்டிருக்கிறேன்..! முத்தின நாட்டுக் கோழி இறைச்சி சாப்பிடுவது போல இருக்கும்…!😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.