Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13551
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!
  2. இப்படியானவர்களின் நெற்றிகளில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக சூடாக்கிய இரும்பினால் ஒரு விசேட குறி சுட்டு விடலாம்..! இது கட்டாயம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்..!
  3. தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...! நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...! நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..! நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!
  4. பூமிப்பந்தின் அடிப்பாகத்திலும் நல்ல வேகமாக இன்று யாழ் வேலை செய்கின்ரது…! நன்றி மோகன் அண்ணா….!
  5. மிக்க நன்றி, இணையவன்...! வணக்கம், ஏராளன்..! நன்றி...! வாழ்த்துக்களுக்கு நன்றிகல், தமிழ்சிறி...! மிக்க நன்றி, அல்வாயன்...! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கந்தையா....! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நிழலி....! மிக்க நன்றி, நிலாக்கா....!
  6. இந்தக் கல்வி விடயத்தில் என்னிடமும் ஒரு கருத்து உண்டு. ஒருவரது தாய் மொழிக்கும், தர்க்க ரீதியான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறேன். இதுவே சீனர்களும், தமிழர்களும், ஜப்பானியர்களும் தர்க்க ரீதியான பாடங்களில் அதிகம் பிரகாசிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். மூளை அமைப்பில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. மற்றது ஒரு தேசத்தின் வளமும், மூளை வளர்வதற்கு உந்துதலளிக்கக் கூடும்…!
  7. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி....தோழர்...!
  8. மக்ழ்ச்சியும், நன்றியும் ஈழப்பிரியன்...!
  9. மிக்க நன்றி, நந்தன்....! வாழ்த்துக்களுக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றி, சுவியர்....! மிக்க நன்றி, பெருமாள்....!
  10. நன்றி, யாயினி…! மிக்க நன்றி….கிருபன்…! மிக்க நன்றி…புத்தன்…!
  11. எனதினிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், தனி….!
  12. கடவுள்கள் ஆயுதம் ஏந்துவது ஒரு பெரிய உண்மையை மறைமுகமாகச் சொல்கின்றது! அண்மையில் குறிகாட்டுவானிலிருந்து நையினாதீவு போகும் பக்தர்களின் நிலை கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது. சிங்கள நோனாக்கள் விசேட வரிசையில் வள்ளங்களில் இராணுவத்தினரால் அனுப்பப் பட, எம்மவர்கள் மூன்று மணி நேரம் கடும் வெய்யிலில் காய்கின்றார்கள். புத்தன் ஆயுதம் ஏந்தாத கடவுள் எனினும் ஆயுத முனையில் தானே அவன் மதமும் வளர்கின்றது..! எனவே கடவுள்கள் ஒரு செய்தியைச் சொல்கின்றார்கள்..! நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…! காந்த்தீய இந்தியாவுக்கும்…அணுகுண்டு தானே தேவைப் படுகின்றது..!
  13. தமிழ் சிறியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா…!
  15. ரஞ்சித் உங்களது எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களும் நியாயமானவை எனினும், எமக்கு ஏன் ஒரு நாடு தேவை என்பதன் காரணங்களில் இதுவும் ஒன்று..! இவ்வாறான ஒரு சம்பவமே, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய முடிவை எடுக்க என்னை நிர்ப்பந்த்தித்தது. என்ன தான் வாழ்வு வசதியாக இருந்தாலும்.. குரங்கு தனது குழுமத்தை விட்டு இன்னொரு குழுமத்துடன் சேர்ந்தால்…. அதன் வாழ்வு ஒரு நிரந்தர போராட்டமாகத் தான் இருக்கும்..! தொடருங்கள்…!
  16. 'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்னும் பழமொழிக்கிணங்க உங்கள் தந்தையார் வாழ்ந்திருக்கிறார் போல உள்ளது! இப்போதெல்லாம் இவ்வாறான பெரியோர்களைக் காண்பதென்பது மிகவும் அரிதானது!
  17. முன்னாள் போராளிகள் ஊருக்குப் பயந்து வாழ்வது என்பது எமது சமூகத்தின் சாபக் கேடுகளில் ஒன்று…! மனதை நெருடிய கதை..!
  18. சாளை மீன்? குதிப்பு எண்டிறது ஒட்டி மீன் மாதிரி இருக்கும். ஓராவை விடவும் கொஞ்சம் வெளிறிய நிறமாக இருக்கும்! டாக்குத்தர் பழைய நினைவுகளைக் கிளறிப்போட்டார்..!
  19. தாமிர பரணியாற்றின் மண் கொண்டு வந்து, யாழ்ப்பாணத்தில் வீடு கட்டினார்கள் என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வளவு பெருமை பெற்றவள் பொருணை…! தொடருங்கள்…!
  20. 2005 ஆம் ஆண்டு வாங்கின வரி ஏய்க்கப் பட்ட கார்களை 2024 ஆம் ஆண்டு பறிமுதல் செய்ய நீதி மன்றம் உத்தரவு..! கார்களின் தற்போதைய வயது பத்தொன்பது வருடங்கள்..!😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.