சுவியர், இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்..!
கதை நல்ல படியாக நகர்கின்றது..! கதா நாயகன் ஒரு பச்சை சுய நலம் பிடித்தவன் போல உள்ளது..!
எனது கவலையெல்லாம் நிர்மலா தாலியை மட்டும் வைத்துவிட்டுத் தாலிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம் என்பது தான்..!
தொடருங்கள்…!
என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!
இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!
நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!
அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!
உங்களைப் போன்ற சிந்தனை என்னிடமும் உள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப் படும் என்று தெரியவில்லை.அண்மையில் கூடத் தாயகம் சென்ற போது ஒரு அன்னியனாகவே என்னை உணர்ந்தேன். எனது ஊருக்குச் செல்லும் போதும் இராணுவதினருக்கு நான் ஏன் போகின்றேன் என்று காரணம் கூற வேண்டிய நிலை எனக்கு..!மீன் வாங்கப் போனால் எனக்கு வேற விலை. வெறும் சாரத்துடன் போனாலும் அடையாளம் பிடித்து விடுகின்றார்கள். ஓட்டோக் காரனிடம் வேறு விலை எனக்கு..!
மடஹாஸ்கார், ஹலப்பாஹஸ், ரஸ்மானியா, அவுஸ்திரேலியா போன்ற தீவுகள் தனித்துவமானவை. அங்கு இயல்வாக்கமடைந்த உயிரினங்களும் வித்தியாசமானவை. அதிசயங்கள் நிறைந்தது எமது பூமிப்பந்து..!
தொடருங்கள். நில்மினி…!